05.11.20        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்:
இனிய குழந்தைகளே, தந்தை குழந்தைகளாகிய உங்களுக்கு உங்களது ஆஸ்தியான அமைதியையும் சந்தோஷத்தையும் கொடுக்க வந்துள்ளார். உங்கள் ஆதி தர்மம் அமைதியாகும். எனவே, நீங்கள் இப்பொழுது அமைதியைத் தேடி அலைந்து திரிவதில்லை.

கேள்வி:
குழந்தைகளாகிய நீங்கள் எவ்வாறு 21 பிறவிகளுக்கான எல்லையற்ற பொக்கிஷங்களுக்குச் சமமாக மதிப்பீடு செய்வதற்குத் தகுதியுடையவர் ஆகுகின்றீர்கள்?

பதில்:
தந்தை புதிய உலகை உருவாக்க வரும் போது, குழந்தைகளாகிய நீங்கள் அவருடைய உதவியாளர் ஆகுகின்றீர்கள். உங்களிடம் உள்ள அனைத்தையும் பயனளிக்கும் வகையில் அவருடைய பணிக்காகப் பயன்படுத்துகின்றீர்கள். ஆகையால், அதற்குப் பிரதியுபகாரமாக, தந்தை உங்களை 21 பிறவிகளுக்கான எல்லையற்ற பொக்கிஷங்களுக்குச் சமமான பெறுமதியுடையவர் ஆக்குவதால், உங்களுடைய செல்வம் என்றுமே குறைவடைவதில்லை. எனவே நீங்கள் என்றுமே துன்பத்தையோ அல்லது அகால மரணத்தையோ அனுபவம் செய்வதில்லை.

பாடல்:
எனக்கு ஆதரவளித்தவருக்கு இதயம் நன்றி கூறுகின்றது

ஓம் சாந்தி.
இனிமையிலும் இனிமையான குழந்தைகளுக்கு ஓம் என்பதன் அர்த்தம் விளங்கப்படுத்தப்பட்டுள்ளது. சிலர் ஓம் என்று மாத்திரம் கூறுகின்றார்கள். எவ்வாறாயினும், ஓம்சாந்தி என்று கூறப்பட வேண்டும். ஓம் என்று மாத்திரம் இருந்தால் அதன் அர்த்தம், நான் கடவுள் என்பதாகும். ஓம் சாந்தி என்றால் ஆத்மாவாகிய நான் அமைதி சொரூபம், நான் ஓர் ஆத்மா, இது எனது சரீரம் என்று அர்த்தமாகும். ஆத்மா முதலிலும் பின்னர் சரீரமும் உள்ளது. ஆத்மாக்கள் அமைதி சொரூபங்களும், அவர்களின் இருப்பிடம் அமைதிதாமமும் ஆகும். காட்டிற்குச் செல்வதனால் நீங்கள் உண்மைiயான அமைதியை அடைகின்றீர்கள் என்றில்லை. நீங்கள் வீட்டிற்குச் செல்லும் போதே உண்மையான அமைதியை பெறுகின்றீர்கள். இரண்டாவதாக, அமைதியின்மை இருக்கும் போதே மக்கள் அமைதியை வேண்டுகின்றார்கள். இந்த அமைதியற்ற துன்ப உலகம் அழிந்த பின்னரே அமைதி நிலைத்திருக்கும். அதன் பின்னர் குழந்தைகளாகிய நீங்கள் அமைதி என்ற உங்கள் ஆஸ்தியை பெறுகின்றீர்கள். அங்கே, உங்கள் வீட்டிலோ அல்லது இராச்சியத்தின் வெளியிலோ எங்குமே அமைதியின்மை இருக்க மாட்டாது. அது அமைதி இராச்சியம் என அழைக்கப்படுகின்றது. இங்கே, அமைதியற்ற இராச்சியமே உள்ளது. ஏனெனில் இது இராவணனின் இராச்சியமாகும். அது கடவுளினால் ஸ்தாபிக்கப்பட்ட இராச்சியமாகும். அதன் பின்னர், துவாபரயுகம் ஆரம்பிக்கப்பட்ட பின்னர், அது அசுர இராச்சியம் ஆகுகின்றது. அசுரர்களுக்கு