06.02.21        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்:
இனிய குழந்தைகளே, நீங்களே மகாவீரர்கள். (தைரியசாலிகள்) மாயையின் புயலைக் கண்டு நீங்கள் பயப்படக் கூடாது. நீங்கள் நிச்சயமாகத் தூய்மை ஆக வேண்டும். வேறு எவரிலும் அல்லாது, ஒரே ஒரு தந்தையில் மாத்திரமே அக்கறை கொண்டிருங்கள்.

கேள்வி:
உயர்ந்ததோர் அந்தஸ்தை அடைவதற்கு, குழந்தைகளாகிய நீங்கள் சதா கொண்டிருக்க வேண்டிய துணிவு யாது?

பதில்:
ஸ்ரீமத்தைப் பின்பற்றி, தூய்மையடைவதற்குத் துணிவு வேண்டும். எவ்வளவு குழப்பங்கள் நிறைந்திருந்தாலும், நீங்கள் எவ்வளவு சகித்துக் கொள்ள வேண்டி இருந்தாலும், தூய்மை அடைவதற்காக, உங்களுக்குத் தந்தையால் கொடுக்கப்பட்டிருக்கும் மேன்மையான வழிகாட்டலை நீங்கள் பின்பற்றும்போது, உங்களால் உயர்ந்ததோர் அந்தஸ்தை அடைய முடியும். நீங்கள் எதற்கும் பயப்படக் கூடாது. எது நடந்தாலும், அவை எதுவுமே புதியவை அல்ல.

பாடல்:
அப்பாவிப் பிரபுவைப் போன்று தனித்துவமானவர் எவருமில்லை

ஓம் சாந்தி.
இப்பாடல் பக்தி மார்க்கத்தில் உள்ளவர்களால் இயற்றப்பட்டுள்ளது. உங்களது எல்லையற்ற ஆஸ்தியை நீங்கள் தந்தையிடம் இருந்து பெறுவீர்கள் என்று நினைவு கூரப்பட்டுள்ளதால் ஞானமார்க்கத்தில் பாடல்களுக்கான அவசியம் இல்லை. இதில் பக்திமார்க்கத்தின் சம்பிரதாயங்கள் எதுவும் உள்ளடக்கப்படவில்லை. ஞானத்தை விளங்கப்படுத்துவதற்காகக் குழந்தைகள் கவிதைகள் போன்றவற்றை எழுதுகிறார்கள் நீங்கள் விளங்கப்படுத்தாத வரை எவராலுமே புரிந்து கொள்ள இயலாது. இப்போது குழந்தைகளாகிய நீங்கள் தந்தையைக் கண்டு கொண்டுள்ளீர்கள். அதனாலேயே உங்கள் சந்தோஷத்தின் பாதரசம் உங்களுக்குள் அதிகரித்தல் வேண்டும். 84 பிறவிச் சக்கரத்தின் ஞானத்தைத் தந்தை உங்களுக்குக் கூறியுள்ளார். சுயதரிசன சக்கரத்தைச் சுழற்றுபவர்கள் ஆக நீங்கள் இப்போது ஆகி இருக்கின்றீர்கள் என்ற சந்தோஷம் உங்களிடம் இருத்தல் வேண்டும். உங்களது ஆஸ்தியான விஷ்ணு தேசத்தை நீங்கள் தந்தையிடம் இருந்து பெறுகிறீர்கள். புத்தியில் நம்பிக்கை உடையவர்களே வென்றவர்கள் ஆகுகின்றார்கள். நம்பிக்கை உடையவர்கள் நிச்சயமாக சுவர்க்கத்துக்குச் செல்வார்கள். ஆகையாலே உங்களுக்கு சதா சந்தோஷம் இருத்தல் வேண்டும். தந்தையை பின்பற்றுங்கள். குழந்தைகளே, அசரீரியான சிவபாபா இவருக்குள் பிரவேசித்த நேரத்தில் இருந்து, பெருமளவு பிரச்சனைகள் இருந்துள்ளன என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் புரிந்து