05.10.21        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்:
இனிய குழந்தைகளே, நீங்கள் இப்பொழுது தூய உலகிற்;குச் செல்ல வேண்டும் என்பதால், தந்தையை நினைவுசெய்வதன் மூலம், தூய்மையற்றும், அசுத்தமாகவும் உள்ள ஆத்மாக்களையும், சரீரங்களையும் தூய்மையாக்குங்கள்.

கேள்வி:
எக்குழந்தைகள் கடவுளைக் கண்டடைவார்கள்? தந்;தை உங்களுக்குக் காட்டியுள்ள கணக்கு என்ன?

பதில்:
ஆரம்பத்திலிருந்தே பக்தி செய்துள்ளவர்கள் கடவுளைக் கண்டடைகிறார்கள். எவ்வாறு நீங்களே முதலில் பக்தி செய்பவர்கள் எனும் கணக்கை பாபா உங்களுக்குக் காட்டியுள்ளார். இதனாலேயே நீங்களே முதலில் கடவுளிடமிருந்து ஞானத்தைப் பெறுபவர்கள், பின்னர் இதன் மூலம் நீங்கள் புதிய உலகில் இராச்சியத்தை ஆட்சி செய்கின்றீர்கள். தந்தை கூறுகிறார்: நீங்கள் என்னை அரைக் கல்பமாக நினைவுசெய்கிறீர்கள். நான் இப்பொழுது உங்கள் பக்தியின் பலனை உங்களுக்குக் கொடுப்பதற்கு வந்துள்ளேன்.

பாடல்:
உங்கள் பாதையில் வாழ்ந்து, உங்கள் பாதையிலே மரணிப்பேன்.

ஓம் சாந்தி.
குழந்தைகளாகிய நீங்கள் பாடலைச் செவிமடுக்கிறீர்கள். ஒருவர் மரணிக்கும்பொழுது, அவர் ஒரு தந்தைக்குப் பிறக்கிறார். நீங்கள் ஆத்மாக்கள் என்பதை அறிவீர்கள்; மற்றையது உங்கள் சரீரங்களைக் குறிக்கிறது. நீங்கள் உங்கள் சரீரத்தை நீக்கி விட்டு, பின்னர் இன்னுமொரு தந்தையிடம் செல்கிறீர்கள். உங்களுக்குப் பல்வேறு லௌகீகத் தந்தையர்கள் (பல பிறவிகளில்) இருந்தனர். உண்மையில், ஆதியில், நீங்கள் அசரீரியான தந்தையின் குழந்தைகள். ஆத்மாக்களான நீங்கள் பரமாத்மாவாகிய பரமதந்தையின் குழந்தைகள். நீங்கள் நிர்வாணா தாமம்;, அமைதி தாமம் என்று அழைக்கப்படுகின்ற, இடத்து வாசிகள். தந்தையும் அங்கேயே வசிக்கிறார். நீங்கள் இங்கே கீழிறங்கி வந்து, லௌகீகத் தந்தையரின் குழந்தைகளாகிய பின்னர், அந்தத் தந்தையை மறக்கிறீர்கள். சத்தியயுகத்தில் நீங்கள் மிகவும் சந்தோஷமாக இருப்பதனால், இவ்வுலகத்துக்கு அப்பாலுள்ள தந்தையை மறந்து விடுகிறீர்கள். நீங்கள் சந்தோஷமாக இருக்கும் வேளையில், அவரை நினைவுசெய்வதில்லை. நீங்கள் துன்பத்திலேயே அவரை நினைவுசெய்கிறீர்கள், ஆத்மாக்களே அவரை நினைவுசெய்கின்றனர். உங்களுடைய லௌகீகத் தந்தையை நீங்கள் நினைவுசெய்யும்பொழுது, உங்கள் புத்தி அவரது சரீரத்தை நோக்கியே செல்கிறது. நீங்கள் அந்த பாபாவை நினைவுசெய்யும்பொழுது, ஓ, பாபா! எனக் கூறுகிறீர்கள். இருவரும் பாபாவே, ஆனால் தந்தை