06.02.19        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்:
இனிய குழந்தைகளே, இப்பொழுது நீங்கள் சரீரமற்றவராகி, வீடு திரும்ப வேண்டும். எனவே, நீங்கள் எவருடனாவது பேசும்பொழுதெல்லாம் உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதி, உங்கள் சகோதர ஆத்மாவுடன் பேசுவதாகக் கருதுங்கள். ஆத்ம உணர்வில் நிலைத்திருப்பதற்கு முயற்சி செய்யுங்கள்.

கேள்வி:
எதிர்கால இராச்சியத் திலகத்தைக் கோரிக்கொள்வதற்கான அடிப்படை என்ன?

பதில்:
நீங்கள் எவ்வாறு கற்கின்றீர்கள் என்பதாகும். நீங்கள் ஒவ்வொருவரும் கற்று, இராச்சிய திலகத்தைக் கோர வேண்டும். உங்களுக்குக் கற்பிக்க வேண்டிய கடமை தந்தைக்கு உள்ளது. இதில் ஆசீர்வாதங்கள் என்ற கேள்விக்கே இடமில்லை. உங்களுக்கு முழுமையான நம்பிக்கை இருக்குமாயின், தொடர்ந்தும் ஸ்ரீமத்தைப் பின்பற்றுங்கள். தவறுகள் செய்யாதீர்கள். கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டு, நீங்கள் கல்வியை நிறுத்துவீர்களாயின், தோல்வியே அடைவீர்கள். எனவே, பாபா கூறுகின்றார்: இனிய குழந்தைகளே, உங்கள் மீது கருணை கொண்;டிருங்கள். நீங்கள் ஆசீர்வாதங்களுக்காக வேண்டிக் கொண்டிருக்காமல் கல்வியில் கவனம் செலுத்துங்கள்.


ஓம் சாந்தி.
பரம ஆசிரியர் குழந்தைகளாகிய உங்களுக்குக் கற்பிக்கின்றார். பரமதந்தையே தந்தையும், அத்துடன் ஆசிரியருமாவார் என்பது குழந்தைகளாகிய உங்களுக்குத் தெரியும். அவர் வேறு எவராலும் கற்பிக்க முடியாத விடயங்களை உங்களுக்குக் கற்பிக்கின்றார். சிவபாபாவே உங்களுக்குக் கற்பிக்கின்றார் என நீங்கள் கூறுகின்றீர்கள். அந்த பாபா ஒருவருக்கு மாத்திரம் சொந்தமானவரல்ல. அவர் மன்மனாபவ, மத்தியாஜிபவ என்பவற்றின் அர்த்தங்களை உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார்: என்னை நினைவுசெய்யுங்கள். குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது விவேகமானவர்கள் ஆகிவிட்டீர்கள். எல்லையற்ற தந்தை கூறுகின்றார்: எப்படியோ உங்களுக்கு ஓர் ஆஸ்தி இருக்கவே செய்கின்றது. நீங்கள் ஒருபொழுதும் இதனை மறந்துவிடக்கூடாது. தந்தை ஆத்மாக்களாகிய உங்களுடன் பேசுகின்றார். நீங்கள் இப்பொழுது உயிர் வாழ்பவர்கள். எல்லையற்ற தந்தை அசரீரியானவர். அவர் இச்சரீரத்தின் மூலமாக எங்களுக்குக் கற்பிக்கின்றார் என்பதனை நீங்கள் அறிவீர்கள். நீங்கள் வேறு எவரையும் பற்றி இவ்வாறு நினைப்பதில்லை. ஓர் ஆசிரியர் பாடசாலையொன்றில் கற்பிக்கும்பொழுது, லௌகீக ஆசிரியர் லௌகீகக் குழந்தைகளுக்குக் கற்பிப்பதாகக் கூறப்படுகின்றது. இவர் பரலோகக் குழந்தைகளாகிய உங்களுக்குக் கற்பிக்கின்ற பரலோக, பரம ஆசிரியராவார். நீங்கள் அப்பாற்பட்ட