06.09.20    Avyakt Bapdada     Tamil Lanka Murli    16.03.86     Om Shanti     Madhuban


ஆன்மீக அப்பியாசம்.


பாப்தாதா குழந்தைகள் அனைவரினதும் இனிமையான, மௌன ஸ்திதியைப் பார்க்கிறார். எந்தளவிற்கு நீங்கள் ஒரு விநாடியில் மௌன ஸ்திதிக்குள் செல்வதில் ஸ்திரமாக இருப்பதைப் பயிற்சி செய்துள்ளீர்கள் எனப் பார்க்கிறார். நீங்கள் விரும்பியபோது உங்களால் இந்த ஸ்திதியில் ஸ்திரமாக இருக்க முடிகிறதா அல்லது அதற்கு நேரம் எடுக்கிறதா? உங்களின் அநாதியான ரூபம், இனிமையான மௌனம் ஆகும். ஆனால் உங்களின் ஆதிரூபம், சத்தத்திற்குள் வருவதாகும். எவ்வாறாயினும், உங்களின் ஆதியான மற்றும் அநாதியான சம்ஸ்காரம் மௌனமே. எனவே, உங்களின் அநாதியான சம்ஸ்காரத்தையும் உங்களின் அநாதியான ரூபத்தையும் அநாதியான சுபாவத்தையும் அறிந்திருக்கும் உங்களால் நீங்கள் விரும்பியபோது அந்த ரூபத்தில் ஸ்திரப்படுத்த முடிகிறதா? நீங்கள் 84 பிறவிகளாக சத்தத்திற்குள் வந்தீர்கள். அதனால் உங்களின் பயிற்சி எப்போதும் சத்தத்திற்குள் வருவதாகவே உள்ளது. எவ்வாறாயினும், உங்களின் அநாதியான ரூபத்தினாலும், இப்போது கல்பத்தின் இறுதிக்காலம் என்பதாலும் நீங்கள் மௌன வீட்டிற்குத் திரும்பிச் செல்ல வேண்டும். வீட்டிற்குத் திரும்பிச் செல்வதற்கான நேரம் இப்போது நெருங்கி வந்துள்ளது. இது இப்போது ஆரம்பம், மத்தி, இறுதிக்குரிய பாகங்களையும் முக்காலங்களையும் அனைத்தையும் முடித்து, உங்களின் ஆநாதியான ரூபத்திலும் உங்களின் அநாதியான ஸ்திதியிலும் ஸ்திரமாகுவதற்கான நேரம் ஆகும். இதனாலேயே, இந்த வேளையில், இந்தப் பயிற்சி மிகவும் அத்தியாவசியமானது. நீங்கள் உங்களின் பௌதீக அவயவங்களை வென்றவர்கள் ஆகிவிட்டீர்களா எனச் சோதித்துப் பாருங்கள். நீங்கள் சத்தத்திற்குள் வர விரும்பாவிட்டாலும், வாயின் சத்தம் உங்களை இழுக்கிறதா? இதுவே ஆன்மீக அப்பியாசம் எனப்படுகிறது.

