05.11.23 Avyakt Bapdada Tamil Lanka Murli 10.03.96 Om Shanti Madhuban
கரன்ஹார் மற்றும் கரவன்ஹாரை உணர்ந்தவராக இருப்பதன் மூலம் கர்மாதீத் ஸ்திதியை அனுபவம் செய்யுங்கள்.
இன்று, உபகாரியான தந்தை தனது சகபாடிகளாக இருக்கும் தனது உபகாரிக் குழந்தைகளைப் பார்க்கிறார். குழந்தைகளான நீங்கள் எல்லோரும் அதிகளவு ஆழ்ந்த அன்புடன் உலக நன்மைக்கான பணியில் உங்களை ஈடுபடுத்திக் கொண்டுள்ளீர்கள். இத்தகைய சகபாடிகளைப் பார்க்கும்போது, பாப்தாதா சதா இந்தப் பாடலைப் பாடுகிறார்: ஆஹா எனது சகபாடிக் குழந்தைகளே! ஆஹா! நீங்கள் எல்லோரும் தொடர்ந்து ஆஹா! ஆஹா! என்ற பாடலைப் பாடுகிறீர்கள்தானே? இன்று, பாப்தாதா எங்கும் சேவையின் வேகத்தைப் பார்த்தார். அத்துடன்கூடவே, உங்களுக்கான முயற்சியின் வேகத்தையும் அவர் பார்த்தார். எனவே, சேவையின் வேகத்திலும் உங்களுக்கான முயற்சியிலும் பாப்தாதா எதைக் கண்டார்? உங்களுக்குத் தெரியுமா? சேவையின் வேகம் துரிதமானதா அல்லது உங்களுக்கான முயற்சியின் வேகம் துரிதமானதா? எது வேகமானது? இரண்டுக்கும் இடையில் சமநிலை காணப்படுகிறதா? உங்களிடம் இந்தச் சமநிலை இல்லையா? எனவே, உலகை மாற்றுகின்ற ஆத்மாக்களான நீங்களும் பஞ்சபூதங்களும் எப்போது ஆசீர்வாதங்களைப் பெறுவீர்கள்? ஏனென்றால், நீங்கள் இந்தச் சமநிலையைக் கொண்டிருக்கும்போது மட்டுமே நீங்கள் பெற்ற ஆசீர்வாதங்களை மற்றவர்களும் பெறுவார்கள். எனவே, ஏன் இந்த வேறுபாடு? நீங்கள் என்னவென்று அழைக்கப்படுகிறீர்கள்? நீங்கள் கர்மயோகிகளா அல்லது வெறுமனே யோகிகளா? நீங்கள் எப்படிப்பட்டவர்கள்? நீங்கள் கர்மயோகிகள்தானே? உறுதியாகவா? எனவே, சேவை என்றால் என்ன? அதுவும் ஒரு செயலே, அப்படித்தானே? நீங்கள் எந்தவொரு செயலைச் செய்யும்போதும், நீங்கள் பேசும்போது அல்லது திருஷ்டி கொடுக்கும்போது, நீங்கள் பாடநெறிகளைக் கொடுக்கும்போது அல்லது அருங்காட்சியகங்களில் விளங்கப்படுத்தும்போது, அவை அனைத்தும் மேன்மையான செயல்களே. அதாவது, அவை சேவையாகும். எனவே, ஒரு கர்மயோகி என்றால், செயல்களைச் செய்யும்போது யோகத்தின் சமநிலையைப் பேணுதல் என்று அர்த்தம். எவ்வாறாயினும், உங்களின் சமநிலை குறைவதாக நீங்களே சொல்கிறீர்கள். அந்தச் சமநிலை குறைவதற்கான காரணம் என்ன? நீங்கள் இதையும் மிக நன்றாக அறிவீர்கள். இது எதுவும் புதியதல்ல. இது மிகவும் பழைய விடயம். சேவைக்கும் கர்மத்திற்கும் சுயத்திற்கான முயற்சிக்கும், அதாவது, யோகத்திற்கும் இடையில் ஒரு சமநிலையைப் பேணுவதற்கு, குறிப்பாக ஒரு வார்த்தையை நினைவு செய்ய வேண்டும் என்பதை பாப்தாதா கண்டார். அந்த வார்த்தை என்ன? தந்தை கரவன்ஹார் (மற்றவர்கள் மூலமாக செய்விப்பவர்) அத்துடன் ஆத்மாவான நான், இன்னார் அல்ல. ஆனால், ஆத்மாவான நான், கரன்ஹார் (செய்பவர்). எனவே, கரவன்கரவன்ஹார் என்ற ஒரு வார்த்தை, நீங்கள் இந்தச் சமநிலையை மிக இலகுவாக அடையச் செய்யும். உங்களின் சமநிலை அல்லது உங்களுக்கான முயற்சியின் வேகம் குறைவதற்கான காரணம் என்ன? கரன்ஹார் என்ற விழிப்புணர்வைக் கொண்டிருப்பதற்குப் பதிலாக, ‘நானே இதைச் செய்விக்கிறேன்’ என நீங்கள் நினைக்கிறீர்கள். கரன்ஹாராக இருப்பதற்குப் பதிலாக, நீங்கள் உங்களைக் கரவன்ஹாராகக் கருதி, ‘நான் இதைச் செய்கிறேன்’ என நினைக்கிறீர்கள். எனவே, என்ன வகையான மாயை வந்தாலும், அவள் எந்த வாயிலால் வருகிறாள்? மாயையின் இலகுவான வாயில் என்னவென்று உங்களுக்கு ஏற்கனவே தெரியும்: அது ‘நான்’ என்பதாகும். நீங்கள் இன்னமும் அந்த வாயிலை முழுமையாக மூடவில்லை. மாயை இலகுவாகத் திறந்து அதனூடாகப் பிரவேசிக்கும் வகையில் நீங்கள் அதை மூடி வைத்திருக்கிறீர்கள். நீங்கள் கரன்ஹாராக இருந்திருந்தால், அதைச் செய்வதற்கு உங்களைத் தூண்டிய ஒரேயொருவரை நீங்கள் நிச்சயமாக நினைத்திருப்பீர்கள். நான் இதைச் செய்கிறேன். ஆனால், தந்தையே நான் அதைச் செய்வதற்குத் தூண்டுகிறார். கரவன்ஹார் இல்லாமல், உங்களால் கரன்ஹார் ஆகமுடியாது. நீங்கள் இரட்டை முறையில் கரவன்ஹார் என்ற விழிப்புணர்வைக் கொண்டிருப்பது அவசியமாகும். ஒன்று, தந்தை கரவன்ஹாராக இருக்கிறார். இரண்டாவதாக, ஆத்மாவான நான், இந்தப் பௌதீக அங்கங்களினூடாகச் செயல்களைச் செய்கிறேன். இதைச் செய்வதன் மூலம், நீங்கள் செயல்களைச் செய்யும்போது, நல்ல முறையிலோ அல்லது தீய முறையிலோ நீங்கள் ஆதிக்கத்திற்கு உட்பட மாட்டீர்கள். இதுவே கர்மாதீத் ஸ்திதி எனப்படுகிறது.
உங்கள் எல்லோருடைய இலட்சியமும் என்ன? நீங்கள் கர்மாதீத் ஆகவிரும்புகிறீர்கள், அப்படித்தானே? சிறிதளவு கர்ம பந்தனம் எஞ்சியிருந்தால் பரவாயில்லை என நீங்கள் நினைக்கிறீர்களா? அது எஞ்சியிருக்கட்டுமா இல்லையா? நீங்கள் கர்மாதீத் ஆக விரும்புகிறீர்களா? தந்தை மீதுள்ள அன்பின் அடையாளம், கர்மாதீத் ஆகுவதாகும். ஆகவே, கரவன்ஹாராகச் செயல்களைச் செய்யுங்கள். செயல்களைச் செய்யுங்கள். செயல்களைச் செய்வியுங்கள். உங்களின் பௌதீக அங்கங்கள் உங்களைக் கொண்டு செயல்களைச் செய்விக்கக்கூடாது, ஆனால் நீங்கள் உங்களின் பௌதீக அங்கங்களைக் கொண்டு செயல்களைச் செய்விக்க வேண்டும். நீங்கள் முற்றிலும் பற்றற்றவராக இருந்தவண்ணம் செயல்களைச் செய்யுங்கள். இந்த உணர்வானது வெளிப்பட்டிருக்க வேண்டும், அமிழ்ந்து அல்ல. இது அமிழ்ந்து போனால், கரவன்ஹார் ஆகுவதற்குப் பதிலாக, நீங்கள் சிலவேளைகளில் உங்களின் அங்கங்களான மனம், புத்தி, சம்ஸ்காரங்களின் ஆதிக்கத்திற்கு உட்படுவீர்கள். இதற்கான காரணம் என்ன? ஆத்மாவான நான், கரவன்ஹார். நானே அதிபதி. நான் மாஸ்ரர் சர்வசக்திவான் ஆத்மா. இந்த விழிப்புணர்வானது உங்களை அதிபதியாக இருப்பதை உணரச் செய்யும். இல்லாவிட்டால், சிலவேளைகளில், உங்களின் மனம் உங்களை ஆளும். சிலவேளைகளில், நீங்கள் உங்களின் மனதை ஆளுவீர்கள். இதனாலேயே, உங்களால் இயல்பான ‘மன்மனாபவ’ என்ற ஸ்திதியைக் கொண்டிருக்க முடியாமல் உள்ளது. நான் முற்றிலும் வேறானவன். நான் வேறானவன் மட்டுமல்ல, நானே அதிபதி ஆவேன். நான் தந்தையை நினைக்கும்போது, நான் ஒரு குழந்தை. செயல்களைச் செய்விக்கும் ஓர் ஆத்மாவாக இருக்கும்போது நானே அதிபதி ஆவேன். இந்தப் பயிற்சியைச் செய்வதற்கு நீங்கள் அதிகளவு கவனம் செலுத்துவதில்லை. நீங்கள் சேவை செய்வதில் மிக நன்றாக ஈடுபட்டுள்ளீர்கள். ஆனால் உங்களின் இலட்சியம் என்ன? அது ஒரு சேவையாளர் ஆகுவதா அல்லது கர்மாதீத் ஆகுவதா? அல்லது, ஒரே வேளையில் நீங்கள் இரண்டுமாக ஆகுவீர்களா? உங்களுக்குள் இந்தப் பயிற்சி உறுதியாக உள்ளதா? குறுகிய வேளையில் உங்களால் இதைப் பயிற்சி செய்ய முடிகிறதா? உங்களால் உங்களை வேறானவராகக் கருத முடிகிறதா? அல்லது, நீங்கள் மிகவும் பற்று வைத்திருப்பதனால், பற்றற்றவர் ஆகுவதற்கு உங்களுக்கு நேரம் தேவைப்படுகிறதா? எவ்வளவு நேரத்தில் உங்களால் பற்றற்றவர் ஆகமுடியும்? உங்களுக்கு ஐந்து நிமிடங்களா அல்லது ஒரு நிமிடமா அல்லது ஒரு விநாடியா தேவை? உங்களால் ஒரு விநாடியில் பற்றற்றவர் ஆகமுடிகிறதா?
