05.11.19        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்:
இனிய குழந்தைகளே, உங்கள் பௌதீகக் கண்களால் காண்பவற்றைப் பார்த்தும் பார்க்காதிருங்கள். அனைத்துமே தீப்பற்றி எரியவுள்ளதனால், அவற்றின் மீதுள்ள உங்கள் பற்றை அகற்றுங்கள்.

கேள்வி:
இறை அரசாங்கத்தின் எந்த மறைமுகமான பணியைப் பற்றி உலகிலுள்ள எவரும் அறியாதுள்ளனர்?

பதில்:
இறை அரசாங்கம் ஆத்மாக்களைத் தூய்மையாக்கி, அவர்களைத் தேவர்களாக்குகின்றது. இது மனிதர்களால் புரிந்துகொள்ள முடியாத, மிகவும் மறைமுகமான பணியாகும். மனிதர்கள் தேவர்களாகும்பொழுது மாத்திரமே, நரகவாசிகளிலிருந்து சுவர்க்கவாசிகளாக மாறுகின்றனர். விகாரங்கள் மனிதர்களின் நடத்தையை முற்றாகச் சீரழித்து விட்டன. இப்பொழுது நீங்கள் அனைவரது நடத்;தைகளையும் மேன்மையானதாக்குகின்ற சேவையைச் செய்கின்றீர்கள். இதுவே உங்கள் பிரதான பணியாகும்.

ஓம் சாந்தி.
ஓம் சாந்தி எனக் கூறுவதனால், நீங்கள் உங்கள் சுயத்தின் ஆதி தர்மத்தையும், உங்கள் வீட்டையும் நினைவுசெய்கின்றீர்கள் என்பதைப் புரிந்துகொள்கின்றீர்கள். ஆனால் இப்பொழுது நீங்கள் அந்த வீட்டில் அமர்ந்திருக்க வேண்டியதில்லை. நீங்கள் தந்தையின் குழந்தைகள் ஆகியிருப்பதனால், நிச்சயமாகச் சுவர்க்க ஆஸ்தியையும் நினைவுசெய்வீர்கள். நீங்கள் ஓம் சாந்தி எனக் கூறும்பொழுது, இந்த ஞானம் முழுவதும் உங்கள் புத்தியில் பதிகிறது. ஆத்மாவாகிய நான் அமைதி சொரூபமாவேன். நான் அமைதிக் கடலாகிய, தந்தையின் குழந்தை ஆவேன். சுவர்க்கத்தை ஸ்தாபிக்கின்ற தந்தையே, எங்களைத் தூய்மையாக்கி, அமைதி சொரூபங்கள் ஆக்குகின்ற தந்தையாவார். தூய்மையே பிரதான விடயமாகும். தூய உலகமும், தூய்மையற்ற உலகமும் உள்ளன. தூய உலகில் ஒரு விகாரமேனும் கிடையாது. இந்தத் தூய்மையற்ற உலகில் ஐந்து விகாரங்கள் உள்ளன. எனவே, இவ்வுலகம் விகார உலகம் எனப்படுகின்றது. அதுவோ விகாரமற்ற உலகமாகும். விகாரமற்ற உலகிலிருந்து நீங்கள் தொடர்ந்தும் ஏணியில் கீழிறங்கி வருகையில், விகார உலகிற்கு வருகின்றீர்கள். அது தூய உலகம்; இதுவோ தூய்மையற்ற உலகமாகும். இராம இராச்சியமும், இராவண இராச்சியமும் உள்ளன. சில சமயங்களில் அவை இரவும், பகலும் என்றும் குறிப்பிடப்படுகின்றன. பிரம்மாவின் பகலும், பிரம்மாவின் இரவும் உள்ளன் பகலில் சந்தோஷமும், இரவில் துன்பமும் காணப்படுகின்றன. இரவானது அலைந்து திரிவதற்கானது. நீங்கள் இரவில் அலைந்து திரிகின்றீர்;கள் என்றல்ல, ஆனால் பக்தியே அலைந்து திரிதல் என அழைக்கப்படுகின்றது. குழந்தைகளாகிய நீங்கள் சற்கதியைப் பெறுவதற்காக இங்கு வந்துள்ளீர்கள். ஆத்மாக்களாகிய நீங்கள் ஐந்து