இந்த நாட்களில், சகல நோய்களுக்குமான சிகிச்சை தேகப்பியாசம் எனக் கூறுவதைப் போல், இந்த வேளையில் ஆத்மாவைச் சக்திசாலி ஆக்குவதற்கு, உங்களுக்கும் இந்த ஆன்மீக அப்பியாசத்தின் பயிற்சி தேவைப்படுகிறது. உங்களைச் சுற்றி எத்தகைய சூழல் இருந்தாலும், ஏதாவது குழப்பங்கள் இருந்தாலும், சத்தத்திற்கு மத்தியில் இருந்தாலும், நீங்கள் இப்போது சத்தத்திற்கு அப்பாற்பட்ட ஸ்திதியை நீண்ட காலத்திற்குப் பயிற்சி செய்ய வேண்டும். அமைதிநிறைந்த சூழலில் ஒரு அமைதிநிறைந்த ஸ்திதியை உருவாக்குவது பெரியதொரு விடயம் இல்லை. நீங்கள் இப்போது அமைதியற்ற சூழலில் அமைதிநிறைந்தவராக இருப்பதைப் பயிற்சி செய்ய வேண்டும். இத்தகைய பயிற்சியை எவ்வாறு செய்வது என உங்களுக்குத் தெரியுமா? உங்களின் சம்ஸ்காரங்களால் உங்களின் பலவீனங்களின் குழப்பமாக இருந்தாலும் அல்லது வீணான எண்ணங்களின் குழப்பமாக இருந்தாலும், இத்தகைய குழப்பங்களின் மத்தியில் உங்களால் உங்களை அசைவற்றவர் ஆக்க முடிகிறதா? அல்லது, இதற்கு நேரம் எடுக்கிறதா? அதற்கு நேரம் எடுத்தால், எந்த நேரத்திலும் அது உங்களை ஏமாற்றக்கூடும். இறுதியில், நிறைவுபெறும் வேளையில் உங்களுக்கு அதிகளவு நேரம் கிடைக்கப்போவதில்லை. இறுதிப் பெறுபேற்றுக்கான பரீட்சைத்தாள் சில விநாடிகளுக்கோ அல்லது சில நிமிடங்களுக்கோ மட்டுமே இருக்கும். எவ்வாறாயினும், உங்களைச் சூழவுள்ள குழப்பமான சூழலின் மத்தியில் எந்தளவிற்கு நீங்கள் அசைக்க முடியாதவராக இருக்கிறீர்களோ அதன் அடிப்படையிலேயே உங்களுக்கு ஓரிலக்கம் கிடைக்கும். ஒரு குழப்பமான சூழலில் அசைவற்றவர் ஆகுவதற்கு, நீண்ட நேரம் எடுக்கும் பயிற்சியே உங்களிடம் இருந்தால், இறுதியில் பெறுபேறு என்னவாக இருக்கும்? ஆகவே, ஆன்மீக அப்பியாசத்திற்கான பயிற்சியைச் செய்யுங்கள். நீங்கள் விரும்பிய காலப்பகுதிக்கு, நீங்கள் விரும்பிய இடத்தில் உங்களின் மனதை உங்களால் ஸ்திரப்படுத்திக் கொள்ளக்கூடியதாக இருக்க வேண்டும். இறுதிப் பரீட்சை மிகவும் இலகுவானது. உங்களுக்கு என்ன பரீட்சை வரப் போகிறது என உங்களுக்கு முன்கூட்டியே கூறப்பட்டுள்ளது. ஆனால் மிகக் குறுகிய காலப்பகுதிக்கே ஓர் இலக்கம் கொடுக்கப்படும். உங்களின் ஸ்திதியும் சக்திநிறைந்ததாக இருக்க வேண்டும்.

