06.06.22        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


இனிய குழந்தைகளே, நம்பிக்கையே ஞானத்தின் அடிப்படை ஆகும். உங்கள் புத்தியினால் நம்பிக்கை வைப்பதற்கு முயற்சி செய்யுங்கள், நீங்கள் இலக்கை அடைவீர்கள்;.

கேள்வி:
நீங்கள் எந்தவொரு விடயத்தை ஆழமாகப் புரிந்துகொண்டு, நம்பிக்கை வைக்க வேண்டும்?

பதில்:
ஆத்மாக்கள் அனைவரினதும் கர்மக் கணக்குகள் தீர்க்கப்படவுள்ளன, அனைவரும் நுளம்புக் கூட்டத்தைப் போன்று இனிய வீட்டிற்குத் திரும்பிச் செல்வார்கள். அதன்பின்னர், சொற்ப ஆத்மாக்களே புதிய உலகிற்குச் செல்வார்கள். நீங்கள் இந்த விடயத்தை ஆழமாகப் புரிந்துகொண்டு, அதில் நம்பிக்கை கொள்ள வேண்டும்.

கேள்வி:
எக்குழந்தைகளைப் பார்ப்;பதில் தந்தை பூரிப்படைகிறார்?

பதில்:
தந்தையிடம் தங்களை முற்றுமுழுதாக அர்ப்பணிக்கின்ற குழந்தைளையும், மாயையினால் அசைக்கப்பட முடியாதவர்களும், அனுமானைப் போல் ஆட்ட, அசைக்க முடியாதவர்களுமான குழந்தைகளைப் பார்ப்பதில் ஆகும். அத்;தகைய குழந்தைகளைப் பார்க்கும்பொழுது, தந்தை பூரிப்படைகிறார்.

பாடல்:
ஓ மனமே, பொறுமையாக இரு! உனது சந்தோஷ நாட்கள் வரவுள்ளன.

ஓம் சாந்தி.
குழந்தைகள் எதனைச் செவிமடுத்தார்கள்? தந்தையால் மாத்திரமே இதனை வினவ முடியும். ஒரு சந்நியாசியினால் இதனை வினவ முடியாது. எல்லையற்ற, பரலோகத் தந்தையே இதனைக் குழந்தைகளுக்குக் கூறுகிறார், ஏனெனில் ஆத்மாவிலேயே மனமும், புத்தியும் உள்ளன. அவர் ஆத்மாக்களைப் பொறுமையாக இருக்கும்படி கூறுகிறார். எல்லையற்ற தந்தை முழு உலகையும் பொறுமையாக இருக்கும்படி கூறுவதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். உங்களுடைய அமைதியும், சந்தோஷமும் நிறைந்த நாட்கள் வரவுள்ளன. இது துன்ப பூமி;. இதன்பின்னர் சந்தோஷ பூமி வரவேண்டும். தந்தை மாத்திரமே சந்தோஷ பூமியை ஸ்தாபிப்பார். தந்தை குழந்தைகளுக்குப் பொறுமையைக் கொடுக்கிறார். ஆனால் நம்பிக்கையே முதலில் தேவைப்படுகின்றது. வாய்வழித் தோன்றல்களாகிய பிராமணர்களுக்கு இந்;த நம்பிக்கை உள்ளது. வேறு எவ்வாறு இத்தனை பிராமணர்கள் இங்கு இருக்க முடியும்? பிரம்மா குமார்;களும், பிரம்மா குமாரிகளும் என்பதன் அர்த்தம் அவர்கள் புதல்வர்களும், புதல்விகளும் என்பதேயாகும். பிரம்மா குமார்;களும், பிரம்மா குமாரிகளும் என அழைக்கப்படுகின்ற பலர் உள்ளனர். ஆகவே நிச்சயமாகப் பிரஜாபிதா பிரம்மா இருக்க வேண்டும். உங்கள் அனைவருக்கும் ஒரு தாயும் தந்தையுமானவர் மாத்திரமே உள்ளார்;;, ஆனால் ஏனைய அனைவருக்கும் வெவ்வேறு தாயும், தந்தையும் உள்ளார்கள். இங்கே