என்றுமே அமைதி இருப்பதில்லை! வீட்டில், வேலை செய்யும் இடம் போன்று எங்குமே அமைதியின்மையைத் தவிர வேறு எதுவும் இருப்பதில்லை. இராவணனின் ஐந்து விகாரங்கள் அமைதியின்மையை பரவச் செய்கின்றன. எக்கல்விமான்களுக்கோ பண்டிதர்களுக்கோ இராவணன் என்பவன் யார் என்பது தெரியாது. அவர்கள் ஒவ்வொரு வருடமும் இராவணனை ஏன் கொல்கின்றார்கள் என்பதும் அவர்களுக்குப் புரிவதில்லை. இராவணனன் சத்தியயுகத்திலோ அல்லது திரேதாயுகத்திலோ இருப்பதில்லை. அது தேவர்களின் இராச்சியமாகும். பாபாவான கடவுள் உங்கள் மூலமாக தேவ இராச்சியத்தை ஸ்தாபிக்கின்றார். அவர் அதனைத் தனியாகச் செய்வதில்லை. இனிமையிலும் இனிமையான குழந்தைகளாகிய நீங்கள் கடவுளின் உதவியாளராக இருக்கின்றீர்கள். முன்னர் நீங்கள் இராவணனின் உதவியாளர்களாக இருந்தீர்கள். இப்பொழுது கடவுள் வந்து, அனைவருக்கும் சற்கதி அருள்கின்றார். அவர் தூய்மையும், அமைதியும், சந்தோஷமும் நிறைந்த இராச்சியத்தை ஸ்தாபிக்கின்றார். குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது ஞானம் என்ற மூன்றாவது கண்ணைப் பெற்றிருக்கின்றீர்கள். சத்திய, திரேதாயுகங்களில் துன்பம் என்ற கேள்விக்கே இடமில்லை. அங்கே எவரையும் எவரும் இழிவு படுத்துவதில்லை. அங்கே எவரும் அசுத்தமான எதனையும் உண்ண மாட்டார்கள். இங்கே மக்கள் உண்ணும் உணவுகள் எவ்வளவு அசுத்தமானவை எனப் பாருங்கள்! கிருஷ்ணர் பசுக்களின் மீது அதிகளவு அன்பு கொண்டிருந்தார் எனச் சித்தரிக்கப்பட்டுள்ளது. பசுக்களை மேய்ப்பதற்கு கிருஷ்ணர் மாடுமேய்க்கும் கிராமத்துச் சிறுவன் அல்ல. இல்லை. அங்கிருக்கும் பசுக்களுக்கும் இங்கிருக்கும் பசுக்களுக்கும் இடையில் அதிகளவு வேறுபாடுகள் உள்ளன. அங்கிருந்த பசுக்கள் மிகவும் அழகாகவும், சதோபிரதானாகவும் இருந்தன. தேவர்கள் எவ்வளவு அழாகனவர்களோ அவ்வாறே அங்குள்ள பசுக்களும் அழகானவையாகும். அவற்றை பார்க்கும் போதே நீங்கள் சந்தோஷம் அடைந்தீர்கள். அது சுவர்க்கமும் இது நரகமும் ஆகும். அனைவரும் சுவர்க்கத்தை நினைவு செய்கின்றார்கள். சுவர்க்கத்திற்கும் நரகத்திற்கும் இடையில் இரவுக்கும் பகலுக்கும் உள்ள வித்தியாசம் உள்ளது. இரவில் இருளும், பகலில் ஒளியும் உள்ளது. பிரம்மாவின் பகல் இருக்கின்ற போது, பிரம்மாவின் குலத்திற்கும் அது பகலாகவே இருக்கின்றது. முன்னர் நீங்களும் இரவான இருளிலேயே இருந்தீர்கள். இந்த நேரத்தில் பக்தியின் ஆதிக்கம் அதிகளவில் உள்ளது. மகாத்மாக்கள் சமயநூல்களில் பாண்டித்தியம் பெற்றவர்கள் என்பதால் அவர்களை தொடர்ந்தும் தங்கத்திற்குச் சமமாக