06.01.21        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்:
இனிய குழந்தைகளே, நீங்கள் நிச்சயமாகச் செய்த செயல்கள் அனைத்துக்குமான பலனைப் பெறுகிறீர்கள். ஒரேயொரு தந்தை மாத்திரமே தன்னலமற்ற சேவையைச் செய்கிறார்.

கேள்வி:
எவ்வாறு இவ் வகுப்பு மிகவும் அற்புதமாக உள்ளது? நீங்கள் இங்கு செய்ய வேண்டிய பிரதான முயற்சி என்ன?

பதில்:
இளைஞர்களும், முதிர்ச்சி அடைந்தவர்களும், வயோதிபர்களும் ஒன்றாக அமர்கின்ற ஒரே வகுப்பு இதுவேயாகும். இந்த வகுப்பு மிகவும் அற்புதமானது, ஒருநாள் கல்லுப்புத்தி உடையவர்களும், தெய்வீகக் குணங்கள் அற்றவர்களும், சாதுக்களும் வந்து இங்கு அமர்வார்கள். நீங்கள் இங்கு செய்ய வேண்டிய பிரதான முயற்சி நினைவேயாகும். நினைவினூடாக மாத்திரமே ஆத்மாக்களும், சரீரங்களும் இயற்கையாகக் குணப்படுத்தப்படுகின்றன. எவ்வாறாயினும், நினைவில் நிலைத்திருப்பதற்கு உங்களுக்கு ஞானமும் தேவையாகும்.

பாடல்:
ஓ இரவுப் பயணியே, களைப்படையாதீர்! விடியலின் இலக்கு தொலைவில் இல்லை!

ஓம் சாந்தி.
இனிமையிலும் இனிமையான ஆன்மீகக் குழந்தைகளாகிய நீங்கள் பாடலைக் கேட்டீர்கள். ஆன்மீகத் தந்தை இதன் அர்த்தத்தைக் குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்துகிறார். கீதையையும், சமயநூல்களையும் எழுதியவர்கள் அவற்றின் அர்த்தத்தைப் புரிந்துகொள்ளவில்லை என்பது அற்புதமே; அவர்கள் அனைத்து விடயங்களிலிருந்தும் தவறான அர்த்தத்தை வேறுபிரிக்கிறார்கள். ஞானக்கடலும், தூய்மையாக்குபவருமாகிய ஆன்மீகத் தந்தை இங்கமர்ந்திருந்து அவற்றின் அர்த்தத்தை விளங்கப்படுத்துகிறார். தந்தை மாத்திரமே உங்களுக்கு இராஜயோகத்தைக் கற்பிக்கிறார். நீங்கள் மீண்டும் ஒருமுறை அரசர்களுக்கெல்லாம் அரசர்கள் ஆகுகிறீர்கள் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் புரிந்துகொள்கிறீர்கள். வேறு பாடசாலைகளில் தாங்கள் மீண்டும் ஒருமுறை சட்டநிபுணர்கள் ஆகப் போகின்றார்கள் என அவர்கள் கூற மாட்டார்கள். எவ்வாறு மீண்டும் ஒருமுறை என்னும் வார்த்தையைப் பயன்படுத்துவது என வேறு எவரும் புரிந்துகொள்வதில்லை. நீங்கள் 5000 வருடங்களுக்கு முன்னர் செய்ததைப் போல, இப்பொழுது மீண்டும் ஒருமுறை எல்லையற்ற தந்தையுடன் கற்கிறீர்கள் எனக் கூறுகிறீர்கள். நிச்சயமாக இவ்விநாசம் மீண்டும் ஒருமுறை நடைபெறும். அவர்கள் தொடர்ந்தும் பல்வேறு பெரிய குண்டுகளை உற்பத்தி செய்கிறார்கள். அவர்கள் மிகவும் சக்திநிறைந்த குண்டுகளை உற்பத்தி செய்கிறார்கள். அவர்கள் அவற்றை வெறுமனே வைத்திருப்பதற்காக