உங்கள் அனைவருக்கும் ஒரு தாயும் தந்தையுமானவரே உள்ளார். இது ஒரு புதிய விடயம். முன்பு நீங்கள் பிராமணர்களாக இருக்கவில்லை, ஆனால் நீங்கள் இப்பொழுது பிராமணர்களாகி விட்டீர்கள். அந்தப் பிராமணர்கள் பாவத்தின் மூலம் பிறப்பு எடுத்துள்ளார்கள். ஆனால் நீங்கள் ஒரு வாய்வழித்தோன்றல். ஒவ்வொரு விடயத்திலும், யார் எங்களுக்கு விளங்கப்படுத்துகிறார் என்ற நம்பிக்கை முதலில் இருக்க வேண்டும். கடவுளே விளங்கப்படுத்துபவர். இப்பொழுது கலியுகத்தின் இறுதியாகும், யுத்தம் முன்னால் உள்ளது. குண்டுகள் போன்றவற்றைக் கண்டுபிடித்துள்ள, ஜரோப்பியவாசிகளான யாதவர்களும் உள்ளார்கள். ஏவுகணைகள் அவர்களுடைய வயிற்றிலிருந்து வெளிப்பட்டு, தங்கள் சொந்தக் குலத்தையே அழித்ததாக நினைவுகூரப்படுகிறது. நிச்சயமாக, அவர்கள் தங்களுடைய சொந்தக் குலத்தை அழிப்பார்கள். உண்மையில், அனைவருமே ஒரு குலத்திற்கே உரியவர்கள். அவர்கள் ஒருவருக்கொருவர் கூறுகிறார்கள்: நாங்கள் அழிவைக் கொண்டு வருவோம். இது நிச்சயமாக எழுதப்பட்டும் உள்ளது. எனவே தந்தை இப்பொழுது விளங்கப்படுத்துகிறார்: குழந்தைகளே, பொறுமையாக இருங்கள்! இந்தப் பழைய உலகம் விரைவில் முடிவடையும். கலியுகம் முடிவடையும்பொழுதே, சத்திய யுகம் ஆரம்பிக்கும். அதற்கு முன்னர் நிச்சயமாக ஸ்தாபனை நடைபெற வேண்டும் பிரம்மா மூலம் ஸ்தாபனை நடைபெறுவதாகவும், சங்கர் மூலம் விநாசம் நடைபெறுவதாகவும் நினைவுகூரப்படுகிறது. ஸ்தாபனையே முதலில் நடைபெறுகின்றது, பின்னர் ஸ்தாபனை பூர்த்தியானதும், விநாசம் நடைபெறுகின்றது. ஸ்தாபனை இப்பொழுது நடைபெறுகிறது. இது எவரும் புரிந்துகொள்ளாத, தனித்துவமான பாதை. இதனைப் பற்றி எவரும் என்றுமே கேள்விப்படவில்லை என்பதால், ஏனைய மார்க்கங்கள், பிரிவுகளைப் போன்றவர்களே பிரம்மா குமாரிகளும் என மக்கள் எண்ணுகின்றனர். அந்த அப்பாவிகளைக் குறை கூற முடியாது. அவர்கள் முன்னைய சக்கரத்திலும் அதேபோன்று தடைகளை ஏற்படுத்தினார்கள். இதுவே உருத்திர ஞான யாகமாகும். சிவனே உருத்திரர் என அறியப்பட்டுள்ளார். புராதன இலகு இராஜயோகம் என அறியப்பட்டுள்ள, இராஜயோகத்தை அவரே கற்பிக்கிறார். புராதனம் என்ற வார்த்தையின் அர்த்தத்தை அவர்கள் புரிந்துகொள்வதில்லை. இது சங்கமத்தின் விடயமாகும். தூய்மையானதும் தூய்மையற்றதும் என்றால் சங்கம யுகம் என்பதாகும். சத்திய யுக ஆரம்பத்தில் ஒரேயொரு தர்மமே இருந்தது. அது அசுர சமுதாயமாகும், நீங்களே தெய்வீகச் சமுதாயத்தினர், ஆனால் யுத்தம் போன்றவற்றின் கேள்விக்கே இடமில்லை. அதுவும் ஒரு தவறே. சகோதரர்களாகிய