விகாரங்களின் பாவங்களினால் நிரப்பப்பட்டுள்ளீர்கள். அவற்றிலும் காம விகாரமே பிரதான பாவமாகும். இந்த விகாரத்தினாலேயே, மனிதர்கள் பாவாத்மாக்களாக ஆகுகின்றனர். நீங்கள் அனைவரும் தூய்மையற்றவர்கள்; நீங்கள் சீரழிவின் மூலம் பிறந்தீர்கள் என்பதை அறிவீர்கள். காம விகாரத்தினால் உங்கள் தகைமைகள் அனைத்தும் பாழாகி விட்டன. இதனாலேயே தந்தை கூறுகின்றார்: இந்தக் காம விகாரத்தை வெல்லுங்கள், நீங்கள் உலகை வென்று, புதிய உலகின் அதிபதிகள் ஆகுவீர்கள். நீங்கள் உங்களுக்குள் பெருமளவு சந்தோஷத்தைக் கொண்டிருக்க வேண்டும். மனிதர்கள் தூய்மையற்றவர்கள் ஆகும்பொழுது, அவர்கள் எதனையும் புரிந்துகொள்வதில்லை. காமத்தின் காரணமாகவே அதிகக் குழப்பங்கள் ஏற்;படுகின்றன. பெருமளவு அமைதியின்மையும், துன்ப ஓலங்களும் காணப்படுகின்றன. தற்காலத்தில் உலகில் துன்ப ஓலங்கள் காணப்படுவது ஏன்? அனைவரும் பாவாத்மாக்களாக இருப்பதனாலாகும். விகாரங்கள் காரணமாகவே அவர்கள் அசுரர்கள் என அழைக்கப்படுகின்றனர். நீங்கள் முற்றிலும் சிப்பிகளைப் போன்றும், ஒரு சதப் பெறுமதியற்றவர்களாகவும் இருந்தீர்கள் என்பதைத் தந்தையால் புரிந்துகொள்ளுமாறு செய்யப்படுகின்றீர்கள். உபயோகமற்ற பொருட்கள் தீயில் எரிக்கப்படுகின்றன. இவ்வுலகில் உபயோகமானவை எதுவுமில்லை என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது புரிந்துகொள்கின்றீர்கள். மனிதர்கள் அனைவரும் தீப்பற்றி எரிவார்கள். உங்கள் பௌதீகக் கண்களால் நீங்கள் காண்கின்ற அனைத்தும் தீப்பற்றப் போகின்றன. ஆத்மாக்களில் தீப்பற்ற முடியாது; அது ஆத்மாக்கள் காப்புறுதி செய்யப்பட்டுள்ளதைப் போன்றதாகும். ஆத்மாக்களை எப்பொழுதாவது காப்புறுதி செய்ய முடியுமா? சரீரமே காப்புறுதி செய்யப்படுகின்றது. இது ஒரு நாடகம் எனக் குழந்தைகளாகிய உங்களுக்குக் கூறப்பட்டுள்ளது. ஆத்மாக்கள் பஞ்ச தத்துவங்களுக்கும் அப்பால், மேலே வசிக்கின்றார்கள். இவ்வுலகிற்குரிய சம்பிரதாயங்கள் அனைத்தும் பஞ்ச தத்துவங்களிலிருந்தே உருவாக்கப்பட்டுள்ளன. ஆத்மாக்கள் உருவாக்கப்படுவதில்லை, அவர்கள் என்றென்றும் இருப்பவர்கள். ஆனால், அவர்கள் புண்ணியாத்மாக்களாகவும், பாவாத்மாக்களாகவும் ஆகுகின்றனர். ஐந்து விகாரங்களினால் ஆத்மாக்கள் எவ்வளவு அழுக்காகுகின்றனர்! தந்தை உங்களைப் பாவம் செய்வதிலிருந்து விடுவிப்பதற்கே இப்பொழுது வந்துள்ளார். விகாரங்களினால் உங்கள் நடத்தை முழுவதும் அழிக்கப்பட்டு விட்டது. நடத்தை என்றால் என்ன என்பதையேனும் எவரும் அறியாதுள்ளனர். பாண்டவர்களின் இராச்சியமும், கௌரவர்களின் இராச்சியமும் நினைவுகூரப்படுகின்றன. பாண்டவர்கள் யார் என்பதையேனும் எவரும் அறிந்திருக்;கவில்லை. நீங்கள் இப்பொழுது இறை