06.05.22        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


இனிய குழந்தைகளே, பிராமணர்களாகிய நீங்கள் கடவுளின் மடியை எடுத்துள்ளீர்கள். இச்சரீரம் மூலமாகத் தந்தை உங்களைத் தனக்குச் சொந்தமானவர்கள் ஆக்கியுள்ளார் என்ற போதை உங்களுக்கு இருக்க வேண்டும்.

கேள்வி:
தந்தையால் செய்யப்படுகின்ற எத்தெய்வீகப் பணியால் அவர் பெருமளவு போற்றப்படுகிறார்?

பதில்:
தூய்மையற்றவர்களைத் தூய்மையாக்குகின்ற பணியினாலும் இராவணனாகிய மாயையின் சங்கிலியிலிருந்து மனிதர்கள் அனைவரையும் விடுதலையாக்கும் பணியினாலுமே அவர் போற்றப்படுகிறார். தந்தை மாத்திரமே இத்தெய்வீகப் பணிகளைச் செய்கிறார். நீங்கள் எல்லையற்ற தந்தையிடமிருந்து எல்லையற்ற சந்தோஷம் எனும் ஆஸ்தியைப் பெறுகிறீர்கள். அது அரைக்கல்பத்திற்கு நீடித்திருக்கும். சத்திய யுகத்திலே பொன்விழாவும் திரேதா யுகத்திலே வெள்ளிவிழாவும் இடம்பெறுகிறது. ஒன்று சதோபிரதான் என்றும், மற்றையது சதோ என்றும் அழைக்கப்பட்டாலும், இரண்டும் சந்தோஷ பூமி என்றே அழைக்கப்படுகின்றன. தந்தையே அத்தகைய சந்தோஷ பூமியை ஸ்தாபிக்கிறார். இதனாலேயே அவரது புகழ் பாடப்படுகின்றது.

பாடல்:
இதுவே கடவுளின் வீடான நீதியின் ஆலயம்

ஓம் சாந்தி.
பாப், தாதா இணைந்து குழந்தைகளுக்கு விளங்கப்படுத்துகிறார்கள். சிலவேளைகளில் தந்தை விளங்கப்படுத்துகிறார். ஏனைய நேரங்களிலே தாதாவும் விளங்கப்படுத்துகிறார். ஏனெனில் இந்தச் சரீரமும் தாதாவின் வீடேயாகும். பரமாத்மாவாகிய பரமதந்தை பரந்தாமத்திலேயே வசிக்கிறார். ஆம், ஏதோ ஒரு நேரம் பாரதம் அவருடைய வீடாக ஆகுவதனாலேயே அவர்கள் சிவராத்திரியைக் கொண்டாடுகிறார்கள். தூய்மையற்றவர்களைத் தூய்மையாக்குவதற்காகவும், இப்பொழுது இது இராவண இராச்சியம் என்பதால் இராவணனாகிய மாயையின் சங்கிலிகளிலிருந்து மனிதர்கள் அனைவரையும் விடுதலை செய்வதற்காகவும் அவர் பாரதத்தில் மாத்திரமே வருகிறார் என்பதை அங்கிருக்கின்ற பல சிவாலயங்கள் நிரூபிக்கின்றன. அவர்கள் பாரதத்தில் மாத்திரமே இராவணனை எரிக்கிறார்கள். சிவனின் பிறந்தநாளும், கிருஷ்ணரின் பிறந்தநாளும் பாரதத்தில் மாத்திரமே கொண்டாடப்படுகின்றன. இராவண இராச்சியம் அரைக்கல்பத்திற்கு நீடிக்கிறது. பின்னர் தந்தை தூய்மையற்றவர்களைத் தூய்மையாக்குவதற்காக வருகிறார். உங்களைத் தூய்மையாக்கிய பின்னர் அவர் மீண்டும் வருவதில்லை. தந்தையின் பெயர் பாரதத்திலேயே பிரபல்யமாக உள்ளது. அவர் ஒரு தெய்வீகப் பணியை மேற்கொண்டிருக்க வேண்டும் என்பதனாலேயே அவருடைய பெயர் நினைவுகூரப்படுகிறது. எந்த ஒரு மனிதனாலும் மனிதனைத் தூய்மையாக்க முடியாது. ஒரேயொரு தந்தையே தூய்மையாக்குபவர் என