06.03.19        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்:
இனிய குழந்தைகளே, ஞானக்கடலான தந்தை தட்டு நிறைந்த ஞான இரத்தினங்களை உங்களுக்குக் கொடுக்கின்றார். இந்த இரத்தினங்களினால் உங்கள் புத்தியை நீங்கள் விரும்பியளவிற்கு நிரப்பி, கவலைகள் அனைத்திலிருந்தும் விடுபட்டவர் ஆகுங்கள்.

கேள்வி:
ஞான மார்க்கத்தின் எந்தவொரு விடயத்தைப் பக்தி மார்க்கத்திலுள்ளவர்களும் விரும்புகின்றார்கள்?

பதில்:
சுத்தம். ஞான மார்க்கத்தில் குழந்தைகளாகிய நீங்கள் சுத்தமானவர்கள் ஆகுகின்றீர்கள். தந்தை உங்கள் அழுக்கான ஆடைகளைச் சுத்தமாக்கவே வந்துள்ளார். எனவே, ஆத்மாக்களாகிய நீங்கள் சுத்தமாகினாலே, அதாவது, தூய்மையாகினாலே நீங்கள் பறந்து, வீட்டிற்குத் திரும்பிச் செல்வதற்கான இறக்கைகளை வளர்க்கின்றீர்கள். பக்தி மார்க்கத்திலுள்ளவர்களும் சுத்தமாக இருப்பதை அதிகளவு விரும்புகின்றார்கள். அவர்கள் சுத்தமாகுவதற்காகவே கங்கையில் நீராடச் செல்கின்றார்கள். ஆனால் ஆத்மாக்களைத் தண்ணீரினால் சுத்தமாக்க முடியாது.

ஓம் சாந்தி.
இனிமையிலும் இனிமையான குழந்தைகளே, நீங்கள் நினைவு யாத்திரையை மறந்து விடக்கூடாது. நீங்கள் இதனை அதிகாலை நேரம் பயிற்சி செய்யும்பொழுது, எப்பேச்சும் பயன்படுத்தப்படுவதில்லை. ஏனெனில் இதுவே நிர்வாணா உலகிற்கு நீங்கள் திரும்பிச் செல்வதற்கு உங்களை அழைத்துச் செல்கின்ற வழியாகும். தூய்மையாகாமல் குழந்தைகளாகிய உங்களால் வீட்டிற்குப் பறந்து செல்ல முடியாது. சத்தியயுகம் ஆரம்பமாகவுள்ள வேளையில் எண்ணற்ற ஆத்மாக்கள் பறந்து வீட்டிற்குத் திரும்பிச் செல்வார்கள் என்பதையும் நீங்கள் புரிந்துகொண்டுள்ளீர்கள். இப்பொழுது மில்லியன் கணக்கான ஆத்மாக்கள் உள்ளனர். சத்தியயுகத்தில், சில நூறாயிரம் மக்கள் மாத்திரமே இருப்பார்கள். ஏனைய அனைவரும் வீட்டிற்குப் பறந்து சென்றிருப்பார்கள். நிச்சயமாக எவரோ ஒருவர், ஆத்மாக்களுக்கு இறக்கைகளைக் கொடுத்திருக்க வேண்டும். இந்த நினைவு யாத்திரையில் நிலைத்திருப்பதால், ஆத்மாக்களாகிய நீங்கள் தூய்மையானவர்கள் ஆகுகின்றீர்கள். தூய்மையாகுவதற்கு வேறு வழியேதும் இல்லை. ஒரேயொரு தந்தை மாத்திரமே தூய்மையாக்குபவர். சிலர் ஈஸ்வரன் என்றோ, ஏனையோர் பரமாத்மா என்றோ, இன்னும் சிலர் கடவுள் என்றோ அழைக்கின்றபொழுதிலும், அவர் ஒரேயொருவரே. வெவ்வேறான பலர் இல்லை. அனைவரதும் தந்தை ஒருவரேயாவார். ஒவ்வொருவருக்கும் வெவ்வேறான லௌகீகத் தந்தையர் உள்ளனர். ஆனால் அப்பாற்பட்ட தந்தை அனைவருக்கும் ஒரேயொருவரே. அவர் வரும்பொழுது, அனைவருக்கும் சந்தோஷத்தைக் கொடுத்த