அரசாங்கத்திற்குரியவர்கள் என்பதைப் புரிந்துகொள்கின்றீர்கள். தந்தை, இராம இராச்சியத்தை ஸ்தாபிப்பதற்கு வந்துள்ளார். இறை அரசாங்கம் இந்நேரத்தில் என்ன செய்கின்றது? அது ஆத்மாக்களைத் தூய்மையாக்கி, அவர்களைத் தேவர்கள் ஆக்குகின்றது. இல்லாவிடில், தேவர்கள் எங்கிருந்து வந்திருப்பார்கள்? எவரும் இதனை அறியார்; எனவே, இது மறைமுகமான அரசாங்கம் என அழைக்கப்படுகின்றது. அவர்களும் மனிதர்களேயாயினும், எவ்வாறு அவர்கள் தேவர்கள் ஆகினார்கள்? அவர்களைத் தேவர்களாக்கியவர் யார்? தேவர்கள் சுவர்க்கத்திலேயே வாழ்கின்றார்கள். அவர்களைச் சுவர்க்க வாசிகள் ஆக்கியவர் யார்? அவர்கள் சுவர்க்க வாசிகளிலிருந்து நரகவாசிகள் ஆகுகின்றனர், பின்னர், நரகவாசிகளிலிருந்து மீண்டும் அவர்கள் சுவர்க்கவாசிகள் ஆகுகின்றனர். நீங்கள் இவை எதனையும் அறிந்திருக்கவில்லை, எனவே ஏனையோரால் எவ்வாறு அறிந்துகொள்ள முடியும்? சத்தியயுகம் சுவர்க்கம் எனவும், கலியுகம் நரகம் எனவும் அழைக்கப்படுகின்றன. இந்நாடகம் ஏற்கனவே நிச்சயிக்கப்பட்டது என்பதை நீங்களும் இப்பொழுது புரிந்துகொள்கின்றீர்கள். இக்கல்வி தூய்மையற்றவர்களிலிருந்து தூய்மையானவர்கள் ஆகுவதற்கானது. ஆத்மாக்களே தூய்மையற்றவர்கள்; ஆகுகின்றனர். தூய்மையற்றவர்களிலிருந்து தூய்மையானவர்களாக மாறுகின்ற வியாபாரத்தைத் தந்தை உங்களுக்குக் கற்பித்துள்ளார். நீங்கள் தூய்மையாகினால், தூய உலகிற்குச் செல்வீர்கள். ஆத்மாக்கள் தூய்மையாகும்பொழுதே, சுவர்க்கத்திற்குச் செல்வதற்குத் தகுதிவாய்ந்தவர்கள் ஆகுகின்றார்கள். சங்கமயுகத்தில் மாத்திரமே நீங்கள் இந்த ஞானத்தைப் பெறுகின்றீர்கள். நீங்கள் தூய்மையாகுவதற்கான ஆயுதங்களைப் பெறுகின்றீர்கள். பாபா ஒருவரே தூய்மையாக்குபவர் என அழைக்கப்படுகின்றார். எங்களைத் தூய்மையாக்குங்கள் என அவருக்கே அவர்கள் கூறுகின்றனர். இலக்ஷ்மியும் நாராயணனும் சுவர்க்க அதிபதிகளாக இருந்தனர். பின்னர், 84 பிறவிகளை எடுக்கும் வேளையில் அவர்கள் தூய்மையற்றவர்கள் ஆகினர். இவருக்கு (கிருஷ்ணர்) அவலட்சணமானவரும் அழகானவரும் (சியாம்சுந்தர்) என்ற பட்டம் கொடுக்கப்பட்டுள்ளது, ஆனால் மக்கள் அதன் அர்த்தத்தைப் புரிந்துகொள்வதில்லை. நீங்கள் கிருஷ்ணரைப் பற்றிய தெளிவான விளக்கத்தையும் பெறுகின்றீர்கள். அவர்கள் ஓர் உலகத்தை இரு உலகங்களாக மாற்றிவிட்டனர். உண்மையில் இந்த ஓர் உலகமே உள்ளது. அதுவே புதியதாகவும், பழையதாகவும் ஆகுகின்றது. குழந்தைகள் முதலில் இளையவர்களாக இருந்து, பின்னர் வளர்ந்து முதியவர்களாக ஆகுகின்;றனர். உலகமும் முதலில் புதியதாக இருந்து, பின்னர் பழையதாகுகின்றது. நீங்கள் விளங்கப்படுத்துவதற்காகப் பெரும் பிரயத்தனம் செய்ய