உற்பத்தி செய்வதில்லை; இவ்விநாசமும் ஒரு மங்களகரமான நோக்கத்துக்காகவே உள்ளது. குழந்தைகளான நீங்கள் எதைப் பற்றியும் அஞ்சத் தேவையில்லை; இந்த யுத்தம் நன்மையளிக்கும். தந்தை உங்களுக்கு நன்மை அளிப்பதற்கே வருகிறார். கூறப்பட்டுள்ளது: தந்தை வந்து பிரம்மாவினூடாக ஸ்தாபனைப் பணியையும், சங்கரரினூடாக விநாசத்தையும் மேற்கொள்கிறார். ஆகவே அக்குண்டுகள் போன்றவை விநாசத்திற்கானவை. அவற்றை விடவும் அதிகச் சக்திநிறைந்தவை எதுவுமில்லை. அவற்றுடன், இயற்கை அனர்த்தங்களும் உள்ளன. அவற்றை இறை அனர்த்தங்கள் என அழைக்க முடியாது. இந்த இயற்கை அனர்த்தங்கள் நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டுள்ளன் அவை புதியன அல்ல! அவர்கள் தொடர்ந்தும் பல்வேறு பெரிய குண்டுகளை உற்பத்தி செய்கிறார்கள். அவர்கள் கூறுகிறார்கள்: எங்களால் நகரங்கள் முழுவதையும் அழித்து விட முடியும். ஜப்பானில் அவர்கள் போட்ட குண்டுகள் மிகவும் சிறியவை. அவர்கள் இப்பொழுது மிகப் பெரிய குண்டுகளை உருவாக்கியுள்ளார்கள். அவர்களுக்குப் பெருஞ் சிரமம் ஏற்பட்டு, அவற்றைச் சகித்துக்கொள்ள முடியாதபொழுது, குண்டுகளைப் பயன்படுத்த ஆரம்பிப்பார்கள். அதிகளவு சேதம் இருக்கும்! என்ன நடைபெறுகிறது எனப் பார்ப்பதற்கு அவர்கள் ஒத்திகைகளை நடத்துகிறார்கள். அவர்கள் இவற்றில் பில்லியன் கணக்கான ரூபாய்களைச் செலவழிக்கிறார்கள். அவற்றை உற்பத்தி செய்பவர்களின் சம்பளமும் கூட மிக அதிகளவு ஆகும். குழந்தைகளாகிய நீங்கள் மிகவும் சந்தோஷமாக இருக்க வேண்டும்: பழைய உலகம் அழியப் போகிறது. குழந்தைகளாகிய நீங்கள் புதிய உலகத்துக்காக முயற்சி செய்கிறீர்கள். நிச்சயமாகப் பழைய உலகம் அழியப் போகிறது எனக் காரணங்களும் கூறுகின்றன. கலியுகத்தில் என்ன இருக்கிறது என்பதையும், சத்திய யுகத்தில் என்ன இருக்கும் என்பதையும் குழந்தைகளாகிய நீங்கள் புரிந்துகொள்கிறீர்கள். நீங்கள் இப்பொழுது சங்கம யுகத்தில் நிற்கிறீர்கள். சத்திய யுகத்தில் அதிகளவு மக்கள் இருக்க மாட்டார்கள் என்பதை நீங்கள் புரிந்துகொள்கிறீர்கள். ஆகவே, அவர்கள் அனைவரும் அழிக்கப்படுவார்கள். இந்த இயற்கை அனர்த்தங்களும் ஒரு கல்பத்தின் முன்னர் நடைபெற்றன. பழைய உலகம் அழிக்கப்பட வேண்டும். பல அனர்த்தங்களும் தொடர்ந்தும் வந்துள்ளன, ஆனால் அவை ஒரு சிறிய அளவிலேயே இருந்தன. இப்பொழுது இப்பழைய உலகம் முழுவதும் அழிக்கப்படவுள்ளது. குழந்தைகளாகிய உங்களுக்குப் பெருமளவு சந்தோஷம் இருக்க வேண்டும். பரமாத்மாவாகிய, பரமதந்தையான, தந்தையே இங்கமர்ந்திருந்து ஆன்மீகக் குழந்தைகளாகிய