உலகமாகிய, அசரீரி உலகில் வசிப்பவர்கள். தந்தையும் அப்பாற்பட்ட அவ்வுலகிலேயே வசிக்கின்றார். தந்தை கூறுகின்றார்: நான் அமைதிதாமவாசி. நீங்களும் அதேயிடத்து வாசிகளே. நீங்களும், நானும் ஒரேயிடத்தைச் சேர்ந்தவர்கள். நீங்கள் உங்களை ஆத்மாக்களாகக் கருதுகின்றீர்கள். நான் பரமாத்மா ஆவேன். நீங்கள் இப்பொழுது உங்களது பாகங்களை இங்கே நடிக்கின்றீர்கள். உங்களது பாகங்களை நடிக்கும்பொழுது, நீங்கள் தூய்மையற்றவர்களாகி விட்டீர்கள். இதுவே நாடகம் நடிக்கப்படுகின்ற, எல்லையற்ற மேடை ஆகும். இந்த முழு உலகமும் செயற்களமாகும், நாடகம் இங்கு நடிக்கப்படுகின்றது. இது ஓர் எல்லையற்ற நாடகம் என்பதனை நீங்கள் மாத்திரமே அறிவீர்கள். இதிலும்கூட பகலும், இரவும் காணப்படுகின்றன. சூரியனும், சந்திரனும் எல்லையற்ற ஒளியைக் கொடுக்கின்றன. இது எல்லையற்ற ஒரு விடயமாகும். இந்நேரத்தில் உங்களிடம் ஞானமும் இருக்கின்றது. படைப்பவரே வந்து படைப்பவரினதும், படைப்பின் ஆரம்பம், மத்தி, இறுதி பற்றியதுமான அறிமுகத்தை உங்களுக்குக் கொடுக்கின்றார். தந்தை கூறுகின்றார்: படைப்பின் ஆரம்பம், மத்தி, இறுதி பற்றிய இரகசியங்களை உங்களுக்குக் கூறுவதற்காகவே நான் வந்துள்ளேன். இது ஒரு பாடசாலை. உங்களுக்குக் கற்பிப்பவர் அபோக்தா (அனுபவங்களின் தாக்கத்திற்கு அப்பாற்பட்டவர்) ஆவார். நான் அபோக்தா என வேறு எவருமே கூறமுடியாது. அஹமதபாத்தில் ஒரு சாது இவ்வாறு கூறுவதுண்டு, எனினும் அவர் பின்னர் மோசடி செய்ததால் அகப்பட்டுக்கொண்டார். இந்நேரத்தில் பெருமளவில் ஏமாற்றல்களே இடம்பெறுகின்றன. பல்வேறு ஆடைகளை ஏற்ற பலர் இருக்கின்றனர். இவருக்கென (சிவபாபா) ஓர் ஆடை கிடையாது. கிருஷ்ணரே கீதையைப் பேசியதாக மக்கள் நினைக்கின்றனர். எனவே, பலர் இப்பொழுது கிருஷ்ணராகி விட்டனர். கிருஷ்ணர்கள் பலர் இருக்க முடியாது. இங்கே சிவபாபாவே வந்து, உங்களுக்குக் கற்பிக்கின்றார். அவர் ஆத்மாக்களாகிய உங்களுடன் பேசுகின்றார். உங்களுக்கு மீண்டும் மீண்டும் கூறப்பட்டுள்ளது: உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதி, இந்த ஞானத்தை உங்களது சகோதரர்களுக்கு எடுத்துரையுங்கள். நீங்கள் பாபாவின் ஞானத்தை உங்களது சகோதரர்களுக்குக் கொடுக்கின்றீர்கள் என்பது உங்களது புத்தியில் இருக்க வேண்டும். ஆண்கள், பெண்கள் ஆகிய இருபாலாரும் சகோதரர்களே. இதனாலேயே தந்தை கூறுகின்றார்: நீங்கள் அனைவரும் என்னிடமிருந்து ஆஸ்தியைப் பெறுவதற்கான ஓர் உரிமையைக் கொண்டிருக்கின்றீர்கள். பொதுவாக, பெண்கள் தங்களது புகுந்த வீட்டிற்குச் செல்ல வேண்டியிருப்பதால், அவர்கள் ஆஸ்தியைப் பெறுவதில்லை. இங்கே, அனைவரும் ஆத்மாக்களே. நீங்கள் சரீரமற்றவர்களாகவே