06.10.20        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்:
இனிய குழந்தைகளே, தந்தை எவ்வாறு எதிர்கால 21 பிறவிகளுக்குச் சந்தோஷத்தைக் கொடுக்கின்றாரோ, அதேபோன்று நீங்களும் தந்தையின் உதவியாளராக வேண்டும். அன்பான புத்தியுடையவர் ஆகுங்கள். எவருக்கும் துன்பம் விளைவிப்பது பற்றி ஒருபொழுதும் எண்ணிக் கூடப் பார்க்காதீர்கள்.

கேள்வி:
ரூப்பும், பசாந்துமாகிய குழந்தைகளாகிய உங்கள் பணி என்ன? நீங்கள் தந்தையிடமிருந்து என்ன கற்பித்தல்களைப் பெற்றுள்ளீர்கள்?

பதில்:
ரூப்பும், பசாந்துமாகிய குழந்தைகளாகிய உங்களது பணி, உங்களுடைய உதடுகளிலிருந்து சதா ஞான இரத்தினங்களையே வெளிவர விடுவதாகும். உங்கள் உதடுகளிலிருந்து ஒருபொழுதும் கற்கள் வெளிவரக்கூடாது. சகல குழந்தைகளுக்குமான தந்தையின் கற்பித்தல்கள்: 1) ஒருவரையொருவர் தொந்தரவு செய்யாதீர்கள். ஒருபொழுதும் கோபம் கொள்ளாதீர்கள்; அது அசுர குணங்களுடைய மனிதர்களின் வேலையாகும். 2) உங்கள் மனதால்கூட என்றுமே எவருக்கும் துன்பம் விளைவிக்க நினைக்காதீர்கள். 3) அனைத்தையும் சகித்துக் கொள்ளுங்கள்: புகழ்ச்சி, இகழ்ச்சி, மரியாதை, அவமரியாதை. எவராவது எதையாவது கூறினால் மௌனமாக இருங்கள். உங்கள் சொந்தக் கைகளில் சட்டத்தை எடுக்காதீர்கள்.

பாடல்:
நீங்களே அன்புக்கடல். நாங்கள் ஒரு துளிக்காக ஏங்குகின்றோம்.

ஓம் சாந்தி.
ஞானமும் அறியாமையும் இருக்கின்றன. குழந்தைகளாகிய உங்களிடம் இப்பொழுது ஞானம் உள்ளது. பக்தர்கள் யாரைப் புகழ்கின்றார்கள்? இங்கே அமர்ந்திருக்கும் குழந்தைகளாகிய நீங்கள் யாரின் புகழைச் செவிமடுக்கின்றீர்கள்? இதில் பகலுக்கும் இரவுக்குமான வித்தியாசம் உள்ளது. அவர்கள் தொடர்ந்தும் வெறுமனே புகழ் பாடுகின்றார்கள். அவர்களுக்கு அவரிடம் அந்தளவு அன்பு இல்லை, ஏனெனில் அவர்கள் அவரை இனங்காணவில்லை. தான் அன்புக்கடல் என்றும், உங்களையும் அன்புக்கடல்கள் ஆக்குகின்றார் என்றும் தந்தை தனது அறிமுகத்தை உங்களுக்குக் கொடுத்துள்ளார். அன்புக்கடலான தந்தை அனைவராலும் அதிகளவில் நேசிக்கப்படுகின்றார். அங்கேயும் அனைவரும் ஒருவர் மீது ஒருவர் பெருமளவு அன்பு கொண்டிருக்கிறார்கள். நீங்கள் இதை இங்கே கற்கின்றீர்கள். நீங்கள் எவரையும் எதிர்க்கக்கூடாது, பாபா அதை வேறு வார்த்தைகளில் உவர்நீர் போன்று ஆகுதல் எனக் கூறுகிறார். உங்களுக்குள்ளே எவர் மீதும் வெறுப்பு