எங்களுக்கு விளங்கப்படுத்துகிறார். உங்களுக்காகவே இவ்விநாசம் நடைபெறுகிறது. உருத்திர ஞான யாகத்திலிருந்தே விநாசத்துக்கான சுவாலைகள் வெளித்தோன்றின என்பது நினைவுகூரப்பட்டுள்ளது. கீதையில் குறிப்பிடப்பட்டுள்ள சில விடயங்கள் மிகச் சிறந்த அர்த்தம் உடையவை, ஆனால் எவரும் அவற்றைப் புரிந்துகொள்வதில்லை. அவர்கள் தொடர்ந்தும் அமைதியை வேண்டுகிறார்கள். நீங்கள் சென்று சந்தோஷமாக இருக்கக்கூடியதாக விநாசம் விரைவில் நடைபெற வேண்டும் என நீங்கள் கூறுகிறீர்கள்! தந்தை கூறுகிறார்: நீங்கள் சதோபிரதானாகும்பொழுது மாத்திரமே உங்களால் சந்தோஷமாக இருக்க முடியும். தந்தை பலவிதமான கருத்துக்களைக் கொடுக்கிறார். அவை சிலரின் புத்தியில் மிகவும் நன்றாகப் பதிகின்றன, ஆனால் ஏனையோரின் புத்தியில் மிகவும் நன்றாகப் பதிவதில்லை. தாங்கள் சிவபாபாவை நினைவுசெய்ய வேண்டுமென வயோதிபத் தாய்மார்கள் புரிந்துகொள்கிறார்கள், அவ்வளவுதான்! அவர்களுக்கு விளங்கப்படுத்தப்பட்டுள்ளது: உங்களை ஆத்மாக்களாகக் கருதித் தந்தையை நினைவுசெய்யுங்கள்! எவ்வாறாயினும், அவர்கள் தங்களுடைய ஆஸ்தியைக் கோருகிறார்கள். அவர்கள் ஒன்றாக வாழ்கிறார்கள். அனைவரும் கண்காட்சிகளுக்கு வருகிறார்கள். அஜாமிலைப் போன்ற பாவிகள், விபச்சாரிகள், போன்ற அனைவரும் ஈடேற்றப்பட வேண்டும். சுத்தம் செய்யும் தொழிலாளிகளும் நல்ல ஆடைகளை அணிந்து வருகிறார்கள். காந்தி தீண்டத் தகாதவர்களை விடுதலையாக்கினார். அவர்கள் ஏனையோருடன் ஒன்றாக உணவு உண்கிறார்கள். தந்தை உங்களை முற்றாகவே தடை செய்யவில்லை. அவர்களும் ஈடேற்றப்பட வேண்டும் எனத் தந்தை புரிந்துகொள்கிறார். இது அவர்கள் செய்கின்ற வேலையுடன் தொடர்புபட்டது என்பதல்ல. தந்தையுடனான யோகத்தில் உங்கள் புத்தியை இணைப்பதிலேயே அனைத்தும் தங்கியுள்ளது. நீங்கள் தந்தையை நினைவுசெய்ய வேண்டும். ஆத்மா கூறுகின்றார்: நான் ஒரு தீண்டத் தகாதவன். நாங்கள் சதோபிரதான் தேவர்களாக இருந்தோம் என்பதை இப்பொழுது புரிந்துகொள்கின்றோம். இப்பொழுது, இறுதியில், மறுபிறவி எடுப்பதனால் நாங்கள் தூய்மையற்றவர்கள் ஆகிவிட்டோம். இப்பொழுது ஆத்மாவாகிய நான், மீண்டும் தூய்மையாக வேண்டும். எவ்வாறு சிந்த்தில் சுதேசிப் பெண்ணொருவர் வந்து திரான்ஸில் செல்வார் என்பது உங்களுக்குத் தெரியும். அவள் பாபாவைச் சந்திப்பதற்கு ஓடி வருவாள். அவளும் ஓர் ஆத்மாவே என்பது விளங்கப்படுத்தப்பட்டது. தந்தையிடமிருந்து தங்கள் ஆஸ்தியைக் கோருவதற்கு ஆத்மாக்களுக்கு ஓர் உரிமையுள்ளது. அவளுடைய குடும்ப அங்கத்தவர்களிடம் அவளைத் தொடர்ந்தும் ஞானத்தைப் பெற