வேண்டியுள்ளது! நீங்கள் உங்கள் இராச்சியத்தை ஸ்தாபிக்கின்றீர்கள். இவரும் அதனைப் புரிந்துகொண்டார், இல்லையா? அனைத்தையும் புரிந்துகொண்டதனாலேயே இவர் மிகவும் இனிமையானவர் ஆகினார். இவருக்கு விளங்கப்படுத்தியவர் யார்? கடவுள். இதில் யுத்தம் போன்ற கேள்விக்கே இடமில்லை. கடவுள் உங்களை மிகவும் ஞானம் நிறைந்தவர்களாகவும், விவேகமானவர்களாகவும் ஆக்குகின்றார்;! மக்கள் சிவாலயத்திற்குச் சென்று, தலை வணங்குகின்றனர். ஆனால், அவர் யார், அவர் எப்படிப்பட்டவர் என்பதை அவர்களில் எவரும் அறியார். கங்கையைப் பூமிக்குக் கொண்டு வந்தவரும், உலகின் அதிபதியுமான காசியின் சிவன், என அவர்கள் கூறுகின்றனர். ஆனால் அவர்கள் அதன் அர்த்தத்தை முற்றிலும் புரிந்துகொள்வதில்லை. நீங்கள் அவர்களுக்கு விளங்கப்படுத்த முயற்சிக்கும்பொழுது அவர்கள் கூறுகின்றனர்: நீங்கள் எதனை எங்களுக்கு விளங்கப்படுத்துவீர்கள்;? நாங்கள் வேதங்கள், சமயநூல்கள் போன்றவற்றைக் கற்றுள்ளோம். குழந்தைகளாகிய நீங்கள் இதனை வரிசைக்கிரமமாகவே கிரகிக்கின்றீர்கள். முற்றிலும் கல்லுப் புத்தியைக் கொண்டிருப்பவர்கள் இவ்விடயங்களை மறக்கின்றார்கள். தெய்வீகப் புத்தியைக் கொண்டிருப்பவர்கள், இப்பொழுது மற்றவர்களின் புத்தியையும் தெய்வீகமாக்குகின்ற பணியைக் கொண்டிருக்கின்றார்கள். கல்லுப் புத்தியைக் கொண்டிருப்பவர்களின் செயற்பாடுகளும் அத்தகையதாகவே இருக்கும்! அன்னங்களும் நாரைகளும் உள்ளனர். அன்னங்கள் ஒருபொழுதும் எவரையும் சந்தோஷமற்றவர்கள் ஆக்கமாட்டார்கள். நாரைகள் துன்பத்தையே விளைவிக்கின்றார்;கள். அத்தகையோர் அசுரர்கள் என்றும் அழைக்கப்படுகிறார்கள். அவர்களிடம் இனங்காணும் திறன் கிடையாது. விகாரம் நிறைந்த பலரும் நிலையங்களுக்கு வருகின்றனர். அவர்கள் தாங்கள் தூய்மையாக இருப்பதாகக் கதைகள் கூறுகின்றார்;கள், ஆனால் அவை பொய்களாகும். உலகம் பொய்யானது...... என்றும் கூறப்படுகின்றது. இப்பொழுது இது சங்கம யுகமாகும். அதிகளவு வேறுபாடு உள்ளது! பொய் பேசுபவர்களும், தவறான நடத்தை கொண்டவர்களும் மூன்றாந் தரத்தினராகவே ஆகுவார்கள். முதலாம், இரண்டாம், முன்றாந் தரங்கள் உள்ளன. மூன்றாந் தரத்தில் உள்ளவர்கள் யார் என்பதைத் தந்தையால் உங்களுக்குக் கூறமுடியும். நீங்கள் உங்கள் தூய்மையின் முழுமையான அத்தாட்சியைக் கொடுக்க வேண்டும் எனத் தந்தை விளங்கப்படுத்துகின்றார். நீங்கள் இருவரும் ஒன்றாக வாழும்பொழுது தூய்மையாக இருப்பது அசாத்தியமானது எனப் பலர் கூறுகின்றனர். யோக சக்தி எதுவும் இல்லாததால், சில குழந்தைகளால் அவ்வாறான இலகுவான விடயத்தை முழுமையாக விளங்கப்படுத்த முடியாதுள்ளது. கடவுளே எங்களுக்குக் கற்பிக்கின்றார் என்பதை