06.07.20        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்:
இனிய குழந்தைகளே, உங்களுக்குக் கற்பிப்பவர் யார் என்பதை அறிந்திருப்பதனால், எப்பொழுதும் சந்தோஷமாக இருங்கள்; இதுவும் மன்மனாபவ ஆக இருப்பதாகும். நேற்று உங்கள் புத்தி கல்லுப்புத்தியாக இருந்தது, இன்று உங்கள் புத்தி தெய்வீகமானதாகுகிறது எனும் சந்தோஷம் உங்களுக்கு உள்ளது.

கேள்வி:
ஒருவருடைய பாக்கியம் திறப்பதற்கு அடிப்படையாக இருப்பது என்ன?

பதில்:
நம்பிக்கையாகும்; ஒருவருடைய பாக்கியம் திறப்பதற்கு நீண்டகாலம் எடுக்கின்றது என்றால், அவர் தொடர்ந்தும் தடுமாறுகிறார். நம்பிக்கையைக் கொண்டிருக்கின்ற புத்தியினை உடையவர்கள், மிகவும் நன்றாகக் கற்று விரைவாக முன்னேறிச் செல்கிறார்கள். உங்களுக்கு எதைப் பற்றியாவது சந்தேகங்கள் இருப்பின், நீங்கள் பின்தங்குகிறீர்கள். புத்தியில் நம்பிக்கையைக் கொண்டுள்ளவர்களும், தந்தையிடம் தொடர்ந்தும் ஓடி வருபவர்களும் சதோபிரதான் ஆகுவார்கள்.

ஓம் சாந்தி.
பாடசாலையில் மாணவர்கள் கற்கும்பொழுது, தங்கள் கல்வியின் இறுதியில் தாங்கள் என்னவாக ஆகப் போகிறார்கள் என அறிந்துள்ளார்கள். நீங்கள் சத்தியயுகத்துத் தெய்வீக தாமத்தின் அதிபதிகள் ஆகப் போகிறீர்கள் என்பது இனிமையிலும் இனிமையான ஆன்மீகக் குழந்தைகளாகிய உங்கள் புத்தியில் புக வேண்டும். சரீர உறவுமுறைகள் போன்ற அனைத்தும் துறக்கப்பட வேண்டும். இப்பொழுது நாங்கள் தெய்வீக தாமத்தின் அதிபதிகளாக, தெய்வீகப் பிரபுகளாக ஆகவேண்டும். இந்தச் சந்தோஷம் நாள் முழுவதும் இருக்க வேண்டும். தெய்வீக தாமம் என்றால் என்ன என்பதை நீங்கள் புரிந்துகொள்கிறீர்களா? அங்கு, கட்டடங்கள் போன்ற அனைத்தும் தங்கத்தினாலும், வெள்ளியினாலும் கட்டப்பட்டிருக்கின்றன. இங்கு, கட்டடங்கள் கற்களாலும், செங்கற்களாலும் கட்டப்பட்டிருக்கின்றன. கல்லுப்புத்தி உடையவர்களிலிருந்து நீங்கள் இப்பொழுது தெய்வீகப் புத்தி உடையவர்கள் ஆகுகிறீர்கள். தெய்வீகப் பிரபுவாகிய தந்தை வரும்பொழுது மாத்திரமே, அவர் கல்லுப்புத்தியைத் தெய்வீகப்புத்தியாக மாற்றுகிறார். உங்கள் பாடசாலை அதிமேலானது என்பதையும், இதை விட மேலான பாடசாலை எதுவும் இல்லை என்பதையும் இங்கமர்ந்திருக்கும் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். இப்பாடசாலையில் நீங்கள் பல பில்லியன் மடங்கு பாக்கியசாலிகளான, உலக அதிபதிகளாகுகிறீர்கள். ஆகவே, குழந்தைகளாகிய உங்களுக்கு அதிகளவு சந்தோஷம் இருக்க வேண்டும். நீங்கள் கல்லுப் பூமியிலிருந்து, தெய்வீகப் பூமிக்குச் செல்கின்ற இதுவே அதிமேன்மையான சங்கமயுகம் ஆகும். நேற்று, உங்களுக்குக் கல்லுப்புத்தி