என்பதே சரியான வார்த்தையாகும். அவரும்; தந்தை, இவரும் தந்தையே. ஆத்மாக்கள் ஆன்மீகத் தந்தையை நினைவுசெய்வதனால், புத்தி அங்கே மேலே செல்கிறது. அந்தத் தந்தை இங்கமர்ந்திருந்து, குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்துகிறார். பாபா வந்து எங்களைத் தனக்குரியவர்கள் ஆக்கியுள்ளார் என்பதை நீங்கள் இப்பொழுது அறிவீர்கள். தந்தை கூறுகிறார்: எல்லாவற்றுக்கும் முதலில், நான் உங்களைச் சுவர்க்கத்துக்கு அனுப்பினேன். நீங்கள் மிகவும் செல்வந்தர்களாக இருந்தீர்கள், பின்னர் நீங்கள் 84 பிறவிகளை எடுத்தீர்கள், நாடகத் திட்டத்துக்கேற்ப, நீங்கள் இப்பொழுது சந்தோஷமற்றவர்கள் ஆகியுள்ளீர்கள். நாடகத்திற்;கேற்ப, இப்பழைய உலகம் முடிவடைய வேண்டும். ஆத்மாக்களாகிய நீங்களும், உங்கள் சரீரங்கள் எனும் ஆடைகளும் சதோபிரதானாக இருந்தன. பின்னர், ஆத்மாக்களாகிய நீங்கள், உங்களுடைய சரீரங்கள் மூலம் சத்திய யுகத்திலிருந்து, திரேதா யுகத்துக்குச்; சென்று, பின்னர் துவாபர யுகத்துக்குச் சென்றீர்கள். இப்பொழுது ஆத்மாக்களாகிய நீங்கள் முழுமையாகவே தூய்மையற்றவர்கள் ஆகியுள்ளீர்கள், உங்கள் சரீரங்களும் தூய்மையற்றவையாகி விட்டன. 14 கரட் தங்கம் மங்கி விடுவதால், அதனை எவரும் விரும்பாததைப் போல், ஆத்மாக்களான நீங்களும் அவலட்சணமானவர்களாகவும், கலியுகத்தவர்களாகவும் ஆகியுள்ளீர்கள். இப்பொழுது, மிகவும் அசுத்தமடைந்துள்ள ஆத்மாக்களாகிய நீங்களும், உங்கள் சரீரங்களும் மீண்டும் எவ்வாறு தூய்மையாக முடியும்? ஆத்மாக்கள் தூய்மையாகும்பொழுது, தூய சரீரங்களைப் பெற முடியும். அது எவ்வாறு நடைபெற முடியும்? கங்கையில் நீராடுவதனாலா? இல்லை. மக்கள் கூவியழைக்கிறார்கள்: ஓ தூய்மையாக்குபவரே, வாருங்கள்! ஆத்மாக்களே இதனைக் கூறுவதால், புத்தி அப்பாலுள்ள தந்தையிடம் செல்கிறது. ஓ பாபா! பாபா என்னும் வார்த்தை எவ்வளவு இனிமையானது எனப் பாருங்கள்! பாரதத்தைச் சேர்ந்தவர்கள் மாத்திரமே பாபா!, பாபா! எனக் கூறுகிறார்கள். நீங்கள் இப்பொழுது ஆத்ம உணர்வுடையவர்களாகி விட்டீர்கள், நீங்கள் பாபாவுக்கு உரியவர்கள். பாபா கூறுகிறார்: நான் உங்களைச் சுவர்க்கத்துக்கு அனுப்பினேன், நீங்கள் புதிய சரீரங்களைப் பெற்றீர்கள். நீங்கள் இப்பொழுது என்னவாக ஆகியுள்ளீர்கள்? உங்களுக்குள் சதா இவ்விடயங்களே இருக்க வேண்டும். நீங்கள் பாபாவை மாத்திரமே நினைவுசெய்ய