உங்கள் ஒவ்வொருவரிடமும் ஒரு சரீரம், உங்களின் சரீர உறவுகள், உங்களின் சரீர சம்ஸ்காரங்கள், மனிதர்கள், உடமைகள், அதிர்வலைகள், சூழல் என அனைத்தும் இருந்தாலும், அவற்றில் எதுவும் உங்களைக் கவராமல் இருக்க வேண்டும். இதுவே பற்றை வென்றவராகவும் சக்திவாய்ந்த ரூபத்தைக் கொண்டிருத்தலும் எனப்படுகிறது. எனவே, உங்களுக்கு இத்தகைய பயிற்சி உள்ளதா? மக்கள் அழுது கொண்டிருப்பார்கள். ஆனால் நீங்கள் அசைக்க முடியாதவர்களாக இருப்பீர்கள். இயற்கையின் பஞ்சபூதங்களும் மாயையும் எந்தளவிற்குத் தமது இறுதிக் கோரிக்கையுடன் உங்களைத் தங்களை நோக்கி இழுக்க வந்தாலும், நீங்கள் அன்பாகவும் பற்றற்றவராகவும் இருந்தவண்ணம் தந்தையின் அன்பிலே திளைத்திருக்க வேண்டும். இதுவே பார்த்தும் பார்க்காமல் இருத்தல், கேட்டும் கேட்காதிருத்தல் எனப்படுகிறது. இத்தகைய பயிற்சி இருக்க வேண்டும். இதுவே இனிய மௌன ரூபத்தில் இருக்கும் ஸ்திதி எனப்படுகிறது. எவ்வாறாயினும், பாப்தாதா உங்களுக்கு நேரம் கொடுக்கிறார். ஏதாவது இல்லாமல் இருந்தால், அந்த இடைவெளியை இப்போதே உங்களால் நிரப்பிக் கொள்ள முடியும். ஏனெனில், நீண்ட காலப்பகுதியின் கணக்கைப் பற்றி உங்களுக்குக் கூறப்பட்டுள்ளது. எனவே, இப்போது உங்களுக்குச் சிறியதொரு வாய்ப்புக் கிடைத்துள்ளது. அதனால் நீங்கள் இந்தப் பயிற்சியில் முழுமையான கவனம் செலுத்த வேண்டும். நீங்கள் திறமைச் சித்தி எய்துகிறீர்களோ அல்லது வெறுமனே சித்திக்கான மதிப்பெண்களுடன் சித்தி எய்துகிறீர்களோ, அவை அனைத்தும் இந்தப் பயிற்சியிலேயே தங்கியுள்ளது. உங்களிடம் இத்தகைய பயிற்சி இருக்கிறதா? காலத்தின் மணி அடிக்கும்போது, நீங்கள் தயாராக இருப்பீர்களா? அல்லது நீங்கள் தயார் ஆகவேண்டும் என நினைத்துக் கொண்டிருப்பீர்களா? இந்தக் குறிப்பிட்ட பயிற்சியாலேயே எட்டு இரத்தினங்களின் மாலை சிறியதாக உள்ளது. இது மிகக் குறுகிய காலத்திற்குரியது. முக்தி அல்லது ஜீவன்முக்தியை ஒரு விநாடியில் பெறுவதற்கான உரிமை அனைவருக்கும் உள்ளது என நீங்கள் கூறுகிறீர்கள். எனவே, நிறைவு பெறும் வேளையில் ஓர் இலக்கத்தைப் பெறுவதும் குறுகிய காலத்திற்குரிய விடயமே ஆகும். எவ்வாறாயினும், சிறிதளவேனும் குழப்பம் இருக்கக்கூடாது. ஒரு புள்ளி எனக் கூறி, அந்த ஸ்திதியில் ஸ்திரமானவர் ஆகுங்கள். அந்தப் புள்ளி தளம்பல் அடையக்கூடாது. அந்த நேரத்தில் நீங்கள் நான் ஓர் ஆத்மா, நான் ஓர் ஆத்மா எனப் பயிற்சி செய்ய ஆரம்பிப்பதாக இருக்கக்கூடாது. அது உதவிசெய்யாது. ஏனென்றால், தாக்குதல் எல்லாப் பக்கங்களில் இருந்தும் வரும் என உங்களுக்கு முன்னரே கூறப்பட்டுள்ளது. அனைத்திற்கும் கடைசி ஒத்திகை நிகழும். பஞ்சபூதங்களுக்கும் மாயைக்கும் எந்தளவு சக்தி உள்ளதோ, அவை அனைத்தும் உங்களைப் பரீட்சிக்க வரும். அது அவற்றின் கடைசிப் பரீட்சை. அத்துடன் அதுவே நீங்கள் கர்மாதீத் ஆகி, கர்ம பந்தனத்தில் இருந்து விடுபடுவதற்கான உங்களின் கடைசி ஸ்திதி ஆகும். இரு பக்கங்களிலும் உள்ள காட்சிகள் மிகவும் சக்திநிறைந்தவையாக இருக்கும். அவை முழு விசையுடன் இருக்கும். இவையும் முழு விசையுடன் இருக்கும். எவ்வாறாயினும், ஒரு விநாடியில் நீங்கள் பெறும் வெற்றியானது, வெற்றி முரசங்களை அடிக்கச் செய்யும். இறுதிப் பரீட்சைத்தாள் என்னவென்று நீங்கள் புரிந்து கொண்டீர்களா? நீங்கள் அனைவரும் முதலாம் இலக்கத்தவர் ஆக விரும்பும் தூய எண்ணத்தை வைத்திருக்க வேண்டும். எனவே, நீங்கள் எங்கும் உள்ள அனைத்தையும் வெல்லும்போதே, முதலாம் இலக்கத்தவர் ஆகுவீர்கள். எந்தவொரு சந்தர்ப்பத்திலும் உங்களிடம் சிறிதளவு வீணான எண்ணம் இருந்தாலும், அல்லது உங்களின் நேரம் வீணாக்கப்பட்டால், உங்களின் இலக்கம் கீழே போய்விடும். எனவே, அனைத்தையும் சோதித்துப் பாருங்கள். உங்களைச் சுற்றியுள்ள அனைத்தையும் சோதித்துப் பாருங்கள். இரட்டை வெளிநாட்டவர்கள் அனைத்திலும் விரைவாகச் செல்ல விரும்புகிறார்கள். ஆகவே, இப்பொழுதில் இருந்தே ஆரம்பித்து, தீவிர முயற்சி செய்வதுடன் இந்தப் பயிற்சியில் முழுக்கவனத்தையும் செலுத்துங்கள். உங்களுக்குப் புரிகிறதா? உங்களுக்குக் கேள்வியும் தெரியும். அதற்கான நேரமும் தெரியும். எனவே, நீங்கள் அனைவரும் சித்தி எய்த வேண்டும். உங்களுக்குக் கேள்வியை முன்கூட்டியே தெரிந்தால், உங்களால் உங்களைத் தயார் செய்து சித்தி அடைய முடியும். நீங்கள் அனைவரும் சித்தி எய்தப் போகிறவர்கள்தானே? அச்சா.