பாண்டவர்களே, உங்களால் ஒரு விநாடியில் முற்றிலும் பிரிந்திருக்க முடிகிறதா? ஆத்மாவான நான், அதிபதி. நான் எனது பணியாட்களான பௌதீக அங்கங்கள் எவற்றில் இருந்தும் வேறானவன். நீங்கள் விரும்பும்போதெல்லாம் இதைப் பயிற்சி செய்யுங்கள். அச்சா, இப்போது ஒரு விநாடியில், பற்றற்றவராகவும் தந்தைமீது அன்புடையவராகவும் ஆகுங்கள். மிகவும் சக்திவாய்ந்த இந்தப் பயிற்சியைச் செய்யுங்கள்: நான் பற்றற்றவன். இந்தப் பௌதீக அங்கங்கள் எனது சகபாடிகள். நான் செயல்களைச் செய்யும்போது அவை எனது சகபாடிகள். ஆனால் நான் அன்பானவன், அத்துடன் பற்றற்றவன். இப்போது இதை ஒரு விநாடியில் பயிற்சி செய்யுங்கள். (பாபா அவர்களிடம் அந்த அப்பியாசத்தைச் செய்வித்தார்.) இது இலகுவாக உள்ளதா அல்லது கஷ்டமா? அது இலகுவென்றால், நாள் முழுவதும், செயல்களைச் செய்யும்போது, இந்த விழிப்புணர்வு வெளிப்பட்டிருக்க வேண்டும். அப்போது உங்களால் இலகுவாக கர்மாதீத் ஸ்திதியை அனுபவம் செய்ய முடியும். உங்களால் சேவை செய்வதை அல்லது செயல்களைச் செய்வதை நிறுத்த முடிகிறதா? உங்களால் அதை நிறுத்த முடியுமா? நீங்கள் அதைச் செய்ய வேண்டும். தபஸ்யாவில் அமர்வதும் ஒரு செயலைச் செய்வதேயாகும். எனவே, உங்களால் செயலைச் செய்யாமல் அல்லது சேவை செய்யாமல் இருக்க முடியாது. உண்மையில், நீங்கள் அவ்வாறு செய்யாமல் இருக்க வேண்டியதில்லை. ஏனென்றால், உங்களுக்கு மிகக் குறைவான காலமே உள்ளது. ஆனால் அதிகளவு சேவை இன்னமும் நிறைவேற்றப்பட வேண்டியுள்ளது. சேவையின் வடிவம் மாறியுள்ளது. எவ்வாறாயினும், இப்போதும், ஆத்மாக்கள் பலர் முறைப்பாடு செய்கிறார்கள். இதனாலேயே, உங்களிடம் சேவைக்கும் உங்களுக்கான முயற்சிக்கும் இடையில் சமநிலை இருக்க வேண்டும். நீங்கள் சேவை செய்வதில் மும்முரமாக ஈடுபட்டிருந்ததால், உங்களுக்கான முயற்சி குறைவதாக இருக்கக்கூடாது. இல்லை. உண்மையில், சேவை செய்யும்போது, உங்களுக்கான முயற்சி செய்வதில் நீங்கள் அதிகளவு கவனம் செலுத்த வேண்டும். ஏனென்றால், நீங்கள் சேவை செய்யும்போது, பல வழிமுறைகளில் மாயை உங்களிடம் வருவதற்கான வாய்ப்புகள் அதிகளவில் உள்ளன. அது சேவை என்று அழைக்கப்படும். ஆனால் உண்மையில் அது உங்களின் சுயநலமாகவே இருக்கும். நீங்கள் உங்களை முன்னேற்ற விரும்புகிறீர்கள். ஆனால், இவ்வாறு முன்னேறும்போது, நீங்கள் ஒரு சமநிலையைக் கொண்டிருப்பதை மறந்துவிடக்கூடாது. ஏனென்றால், சேவை செய்யும்போதே, சுபாவத்தினதும் உறவுமுறைகளினதும் விரிவாக்கம் ஏற்படும். மாயையும் ஒரு வாய்ப்பை எதிர்பார்த்திருப்பாள். உங்களின் சமநிலை சிறிதளவு குறைந்தாலும், மாயை பல புதிய வடிவங்களை எடுப்பாள். அவள் உங்களிடம் அதே பழைய வடிவத்தில் வரமாட்டாள். அவள் உங்களிடம் புதிய வடிவங்களில் வருவாள். புது சந்தர்ப்பங்கள் மற்றும் புதிய தொடர்புகளின் வடிவில் அவள் வருவாள். பாப்தாதா உங்களைச் சேவை செய்வதில் இருந்து விடுவித்து, எங்கேயாவது ஒரு மாதம் அல்லது பதினைந்து நாட்களுக்கு இருக்கச் சொன்னால், நீங்கள் கர்மாதீத் ஆகுவீர்களா? எதையும் செய்யாமல் நீங்கள் ஒரு மாதம் இருந்தால், வெறுமனே இருந்து தபஸ்யா செய்தால், ஒரு தடவை மட்டுமே சமைத்தால், உங்களால் கர்மாதீத் ஆகமுடியுமா? உங்களால் கர்மாதீத் ஆகமுடியாதா?