அனுமதிக்குமாறு வேண்டப்பட்டது, ஆனால் தங்கள் சமுதாயத்;தில் குழப்பம் ஏற்படும் என அவர்கள் கூறினார்கள். ஏனெனில் அவர்கள் பயந்த காரணத்தினால், அவர்கள் அவளை அழைத்துச் சென்றார்கள். உங்களிடம் வருகின்ற எவருக்கும் நீங்கள் இல்லை எனக் கூறக்கூடாது. கடவுள் அப்பாவிப் பெண்கள், விபச்சாரிகள், சுதேசி இனப் பெண்கள், சாதுக்கள் போன்ற அனைவரையும், அதாவது, சாதுக்களிலிருந்து சுதேசிகள் வரை ஈடேற்றுகிறார் என்பது நினைவுகூரப்பட்டுள்ளது. யக்ஞத்துக்குச் சேவை செய்வதால் பெருமளவு பேறு இருக்கும், பலர் நன்மையடைவார்கள். நாளுக்கு நாள், கண்காட்சிகளின் மூலமான சேவை அதிகரிக்கும். பாபா தொடர்ந்தும் பட்ஜ்களைச் செய்வித்துள்ளார். நீங்கள் எங்கு சென்றாலும், இந்தப் பட்ஜை விளங்கப்படுத்த வேண்டும்: இது தந்தை, இது தாதா, இது தந்தையின் ஆஸ்தி. இப்பொழுது தந்தை கூறுகிறார்: என்னை நினைவுசெய்வதனால், நீங்கள் தூய்மையாகுவீர்கள்! கீதையிலும் குறிப்பிடப்பட்டுள்ளது: சதா என்னை மாத்திரம் நினைவுசெய்யுங்கள். அவர்கள் எனது பெயரை எடுத்து விட்டு, குழந்தையின் பெயரைப் புகுத்தியுள்ளார்கள். பாரத் மக்கள் கூட, இராதைக்கும் கிருஷ்ணருக்கும் இடையிலுள்ள உறவுமுறை என்ன என்பதைப் புரிந்துகொள்வதில்லை. அவர்களுடைய திருமணத்தின் முன்னர் இருந்த அவர்களின் வரலாறு முற்றிலும் காண்பிக்கப்படவில்லை. ஒவ்வொருவரும் (இராதை, கிருஷ்ணர்) வேறுபட்ட இராச்சியத்துக்கு உரியவர்களாக இருந்தார்கள். தந்தை இங்கமர்ந்திருந்து இவ்விடயங்களை விளங்கப்படுத்துகிறார். அவர்கள் (சந்நியாசிகள்) இவ்விடயங்களைப் புரிந்துகொண்டு, இவை கடவுள் சிவனின் வாசகங்கள் எனக் கூறியிருப்பின், மக்கள் அவர்களை விரட்டியிருப்பார்கள். அவர்கள் வினவுவார்கள்: நீங்கள் இதை எங்கே கற்றீர்கள்? அது எந்தக் குரு? தாங்கள் அதை பிரம்ம குமாரிகளிடமிருந்து கற்றார்கள் என அவர்கள் (சந்நியாசிகள்) கூறியிருப்பின், அவர்கள் அனைவரும் குழப்பமடைந்து விடுவார்கள். அப்பொழுது குருமார்களின் இராச்சியம் முழுமையாகவே முடிவடைந்து விடும். அத்தகைய பலர் இங்கு வருகிறார்கள். அவர்கள் சிலவற்றை எழுதவும் செய்கிறார்கள், ஆனால் பின்னர் அவர்கள் மறைந்து விடுகிறார்கள். தந்தை குழந்தைகளாகிய உங்களுக்கு எச்சிரமத்தையும் கொடுப்பதில்லை. அவர் உங்களுக்கு மிகவும் இலகுவான வழிமுறைகளைக் காண்பிக்கிறார். ஒரு தம்பதியினருக்கு ஒரு குழந்தை இல்லாதபொழுது, தங்களுக்கு ஒரு குழந்தையை அருளுமாறு கடவுளை வேண்டுகிறார்கள். பின்னர், தங்களுக்கு ஒரு குழந்தை இருக்கும்பொழுது, அவர்கள் அதை