அவர்கள் நிறுக்கின்றார்கள். அவர்கள் ஏன் அவ்வாறான தாக்கத்தை ஏற்படுத்துகின்றார்கள்? பாபாவும் இதனை உங்களுக்கு விளங்கப்படுத்தியுள்ளார். ஒரு மரத்தில் புதிய இலைகள் துளிர் விடும் போது அவை சதோபிரதானாக உள்ளன. அதைப் போன்றே புதிய ஆத்மாக்கள் மேலிருந்து கீழே வரும் போது, அவர்கள் நிச்சயமாக ஒரு குறுகிய காலத்திற்கு ஒரு தாக்கத்தை ஏற்படுத்துகின்றார்கள். மக்கள் அவர்களை தங்கத்திற்கும், வைரத்திற்கும் சமமாக மதிப்பீடு செய்கின்றார்கள். எனினும் அவை அனைத்தும் அழியப் போகின்றன. மனிதர்களிடம் ஆயிரமாயிரம் ரூபாய்கள் பெறுமதியான கட்டடங்கள் உள்ளன. அவர்கள் தம்மை மிகவும் செல்வந்தர்கள் என நம்புகின்றார்கள். அந்தச் செல்வம் குறுகிய காலத்திற்கே இருக்கும் என்பதை குழந்தைகளாகிய நீங்கள் புரிந்திருக்கின்றீர்கள். அவை அனைத்தும் மண்ணோடு மண்ணாகப் போகின்றன. சிலரின் செல்வம் புதைக்கப்படும்.தந்தை சுவர்க்கத்தைப் படைக்கின்றார். இதற்காக தமது செல்வத்தைப் பயன்படுத்துகின்றவர்கள் 21 பிறவிகளுக்கு வைரத்தினாலும் தங்கத்தினாலும் பதிக்கப்பட்ட மாளிகைகளைப் பெறுவார்கள். இங்கே நீங்கள் ஒரு பிறவிக்கு மாத்திரமே பெறுகின்றீர்கள். அங்கே, அது 21 பிறவிகளுக்குத் தொடரும். உங்கள் கண்களால் பார்க்கக் கூடியவை அதாவது உங்கள் சரீரம் உட்பட அனைத்தும் எரிக்கப்படும். தெய்வீகக கண்களினால் குழந்தைகளாகிய நீங்கள் காட்சிகள் காண்பீர்கள். அழிவு இடம்பெற்ற பின்னர் இலக்ஷ்மி நாராயணனின் இராச்சியம் இருக்கும். நீங்கள் மீண்டும் ஒருமுறை உங்கள் பாக்கியமான உங்கள் இராச்சியத்தை ஸ்தாபிக்கின்றீர்கள் என்பதை நீங்கள் அறிவீர்கள். நீங்கள் 21 பிறவிகளுக்கு ஆட்சி செய்தீர்கள் அதன் பின்னர் இராவண இராச்சியம் இருந்தது. தந்தை மீண்டும் ஒருமுறை வந்திருக்கின்றார். பக்தி மார்க்கத்தில் அனைவருமே தந்தையை நினைவு செய்கின்றார்கள். துன்பத்தின் போதே அனைவரும் தந்தையை நினைவு செய்கின்றார்கள் என்பதும் நினைவு கூரப்பட்டுள்ளது. தந்தை உங்களுக்கு சந்தோஷம் என்ற உங்கள் ஆஸ்தியை கொடுக்கின்றார், அதன் பின்னர் நீங்கள் அவரை நினைவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை. நீங்களே, தாயும் நீங்களே தந்தையும். லௌகீகத் தாய்க்கும் தந்தைக்கும் குழந்தைகள் உள்ளனர். இங்கே, இதன் அர்த்தம் இவ் உலகிற்கு அப்பாலுள்ள தாயும் தந்தையும் என்பதாகும். நீங்கள் இப்பொழுது இலக்ஷ்மி நாராணயனன் ஆகுவதற்காகக் கற்கின்றீ;ர்கள். ஒரு பாடசாலையில் கற்கும் மாணவர்கள் நன்றாகச் சித்தியெய்தும் போது, அவர்களுக்குக் கற்பித்த ஆசிரியருக்குப் பரிசு கொடுக்கப்படுகின்றது. நீங்கள் அவருக்கு (சிவபாபா) என்ன பரிசை கொடுப்பீர்கள்? அவரை நீங்கள் மந்திரத்தால் உங்கள் குழந்தை ஆக்கிக் கொள்கின்றீர்கள். கிருஷ்ணரின் வாயில் வெண்ணெய் கட்டியை அவரது தாய் கண்டதாகக் கூறப்படுகின்றது. கிருஷ்ணர் சத்தியயுகத்தில் பிறப்;பெடுத்தார். அவர் வெண்ணெய் போன்றவற்றை உண்ணுவதில்லை. அவர் உலகின் அதிபதி ஆவார். எனவே, அது எக் காலத்தைக் குறிக்கின்றது? அது சங்கமயுகமான இக்காலத்தையே குறிக்கின்றது. நீங்கள் உங்கள் சரீரத்தை நீக்கி ஒரு குழந்தை ஆகுவீர்கள் என்பதை நீங்கள் அறிவீர்கள். நீங்கள் உலக அதிபதி ஆகுவீPர்கள். இரண்டு கிறிஸ்தவ நாடுகளும் தமக்குள் சண்டையிட்டுக் கொள்ளும் போது குழந்தைகளாகிய நீ;ங்கள் வெண்ணெயை எடுத்துக் கொள்கின்றீர்கள். நீங்கள் இராச்சியத்தைப் பெறுகின்றீர்கள். அவர்கள் பாரத மக்களை தமக்குள் சண்டையிடச் செய்து வெண்ணெயை பெற்றுக் கொண்டார்கள். (பிரித்து ஆட்சி செய்தார்கள்). ஆங்கிலேயர் உலகின் முக்கால் பங்கை ஆட்சி செய்தார்கள். அதன் பின்னர் அவர்களின் செல்வாக்கு நாளடைவில் குறைவடைந்தது. உங்களைத் தவிர வேறு எவராலும் முழு உலகையும் ஆட்சி செய்ய முடியாது. நீங்கள் இப்பொழுது கடவுளின் குழந்தைகள். நீங்கள் இப்பொழுது பிரம்மாந்தத்தின் அதிபதிகளாகவும், உலக அதிபதிகளாகவும் ஆகுகின்றீர்கள். பிரம்மாந்தம் உலகில் உள்ளடக்கப்படுவதில்லை. சூட்சும உலகில் இராச்சியம் எதுவுமில்லை. சத்திய, திரேதா, துவாபர, கலியுகங்களின் சக்கரம் இப் பௌதீக உலகில் இங்கேயே உள்ளது. ஆத்மாக்கள் திரான்ஸில் செல்லும் போது எங்கும் செல்வதில்லை. ஆத்மா சரீரத்தை விட்டு நீங்கும் போது, சரீரம் மரணித்துவிடும். அவ்விடயங்கள் அனைத்தும் காட்சிகள் ஆகும். சிலரால் மந்திர சக்தியினாலும் காட்சிகளைப் பெற முடியும். அதாவது அவர்கள் ஓர் இடத்தில் இருக்கும் போதே வெளிநாட்டிலுள்ள ஒரு பாராளுமன்றத்தை அவர்களால் அங்கிருந்தே பார்க்க முடியும். தெய்வீகக் காட்சிகளுக்கான திறவுகோல் பாபாவின் கையிலேயே உள்ளது. இங்கு அமர்ந்திருக்கும் போதே உங்களால் இலண்டனைப் பார்க்க முடியும். அதற்கு நீங்கள் கருவி போன்ற எதனையும் வாங்கத் தேவையில்லை. காட்சிகள் நாடகத்திற்கேற்ப, அவை நிச்சயிக்கப்பட்ட சரியான நேரத்தில் கிடைக்கின்றன. கடவுள் அர்ஜுனனுக்கு காட்சி அருளியதாக சித்தரிக்கப்பட்டுள்ளது. நாடகத்திற்கு ஏற்ப, அவர் ஒரு காட்சியை காண வேண்டியிருந்தது. இதுவும் நிச்சயிக்கப்பட்டுள்ளது. அது எவரது மகத்துவமும் அல்ல. இவை அனைத்தும் நாடகத்திற்கு ஏற்ப நடக்கின்றன. கிருஷ்ணர் உலகின் இளவரசர் ஆகுகின்றார். அதாவது அவர் வெண்ணெயை