சமநிலையைப் பேணும் பயிற்சியை நீங்கள் செய்யாவிட்டால், ஒரு மாதம் மட்டுமல்ல, இரண்டு மாதங்கள் நீங்கள் இருந்தாலும், உங்களின் சரீரம்தான் அங்கே இருக்கும். உங்களின் மனதால் ஒரு நிலையில் இருக்க முடியாது. உங்களின் சரீரத்தை மட்டுமன்றி, மனதையும் ஒருநிலைப்படுத்த வேண்டும். உங்களின் சரீரத்துடன்கூடவே, உங்களின் மனதையும் ஒருநிலையில் இருக்கச் செய்ய வேண்டும். ‘சும்மா இரு! நீங்களும் நானும். வேறு எவரும் இல்லை’. இத்தகைய தபஸ்யாவை உங்களால் ஒரு மாதத்திற்குச் செய்ய முடியுமா? அல்லது, நீங்கள் சேவையை நினைப்பீர்களா? சேவை நாளுக்கு நாள் அதிகரிக்க வேண்டும் என்பதை பாப்தாதாவும் காட்டுகிறார், நாடகமும் தொடர்ந்து உங்களுக்குக் காட்டுகிறது. எனவே, எப்படி உங்களால் அமர்ந்திருக்க முடியும்? நீங்கள் கடந்த வருடம் செய்த சேவையுடன் இந்த வருடம் செய்ததை ஒப்பிடும்போது, அது அதிகரித்துள்ளதா அல்லது குறைந்துள்ளதா? அது அதிகரித்துள்ளதுதானே? உங்களின் விருப்பத்திற்கு மாறாக, நீங்கள் சேவை செய்யக் கட்டுப்பட்டுள்ளீர்கள். எவ்வாறாயினும், ஒரு சமநிலையைப் பேணுவதன் மூலம், அது சேவைக்கான பந்தனமாக இருப்பதற்குப் பதிலாக, சேவை ஓர் உறவுமுறையாக இருக்க வேண்டும். உலக உறவுமுறைகளிலும் கர்ம பந்தனங்களும் உள்ளன, அதேபோல் சேவைக்கான உறவுமுறைகளும் உள்ளன என்பதை நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். அப்போது நீங்கள் எந்தவிதமான பந்தனத்தையும் அனுபவம் செய்ய மாட்டீர்கள். ஆனால், சேவைக்கான இனியதோர் உறவுமுறையை மட்டுமே கொண்டிருப்பீர்கள். எனவே, நீங்கள் என்ன கவனத்தைச் செலுத்துவீர்கள்? சேவைக்கும் உங்களுக்கான முயற்சியிலும் ஒரு சமநிலை. சேவையின் உச்ச எல்லைக்குச் செல்லாதீர்கள். ‘நான் மட்டுமே அதைச் செய்ய வேண்டும். என்னால் மட்டுமே அதைச் செய்ய முடியும்’ என்பதல்;ல. இல்லை. உங்களைச் செயல்படத் தூண்டும் ஒரேயொருவர், நீங்கள் அதைச் செய்யத் தூண்டுகிறார். நீங்கள் செயல்படுகின்ற, கரன்ஹாராக இருக்கும் ஒரு கருவி மட்டுமே. எனவே, அந்தப் பொறுப்பைக் கொண்டிருக்கும்போது, நீங்கள் அதிகளவில் களைப்படைய மாட்டீர்கள். சில குழந்தைகள் சொல்கிறார்கள்: நான் அதிகளவு சேவை செய்துவிட்டேன், அதனால் எனக்குக் களைப்பாக இருக்கிறது. எனது தலையும் பாரமாக இருக்கிறது. உங்களின் தலை பாரமாகுவதற்குப் பதிலாக, கரவன்ஹார் பாபா உங்களுக்கு மிக நல்லதொரு மசாஜ் கொடுப்பார். உங்களின் தலை மேலும் புத்துணர்ச்சி பெறும். நீங்கள் எந்தவிதக் களைப்பையும் உணர மாட்டீர்கள். உங்களுக்குள் மேலதிக சக்தி பிறக்கும். விஞ்ஞானத்தின் மருந்தினால் சரீரங்களுக்குச் சக்தி கிடைக்குமாயின், தந்தையின் நினைவினால் ஆத்மாக்கள் சக்தியைப் பெற முடியாதா? ஆத்மாக்கள் சக்தியைப் பெறும்போது, அது இயல்பாகவே