வேண்டும். அனைவரும் அவரை நினைவுசெய்கிறார்கள்: ஓ பாபா, ஆத்மாக்களாகிய நாங்கள் தூய்மையற்றவர்கள் ஆகியுள்ளோம்.! இப்பொழுது, வந்து எங்களைத் தூய்மையாக்குங்கள். இதுவும் நாடகத்தின் பாகமாகும், இதனாலேயே அவர்கள் கூவியழைக்கிறார்கள். நாடகத் திட்டத்துக்கேற்ப, பழைய உலகம் புதியதாகும்பொழுதே, அவரால் வர முடியும். ஆகவே, அவர் நிச்சயமாகச் சங்கமயுகத்தில் வருகிறார். பாபாவே அதி அன்பிற்கினியவர் என்னும் நம்பிக்கையைக் குழந்தைகளாகிய நீங்கள் கொண்டிருக்கிறீர்கள். இனிமை, மிகவும் இனிமை, அதி இனிமை என்று கூறப்பட்டுள்ளது. இப்பொழுது யார் இனிமையானவர்? லௌகீக உறவுமுறைகளில், உங்களுக்கு ஒரு பிறவியைக் கொடுக்கின்ற, ஒரு லௌகீகத் தந்தையே இனிமையானவர். பின்னர் யார் மூலம் நீங்கள் கற்பிக்கப்பட்டு, ஓர் அந்தஸ்தைக் கோருகின்றீர்களோ, அந்த ஆசிரியர் உள்ளார். ஞானமே வருமானத்தின் மூலாதாரம் எனக் கூறப்பட்டுள்ளது. கியான் ஞானமும், யோகம் நினைவும் ஆகும். எவரும் எல்லையற்ற தந்தையை அறியார். சிவபாபா, பிரம்மாவினூடாக ஸ்தாபனையை மேற்கொள்கிறார் என்பது படங்களில் தெளிவாகக் காட்டப்பட்டுள்ளது. கிருஷ்ணரால் எவ்வாறு இராஜயோகத்தைக் கற்பிக்க முடியும்? சத்திய யுகத்துக்காகவே, இராஜயோகம் கற்பிக்கப்படுவதனால், தந்தை நிச்சயமாக அதனைச் சங்கம யுகத்திலேயே கற்பித்திருக்க வேண்டும். பாபாவே சத்தியயுகத்தை ஸ்தாபிக்கிறார். அவர் அதனைப் பிரம்மாவினூடாக மேற்கொள்கிறார். அவர் கரன்கரவன்கார் (அதனைச் செய்பவரும், ஏனையோரினூடாகச் செய்விப்பவரும்) ஆவார். அம்மக்கள் திரிமூர்த்தி பிரம்மாவைப் பற்றிப் பேசுகிறார்கள். எவ்வாறாயினும், சிவனே அதிமேலானவர். இவர் சரீரதாரியும், அவர் அசரீரியானவரும் ஆவர். இவ்வுலகம் ஒன்றே உள்ளது. இவ்வுலகச் சக்கரம் தொடர்ந்தும் சுழல்வதுடன், மீண்டும் மீண்டும் சுழல்கிறது. சூட்சும வதனத்தின் உலகச் சக்கரம் நினைவுகூரப்படுவதில்லை. உலகின் வரலாறும், புவியியலும் மீண்டும் மீண்டும் இடம்பெறுகின்றன. சத்திய, திரேதா, துவாபர, கலியுகங்கள் உள்ளன என நினைவுகூரப்படுகிறது. இடையில் நிச்சயமாகச் சங்கமயுகம் தேவைப்படுகின்றது. இல்லாவிட்டால், யாரால் கலியுகத்தைச் சத்திய யுகமாக மாற்ற முடியும்? தந்தை நரகவாசிகளைச் சுவர்க்கவாசிகள் ஆக்குவதற்குச் சங்கமயுகத்தில் மாத்திரமே வருகிறார். உலகம் எந்தளவுக்குப் பழையதாகுகிறதோ, அந்தளவுக்குப் பெரும் துன்பம் உள்ளது. ஓர் ஆத்மா அதிகம் தமோபிரதானாக