எவராலும் அவர்களுக்கு விளங்கப்படுத்த முடியாதுள்ளது. நீங்கள் தூய்மையாகுவதன் மூலம் 21 பிறவிகளுக்குச் சுவர்க்க அதிபதிகள் ஆகுகிறீர்கள் என அவர் கூறுகின்றார். நீங்கள் மாபெரும் அதிர்ஷ்ட இலாபச்சீட்டை வெற்றி கொள்கின்றீர்கள். அங்கே இன்னும் அதிகச் சந்தோஷம் உள்ளது. பல குழந்தைகள் தூய திருமணம் செய்து, தூய்மையாக இருக்;கின்றார்கள். தேவர்கள் தூய்மையானவர்கள். தந்தை ஒருவரால் மாத்திரமே உங்களைத் தூய்மையற்றவர்களில் இருந்து தூய்மையாக்க முடியும். ஞானம், பக்தி, விருப்பமின்மை பற்றியும் உங்களுக்கு விளங்கப்படுத்தப்பட்டுள்ளது. ஞானமும், பக்தியும் அரைக்கு அரைவாசியாகும். பக்தியின் பின்னரே விருப்பமின்மை ஏற்படுகின்றது. நீங்கள் இனிமேலும் இந்தத் தூய்மையற்ற உலகில் வாழ வேண்டியதில்லை. நீங்கள் உங்கள் ஆடைகளை (சரீரங்களை) நீக்கி, வீடு திரும்ப வேண்டும். இப்பொழுது எங்களின் 84 பிறவிகளின் சக்கரம் பூர்த்தியாகி, நாங்கள் எங்கள் அமைதி தாமத்திற்குச் திரும்பிச் செல்ல வேண்டும். முதலாவது விடயமான அல்பாவை நீங்கள் மறந்துவிடக்கூடாது. இப் பழைய உலகம் நிச்சயமாக அழிக்கப்படவுள்ளது என்பதையும் குழந்தைகளாகிய நீங்கள் புரிந்துகொள்கின்றீர்கள். தந்தை புதிய உலகை ஸ்தாபிக்;கின்றார். அவர் புதிய உலகை ஸ்தாபிப்பதற்காகப் பல தடவைகள் வந்துள்ளார், பின்னர் நரகத்தின் அழிவும் இடம்பெறுகின்றது. நரகம் மிகப்பெரியது, சுவர்க்கமோ மிகவும்; சிறியது. புதிய உலகில் ஒரு தர்மமே இருக்கின்றது. இப்பொழுது இங்கு பல சமயங்கள் உள்ளன. சங்கரரின் மூலம் விநாசம் என எழுதப்பட்டுள்ளது. பிரம்மாவின் மூலமே பல சமயங்களின் அழிவும், ஒரு தர்மத்தின் ஸ்தாபனையும் இடம்பெறவுள்ளது. இந்த தர்மத்தை ஸ்தாபித்தவர் யார்? பிரம்மா அல்ல. பிரம்மா தூய்மையற்றவரிலிருந்து தூய்மையாகுகின்றார். என்னையிட்டு (சிவன்), நான் தூய்மையற்றவரிலிருந்து தூய்மையாகின்றேன் எனக் கூறப்படுவதில்லை. இவர்கள் தூய்மையாக இருக்கும்பொழுது, இலக்ஷ்மி நாராயணன் என அழைக்கப்படுகின்றனர். இவர் தூய்மையற்றவராக இருக்கும்பொழுது, இவரது பெயர் பிரம்மா ஆகும். பிரம்மாவின் பகலும் பிரம்மாவின் இரவும் உள்ளன. அவர் (சிவபாபா) அநாதியான படைப்பவர் என அழைக்கப்படுகின்றார். எவ்வாறாயினும், ஆத்மாக்கள் உள்ளார்கள். எனவே, அவரை ஆத்மாக்களைப் படைப்பவர் என அழைக்க முடியாது. எனவே, அவர்கள் அநாதியானவர்கள் எனப்படுகின்றனர். தந்தை அநாதியானவர், ஆத்மாக்களும் அநாதியானவர்கள். இந்நாடகமும் அநாதியானது. இது அநாதியாக நிச்சயிக்கப்பட்ட நாடகமாகும். ஆத்மாக்களாகிய நீங்கள் உலகச் சக்கர காலப்பகுதியின் ஆரம்பம், மத்தி, இறுதி பற்றிய ஞானத்தைப் பெறுகின்றீர்கள். உங்களுக்கு