இந்தப் பருவகாலத்தில், சந்திக்கும் அனைவருக்காகவும் பாப்தாதா பொக்கிஷக் களஞ்சியத்தைத் திறந்து வைத்திருக்கிறார். எதிர்காலத்தில் என்ன நிகழும் என்பதைப் பற்றிப் பின்னர் பாபா உங்களுக்குக் கூறுவார். நீங்கள் இப்போது, திறந்திருக்கும் இந்தப் பொக்கிஷக் களஞ்சியத்தில் இருந்து நீங்கள் எதைப் பெற வந்தீர்களோ அதை எடுத்துக் கொள்வீர்கள். நாடகத்தின் காட்சிகள் எப்போதும் மாறிக் கொண்டேயிருக்கும். ஆனால் இந்தப் பருவகாலத்தில், பாரதத்தைச் சேர்ந்தவர்களோ அல்லது இரட்டை வெளிநாட்டவர்களோ, அனைவரும் விசேடமான ஆசீர்வாதங்களைப் பெற்றுள்ளார்கள். பாப்தாதா தான் செய்த சத்தியத்தை நிறைவேற்றுவார். இந்தப் பருவகாலத்தின் பழத்தை உண்ணுங்கள். அந்தப் பழம், சந்திப்பும் ஆசீர்வாதங்களும் என்பதே ஆகும். நீங்கள் அனைவரும் இந்தப் பருவகாலத்தின் பழத்தை உண்பதற்காகவே வந்திருக்கிறீர்கள், இல்லையா? பாப்தாதாவும் குழந்தைகளைக் காண்பதில் மகிழ்ச்சி அடைகிறார். ஆனால் அனைத்தும் பௌதீக உலகில் கருதப்பட வேண்டியுள்ளது. குறைந்தபட்சம் இப்போது களிப்படையுங்கள். அதன்பின்னர் இந்தப் பருவகாலத்தின் இறுதியில் பாபா உங்களுக்கு அதைப் பற்றிக் கூறுவார்.

நீங்கள் சேவை செய்யும் இடங்கள் வேறுபட்டதாக இருந்தாலும், சேவை செய்யும் இலக்கு ஒன்றே ஆகும். ஊக்கமும் உற்சாகமும் ஒன்றே ஆகும். அதனால் பாப்தாதா சகல இடங்களுக்கும் விசேடமான முக்கியத்துவத்தைக் கொடுக்கிறார். ஓரிடம் இன்னோர் இடத்தை விட அதிக முக்கியத்துவம் வாய்ந்தது இல்லை. குழந்தைகள் எந்த இடங்களுக்கெல்லாம் சென்றிருக்கிறார்களோ, அந்த இடத்தில் இருந்து ஏதாவதொரு விசேடமான பெறுபேறு நிச்சயமாக வெளிப்படும். சில இடங்களின் பெறுபேறுகள் விரைவாகத் தென்படும் ஏனையவற்றின் பெறுபேறுகள் காலத்திற்கேற்ப வெளிப்படும். ஆனால் ஒவ்வோர் இடத்திற்கும் ஒரு சிறப்பியல்பு உள்ளது. பல நல்ல இரத்தினங்கள் வெளிப்பட்டுள்ளார்கள். நீங்கள் சாதாரணமானவர்கள் என நினைக்காதீர்கள். நீங்கள் அனைவரும் விசேடமானவர்கள். உங்களில் எவரேனும் விசேடமானவர்களாக இல்லாவிட்டால், நீங்கள் தந்தையை வந்தடைந்திருக்க முடியாது. சிறப்பியல்புகள் உள்ளன. ஆனால் சிலர் தமது சிறப்பியல்புகளைச் சேவையில் பயன்படுத்துகிறார்கள். ஆனால் மற்றவர்களோ இந்தக் கணத்தில் அவற்றைச் சேவைக்குப் பயன்படுத்துவதற்குத் தயார் ஆகுகிறார்கள். எவ்வாறாயினும், நீங்கள் அனைவரும் விசேடமான ஆத்மாக்கள். நீங்கள் அனைவரும் மகாராத்திகளும் மகாவீரர்களும் ஆவீர்கள். பாபா ஒவ்வொருவரையும் புகழ ஆரம்பித்தால், நீண்டதொரு மாலை தயார் செய்யப்படும். நீங்கள் சக்திகளைப் பார்த்தால், ஒவ்வொரு சக்தியும் ஒரு மகாத்மா ஆவார். ஓர் உலக உபகாரியாகத் தென்படுகிறார். நீங்கள் அத்தகையவர்கள், இல்லையா? அல்லது, நீங்கள் உங்களின் சொந்த இடத்திற்கு மட்டும் உபகாரிகளா? அச்சா.