ஆகும்பொழுது, அதிகளவு துன்பத்தை அனுபவம் செய்கிறார். தேவர்கள் சதோபிரதானானவர்கள். அந்த ஒரேயொருவரே இறைதந்தை அரசாங்கத்தின் அதிமேலான அதிகாரியாவார், அவருடன் தர்மராஜும் உள்ளார். தந்தை கூறுகிறார்: நீங்கள் சிவாலய வாசிகளாக இருந்தீர்கள், அது இப்பொழுது விலைமாந்தர் இல்லமாக உள்ளது. நீங்கள் தூய்மையாக இருந்தீர்கள், இப்பொழுது தூய்மையற்றவர்களாகி, உங்களைப் பாவிகள் என அழைக்கிறீர்கள். ஆத்மாக்கள் கூறுகிறார்கள்: நான் தெய்வீகக் குணமற்றவன்; என்னிடம் தெய்வீகக் குணங்கள் எதுவுமில்லை. அவர்கள் தேவர்களின் ஆலயம் எதற்காவது செல்லும்பொழுது, அவர்கள் முன்னிலையில் இதனைப் பாடுகிறார்கள். அவர்கள் இதனைத் தந்தையின் முன்னிலையில் கூற வேண்டும். அவரை ஒருபுறம் ஒதுக்கி விட்டு, அவர்கள் இதனைத் தங்களுடைய சகோதரர்களை நோக்கிக் கூறுகிறார்கள். அத்தேவர்கள் உங்களுடைய சகோதரர்கள். உங்கள் சகோதரர்களிடமிருந்து நீங்கள் எதனையும் பெறப் போவதில்லை. சகோதரர்களைப் பூஜிக்கும்வேளையில், நீங்கள் தொடர்ந்தும் கீழிறங்கியே வந்தீர்கள். தந்தை வந்துள்ளார் என்பதையும், அவரிடமிருந்து நாங்கள் ஆஸ்தியைப் பெறுகிறோம் என்பதையும் குழந்தைகளான நீங்கள் இப்பொழுது அறிவீர்கள். எவ்வாறாயினும், மனிதர்கள் முற்றாகவே தந்தையை அறியார்கள். அவரைச் சர்வவியாபி என அவர்கள் கூறுகிறார்கள். பின்னர் சிலர் அவர் முடிவற்ற ஒளித் தத்துவம் என்றும் கூறுகிறார்கள். அவர் பெயருக்கும், ரூபத்துக்கும் அப்பாற்பட்டவர் என்றும் சிலர் கூறுகிறார்கள். அவர் அநாதியான ஒளி ரூபத்தைக் கொண்டிருக்கிறார் என அவர்கள் கூறுவதனால், எவ்வாறு அவர் பெயருக்கும், ரூபத்துக்கும் அப்பாற்பட்டவர் என்று அவர்களால் கூற முடியும்? தந்தையை அறியாததால், அவர்கள் தூய்மையற்றவர்களாகி விட்டார்கள். ஆத்மாக்கள் தமோபிரதானாக வேண்டும். தந்தை வரும்பொழுது மாத்திரமே, அவரால் அனைவரையும் தூய்மையாக்க முடியும். ஆத்மாக்கள் அனைவரும் அசரீரி உலகில் தந்தையுடன் வசிக்கிறார்கள். பின்னர் அவர்கள் இங்கே கீழிறங்கி வந்து, சதோ, ரஜோ, தமோவுக்குரிய தங்கள் பாகங்களை நடிக்கிறார்கள். ஆத்மாக்களே தந்தையை நினைவுசெய்கிறார்கள். பிரம்மாவின் சரீரத்தின் ஆதாரத்தைத் தான்; பெறுவதாகத் தந்தையே வந்து கூறுகிறார். இவரே பாக்கிய இரதம் ஆவார். ஓர் ஆத்மா இன்றி, ஓர் இரதம் இருக்க முடியாது. பகீரதனே (பாக்கிய இரதம்) கங்கையைக் கொண்டு வந்ததாக அவர்கள் கூறுகிறார்கள். அது