மிகவும் கவனமாகப் பராமரிக்கிறார்கள்; அவர்கள் அவருக்குக் கல்வி புகட்டுகிறார்கள். பின்னர், அவர் வளரும்பொழுது, அவருடைய சுய சம்பாத்தியத்தைச் சம்பாதிக்குமாறு அவர்கள் அவரைக் கேட்கிறார்கள். ஒரு தந்தை தனது குழந்தையைப் பராமரித்து, அவரைத் தகுதியானவர் ஆக்குகிறார். ஆகவே அவர் தனது குழந்தைகளின் சேவகர் ஆவார். இந்தத் தந்தை குழந்தைகளாகிய உங்களுக்குச் சேவை செய்து உங்களைத் திரும்பவும் தன்னுடன் அழைத்துச் செல்கிறார். தனது குழந்தைகள் சுதந்திரமானவர்களாகி, தனது வியாபாரத்தில் ஈடுபட்டுப் பின்னர் பெற்றோர்; வயோதிபராகும்பொழுது, அவர்களுக்குச் சேவை செய்வார்கள் என ஒரு லௌகீகத் தந்தை எண்ணுகிறார். அந்தத் தந்தை தனக்கென எச்சேவையையும் வேண்டுவதில்லை. அவர் தன்னலமற்றவர். தான் வாழும்வரையில் தன்னைப் பராமரிப்பது தனது குழந்தைகளின் கடமை என ஒரு லௌகீகத் தந்தை நம்புகிறார். அவருக்கு அந்த ஆசை இருக்கிறது. அந்தத் தந்தை கூறுகிறார்: நான் தன்னலமற்ற சேவையைச் செய்கிறேன். நான் ஓர் இராச்சியத்தை ஆட்சிசெய்வதில்லை. நான் மிகவும் தன்னலமற்றவர்! ஏனையோர் செய்வதற்கெல்லாம், அதற்கான பலனை நிச்சயமாகப் பெறுகிறார்கள். அவரே அனைவரினதும் தந்தை. அவர் கூறுகிறார்: நான் குழந்தைகளாகிய உங்களுக்குச் சுவர்க்க இராச்சியத்தைக் கொடுக்கிறேன். நீங்கள் அத்தகையதொரு மேன்மையான அந்தஸ்தை அடைகிறீர்கள்! நான் பிரம்மாந்தத்தின் அதிபதி மாத்திரமே. நீங்களும் அவ்வாறு ஆகுகிறீர்கள், ஆனால் நீங்கள் இராச்சியத்தைப் பெற்று, பின்னர் அதை இழக்கிறீர்கள். நான் இராச்சியத்தைப் பெறுவதோ அல்லது அதை இழப்பதோ இல்லை. இதுவே நாடகத்தில் எனது பாகம். உங்கள் சந்தோஷ ஆஸ்தியைக் கோருவதற்குக் குழந்தைகளாகிய நீங்கள் தொடர்ந்தும் முயற்சி செய்கிறீர்கள். ஏனைய அனைவரும் அமைதியை வேண்டுகிறார்கள். சந்தோஷம் காக்கை எச்சத்தைப் போன்றது என அக்குருமார்கள் கூறுகிறார்கள். இதனாலேயே அவர்கள் அமைதியை மாத்;திரம் விரும்புகிறார்கள். அவர்களால் இந்த ஞானத்தைப் பெற முடியாது. அவர்கள் சந்தோஷத்தைப் பற்றிய எதையும் புரிந்துகொள்வதில்லை. தந்தை விளங்கப்படுத்துகிறார்: என்னால் மாத்திரமே அமைதியும், சந்தோஷமுமாகிய ஆஸ்தியை உங்களுக்குக் கொடுக்க முடியும். சத்திய, திரேதா யுகங்களில் குருமார்கள் இல்லை. அங்கு இராவணன் இருப்பதில்லை. அது இறை இராச்சியமாகும். இந்நாடகம் முற்கூட்டியே நிச்சயிக்கப்பட்டது. இவ்விடயங்கள் வேறு எவருடைய புத்தியிலும் இருப்பதில்லை. ஆகவே, குழந்தைகளாகிய நீங்கள் இவ்விடயங்களை மிகவும் நன்றாகக் கிரகித்து, ஓர் உயர் அந்தஸ்தைக் கோர