நீங்கள் எவ்வாறு யுத்தம் செய்ய முடியும்? தந்தை இங்கமர்ந்திருந்து, வேதங்கள், சமயநூல்கள் அனைத்தினதும் சாராம்சத்தை பிரம்மா மூலம் விளங்கப்படுத்துகின்றார். உண்மையில், நான்கு பிரதான சமயங்களும், நான்கு பிரதான சமயநூல்களும் உள்ளன. இவற்றுள் முதலாவது ஆதிசனாதன தேவிதேவதா தர்மமாகும், சமயநூல்கள் அனைத்தினதும் இரத்தினமாக விளங்குகின்ற கீதையே இதன் சமயநூலாகும். இதுவே பாரதத்தின் பிரதான சமயநூல், இதன் மூலமே ஆதிசனாதன தேவிதேவதா தர்மம், அதாவது, சூரிய, சந்திர வம்சத்துத் தர்மங்கள் ஸ்தாபிக்கப்பட்டன. அது கும்பமேலாவும், சந்திப்பும் என அறியப்பட்டுள்ள சங்;கம யுகத்தில் நடைபெற்றிருக்க வேண்டும். ஆத்மாவிற்கும், பரமாத்மாவிற்கும் இடையேயுள்ள சந்திப்பே இந்தக் கும்பமேலா என்பதை நீங்கள் புரிந்துகொண்டுள்ளீர்கள். இது ஓர் அழகான, நன்மைபயக்கும் சந்திப்பாகும். கலியுகம் சத்திய யுகமாக மாற வேண்டியுள்ளது, இதனாலேயே இது நன்மை பயக்கும் யுகம் என்று அறியப்பட்டுள்ளது. சத்திய யுகம் திரேதா யுகமாக மாறும்பொழுதும், திரேதா யுகம் துவாபர யுகமாக மாறும்பொழுதும் சுவர்க்கக் கலைகள் குறைவடைகின்றன் சதா இழப்பு நடைபெறுகிறது. எனவே நன்மை பயக்கும்; ஒருவரே தேவைப்படுகிறார். முழுமையான இழப்பு ஏற்பட்டதும், அனைவருக்கும் நன்மை அளிப்பதற்குத் தந்தை வருகிறார். நீங்கள் உங்கள் புத்தியைப் பயன்படுத்த வேண்டும். தந்தை நன்மை அளிப்பதற்காகச் சங்கம யுகத்தில் நிச்சயமாக வருவார். தந்தையே அனைவருக்கும் சற்கதி அருள்பவர். துவாபர யுகத்தின் காலத்திலோ அல்லது சத்திய, திரேதா யுகங்களிலோ அனைவரும் பிரசன்னமாகி இருப்பதில்லை. எனவே, ஆத்மாக்கள் அனைவரும் கீழிறங்கியதும், இறுதியில் மாத்திரமே தந்தை வருகிறார். தந்தை வந்து, உங்களுக்குப் பொறுமையைக் கொடுக்கிறார். குழந்தைகளாகிய நீங்கள் கூறுகிறீர்கள்: பாபா, இப்பழைய உலகில் பெருமளவு துன்பம் உள்ளது, எனவே எங்களை விரைவாக அழைத்துச் செல்லுங்கள். தந்தை கூறுகிறார்: இல்லை, குழந்தைகளே! இந்த நாடகம் ஏற்கனவே நிச்சயிக்கப்பட்டது. உங்களால் உடனடியாகச் சீரழிந்தவர்களிலிருந்து மேன்மையானவர்களாக மாற முடியாது; உங்களுடைய புத்தி நம்பிக்கையை வளர்க்க வேண்டும், அதன்பின்னர் நீங்கள் முயற்சி செய்கின்றீர்கள். ஜீவன்முக்தி ஒரு விநாடியில் பெறப்படுகிறது என்பது உண்மையே. நீங்கள் ஒரு குழந்தையாகியவுடன், ஆஸ்திக்கான உரிமையைக் கோருகிறீர்கள் என்பதே அர்த்தமாகும். எவ்வாறாயினும், அங்கே இன்னமும் அந்தஸ்து வரிசைக்கிரமமாகவே உள்ளது. அத்துடன், ஓர் உயர்ந்த அந்தஸ்தைக் கோருவதற்கு, நீங்கள் முயற்சி