வீடு திரும்ப வேண்டும். இப்பொழுது நீங்கள் பெறுகின்ற ஞான இரத்தினங்கள் அழிவற்ற இரத்தினங்கள். ஆத்மாவே ஞானக்கடல் ஆகுகின்றார். ஆத்மாவே அனைத்தையும் செய்கின்றார். எவ்வாறாயினும், மக்கள் சரீர உணர்வில் இருப்பதனால், அவர்கள் ஆத்ம உணர்வுடையவர்கள் ஆகுவதில்லை. இப்பொழுது நீங்கள் ஆத்ம உணர்வுடையவர்களாகி, ஒரேயொரு தந்தையை நினைவுசெய்ய வேண்டும். சிறிதளவு முயற்சி தேவைப்படுகின்றது. மக்கள் தங்களது லௌகீகக் குருவைப் பெருமளவில் நினைவுசெய்கின்றனர். அவர்கள் அவரது படத்தையும் வைத்திருக்கின்றனர். சிவனின் உருவத்திற்கும், மனிதரின் உருவத்திற்கும் இடையில் பெருமளவு வேறுபாடு உள்ளது. பகலிற்கும், இரவிற்குமிடையான வேறுபாடு உள்ளது. அம்மக்கள் தங்களது குருவின் படத்தைக் கொண்ட பேழையொன்றை அணிகின்றனர். அவர்கள் வேறு ஒருவரின் உருவம் தாங்கிய ஒன்றை அணிவதை அவர்களது கணவன்மார் விரும்புவதில்லை. ஆம், நீங்கள் சிவனது உருவத்தை அணிந்திருப்பீர்களாயின் அனைவரும் அதனை விரும்புவார்கள், காரணம் அவர் பரமதந்தையாவார். நீங்கள் அவரது உருவத்தையே வைத்திருக்க வேண்டும். அவரே உங்களைத் தனது கழுத்து மாலை ஆக்குகின்றார். நீங்கள் உருத்திர மாலையின்; ஒரு முத்தாக (மணி) ஆகுவீர்கள். உண்மையில், முழு உலகமும் உருத்திர மாலைக்குரியது. பிரஜாபிதா பிரம்மாவின் மாலையும் உள்ளது. மேலே வம்சாவளி விருட்சம் உள்ளது. இது ஓர் எல்லைக்குட்பட்ட வம்சாவளி விருட்சம், அதுவோ எல்லையற்றதாகும். மனிதர்கள் அனைவரையும் கொண்ட ஒரு மாலை உள்ளது. ஓர் ஆத்மா அனைத்திலும் மிகவும் சிறிய புள்ளியாவார். அது மிகவும் சின்னஞ்சிறிய புள்ளி. தொடர்ந்தும் புள்ளிகளை எண்ணுங்கள், அவை எண்ணற்றவை. நீங்கள் அவற்றை எண்ணுவதில் களைப்படைந்தும் விடுவீர்கள். எவ்வாறாயினும், ஆத்மாக்களின் விருட்சம் எவ்வளவு சிறியது என்பதைப் பாருங்கள். பிரம்ம தத்துவமானது மிகவும் சிறிய இடத்தையே கொண்டிருக்கின்றது. அவ்வாத்மாக்கள் தங்களது பாகங்களை நடிப்பதற்காக, பின்னர் இங்கே வருகின்றனர். இங்கே, உலகம் மிகவும் பெரியதாகவும், சிக்கல் நிறைந்ததாகவும் உள்ளது. அவர்கள் ஏனைய இடங்களுக்கு ஆகாய விமானம் மூலம் பயணம் செய்கின்றனர். அங்கே, ஆகாய விமானங்கள் போன்றவற்றிற்கான அவசியமில்லை. அங்கே, ஆத்மாக்களின் சிறிய விருட்சம் மாத்திரமே உள்ளது. இங்கோ, மனிதர்களின் விருட்சம் மிகவும் பெரியது. அவர்கள் அனைவரும், சிலரால் ஆதாம் எனவும், வேறு சிலரால் ஆதிதேவன் எனவும் அழைக்கப்படுகின்ற பிரஜாபிதாவின் குழந்தைகளாவர். நிச்சயமாக ஆண்களும், பெண்களும் உள்ளனர். உங்களுடையது இல்லறப் பாதையாகும். துறவறப் பாதைக்கேயுரிய நாடகமாக அது இருக்க