கொள்கின்றீர்கள். தூய்மைக்காகப் பல சண்டைகள் நடந்திருக்கின்றன. குழந்தைகள் வளர்ந்ததுமே அவர்கள் திருமணத்திற்குள் தள்ளப்படுகிறார்கள். அவர்களுக்குத் திருமணம் நடக்காவி;ட்டால் எதனையுமே தொடர முடியாது என மக்கள் நினைக்கிறார்கள். மக்கள் கீதையை கற்றாலும் கூட, அதில் இருந்து அவர்கள் எதையும் புரிந்து கொள்வதில்லை. பாபாவே அதனை அதிகம் கற்றார். ஒருநாள் கூடத் தவறாமல் அவர் கீதையைக் கற்பது வழக்கம். கீதையின் கடவுள் சிவன் என அறிந்ததும், தான் உலக அதிபதி ஆகப்போவதையிட்டு அவர் போதை உடையவர் ஆகினார். இதையே கடவுள் சிவனின் வாசகங்கள் ஆகும். பின்னர் தூய்மைக்காக பிரச்சனைகள் இருந்தன. இதற்கு உங்களுக்கு அதிக அளவு துணிவு வேண்டும். நீங்களே மகா வீரர்கள். ஒரே ஒருவரைப் பற்றி அல்லாது வேறு எவரைப் பற்றிய அக்கறையும் உங்களுக்கு இல்லை. மனிதனே படைப்பவராவார். படைப்பவர் தூய்மையானவர் ஆகும்போது அவர் படைக்கின்ற படைப்பும் தூய்மையானதாகவே இருக்கும். இவ்விடயத்தினால் பல சண்டைகள் நடைபெற்றன. வசதியான வீடுகளிலும் குடும்பங்களில் இருந்தும் பலர் வந்தார்கள். அவர்கள் வேறு எவரைப் பற்றியும் அக்கறைப் படவில்லை. இது மக்களின் பாக்கியத்தில் இல்லாது இருந்தால் அவர்களால் எவ்வாறு இதைப் புரிந்து கொள்ள முடியும்? 'நீங்கள் தூய்மையாக இருக்க வேண்டுமானால், தூய்மையைக் கடைப்பிடியுங்கள்! இல்லையெனில் நீங்களே உங்கள் சொந்த ஏற்பாட்டைச் செய்து கொள்ளுங்கள்! துணிவு அந்தளவிற்குத் தேவையாகும். பாபா பல குழப்பங்களுக்கு முகம் கொடுக்க வேண்டியிருந்தது. எனினும், என்றாவது, அவற்றினால் பாபா பல குழப்பம் அடைந்ததைக் கண்டிருக்கிறீர்களா? இவற்றின் செய்திகள் அமெரிக்க பத்திரிகைகளில் கூட வெளிவந்தன. இவை எதுவுமே புதியனவல்ல! முன்னைய கல்பத்தில் நடந்தவை போலவே தொடர்ந்தும் நடக்கும். இதில் பயப்படுவதற்கு எதுவுமே இல்லை. தந்தையிடமிருந்து எனது ஆஸ்தியை நான் பெற வேண்டும். எனது படைப்பை நான் பாதுகாக்க வேண்டும். இந்நேரத்தில் முழுப் படைப்புமே தூய்மையற்றதாகவே உள்ளது என்பதை தந்தை அறிவார். நான் மாத்திரமே, அனைவரையும், தூய்மை ஆக்குதல் வேண்டும். அனைவரும் தந்தையிடம் கூறுகிறார்கள்: ஓ! தூய்மையாக்குபவரே, முக்தி அளிப்பவரே,! வாருங்கள்! ஆகையால் அவருக்கு உங்கள்; மீது கருணை உள்ளது. அவர் கருணை உடையவர் அல்லவா? தந்தை விளங்கப்படுத்துகிறார்: குழந்தைகளே, எதனைப் பற்றியும் பயப்படாதீர்கள்! பயப்படுவதன் மூலம் உங்களால் உயர்ந்ததோர் அந்தஸ்தை அடைய முடியாது. தாய்மார்கள் துன்புறுத்தப்பட்டார்கள். திரௌபதி துகில் உரியப்பட்டார் என்றும் நினைவு கூரப்பட்டுள்ளது. 