06ஃ09ஃ2020 மதுவனம் அவ்யக்த பாப்தாதா ஓம் சாந்தி 19ஃ03ஃ86

மேன்மையான பேறுகளுக்கான நேரம் அமிர்தவேளையே.

இன்று, ஆன்மீகத் தோட்டத்தின் அதிபதி தனது ஆன்மீக ரோஜாத் தோட்டத்தைப் பார்க்கிறார். இந்த சங்கமயுகத்தில் மட்டுமே பாப்தாதாவால் இத்தகையதொரு ஆன்மீக ரோஜாத் தோட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. பாப்தாதா ஆன்மீக ரோஜாக்களின் ஆன்மீக நறுமணத்தைப் பார்க்கிறார். அத்துடன் மலர்ந்திருக்கும் ஆன்மீக ரோஜாக்களின் அழகையும் பார்க்கிறார். அனைவரும் நறுமணம் உள்ளவர்கள். ஆனால் சிலரின் நறுமணம் நிரந்தரமாக உள்ளது. ஏனையோரின் நறுமணம் குறுகிய காலத்திற்கு மட்டுமே தங்கியுள்ளது. சில ரோஜாக்கள் எப்போதும் மலர்ந்துள்ளன. ஆனால் ஏனையவையோ சிலவேளைகளில் மலர்ந்துள்ளன. அவை ஏனையவேளைகளில் வெப்பத்தால் அல்லது காலநிலையால் வாடிவிடுகின்றன. எவ்வாறாயினும், ஒவ்வொருவரும் ஆன்மீகத் தோட்டத்தின் அதிபதியின் தோட்டத்திலுள்ள ஆன்மீக ரோஜாக்களே. குறிப்பாகச் சில ஆன்மீக ரோஜாக்களிடம் ஞானம் என்ற நறுமணம் காணப்படுகிறது. சில ரோஜாக்களில் குறிப்பாக நினைவின் நறுமணம் காணப்படுகிறது. சிலவற்றில் தாரணையின் நறுமணம் காணப்படுகிறது. ஏனையவற்றில் குறிப்பாகச் சேவை செய்வதன் நறுமணம் காணப்படுகிறது. சிலரோ சகல வகையான நறுமணங்களாலும் நிரம்பியுள்ள ரோஜாக்களாக இருக்கிறார்கள். எனவே, ஒரு தோட்டத்தில், அனைத்திற்கும் முதலில் உங்களின் பார்வை யார் மீது செல்லும்? தொலைவில் இருந்தே உங்களைக் கவரும் நறுமணம் மிக்க மலர்களே! அனைவரின் பார்வையும் முதலில் அவர்களை நோக்கியே செல்லும். ஆன்மீகத் தோட்டத்தின் அதிபதி எப்போதும் தனது ஆன்மீக ரோஜாக்களைப் பார்க்கிறார். ஆனால் வரிசைக்கிரமமாகப் பார்க்கிறார். ரோஜாக்களான உங்கள் ஒவ்வொருவரிடமும் அவருக்கு அன்பு உள்ளது. ஏனெனில், உங்களுக்குத் தோட்டத்தின் அதிபதியிடம் ஆழ்ந்த அன்பு உள்ளது. பூக்களுக்குத் தமது அதிபதியிடம் அன்பு உள்ளது. அதிபதிக்கும் தனது பூக்களிடம் அன்பு உள்ளது. எவ்வாறாயினும், எப்போதும் சகல வகையான நறுமணங்களாலும் நிறைந்திருப்பதுடன் எப்போதும் மலர்ந்திருக்கும் ஆன்மீக ரோஜாக்களை மட்டுமே எப்போதும் காட்சிப்பெட்டியில் வைக்க முடியும். வாடிய பூக்களை காட்சிப் பெட்டியில் வைக்க மாட்டார்கள். ஒவ்வொரு நாளும் அமிர்த வேளையில், அன்பு மற்றும் சக்திக்கான விசேட பராமரிப்பைக் கொடுக்கும்போது, பாப்தாதா ஆன்மீக ரோஜாக்களுடன் ஒரு சந்திப்பைக் கொண்டாடுகிறார்.