சாத்தியமல்ல. எவ்வாறாயினும், தாங்கள் என்ன கூறுகின்றனர் என்பதைப் பற்றி அவர்கள் சற்றேனும் புரிந்துகொள்வதில்லை. இதுவே ஞான மழை என்பது குழந்தைகளான உங்களுக்கு விளங்கப்படுத்தப்பட்டுள்ளது. இதனூடாக என்ன நடக்கும்? நீங்கள் தூய்மையற்றவர்களிலிருந்து தூய்மையானவர்கள் ஆகுவீர்கள். சத்திய யுகத்தில் கங்கை நதியும், ஜமுனை நதியும் உள்ளன. கிருஷ்ணர் ஜமுனை நதிக்கரையில் விளையாடினார் என அவர்கள் கூறுகிறார்கள். அத்தகைய விடயங்கள் நடைபெறவில்லை. அவர் சத்தியயுகத்தின் ஓர் இளவரசர் என்பதனால், அதாவது, ஒரு மலர் ஆதலால், பெருமளவு கவனத்துடன் பராமரிக்கப்பட்டிருப்பார். மலர்கள் மிகவும் அழகானவை. அனைவரும் வந்து, மலர்களிடமிருந்து நறுமணத்தைப் பெறுகிறார்கள். அவர்கள் முட்களிலிருந்து நறுமணத்தைப் பெற மாட்டார்கள். இப்பொழுது முட்களின் உலகமே உள்ளது. தந்தை வந்து, முட்காட்டைப் பூந்தோட்டமாக மாற்றுகிறார், இதனாலேயே அவர் முட்களை மலர்களாக மாற்றுகின்ற, பாபுல்நாத் எனவும் அழைக்கப்படுகிறார். அவர்கள் 'முட்களை மலர்களாக மாற்றுகின்ற பாபாவே" என்று அவருடைய புகழையே பாடுகிறார்கள். குழந்தைகளாகிய உங்களுக்குத் தந்தை மீது அதிகளவு அன்பு இருக்க வேண்டும். நீங்கள் எல்லையற்ற தந்தைக்குரியவர்கள் என்பதை இப்பொழுது அறிவீர்கள். நீங்கள் இப்பொழுது அவருடனும், உங்கள் லௌகீகத் தந்தையுடனும் ஓர் உறவுமுறையைக் கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் அப்பாலுள்ள தந்தையை நினைவுசெய்யும்பொழுது, தூய்மையாகுவீர்கள். அவர்கள் உங்களுடைய லௌகீகத் தந்தையர்களும், இவரோ இவ்வுலகிற்கு அப்பாலுள்ள உங்கள் தந்தை என்பதையும் ஆத்மாக்களான நீங்கள் அறிவீர்கள். பக்தி மார்க்கத்திலும், அவர்கள் தங்களுடைய லௌகீகத் தந்தையர்கள் என்பதையும், இவர் தந்தையாகிய கடவுள் என்பதையும் ஆத்மாக்கள் அறிவார்கள். ஆத்மாக்கள் அழிவற்ற தந்தையை நினைவுசெய்கிறார்கள். தந்தை எப்பொழுது வந்து சுவர்க்கத்தை ஸ்தாபிக்கிறார் என்பதை எவரும் அறியார். தந்தை தூய்மையற்றவர்களைத் தூய்மையாக்குவதற்கு வருகிறார். ஆகவே, அவர் நிச்சயமாகச் சங்கம யுகத்திலேயே வருவார். சமயநூல்களில், அவர்கள் சக்கரத்தின் கால எல்லையை நூறாயிரக்கணக்கான வருடங்கள் என எழுதியுள்ளார்கள், இது மக்களைக் காரிருளில் இட்டு விட்டது. பெருமளவு பக்தி செய்பவர்கள் கடவுளைக் காண்பார்கள் என அவர்கள் கூறுகிறார்கள். ஆகவே, அதிகபட்ச பக்தி செய்தவர்கள் நிச்சயமாக