இருந்தது, இன்று, நீங்கள் தெய்வீகப் புத்தி உடையவர்கள் ஆகுகிறீர்கள். நீங்கள் சதா இவ்விழிப்புணர்வைக் கொண்டிருக்கும்பொழுது, இதுவும் மன்மனாபவ ஆகும். ஆசிரியர்கள் கற்பிப்பதற்காகப் பாடசாலைக்குச் செல்கிறார்கள். தங்கள் ஆசிரியர் வரப் போகிறார் என்பதை மாணவர்கள் தங்கள் இதயத்தில் அறிந்துள்ளார்கள். கடவுளே உங்கள் ஆசிரியர் எனவும், அவரே உங்களைச் சுவர்க்க அதிபதிகள் ஆக்குகிறார் எனவும் குழந்தைகளாகிய நீங்கள் புரிந்துகொள்கிறீர்கள். ஆகவே, அவர் நிச்சயமாகச் சங்கமயுகத்தில் வருகிறார். மனிதர்கள் அவரைக் கூவியழைக்கிறார்கள், ஆனால் நீங்களோ அவர் இப்பொழுது இங்கு ஏற்கெனவே வந்துவிட்டார் என்பதை அறிவீர்கள். முன்னைய கல்பத்திலும் இவ்வாறே இது இடம்பெற்றது. விநாச வேளையில் புத்தியில் அன்பற்றவர்கள் இருந்தார்கள்; என எழுதப்பட்டுள்ளது. அது ஏனெனில் அவர்களின் புத்தி கல்லாக இருந்ததனால் ஆகும். விநாச வேளையில் அன்பான புத்தியை நீங்கள் கொண்டிருக்கிறீர்கள். இப்பொழுது உங்கள் புத்தி தெய்வீகமானதாகுகிறது. ஆகவே, இதை விரைவில் புரிந்துகொள்வதற்கு, மனிதர்களுக்கான ஒரு திறமையான வழி உருவாக்கப்பட வேண்டும். பலர் இங்கு அழைத்து வரப்படுகிறார்கள், இருப்பினும், எவ்வாறு சிவபாபா பிரம்மாவின் சரீரத்தினூடாகக் கற்பிக்கிறார் எனவும், எவ்வாறு அவர் இங்கு வருகிறார் எனவும் அவர்கள் தொடர்ந்தும் வினவுகிறார்கள். அவர்கள் முற்றாகவே எதையும் புரிந்துகொள்வதில்லை. பலரும் நிலையங்களுக்கு வருகிறார்கள். ஆகவே, தங்;கள் புத்தியில் அவர்கள் நம்பிக்கையையும் கொண்டிருக்க வேண்டும், இல்லையா? கடவுள் சிவன் பேசுகிறார் எனவும், சிவனே ஆத்மாக்கள் அனைவரினதும் தந்தை எனவும் அவர்கள் அனைவரும் கூறுகிறார்கள். கிருஷ்ணர் அனைவரினதும் தந்தை என அழைக்கப்படுவதில்லை. இதைப் பற்றிக்; குழப்பமடைவதற்குத் ஏதுமில்லை. எவ்வாறாயினும், ஒருவரின் பாக்கியம் திறக்கக் காலம் எடுக்கும்பொழுது, அவர் தொடர்ந்தும் தடுமாறுகிறார். குறைவாகக் கற்பவர்கள் நொண்டுகிறார்கள் எனக் கூறப்பட்டுள்ளது. தங்கள் புத்தியில் சந்தேகங்களைக் கொண்டிருப்பவர்கள் பின்தங்குகிறார்கள். தங்கள் புத்தியில் நம்பிக்கையைக் கொண்டிருந்து, நன்கு கற்பவர்கள் விரைவாக முன்னேறிச் செல்கிறார்கள். அனைத்து விடயங்களும் மிகவும் எளிமையாக விளங்கப்படுத்தப்பட்டுள்ளன. அது குழந்தைகள் ஓர் ஓட்டப் பந்தயத்தில் ஓடுவதைப் போன்றுள்ளது; அவர்கள் தங்கள் இலக்கை நோக்கி ஓடிய பின்னர், திரும்பவும் ஆரம்ப இடத்திற்கே ஓடுகிறார்கள். தந்தை கூறுகிறார்: உங்கள் புத்தியும் தந்தையிடம் தொடர்ந்தும் ஓடினால் நீங்கள் சதோபிரதான் ஆகுவீர்கள். அவர்கள் இங்கு