செய்து, கற்க வேண்டும். உடனடியாகவே கர்மாதீத ஸ்திதி அடையப்படும் என்பதல்ல, அவ்வாறாயின், நீங்கள் உங்கள் சரீரத்தை விட்டு நீங்க வேண்டும்; அது நியதியல்ல. நீங்கள் மாயையுடன் மிகவும் நன்றாக யுத்தம் செய்ய வேண்டும். யுத்தமானது 8, 10 அல்லது 15 வருடங்களுக்கேனும் தொடரக்கூடும். உங்கள் யுத்தம் மாயையுடனாகும், உங்கள் யுத்தம் தொடரும்வரை, தந்தை இங்கே இருப்பார். மாயையை வெற்றி கொண்டவர்களினதும், எந்தளவுக்கு ஒவ்வொருவரும் தனது கர்மாதீத ஸ்திதியை அடைந்துள்ளார்; என்பதினதும் பெறுபேறுகளும் இறுதியிலேயே வெளிப்படுத்தப்படும். தந்தை கூறுகிறார்: இயலுமானவரை அமைதி தாமமான, உங்கள் வீட்டை நினைவுசெய்யுங்கள். அதுவே சப்தத்துக்கு அப்பாற்பட்ட தாமமாகும். குழந்தைகளாகிய உங்கள் புத்தியில் இப்பொழுது சந்தோஷம் உள்ளது. இந்த நாடகம் எவ்வாறு உருவாக்கப்படுகிறது என நீங்கள் புரிந்துகொள்கிறீர்கள். நீங்கள் மூவுலகங்களையும் புரிந்துகொள்கிறீர்கள். இது வேறெவருடைய புத்தியிலும் இல்லை. பாபாவும் பல சமயநூல்கள் போன்றவற்றைக் கற்றுள்ளார், ஆயினும், இவ்விடயங்கள் அப்பொழுது இவருடைய புத்தியில் இருக்கவில்லை. இவர் கீதை போன்றவற்றைக் கற்றார், ஆயினும், நாங்கள் தொலைதூர தாமமாகிய, பரந்தாமவாசிகள் என்பது இவருடைய புத்தியில் இருக்கவில்லை. பரமாத்மாவாகிய பரமதந்தை என்று அழைக்கப்படுகின்ற, எங்கள் பாபா பரந்தாமத்தில் வசிக்கிறார் என்பதை நாங்கள் இப்பொழுதுதான் அறிந்து கொண்டோம். அனைவரும் அவரை நினைவுசெய்கிறார்கள்: ஓ தூய்மையாக்குபவரே, வாருங்கள்! எவராலும் வீடு திரும்ப முடியாது. இது ஒரு புதிரைப் போன்றது: மக்கள் எங்கு சென்றாலும், அவர்கள் ஒரு சுவரை வந்தடைந்து, தங்களுடைய இலக்கைச் சென்றடைய முடியாதுள்ளார்கள். அவர்கள் களைப்படையும்பொழுது, கதறி அழுகிறார்கள்: எவரேனும் எங்களுக்குப் பாதையைக் காட்டுங்கள்! அவர்கள் வேதங்களையும், சமயநூல்களையும் எவ்வளவுதான் கற்றாலும், அவர்கள் எத்தனை யாத்திரைகள் சென்றாலும், தாங்கள் எங்கு செல்கிறார்கள் என்பதை இன்னமும் அவர்கள் புரிந்துகொள்வதில்லை. அவர்கள் இன்ன நபர் ஒளியுடன் இரண்டறக் கலந்து விட்டார் எனக் கூறுகிறார்கள். தந்தை விளங்கப்படுத்துகின்றார்: எவராலுமே வீடு திரும்ப இயலாதுள்ளது. நாடகம் முடிவடைய வேண்டிய நேரம் வரும்பொழுது, நடிகர்கள் அனைவரும் மேடைக்கு வருகின்றார்கள். இதுவே நியதியாகும். அவர்கள் அனைவரும் தங்களுடைய ஆடைகளுடன் வரிசையாக நிற்கின்றார்கள். அவர்கள் தங்களுடைய முகங்களைக் காட்டி, பின்னர் தங்களுடைய ஆடைகளை அகற்றி, வீட்டுக்கு