முடியாது. ஒரேயொரு கையினால் என்னதான் நிகழும்? இரு சக்கரங்களும் தேவைப்படுகின்றன. இரு சக்கரங்கள் இருக்குமாயின், ஒருமித்து விரைந்தோட முடியும். இரண்டாவது சக்கரம் முதலாவதுடன் சேர்ந்து ஓடாவிட்டால், முதலாவது பின்தங்கி விடுகின்றது. எவ்வாறாயினும், அந்த ஒன்றிற்காக நீங்கள் நின்று விடக்கூடாது. முதலில், தூய இல்லறப் பாதை இருந்தது. பின்னர் அது தூய்மையற்றதாகியது. நீங்கள் தொடர்ந்து வீழ்ந்தீர்கள். எவ்வாறு இந்த விருட்சம் வளர்கின்றது, எவ்வாறு அதிகரிப்பு தொடர்ந்தும் இடம்பெறுகின்றது போன்ற ஞானம் அனைத்தும் உங்களது புத்தியில் உள்ளது. வேறு எவராலுமே அத்தகையதொரு விருட்சத்தை உருவாக்க முடியாது. படைப்பவரினதும், படைப்பின் ஆரம்பம், மத்தி, இறுதி பற்றியதுமான ஞானம் எவரது புத்தியிலும் இல்லை. இதனாலேயே பாபா கூறியுள்ளார்: படைப்பவரினதும், படைப்பினதும் இறுதி ஞானத்தை நீங்கள் படைப்பவரிடமிருந்து பெற்று விட்டீர்கள் என்பதனை எழுதுங்கள். அம்மக்கள் படைப்பவரையோ அல்லது படைப்பையோ அறியார்கள். இந்த ஞானம் தொன்றுதொட்டுத் தொடர்ந்து வந்ததாயின், எவராவது உங்களுக்கு அதனைக் கொடுத்திருக்க முடியும். பிரம்மகுமாரர்கள், குமாரிகளாகிய உங்களைத் தவிர வேறு எவராலுமே இந்த ஞானத்தைக் கொடுக்க முடியாது. பரமாத்மாவாகிய பரமதந்தை, பிராமணர்களாகிய உங்களுக்கு மாத்திரமே கற்பிக்கின்றார் என்பதனை நீங்கள் அறிவீர்கள். பிராமணர்களாகிய நாங்களே அனைத்திலும் அதிமேலான தர்மத்தைக் கொண்டிருக்கின்றோம். நீங்கள் அவர்களுக்கு நிச்சயமாகப் படங்களைக் காண்பிக்க வேண்டும்; படங்கள் இல்லாவிடின், எதுவுமே அவர்களது புத்தியில் இருக்காது. மிகவும் பெரிய படங்கள் இருக்க வேண்டும். பல்வேறு சமயங்களைக் கொண்ட விருட்சம் எவ்வாறு வளர்கின்றது என்பதும் உங்களுக்கு விளங்கப்படுத்தப்பட்டுள்ளது. முன்னர், ஒவ்வோர் ஆத்மாவும் பரமாத்மா எனவும், பரமாத்மாவே ஆத்மா எனவும் அவர்கள் கூறுவதுண்டு. அதன் அர்த்தத்தையும் தந்தை இப்பொழுது உங்களுக்குக் கூறியுள்ளார். இந்நேரத்தில் நீங்கள் பிராமணர்;கள், பின்னர் புதிய உலகில் நீங்கள் தேவர்கள் ஆகுவீர்கள். இப்பொழுது நாங்கள் அதிமங்களகரமான சங்கமயுகத்தில் இருக்கின்றோம். அதாவது, இது அதிமேன்மையான மனிதர்களாகுவதற்கான சங்கமயுகமாகும். படைப்பவர், படைப்பு என்பதன் அர்த்தத்தையும், ஹம்ஸோ என்பதன் அர்த்தத்தையும் நீங்கள் விளங்கப்படுத்தலாம். ஓம் என்றால், முதலில் நான் ஓர் ஆத்மா, பின்னர் சரீரம் உள்ளது. ஆத்மா அழிவற்றது, இச்சரீரமோ அழியக்கூடியது. நாங்கள் இச்சரீரங்களை எடுத்து, எங்களது பாகங்களை நடிக்கின்றோம். இதுவே ஆத்ம உணர்வில் இருத்தல் எனப்படுகின்றது. ஆத்மாவாகிய