கடவுளிடமிருந்து பராமரிப்பைப் பெறுவதற்கான விசேடமான நேரம் அமிர்தவேளையே ஆகும். அமிர்தவேளை கடவுளுடன் சந்திப்பைக் கொண்டாடுவதற்கான விசேடமான நேரம் ஆகும். இது ஆன்மீக உரையாடல் செய்வதற்கான நேரம் ஆகும். அமிர்தவேளை கள்ளங்கபடமற்ற பிரபுவின் ஆசீர்வாதங்களின் பொக்கிஷக்களஞ்சியத்தில் இருந்து இலகுவாக ஆசீர்வாதங்களைப் பெறுவதற்கான நேரம் ஆகும். கள்ளங்கபடமற்றவரிடமிருந்து நீங்கள் விரும்பிய எந்தவொரு பலனையும் பெறுகின்ற ஞாபகார்த்தம், இந்த அமிர்த வேளையில் இருந்தே தோன்றியது. இது முயற்சி எதுவும் செய்யாமல் திறந்துள்ள பொக்கிஷக் களஞ்சியத்தில் இருந்து பொக்கிஷங்களைப் பெறுவதற்கான நேரம் ஆகும். உங்களின் அனுபவத்தில் இருந்து இந்த அழகான நேரத்தைப் பற்றி நீங்கள் அறிவீர்கள், இல்லையா? அனுபவம் செய்தவர்கள் மட்டுமே இந்த மேன்மையான சந்தோஷத்தையும் மேன்மையான பேறுகளையும் பற்றி அறிவார்கள். எனவே, ஆன்மீக ரோஜாக்கள் அனைவரையும் காண்பதில் பாப்தாதா மகிழ்ச்சி அடைகிறார். ஆஹா! எனது ஆன்மீக ரோஜாக்களே! என பாபா கூறுகிறார். நீங்கள் ஆஹா! ஆஹா! என்ற பாடலைப் பாடுகிறீர்கள். அதனால் பாப்தாதாவும் இதே பாடலைப் பாடுகிறார். உங்களுக்குப் புரிகிறதா?