பெறுகின்றார். உலகம் என்றால் என்ன பிரம்மானந்தம் என்றால் என்ன என்பதையும் கூட எவரும் அறியாதிருக்கின்றார்கள். ஆத்மாக்களாகிய நீங்கள் பிரம்மானந்தத்தில் வாழ்கின்றீர்கள். இந்த நேரத்திலேயே சூட்சும உலகில் இருந்து வருவதும் போவதும், காட்சிகளைப் பெறுவதும் போன்றன இடம்பெறுகின்றன. அதன் பின்னர் 5000 வருடங்களுக்கு சூட்சும உலகம் குறிப்பிடப்பட மாட்டாது. பிரம்மதேவனுக்கு வந்தனங்கள் என அவர்கள் கூறுகின்றார்கள். அத்துடன் அவர்கள் கூறுகின்றார்கள்: பரமாத்மாவான சிவனுக்கு வந்தனங்கள். ஆகையால், அவரே அதிமேலானவர்;. அவரே கடவுள் என அழைக்கப்படுகின்றார். தேவர்களும் மனிதர்களே ஆனால் அவர்களிடம் தெய்வீகக் குணங்கள் உள்ளன. நான்கு முதல் எட்டு கரங்களுடைய எந்த மனிதரும் இருக்க முடியாது. அங்கேயும், மனிதர்களுக்கு இரண்டு கரங்களே உள்ளன. ஆனால், அவர்கள் முற்றிலும் தூய்மையானவர்களே. அங்கே தூய்மையின்மையின் பேச்சுக்கே இடமில்லை. அங்கே என்றுமே அகால மரணம் இடம்பெற மாட்டாது. ஆகையால் குழந்தைகளாகிய நீங்கள் அதிகளவு சந்தோஷத்தைக் கொண்டிருக்க வேண்டும். ஆத்மாவாகிய நான் இச் சரீரத்தினூடாக பாபாவைப் பார்க்கின்றேன். உங்களால் ஒரு சரீரத்தை மாத்திரமே பார்க்க முடியும், ஆத்மாவையோ அல்லது பரமாத்மாவையோ பார்க்க முடியாது. ஆத்மாவும், பரமாத்மாவும் புரிந்து கொள்ளப்பட வேண்டிய விடயங்களாகும். அவர்களைப் பார்ப்பதற்கு உங்களுக்கு தெய்வீகப் பார்வை கிடைக்கின்றது. தெய்வீகக் காட்சியின் மூலம் நீங்கள் பார்ப்பன அனைத்தும் பெரிதாகவே இருக்கும். இராச்சியமும் பெரிதாகவே இருக்கும். ஓர் ஆத்மா ஒரு புள்ளியேயாகும். ஒரு புள்ளியைப் பார்ப்பதனால் உங்களால் எதனையும் புரிந்து கொள்ள முடியாது. ஆத்மாக்கள் மிகவும் சூட்சுமமானவர்கள். பல வைத்தியர்கள் ஆத்மாவை பிடித்து நிறுத்த முயற்சித்துள்ளனர். ஆனால் அவர்கள் எவராலும் எதனையும் அறிந்து கொள்ள முடியவில்லை. அம்மக்கள் தங்கத்திற்கும் வைரத்திற்கும் சமமாக மதிப்பீடு செய்யப்படுகின்றார்கள். நீங்கள் பிறவிபிறவியாக பல் கோடீஸ்வரர்கள் ஆகுகின்றீர்கள். நீங்கள் வெளி பகட்டு எதனையும் கொண்டிருப்பதில்லை. அவர் இந்த இரதத்தில் அமர்ந்திருந்து, எங்களுக்கு மிகவும் சாதாரணமாகவே கற்பிக்கின்றார். அதன் பெயரே பாக்கியரதம் (பாகிரத்) ஆகும். தந்தை இந்தத் தூய்மையற்ற பழைய சரீரத்தில் பிரவேசித்து அதிமேலான சேவையை செய்கின்றார்;. தந்தை கூறுகின்றார்: எனக்கென ஒரு சரீரம் இல்லை. ஞானக்கடலும், அன்புக்கடலுமான நான் உங்கள் ஆஸ்தியை எவ்வாறு உங்களுக்குக் கொடுக்க முடியும்? அதனை மேலே அங்கிருந்துவாறு