இருக்கக்கூடாது. மற்றவர்களை வெறுப்பவர்கள் கலியுக நரகவாசிகளாவர். நீங்கள் அனைவரும் சகோதர, சகோதரிகள் என்பதை அறிவீர்கள். நீங்கள் அமைதிதாமத்தில் இருக்கின்றபொழுது, நீங்கள் அனைவரும் சகோதரர்கள். நீங்கள் இந்தக் கர்ம ஷேத்திரத்தில் உங்கள் பாகங்களை நடிக்கின்றபொழுது, கடவுளின் குழந்தைகளான நீங்கள் சகோதர, சகோதரிகள், கடவுளே ஞானக்கடல் எனவும், அன்புக்கடல் எனவும் புகழப்படுகின்றார். அவர் அனைவருக்கும் சந்தோஷத்தைக் கொடுக்கின்றார் என்பதே இதன் அர்த்தமாகும். தந்தை எவ்வாறு 21 பிறவிகளுக்குச் சந்தோஷத்தைக் கொடுக்கின்றாரோ, நானும் அத்தகைய பணியைச் செய்கின்றேனா? என நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் சொந்த இதயத்தையே கேட்க வேண்டும். ஒருவர் தந்தையின் உதவியாளர் ஆகாமல், மற்றவர்களை நேசிக்காது, அன்பற்ற புத்தியைக் கொண்டிருந்தால், அவர் அழிவிற்கே இட்டுச் செல்லப்படுகின்றார். அன்பற்ற புத்தியைக் கொண்டிருப்பது அசுரர்களின் வேலையாகும். நீங்கள், உங்களைக் கடவுளின் சமுதாயத்தினர் எனக் கூறிக் கொண்டு, பின்னர் ஒருவருக்கொருவர் துன்பம் விளைவித்தால் அது அசுரத்தனம் என அழைக்கப்படுகின்றது. குழந்தைகளாகிய நீங்கள் எவருக்கும் துன்பம் கொடுக்கக்கூடாது. நீங்கள் துன்பத்தை நீக்கிச் சந்தோஷத்தை அருள்பவருமாகிய தந்தையின் குழந்தைகள். ஆகையினால் நீங்கள் எவருக்கும் துன்பம் விளைவிப்பதைப் பற்றி நினைக்கவும் கூடாது. அவை இறை சமுதாயத்தின் பாகமல்ல, அது அசுர சமுதாயத்தின் பாகம், ஏனெனில் அவர்கள் சரீர உணர்வுடையவர்கள். அவர்களால் என்றுமே நினைவு யாத்திரையில் நிலைத்திருக்க முடியாது. நீங்கள் நினைவு யாத்திரையில் நிலைத்திருக்காவிட்டால் எந்த நன்மையுமில்லை. உங்களுக்கு உங்களுடைய ஆஸ்தியைக் கொடுக்கின்ற தந்தையை நீங்கள் நிச்சயமாக நினைவுசெய்ய வேண்டும். அப்பொழுதே உங்கள் பாவங்கள் அழிக்கப்படும். அரைக்கல்பமாக நீங்கள் ஒருவரையொருவர் சந்தோஷமற்றவர்கள் ஆக்கி வருகிறீPர்கள். சண்டை, சச்சரவுகளில் தொடர்ந்தும் ஈடுபட்டுத் தொந்தரவை உருவாக்குபவர்கள் அசுர சமுதாயத்தினர் எனக் கருதப்படுகின்றனர். நீங்கள் ஒரு முயற்சியாளராக இருந்தபொழுதிலும், எவ்வளவு காலத்துக்கு நீங்கள் தொடர்ந்தும் துன்பத்தை விளைவிப்பீர்கள்? இதனாலேயே பாபா கூறுகின்றார்: உங்கள் அட்டவணையை வைத்திருங்கள். ஓர் அட்டவணை வைத்திருப்பதன் மூலம், உங்கள் பதிவேடு சீர்திருந்தியுள்ளதா