பின்னர் மீண்டும் வீட்டிற்குத் திரும்பிச் செல்கின்றார். சந்தோஷ வேளையில் அவரை நினைவுசெய்ய வேண்டிய அவசியம் இல்லை. அப்பொழுது அது கடந்தது ஆகிவிடுகிறது. தந்தை இப்பொழுது கடந்த காலத்தினதும், நிகழ்காலத்தினதும், எதிர்காலத்தினதும் இரகசியங்களை விளங்கப்படுத்துகின்றார். ஒரு மரத்தின் கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலத்தைப் பற்றி புரிந்துகொள்வது மிகவும் இலகுவானது. ஒரு மரம் ஒரு விதையில் ஆரம்பமாகி, தொடர்ந்தும் அதன் இறுதியை அடையும்வரை வளர்வதை நீங்கள் புரிந்துகொள்கின்றீர்கள். அதுவே ஆரம்பம், மத்தி, இறுதி என அறியப்படுகின்றது. இது பல்வேறு சமயங்களையும், பல்வேறு முகச்சாயல்களையும் கொண்ட விருட்சமாகும். ஒவ்வொருவரது முகச்சாயல்களும் வெவ்வேறானவை. வெவ்வேறு தாவரங்களுக்கு ஏற்ப அதன் பூக்களும் வெவ்வேறாக இருப்பதையும் நீங்கள் காண்கின்றீர்கள். ஒரே வகையான பூக்கள் அனைத்தும் ஒரேமாதிரியாக இருந்தபொழுதிலும், மனித உலக விருட்சத்தில் பல்வேறு வகையான முகச்சாயல்கள் உள்ளன. விருட்சத்தில் உள்ள ஒவ்வொருவரும் தத்தமக்கே உரிய தனிப்பட்ட அழகைக் கொண்டிருக்கின்றனர். இவ்விருட்சத்தில் பல்வேறு வகையான அழகு உள்ளது. அதுபோன்றே, தந்தை சியாம் சுந்தர் (அவலட்சணமானவரும் அழகானவரும்) என்பதன் அர்;த்தத்தை விளங்கப்படுத்தியுள்ளார். தேவர்கள் சதோபிரதானிலிருந்து தமோபிரதான் ஆகும்பொழுது, அது இவ்வாறு கூறப்படுகின்றது. நீங்கள் இப்பொழுது அவலட்சணமானவரிலிருந்து அழகானவர் ஆகுகின்றீர்கள். வேறெந்தச் சமயத்தைச் சேர்ந்தவர்களும் இவ்வாறாக அவலட்சணமானவரிலிருந்து அழகானவராக மாறுவதில்லை. அவர்களின் முகச் சாயல்களைப் பாருங்கள். ஜப்பானியர், ஐரோப்பியர், சீனர்கள் போன்றோரின் முகச்சாயல்களைப் பாருங்கள். இந்தியர்களின் முகச்சாயல்கள் மாத்திரமே மாறுபட்டுள்ளன. அவலட்சணமானவரில் இருந்து அழகானவர் ஆகுதல் என்ற புகழ் பாரத மக்களுக்கு மாத்திரமே பொருத்தமானது. வேறு எச்சமயத்தினருக்கும் அல்ல. இந்த விருட்சம் மனித உலகத்திற்குரியது. இது பல்வேறு சமயங்களையும், அவர்கள் அனைவரும் எவ்வாறு வரிசைக்கிரமமாக வருகின்றார்கள் என்பதையும் குறிக்கும் விருட்சமாகும். குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது இந்த ஞானத்தைப் பெறுகின்றீர்கள். வேறெவராலும் இவ்விடயங்களை விளங்கப்படுத்த முடியாது. இந்தச் சக்கரம் 5000 வருட காலத்திற்கு நீடிக்கின்றது. இதனை ஒரு விருட்சம் என்றோ அல்லது ஓர் உலகம் என்றோ அழைக்கலாம். அரைவாசிக் காலத்திற்குப் பக்தி உள்ளது. அது இராவண