சரீரங்களின் மீதும் ஆதிக்கம் செலுத்துகின்றது. நீங்கள் இதை அனுபவம் செய்துள்ளீர்கள். சிலவேளைகளில் உங்களுக்கு இந்த அனுபவம் உள்ளது. அதன்பின்னர், நீங்கள் தொடர்ந்து செயல்படும்போது, சிலவேளைகளில் உங்களின் திசையை நீங்கள் மாற்றுகிறீர்கள். அதனால் எதையும் உணர்ந்து கொள்வதில்லை. சந்தோஷமற்ற நிலை ஏற்படும்போது அல்லது உங்களின் தலை பாரமாகும்போது, அப்போதுதான் அதை உணர்ந்து, ‘என்ன நடந்தது? ஏன் இது நடந்தது?’ என நீங்கள் நினைக்கிறீர்கள். ஆகவே, இந்த வார்த்தைகளை நினைவில் வைத்திருங்கள்: கரன்ஹார் மற்றும் கரவன்ஹார். இது கஷ்டமா அல்லது இலகுவானதா? ‘ஹாஜி’ எனக் கூறுங்கள். அச்சா.
நீங்கள் 900,000 பேரை உருவாக்கிவிட்டீர்களா? வெளிநாடுகளில் எத்தனை பேரை நீங்கள் உருவாக்கியுள்ளீர்கள்? 900,000 பேரை உருவாக்கிவிட்டீர்களா? பாரதத்தில் இத்தனை பேரை உருவாக்கிவிட்டீர்களா? இன்னமும் உருவாக்கவில்லை. எனவே, நீங்கள் நிறைவு பெறுவதன் ஊசி முன்னேற அனுமதிக்கின்றீர்கள் இல்லை. ஆகவே, ஒரு சமநிலையைப் பேணுங்கள். இது வைர விழாவிற்கான வருடமாகும். அதனால் நீங்கள் அதிகளவு சேவை செய்ய வேண்டும். எவ்வாறாயினும், இந்தச் சமநிலையைப் பேணியவண்ணம் சேவை செய்யுங்கள். பிரஜைகள் மிக விரைவாக உருவாக்கப்படுவார்கள். அதற்கு நேரமே எடுக்காது. சடப்பொருளும் பஞ்சபூதங்களும் மிகவும் களைத்துவிட்டன. ஆத்மாக்களும் மனச்சோர்வு அடைந்துவிட்டார்கள். அவர்கள் மனச்சோர்வு அடையும்போது யாரை நினைப்பார்கள்? அவர்கள் தந்தையான இறைவனையே நினைப்பார்கள். எவ்வாறாயினும், அவரின் முழுமையான அறிமுகம் இல்லாததால், அவர்கள் தேவதேவியரான உங்களையே அதிகளவில் நினைப்பார்கள். எனவே, உங்களால் மனச்சோர்வடைந்த ஆத்மாக்களின் அழைப்பைக் கேட்க முடியவில்லையா? உங்களுக்கு அவை கேட்கின்றனவா அல்லது நீங்கள் உங்களின் விடயங்களிலேயே அகப்பட்டுள்ளீர்களா? நீங்கள் கருணைநிறைந்தவர்கள்தானே? நீங்கள் தந்தையை என்னவென்று அழைக்கிறீர்கள்? கருணைநிறைந்தவர். சகல மதங்களைச் சேர்ந்தவர்களும் கருணையையே வேண்டுகிறார்கள். அவர்கள் நிச்சயமாக இதைக் கேட்கிறார்கள். அவர்கள் எல்லோரும் சந்தோஷத்தைக் கேட்காமல் இருக்கக்கூடும், ஆனால் அவர்கள் எல்லோருக்கும் கருணை தேவையாக உள்ளது. எனவே, யார் அவர்களுக்கு இதைக் கொடுப்பது? நீங்கள் அருள்பவர்கள்தானே? அல்லது, நீங்கள் எடுப்பவர்களா? நீங்கள் பெறுபவர்கள், பின்னர் மற்றவர்களுக்குக் கொடுப்பவர்கள். நீங்கள் அருள்பவரின் குழந்தைகள். ஆகவே, உங்களின் சகோதர, சகோதரிகளுக்குக் கருணைகாட்டுங்கள். கருணைநிறைந்தவராக நீங்கள் சேவை செய்யும்போது, இயல்பாகவே ஒரு கருவியாக இருக்கும் உணர்வு உங்களுக்குள் ஏற்படும். ஒருவர் எவ்வளவுதான் கூடாதவராக இருந்தாலும், நீங்கள் அந்த ஆத்மாவின் மீது கருணை காட்டினால், உங்களிடம் ஒருபோதும் அந்த