வேண்டும். நீங்கள் இப்பொழுது சங்கம யுகத்தில் இருக்கிறீர்கள். புதிய உலக இராச்சியம் ஸ்தாபிக்கப்படுவதை நீங்கள் புரிந்துகொள்கிறீர்கள். நீங்கள் சங்கம யுகத்திலும், ஏனைய அனைவரும் கலியுகத்திலும் இருக்கிறார்கள். அவர்கள் சக்கரத்தின் கால எல்லை நூறாயிரக்கணக்கான ஆண்டுகள் என்று கூறுகின்றார்கள். அவர்கள் காரிருளில் இருக்கின்றார்கள். அவர்கள் கும்பகர்ண உறக்கத்தில் உறங்கியதாக நினைவுகூரப்பட்டுள்ளது. பாண்டவர்களின் வெற்றியும் நினைவுகூரப்பட்டுள்ளது. நீங்கள் பிராமணர்கள். பிராமணர்கள் மாத்திரமே யாகங்கள் வளர்க்கின்றார்கள். இது மகத்துவமான, எல்லையற்ற, அதி முக்கியமான உருத்திர கடவுளின் யாகமாகும். பல வகையான எல்லைக்குட்பட்ட யாகங்கள் வளர்க்கப்படுகின்றன. இந்த யாகம் ஒருமுறை மாத்திரமே வளர்க்கப்படுகின்றது. சத்திய, திரேதா யுகங்களில் யாகங்கள் இருப்பதில்லை, ஏனெனில், அங்கே அனர்த்தங்கள் போன்றவற்றின் கேள்வியே இல்லை. அந்த யாகங்கள் அனைத்தும் எல்லைக்குட்பட்டவை. இவர் எல்லையற்றவர். எல்லையற்ற அர்ப்பணிப்பு மேற்கொள்ளப்பட வேண்டிய இந்த யாகம் எல்லையற்ற தந்தையினால் உருவாக்கப்படுகின்றது. அதன்பின்னர், அரைக்கல்பத்திற்கு எந்த யாகங்களும் இருக்க மாட்;டாது. அங்கே இராவண இராச்சியமும் இருப்பதில்லை. அவ்விடயங்கள் அனைத்தும் இராவண இராச்சியம் தொடங்கும்;பொழுது, ஆரம்பமாகுகின்றன. இந்த எல்லையற்ற யாகம் ஒருமுறை மாத்திரமே உருவாக்கப்படுவதுடன், பழைய உலகம் முழுவதும் அதனுள் அர்ப்பணிக்கப்படுகின்றது. இது எல்லையற்ற உருத்திர ஞான யாகமாகும். இங்கே ஞானமும், யோகமுமே பிரதான விடயங்கள். யோகம் என்றால் நினைவாகும். 'நினைவு செய்தல் என்ற வார்த்தை, மிகவும் இனிமையானது. ஆனால் 'யோகம் என்ற வார்த்தை மிகவும் பொதுவானதாகி விட்டது. யோகம் என்பதன் அர்த்தத்தை எவரும் புரிந்துகொள்வதில்லை. தந்தையை நினைவுசெய்தலே யோகம் என்பதன் அர்த்தம் என்று நீங்கள் விளங்கப்படுத்தலாம். பாபா, நீங்கள் எங்களுக்கு எல்லையற்ற ஆஸ்தியைக் கொடுக்கின்றீர்கள்! ஆத்மா கூறுகின்றார்: பாபா, நீங்கள் மீண்டும் ஒருமுறை வந்திருக்கின்றீர்கள்! நான் உங்களை மறந்திருந்தேன்! நீங்கள் எனக்கு இராச்சியத்தைக் கொடுத்தீர்கள். இப்பொழுது நீங்கள் மீண்டும் ஒருமுறை வந்து என்னைச் சந்தித்துள்ளீர்கள்! நான் நிச்சயமாக உங்கள் ஸ்ரீமத்தைப் பின்பற்றுவேன். இவ்வாறாக நீங்கள் உங்களுடன் பேச வேண்டும். பாபா, நீங்கள் எனக்கு மிகவும் நல்ல பாதையைக் காட்டுகின்றீர்கள். நான் ஒவ்வொரு கல்பத்திலும் அதனை மறக்கின்றேன். நீங்கள் அதனை