இதனைக் கொடுத்தவர் யார்? தந்தையே ஆவார். நீங்கள் 21 பிறவிகளுக்கு பிரபுவும் அதிபதியுமானவருக்கு உரியவர்களாக இருக்கின்றீர்கள், பின்னர் இராவண இராச்சியத்தில் அநாதைகளாகி, இந்த விகாரங்களினால் உங்கள் நடத்தையைப் பாழாக்குகின்றீர்கள். சுவர்க்கமும், நரகமும் ஒரேநேரத்தில் இருப்பதாக மனிதர்கள் நம்புகின்றனர். இப்பொழுது அனைத்தும் குழந்தைகளாகிய உங்களுக்கு மிகத்தெளிவாக விளங்கப்படுத்தப்பட்டுள்ளது. நீங்கள் இப்பொழுது மறைமுகமானவர்கள். சமயநூல்களில் சகலவிதமான விடயங்களும் எழுதப்பட்டுள்ளன. நூல் முழுமையாகச் சிக்கிய நிலையிலுள்ளது. அவர்கள் தந்தையைக் கூவியழைக்கின்றார்கள்: நாங்கள் பயனற்றவர்கள். வந்து, எங்களைத் தூய்மையாக்கி, எங்கள் நடத்தையைச் சீர்திருத்துங்கள். உங்கள் நடத்தை பெருமளவிற்குச் சீர்திருத்தப்படுகின்றது. சிலர் தங்கள் நடத்தையைச் சீர்திருத்துவதற்குப் பதிலாக அதனை மேலும் சீரழியச் செய்கின்றனர். அவர்களின் நடத்தையில் இருந்து உங்களால் இதைக் கூறமுடியும். இன்று, அவர்கள் அன்னங்களாக இருக்கின்றார்கள், நாளையே நாரைகளாக ஆகுகின்றார்கள். அதற்கு அவர்களுக்கு நேரமெடுக்காது. மாயையும் மிகவும் மறைமுகமானவள். இங்கு எதுவும் தென்படாது, ஆனால் அவர்கள் வெளியே சென்றதும், அனைத்துமே தென்படுகின்றது. அவர்கள் வியப்படைந்து, செவிமடுத்துப் பின்னர் ஓடிவிடுகின்றனர்! அவர்கள் தங்கள் எலும்புகள் நொருங்கிப் போகுமளவிற்கு அத்தகைய விசையுடன் கீழே வீழ்கின்றார்கள். இது இந்திர சபையான, இந்திரப்பிரஸ்தைக் குறிக்கின்றது. எவரை இந்த ஒன்றுகூடலினுள் அழைத்து வரக்கூடாது என்பதை நீங்கள் அறிவீர்கள். சிறிதளவு ஞானத்தைச் செவிமடுத்தாலும் அவர்கள் சுவர்க்கத்திற்குச் செல்வார்கள்; ஞானம் அழியாதது. தந்தை கூறுகின்றார்: இப்பொழுது முயற்சி செய்து உயர்ந்ததோர் அந்தஸ்தைப் பெறுங்கள். நீங்கள் விகாரத்தில் ஈடுபட்டால் உங்கள் அந்தஸ்து அழிக்கப்படுகின்றது. இந்தச் சக்கரம் எவ்வாறு சுழல்கின்றது என்பதை இப்பொழுது நீங்கள் புரிந்துகொள்கின்றீர்கள். குழந்தைகளாகிய உங்களின் புத்தி இப்பொழுது அதிகளவில் மாற்றமடைந்து விட்டது! இருந்தபொழுதிலும், மாயை இன்னமும் உங்களை ஏமாற்றுகின்றாள். நீங்கள் முற்றிலும் ஆசைகளைப் பற்றி அறியாதவர்களாக இருக்க வேண்டும். நீங்கள் ஏதேனும் ஆசைகளைக் கொண்டிருந்தால், அனைத்தையும் இழந்து, ஒரு சதப்; பெறுமதியேனும் அற்றவர்கள் ஆகிவிடுகின்றீர்கள். மாயை சில மிகவும் நல்ல மகாராத்திகளையும் ஏதேனும் ஒருவகையில் ஏமாற்றிவிடுவதால், அவர்களால் பாபாவின் இதயத்தில் அமர முடியாதுள்ளது. சில குழந்தைகள் தங்கள் தந்தையைக் கொல்வதற்குக் கூடத் தயங்குவதில்லை. அவர்கள் தங்கள் குடும்பத்தையும் அழிப்பார்கள். அவர்கள் மகா