அழைக்கப்படுகிறார். சுவர்க்கம், நரகம் என்ற பெயர்கள் பாரதத்திற்கு மாத்திரமே கொடுக்கப்படுகின்றன. 5000 ஆண்டுகளுக்கு முன்னர் பாரதம் சுவர்க்கமாக இருந்தது. அது தேவதைகளின் உலகம் என்றும் அழைக்கப்பட்டது. எனவே அது நிச்சயமாகத் தந்தையிடமிருந்து ஓர் ஆஸ்தியைப் பெற்றிருக்க வேண்டும். தந்தை எனும் வார்த்தை மிகவும் இனிமையானது. அவரிடமிருந்து மட்டுமே நீங்கள் எல்லையற்ற சந்தோஷம் என்ற ஆஸ்தியை பெறுகிறீர்கள், அது அரைக்கல்பத்திற்கு நீடிக்கின்றது. அதன் பொன்விழாவும் வெள்ளிவிழாவும் கொண்டாடப்படுகின்றன. சத்தியயுகம் பொன்விழா எனவும், திரேதாயுகம் வெள்ளிவிழா எனவும் அழைக்கப்படுகின்றது. ஒன்று சதோபிரதான் எனவும், மற்றையது சதோ எனவும் அழைக்கப்பட்ட போதிலும் இரண்டுமே சந்தோஷ பூமி என்றே அழைக்கப்படுகின்றன. சூரிய வம்சம் முதற் தரமானது. சந்திர வம்சம் இரண்டாந் தரமானது. தந்தை இந்தப் பாரத பூமிக்கு வரும்போது அவர் அதைத் தூய்மையாக்குகிறார். எவ்வாறாயினும் பக்தி ஆரம்பமாகும்போது கலைகள் குறைவடைய ஆரம்பிக்கின்றன. விருட்சம் உக்கியதாகவும் தமோபிரதானமாகவும் ஆகுகின்றது. அனைவரும் பக்தர்கள்; ஆகுகிறார்கள். சந்நியாசிகள் கடவுளைச் சந்திப்பதற்காக ஆன்மீக முயற்சி செய்கிறார்கள், அதாவது முக்தி தாமத்திற்கும் ஜீவன்முக்தி தாமத்திற்கும் செல்வதற்கான முயற்சியைச் செய்கிறார்கள். நீங்கள் தந்தையைச் சந்திப்பதற்காக அரைக்கல்பமாகப் பக்தி செய்கிறீர்கள். அந்தக் காலம் முடிவடையும் போது தந்தை வந்து பக்தர்களை மகிழ்விக்கிறார். சத்தியயுகத்திலே அமைதி, சந்தோஷம், செழிப்பு அனைத்துமே இருக்கின்றன. அங்கே அகால மரணம் இடம்பெறுவதில்லை. எவரும் என்றுமே அழுவதில்லை. இவை அனைத்தையும் விளங்கப்படுத்துபவர் யார்? எல்லையற்ற தந்தை. அவருக்கு ஒரு பெயர் இருக்க வேண்டும். கலியுகத்திலே இருள் மாத்திரமே இருக்கின்றது. எனவே மக்கள் பக்தி மார்க்கத்திலே சதா அலைந்து திரிகிறார்கள். சுவர்;க்கத்திலே துன்பம் என்ற கேள்விக்கே இடமில்லை. எல்லோரும் சந்தோஷமாக இருப்பார்கள். இதனாலேயே அவர்கள் கடவுளைக் கூவி அழைப்பதில்லை. சத்தியயுகம் சந்தோஷ பூமி எனவும், கலியுகம் துன்ப பூமி எனவும் அழைக்கப்படுகின்றது. சத்திய யுகத்திலே இலக்ஷ்மி நாராயணனின் இராச்சியம் இருந்தது என்பதை வல்லபாச்சாரியர்கள், அதாவது, வைஷ்ணவ மக்கள் புரிந்துகொள்கிறார்கள். ஆட்சி புரிபவர்களும் பிரஜைகளும் சந்தோஷமாகவே இருந்தார்கள். அதுவே சத்தியயுகம் என அழைக்கப்பட்டது. சக்கரத்தில் சத்தியயுகத்திலே வருபவர்களே எண்பத்து நான்கு பிறவிகளை எடுப்பவர்கள் ஆவார்கள். இது ஒரு விருட்சம் என்பது குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்தப்பட்டுள்ளது. இலைகள் அனைத்தும் ஒரே நேரத்தில் தோன்றுவதில்லை. சத்திய யுகத்திலே ஆதி சனாதன தேவ தர்மம் மாத்திரமே இருந்தது. அது இந்து சமயம் என்று அழைக்கப்படுவதில்லை. இந்து சமயம் என ஒரு சமயம் இல்லை. தேவர்களே தெய்வீகக் குணங்கள் அனைத்தும் நிறைந்தவர்களாகவும், பதினாறு கலைகள் நிறைந்தவர்களாகவும்;, தூய்மையானவர்களாகவும், முற்றிலும் விகாரமற்றவர்களாகவும் நினைவுகூரப்படுகிறார்கள். அவர்களே தேவர்களை வழிபடுபவர்கள். எனவே அவர்கள் நிச்சயமாக அந்தச் சமயத்தைச் சேர்ந்தவர்களாகவும் இருக்க வேண்டும். கிறிஸ்தவர்கள் கிறிஸ்துவை நினைவு செய்கிறார்கள். எனவே அவர்கள் அந்தச் சமயத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள். அவ்வாறெனில் பாரத மக்கள் ஏன் தேவ தர்மத்தின் பெயரை மறைத்து விட்டார்கள்? நீங்கள் தேவர்களாக இருந்தீர்கள் என்பதைப் புரிந்து கொள்கிறீர்கள். நீங்கள் பிறந்து மறுபிறவியும் எடுத்தீர்கள். நீங்கள் தேவர்களாகவும் பின்னர் சத்திரியர்களாகவும் ஆகினீர்கள். 84 பிறவிகளை எடுத்த பின்னர் இறுதியாக நீங்கள் சூத்திரர்கள் ஆகினீர்கள். நீங்கள் சூத்திரர்களிலிருந்து பிராமணர்கள் ஆகவேண்டும். பிரம்மாவின் குழந்தைகள் பிராமணர்கள் ஆகுகிறார்கள். உண்மையிலேயே ஆத்மாக்கள் அனைவரும் சிவனின் குழந்தைகளே. அவரே எல்லையற்ற தந்தை ஆவார். அவரே தந்தையாகிய கடவுள் எனவும், பரமாத்மாவாகிய பரமதந்தை எனவும், தந்தையான சுவர்க்கக் கடவுள் எனவும் அழைக்கப்படுகிறார். அவரே சுவர்க்கத்தைப் படைப்பவர். இப்பொழுது குழந்தைகளே, நீங்கள் உங்கள் புத்தியைப் பயன்படுத்த வேண்டும். தந்தை சுவர்க்கத்தை ஸ்தாபிப்பதால், நாங்கள் ஏன் புதிய உலகின் வாரிசுகள் ஆகக்கூடாது? புதிய உலகம் இப்பொழுது பழையதாகிவிட்டது. அது எவ்வாறு மீண்டும் புதியதாக முடியும்? ஒரு புதிய பாரதத்தில் புதிய இராம இராச்சியம் இருக்க வேண்டும் என காந்திஜியும் கூறுவது வழக்கம். இப்பொழுது அது உருவாக்கப்படுகிறது என்பதை நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். பிராமணர்களாகிய நீங்கள் இப்பொழுது கடவுளின் மடியை எடுத்துள்ளீர்கள். நீங்கள் எல்லையற்ற தந்தையை நடைமுறையிலே உங்களுக்குரியவர் ஆக்கிவிட்டீர்கள். எல்லோரும் கூறுகிறார்கள்: ஓ தந்தையான கடவுளே, எங்கள் மீது கருணை காட்டுங்கள்! இந்த நேரத்திலே தந்தை இவர் மூலமாக உங்களைத் தனக்குரியவர்கள் ஆக்குவதற்காக வந்துள்ளார். கலியுக பிராமணர்கள் பாவத்தின் மூலமாகப் பிறக்கிறார்கள். நீங்களோ பிரம்மாவின் வாய்வழித் தோன்றல்கள். பிரம்மா மக்களின் தந்தையாக இருப்பதால் அவர் பல குழந்தைகளை