21 பிறவிகளுக்கு துகில் உரியப்படுவதில் இருந்து தந்தை உங்களைப் பாதுகாக்கின்றார். உலகம் இவற்றைப் புரிந்து கொள்ளமாட்டாது. இவ்வுலகம் தூய்மையற்று தமோபிரதான் ஆகி, பழையதாக வேண்டும். அனைத்துமே நிச்சயமாக புதியதில் இருந்து பழையதாக வேண்டும். உங்களது பழைய வீட்டை நீங்கள் விட்டுச் செல்ல வேண்டும். புதிய உலகம் சத்தி;ய யுகத்திலும் பழைய உலகம் கலியுகத்திலும் உள்ளது. எக்காலத்திற்கும் அது புதியதாக இருக்க முடியாது. இது உலகச் சக்கரம் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் புரிந்து கொண்டிருக்கிறீர்கள். தேவ இராச்சியம் மீண்டும் ஒரு முறை ஸ்தாபிக்கப்படுகிறது. தந்தை கூறுகிறார்: கீதையின் ஞானத்தை மீண்டும் ஒருமுறை நான் உங்களுக்குக் கூறுகின்றேன். இங்கு இராவண இராச்சியத்தில் துன்பமே இருக்கிறது. இராம இராச்சியம் எது என்பதை எவருமே புரி;ந்துகொள்வதில்லை. தந்தை கூறுகிறார்: நான் இராம இராச்சியமான சுவர்க்கத்தை ஸ்தாபிக்கவே வருகின்றேன். இராச்சியத்தைக் குழந்தைகளாகிய நீங்கள் பல தடவைகள் பெற்றும் பல தடவைகள் அதை இழந்தும் இருக்கின்றீர்கள். 21 பிறவிகளுக்கு, அதாவது 21 சந்ததிக்கு நீங்கள் சத்தியயுகத்தில் இருப்பது உங்கள் அனைவரின் புத்தியிலும் பதிந்துள்ளது. ஓய்வு காலத்திலேயே, நீங்கள் சரீரத்தை விடுவீர்கள் என்பதே இதன் அர்த்தமாகும். அங்கு அகாலமரணம் என்பது கிடையாது. இப்போது நீங்கள் முக்காலத்தையும் அறிந்தவர்கள் போன்றுள்ளது. சிவபாபா யார் என்பதை இப்போது நீங்கள் அறிவீர்கள். அவர்கள் சிவனுக்குப் பல ஆலயங்கள் கட்டி இருக்கிறார்கள். அவர்கள் தமது வீடுகளில் கூட உருவங்களை வைக்கலாம். எவ்வாறாயினும் பக்திமார்க்கம் நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டுள்ளது. அனைத்தும் புத்தியின் மூலம் புரிந்து கொள்ளப்படல் வேண்டும். கிருஷ்ணரது அல்லது சிவனது உருவத்தையும் கூட அவர்கள் வைக்கலாம். அனைத்தும் ஒன்றுதான்! அவர்களை வழிபடுவதற்காக ஏன் அவர்கள் தொலை தூரத்திற்குச் செல்ல வேண்டும்? அங்கு செல்வதால் கிருஷ்ணரது தேசத்துக்கான ஆஸ்தியை அவர்;கள் பெறுகிறார்களா? பிறவிபிறவியாக நீங்கள் பக்தி செய்திருக்கிறீர்கள் என்பதை நீங்கள் இப்பொழுது புரிந்துள்ளீர்கள். இராவண இராச்சியத்தில் எந்தளவிற்குப் பகட்டு உள்ளதெனப் பாருங்கள்! இதுவே இறுதி நேரத்தின் பகட்டாகும். சத்திய யுகத்தில் இராமர இராச்சியம் இருந்தது. அங்கு