வந்து, அம்புகள் அவர்களைத் தைக்கும்பொழுது, சிலர் நன்றாகப் புரிந்துகொள்கிறார்கள், ஆனால் அவர்கள் இங்கிருந்து வெளியேறியதும் அனைத்தும் முடிவடைகின்றன. பாபா உங்களுக்கு ஞான ஊசியைக் கொடுக்கிறார். ஆகவே, அதிலிருந்து உங்கள் போதை அதிகரிக்க வேண்டும். எவ்வாறாயினும், அந்தப் போதை உயர்வதில்லை. இங்கு நீங்கள் ஒரு குவளை ஞானாமிர்தத்தை அருந்தும்பொழுது, அது உங்களைத் தாக்குகிறது, ஆனால் நீங்கள் இங்கிருந்து வெளியேறியதுமே, அனைத்தையும் மறந்து விடு;கிறீர்கள். ஒரேயொரு தந்தையே ஞானக்கடலும், தூய்மையாக்குபவரும், அனைவருக்கும் சற்கதி அளிப்பவரும், விடுதலையளிப்பவரும் எனக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். உங்கள் ஆஸ்தியாக அவர் உங்களுக்கு அனைத்தையும் கொடுக்கிறார். அவர் கூறுகிறார்: குழந்தைகளே, நீங்களும்; முழுமையான கடல்கள் ஆகவேண்டும். நீங்கள் என்னிடமுள்ள ஞானம் அனைத்தையும் கிரகிக்க வேண்டும். தனக்கெனச் சொந்தமாக ஒரு சரீரத்தைக் கொண்டிருக்கும் போதை சிவபாபாவுக்கு இல்லை. தந்தை கூறுகிறார்: குழந்தைகளே, நான் எப்பொழுதும் அமைதியாகவே இருக்கிறேன். நீங்களும் சரீரத்தைக் கொண்டிராதபொழுது, உங்களுக்கும் அந்தப் போதை இருக்கவில்லை. அது அவருக்கு உரியது என சிவபாபா ஒருபொழுதும் கூறுவதில்லை. இச்சரீரம் கடனாகப் பெற்றுக் கொள்ளப்பட்டது, கடனுக்குப் பெற்ற எதுவும் உங்களுக்கு உரியதல்ல. நான் சேவை செய்வதற்கென இவரில் ஒரு குறுகிய காலத்திற்;கே பிரவேசிக்கிறேன். இப்பொழுது குழந்தைகளாகிய நீங்கள் வீடு திரும்ப வேண்டும். நீங்கள் கடவுளைச் சந்திப்பதற்கு விரைந்தோட வேண்டும். மக்கள் யாகங்களை நடாத்துவதுடன், தவம் போன்றவற்றையும் செய்கிறார்கள், ஆனால், தாங்கள் எவ்வாறு கடவுளைக் கண்டடைய முடியும் என்பதை அவர்கள் புரிந்துகொள்ளவில்லை. கடவுள் ஏதோவொரு ரூபத்தில் வருவார் என அவர்கள் நம்புகிறார்கள். தந்தை அனைத்தையும் மிகவும் இலகுவாக விளங்கப்படுத்துகிறார். நீங்களும் கண்காட்சிகளில் விளங்கப்படுத்த முடியும். சத்திய, திரேதா யுகங்களின் கால எல்லை எழுதப்பட்டுள்ளது. 2500 வருடம் வரைக்கும், அது பெரும்பாலும் மிகச்சரியாகவே உள்ளது. சூரிய வம்சத்தின் பின்னர் சந்திர வம்சம் உள்ளது. பின்னர் எவ்வாறு இராவண இராச்சியம் ஆரம்பிக்கிறது எனவும், எவ்வாறு பாரதம் தூய்மையற்றதாகுகிறது எனவும் காண்பிக்கப்பட்டுள்ளது. இராவண இராச்சியம் துவாபர, கலியுகங்களில் உள்ளது. அக்காலத்தின் திகதிகளும், கால எல்லையும் இங்கு எழுதப்பட்டுள்ளன. சங்கமயுகம், உச்சியின்; மத்தியில் காட்டப்பட்டுள்ளது. அங்கு இரதத்தின் சாரதியும் நிச்சயமாக