இராச்சியம் என்று அழைக்கப்படுகின்றது. இதுவே மக்கள் காமச்சிதையில் அமர்ந்து அவலட்சணமானவராகவும், தூய்மையற்றவராகவும் ஆகுகின்ற, ஐந்து விகாரங்களின் இராச்சியம். அசுர சமுதாயமான இராவண சமுதாயத்தினரது செயற்பாட்டிற்கும், தேவர்களின் செயற்பாட்டிற்கும் இடையில் பெருமளவு வேறுபாடு உள்ளது. மக்கள் தம்மைச் சீரழிந்த பாவிகள் என்று கருதி அவர்களின் புகழைப் பாடுகின்றார்கள். பல வகையான மனிதர்கள் உள்ளனர். நீங்கள் அதிகளவு பக்தி செய்துள்ளீர்கள். மறுபிறவிகள் எடுக்கும்பொழுது, நீங்கள் தொடர்ந்தும் வழிபாடும், பக்தியும் செய்து வந்தீர்கள். முதலில் வழிபாடு கலப்படமற்றிருந்தது. நீங்கள் ஒரேயொருவருக்கான பக்தியை ஆரம்பித்தீர்கள். பின்னர் அது கலப்படமாக ஆரம்பித்து, இப்பொழுது, இறுதியில், முற்றிலும் கலப்படமாகி விட்டது. ஆகையால், தந்தை இப்பொழுது வந்து, உங்களுக்கு இக்கலப்படமற்ற ஞானத்தைக் கொடுக்கின்றார். அதன் மூலமே நீங்கள் சற்கதியைப் பெறுகின்றீர்கள். பக்தர்கள் இதனை அறியும்வரை, அவர்கள் தமது பக்தியையிட்டுப் பெருமை கொண்டிருப்பார்கள். ஒரேயொரு பரமாத்மாவே ஞானக்கடல் என்பதை அவர்கள் அறியார்கள். பக்தர்கள் வேதங்களையும் சமயநூல்களையும் நினைவுசெய்து அவற்றைக் கூறிக் கொண்டிருக்கிறார்கள். அவை யாவும் பக்தியின் விரிவாக்கம். பக்தியில் அழகுள்ளது. தந்தை கூறுகின்றார்: அந்த அழகு கானல்நீர் போன்றது. அது மணலும், நீரும் வெள்ளியைப் போல் பிரகாசிப்பதைப் போன்றது. தாகமாக இருந்த மான் ஒன்று, நீர் என்று கருதி அதனை நோக்கி ஓடிய கதையொன்று உள்ளது. ஆனால் அது கானல் நீராகும். அந்த மான் சேற்றிற்குள் சிக்கிக்கொண்டது. பக்தி மார்க்கமும் அவ்வாறானதே. அதில் அனைவரும் சிக்கிக்கொண்டுள்ளனர். அதிலிருந்து அவர்களை அகற்றுவதற்குக் குழந்தைகளாகிய உங்களுக்குப் பெரும் முயற்சி தேவைப்படுகின்றது. தந்தை உங்களைத் தூய்மையானவர்கள் ஆக்குவதால், இதற்குத் தடைகளும் ஏற்படுத்தப்படுகின்றன. திரௌபதியும் துகிலுரியப்படுவதிலிருந்து தன்னைப் பாதுகாக்குமாறு கூவி அழைத்தாள். முழு உலகிலும்; திரௌபதிகளும் துரியோதனர்களும் உள்ளனர். அமரத்துவக் கதையைச் செவிமடுத்துக் கொண்டிருக்கும் உங்கள் அனைவரையும் பார்வதிகள் என்று அழைக்கலாம். தந்தை உங்களுக்கு அமரத்துவக் கதையைக் கூறி, பின்னர் உங்களை அமரத்துவ உலகிற்கு அனுப்புகின்றார். இது அகால மரணம் ஏற்படுகின்ற, மரண உலகம். மக்கள் எங்கேனும் அமர்ந்திருக்கும்பொழுது, அவர்களுக்கு இதயவழுவல் ஏற்படுகின்றது. நீங்கள் வைத்தியசாலைகளுக்குச் சென்று விளங்கப்படுத்த முடியும்;: இங்கே, உங்களுக்கு நோய் ஏற்படுவதால் உங்கள் ஆயுட்காலம் மிகவும் குறுகியதாக உள்ளது. அங்கே எந்த நோயும் இருக்க மாட்டாது. கடவுள் பேசுகின்றார்: உங்களை ஓர் ஆத்மா என்று கருதி, உங்கள் தந்தையான என்னை நினைவுசெய்யுங்கள். ஏனைய அனைவருடனுமுள்ள உங்கள் பற்றை நீங்கள் அகற்றினால் உங்கள் பாவங்கள் அழிக்கப்படும். அப்பொழுது உங்களுக்கு என்றுமே நோய் ஏற்பட மாட்டாது. மரணம் என்றும் உங்களை அணுக மாட்டாது. நீங்கள் நீண்ட ஆயுட்காலத்தையும் கொண்டிருப்பீர்கள். தேவர்களின் ஆயுட்காலம் மிக நீண்டதாக இருந்தது. எனவே, அத்தகைய நீண்ட ஆயுளைக் கொண்டவர்கள் எங்கு சென்றார்கள்? தொடர்ந்தும் மறுபிறவி எடுப்பதால், அவர்களின் ஆயுட்காலம் குறைந்து விட்டது. இன்பமும் துன்பமும் நிறைந்த இந்த நாடகத்தை எவரும் அறியார். அவர்கள் பல விழாக்கள் போன்றவற்றை நடாத்துகின்றார்கள். மிகவும் சிறப்பான விழாவில் (கும்பமேலா) நீராடுவதற்கு எண்ணற்ற மக்கள் ஒன்றுகூடுகின்றார்கள். மக்கள் தினமும் நீராடியபொழுதிலும், அதிலிருந்து அவர்கள் எப் பலனையும் பெறுவதில்லை. நீங்கள் தினமும் நீராடுகின்றீர்கள், கடலிலிருந்தே நீர் எங்கும் செல்கின்றது. கிணற்று நீரே மிகவும் சிறந்தது என்று கூறப்படுகின்றது. இக்காலத்தில் நதிகள் குப்பைகளால் நிறைந்துள்ளன. ஆனால் கிணற்று நீர், இயற்கையாகவே சுத்தமாக உள்ளது. எனவே அந்த நீரில் நீராடுதல் மிகவும் சிறப்பானது. முன்னர் அதுவே வழக்கமாக இருந்தது. ஆனால் இப்பொழுது நதிகளில் நீராடுவதே வழக்கமாக உள்ளது. பக்தி மார்க்கத்தில் உள்ளவர்களும் சுத்தத்தை விரும்புகின்றார்கள். இப்பொழுது, அவர்கள் வந்து தம்மைச் சுத்தப்படுத்துவதற்கு பரமாத்மாவை அழைக்கின்றார்கள். குருநானக் தூய்மையற்ற ஆடைகளைக் கழுவ வாருங்கள் என்று கூறி, பரமாத்மாவை அதிகளவு பிரார்த்தித்தார். தந்தை வந்து தூய்மையற்ற, அழுக்கான ஆடைகளைச் சுத்தப்படுத்துகின்றார். இங்கே, தந்தை வந்து ஆத்மாக்களைச் சுத்தப்படுத்துகின்றார். ஆத்மாக்கள் செயல்களின் தாக்கத்திற்கு உட்படாதவர்கள் என்று அம்மக்;கள் கருதுகின்றார்கள். தந்தை கூறுகிறார்: இது இராவண இராச்சியம். இது முழு உலகினதும் கீழிறங்கும் ஸ்திதியாகும். உங்கள் ஸ்திதி உயர்வடையும்பொழுது, முழு உலகினது ஸ்திதியும் உயர்வடைகின்றது. அனைவரும் சற்கதியைப் பெறுகின்றார்கள். ஓ பாபா! அனைவரும் உங்கள் மூலம் நன்மையை அனுபவம் செய்கின்றார்கள். சத்திய யுகத்தில் உள்ள அனைவருமே நன்மையை அனுபவம் செய்கின்றார்கள். அங்கே, ஒரேயொரு இராச்சியம் மாத்திரமே உள்ளது. ஆகையால் அனைவரும் அமைதியாக உள்ளனர். அந்நேரத்தில், ஏனைய