விமானங்கள் போன்றவை அனைத்தும் இருந்தன. பின்னர் அனைத்தும் அற்றுப்போய் விட்டன. இந்நேரத்தில் இவ்விடயங்கள் யாவும் இப்போது தோன்றியுள்ளன. அவை யாவற்றையும் பற்றி அவர்கள் இப்போது கற்று, அவற்றின் சமஸ்காரங்களை பின்னர் தம்மோடு எடுத்துச் செல்வார்கள். அவ்விமானங்களை அவர்கள் அங்கு சென்று தயாரிப்பார்கள். இவ்விடயங்களே பின்னர், எதிர்காலத்தில் உங்களுக்குச் சந்தோஷத்தைக் கொடுக்கின்றன. இந்த விஞ்ஞானம் உங்களுக்குப் பிரயோசனமாக இருக்கும். இந்நேரத்தில், இந்த விஞ்ஞானம் துன்பம் தருவனவாகும். ஆனால் சந்தோஷத்தைக் கொடுக்கவே, அங்கு இவையிருக்கும். ஸ்தாபனை இப்போது நிகழ்கிறது. புதிய உலக இராச்சியத்தைத் தந்தை ஸ்தாபிக்கிறார். குழந்தைகளாகிய நீங்கள் தைரியமான மகாவீரர்கள் ஆக வேண்டும். கடவுள் வந்திருக்கிறார் என்பதை உலகில் உள்ள எவருமே புரிந்து கொள்ளவில்லை. தந்தை கூறுகிறார்: உங்கள் குடும்பத்தோடு வாழும் அதேவேளை தாமரை மலர் போன்று தூய்மையாக இருங்கள். இதில் பயப்படுவதற்கான எந்தக் கேள்விக்குமே இடமில்லை. அதிகபட்சம், நீங்கள் அவமதிக்கப்படுவீர்கள். இவரும் கூட பெருமளவு அவமதிக்கப்பட்டார் கிருஷ்ணருமே அவமதிக்கப்பட்டார் எனச் சித்தரிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் கிருஷ்ணர் அவமதிக்கப்பட முடியாதவர். இக் கலியுகத்திலேயே அவர் அவமதிக்கப்படுகிறார். இப்போது நீங்கள் கொண்டிருக்கும் உருவத்தை, ஒரு கல்பத்தின் பின்னரும் கொண்டிருப்பீர்கள். இடையில் மீண்டும் தோன்ற முடியாது. உங்களது முகச்சாயல்கள் பிறவிக்குப் பிறவி தொடர்ந்து மாறிக் கொண்டேயிருக்கும். நாடகம் ஏற்கனவே நிச்சயிக்கப்பட்டுள்ளது. 84 பிறவிகளிலும், எவ்வாறான முகச்சாயல்களை நீங்கள் கொண்டிருந்தீர்களோ அதே முகச்சாயல்களோடு மீண்டும் நீங்கள் பிறப்பெடுப்பீர்கள். அடுத்த பிறவியில் உங்கள் இந்த முகச்சாயல்கள் மாறி விடும் என்றும், அங்கு நீங்கள் இலக்ஷ்மி நாராயணனது முகச்சாயல்களைக் கொண்டிருப்பீர்கள் என்பதையும் நீங்கள் அறிவீர்கள். உங்களது புத்தியில் உள்ள பூட்டு இப்போது திறந்திருக்கிறது. இது புதியதொரு விடயமாகும். தந்தையும் புதியவர் அவர் கூறுகின்ற விடயங்களும் புதியன. அனைவராலும் இவ்விடயங்களை விரைவாகப் புரிந்து கொள்ள முடியாது. அவரவர் பாக்கியத்தில் இருந்தால் மட்டுமே அவர்களால் எதையாவது புரிந்துகொள்ள முடியும். எத்தனை புயல்கள் அடித்தாலும் அவற்றால் அசையாதவர்களே மகாவீரர்கள் ஆவார்கள். இந்நேரத்தில் அந்த ஸ்திதியை நீங்கள் கொண்டிருக்க