உருவாக்குகிறார். அவர்கள் வாய்வழித் தோன்றல்கள் ஆவார்கள். பரமாத்மாவாகிய பரமதந்தை உங்களை பிரம்மாவின் வாய் மூலமாகத் தத்தெடுத்துள்ளார். எனவே இந்த பிரம்மா தாயும் ஆவார். நீங்களே எமது தாயும் தந்தையும். ஓ பாபா! நீங்கள் எம்மை பிரம்மா மூலமாக உங்களுக்கு உரியவர்கள் ஆக்கியுள்ளீர்கள். இவ்விடயங்கள் புரிந்து கொள்ளப்பட வேண்டும். ஒரேயொரு தந்தையே ஞானக்கடல். ஞானத்தின் மூலமாக மாத்திரமே ஜீவன்முக்தி கிடைக்கிறது. அதுவே பகல் ஆகும். அறியாமை இருக்கும் போது அது இரவாகும். கலியுகமே இரவு. அது பக்தி மார்க்கம் என அழைக்கப்படுகிறது. சமயநூல்கள் அனைத்தும் பக்தி மார்க்கத்திற்குரியவை. அவற்றின் மூலமாக எவராலும் தந்தையைச் சந்திக்க முடியாது. தந்தை ஒவ்வொரு கல்பத்திலும் வருகிறார். எனவே மக்கள் சிவராத்திரியைக் கொண்டாடுகிறார்கள். எனவே அவர் நிச்சயமாக வருகிறார். அவரிடம் அவருக்கென ஒரு சொந்தச் சரீரம் இல்லை. பிரம்மா, விஷ்ணு, சங்கரர் ஆகியோரும் தேவர்கள் என அழைக்கப்படுகிறார்கள். பிரம்ம தேவனுக்கு வணக்கங்கள், விஷ்ணு தேவனுக்கு வணக்கங்கள் என மக்கள் கூறுகிறார்கள். பின்னர் அவர்கள் கூறுகிறரர்கள்: பரமாத்மாவான சிவனுக்கு வணக்கங்கள். பிரம்மாவே இந்தப் பௌதீக விருட்சத்தின் தலைவராவார். அவர் நடைமுறை ரீதியாகவே இவ்வாறு இருக்கிறார். தந்தை சங்கமயுகத்திலேயே வருகிறார். இந்த நேரத்திலே யாதவர்கள், கௌரவர்கள் மற்றும் யோக சக்தியுடன் கூடிய சக்திசேனையான பாண்டவர்களும் இருக்கிறார்கள். நடைமுறையிலே சிவபாபா பிரம்மாவின் சரீரத்தினுள் பிரவேசித்துள்ளார் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது புரிந்து கொள்கிறீர்கள். அசரீரியான சிவனுக்கும் ஓர் ஆலயம் உள்ளது. சிவராத்திரி கொண்டாடப்பட்ட போதிலும் சிவனது பிறந்தநாளுக்கான அரச விடுமுறையை அரசாங்கம் நிறுத்தியுள்ளது. அவர்கள் ஏனையோரின் பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்கள். அவர்கள் நியாயத்திற்கான சக்தியைக் கொண்டிருக்கவில்லை. இதனாலேயே அவர்கள் நியாயமற்றவர்களாகவும் அநீதியானவர்களாகவும் கடனாளிகளாகவும் ஆகியுள்ளார்கள். தூய்மை இல்லை, அமைதி இல்லை, செழிப்பும் இல்லை. ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர், பொன்விழா இருந்தபோது இதே பாரதத்திலே தூய்மையும் அமைதியும் செழிப்பும் இருந்தன. அப்பொழுது அகால மரணங்கள் இடம்பெறவில்லை. பாரதம் இருந்ததைப் போல வேறு எந்த ஒரு நாடும் மேன்மையானதாகவும் செல்வந்தமாகவும் இருந்திருக்க முடியாது. பாரதமே அதி மேன்மையானதாக இருந்தது. அதன் வரலாறும் எழுதப்பட்டுள்ளது. தூய்மையாக இருந்ததும் இந்த பாரதமே, தூய்மையற்றதாகியதும் இதே பாரதமே. ஆதி