இருக்க வேண்டும். தந்தை இந்த இரதத்தில் பிரவேசித்து, இராஜயோகத்தைக் கற்பிக்கிறார், அதனூடாக அவர்கள் இலக்ஷ்மியும் நாராயணனும் ஆகுகிறார்கள். இது எவருக்கும் விளங்கப்படுத்துவதற்கு மிகவும் இலகுவானதாகும். எவ்வளவு காலத்துக்கு இலக்ஷ்மி நாராயணனின் வம்சம் தொடர்கிறது? ஏனைய வம்சங்கள் அனைத்தும் எல்லைக்குட்பட்டவை, ஆனால், இதுவோ எல்லையற்றதாகும். அனைவரும் இந்த எல்லையற்ற வரலாற்றையும், புவியியலையும் அறிந்து கொள்ள வேண்டும். இப்பொழுது இது சங்கமயுகம். தேவ இராச்சியம் ஸ்தாபிக்கப்பட்டு வருகிறது. பழைய உலகமாகிய, இந்தக் கல்லுப் பூமி அழிக்கப்பட வேண்டும். விநாசம் இடம்பெறாவிட்டால், எவ்வாறு புதிய உலகம் உருவாக்கப்பட முடியும்? மக்கள் புது டெல்கியைப் பற்றிப் பேசுகிறார்கள். அது எப்பொழுது புது டெல்கியாகும் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். புது டெல்கி புதிய உலகில் இருக்கும். யமுனை ஆற்றங்கரைகளில் மாளிகைகள் இருந்தன என்பதை மக்கள் நினைவுகூர்ந்துள்ளார்;கள். அது இலக்ஷ்மி நாராயணனின் இராச்சியமாக இருந்தபொழுது, அது தெய்வீகப் பூமியாகிய, புது டெல்கி என அழைக்கப்பட்டது. சத்தியயுகத்துப் புதிய இராச்சியம் இலக்ஷ்மி நாராயணனுக்கு மாத்திரமே உரியதாக இருக்க முடியும். நாடகம் எப்பொழுது ஆரம்பிக்கிறது என்பதை மக்கள் மறந்து விட்டார்கள். பிரதான நடிகர்கள் யார் என்பதுவும் அறிந்து கொள்ளப்பட வேண்டும். பல நடிகர்கள் உள்ளார்கள், ஆகையால், பிரதானமானவர்களை மாத்திரம் நீங்கள் அறிவீர்கள். நீங்களும் பிரதான நடிகர்கள் ஆகுகிறீர்கள். நீங்கள் பிரதான பாகங்களை நடிக்கிறீர்கள். நீங்கள் ஆன்மீகச் சமூக சேவையாளர்கள். ஏனைய சமூகச் சேவையாளர்கள் அனைவரும் பௌதீகமானவர்கள்;. நீங்கள் ஆத்மாக்களுக்கு விளங்கப்படுத்துகிறீர்கள், ஆத்மாக்களே கற்கிறார்கள். சரீரங்களே கற்கின்றன என மக்கள் எண்ணுகிறார்கள். ஆத்மாக்களே இந்தப் புலன்களினூடாகக் கற்கின்றனர் என்பதை எவரும் அறியார். ஆத்மாவாகிய நான், சட்டநிபுணர் போன்றோர் ஆகுகிறேன். பாபா எங்களுக்குக் கற்பிக்கிறார். ஆத்மாவில் சம்ஸ்காரங்கள் உள்ளன. நீங்கள் இந்தச் சம்ஸ்காரங்களை உங்களுடன்; எடுத்துச் சென்று புதிய உலகில் ஆட்சிசெய்கிறீர்கள். சத்தியயுகத்தில் இருந்த இராச்சியம் மீண்டும் ஒருமுறை அவ்வாறே ஆரம்பமாகும். இதைப் பற்றி வினவுவதற்கு எதுவுமே இல்லை. பிரதான விடயம்: ஒருபொழுதும் சரீர உணர்வுடையவர்கள் ஆகாதீர்கள்! உங்களை ஆத்மாக்களாகக் கருதுங்கள்! எப்பாவச் செயல்களையும் செய்யாதீர்கள்! நினைவில் நிலைத்திருங்கள்! இல்லாவிட்டால், ஒரு பாவச்செயலின் சுமை நூறுமடங்காக ஆகும். உங்கள் எலும்புகள் முற்றாகவே