ஓடிச் செல்கின்றார்கள். பின்னர் அவர்கள் அதே பாகங்களை மீண்டும் நடிக்கின்றார்கள். இது ஓர் எல்லையற்ற நாடகம். நீங்கள் இப்பொழுது ஆத்ம உணர்வுடையவர்கள் ஆகின்றீர்கள். நீங்கள் புரிந்துகொள்கின்றீர்கள்: ஆத்மாவாகிய நான், இந்தச் சரீரத்தை விடுத்து, இன்னுமொன்றை எடுப்பேன். அனைவரும் மறுபிறவி எடுக்கிறார்கள். நீங்கள் 84 பிறவிகளில் 84 பெயர்களைக் கொண்டிருந்தீர்கள். இப்பொழுது இந்த நாடகம் முடிவடைந்து விட்டது. அனைவரும் தங்கள் சீரழிந்த நிலையை அடைந்துள்ளனர். இது மீண்டும் ஒருமுறை நிகழும். உலகின் வரலாறும், புவியியலும் மீண்டும் ஒருமுறை நிகழும். உங்கள் பாகங்கள் இப்பொழுது முடிவடையவுள்ளன எனவும், நீங்கள் வீடு திரும்புவீர்கள் எனவும் புரிந்துகொள்கிறீர்கள். தந்தையின் கட்டளைகள் குறைந்தவையல்ல. தூய்மையாக்குபவரான, தந்தை இங்கமர்ந்திருந்து விளங்கப்படுத்துகிறார்: குழந்தைகளே, நான் உங்களுக்கு மிகவும் இலகுவான ஒரு வழிமுறையைக் காட்டுகிறேன். நீங்கள் அமர்ந்திருந்தாலென்ன, நடமாடித் திரிந்தாலென்ன, நீங்கள் நடிகர்கள் என்றும், உங்களுடைய 84 பிறவிகளைப் பூர்த்திசெய்து விட்டீர்கள் என்றும் உங்கள் இதயங்கள் அறிந்திருக்கட்டும். எங்களை அழகானவர்கள் ஆக்குவதற்கு, மனிதர்களிலிருந்து தேவர்களாக மாற்றுவதற்கு, தந்தை இப்பொழுது வந்து விட்டார். நாங்கள் தூய்மையற்றவர்களைத் தூய்மையானவர்கள் ஆக்குகிறோம். நாங்கள் எண்ணற்ற தடவைகள் தூய்மையற்றவர்களிலிருந்து தூய்மையானவர்களாக மாறியுள்ளோம். நாங்கள் தொடர்ந்தும் அவ்வாறு ஆகுவோம். இந்த வரலாறும், புவியியலும் மீண்டும் நிகழ்கின்றன. தேவ தர்மத்தைச் சேர்ந்தவர்களே முதலில் வருவார்கள். மரக்கன்று இப்பொழுது நாட்டப்படுகிறது. நாங்கள் மறைமுகமானவர்கள். நாங்கள் என்ன வைபவங்களைக் கொண்டிருக்க முடியும்? உள்ளார நாங்கள் ஞானமுடையவர்களாக இருந்து, சந்தோஷத்தை அனுபவம் செய்கிறோம். எங்களுடைய தேவ தர்ம விருட்சத்தின் இலைகள் இப்பொழுது சீரழிந்தவையாகி விட்டன, அவர்கள் தங்களுடைய தர்மத்திலும் (தர்மம்), செயலிலும் (கர்மம்) சீரழிந்தவர்கள் ஆகிவிட்டனர். பாரத மக்களின் தர்மமும், கர்மமும் முன்னர் மேன்மையாக இருந்தன. அங்கே மாயை ஒருபொழுதும் அவர்களைப் பாவங்கள் செய்ய வைக்கவில்லை; அது இராவணன் இல்லாத, தூய, புண்ணியாத்மாக்களின் உலகமாக இருந்தது. அவர்களுடைய செயல்கள் நடுநிலையான செயல்களாக இருந்தன. பின்னர் இராவண இராச்சியத்தில் செயல்கள் பாவகரமானவையாகத் தொடங்கின. அங்கே பாவச் செயல்கள் இருக்க முடியாது; எவருமே சீரழிந்தவர்களாக இருக்க முடியாது. குழந்தைகளாகிய