சனாதன தேவ தர்மத்தைச் சேர்ந்தவர்கள் சக்கரத்தைச் சுற்றி வந்து, இப்பொழுது சூத்திர குலத்;தினர் ஆகிவிட்டார்கள். பின்னர் சூத்திர குலத்தவரிலிருந்து அவர்கள் பிராமண குலத்தினுள் வருகிறார்கள். பிராமண குலமே உச்சிக்குடுமி. அது தேவகுலத்தை விட மேன்மையானது. சத்திய யுகத் தேவர்களின் புகழ் தந்தையின் புகழிலிருந்து வேறுபட்டது. தந்தை ஞானக்கடல், பேரானந்தக்கடல் என அழைக்கப்படுகிறார். தேவர்களோ தெய்வீகக் குணங்கள் அனைத்தினாலும் நிறைந்தவர்கள். அங்கே விகாரம் என்ற கேள்விக்கே இடமில்லை. கிருஷ்ணரின் பூமியிலே எவ்வாறு இராவணனும் ஹம்சனும் இருந்தார்கள் என்பதைப்பற்றி பல கட்டுக்கதைகள் சமயநூல்களிலே எழுதப்பட்டுள்ளன. உண்மையில் இதுவே ஹம்சன் போன்றோரின் பூமி. சத்திய யுகத்திலே கிருஷ்ணரின் பூமி இருக்கும். இது சங்கமயுகம் என்பதால், அவர்கள் ஹம்சன், ஜரசந்து, இராவணன் போன்ற அசுரர்களைச் சத்திய யுகத் தேவர்களோடு கலந்துள்ளார்கள். இது இராவணனின் அசுர சமுதாயமாகும். இப்பொழுது நீங்கள் இறை சமுதாயத்தினுள் வந்துள்ளீர்கள். கடவுளின் மடியிலே வந்து தூய்மையாகிய பின்னர் நீங்கள் தேவர்களின் மடியை 21 பிறவிகளுக்கு எடுக்கிறீர்கள்: 8 பிறவிகளை தேவர்களின் மடியிலும், 12 பிறவிகளை சத்திரியர்களின் மடியிலும் எடுக்கிறீர்கள். பாரதத்தில் மாத்திரமே ஒரு குமாரி 21 வம்சத்தை உயர்த்துவதாக நினைவுகூரப்படுகிறது; அந்தக் குமாரிகள் நீங்களே. இப்பொழுது நீங்கள் இறைகுலத்தைச் சேர்ந்தவர்கள். சிவபாபாவே பாட்டனாரும், பிரம்மா தந்தையும் ஆவார். நீங்கள் பிரம்ம குமாரர்களும் குமாரிகளும் ஆவீர்கள். நீங்கள் உங்கள் ஆஸ்தியை எல்லையற்ற தந்தையிடமிருந்து பெறுகிறீர்கள். அவர் ஒருவரே உங்களுக்குக் கொடுப்பவர். எவ்வாறாயினும் அவர் அசரீரியானவர் என்பதால், அவர் எவ்வாறு இராஜ யோகத்தைக் கற்பிக்கிறார்? நிச்சயமாக ஒரு சாதாரண மனிதனை நாராயணனாக மாற்றுவதற்கு ஒரு பௌதீகச் சரீரம் தேவைப்படுகிறது. எனவே தந்தை 84 பிறவிகளை எடுத்தவரின் தூய்மையற்ற சரீரத்தினுள் வருகிறார். இதுவே, கடவுளே இராஜயோகத்தைக் கற்பித்து, எம்மை அரசர்களுக்கெல்லாம் அரசர்கள் ஆக்குகின்ற மாபெரும் பல்கலைக்கழகம் ஆகும். கிருஷ்ணர் கீதையைப் படைத்தவரல்ல. உண்மையிலே தாயான கீதையே கிருஷ்ணருக்கு பிறப்பைக் கொடுக்கிறது. தேவர்கள் ஆகுபவர்கள் சிவபாபாவினாலேயே பிறக்கிறார்கள். கிறிஸ்தவர்கள் பைபிள் மூலமாகக் கிறிஸ்துவினூடாகப் பிறக்கிறார்கள். உங்களைப் பிராமணர்களிலிருந்து தேவர்களாக மாற்றியவர் யார்? பிரம்மாவின் வாய் மூலமாக சிவபாபாவே மாற்றினார். இது உங்கள் எல்லையற்ற துறவாகும். அவர்களுடையது ஓர் எல்லைக்குட்பட்ட ரஜோகுணியான (அரைவாசி தூய்மையான) துறவாகும். அந்தத் துறவு தனிவழிப் பாதைக்குரியது. உங்கள் விருப்பமின்மையானது இந்த அசுத்தமான பழைய உலகின் மீதானதாகும். இந்த உலகம் முடிவடையப் போகிறது என்பதை நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். அதற்குப் பதிலாகச் சுவர்க்கத்தைப் படைப்பவரான தந்தையை ஏன் நீங்கள் நினைவு செய்யக்கூடாது? தந்தை கூறுகிறார்: அன்பிற்கினிய குழந்தைகளே. பல பிறவிகளுக்குப் பின்னர் நீங்கள் என்னைச் சந்தித்துள்ளீர்கள். நீங்கள் 84 பிறவிகளை முடித்துவிட்டீர்கள். இப்பொழுது நீங்கள் தேவ குலத்தினுள் செல்லவேண்டும். எனவே நீங்கள் உங்கள் உணவிலே பெருமளவு கவனம் செலுத்த வேண்டும். நீங்கள் தூய்மையற்ற உணவை உட்கொள்ளக்கூடாது. தந்தை கூறுகிறார்: நான் சங்கமத்திலே தூய்மையற்ற ஆடைகளைத் தூய்மையாக்குவதற்காக வருகிறேன். மரணம் சற்று முன்னால் நிற்கிறது. யாதவர்களும், கௌரவர்களும், பாண்டவர்களும் இங்கேயே இருக்கிறார்கள். எனவே பாண்டவர்களின் தந்தையும் நிச்சயமாக இங்கேயே இருக்க வேண்டும். பரமாத்மாவாகிய பரமதந்தை பாண்டவபதி (பாண்டவர்களின் தந்தை) என அழைக்கப்படுகிறார். நீங்கள் வழிகாட்டிகள், ஏனெனில் நீங்கள் சந்தோஷ தாமத்திற்கும் சாந்தி தாமத்திற்குமான பாதையைக் காட்டுகிறீர்கள். இதனாலேயே நீங்கள் சிவசக்தி பாண்டவ சேனை என அழைக்கப்படுகிறீர்கள். ஐரோப்பாவில் வாழ்பவர்களான யாதவர்கள் தமது சொந்தக் குலத்தைத் தாமே அழிக்கிறார்கள். பாண்டவர்களும் கௌரவர்களும் பாரதத்திலேயே இருக்கிறார்கள். அவர்களைப் பற்றியே தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் இடையிலே யுத்தம் இடம்பெற்றதாகக் கூறப்படுகிறது. இப்பொழுது நீங்கள் தேவர்கள் அல்ல, நீங்கள் தேவர்கள் ஆகப்போகின்றீர்கள். ஸ்ரீமத்தைப் பின்பற்றுவதன் மூலம் நீங்கள் உலகின் அதிபதிகள்; ஆகுகிறீர்கள். ஏனையோர் அனைவரும் அசுர வழிகாட்டல்களையே கொடுக்கிறார்கள். இராவணனின் வழிகாட்டல்கள் அரைக்கல்பமாகத் தொடர்கின்றன. உலகம் இப்பொழுது தமோபிரதான் ஆகிவிட்டது. இதுவே தந்தை அமர்ந்திருந்து இராஜ யோகத்தைக் கற்பிக்கும் உருத்திரனின் ஞான வேள்வியாகும். இராச்சியம் ஸ்தாபி;க்கப்படும்போது விநாசச் சுடர் வெளிப்படுவதோடு, இந்த ஞானமும் மறைந்து விடும். பின்னர் நாடகத்திற்கு ஏற்ப பக்தி மார்க்கத்திலிருக்கின்ற அதே சமயநூல்கள் மீண்டும் தோன்றும். சந்நியாசிகளுக்குப் பல சீடர்கள் இருக்கிறார்கள். ஆனால் சந்நியாசிகள் தமது பாவங்களை அழிப்பதற்காக ஆறுகளுக்குச் செல்கிறார்கள். எவ்வாறாயினும் கங்கை நீர் எவரையும் தூய்மையாக்குவதில்லை. அது கடல் நீரிலிருந்தே வருகிறது. நீங்கள் ஞானக் கடலிலிருந்து