அல்லது இன்னமும் அதே அசுர நடத்தை உள்ளதா என நீங்கள் அறிந்து கொள்வீர்கள். பாபா எப்பொழுதும் கூறுகின்றார்: என்றுமே எவருக்கும் துன்பம் விளைவிக்காதீர்கள். புகழ்ச்சி, இகழ்ச்சி, மரியாதை, அவமரியாதை, சூடு, குளிர் அனைத்தும் சகித்துக் கொள்ளப்பட வேண்டும். ஒருவர் ஏதாவது கூறினால், நீங்கள் மௌனமாக இருங்கள். நீங்கள் (பதிலுக்கு) அவருக்கு வேறொன்றைக் கூறுவதாக இருக்கக்கூடாது. ஒருவர் மற்றவரைச் சந்தோஷமற்றவர் ஆக்கும்பொழுது, தந்தை அவருக்கு விளங்கப்படுத்துவார். குழந்தைகளாகிய நீங்கள் மற்றைய குழந்தைகளுக்கு எதுவுமே கூறக்கூடாது. சட்டத்தை உங்கள் சொந்தக் கைகளில் எடுக்காதீர்கள். உங்களுக்கு ஏதாவது பிரச்சனை இருந்தால் தந்தையிடம் வாருங்கள். ஒருவர் இன்னொருவரை அடிப்பதற்கு அனுமதி இல்லை என்று கூறுகின்ற அரசாங்கச் சட்டமும் உள்ளது. நீங்கள் முறைப்பாடு செய்யலாம், ஆனால் சட்ட நடவடிக்கை எடுப்பது அரசாங்கத்தின் கடமையாகும். நீங்களும் இந்த அரசாங்கத்திடம்; வரவேண்டும். சட்டத்தை உங்கள் சொந்தக் கைகளில் எடுக்காதீர்கள். இது உங்களுடைய வீடாகும். இதனாலேயே பாபா கூறுகின்றார்: ஒவ்வொரு நாளும் சபையைக் கூட்டுங்கள். சிலர் சிவபாபாதான் இந்தக் கட்டளையை இடுகின்றார் என்று கூட புரிந்துகொள்வதில்லை. பாபா உங்களுக்குக் கூறியுள்ளார்: எப்பொழுதும் சிவபாபாவே உங்களுடன் பேசுகின்றார் என நினைவுசெய்யுங்கள். பிரம்மா உங்களுக்குக் கூறுகின்றார் என எண்ண வேண்டாம். சிவபாபாவே உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார் என எப்பொழுதும் நினைப்பதனால், உங்களால் அவரை நினைவுசெய்ய முடியும். சிவபாபா உங்களுடன் ஞானத்தைப் பேசுவதற்காக இந்த இரதத்தை எடுத்துள்ளார். தந்தை உங்களுக்குச் சதோபிரதான் ஆகுவதற்கான வழியை விளங்கப்படுத்துகின்றார். அவர் மறைமுகமானவர், ஆனால் நீங்களோ வெளிப்படையானவர்கள். நீங்கள் பெறுகின்ற வழிகாட்டல்கள் அனைத்தும் சிவபாபாவின் வழிகாட்டல்கள் எனப் புரிந்துகொள்ளுங்கள், நீங்கள் பாதுகாப்பாக இருப்பீர்கள். நீங்கள் பாபா, பாபா என சிவனுக்கே கூறுகின்றீர்கள். நீங்கள் உங்கள் ஆஸ்தியையும் அவரிடமிருந்தே பெறுகின்றீர்கள். அந்த ஒரேயொருவருடனான உங்கள் நடத்தை அதிகளவு மதிப்பும், இராஐரீகமும் நிறைந்ததாக இருக்க வேண்டும். பாபா, நான் இலக்ஷ்மியாக அல்லது நாராயணனாக ஆகுவேன் என நீங்கள் கூறுகின்றீர்கள். பின்னர், நீங்கள் ஒருவேளை