நான் இன்ன இன்ன பாகத்தை நடிக்கின்றேன். ஆத்மாவாகிய நான் இதனைச் செய்கின்றேன். ஆத்மாவாகிய நான் பரமாத்மாவின் குழந்தையாவேன். இந்த ஞானம் மிக அற்புதமானது. தந்தை மாத்திரமே இந்த ஞானத்தைக் கொண்டிருக்கின்றார். இதனாலேயே நீங்கள் தந்தையைக் கூவியழைத்தீர்கள். தந்தையே ஞானக்கடல். அதனுடன் ஒப்பிடும்பொழுது, அறியாமைக் கடலும் இருக்கின்றது. அரைக்கல்பத்திற்கு ஞானமும், அரைக்கல்பத்திற்கு அறியாமையும் இருக்கின்றது. எவருமே ஞானத்தை அறியார். ஞானம் என்றால், படைப்பவர் மூலம் படைப்பை அறிந்துகொள்வதாகும். எனவே, நிச்சயமாகப் படைப்பவர் இந்த ஞானத்தைக் கொண்டிருப்பார். அதனாலேயே அவர் படைப்பவர் எனப்படுகின்றார். படைப்பவரே இப்படைப்புக்களைப் படைத்தார் என மக்கள் நினைக்கின்றனர். தந்தை விளங்கப்படுத்துகின்றார்: இந்நாடகம் அநாதியாக நிச்சயிக்கப்பட்டது. அவர்கள் கூறுகின்றனர்: ஓ தூய்மையாக்குபவரே, வாருங்கள்! எனவே, அவர் எவ்வாறு படைப்பவர் என அழைக்கப்பட முடியும்? பிரளயத்தின் பின்னர் அவர் படைப்பை நிகழ்த்தியிருந்தாலே அவர் படைப்பவர் என அழைக்கப்பட முடியும். தந்தை தூய்மையற்ற உலகைத் தூய்மையாக்குகின்றார். இனிமையிலும் இனிமையான குழந்தைகளாகிய நீங்கள் மாத்திரமே உலக விருட்சத்தின் ஆரம்பம், மத்தி, இறுதி பற்றி அறிவீர்கள். எவ்வாறு ஒரு தோட்டக்காரர் ஒவ்வொரு விதையையும், விருட்சத்தையும் பற்றி அறிந்திருப்பதுடன், அந்த விதையைப் பார்க்கும்பொழுது, முழு விருட்சமும் அவரது புத்தியில் புகுந்துவிடுகின்றதோ, அதேபோன்று இவரும் மனித குலத்தின் விதையேயாவார். எவரும் அவரை அறியமாட்டார்கள். கூறப்படுகின்றது: பரமாத்மாவாகிய பரமதந்தையே உலகின் விதையாவார். அவரே சத்தியமானவரும், உயிருள்ளவரும், பேரானந்த சொரூபமும், சந்தோஷக்கடலும், அமைதிக்கடலும், தூய்மைக் கடலும் ஆவார். பரமாத்மாவான பரமதந்தை, இச்சரீரத்தின் மூலம் உங்கள் அனைவருக்கும் இந்த ஞானத்தைக் கொடுக்கின்றார் என்பதனை நீங்கள் அறிவீர்கள். எனவே, அவர் நிச்சயமாக இங்கே வந்தாக வேண்டும். எவ்வாறு அவர் தூண்டுதல் மூலமாகத் தூய்மையற்றவர்களைத் தூய்மையாக்க முடியும்? எனவே, தந்தை இங்கு வந்து, அனைவரையும் தூய்மையாக்கி, அவர்களைத் திரும்பவும் வீட்டிற்கு அழைத்துச் செல்கின்றார். அத்தந்தையே இப்பாடத்தை உங்களுக்குக் கற்பிக்கின்றார். இது அதிமங்களகரமான சங்கமயுகம். எவ்வாறு ஒரு மனிதன் மேன்மையானவராகவும், தமோபிரதானிலிருந்து சதோபிரதானாகவும் ஆகலாம் என்பது பற்றி நீங்கள் ஒரு சொற்பொழிவு ஆற்றலாம். உங்களிடம் பல தலைப்புக்கள் இருக்கின்றன. தூய்மையற்றதும், தமோபிரதானுமாகிய இவ்வுலகம் எவ்வாறு சதோபிரதான் ஆகுகின்றது என்பதைப் புரிந்துகொள்வது