அவரை முதலில் காண வேண்டும். பாபா உங்களுக்குக் கணக்கைப் பற்றிக் கூறியுள்ளார். நீங்களே முதலில் பக்தி செய்பவர்கள். கடவுளிடமிருந்து நீங்களே முதலில் ஞானத்தைப் பெறுவதால், பின்னர் உங்களால் புதிய உலகில் இராச்சியத்தை ஆட்சிசெய்ய முடியும். எல்லையற்ற தந்தை குழந்தைகளான உங்களுக்கு ஞானத்தைக் கொடுக்கிறார். இதில் சிரமத்துக்கான கேள்வியே கிடையாது. தந்தை கூறுகிறார்: நீங்கள் என்னை அரைக் கல்பமாக நினைவுசெய்கிறீர்கள். எவரும் என்னைச் சந்தோஷத்தில் நினைவுசெய்வதில்லை. இறுதியில், நீங்கள் சந்தோஷமற்றவர்கள் ஆகியுள்ளபொழுது, நான் வந்து உங்களைச் சந்தோஷமானவர்கள் ஆக்குகிறேன். நீங்கள் இப்பொழுது மிகவும் மகத்தானவர்கள் ஆகுகிறீர்கள். முதல் அமைச்சர்களினதும், பிரதம மந்திரிகளினதும் பங்களாக்கள் முதற்தரமானவை. அவர்களுடைய தளபாடங்கள் அனைத்தும் முதற்தரமானவையாக இருக்கும். நீங்கள் அத்தகைய மகத்தானவர்கள் ஆகுகிறீர்கள்; நீங்கள் சுவர்க்க அதிபதிகளான, தெய்வீகக் குணங்களை உடைய தேவர்கள் ஆகுகிறீர்கள். அங்கே, நீங்கள் வைரங்களாலும், இரத்தினங்களாலும் பதிக்கப்பட்ட மாளிகைகளைக் கொண்டிருப்பீர்கள். அங்கே, உங்கள் தளபாடங்கள் தங்கத்தினால் இழைக்கப்பட்டு முதற் தரமானவையாக இருக்கும். இதுவே உருத்திர ஞான யாகமாகும். சிவன் உருத்திரர் எனவும் அழைக்கப்படுகிறார். பக்தி முடிவடையும்பொழுது, கடவுள் உருத்திர யாகத்தை உருவாக்குகிறார். சத்திய யுகத்தில், யாகங்களின் அல்லது பக்தியின் கேள்வியே கிடையாது. இந்நேரத்திலேயே தந்தை அழிவற்ற உருத்திர ஞான யாகத்தை உருவாக்குகிறார், அது பின்னர் நினைவுகூரப்படுகிறது. பக்தி சதா காலமும் தொடர்வதில்லை. பக்தியும், ஞானமும் உள்ளன. பக்தி இரவும், ஞானம் பகலும் ஆகும். தந்தை வந்து பகலை உருவாக்குகின்றார். ஆகவே, குழந்தைகளாகிய நீங்கள் தந்தை மீது அதிகளவு அன்பைக் கொண்டிருக்க வேண்டும். தந்தை எங்களை உலக அதிபதிகள் ஆக்குகிறார். பாபாவே அதி அன்பிற்கினியவர். அவரை விடவும் இனிமையானது எதுவும் இல்லை. நீங்கள் அவரை அரைக் கல்பமாக நினைவுசெய்து, கூறுகிறீர்கள்: பாபா, வந்து எங்கள் துன்பத்தை அகற்றுங்கள். இப்பொழுது தந்தை வந்து விட்டார், அவர் விளங்கப்படுத்துகிறார்: குழந்தைகளே, நீங்கள் வீட்டில் உங்கள் குடும்பத்துடன் வாழ வேண்டும். இங்கே பாபாவுடன் எவ்வளவு காலம் நீங்கள் தங்கியிருப்பீர்கள்? பரந்தாமத்தில் மாத்திரமே உங்களால் அவருடன் தங்கியிருக்க