நொருக்கப்படும். இதில் காமமே பிரதான விகாரம். தங்கள் குழந்தைகள் பெருமளவுக்குத் தொந்தரவு விளைவிக்கிறார்கள் எனவும், தாங்கள் அவர்களை அடிக்க வேண்டும் எனவும் சிலர் கூறுகிறார்கள். இதைப் பற்றி வினவுவதற்கு எதுவுமே இல்லை. அந்தப் பாவம் பெறுமதியற்ற ஒரு சிறிய பாவமாகும். உங்கள் தலை மீது பல பிறவிகளின் பாவச்சுமை உள்ளது. ஆகவே, எல்லாவற்றுக்கும் முதலில், குறைந்தபட்சம் அந்தப் பாவங்களையாவது அழித்துக் கொள்ளுங்கள். தூய்மையாகுவதற்கான மிகவும் இலகுவான வழியைத் தந்தை உங்களுக்குக் காட்டுகிறார். ஒரேயொரு தந்தையின் நினைவைக் கொண்டிருப்பதால், நீங்கள் தூய்மையாகுகிறீர்கள். கடவுள் குழந்தைகளாகிய உங்களுடன் பேசுகிறார். அவர் கூறுகிறார்: நான் ஆத்மாக்களாகிய உங்களுடன் பேசுகிறேன். இதை வேறெந்த மனிதர்களாலும் புரிந்துகொள்ள முடியாது. அவர்கள் தங்களைச் சரீரங்களாகக் கருதுகிறார்கள். தந்தை கூறுகிறார்: நான் ஆத்மாக்களுக்கு விளங்கப்படுத்துகிறேன். ஆத்மாக்களுக்கும் பரமாத்மாவுக்கும் இடையில் சந்திப்பு இடம்பெறுகின்றது என்பது நினைவுகூரப்பட்டுள்ளது. இதில் சப்தத்தை உருவாக்க வேண்டிய தேவையில்லை. இது ஒரு கல்வி. பலர் தொலைவிலிருந்து பாபாவிடம் வருகிறார்கள். தங்கள் புத்தியில் நம்பிக்கையைக் கொண்டிருப்பவர்கள் மேலும் முன்னேறுகையில், ஒரு பலமான ஈர்ப்பை உணர்வார்கள். இன்னமும், உங்களில் எவருக்கும் அந்த ஈர்ப்பு இல்லை, ஏனெனில் நீங்கள் நினைவில் நிலைத்திருப்பதில்லை. ஒருவர் பயணம் செய்து தனது வீட்டுக்கு அண்மையில் வரும்பொழுது, தனது வீட்டையும், குழந்தைகள் போன்றோரையும் நினைவுசெய்கிறார். அவர் வீட்டை அடைந்தவுடன், அனைவரையும் பெரும் சந்தோஷத்துடன்; சந்திக்கிறார். அவருடைய சந்தோஷம் தொடர்ந்தும் அதிகரிக்கிறது. முதலில், அவர் தனது மனைவியையும், பின்னர் தனது குழந்தைகள் போன்றோரையும் நினைவுசெய்கிறார். நீங்கள் வீடு செல்கிறீர்கள் எனவும், அங்கு தந்தையும், குழந்தைகளும் மாத்திரமே இருக்கிறார்கள் எனவும் நினைவுசெய்கிறீர்கள். உங்கள் சந்தோஷம் இரட்டிப்பாகுகின்றது. நீங்கள் வீடாகிய அமைதி தாமத்துக்கும், பின்னர் உங்கள் இராச்சியத்திற்;கும் செல்கிறீர்கள். நீங்கள் அனைவரும் செய்ய வேண்டியது நினைவில் நிலைத்திருப்பதே ஆகும். தந்தை கூறுகிறார்: மன்மனாபவ! உங்களை ஆத்மாக்களாகக் கருதித் தந்தையையும், உங்கள் ஆஸ்தியையும் நினைவுசெய்யுங்கள். பாபா குழந்தைகளாகிய உங்களை மீண்டும் வீட்டிற்கு அழைத்துச் செல்வதற்காகவே உங்களை அழகிய மலர்களாக்கித் தனது கண்களில் உங்களை அமர்த்துகிறார். இதில் எச்சிரமமும் இல்லை. நுளம்புக் கூட்டம் பறப்பதைப் போன்று, ஆத்மாக்களாகிய