நீங்கள் யோக சக்தி மூலமும், ஸ்ரீமத்தைப் பின்பற்றுவதன் மூலமும் உலக அதிபதிகள் ஆகுகின்றீர்கள். பௌதீகச் சக்தியினூடாக எவருமே உலக அதிபதிகளாக முடியாது. அவர்கள் ஒன்றுசேர்ந்தால், அவர்களால் உலக அதிபதிகளாக முடியும், ஆனால் அது நாடகத்தின் பாகமல்ல என்பதை நீங்கள் புரிந்துகொள்கிறீர்கள். இரு பூனைகள் சண்டை பிடிப்பதையும், அவற்றுக்கு இடைநடுவிலுள்ள வெண்ணெயை ஒரு குரங்கு பெறுவதையும் அவர்கள் காட்டுகிறார்கள். ஸ்ரீ கிருஷ்ணர் தனது வாயில் வெண்ணெயுடன் இருக்கின்ற காட்சியை நீங்கள் கண்டுள்ளீர்கள். அவர் உலக இராச்சியம் எனும் வெண்ணெயைப் பெறுகிறார்;. யவனர்களுக்கும் கௌரவர்களுக்கும் இடையிலேயே யுத்தம் இடம்பெறுகிறது. இப்பொழுது இது நிகழ்வதை நீங்கள் பார்க்கின்றீர்கள். செய்தித்தாள்களில், யாரேனும் ஒருவருக்கு எதிராகப் பெரும் வன்முறை நிகழ்ந்ததாக அவர்கள் வாசிக்கும்பொழுது, ஏனையோர் உடனடியாகவே சென்று, யாரையாவது கொல்கின்றார்கள். ஆரம்பத்தில், பாரதத்தில் ஒரேயொரு தர்மம் மாத்திரமே இருந்தது. எவ்வாறு ஏனைய சமயங்கள் அனைத்தினதும் இராச்சியங்கள் வந்தன? கிறிஸ்தவர்கள் சக்திவாய்ந்தவர்களாக இருந்தார்கள், இதனாலேயே அவர்கள் ஆட்சிபுரிந்தார்கள். உண்மையில் இப்பொழுது இராவணன் முழு உலகையும் அபகரித்துவிட்டான். இது ஒரு மறைமுகமான விடயம். இவ்விடயங்கள் சமயநூல்களில் எழுதப்படவில்லை. தந்தை விளங்கப்படுத்துகிறார்: இவ்விகாரங்களே அரைக்கல்பமாக உங்கள் எதிரிகளாக இருக்கின்றன் அவற்றினூடாகவே நீங்கள் அவற்றின் ஆரம்பம் முதல் மத்தியினூடாக இறுதிவரை துன்பத்தைப் பெறுகிறீர்கள். இதனாலேயே சந்நியாசிகளும் சந்தோஷம் காக்கையின் எச்சம் போன்றது எனக் கூறுகின்றனர். எவ்வாறாயினும், சுவர்க்கத்தில் சதா சந்தோஷம் இருப்பதை அவர்கள் அறியார்கள். பாரத மக்கள் இதனை அறிவார்கள்;; இதனாலேயே எவரேனும் மரணிக்கும்பொழுது, அவர் சுவர்க்கத்துக்குச் சென்று விட்டதாக அவர்கள் கூறுகின்றனர். சுவர்க்கத்தைப் பற்றிய பெரும் புகழ் உள்ளது, எனவே, இது நிச்சயமாக ஒரு நாடகமாக இருக்க வேண்டும். எவ்வாறாயினும், எவரேனும் ஒருவரிடம் அவர் நரகத்தில் இருப்பதாக நீங்கள் கூறுவீர்களாயின், அது அவரைக் குழப்பம் அடையச் செய்யும். இது அத்தகையதோர் அற்புதமான விடயம்! அவர்கள் எவரேனும் ஒருவர் சுவர்க்கவாசியாகி விட்டார் என்று தங்கள் சொந்த உதடுகளினால் கூறுகின்றார்கள், அவர் நரகத்தை விட்டுச் சென்றுவிட்டார் என்பதே அதன் அர்த்தம் ஆகும். அப்படியாயின், ஏன் நீங்கள் அவரை வரவழைத்து, நரகத்தின் பொருட்களை அவருக்கு