முடியும்; இங்கு உங்களால் அவருடன் தங்கியிருக்க முடியாது. இங்கே, நீங்கள் ஞானத்தைக் கற்க வேண்டும். ஞானத்தைக் கற்கின்ற வெகு சிலரே இருக்கிறார்கள். ஓர் ஒலிபெருக்கியினூடாக ஒரு கல்வி நடைபெறுகிறதா? எவ்வாறு ஆசிரியர் வினாக்களை வினவுவார்? உங்களால் எவ்வாறு ஓர் ஒலிபெருக்கிக்குப் பதிலளிக்க முடியும்? இதனாலேயே ஒரு தடவையில் வெகுசில மாணவர்களே கற்பிக்கப்படுகிறார்கள். பல கல்லூரிகள் உள்ளன, அனைவருக்கும் பரீட்சைகள் வைக்கப்பட்டு, பெறுபேறுகள் அறிவிக்கப்படுகின்றன. இங்கே, ஒரேயொரு தந்தை மாத்திரமே உங்களுக்குக் கற்பிக்கிறார். அனைவருக்கும் லௌகீகமானவரும், இவ்வுலகத்துக்கு அப்பாலுள்ளவரும் என இரு தந்தையர்கள் உள்ளார்கள் என்பதையும் நீங்கள் விளங்கப்படுத்த வேண்டும். துன்ப வேளையின் பொழுது, மக்கள் அப்பாலுள்ள தந்தையை நினைவுசெய்கிறார்கள். இங்கே, இப்பொழுது அத்தந்தை வந்துள்ளார். மகாபாரத யுத்தம் உங்களின் முன்னிலையில் உள்ளது. கிருஷ்ணர் மகாபாரத யுத்த காலத்தில் வந்தார் என அம்மக்கள் எண்ணுகிறார்கள், ஆனால் அது சாத்தியமல்ல. அப்பாவி மக்கள் மிகவும் குழப்பமடைந்துள்ளார்கள்! இருப்பினும், அவர்கள் தொடர்ந்தும் கிருஷ்ணா, கிருஷ்ணா என்று சதாகாலமும் கூறுகிறார்கள். சிவனும், கிருஷ்ணரும் அதி அன்பிற்கினியவர்கள். எவ்வாறாயினும், அவர் அசரீரியானவரும், இவர் சரீரதாரியும் ஆவர். அசரீரியான தந்தையே ஆத்மாக்கள் அனைவரினதும் தந்தையாவார். இருவரும் அதி அன்பிற்கினியவர்கள். கிருஷ்ணரும் ஓர் உலக அதிபதி ஆவார். இருவரில் யார் இனிமையானவர் என்பதை நீங்களே இப்பொழுது தீர்மானிக்க முடியும். சிவபாபா மாத்திரமே உங்களை மிகவும் தகுதிவாய்ந்தவர்கள் ஆக்குகிறார். கிருஷ்ணர் என்ன செய்கிறார்? தந்தையே அவரை அவ்வாறு ஆக்குகிறார். ஆகவே, அத்தந்தைக்கே பெரும் புகழ் இருக்க வேண்டும். நீங்கள் அனைவரும் பார்வதிகள் எனத் தந்தை விளங்கப்படுத்தியுள்ளார். அமரத்துவப் பிரபுவான, சிவனே, உங்களுக்குக் கதையைக் கூறுகிறார். நீங்கள் அனைவரும் அர்ச்சுனர்கள், நீங்கள் அனைவரும் திரௌபதிகள். இவ்விகார உலகம் இராவண இராச்சியம் என அழைக்கப்படுகிறது. அது விகாரமற்ற உலகம். அங்கே விகாரத்தின் கேள்வியே கிடையாது. அசரீரியான தந்தை விகார உலகைப் படைப்பாரா? விகாரத்தில் துன்பமே உள்ளது. சந்நியாசிகள் துறவறப் பாதையான, ஹத்தயோகத்தைக் கொண்டிருக்கிறார்கள். ஒருபொழுதும் செயலின் துறவறம் இருக்க முடியாது. ஓர் ஆத்மா