ஆத்மாவிற்காக வெறுப்பு, பொறாமை அல்லது கோபத்தின் எந்தவிதமான உணர்வுகளும் இருக்காது. கருணை உணர்வானது இலகுவாக ஒரு கருவியாக இருக்கும் உணர்வைக் கொண்டுவரும். அது சுயநலத்தை அடிப்படையாகக் கொண்ட கருணை அல்ல. ஆனால் உண்மையான கருணையாக இருக்க வேண்டும். உங்களின் சொந்த நோக்கங்களின் அடிப்படையிலும் கருணை உள்ளது. அகத்தே, நீங்கள் குறிப்பிட்டதோர் ஆத்மாவின் மீது பற்று வைத்திருப்பீர்கள். ஆனால் அந்த ஆத்மாவின் மீது கருணை கொண்டிருப்பதாக நீங்கள் நினைப்பீர்கள். ஆகவே, அது சுயநலமான கருணை. உண்மையான கருணை இல்லை. உண்மையான கருணையில் எந்தவிதமான பற்றோ, சரீர உணர்வோ இருக்காது. ஆத்மா இன்னோர் ஆத்மாவிடம் கருணை வைத்திருப்பார். அங்கே எந்தவிதமான சரீர உணர்வோ அல்லது பௌதீகக் கவர்ச்சியின் பெயரோ அல்லது சுவடோ இருக்காது. சிலர் ஒரு சரீரத்தின் மீது பற்று வைத்திருப்பார்கள். சிலர் இன்னொருவரின் நற்குணங்களில் அல்லது சிறப்பியல்புகளில் பற்று வைத்திருப்பார்கள். எவ்வாறாயினும், அவருக்கு அந்தச் சிறப்பியல்புகளை அல்லது நற்குணங்களைக் கொடுத்தவர் யார்? அந்த ஆத்மாக்கள் எத்தனை மகாத்மாக்களாக இருந்தாலும், அவர்கள் அதைத் தந்தையிடமிருந்தே பெறுகிறார்கள். அது உங்களுடையது அல்ல. தந்தையே உங்களுக்கு அதைக் கொடுத்துள்ளார். எனவே, நீங்கள் ஏன் அதை நேரடியாக அருள்பவரிடமிருந்து பெற்றுக்கொள்ளக்கூடாது? இதனாலேயே, அது சுயநலமான கருணையாக இருக்கக்கூடாது எனச் சொல்லப்படுகிறது. குழந்தைகள் பலர் அதிகளவு விஷமத்தனம் செய்கிறார்கள். அது அவர்களின் சொந்த சுயநல நோக்கங்களாக இருக்கக்கூடும். எனினும் தாம் யாரோ ஒருவர்மீது கருணை கொள்வதாகவும், தமக்கு வேறு எந்த உணர்வும் இல்லை, கருணை மட்டுமே உள்ளது என்றும் அவர்கள் சொல்கிறார்கள். எவ்வாறாயினும், இப்போது சோதித்துப் பாருங்கள்: உங்களிடம் சுயநலமற்ற கருணை உள்ளதா? உங்களிடம் பற்றில் இருந்து விடுபட்ட கருணை உள்ளதா? ஏதோவொரு தற்காலிகப் பேற்றினால் ஏற்படும் கருணை இல்லையல்லவா? அதன்பின்னர் நீங்கள் சொல்வீர்கள்: அவள் மிகவும் நல்லவள், அவன் மிகவும் நல்லவன். இதனாலேயே, சிறிதளவு....... சிறிதளவேனும் அத்தகைய உணர்வைக் கொண்டிருப்பதற்கு உங்களுக்கு அனுமதி கிடையாது. நீங்கள் கர்மாதீத் ஆகவிரும்பினால், அவை அனைத்தும் தடைகளே ஆகும். அவை அனைத்தும் உங்களைச் சரீர உணர்வுடையவர்கள் ஆக்குகிறது. அவர்கள் நல்லவர்களாக இருக்கக்கூடும். ஆனால், அவர்களை அப்படி ஆக்கியவர் யார்? நீங்கள் அவர்களின் நல்லதன்மையைக் கிரகிக்கக்கூடும். ஆனால் அவர்களின் நல்லதன்மையின் ஆதிக்கத்திற்கு உள்ளாகாதீர்கள். பற்றற்றவராகவும் தந்தையின் மீது அன்புடையவராகவும் இருங்கள். தந்தையால் நேசிக்கப்படுபவர்கள் எப்போதும் பாதுகாப்பாக இருப்பார்கள். உங்களுக்குப் புரிகிறதா?