அனைவரும் அமைதி தாமத்தில் உள்ளனர். தற்கணத்தில்;, மக்கள் உலகில் அமைதியை ஏற்படுத்துவதற்குப் பெருமளவு முயற்சி செய்கின்றார்கள். அவர்கள் இப்பொழுது வேண்டுகின்ற அமைதி உலகில் முன்னர் எப்பொழுதாவது இருந்ததா என்று நீங்கள் அவர்களிடம் வினவினால், கலியுகம் முடிவடைவதற்கு இன்னமும் 40,000 வருடங்கள் உள்ளன என்று அவர்கள் பதிலளிக்கின்றார்கள். அவர்கள் அத்தகைய காரிருளில் உள்ளார்கள்! முழுச் சக்கரமுமே 5000 வருடங்களாக உள்ளது. இருப்பினும், கலியுகம் முடிவடைய இன்னமும் 40,000 வருடங்கள் இருப்பதாக அவர்கள் கூறுகின்றார்கள். பல்வேறு அபிப்பிராயங்கள் உள்ளன. தந்தை வந்து உங்களுக்கு உண்மையைக் கூறுகிறார். 84 பிறவிகள் மாத்திரமே உள்ளன. சக்கரம் நூறாயிரம் ஆண்டுகளுக்கு நீடிக்குமாயின், மனிதர்கள், விலங்குகள் போன்றனவாக ஆகிவிடுவார்கள். எவ்வாறாயினும், அது நியதி அல்ல. 84 பிறவிகள் அனைத்தும் மனிதப் பிறவிகளே. தந்தை உங்களுக்குச் சரியான கணக்கைக் கூறுகின்றார். குழந்தைகளாகிய நீங்கள் இந்த ஞானத்தைக் கிரகிக்க வேண்டும். ரிஷிகள், முனிவர்கள் கூறுகிறார்கள்: நேற்றி, நேற்றி. அதாவது, அவரை எங்களுக்குத் தெரியாது. ஆகையால் அவர்கள் நாஸ்திகர்கள். நிச்சயமாக எவரோ ஆஸ்திகர்களாக இருந்திருக்க வேண்டும். தேவர்கள் ஆஸ்திகர்கள் ஆவார்கள். இராவண இராச்சியத்தில் அனைவருமே நாஸ்திகர் ஆவார்கள். இந்த ஞானத்தைக் கற்றுக் கொள்வதனால், நீங்கள் ஆஸ்திகர்கள் ஆகி 21 பிறவிகளுக்கான ஆஸ்தியைப் பெறுகின்றீர்கள். அதன் பின்னர் இந்த ஞானத்திற்கான அவசியம் இருக்காது. இந்நேரமே, நீங்கள் சுவர்க்க அதிபதிகளான, அதியுயர்வான மனிதர்கள் ஆகுகின்ற, மிகவும் மங்களகரமான சங்கமயுக காலம். இங்கே நீங்கள் எவ்வளவு கற்கின்றீர்கள் என்பதற்கேற்பவே, உயர்ந்த அந்தஸ்தைப் பெறுவீPர்கள். இப்பொழுது மிகவும் நன்றாகக் கற்பவர்கள், உலக அதிபதிகள் ஆகுகின்றார்கள். தவறினால் அந்தஸ்து குறைவடைகிறது. எவ்வாறாயினும், அந்த இராச்சியம் சந்தோஷத்திற்கானது. இங்கிருப்பது துன்ப இராச்சியமாகும். இப்பொழுது ஆஸ்திகர்கள் ஆகுபவர்;கள் அந்தச் சந்தோஷ இராச்சியத்தை ஆட்சிசெய்கிறார்;கள். பின்னர், இராவணன் வரும்பொழுது, அவர்கள் மீண்டும் நாஸ்திகர்கள் ஆகி, துன்பத்தை அனுபவம் செய்ய ஆரம்பிக்கின்றார்கள். பாரதம் வளமாக இருந்தபொழுது, அளவற்ற செல்வம் இருந்தது. சோமநாதருக்கு மிகப்பெரிய ஆலயம் கட்டப்பட்டுள்ளது. அந்த நேரத்திலேயே அவர்களிடம் அத்தகைய பெரிய ஆலயத்தைக் கட்டுவதற்கான அந்தளவு பணம் இருந்திருக்குமாயின், அதற்கு