மறக்காதவாறு இப்பொழுது தந்தை உங்களை அத்தகையவர் ஆக்குகின்றார். இதனாலேயே நீங்கள் இப்பொழுது தந்தையை மாத்திரம் நினைவுசெய்ய வேண்டும். இந்நினைவினைக் கொண்டிருப்பதால் மாத்திரமே, நீங்கள் இந்த ஆஸ்தியைப் பெறுவீர்கள். நான் உங்கள் முன்னிலையில் நேரடியாக வரும்பொழுதே, உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றேன். அதுவரையில் நீங்கள் தொடர்ந்தும் பாடுகிறீர்கள்: நீங்களே துன்பத்தை அகற்றுபவரும், சந்தோஷத்தை அருள்பவரும். நீங்கள் இந்தப் புகழைப் பாடுகிறீர்கள், ஆனாலும் நீங்கள் ஆத்மாக்களைப் பற்றியோ அல்லது பரமாத்மாவைப் பற்றியோ புரிந்துகொள்வதில்லை. அத்தகையதொரு சின்னஞ்சிறிய புள்ளியில் ஓர் அழியாத பாகம் பதியப்பட்டுள்ளதை நீங்கள் இப்பொழுது புரிந்து கொள்கிறீர்கள். தந்தை இதை விளங்கப்படுத்துகிறார். அவர் பரமாத்மாவாகிய, பரமதந்தை எனவும் அழைக்கப்படுகிறார். அவரே பரமாத்மா. அவர் ஒருபொழுதும் மங்காத சூரியனைப் போன்றவர் என்பதல்ல. ஓர் ஆசிரியர் செய்வதைப் போன்றே, நான் தொடர்ந்தும் உங்களுக்குக் கற்பிக்கிறேன். பல குழந்தைகள் உள்ளார்கள். இவ்வகுப்பு எவ்வளவு அற்புதமானது எனப் பாருங்கள்! இங்கு யார் கற்கிறார்கள் எனப் பாருங்கள்! அப்பாவிப் பெண்களும், தெய்வீகக் குணமற்றவர்களும், சாதுக்கள் போன்றோரும் கூட ஒருநாள் இங்கு வந்து அமர்வார்கள். வயோதிபப் பெண்களும், இளைய குழந்தைகளும் இங்கு அமர்ந்திருக்கிறார்கள். அத்தகையதொரு பாடசாலையை நீங்கள் எப்பொழுதாவது கண்டதுண்டா? இங்கு, நினைவுக்காக முயற்சி செய்யப்படுகின்றது. இந்நினைவிற்கே காலம் எடுக்கிறது. நினைவுக்காக முயற்சி செய்வதும் ஞானமே ஆகும். நினைவுக்கான ஞானமும் உள்ளது. சக்கரத்தை விளங்கப்படுத்துவதற்கான ஞானமும் உள்ளது. இதுவே உண்மையான, இயல்பான, இயற்கை வைத்தியமாகும். ஆத்மாக்களான நீங்கள் முழுமையாகவே தூய்மையாகுகிறீர்கள். அந்த வைத்தியங்கள் சரீரங்களுக்கானவை, இந்த வைத்தியமோ ஆத்மாக்களுக்கு உரியது. ஆத்மாக்களில் கலப்படம் கலக்கப்பட்டுள்ளது. நிஜத்தங்கம் நிஜ ஆபரணத்தை உருவாக்குகிறது. இங்கு சிவபாபா தனிப்பட்ட முறையில் வந்துள்ளார் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் புரிந்துகொள்கிறீர்கள். குழந்தைகளாகிய நீங்கள் நிச்சயமாகத் தந்தையை நினைவுசெய்ய வேண்டும். நாங்கள் இப்பொழுது வீடு திரும்ப வேண்டும். நாங்கள் இக்கரையிலிருந்து அக்கரை செல்ல வேண்டும். தந்தையையும், ஆஸ்தியையும், உங்கள் வீட்டையும் நினைவுசெய்யுங்கள். அதுவே இனிய மௌன