என்னால் கொடுக்க முடியாது. தூண்டுதல் மூலம் என்னால் கற்பிக்க முடியுமா? நான் நிச்சயமாக இங்கே வரவேண்டும். பக்தி மார்க்கத்தில் நீங்கள் என்னை வழிபட்டீர்கள், நீங்கள் அனைவரும் என் மீது அன்பு கொண்டிருந்தீர்கள். மக்கள் காந்தி, நேரு போன்றோரின் படங்களை விரும்புகின்றார்கள். அவர்களின் சரீரத்தையே அவர்கள் நினைவு செய்கின்றார்கள். ஆத்மாக்கள் அழியாதவர்கள் என்பதால் அவர்கள் மறு பிறப்பை எடுத்திருக்கின்றார்கள். எவ்வாறாயினும், மக்கள் அழிகின்ற உருவங்களையே தொடர்ந்தும் நினைவு செய்கின்றார்கள். அது சடப்பொருளின் வழிபாடாகும்! அவர்கள் வழிபாட்டிற்காக புனிதமானதொரு இடத்தை ஒதுக்கி பூக்கள் போன்றவற்றால் அர்ச்சனை செய்கின்றார்கள். அது ஞாபகார்த்தமாகும். சிவனிற்கு பல ஆலயங்கள் உள்ளன. சிவனின் ஞாபகார்த்தமே மிகப் பெரியதாகும். சோமநாதர் ஆலயம் புகழப்படுகின்றது. மொஹமட் கஸ்னாவி வந்து அதனைக் கொள்ளையடித்தான். உங்களிடம் அதிகளவு செல்வம் இருந்தது! பாபா இரத்தினங்களுக்குச் சமமாக உங்களை மதிப்பிடுகின்றார். நான் என்னை மதிப்பிடுவதில்லை. நான் பெரும் செல்வந்தர் ஆகுவதில்லை! நான் உங்களையே அவ்வாறு ஆக்குகின்றேன். அவர்கள் ஒருவரை நிறுக்கின்றார்கள், நாளையே அவர் மரணிக்கக்கூடும். அச் செல்வத்தினால் எப் பயனும் இல்லை. தந்தை 21 பிறவிகளுக்கு உங்களுடன் இருக்கக் கூடியளவிற்கு, எல்லையற்ற பொக்கிஷங்களுக்குச் சமமாக உங்களை மதிப்பிடுகின்றார். எவ்வாறாயினும், அது நீங்கள் ஸ்ரீமத்தைப் பின்பற்றினால் மாத்திரமே சாத்தியமாகும். அங்கே துன்பம் என்ற பேச்சுக்கே இடமில்லை. அங்கே அகால மரணம் இடம்பெறுவதில்லை. அங்கே மரணபயம் இருப்பதில்லை. இங்குள்ள மக்களுக்கு அதிகளவு மரணபயம் உள்ளதால் அவர்கள் அழுகின்றார்கள். அங்கே அதிகளவு சந்தோஷம் இருப்பதால், நீங்கள் சென்று இளவரசர் ஆகுவீர்கள். பரமாத்மாவான சிவன், மந்திரவாதி, வியாபாரி, நகைவியாபாரி என்றும் அழைக்கப்படுகின்றார். ஓர் இளவரசர் ஆகுகின்ற அத்தகையதொரு காட்சியையும் அவர் உங்களுக்கு அருள்கின்றார். பாபா இப்பொழுது காட்சி அருள்கின்ற பாகத்தை முடித்து விட்டார். அவற்றினால் அதிகளவு பாதிப்புகள் ஏற்படுகின்றன. தந்தை இப்பொழுது ஞானத்தின் மூலம் சற்கதியை அருள்கின்றார். முதலில், நீங்கள் சந்தோஷ உலகிற்குச் செல்கின்றீர்கள். இப்பொழுது இது துன்ப உலகமாகும். ஆத்மாவே ஞானத்தை கிரகிக்கின்றார் என்பது உங்களுக்குத் தெரியும். இதனாலேயே தந்தை கூறுகின்றார்: உங்களை ஓர் ஆத்மாவெனக் கருதுங்கள்! நல்ல தீய சம்ஸ்காரங்கள் ஆத்மாவிலேயே உள்ளன. ஒருவரின் சரீரத்தில் சம்ஸ்காரங்கள் இருக்குமாயின், அவை