முன்னர் அவர்களிடம் இன்னமும் பெரும் செல்வம் இருந்திருக்க வேண்டும். அவர்கள் எங்கிருந்து அந்தச் செல்வம் அனைத்தையும் பெற்றார்கள்;? தட்டு நிறைந்த இரத்தினங்களைக் கடல் கொடுத்ததாகச் சமயநூல்களில் எழுதப்பட்டுள்ளது. ஞானக்கடல் இப்பொழுது உங்களுக்குத் தட்டு நிறைந்த ஞான இரத்தினங்களைக் கொடுக்கின்றார். இப்பொழுது உங்கள் புத்தி நிரப்பப்படுகின்றது. சங்கரரின் முன்னிலையில் சென்று பக்தர்கள், தமது புத்தியை நிரப்புமாறு வேண்டுகிறார்கள். அவர்களுக்குத் தந்தையைத் தெரியாது. தந்தை இப்பொழுது உங்கள் புத்தியை நிரப்புகின்றார் என்பதை நீங்கள் அறிவீர்கள். நீங்கள் ஒவ்வொருவரும் வேண்டிய அளவிற்கு எடுத்துக் கொள்ளலாம். நீங்கள் அதிகமாகக் கற்றால், உயர்ந்த புலமைப்பரிசிலையும் வெல்வீர்கள். நீங்கள் விரும்பினால், மனிதர்கள் அனைவரிலும் உயர்ந்தவர்களாக, இரட்டைக் கிரீடத்தைக் கொண்டவர்களாக ஆகமுடியும். அல்லது, நீங்கள் விரும்பினால் ஏழைப் பிரஜைகளாகவோ, அல்லது பணிப்பெண்களாகவோ, வேலையாட்களாகவோ ஆகவும் முடியும். பாபாவைக் கைவிட்டுச் செல்கின்ற பலரும் உள்ளனர். இதுவும் நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டுள்ளது. தந்தை கூறுகின்றார்: எனக்கு எந்தக் கவலையும் இல்லை. நான் அனைத்துக் கவலைகளிலிருந்தும் விடுபட்டவர் என்பதால், உங்களையும் அவ்வாறு ஆக்குகின்றேன். சற்குருவான பிரபுவுக்கும், அதிபதிக்கும் உரியவர்களுக்குக் கவலையேதும் இல்லை எனக் கூறப்பட்டுள்ளது. அனைவரதும் பிரபுவான தந்தையே அதிபதி என அழைக்கப்படுகின்றார். தந்தை கூறுகின்றார்: நான் உங்கள் எல்லையற்ற ஆசிரியர். பக்தி மார்க்கத்தில் உங்களுக்குப் பல ஆசிரியர்கள் இருந்துள்ளனர். அத்துடன் நீங்கள் பல்வேறு விடயங்களையும் கற்றீர்கள். தந்தை உங்களுக்குக் கற்பிக்கின்ற ஞானம் தனித்துவமானது. அவர் ஞானக்கடல். ஆனால் அவரை ஜனிஜனன்கார் (எல்லா இரகசியங்களையும் அறிந்தவர்) என்று அழைக்கக்கூடாது. எங்களுக்குள் உள்ள அனைத்தையும் நீங்கள் அறிந்தவர் என்று கூறுகின்ற பலரும் உள்ளனர். தந்தை கூறுகின்றார்: எனக்கு எதுவும் தெரியாது. நான் குழந்தைகளாகிய உங்களுக்குக் கற்பிப்பதற்கு மாத்திரமே வருகின்றேன். ஆத்மாக்களாகிய நீங்கள் உங்கள் சிம்மாசனங்களில் அமர்ந்துள்ளீர்கள். நானும் இந்தச் சிம்மாசனத்தில் அமர்ந்துள்ளேன். ஓர் ஆத்மா சின்னஞ்சிறிய புள்ளியாவார். இதனை எவரும் அறியார். இதனாலேயே தந்தை கூறுகின்றார்: முதலில் ஆத்மாவைப் பற்றிப் புரிந்துகொள்ளுங்கள். அப்பொழுதே நீங்கள் தந்தையைப் புரிந்துகொள்வீர்கள். தந்தை முதலில் ஆத்மாக்களைப் பற்றிய ஞானத்தை