நீங்களும் தந்தையுடன் செல்வீர்கள். தூய்மையாகுவதற்கு, நீங்கள் வீட்டையன்றி, தந்தையையே நினைவுசெய்கிறீர்கள். பாபாவின் பார்வை முதலில் ஏழைக் குழந்தைகளின் மீதே வீழ்கிறது. பாபா ஏழைகளின் பிரபு. நீங்கள் கிராமங்களில் சேவை செய்வதற்குச் செல்கிறீர்கள். தந்தை கூறுகிறார்: நானும் வந்து உங்கள் கிராமத்தைத் தெய்வீகப் பூமி ஆக்குகிறேன். தற்பொழுது இது நரகமாகும்;; இது பழைய உலகமாகும். இது நிச்சயமாக அழிக்கப்பட வேண்டும். புதிய உலகில் உள்ள புது டெல்கி, சத்தியயுகத்தில் மாத்திரம் உள்ளது. அங்கே அது உங்கள் இராச்சியமாக இருக்கும். நீங்கள் முன்னைய கல்பத்தில் செய்ததைப் போன்றே, மீண்டும் ஒருமுறை உங்கள் சொந்த இராச்சியத்தை ஸ்தாபிக்கிறீர்கள் எனும் போதை உங்களுக்கு உள்ளது. இவ்வாறு அவ்வாறு கட்டடங்களைக் கட்டுவீர்கள் என நீங்கள் கூறுவதில்லை. இல்லை, நீங்கள் அங்கு செல்லும்பொழுது, இயல்பாகவே அவற்றைக் கட்ட ஆரம்பிப்பீர்கள், ஏனெனில் ஆத்மாக்களில் அந்தப் பாகங்கள் பதியப்பட்டுள்ளன. இங்கு, கற்பது மாத்திரம் உங்கள் பாகங்களாகும். நீங்கள் எவ்வாறு மாளிகைகளைக் கட்ட வேண்டும் என்பது நீங்கள் அங்கு இருக்கும்பொழுது, இயல்பாகவே உங்கள் புத்தியில் புகுகின்றது. முன்னைய கல்பத்தில் செய்ததைப் போன்றே, நீங்கள் அவற்றைக் கட்ட ஆரம்பிப்பீர்கள். இது முன்னதாகவே ஆத்மாக்களில் பதியப்பட்டுள்ளது. நீங்கள் ஒவ்வொரு கல்பத்திலும் வசித்த இடத்தில் அதே மாளிகைளைக் கட்டுவீர்கள். இங்கு வரும் புதியவர்களால் இவ்விடயங்களைப் புரிந்துகொள்ள முடியாது. நீங்கள் புதிய கருத்துக்களைச் செவிமடுப்பதற்கு இங்கு வந்து, புத்துணர்ச்சி ஊட்டப்பட்டுத் (சநகசநளாநன) திரும்பிச் செல்கிறீர்கள் எனப் புரிந்துகொள்கிறீர்கள். வெளிப்படும் புதிய கருத்துக்களும் நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டுள்ளன. தந்தை கூறுகிறார்: குழந்தைகளே, நான் சதா காலமும், இந்த எருதில் (இரதம்) அமர்ந்திருப்பதில் சந்தோஷத்தை அனுபவம் செய்வதில்லை. நான் குழந்தைகளாகிய உங்களுக்குக் கற்பிப்பதற்கு வருகிறேன். நான் சதா இந்த எருதில் அமர்ந்திருக்கிறேன் என்பதல்ல. ஒருவர் ஓர் எருதில் இரவுபகலாக அமர்ந்திருப்பாரா? அவருக்கு வருவதற்கும், செல்வதற்கும் ஒரு விநாடி மாத்திரமே எடுக்கிறது. இங்கு சதாகாலமும் அமர்ந்திருப்பது அவருக்கான நியதியல்ல. எங்களுக்குக் கற்பிப்பதற்கே பாபா தொலைவிலிருந்து வருகிறார். அதுவே அவருடைய வீடாகும். நாள் முழுவதும் அவர் இந்தச் சரீரத்தில் இருப்பதில்லை. அதில் அவர் சந்தோஷத்தை அனுபவம் செய்வதில்லை. அது ஒரு கூண்டுக்கிளியைப் போன்றிருக்கும். உங்களுக்கு