அவரின் சரீரத்துடனேயே எரிக்கப்பட்டுவிடும். நீங்கள் கூறுகின்றீர்கள்: சிவபாபா, ஆத்மாக்களாகிய நாங்கள் இந்தச் சரீரங்களினூடாகக் கற்கின்றோம். இது புதியதொரு விடயமாகும். சிவபாபா ஆத்மாக்களாகிய எங்களுக்குக் கற்பிக்கின்றார். இதனை மிகவும் உறுதியாக நினைவு செய்யுங்கள். அவர் ஆத்மாக்களாகிய எங்கள் அனைவருக்கும் தந்தையும், ஆசிரியரும் ஆவார். தந்தையே கூறுகின்றார்: எனக்கெனச் சொந்தமாக ஒரு சரீரம் இல்லை. நானும் ஆத்மாவே, ஆனால் நான் பரமாத்மா என அழைக்கப்படுகின்றேன். ஆத்மாவே அனைத்தையும் செய்கின்றார். சரீரங்களின் பெயர்கள் தொடர்ந்தும் மாறுகின்றன. ஓர் ஆத்மா, ஆத்மாவே ஆகும். பரமாத்மாவான நான் உங்களைப் போன்று மறுபிறப்பெடுப்பதில்லை. நான் இவரில் பிரவேசித்து ஞானத்தை உங்களுக்குக் கூறுவதே நாடகத்தில் எனது பாகம் ஆகும். இதனாலேயே இவர் பாக்கிய இரதம் என அழைக்கப்படுகின்றார். அவர் பழைய சப்பாத்து என்றும் அழைக்கப்படுகின்றார். சிவபாபா பழைய நீண்ட சப்பாத்தையே அணிகின்றார். தந்தை கூறுகின்றார்: நான் இவரின் பல பிறவிகளின் இறுதிப் பிறவியிலேயே இவரில் பிரவேசிக்கின்றேன். இவரே அனைவரிலும் முதலாவதாக வருகின்றார். அதுவே உங்களுக்கும் பொருந்தும்! பாபா கூறுகின்றார்: நீங்கள் மிகவும் இளமையானவர்கள். என்னை விட நீங்கள் அதிகளவு கற்று, உயர்ந்ததோர் அந்தஸ்தைக் கோர வேண்டும். எவ்வாறாயினும், என்னோடு பாபா இருப்பதால், நான் அவரை மீண்டும் மீண்டும் நினைவு செய்கின்றேன். பாபா என்னுடனேயே உறங்குகின்றார். எவ்வாறாயினும், பாபாவினால் என்னை கட்டியணைக்க முடியாது. ஆனால் அவரால் உங்களைக் கட்டியணைக்க முடியும். நீங்கள் மிகவும் அதிர்ஷ்சாலிகள். சிவபாபா கடனாகப் பெற்றுள்ள சரீரத்தை உங்களால் கட்டியணைக்க முடியும். என்னால் அவரை எவ்வாறு கட்டியணைக்க முடியும்? எனக்கு அந்த பாக்கியம் இல்லை! ஆகையாலேயே நீங்கள் அதிர்ஷ்ட நட்சத்திரங்கள் என நினைவு கூரப்படுகின்றீர்கள். குழந்தைகள் எப்பொழுதுமே அதிர்ஷ்டசாலிகள் ஆவார்கள். லௌகீகத் தந்தை ஒருவர் தனது குழந்தைகளுக்கு செல்வத்தைக் கொடுப்பதுண்டு. ஆகையால் நீங்கள் அதிர்ஷ்ட நட்சத்திரங்கள். சிவபாபா கூறுகின்றார்: நீங்கள் என்னை விட அதிர்ஷ்டசாலிகள் நான் உங்களுக்குக் கற்பித்து உங்களை உலக அதிபதிகள் ஆக்குகின்றேன். நான் அவ்வாறு ஆகுவதில்லை. நீங்கள் பிரம்மாந்துக்கும் அதிபதிகள் ஆகுகின்றீர்கள். என்னிடம் மாத்திரமே தெய்வீகக் காட்சிகளுக்கான திறவுகோல் உள்ளது. நான் ஞானக்கடல் ஆவேன். நான் உங்களையும் மாஸ்டர் ஞானக்கடல்கள் ஆக்குகின்றேன். நீங்கள் முழு