விளங்கப்படுத்துகின்றார். பின்னர் தந்தையின் அறிமுகத்தைக் கொடுக்கின்றார். பக்தி மார்க்கத்தில் அவர்கள் சாலிகிராம்களை உருவாக்கி, அவற்றை வழிபட்ட பின்னர் அழித்து விடுகின்றார்கள். தந்தை கூறுகின்றார்: அவை யாவும் பொம்மை வழிபாடு. இவ்விடயங்கள் அனைத்தையும் தெளிவாகப் புரிந்துகொண்டிருப்பவர்கள் பிறருக்கும் நன்மை செய்வார்கள். தந்தை உபகாரியாவார். குழந்தைகளாகிய நீங்களும் அவ்வாறு ஆகவேண்டும். ஏனையோரைச் சேற்றிலிருந்து காப்பாற்றுவதற்குச் சென்ற சிலர் தாமே சேற்றில் விழுந்து சிக்கியுள்ளார்கள். அவர்கள் தூய்மையற்றவர்கள் ஆகினார்;கள். அவர்கள் ஈட்டிய வருமானம் முழுவதும் அழிக்கப்பட்டது. இதனாலேயே தந்தை கூறுகின்றார்: மிகவும் எச்சரிக்கையாக இருங்கள். காமச்சிதையில் அமர்ந்ததால், நீங்கள் அவலட்சணம் ஆகிவிட்டீர்கள். நீங்கள் கூறுகின்றீர்கள்: நாங்கள் அழகானவர்களாக இருந்தோம். இப்பொழுது அவலட்சணமானவர்கள் ஆகிவிட்டோம். நாங்கள் தேவர்களாக இருந்தோம், நாங்களே கீழிறங்கியவர்கள். இல்லாவிடின், 84 பிறவிகளை யார் எடுக்கிறார்கள்? தந்தை இக்கணக்கை விளங்கப்படுத்துகிறார். அரைக்கல்பமாக நச்சுக்கடலில் மூழ்கிக் கொண்டிருப்பவர்களை வெளியேற்றுவதற்குக் குழந்தைகளாகிய நீங்கள் பெரும் முயற்சி செய்ய வேண்டும். இது உங்கள் மாமியாரின் வீட்டிற்குச் செல்வதைப் போன்றதல்ல! ஒருவர் சிறிதளவு ஞானத்தைப் பெற்றாலும், அது என்றும் அழியாது. இதுவே சத்திய நாராயணன் ஆகுகின்ற கதையாகும். அத்துடன் பிரஜைகளும் உருவாக்கப்படுகின்றார்கள். சிறிதளவு ஞானத்தைப் பெற்று நீங்கியவர்களும் மேலும் புரிந்துகொள்வதற்காகப் பின்னர் வருவார்கள். காலம் கடந்துசெல்லும்பொழுது, மக்களுக்கு விருப்பமின்மை ஏற்படும். இடுகாட்டிற்குச் செல்லும்பொழுது மக்கள் விருப்பமின்மையைக் கொண்டிருக்கின்றார்கள். எவ்வாறாயினும், அங்கிருந்து வெளியேறியதும் அவர்களின் விருப்பமின்மை முடிவடைந்து விடுகின்றது. நீங்கள் அவர்களுக்கு விளங்கப்படுத்தும்பொழுது, இது மிகவும் நல்லது என்று கூறியபொழுதும் அங்கிருந்து வெளியேறியதும் அனைத்தும் முடிவடைந்து விடுகின்றது. வேலை முடிந்தவுடன் மீண்டும் வருகின்றோம் என அவர்கள் கூறுகின்றார்கள். எவ்வாறாயினும், அவர்கள் வெளியே சென்றவுடன், மாயை அவர்களின் முகத்தைத் திசை திரும்பச் செய்கின்றாள். மில்லியன் கணக்கானோரில் ஒரு கைப்பிடி அளவினரே வெளிப்படுகின்றனர். ஓர் இராஜ அந்தஸ்தைப் பெறுவதற்கு முயற்சி தேவை. உங்கள் இதயத்திடம் நீங்கள் ஒவ்வொருவரும் வினவ வேண்டும்: நான் எல்லையற்ற தந்தையை எந்தளவிற்கு