முடியாது. நீங்கள் நிச்சயமாக அந்த ஸ்திதியைக் கொண்டிருப்பீர்கள்! மகாவீரர்கள் ஒருபோதுமே புயலைக் கண்டு பயப்படமாட்டார்கள். அந்த ஸ்திதியை நீங்கள் இறுதியில் கொண்டிருப்பீர்கள். ஆகையாலேயே நினைவு செய்யப்பட்டிருக்கிறது: அதீந்திரிய சுகத்தைப் பற்றி கோபியர்களைக் கேளுங்கள். குழந்தைகளாகிய உங்களைச் சுவர்;க்கத்திற்குத் தகுதியானவர்கள் ஆக்கவே தந்தை வந்திருக்கின்றார். முன்னைய கல்பத்தைப் போலவே, நரகம் அழிக்கப்பட வேண்டும். சத்திய யுகத்தில் ஒரே ஒரு சமயம் மாத்திரமே உள்ளது. அங்கு அவர்களுக்கு ஒருமைப்பாடு தேவையாகும். அங்கு அவர்களுக்கு ஒரே தர்மம் தேவையாகும். இராம இராச்சியத்தில் இருந்து இராவண இராச்சியம் வேறுபட்டது என்பதை எவருமே புரிந்து கொள்வதில்லை. இப்போது உங்களுக்குத் தந்தையின் மீது உறுதியான நம்பிக்கை இருப்பதால் நீங்கள் ஸ்ரீமத்தை நீங்கள் பின்பற்ற வேண்டும். ஒவ்வொருவரின் நாடித்துடிப்பும் உணரப்பட்டு அவரவருக்கு ஏற்றால் போல் ஆலோசனை கொடுக்கப்படுகிறது. பாபா தனது மகனுக்;குக் கூறினார் நீங்கள் திருமணம் செய்யவேண்டுமானால், திருமணம் செய்து கொள்ளுங்கள்இ உங்களுக்குத் திருமணம் செய்து வைப்பதற்கு, பல உறவினர்களும், நண்பர்களும் இருக்கிறார்கள். யாரோ ஒருவர் (அவருக்கு திருமணம் செய்து வைப்பதற்கு) முன்வந்தனர். ஆகையால், ஒவ்வொருவரது நாடித்துடிப்பும் உணரப்படுகிறது. அவர்கள் வினவுகிறார்கள்: பாபா இதுவே நிலைமை. நான் தூய்மையாக இருக்க விரும்புகிறேன். ஆனால் எனது உறவினர்கள் என்னை வீட்டை விட்டுத் துரத்துகிறார்கள். நான் இப்போது என்ன செய்வது? நீங்கள் தூய்மையாக இருக்க வேண்டும் என வினவுகிறீர்கள். நீங்கள் தூய்மையாக இருக்க முடியாதிருந்தால், சென்று திருமணம் செய்யுங்கள்! உதாரணமாக, நல்லது, ஒருவர் நிச்சயதார்த்தம் செய்யப்பட்டு, நீங்கள் அவளை திருப்திப்படுத்த வேண்டுமானால், அதனால் பரவாயில்லை. ஒரு தம்பதியினர் திருமணம் செய்யும் போது, அம்மணப்பெண்ணிடம், அவளது கணவனே அவளது குரு எனக் கூறப்படுகிறது. நல்லது. உனது கணவனே, உனது குருவும் கடவுளும் என்பதை நீ ஏற்றுக் கொள்வதால், நான் இப்போது உன்னை தூய்மையாக இருக்குமாறு கூறுகிறேன் என நீங்கள் அவளிடம் எழுதிக் கேட்கலாம். இதற்கு அதிகளவு துணிவு தேவையாகும். இலக்கு மிகவும் உயர்ந்தது. இதனால் கிடைக்கின்ற பேறும் மிகவும் உயர்ந்தது. இந்த பேற்றைப் பற்றி ஒருவர் அறியாமல் இருப்பதாலேயே, காமத் தீ ஆரம்பமாகிறது. தந்தை கூறுகிறார்: உங்களுக்கு பெரும் பேறு கிடைக்கிறது! ஆகவே