விளங்கப்படுத்துவதற்கு, நான் இச்சரீரத்தைக் கடனாகப் பெறுகிறேன் ஞானக்கடலாகிய பாபா, உங்களுக்குக் கற்பிப்பதற்கு வருகிறார் என நீங்கள் கூறுகிறீர்கள். உங்களுக்குச் சந்தோஷப் புல்லரிப்பு ஏற்பட வேண்டும், அத்துடன் அந்தச் சந்தோஷம் குறைவடையவும் கூடாது. இந்த உரிமையாளர் இங்கு சதா காலமும் அமர்ந்திருக்கிறார். ஓர் எருதில் தொடர்ச்சியாக இருவர் இருப்பார்களா? சிவபாபா தனது சொந்தத் தாமத்தில் இருக்கிறார், அவர் இங்கு வந்தடைவதற்கு அதிகநேரம் எடுப்பதில்லை. ஒரு ரொக்கெட் எவ்வளவு வேகமானது எனப் பாருங்கள்! அது ஒலியை விடவும் வேகமானதாகும். ஓர் ஆத்மாவும் சின்னஞ் சிறிய ரொக்கெட் ஆவார். ஓர் ஆத்மா எவ்வளவு விரைவாகப் பறக்கிறார் எனப் பாருங்கள். அவர் இங்கிருந்து உடனடியாகவே இலண்டனுக்குச் செல்கிறார். ஒரு விநாடியில் ஜீவன்முக்தி என்பது நினைவுகூரப்பட்டுள்ளது. பாபாவும் ஒரு ரொக்கெட் ஆவார். அவர் கூறுகிறார்: உங்களுக்குக் கற்பிப்பதற்கு நான் இங்கு வருகிறேன். பின்னர் நான் எனது வீட்டிற்;குத் திரும்பிச் செல்கிறேன். நான் இவ்வேளையில் மிகவும் மும்முரமாக இருக்கிறேன். நானே தெய்வீகக் காட்சியை அருள்பவர்;. ஆகவே, நான் பக்தர்களுக்குப் பூரிப்பைக் கொடுக்க வேண்டும். நான் உங்களுக்குக் கற்பிக்கிறேன். பக்தர்கள் ஒரு காட்சியைப் பெற விரும்புகிறார்கள். அல்லது அவர்கள் ஏதோவொன்றை வேண்டுகிறார்கள். அவர்கள் ஜெகதாம்பாளிடம் அதிகம் வேண்டுகிறார்கள்; உலகத் தய்மார்களாகிய, நீங்கள் ஜெகதாம்பாக்கள் ஆவீர்கள். நீங்கள் உலக இராச்சியத்தைத் தானமாகக் கொடுக்கிறீர்கள். ஏழைகளுக்கே தானமளிக்கப்படுகிறது. நாங்களும் ஏழைகள், ஆகவே சிவபாபா எங்களுக்கு உலக இராச்சியத்தைத் தானமாகக்; கொடுக்கிறார். வேறெந்தத் தானமும் கிடையாது; அவர் கூறுகிறார்: தந்தையை நினைவுசெய்தால், உங்கள் பாவங்கள் அழிக்கப்பட்டு, நீங்கள் அமைதி தாமத்துக்குச் செல்வீர்கள். என்னை நினைவுசெய்தால், உங்கள் ஆயுட்காலம் அதிகரிக்கும் எனும் உத்தரவாதத்தை (பரயசயவெநந) நான் அளிக்கிறேன். சத்தியயுகத்தில் மரணம் என்ற குறிப்பே இல்லை. அது அமரத்துவ பூமியாகும். அங்கு மரணம் பற்றிய குறிப்பே கிடையாது. அவர்கள் ஒரு தோலை நீக்கிவிட்டு இன்னுமொன்றை எடுக்கிறார்கள். அதை மரணம் என அழைக்க முடியுமா? அது அமரத்துவ பூமி. அவர்கள் மீண்டும் ஒரு சிறு குழந்தையாக ஆகவுள்ளார்கள் என்னும் காட்சியைக் காண்கிறார்கள். ஆகவே, அது பெருஞ் சந்தோஷத்துக்குரிய ஒரு விடயமாகும். பாபா மீண்டும் சிறு குழந்தையாக விரும்புகிறார். சத்தியயுகத்தில், அவர் தனது வாயில் தங்கக்கரண்டியைக் கொண்டிருப்பார் என்பதை