பயனுள்ளதாகும். நீங்கள் மேலும் முன்னேறும்பொழுது, மக்கள் உங்களது இந்த ஞானத்தைச் செவிமடுப்பார்கள். அவர்கள் இதனை விட்டு விலகிச் சென்றாலும்கூட மீண்டும் திரும்பிவருவார்கள். ஏனெனில், முக்திக்கும், சற்கதிக்குமாக ஒரேயொரு கடை மாத்திரமே உள்ளது. ஒரேயொரு தந்தையே அனைவருக்கும் சற்கதியை அருள்பவர் என நீங்கள் கூறலாம். அவர் ஸ்ரீ ஸ்ரீ என அழைக்கப்படுகின்றார். பரமாத்மாவான பரமதந்தையே அனைவரிலும் அதி மேன்மையானவர். அவர் எங்களை மேன்மையானவர்களாக்குகின்றார். சத்தியயுகம் மேன்மையானது, கலியுகம் சீரழிந்தது. பெருமளவு சீர்கேடுகள் இருப்பதாக அவர்கள் கூறுகின்றபொழுதிலும், தாங்களும் அத்தகையவர்களே என அவர்கள் கருதுவதில்லை. தூய்மையற்ற உலகில் மேன்மையானவர் ஒருவர்கூட இல்லை. ஸ்ரீ ஸ்ரீ வரும்பொழுதே, அவரால் உங்களை ஸ்ரீ ஆக்க முடியும். சத்தியயுகத்தின் ஆரம்பத்தில் தேவர்கள் ஸ்ரீ என்ற பட்டத்தைக் கொண்டிருந்தனர். இங்கே அவர்கள் அனைவரையும் ஸ்ரீஸ்ரீ என அழைக்கின்றனர். உண்மையில், ஸ்ரீ என்பது தூய்மையைக் குறிக்கும் வார்த்தையாகும். ஏனைய சமயத்தவர்கள் தங்களை ஸ்ரீ என அழைப்பதில்லை. ஸ்ரீ பாப்பரசர் என நீங்கள் கூறுவீர்களா? இங்கே அவர்கள் அனைவரையும் ஸ்ரீ என அழைக்கின்றனர். முத்துக்களையே எடுக்கின்ற அன்னங்களுக்கும், குப்பைகளை உண்கின்ற நாரைகளுக்கும் இடையில் பெருமளவு வேறுபாடு உள்ளது. ஒரு வேறுபாடு காணப்படுகின்றது. அத்தேவர்கள் மலர்கள். அது அல்லாவின் தோட்டம். தந்தை உங்களை மலர்களாக்குகின்றார். பல்வேறு வகையான மலர்கள் உள்ளன. அதிசிறந்த மலர் இராஜமலர் (மiபெ கடழறநச) ஆகும். இலக்ஷ்மியும், நாராயணனும் புதிய உலகின் இராஜா, இராணி மலர்கள் என அழைக்கப்படுகின்றனர். குழந்தைகளாகிய நீங்கள் அகத்தில் சந்தோஷத்தைக் கொண்டிருக்க வேண்டும். இங்கே நீங்கள் வெளிப்படையாக எதனையும் செய்யத் தேவையில்லை. இவ்விளக்குகளை ஏற்றுவதற்கு ஓர் அர்த்தம் இருக்க வேண்டும். நீங்கள் சிவஜெயந்தியன்றா அல்லது தீபாவளியன்றா அவற்றை ஏற்ற வேண்டும்? கள்ளங்கபடமற்ற பொக்கிஷதாரியான சிவனே உங்கள் பொக்கிஷக் களஞ்சியத்தை நிரப்புபவராக இருக்கின்றபொழுதிலும், மக்கள் தீபாவளியன்று இலக்ஷ்மியை வரவழைத்துச் செல்வத்தை வேண்டுகின்றார்கள். உங்களது முடிவற்ற பொக்கிஷக் களஞ்சியம் சிவபாபாவினால் நிரப்பப்படுகின்றது என்பதை நீங்கள் அறிவீர்கள். இந்த ஞான இரத்தினங்களே செல்வமாகும். அங்கும் உங்களிடம் பெருமளவு செல்வம் உள்ளது. நீங்கள் புதிய உலகில் வளமுடையவர்களாக ஆகுவீர்கள். சத்தியயுகத்தில் பெருமளவு இரத்தினங்களும், வைரங்களும் உள்ளன. பின்னர், மீண்டும் அவையே இருக்கும். அனைத்தும் முடிவடைந்த பின்னர், அவை பெருமளவில் எங்கிருந்து