நீங்கள் பல முரளிகளைக் கேட்டுள்ளீர்கள். அவற்றைக் கேட்டதனால் நீங்கள் இப்போது நிரம்பியிருக்கிறீர்கள். நீங்கள் இப்போது மகாதானிகளாகி, அனைத்தையும் பகிர்ந்தளிப்பதற்கான திட்டங்களைச் செய்கிறீர்கள். இந்த உற்சாகம் மிகவும் நல்லது. இன்று, இது யுகே இலிருந்து வந்திருப்பவர்களின் அதாவது, ஓகே ஆக இருப்பவர்களின் முறையாகும். இரட்டை வெளிநாட்டவர்களின் ஒரு கூற்றைக் கேட்கும்போது பாப்தாதா எப்போதும் புன்னகை செய்கிறார். அது என்ன? நன்றி (தங்க் யூ). நன்றி எனக் கூறியவண்ணம் நீங்கள் தொடர்ந்து தந்தையை நினைக்கிறீர்கள். ஏனெனில் அனைத்திற்கும் முதலில், உங்களின் இதயபூர்வமாக நீங்கள் தந்தைக்கு நன்றி கூறுகிறீர்கள். எனவே, எப்போதெல்லாம் எவருக்கும் நீங்கள் நன்றி கூறுகிறீர்களோ, அனைத்திற்கும் முதலில் நீங்கள் தந்தையை நினைவு செய்வீர்கள், அல்லவா? பிராமண வாழ்க்கையில், அனைத்திற்கும் முதலில் நன்றிகள் இயல்பாகவே தந்தைக்கே உரியவை. அமர்ந்திருக்கும்போதும் நடக்கும்போதும், நீங்கள் பல தடவைகள் நன்றிகள் எனக் கூறுகிறீர்கள். இதுவும் தந்தையை நினைப்பதற்கான ஒரு வழிமுறையே. யுகே இலிருப்பவர்கள், வெவ்வேறு எல்லைக்குட்பட்ட சக்திகளைக் கொண்டிருப்பவர்களை ஒன்றாகச் சேர்ப்பதற்குக் கருவிகள் ஆகியுள்ளீர்கள். பல வகையான ஞானங்களின் சக்திகள் உள்ளன. நீங்கள் வெவ்வேறு சக்திகளைக் கொண்டிருப்பவர்களை, வெவ்வேறு பிரிவுகளைச் சேர்ந்தவர்களை, வெவ்வேறு மதங்களைச் சேர்ந்தவர்களை, வெவ்வேறு மொழிகளைப் பேசுபவர்களை ஒரேயொரு பிராமணக் குலத்திற்குள், பிராமண தர்மத்திற்குள், பிராமண மொழிக்குள் ஒன்றாகக் கொண்டுவந்துள்ளீர்கள். பிராமணர்களிடம் புதியவர்களால் புரிந்து கொள்ள முடியாத, தமக்கேயுரிய மொழி ஒன்று உள்ளது. நீங்கள் என்ன பேசுகிறீர்கள் என அவர்கள் நினைப்பார்கள். எனவே, பிராமணர்களிடம் தமக்கேயுரிய சொந்த மொழியும் தமக்கேயுரிய சொந்த அகராதியும் உள்ளன. எனவே, யுகே இலிருக்கும் நீங்கள், அனைவரையும் ஒன்றுசேர்ப்பதில் மும்முரமாக இருக்கிறீர்கள், இல்லையா? உங்களில் நல்லதொரு எண்ணிக்கை உள்ளது. அத்துடன் ஆழ்ந்த அன்பும் காணப்படுகிறது. ஒவ்வோர் இடத்திற்கும் அதற்கேயுரிய சிறப்பியல்பு உள்ளது. ஆனால் இன்று, பாபா யுகே ஐச் சேர்ந்தவர்களைப் பற்றிப் பேசுகிறார். யக்ஞத்திடம் அன்பு வைத்திருப்பதும் யக்ஞத்துடன் ஒத்துழைப்பதும் என்ற சிறப்பியல்பானது மிகத் தெளிவாகப் புலப்படுகிறது. அனைத்திற்கும் முதலில், ஒரு பங்கினை யக்யத்திற்கு, அதாவது, மதுவனத்திற்கு ஒதுக்குவதில் நீங்கள் நல்லதோர் இலக்கத்தைப் பெறுகிறீர்கள். மதுவனத்தின் நேரடி நினைவானது ஒரு விசேடமான உயர்த்தி ஆகுகிறது. ஒவ்வொரு பணியிலும் ஒவ்வோர் அடியிலும், மதுவனத்தின், அதாவது, தந்தையின், தந்தையின் கல்வியின், தந்தையின் பிரம்மபோஜனத்தின், தந்தையைச் சந்திப்பதன் நினைவு உள்ளது. மதுவனம் இயல்பாகவே உங்களுக்குத் தந்தையை நினைவூட்டுகிறது. நீங்கள் எங்கே வசித்தாலும், மதுவனத்தை நினைவு செய்தல் என்றால், விசேடமான அன்பைக் கொண்டிருத்தல் என்று அர்த்தம். இதுவே ஓர் உயர்த்தி ஆகுகிறது. அதன்பின்னர் உயரே ஏறுகின்ற முயற்சியைச் செய்வதில் இருந்து நீங்கள் விடுதலை அடைகிறீர்கள். நீங்கள் ஓர் ஆளியைப் போட்டதும், ஒரு விநாடியில் அங்கே வந்துவிடுகிறீர்கள்.