ஒரு பிறவியில் துர்ய்மையாக இருப்பது, பெரியதோர் விடயமா? நானே உனது கணவனும் கடவுளும்! ஆதலால் எனது வழிமுறைப்படி நீ தூய்மையை கடைப்பிடிக்க வேண்டும். பாபா உங்களுக்குப் பல வழிமுறைகளைக் காட்டுகிறார். இதுவே பாரதத்தின் சம்பிரதாயம் ஆகும். கணவனே அவளது கடவுள் என்றும், அவர் கூறுவன யாவற்றையும் அவள் கேட்க வேண்டும் என்றும் பெண்களிடம் கூறுப்படுகிறது. நாரயணனது காலை இலக்ஷ்மி பிடித்து விட்டதால், கணவனது காலை மனைவி பிடித்து விடவேண்டும் என அவர்கள் நம்புகிறார்கள்! எங்கிருந்து இந்தப் பழக்கம் வந்தது.? பக்தி மார்க்கத்தின் உருவங்களில் இருந்தே இவை தோன்றின. அவ்வாறான விடயங்கள் சத்திய யுகத்தில் இருப்பதில்லை. நாராயணனது காலை இலக்ஷ்மி, பிடித்து விடும் அளவிற்து, அவர் எப்போதாவது களைப்படைவாரா? அங்கு களைப்பென்ற கேள்விக்கே இடமில்லை. அது துன்பமான ஒரு விடயமாகும். அங்கு எப்படி துன்பமும் வேதனையும் இருக்க முடியும்? எனவே தான் பாபா நாராயணனது காலை இலக்ஷ்மி, பிடித்து விடுவதாக சித்தரிக்கப்பட்டிருந்ததை, படத்திலிருந்து அகற்றினார். அவர் போதை உடையவராக இருந்தார். அவருக்குக் குழந்தை பருவத்திலிருந்தே விருப்பமின்மை ;இருந்தாலேயே, அவர் அதிகளவு பக்தி செய்தார். பாபா பல வழிமுறைகளை உங்களுக்குக் காட்டுகின்றார். நீங்கள் அனைவரும் ஒரே தந்தையின் குழந்தைகள் என்பதை, நீங்கள் இப்போது புரிந்து கொண்டிருக்கிறீர்கள். எனவே நீங்கள் ஒருவருக்கொருவர் சகோதர சகோதரிகள். உங்களது ஆஸ்தியை நீங்கள் தாதாவிடம் (பாட்டனார்) இருந்து பெறுகிறீர்கள். தூய்மையற்ற உலகிற்கு வாருங்கள் என நீங்கள் தந்தையை அழைக்கிறீர்கள்: ஓ துர்ய்மை ஆக்குபவரே! சீதைகள் அனைவரதும் இராமரே! தந்தையே சத்தியம் என அழைக்கப்படுகிறார். அவரே சத்திய பூமியை ஸ்தாபிக்கிறார். அவர் முழு உலகினதும் ஆரம்பம், மத்தி, இறுதியைப் பற்றிய உண்மையான ஞானத்தை உங்களுக்குக் கொடுக்கின்றார். ஆத்மாக்களாகிய நீங்கள் ஞானக் கடல்கள் ஆகுகின்றீர்கள். இனிய குழந்தைகளே, பாபாவின் ஸ்ரீமத்தைப் பின்பற்றுவதற்கு உங்களுக்கு அதிகளவு தைரியம் தேவையாகும். எல்லையற்ற தந்தை எல்லையற்ற படைப்புக்களைச் சுவர்க்கத்தின் அதிபதிகளாக்குகிறார். ஆகையாலே நீங்கள் முயற்சி செய்து உங்களது முழு ஆஸ்தியையும் பெற்றுக் கொள்ளுங்கள். நீங்கள் அவரிடம் சரணடைய வேண்டும். அவரை உங்களது வாரிசு ஆக்கிக் கொண்டீர்களானால் 21 பிறவிகளுக்கான ஆஸ்தியை அவர் உங்களுக்குக் கொடுப்பார். தந்தை குழந்தைகளிடம் சரணடைகிறார். குழந்தைகள் கூறுகிறார்கள்: பாபா இந்தச் சரீரம், மனம், செல்வம் அனைத்தும் உங்களுக்கே உரியது! தந்தையும் குழந்தையும் நீங்களே. நீங்கள் பாட்டும் பாடுகிறீர்கள். தாயும் நீங்களே, தந்தையும் நீங்களே. அனைத்துப் புகழும் ஒரே ஒருவருக்கே உரியது! அவரே அனைவரது துன்பத்தை அகற்றுபவரும் அனைவருக்கும் சந்தோஷத்தை அருள்பவரும் என அழைக்கப்படுகிறார். சுவர்க்கத்தில் ஜந்து தத்துவங்களும் கூட சந்தோஷத்தைக் கொடுக்கின்றன. கலியுகத்தில் ஜந்து தத்துவங்களும் தமோபிரதானாக இருப்பதால், அவை துன்பத்தைக் கொடுக்கின்றன. அங்கு, சந்தோஷம் மட்டுமே உள்ளது. இந்த நாடகம் ஏற்கனவே நிச்சயிக்கப்பட்டுள்ளது. 5000 வருடங்களுக்கு முன்னர் நடந்த அதே யுத்தமே இதுவாகும் என்பது உங்களுக்குத் தெரியும். சுவர்க்கம் இப்போது ஸ்தாபிக்கப்படுகிறது. கடவுளே உங்களைத் தத்தெடுத்துள்ளார் என்பதையிட்டுக் குழந்தைகளாகிய நீங்கள் சதா சந்தோஷமாக இருக்க வேண்டும்! தந்தை இப்போது உங்களை அலங்கரிக்கிறார். அத்துடன் கற்பிக்கிறார். நல்லது.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டெடுக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தந்தை, தாயாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. சதா தந்தைக்கு சமமானவர்கள் ஆகுவதற்கான தைரியத்தைக் கொண்டிருங்கள். தந்தையிடம் நீங்கள் முற்றாகச் சரணடையுங்கள்.

2. எதனைப் பற்றியும் பயப்படாதீர்கள். நிச்சயமாகத் தூய்மையாகுங்கள்.

ஆசீர்வாதம்:
உங்களது கருணையான, உபகாரமிக்க பார்வையினால் சதா உலகிற்கு சேவை செய்கின்ற உலகை மாற்றுபவர் ஆகுவீர்களாக.

கருணையான, உபகாரமிக்க பார்வையே உலகை மாற்றுபவர்கள் அல்லது உலக சேவையாளர்களின் பிரதான தகுதியாகும். அதனைக் கொண்டே அவர்கள் உலகை சம்பூர்ணமாகவும் சந்தோஷமாகவும் ஆக்குகிறார்கள். எதுவெல்லாம் அடையப்படாதுள்ளதோ அதாவது - ஆன்மிக சந்தோஷமாகிய செல்வம், அமைதி, ஞானம் அத்துடன் சகல சக்திகளும் - அவர்கள் இந்த பேறுகளை வழங்கி, யாசிப்பவர்களை சகல உரிமையுடையவர்கள் ஆக்குகின்றார்கள். அத்தகைய சேவையாளர்கள் தமது ஒவ்வொரு விநாடியையும், வாரத்தையையும், செயலையும், உறவுமுறைகளையும், தொடர்புகளையும் சேவைக்காகவே பயன்படுத்துகின்றார்கள். அவர்கள் பார்ப்பதிலும், நடப்பதிலும், தொடர்பு கொள்வதிலும், உண்பதிலும் சேவை அமிழ்ந்துள்ளது.

சுலோகம்:
மரியாதையையும், கௌரவத்தையும் துறந்து, உங்கள் நேரத்தை தகுதியான முறையில் எல்லையற்ற சேவைக்காக பயன்படுத்துவதால் பிறரை ஈடேற்றுபவர் ஆகுகிறீர்கள்.