தனது சரீரத்தை விட்டு நீங்கும்பொழுது மாத்திரமே அது சாத்தியமாக முடியும். ஒரு கருப்பைச் சிறையிலேயே செயலின் கணக்குகள் அனைத்தும் ஆரம்பிக்கிறது. எவ்வாறாயினும், செயலின் துறவறத்தைப் பற்றிப் பேசுவது தவறானது. மக்கள் பலரும் ஹத்தயோகம் போன்றவற்றைக் கற்கிறார்கள். அவர்கள் சென்று குகைகளில் அமர்கிறார்கள், அவர்கள் தீயிலும் நடக்கிறார்கள். அவர்களிடம் பல மந்திர சக்திகள் உள்ளன. அவர்கள் மந்திர சக்தியினூடாகப் பல பொருட்களை வெளிப்படச் செய்கிறார்கள். கடவுள் மந்திரவாதி எனவும், நகை வியாபாரி எனவும், வியாபாரி எனவும் அழைக்கப்படுகிறார். எவ்வாறாயினும், எவராலும் அவற்றினூடாக, முக்தியையோ அல்லது சற்கதியையோ பெற முடியாது. ஒரேயொரு உண்மையான சற்குரு மாத்திரமே வந்து, அனைவருக்கும் முக்தியையும், சற்கதியையும் அருள்கிறார். அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தந்தை தாயாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. முட்களை மலர்களாக மாற்றுகின்ற ஒரேயொரு அதி அன்பிற்கினிய தந்தையே உள்ளார். அவரைப் பெருமளவு அன்புடன் நினைவுசெய்யுங்கள். தூய, நறுமணமிக்க மலர்களாகி, அனைவருக்கும் சந்தோஷத்தைக் கொடுங்கள்.

2. இந்த ஞானமே (கல்வி) உங்கள் வருமானத்தின் மூலாதாரம். இதனூடாக, நீங்கள் 21 பிறவிகளுக்கு மிகவும் மகத்தானவர்கள் ஆகுகிறீர்கள். ஆகவே, அதனை நன்கு கற்று, ஏனையோருக்கும் கற்பியுங்கள். ஆத்ம உணர்வுடையவர்கள் ஆகுங்கள்.

ஆசீர்வாதம்:
நீங்கள் பாப்தாதாவை உங்கள் சகபாடியாக்கி, அனைத்தையும் இரட்டை விசையுடன் செய்கின்ற, ஓர் இலகுயோகி ஆகுவீர்களாக.

எந்தப் பணியையும் மேற்கொள்ளும்பொழுதும், பாப்தாதாவை உங்கள் சகபாடி ஆக்குங்கள், அப்பொழுது அந்தப் பணி இரட்டை விசையுடன் மேற்கொள்ளப்படும். நீங்களும் மிகவும் இலகுவாக அவரது விழிப்புணர்வைக் கொண்டிருப்பீர்கள், ஏனெனில் உங்களுடன் எப்பொழுதும் இருக்கின்றவர் இயல்பாகவே நினைவுசெய்யப்படுகின்றார். இவ்விதமாக ஒரு சகபாடியாக இருப்பதாலும், உங்கள் புத்தியில் சத்தியமானவரின் சகவாசத்தைச் சதா கொண்டிருப்பதாலும், நீங்கள் ஓர் இலகுயோகி ஆகுவீர்கள். இந்தச் சக்திவாய்ந்த சகவாசத்தைக் கொண்டிருப்பதால், நீங்கள் ஒவ்வொரு பணியையும் இரட்டை விசையுடன் செய்வதுடன், வெற்றியையும் அனுபவம் செய்வீர்கள்.

சுலோகம்:
என்றுமே மாயையின் வெளிப்புற ஆதிக்கம் எதனாலும் ஆதிக்கம் செலுத்தப்படாதவரே, ஒரு மகாராத்தி ஆவார்.