பாப்தாதாவிற்கு ஏனைய வைரங்கள் அல்லது முத்துக்கள் தேவையில்லை. தந்தைக்கு, அன்புடன் மிகச்சிறியதாக எதையும் கொடுத்தாலும், அது ஓர் இரத்தினம் போன்றதே ஆகும். இதனாலேயே, சுதாமாவின் அரிசி நினைவுகூரப்படுகிறது. ஒரு சின்னஞ்சிறிய ஊசியினாலும் நீங்கள் மதுவனத்தை அன்புடன் நினைவு செய்கிறீர்கள் என்பதே அதன் அர்த்தம் ஆகும். எனவே, அதுவும் ஒரு விலைமதிப்பற்ற இரத்தினம் ஆகுகிறது. ஏனெனில் அதன் பெறுமதி அன்பிலேயே தங்கியுள்ளது. பெறுமதி, அன்பிற்குரியது. ஒருவர் அன்பில்லாமல் அதிகளவில் கொடுத்தாலும், அது சேமிக்கப்பட மாட்டாது. ஆனால் நீங்கள் அன்புடன் சிறிதளவைக் கொடுத்தாலும், அங்கு பலமில்லியன் மடங்கு சேமிக்கப்படுகிறது. எனவே, அன்பு இருக்கும்போது தந்தை அதை விரும்புகிறார். எனவே, யக்யத்தில் அன்பு வைத்திருப்பதும், ஆரம்பத்தில் இருந்தே யக்யத்துடன் ஒத்துழைப்பதும் யுகே ஐச் சேர்ந்தவர்களின் சிறப்பியல்பு ஆகும். இதுவும் இலகு யோகமே. ஒத்துழைப்பதும் இலகுயோகமே. உங்களுக்குள் ஒத்துழைக்கும் எண்ணம் ஏற்படும்போது, தந்தையையே நீங்கள் நினைக்கிறீர்கள், அல்லவா? எனவே, ஒத்துழைப்பவர்கள் இயல்பாகவே இலகு யோகிகள் ஆகுகிறார்கள். நீங்கள் தந்தையுடனும் மதுவனத்துடனும், அதாவது, பாப்தாதாவுடன் யோகம் செய்கிறீர்கள். எனவே, ஒத்துழைப்பவர்களும் இலகுயோகம் என்ற பாடத்தில் நல்லதோர் இலக்கத்தைப் பெறுகிறார்கள். இதயபூர்வமான ஒத்துழைப்பைத் தந்தை விரும்புகிறார். இதனாலேயே, இதன் ஞாபகார்த்தமான தில்வாலா ஆலயம் இங்கே கட்டப்பட்டுள்ளது. எனவே, இதயங்களுக்கு சௌகரியம் அளிக்கும் தந்தை, இதயபூர்வமான அன்பையும் இதயபூர்வமான ஒத்துழைப்பையும் விரும்புகிறார். சிறிய இதயங்களைக் கொண்டிருப்பவர்கள், சிறிய பேரங்களுடன் சந்தோஷம் அடைகிறார்கள். ஆனால், பெரிய இதயங்களைக் கொண்டிருப்பவர்கள் எல்லையற்ற பேரங்களைச் செய்கிறார்கள். பெரிய இதயமே அத்திவாரம் ஆகுகிறது. எனவே, வளர்ச்சியும் மிகப் பெரியது. சில மரங்களை நீங்கள் கண்டிருப்பீர்கள். அவற்றின் கிளைகளே அடிமரம் போல் ஆகிவிடும். எனவே, அடிமரமும் கிளைகளும் யுகே என்ற அத்திவாரத்தில் இருந்தே தோன்றின. இப்போது, அந்தக் கிளைகளும் அடிமரங்கள் ஆகிவிட்டன. அந்த அடிமரங்களில் இருந்து கிளைகள் தோன்றுகின்றன. உதாரணமாக, அவுஸ்திரேலியா, அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஆபிரிக்கா வெளிப்பட்டன. அனைத்தும் அடிமரங்கள் ஆகிவிட்டன. ஒவ்வொரு அடிமரத்தில் இருந்தும் வெளிப்பட்டுள்ள கிளைகள் மிக நன்றாக வளர்கின்றன. ஏனென்றால், அன்பு மற்றும் ஒத்துழைப்பு எனும் நீரால் அத்திவாரம் பலமானதாக ஆகியுள்ளது. இதனாலேயே, வளர்ச்சியும் நல்லது. பழமும் நல்லதே. அச்சா.

ஆசீர்வாதம்:
நீங்கள் பணிவான இதயத்தைக் கொண்டவர்களாகி, சரீர உணர்வைத் துறப்பதன் மூலம் கோபத்தில் இருந்து விடுபடுவீர்களாக.

தமது சரீர உணர்வைத் துறக்கும் குழந்தைகளால் ஒருபோதும் கோபப்பட முடியாது. ஏனென்றால், கோபப்படுவதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. 1) யாராவது பொய்கள் சொல்லும்போது. 2) யாராவது அவமதிக்கும்போது. இந்த இரண்டு விடயங்களும் கோபத்திற்குப் பிறப்பு கொடுக்கின்றன. இத்தகைய சூழ்நிலைகளில், பணிவான இதயத்தைக் கொண்டவராக இருக்கும் ஆசீர்வாதத்தால், உங்களை இகழ்பவர்களிலும் கருணை கொள்ளுங்கள். உங்களை அவமதிப்பவர்களை அணையுங்கள். உங்களை இகழ்பவர்களை உங்களின் நண்பர்களாகக் கருதுங்கள். அப்போது அது ஓர் அற்புதம் எனச் சொல்லப்படும். இத்தகைய மாற்றத்தை நீங்கள் காட்டினால், நீங்கள் உலகிற்கே வெளிப்படுத்தப்படுவீர்கள்.

சுலோகம்:
மகிழ்ச்சியை அனுபவம் செய்வதற்கு, எந்த விதத்திலும் மாயையில் தங்கியிருப்பதை விட்டு, சுதந்திரமானவர் ஆகுங்கள்.