பாவாத்மாக்கள். இராவணன் அவர்களை அனைத்தையும் செய்ய வைக்கின்றான். அவர்கள் மீது பெருமளவு வெறுப்பு உள்ளது. இது அத்தகைய அழுக்கான உலகம்! உங்கள் இதயம் ஒருபொழுதும் அதனால் கவரப்பட அனுமதிக்கக்கூடாது. தூய்மையாகுவதற்குப் பெருமளவு தைரியம் தேவைப்படுகின்றது. உலகப் பரிசை வெல்வதற்கு, தூய்மையே பிரதான விடயமாகும். தூய்மையின் காரணமாகவே பல குழப்பங்களும் ஏற்படுகின்றன. ஓ, தூய்மையாக்குபவரே, வாருங்கள்! என்;றே காந்தியும் கூறினார். தந்தை கூறுகின்றார்: உலக வரலாறும், புவியியலும் இப்பொழுது மீண்டும் ஒரு தடவை இடம்பெறுகின்றது. அனைவரும் நிச்சயமாகக் கீழிறங்கவே வேண்டும். அப்பொழுதே அவர்கள் அனைவரும் ஒன்றாக வீடு திரும்ப முடியும். தந்தை உங்கள் அனைவரையும் வீட்டிற்கு அழைத்துச் செல்வதற்காக வந்துள்ளார். தந்தை வருவதற்கு முன்னர் எவராலும் திரும்பிச் செல்ல முடியாது. அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய் தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும், நினைவுகளும், காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கின்றார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. மாயையால் ஏமாற்றப்படுவதிலிருந்து காப்பாற்றப்படுவதற்கு, எவ்வித ஆசைகளையும் கொண்டிருக்காதீர்கள். முற்றிலும் ஆசைகளைப் பற்றி அறியாதவர்களாக இருங்கள்.

2. உலக இராச்சியம் என்ற பரிசை வெல்வதற்கு, தூய்மையே பிரதான விடயமாகும். எனவே, தூய்மையாக இருப்பதற்கு, உங்களுக்குத் தைரியம் தேவை. நீங்கள் உங்கள் நடத்தையைச் சீர்திருத்த வேண்டும்.


ஆசீர்வாதம்:
நீங்கள் முற்றிலும் பற்றிலிருந்து விடுபட்டு, கருணை உணர்வுகளுடனும், ஒரு கருவியாக இருக்கின்ற உணர்வுகளுடனும் சேவை செய்வீர்களாக.

தற்சமயம், ஆத்மாக்கள் அனைவரும் களைப்படைந்தும்;, மனந்தளர்ந்தும், கருணையை வேண்டுபவர்களாகவும் இருக்கும்பொழுது, அருள்பவரின் குழந்தைகளாகிய நீங்கள் உங்கள் சகோதர, சகோதரிகளின் மீது கருணைமிக்கவராக இருக்க வேண்டும். ஒருவர் எவ்வளவு தீயவராக இருந்தாலும், அவர் மீதும் கருணை மிக்கவராக இருங்கள், நீங்கள் வெறுப்பிற்குரிய, பொறாமைக்குரிய அல்லது கோப உணர்வுகளைக் கொண்டிருக்க மாட்டீர்கள், கருணை உணர்வுகள் வெளிப்படும்பொழுது, நீங்கள் இலகுவாக ஒரு கருவியாக இருக்கின்ற உணர்வைக் கொண்டிருக்கின்றீர்கள். பற்றினால் கருணை கொண்டிராதீர்கள், உண்மையான கருணை உங்களைப் பற்றிலிருந்து விடுவிக்கின்றது. ஏனெனில் அதில் சரீர உணர்வு இருப்பதில்லை.

சுலோகம்:
பிறருக்கு ஒத்துழைப்பு கொடுப்பதெனில், உங்கள் சொந்தக் கணக்கில் சேகரிப்பதாகும்.