நீங்கள் செய்யும் சேவைகளை அதிகரிக்கும்போது, நீங்கள் அவற்றை அதிகரிக்கவே வேண்டும், அப்போது ஸ்தாபனையையும் நெருக்கமாகக் கொண்டு வர விரும்புகிறீர்களா இல்லையா? யார் அதை நெருக்கமாகக் கொண்டு வருவார்கள்? தந்தையா அதைச் செய்வார்? நீங்கள் எல்லோரும் அதைச் செய்வீர்களா? நீங்கள் சகபாடிகள், அப்படித்தானே? தந்தையின் சகபாடிகளான, குழந்தைகளான நீங்கள் இல்லாமல், தந்தையால் தனித்து எதையும் செய்ய முடியாது. தந்தை எதையாவது விளங்கப்படுத்த விரும்பினால், அவர் ஒரு சரீரத்தின் ஆதாரத்தை எடுத்துக் கொள்ள வேண்டியுள்ளது. அவரால் ஒரு சரீரத்தின் ஆதாரம் இல்லாமல் பேச முடியுமா? அவரால் பேச முடியுமா? கார் பழையதோ அல்லது நல்ல நிலையில் உள்ளதோ, அவர் அதன் ஆதாரத்தை எடுத்துக் கொள்ளவே வேண்டியுள்ளது. ஏதாவது ஆதாரம் இல்லாமல் அவரால் எதையும் செய்ய முடியாது. அவர் தந்தை பிரம்மாவின் ஆதாரத்தை எடுத்துக் கொண்ட போது மட்டுமே நீங்கள் பிராமணர்கள் ஆகினீர்கள். நீங்கள் பிரம்மாகுமார்கள் என்றே அழைக்கப்படுகிறீர்கள். சிவகுமார்கள் என்றல்ல. அசரீரியான தந்தை பௌதீக சரீரத்தின் ஆதாரத்தை எடுத்துக் கொள்ள வேண்டியுள்ளது. அவர் பௌதீகமான பிரம்மாவின் ஆதாரத்தை எடுத்துக் கொண்டதைப் போல், இப்போதும் பிரம்மாவின் அவ்யக்த, தேவதை ரூபத்தின் ஆதாரத்தை எடுக்காமல் அவரால் உங்களைப் பராமரிக்க முடியுமா? அவர் பௌதீக ரூபத்தின் ஆதாரத்தை எடுத்தாலென்ன அல்லது தேவதை ரூபத்தின் ஆதாரத்தை எடுத்தாலென்ன, அவர் அந்த ஆத்மாவின் ஆதாரத்தையும் சகவாசத்தையும் எடுக்க வேண்டியுள்ளது. உண்மையில், அவர் சர்வசக்திவான். எனவே, ஒரு மந்திரவாதியால் ஒரு விநாடியில் ஒரு அழியக்கூடிய மந்திரவித்தையைக் காட்டக்கூடியதாக இருக்கும்போது, சர்வசக்திவானால் அவர் விரும்புவதைச் செய்ய முடியாதா? அவரால் அதைச் செய்ய முடியுமா? அவர் இப்போது நினைத்தாலும் விநாசத்தை ஏற்படுத்த முடியுமா? அவரால் தனியே இதைச் செய்ய முடியுமா? பாபாவால் தனித்து எதையும் செய்ய முடியாது. அவர் சர்வசக்திவானாக இருந்தாலும், அவர் சகபாடிகளான உங்கள் எல்லோரிலும் கட்டுப்பட்டுள்ளார். ஆகவே, தந்தை உங்கள் எல்லோரிலும் அதிகளவு அன்பு வைத்திருக்கிறார். அவர் விரும்பினால், அவரால் அதைச் செய்ய முடியும். ஆனால் அவர் அதைச் செய்வதில்லை. அவரால் அவரின் மந்திரக்கோலை அசைக்க முடியாதா? எவ்வாறாயினும், தந்தை கூறுகிறார்: யாரால் இராச்சிய உரிமையைக் கோர முடியும்? தந்தை இந்த உரிமையைப் பெறுவாரா? நீங்களே அவ்வாறு ஆகுவீர்கள். அவர் ஸ்தாபனையைச் செய்து விநாசத்தை ஏற்படுத்தினாலும், யார் ஆளப்போவது? நீங்கள் இல்லாமல் அவரால் எதையும் செய்ய முடியுமா? இதனாலேயே, தந்தை உங்கள் எல்லோரையும் கர்மாதீத் ஆக்க வேண்டியுள்ளது. நீங்களே இவ்வாறு ஆகவேண்டும். அல்லது, தந்தை உங்களைக் கட்டாயப்படுத்தி இவ்வாறு ஆக்க வேண்டுமா? தந்தை உங்களை இவ்வாறு ஆக்க வேண்டியுள்ளது, நீங்கள் எல்லோரும் இவ்வாறு ஆகவேண்டும். இதுவே இனிமையான நாடகம் ஆகும். நீங்கள் நாடகத்தை இரசிக்கிறீர்கள்தானே? அல்லது, சிலவேளைகளில் நீங்கள் துன்பமடைந்து, என்னதான் உருவாக்கப்பட்டுள்ளது என நினைக்கிறீர்களா? இது மாற வேண்டும் என நீங்கள் நினைக்கிறீர்களா? தந்தையும் கூறுகிறார்: இந்த நாடகம் ஏற்கனவே நிச்சயிக்கப்பட்டதொரு நாடகம். அதை மாற்ற முடியாது. அது மீண்டும் இடம்பெறும். ஆனால் அதை மாற்ற முடியாது. இந்த நாடகத்திற்குள், உங்களின் இந்தக் கடைசிப் பிறவியில் உங்களிடம் சகல சக்திகளும் உள்ளன. இந்த நாடகத்தில் அது உள்ளது. ஆனால் இந்தக் கடைசி, மேன்மையான பிராமணப் பிறவியிலேயே, நீங்கள் பல சக்திகளைப் பெற்றுள்ளீர்கள். தந்தை உங்களிடம் அவற்றை ஒப்படைத்துள்ளார். அதனால் உங்களிடம் இந்த அக சக்தி உள்ளது. எனவே, நீங்கள் எதை நினைப்பீர்கள்? எந்த வார்த்தையை நீங்கள் நினைப்பீர்கள்? கரன்கரவன்ஹார். உறுதியாகவா? அல்லது, நீங்கள் விமானங்களில் ஏறியதும் இதை மறந்துவிடுவீர்களா? இதை மறக்காதீர்கள்.