வீடாகும். அமைதியின்மையினூடாகத் துன்பம் விளைவிக்கப்படுகிறது, அமைதியினூடாகச் சந்தோஷம் அனுபவம் செய்யப்படுகிறது. சத்திய யுகத்தில், உங்களுக்கு அமைதி, சந்தோஷம், செழிப்பு இருக்கின்றன் உங்களிடம் அனைத்தும் உள்ளது. அங்கு சண்டை அல்லது சச்சரவு செய்தல் என்பதற்கான கேள்வியே கிடையாது. நிஜத் தங்கமான, சதோபிரதான் ஆகுவதே, குழந்தைகளான உங்களுக்கு இருக்க வேண்டிய ஒரே அக்கறை, ஏனெனில் அப்பொழுது மாத்திரமே நீங்கள் ஓர் உயர்ந்த அந்தஸ்தைக் கோருவீர்கள். நீங்கள் அசைபோட்டு ஜீரணிக்கின்ற, ஆன்மீக உணவைப் பெறுகிறீர்கள். இன்று நாங்கள் செவிமடுத்த, முக்கிய கருத்துக்கள் எவை? இரு விதமான யாத்திரைகள் உள்ளன என்பது உங்களுக்கு விளங்கப்படுத்தப்பட்டுள்ளது: ஆன்மீக யாத்திரையும், பௌதீக யாத்திரையும். இந்த ஆன்மீக யாத்திரை மாத்திரமே பயனுள்ளது. கடவுள் பேசுகிறார்: மன்மனபவ! அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தந்தை தாயாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. இவ்விநாசம் மங்களகரமானது என்பதால், நீங்கள் அஞ்சக்கூடாது. உபகாரியான தந்தை நன்மையான விடயங்களையே தூண்டுகின்றார் எனும் விழிப்புணர்வைக் கொண்டிருந்து, சதா சந்தோஷமாக இருங்கள்.

2. நிஜத் தங்கமான, சதோபிரதான் ஆகுவதற்கான ஓர் அக்கறையையே சதா கொண்டிருந்து, ஓர் உயர்ந்த அந்தஸ்தைக் கோருங்கள். நீங்கள் பெறுகின்ற ஆன்மீக உணவைத் தொடர்ந்தும் அசைபோட்டு ஜீரணியுங்கள்.

ஆசீர்வாதம்:
நீங்கள் ஆன்மீக சகவாசத்தை வைத்திருப்பதனால், உங்களை ஆன்மீக வர்ணத்தினால் நிறமூட்டி, சதா முகமலர்ச்சியாகவும், இலேசாகவும், ஒளியாகவும் இருப்பீர்களாக.

தந்தையைத் தங்கள் இதயத்தின் உண்மையான சகபாடியாக்குகின்ற குழந்தைகள் எப்பொழுதும் ஆன்மீக சகவாசத்தினால் நிறமூட்டப்பட்டுள்ளார்கள். உங்கள் புத்தியால் உண்மையான தந்தையினதும், உண்மையான ஆசிரியரினதும், உண்மையான சற்குருவினதும் சகவாசத்தை வைத்திருப்பதெனில், சத்தியத்தின் (சற்சங்கம்) சகவாசத்தைக் கொண்டிருப்பதாகும். சத்தியத்தின் சகவாசத்தில் நிலைத்திருப்பவர்களே சதா முகமலர்ச்சியாகவும், இலேசாகவும், ஒளியாகவும் இருக்கின்றார்கள். அவர்கள் எவ்வகையான சுமையையும் அனுபவம் செய்வதில்லை. அவர்கள் தங்களில் சந்தோஷச் சுரங்கத்தைக் கொண்டிருப்பதைப் போன்று, தங்களை நிரம்பியவர்களாக அனுபவம் செய்கின்றார்கள், அத்துடன் தந்தைக்குரியவை எவையோ, அவை அவர்களுக்கு உரியவையாகவும் ஆகுகின்றன.

சுலோகம்:
உங்கள் இனிய வார்த்தைகள் மற்றும்;, ஊக்கம், உற்சாகத்தின் ஒத்துழைப்பு மூலம் மனந்தளர்ந்துள்ளவர்களை உறுதியானவர்கள் ஆக்குங்கள்.