அறிவார். நான் தந்தையின் நீண்டகாலம் தொலைந்து இப்பொழுது கண்டெடுக்கப்பட்ட ஒரேயொரு புதல்வன். தந்தை என்னைத் தத்தெடுத்துள்ளார். நான் நீண்டகாலம் தொலைந்து இப்பொழுது கண்டெடுக்கப்பட்ட புதல்வன். ஆகவே, பாபா என்னை அதிகளவு நேசிக்கிறார். அவர் உடனடியாக என்னில் பிரவேசிக்கின்றார். இதுவும் ஒரு விளையாட்டு. ஒரு விளையாட்டில் எப்பொழுதும் சந்தோஷம் இருக்கிறது இந்த இரதம் மகா பாக்கியசாலி இரதம் என்பதை நீங்கள் அறிவீர்கள். உங்களுக்கு ஞானத்தைக் கொடுப்பதற்கு ஞானக்கடல் பிரவேசிக்கின்ற இரதம் இதுவே என்பது நினைவுகூரப்பட்டுள்ளது. ஒரு விடயத்தைப் பற்றிக் குழந்தைகளாகிய உங்களுக்குப் பெருஞ் சந்தோஷம் உள்ளது. அது உங்களுக்குக் கற்பிப்பதற்குக் கடவுள் வருகிறார் என்பதேயாகும். கடவுள் சுவர்க்க இராச்சியத்தை ஸ்தாபிக்கிறார். நாங்கள் அவருடைய குழந்தைகள்;. ஆகவே, நாங்கள் ஏன் நரகத்தில் இருக்கிறோம்? இது எவர் புத்தியிலும் புகுவதில்லை. நீங்கள் உலக அதிபதிகள் ஆகுவதற்குக் கற்கிறீர்கள் என்பதால், நீங்கள் பெரும் பாக்கியசாலிகள். ஆகவே, அத்தகையதொரு கல்வியில் நீங்கள் அதிகளவு கவனம் செலுத்த வேண்டும்! அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தந்தை தாயாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. இப்பொழுது உங்கள் பயணம் முடிவிற்கு வருகிறது எனும் இரட்டிப்புச் சந்தோஷத்தைப் பேணுங்கள். நாங்கள் முதலில், எங்கள் அமைதி தாமத்துக்கும், பின்னர் எங்கள் இராச்சியத்திற்;கும் செல்வோம்.

2. உங்கள் தலை மீதுள்ள பல பிறவிகளின் பாவச்சுமை அழிக்கப்பட வேண்டும். சரீர உணர்வுடையவர்கள் ஆகுவதால், எப்பாவச் செயலையும் செய்யாதீர்கள்.

ஆசீர்வாதம்:
நீங்கள் உங்களுடைய மனதில் மகா தானிகளாக இருந்து, உங்கள் மனச் சுதந்திரம் மூலம் ஆத்மாக்கள் அனைவருக்கும் அமைதி எனும் தானத்தை அளிப்பீர்களாக.

அந்தத் தாய்மார்கள் பௌதீகமாகப் பந்தனத்தில் இருந்தாலும் தங்கள் மனங்களில் விடுபட்டுள்ளதால், தங்கள் மனோபாவம் மூலமும், தூய எண்ணங்கள் மூலமும் உலகின் சூழலை மாற்றுகின்ற சேவையைச் செய்ய முடியும். இந்நாட்களில் உலகிற்கு மன அமைதி தேவைப்படுகின்றது. தங்கள் மனங்களில் விடுபட்டுள்ள ஆத்மாக்களால் தங்கள் மனங்கள் மூலம் அமைதி அதிர்வலைகளைப் பரப்ப முடியும். நீங்கள் அமைதிக்கடலான, தந்தையின் நினைவில் நிலைத்திருப்பதால், இயல்பாகவே அமைதிக் கதிர்கள் பரவுகின்றன. இவ்விதமாக அமைதியைத் தானமளிப்பவர்களே தங்கள் மனங்களில் மகா தானிகளாக உள்ளார்கள்.

சுலோகம்:
நீங்கள் அன்பு ரூபத்தின் அனுபவங்களைக் கூறுகின்றீர்கள், ஆனால் இப்பொழுது சக்தி ரூபத்தின் அனுபவங்களைக் கூறுங்கள்.