இப்போது, மீண்டும் ஒருமுறை, உங்களை ஸ்திரப்படுத்திக் கொள்ளுங்கள்: உங்களின் சரீரபந்தனங்களுக்கு அப்பால் செல்லும் கர்மாதீத் ஸ்திதியைக் கொண்டிருங்கள். நீங்களே செயல்களைச் செய்பவர். எனினும் பற்றற்றவராக இருங்கள். நீங்கள் எல்லாவற்றையும் பார்ப்பீர்கள், பேசுவீர்கள், ஆனால் இதைப் பற்றற்றவராக இருந்தவண்ணம் செய்யுங்கள். நீங்கள் ஒவ்வொருவரும் ஓர் அதிபதி, அத்துடன் தந்தையால் ஒரு கருவி ஆக்கப்பட்டுள்ள ஓர் ஆத்மா. மீண்டும் ஒருமுறை இந்த விழிப்புணர்வில் உங்களின் மனங்களையும் புத்திகளையும் ஸ்திரப்படுத்திக் கொள்ளுங்கள். (அப்பியாசம்) அச்சா.
சேவை செய்வதற்கான ஊக்கத்தையும் உற்சாகத்தையும் சதா பேணுகின்ற எங்கும் உள்ள சேவையாளர் ஆத்மாக்களுக்கும் சேவை செய்வதற்கும் சுயமுயற்சி செய்வதற்கும் இடையில் சதா சமநிலையைப் பேணும் ஆனந்தம் நிறைந்த ஆத்மாக்களுக்கும் சதா சுயநலமற்ற கருணையைக் கொண்டிருக்கும் விசேடமான ஆத்மாக்களுக்கும் சகல ஆத்மாக்களிடமும் உண்மையான கருணையைக் கொண்டிருப்பவர்களுக்கும் ஒரு விநாடியில் எந்தவிதமான கர்ம பந்தனங்களில் இருந்தும் பல இராஜரீகமான பந்தனங்களில் இருந்தும் தங்களை சதா விடுவித்துக் கொள்ளும் தீவிர முயற்சியாளர் ஆத்மாக்களுக்கும் இத்தகைய ஆத்மாக்களுக்கும் பாப்தாதாவின் அன்பு, நினைவுகள் மற்றும் நமஸ்காரம்.
ஆசீர்வாதம்:
நீங்கள் கீழ்ப்படிவானவராக இருப்பதன் மூலம் தந்தையின் உதவியையும் அவரின் ஆசீர்வாதங்களையும் அனுபவிப்பதன் மூலம் வெற்றி சொரூபம் ஆகுவீர்களாக.என்னை மட்டும் நினைவு செய்யுங்கள்! என்பதே தந்தையின் கட்டளை ஆகும். ஒரேயொரு தந்தையே உங்களின் உலகம். எனவே, தந்தையைத் தவிர வேறு எதுவும் உங்களின் இதயத்தில் இருக்கக்கூடாது. ஒரே வழிகாட்டல், ஒரே பலம், ஒரே ஆதாரம்..... எங்கு ஒரேயொருவர் இருக்கிறாரோ, அங்கே ஒவ்வொரு பணியிலும் வெற்றி இருக்கும். இத்தகைய ஆத்மாவிற்கு, எந்தவொரு சூழ்நிலையையும் வெற்றி கொள்வது இலகுவாக இருக்கும். கீழ்ப்படிவாக இருந்து, தந்தையின் கட்டளைகளைப் பின்பற்றும் குழந்தைகள், அவரின் ஆசீர்வாதங்களைப் பெறுவார்கள். எனவே, கஷ்டமான எதுவும் இலகுவாகிவிடும்.
சுலோகம்:
உங்களின் புதிய பிராமண வாழ்க்கையை உணர்ந்தவராக இருங்கள். பழைய சம்ஸ்காரம் எதுவும் வெளிப்பட மாட்டாது.