ஊட்டுகிறீர்கள்? அவர்கள் சுவர்க்கத்தில் இருந்தால், அவர்களுக்குத் தேவையான உடைமைகள் அனைத்தையும் கொண்டிருப்பார்கள் அல்லவா! உங்களுக்கு நம்பிக்கை இல்லை என்பதே இதன் அர்த்தமாகும். சில குழந்தைகள் சுவர்க்கத்தில் என்ன உள்ளது எனப் பார்த்திருக்கிறார்கள். மக்கள் நரகத்தில் செய்யும் விடயங்களைப் பாருங்கள்! ஒரு மகன் தனது தந்தையைக் கொல்லத் தயங்க மாட்டார். ஒரு மனைவி வேறு யாரையேனும் காதலித்தால், தனது கணவனைக் கொல்லத் தயங்க மாட்டாள். இன்றைய மக்களுக்கு என்ன நிகழ்ந்து விட்டது? என பாரதத்தைப் பற்றிப் பாடுகின்ற பாடலை அவர்கள் ஒருபுறத்தில் வைத்திருக்கிறார்கள். பின்னர் மறுபுறத்தில், அவர்கள் எங்களுடைய பாரதமே தங்கத்தைப் போல அதிசிறந்தது எனப் பாடுகிறார்கள். பாரதமே அதிசிறப்பானதாக இருந்ததாயினும், அது இப்பொழுது அவ்வாறில்லை; அது இப்பொழுது ஏழ்மையடைந்து விட்டது; இங்கே எந்தப் பாதுகாப்பும் இல்லை. நாங்கள் அசுர சமுதாயத்துக்கு உரியவர்களாக இருந்தோம், பாபா இப்பொழுது எங்களை இறை சமுதாயத்திற்கு உரியவர்கள் ஆகுவதற்கு முயற்சி செய்யுமாறு தூண்டுகிறார். இது ஒரு புதிய விடயமல்ல. நாங்கள் ஒவ்வொரு கல்பத்தின் சங்கமத்திலும் மீண்டும் ஒருமுறை எங்கள் ஆஸ்தியைப் பெறுகிறோம். உங்களுக்கு ஓர் ஆஸ்தியைக் கொடுப்பதற்காகத் தந்தை வருகிறார், ஆனால் மாயை உங்களுக்குச் சாபமிடுகிறாள்! அவள் மிகவும் சக்தி வாய்ந்தவள்! தந்தை கூறுகிறார்: மாயையே, நீ மிகவும் சக்திவாய்ந்தவள்! நீ நல்லவர்களை விழச் செய்கிறாய். அந்த இராணுவத்தில் அவர்கள் மரணிப்பதற்கோ அல்லது கொல்வதற்கோ பயப்படுவதில்லை. அவர்கள் காயப்பட்டாலும், மீண்டும் போர்க்களத்துக்குத் திரும்புகிறார்கள்;; அவர்களுடையது தொழில் ரீதியான வியாபாரமாகும். அவர்கள் ஒரு பரிசையும் பெறுகிறார்கள். நீங்கள் சிவபாபாவிடமிருந்து சக்தியைப் பெற்று, மாயையை வெல்கிறீர்கள். தந்தை சட்டநிபுணரும் ஆவார், ஏனெனில் அவர் உங்களை மாயையிடமிருந்து விடுவிக்கிறார். நீங்களே சிவசக்தி சேனையினர், தாய்மார்கள் முன்னிலையில் வைக்கப்படுகிறார்கள்: தாய்மார்களுக்கு வந்தனங்கள். யார் இதனைக் கூறினார்? தந்தையே இதனைக் கூறினார், ஏனெனில் நீங்கள் தந்தையிடம் அர்ப்பணிக்கிறீர்கள். ஒருவர் மிகவும் உறுதியானவராகவும், அசைக்க முடியாதவராகவும் உள்ளபொழுது, பாபா சந்தோஷம் அடைகிறார். அங்கதனின் உதாரணம் உள்ளது: இராவணனால் அவனை அசைக்க முடியவில்லை. இது இந்த இறுதிக் காலத்துக்குப் பொருந்துகிறது, இறுதியிலேயே அந்த ஸ்திதி அடையப்படும். அந்நேரத்தில், நீங்கள் பெருமளவு சந்தோஷத்தை அனுபவம் செய்வீர்கள். விநாசம் நடைபெறும் வரையில், பூமி