வருகின்றன என மக்கள் குழப்பமடைந்து அதிசயிக்கின்றார்கள். சுரங்கங்கள் வெறுமையாகிவிடும், மலைகள் வீழ்ந்துவிடும், எனவே, அவை மீண்டும் எவ்வாறு அப்படியாகும்? அவர்களிடம் கூறுங்கள்: வரலாறு மீண்டும் மீண்டும் நிகழும். முன்னர் நிகழ்ந்தவை மீண்டும் நிகழும்;. குழந்தைகளாகிய நீங்கள் சுவர்க்கத்தின் அதிபதிகளாகுவதற்கு முயற்சி செய்கின்றீர்கள். சுவர்க்கத்தின் வரலாறும், புவியியலும் மீண்டும் இடம்பெறும். பாடலில் கூறப்படுகின்றது: நீங்கள் முழு உலகம், பூமி கடல், ஆகாயம் அனைத்தையுமே எங்களுக்குக் கொடுத்து விட்டீர்கள், எவராலுமே அவற்றை எங்களிடமிருந்து அபகரிக்க முடியாது. ஒப்பீட்டளவில் இப்பொழுது என்னதான் இருக்கின்றது? மக்கள் நிலம், நீர், மொழி போன்றவற்றிற்காகத் தொடர்ந்தும் சண்டையிடுகின்றார்கள். சுவர்க்கத்தைப் படைப்பவராகிய பாபாவின் பிறந்ததினம் கொண்டாடப்படுகின்றது. அவரே நிச்சயமாகச் சுவர்க்க இராச்சியத்தை உங்களுக்குக் கொடுத்திருக்க வேண்டும். தந்தை இப்பொழுது உங்களுக்குக் கற்பிக்கின்றார். நீங்கள் இச்சரீரத்தின் பெயரிலும், வடிவத்திலும் இருந்து விடுபட்டு, உங்களை ஆத்மாக்களாகக் கருத வேண்டும். நீங்கள் யோக சக்தி மூலம் அல்லது தண்டனை மூலம் தூய்மையாக வேண்டும். அவ்வாறாயின் (தண்டனை) அந்தஸ்து குறைக்கப்படும். தாங்கள் எத்தகைய அந்தஸ்தைப் பெறுவோம் என்பதும், தங்களது ஆசிரியர் தங்களுக்கு எந்தளவு கற்பித்தார் என்பதும் மாணவர்களின் புத்தியில் உள்ளது. அவர்கள் தங்களது ஆசிரியருக்கு ஒரு பரிசைக்கூடக் கொடுக்கின்றார்கள். இங்கு, தந்தை உங்களை உலகின் அதிபதிகளாக்குகின்றார். எனவே, நீங்கள் தொடர்ந்தும் பக்தி மார்க்கத்திலும் அவரை நினைவுசெய்கின்றீர்கள். எவ்வாறாயினும், தந்தைக்கு நீங்கள் என்ன பரிசைக் கொடுப்பீர்கள்? நீங்கள் இங்கே பார்ப்பவை எதுவும் எஞ்சியிருக்க மாட்டாது. இது அழுக்கான, பழைய உலகம். இதனாலேயே நீங்கள் என்னைக் கூவியழைத்தீர்கள். தந்தை உங்களைத் தூய்மையற்றவர்களிலிருந்து தூய்மையாக்குகின்றார். நீங்கள் இந்நாடகத்தை நினைவுசெய்ய வேண்டும். நான் உங்களுக்குக் கூறுகின்ற, படைப்பின் ஆரம்பம், மத்தி, இறுதி பற்றிய ஞானத்தை நான் கொண்டிருக்கின்றேன். நீங்கள் அவற்றைச் செவிமடுத்து, பின்னர் மறந்துவிடுகின்றீர்கள். சக்கரம் 5000 வருடங்களுக்குப் பின்னர் முடிவடையும். உங்கள் பாகங்கள் மிக இனிமையானவை. நீங்கள் சதோபிரதானாகவும், அழகானவர்களாகவும் ஆகுகின்றீர்கள். பின்னர், நீங்களே தமோபிரதானாகவும் ஆகுபவர்கள். ஓ பாபா வாருங்கள்! என நீங்களே கூவியழைக்கின்றீர்கள். நான் இப்பொழுது வந்துவிட்டேன். உங்களுக்கு நம்பிக்கை இருந்தால், ஸ்ரீமத்தைப் பின்பற்ற