நினைவுசெய்கின்றேன்? தந்தையின் நினைவு மறக்கப்படுகின்றது என நீங்கள் கூறுகின்றீர்கள். ஓ! நீங்கள் அறியாமைப் பாதையைப் பின்பற்றியபொழுது, உங்கள் தந்தையை (லௌகீக) மறந்து விட்டதாக என்றாவது கூறினீர்களா? பாபா கூறுகின்றார்: எவ்வளவு புயல்கள் வந்தாலும், நீங்கள் அசையக்கூடாது. புயல்கள் வரும், எனினும் உங்கள் புலன்களினால், நீங்கள் எத்தவறும் செய்யக்கூடாது. அவர்கள் கூறுகின்றார்கள்; பாபா, மாயை எங்களைத் தன்வசப்படுத்துகின்றாள். பாபா கூறுகின்றார்: இனிமையிலும் இனிமையான குழந்தைகளே, நினைவில் நிலைத்திருந்தால் உங்கள் துரு அகற்றப்படும். நினைவு செய்தல் மூலம் மாத்திரமே ஆத்மாக்களில் சேர்ந்துள்ள துருவானது அகற்றப்பட முடியும். பாபா ஒரு பிந்தி, அதாவது, ஒரு புள்ளி ஆவார். துருவை அகற்றுவதற்குத் தந்தையை நினைவுசெய்வதைத் தவிர வேறு வழியேதும் இல்லை. அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு தந்தையாகவும் தாயாகவும் இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை, ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. நீங்கள் உபகாரியான தந்தையின் குழந்தைகள். எனவே, நீங்கள் உங்களுக்கும், பிறருக்கும் நன்மை செய்ய வேண்டும், நீங்கள் சேமித்;தவை அனைத்தும் முடிவடைந்து விடும் வகையில் எச்செயலையும் செய்யாதிருப்பதில் எச்சரிக்கையாக இருங்கள்.

2. நன்கு கற்று, உங்கள் புத்தியை ஞான இரத்தினங்களால் நிரப்புங்கள். புலமைப் பரிசிலைப் பெறுவதற்கு முயற்சி செய்யுங்கள். தந்தையைப் போன்று, கவலைகள் அனைத்திலிருந்தும் விடுபட்டு, கவலையற்றவராக இருங்கள்.

ஆசீர்வாதம்:
நீங்கள் பிராமண வாழ்வின் சிறப்பியல்பை உங்கள் இயற்கையான சுபாவமாக ஆக்குகின்ற, ஓர் இலகு முயற்சியாளர் ஆவீர்களாக.

பிராமண வாழ்வு விசேடமானது, பிராமண தர்மமும் செயலும் (கர்மம்) விசேடமானது, அதாவது, அவர்களே அதிமேன்மையானவர்கள், ஏனெனில் நீங்கள் பிராமணச் செயல்களைச் செய்வதில், சாகார் தந்தை பிரம்மாவைப் பின்பற்றுகின்றீர்கள். பிராமணர்களின் சுபாவம் ஒரு விசேடமான சுபாவமாகும். சாதாரண அல்லது அசுர சுபாவமானது பிராமணர்களின் சுபாவமல்ல. நான் ஒரு விசேட ஆத்மா என்பதை உங்கள் விழிப்புணர்வில் வைத்திருங்கள். இந்தச் சுபாவம் இயல்பானதாக ஆகும்பொழுது, தந்தைக்குச் சமமானவர் ஆகுவதை நீங்கள் இலகுவானதாக அனுபவம் செய்வீர்கள். நீங்கள் ஒரு நினைவு சொரூபம் ஆகுவதால், ஒரு சக்தி சொரூபம் ஆகுவீர்கள். இதுவே இலகு முயற்சி ஆகும்.

சுலோகம்:
தூய்மையினதும், அமைதியினதும் ஒளியை எங்கும் பரப்புபவர்களே, வெளிச்ச வீடுகள் ஆவர்.