வெளிப்பட்டுள்ள ஞான ஆறுகள். கங்கை நீர் தூய்மையாக்குபவர் அல்ல. நான் மீண்டும் ஒருமுறை குழந்தைகளாகிய உங்களுக்கு எல்லையற்ற சந்தோஷம் எனும் ஆஸ்தியைப் பக்தியின் பலனாகக் கொடுப்பதற்;காக வந்துள்ளேன். தந்தையிடம் வந்து கற்பவர்களே சுவர்க்கத்திற்குச் செல்வார்கள். ஏனையோர் தமது பிரிவுகளுள் செல்வார்கள். நீங்கள் இந்த நாடகச் சக்கரத்தையும் புரிந்து கொள்ள வேண்டும். சக்கரத்தைப் புரிந்து கொள்வதால் நீங்கள் உலகத்தை ஆட்சி செய்பவர்கள் ஆகுவீர்கள். அரசாங்கமும் மூன்று சிங்கங்களுடன் காட்டிய ஒரு சக்கரத்தைக் (அதன் சின்னமாகக்) கொண்டுள்ளது. கீழே வாய்மையே வெல்லும் என எழுதப்பட்டுள்ளது. உங்கள் அனைவரையும் அமரத்துவ உலகின் அதிபதிகள் ஆக்குவதற்காக இப்பொழுது சிவபாபா வந்து பார்வதிகளாகிய உங்கள் அனைவருக்கும் அமரத்துவமான கதையைக் கூறுகிறார். இது அமரத்துவக் கதையாகிய சத்திய நாராயணனின் கதை எனவும் அறியப்பட்டுள்ளது. ஒருமுறை இந்தக் கதையைச் செவிமடுப்பதால், நீங்கள் சுவர்க்கத்தின் அதிபதிகள் ஆகுகின்றீர்கள். ஏனையவை அனைத்தும் கட்டுக் கதைகளே. அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. தேவ குலத்தினுள் செல்வதற்கு, உங்கள் உணவிலே மிகவும் எச்சரிக்கையாக இருங்கள். தூய்மையற்ற எதையுமே உண்ணாதீர்கள்.

2. முடிவடையப் போகின்ற இந்த அசுத்தமான பழைய உலகின் மீது எல்லையற்ற விருப்பமின்மையை வைத்திருங்கள். சுவர்க்கத்தைப் படைப்பவரான பாபாவை நினைவு செய்யுங்கள்.

ஆசீர்வாதம்:
உங்களுடைய சக்திகளாலும், தெய்வீகக் குணங்களாலும் பலவீனமானவர்களை சக்திசாலிகள் ஆக்குகின்ற ஒத்துழைக்கின்ற ஒருவராகவும் மேன்மையான ஒரு தானியாகவும் ஆகுவீர்களாக.

சதா மேன்மையான ஸ்திதியை கொண்டிருக்கும் தகுதியான குழந்தைகளின் சகல தெய்வீகக் குணங்களும் சக்திகளும் தேவையான பொழுதில் ஒத்துழைக்கின்றன. அவர்கள் செய்கின்ற விசேடமான சேவையின் வடிவம் யாதெனில், அவர்கள் தந்தையிடமிருந்து பெறுகின்ற தெய்வீகக் குணங்களையும் சக்திகளையும் இந்த ஞானம் இல்லாத ஆத்மாக்களுக்குத் தானம் செய்கின்றார்கள். அவர்கள் பிராமண ஆத்மாக்களுக்கும் தமது ஒத்துழைப்பை வழங்குகின்றார்கள். பலவீனமானவர்களை சக்திசாலிகள் ஆக்குவது மேன்மையான தானமும் ஒத்துழைப்பின் வடிவமும் ஆகும். உங்கள் வார்த்தைகளினாலும் மனதினாலும் நீங்கள் சேவை செய்வதைப் போன்றே நீங்கள் பெற்றிருக்கின்ற தெய்வீகக் குணங்களினதும் சக்திகளினதும் ஒத்துழைப்பை சகல ஆத்மாக்களுக்கும் கொடுத்து அவர்கள் ஏதாவதை அடைய உதவுங்கள்.

சுலோகம்:
தமது உறுதியான நம்பிக்கையினால், தமது பாக்கியத்தை நிர்ணயித்துக் கொள்பவர்கள் சதா கவலையற்றிருக்கிறார்கள்.