சக்கரத்தையும் அறிவதால் நீங்கள் பூகோள ஆட்சியாளர்களாக, சக்கரவர்த்திகள் சக்கரவர்த்தினிகள் ஆகுவீர்கள். நான் அவ்வாறு ஆகுவதில்லை. மக்களுக்கு வயதாகும் போது, அவர்கள் தம்மிடம் உள்ள அனைத்தையும் தமது குழந்தைகளுக்கு உயில் எழுதிக் கொடுத்த பின்னர் ஒய்வெடுக்கின்றார்கள். ஆரம்ப காலத்தில் அவ்வாறே இடம்பெற்றது. இக்காலத்தில் அவர்கள் தமது குழந்தைகளின் மீது பற்று வைத்துள்ளார்கள். அப்பாலுள்ள தந்தை கூறுகின்றார்: நான் இவரில் பிரவேசித்து, குழந்தைகளாகிய உங்களை முட்களில் இருந்து மலர்களாக மாற்றி, உங்களை உலக அதிபதிகள் ஆக்குகின்றேன். நான் உங்களை அரைக்கல்பத்திற்கு என்றென்றும் சந்தோஷமானவர் ஆக்குகின்றேன். அதன் பின்னர் ஓய்வு ஸ்திதிக்குச் செல்கின்றேன். இவ் விடயங்கள் சமயநூல்களில் குறிப்பிடப்படவில்லை. சந்நியாசிகள் சமயநூல்களில் உள்ள விடயங்களையே விபரிக்கின்றார்கள். தந்தையே ஞானக்கடல் ஆவார். அவரே கூறுகின்றார்: வேதங்களும் சமயநூல்களும் பக்திமார்கத்தின் சம்பிரதாயங்கள் ஆகும். நான் மாத்திரமே ஞானக்கடல் ஆவேன். அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தந்தை தாயாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. உங்கள் சரீரம் உட்பட, உங்கள் கண்களால் பார்க்கின்ற அனைத்தும் எரிக்கப்பட உள்ளன. ஆகையால் உங்களிடம் உள்ள அனைத்தையும் பயனளிக்கும் வகையில் பயன்படுத்துங்கள்.

2. தந்தையிடம் இருந்து உங்களது முழு ஆஸ்தியையும் பெறுவதற்கு கற்றிடுங்கள். சதா உங்கள் அதிர்ஷ்டத்தை உங்கள் விழிப்புணர்வில் வைத்திருந்து பிரம்மாந்தத்திற்கு அதிபதியாகவும், உலக அதிபதியாகவும் ஆகுங்கள்.

ஆசீர்வாதம்:
மாயையின் எந்த இராஜரீக வடிவத்தின் பந்தனத்திலிருந்தும் விடுபடுவதன் மூலம், உலகை வென்றவர்கள் ஆகுவீர்களாக.

எனது முயற்சி, எனது கண்டுபிடிப்பு, எனது சேவை, எனது தொடுகை, எனது தெய்வீகக் குணங்கள் நல்லது, எனது முடிவெடுக்கும் சக்தி மிகவும் நல்லது. எனது என்ற இந்த உணர்வே மாயையின் இராஜரீக வடிவமாகும். உங்களுடையது என்பதை கூட, என்னுடையது என ஆக்கும் அத்தகைய வித்தையை மாயை செய்வதால், இப்பொழுது, அத்தகைய எந்த பந்தனத்திலிருந்தும் விடுபட்டு, ஒரேயொரு தந்தையுடன் ஓர் உறவுமுறையை ஏற்படுத்திக் கொண்டால், நீங்கள் மாயையை வென்றவர்கள் ஆகுவீர்கள். மாயையை வென்றவர்கள் மாத்திரமே, உலகை வென்றவர்கள் ஆகுகிறார்கள். அவர்களால்; சரீரமற்றவர் ஆகுதலின் ஒரு விநாடி வழிகாட்டலை இலகுவாகவும் இயல்பாகவும் பயன்படுத்த முடியும்.

சுலோகம்:
எவரது எதிர்மறையானதையும் நேர்மறையாக மாற்றுபவரே உலகை மாற்றும் ஒருவர் ஆவார்.