தூய்மையாகும் வரையில், தேவர்களால் இங்கு வர முடியாது. நிச்சயமாக வைக்கோற் போர் தீயிடப்படும். இப்பொழுது ஆத்மாக்கள் அனைவரும் தங்கள் கர்மக் கணக்குகளைத் தீர்த்து, நுளம்புக் கூட்டங்களைப் போன்று, இனிய வீட்டுக்குத் திரும்பிச் செல்ல வேண்டும். மில்லியன் கணக்கான நுளம்புகள் மரணிக்கின்றன. இதனாலேயே இராமர் செல்லும்பொழுது, இராவணனும் சென்றான் எனக் கூறப்படுகிறது. அனைவரும் வீடு திரும்பிச் செல்ல வேண்டும், பின்னர் நீங்கள் புதிய உலகிற்குச் செல்வீர்கள். அந்நேரத்தில் மிகச்சிலர் மாத்திரமே இருப்பார்கள். இவை புரிந்துகொள்ளப்பட வேண்டிய விடயங்கள், உங்களுக்கு இவற்றில் நம்பிக்கை இருக்க வேண்டும். பாபாவினால் மாத்திரமே உங்களுக்கு இந்த ஞானத்தைக் கொடுக்க முடியும். அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. அமர்ந்திருக்கும்பொழுதும் அல்லது உலாவித் திரியும்பொழுதும், உங்களை ஒரு நடிகராகக் கருதுங்கள். நீங்கள் இப்பொழுது உங்கள் 84 பிறவிகளின் பாகத்தைப் பூர்த்திசெய்துள்ளதுடன், வீடு திரும்பவும் வேண்டும் என்பதை உங்கள் இதயம் நினைவுசெய்யட்டும். ஆத்ம உணர்வுடையவராக இருங்கள்.

2. உங்கள் புத்தி நம்பிக்கையைக் கொண்டிருப்பதுடன், நீங்கள் முள்ளிலிருந்து மலராகுவதற்கு முயற்சி செய்ய வேண்டும். மாயையுடனான உங்கள் யுத்தத்தில் ஒரு வெற்றியாளராக இருந்து, கர்மாதீத் ஆகுங்கள். இயலுமானவரை உங்கள் வீட்டை நினைவுசெய்யுங்கள்.

ஆசீர்வாதம்:
நீங்கள் தந்தையைப் போன்று பற்றற்றவராகவும், அன்பானவராகவும் இருந்து, உங்கள் இலேசான ஸ்திதி மூலம் ஒவ்வொரு பணியையும் இலேசானதாக ஆக்குவீர்களாக.

உங்களுடைய மனம், புத்தி, சம்ஸ்காரங்கள் எனும் மூன்று சூட்சும சக்திகளையும் இலேசானவையாக அனுபவம் செய்வதே, தந்தையைப் போன்று பற்றற்றவராகவும், அன்பானவராகவும் இருப்பதாகும். காலத்திற்கேற்ப, வெளிப்புறச் சூழல் தமோபிரதானாக உள்ளதுடன், மனித ஆத்மாக்களின் மனோபாவங்களும் சுமையாக உள்ளன. வெளிப்புறச் சூழல் சுமையாக இருப்பதற்கேற்ப, உங்கள் எண்ணங்களும், வார்த்தைகளும், உறவுமுறைகளும் தொடர்ந்தும் இலேசானவையாக இருக்க வேண்டும், அத்துடன், இந்த இலேசான தன்மை காரணமாக, உங்கள் பணிகள் அனைத்தும் தொடர்ந்தும் இலேசாக இருக்கும். நீங்கள் எந்தத் தொழிலாலும் ஆதிக்கம் செலுத்தப்பட மாட்டீர்கள். இதுவே தந்தைக்குச் சமமாக இருக்கின்ற ஸ்திதி ஆகும்.

சுலோகம்:
ஆகா, எனது சுயத்தின் அற்புதம்;! (வாஹ் ரே மே) எனும் அலௌகீகப் போதையைப் பேணுங்கள், உங்கள் மனமும், சரீரமும் தொடர்ந்தும் இயல்பாகவே நடனமாடும்.