வேண்டும். நீங்கள் எத்தவறுகளையும் செய்யக்கூடாது. சில குழந்தைகள் கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டதும் கற்பதை நிறுத்தி விடுகின்றார்கள். நீங்கள் ஸ்ரீமத்தைப் பின்பற்றாமலும், கற்காமலும் இருப்பீர்களாயின் தோல்வி அடைகிறீர்கள். தந்தை கூறுகின்றார்: உங்கள் மீது கருணை கொள்ளுங்கள். நீங்கள் ஒவ்வொருவரும் கற்று, இராச்சியத் திலகத்தை உங்களுக்கு வழங்கவேண்டும். உங்களுக்குக் கற்பிக்க வேண்டிய கடமை தந்தைக்கு உள்ளது. இதில் ஆசீர்வாதங்கள் என்ற கேள்விக்கே இடமில்லை. அப்படியாயின், அவர் அனைவருக்கும் ஆசீர்வாதங்களைக் கொடுத்தாக வேண்டும். பக்தி மார்க்கத்திலேயே அவர்கள் கருணை போன்றவற்றை வேண்டுகின்றார்கள். அது இங்கே பொருந்தாது. அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு தந்தை தாயாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. வீட்டில் உங்கள் குடும்பத்துடன் வாழும்பொழுதே உங்கள் மத்தியில் ஓர் ஓட்டப் பந்தயத்தை நிகழ்த்துங்கள். எவ்வாறாயினும், ஏதோ ஒரு காரணத்தால் ஒரு சக்கரம் பின்தங்கினால், அந்த ஒன்றிற்காக நீங்கள் நின்றுவிடக்கூடாது. சுய இராச்சியத் திலகத்தை உங்களுக்கு அளிப்பதற்குத் தகுதியானவராக ஆகுங்கள்.

2. பெருமளவு கோலாகலத்துடன் சிவஜெயந்தியைக் கொண்டாடுங்கள். ஏனெனில், சிவபாபா இப்பொழுது உங்களுக்குக் கொடுக்கின்ற ஞான இரத்தினங்கள் மூலமே நீங்கள் புதிய உலகில் வளமுடையவர்கள் ஆகுவீர்கள். உங்கள் பொக்கிஷக் களஞ்சியங்கள் அனைத்தும் நிரம்பும்.

ஆசீர்வாதம்:
நீங்கள் தூண்டுதலிலிருந்து விடுபட்டு, சடப்பொருளின் சௌகரியங்களின் கவர்ச்சிக்கு அப்பால் இருந்து, சடப்பொருளை வென்றவர்கள் ஆகுவீர்களாக.

உங்கள் பௌதீகப் புலன்களைச் சடப்பொருளின் சௌகரியங்கள் எதுவும் தொந்தரவு செய்தால், அதாவது, உங்களைக் கவர்கின்ற உணர்வுகள் எதுவும் ஏற்பட்டால், உங்களால் பற்றற்றவராக முடியாது. கவர்ச்சியின் ஒரு ரூபமே ஆசைகள் ஆகும். தங்களுக்கு ஆசைகள் (இச்சா) எதுவும் இல்லை எனவும், ஆனால் ஏதாவது நன்றாக (அச்சா) இருக்க வேண்டும் என்றும் சிலர் கூறுகின்றார்கள். இதுவும் சூட்சுமக் கவர்ச்சி ஆகும். அந்தத் தற்காலிகச் சந்தோஷத்திற்குரிய வழியான பௌதீகச் சௌகரியமானது உங்களைக் கவர்கின்றதா என்பதைச் சூட்சுமமான முறையில் சோதியுங்கள். அந்தப் பௌதீகச் சௌகரியங்களும் சடப்பொருளின் வசதிகளே, நீங்கள் அதன் கவர்ச்சியிலிருந்து விடுபட்டு, பற்றற்றவராகும்பொழுதே, சடப்பொருளை வென்றவர்கள் ஆகுவீர்கள்.

சுலோகம்:
எனது, எனது எனும் குழப்பத்தை ஒருபுறம் ஒதுக்கி, எல்லையற்றதில் இருங்கள், அப்பொழுது நீங்கள் உலக உபகாரி எனக் கூறப்படுவீர்கள்.