மாதேஷ்வரியின் பெறுமதிமிக்க வாசகங்கள்

மற்றவர்களையிட்டு பரோபகாரமாக இருத்தல், இயல்பாகவே உங்களுக்கு நன்மையளிக்கின்றது

கடவுள் பேசுகின்றார்: உச்சளவு நோக்கம் என்னவென்பதை என்னிடமிருந்து நீங்கள் அறிந்து கொள்வதன் மூலம், நீங்கள் அதிமேலான அந்தஸ்தைப் பெறுகிறீர்கள். அதாவது, பிறரையிட்டு பரோபகாரமாக இருப்பதை பற்றி அறிந்து கொள்வதன் மூலம், உங்களுடைய அனைத்தும் வெற்றியடைகின்றது. பாருங்கள், சடப்பொருட்கள் தேவர்களின் முன்னிலையில், அவர்களின் பணியாட்களாக அவர்களின் காலடியில் உள்ளது. இந்த பஞ்சதத்துவங்களும் சந்தோஷத்தின் சொரூபமாகி, உங்கள் மனங்களின் விருப்பங்களுக்கு ஏற்ப, உங்களுக்கு சேவை செய்கின்றன. இந்த நேரத்தில், தமது மனங்கள் ஆசைப்படுகின்ற சந்தோஷத்தை அடைய முடியாததால், மக்கள் துன்பத்தையும் அமைதியின்மையையும் அனுபவம் செய்கின்றார்கள். சத்தியயுகத்தில் இயற்கை அற்புதமாக இருக்கும். தேவர்களின் படங்களில் அவர்கள் எவ்வாறு வைரத்தாலும் இரத்தினங்களாலும் அலங்கரிக்கப்பட்டிருக்கின்றார்கள் என்பதைப் பாருங்கள். எனவே, அவர்கள் உயிருள்ள வடிவத்தில் இருக்கும் போது, அவர்களுக்கு அதிகளவு பொருட் சுகம் இருக்கும்! இந்த நேரத்தில், மக்கள் பட்;டினியில் இருக்கும் போது, இவ் உருவங்களுக்காக மில்லியன் ரூபாய்கள் செலவிடப்படுகின்றன. எனவே, இதற்கிடையில் உள்ள வேறுபாடு என்ன? நிச்சயமாக அவர்கள் அத்தகைய மேன்மையான செயல்களை செய்திருப்பதாலேயே அவர்களுக்கான ஞாபகார்;த்தங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அவர்கள் அந்தளவிற்கு வழிபாடும் செய்யப்பட்டிருக்க வேண்டும்! விகாரமற்ற இல்லறத்தில் வாழ்வதால், அவர்கள் தாமரை போன்றதொரு ஸ்திதியை கொண்டிருந்தார்கள். ஆனால், இப்பொழுது விகாரமற்ற இல்லறத்தில் இருப்பதற்கு பதிலாக, அவர்கள் விகாரமிக்க இல்லற்திற்குள் (முற்றாக விகாரங்கள் நிறைந்த) சென்றுவிட்டார்கள். ஆகையாலேயே, அவர்கள் பிறருக்கு உபகாரம் செய்வதை மறந்து அவர்கள் உலகியல் வியாபாரங்களை செய்வதற்காக சென்று விட்டார்கள். ஆகையாலேயே அதன் விளைவாக, அனைத்தும் பிழைத்து விடுகின்றது. இப்பொழுது, கடவுள் தானே வந்து, உங்களை விகாரமான இல்லறத்திலிருந்து அகற்றி விகாரமற்ற இல்லறத்தைப் பற்றி கற்பிக்கின்றார். அதனூடாக, உங்கள் வாழ்வு எக்காலத்திற்கும் சந்தோஷமானதாக மாறுகின்றது. ஆகையாலேயே முதலில், நீங்கள் மற்றவர்களுக்கு உபகாரம் செய்பவர்களாகி, அவர்களையிட்டு மேன்மையான ஆசிகளை கொண்டிருந்து, அதன் பின்னர் உங்கள் மீதும் கொண்டிருக்க வேண்டும். பிறருக்கு நன்மை செய்வதால், நீங்கள் இயல்பாகவே உங்களுக்கு நன்மை செய்கிறீர்கள். ஓம்சாந்தி.