இரண்டாவது அல்லது மூன்றாவது ஆகலாம், அல்லது சூரிய வம்சத்தவர் இல்லையெனில், சந்திர வம்சத்தவராக ஆகக்கூடும். நாங்கள் பணிப்பெண்களாகவோ அல்லது வேலையாட்களாகவோ வந்தாலும் பரவாயில்லை என நினைக்காதீர்கள். பிரiஐகளாகுவதும் நல்லதல்ல. நீங்கள் இங்கே தெய்வீகக் குணங்களைக் கிரகிக்க வேண்டும். எந்தவிதமான அசுர நடத்தையும் இருக்கக்கூடாது. அவர்களுக்கு நம்பிக்கையில்லாதபொழுது அவர்கள் கூறுகிறார்கள்: சிவபாபா இவரினுள் பிரவேசிக்கின்றார் என்பதை நாங்கள் நம்பமாட்டோம். மாயை எனும் தீய ஆவி வரும்பொழுது, அவர்கள் தங்களுக்குள்ளே இவ்வாறு பேசுகின்றார்கள். அசுர சுபாவமுள்ளவர்கள் சந்தித்து, தொடர்ந்தும் தங்களுக்குள்ளே இவ்வாறு பேசுகின்றார்கள். அவர்களின் உதடுகளிலிருந்து அசுரத்தனமான விடயங்களே வெளிப்படுகின்றன. தந்தை கூறுகின்றார்: ஆத்மாக்களாகிய நீங்கள் ரூப்பும், பசாந்தும் ஆகுகின்றீர்கள், எனவே இரத்தினங்கள் மாத்திரமே உங்கள் வாயிலிருந்து வெளியாக வேண்டும். கற்கள் வெளியாகினால் புத்தி அசுரத்தனமானது என்றே அர்த்தமாகும். குழந்தைகளாகிய நீங்கள் பாடலைக் கேட்டீர்கள். பாபாவே அன்புக்கடலும், சந்தோஷக்கடலும் எனக் குழந்தைகள் கூறுகின்றார்கள். இதுவே சிவபாபாவின் புகழ்ச்சி. தந்தை கூறுகின்றார்: உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதித் தந்தையை நினைவுசெய்யுங்கள். பல மிகவும் நல்ல குழந்தைகள் இதில் தோல்வியடைகின்றார்கள். அவர்களால் ஆத்ம உணர்வு ஸ்திதியில் நிலைத்திருக்க முடிவதில்லை. அவர்கள் ஆத்ம உணர்வுடையவர்கள் ஆகும்பொழுதே அவர்களால் ஓர் உயர்ந்த அந்தஸ்தைக் கோரமுடியும். பல குழந்தைகள் பயனற்ற விடயங்களில் பெருமளவு நேரத்தை வீணாக்குகின்றார்கள். அவர்கள் ஞான விடயங்களில் கவனஞ் செலுத்துவதில்லை. இதுவும் நினைவு கூரப்படுகின்றது: வீட்டு வாயிலில் ஓடிக்கொண்டிருக்கும் கங்கைக்கு எந்த மதிப்பும் இருப்பதில்லை. அவர்களுடைய சொந்த வீட்டிலிருப்பவை மீது அவர்கள் அந்தளவு மதிப்பும் வைத்திருப்பதில்லை. அவர்கள் தங்களுடைய சொந்த வீட்டில் கிருஷ்ணரின் படங்களையும், விக்கிரகங்களையும் வைத்திருப்பதால், ஏன்; தொலைவில் ஸ்ரீநாத்துவாராவிற்கு போன்றவற்றுக்குப் யாத்திரை செல்கின்றார்கள்? சிவனின் ஆலயத்தில் ஒரு கல்லினாலான லிங்கம் மாத்திரமே உள்ளது. கற்கள் மலையிலிருந்து கீழே வந்து, நீரில் ஒன்றுசேர்ந்து, உருண்டு, லிங்கமாக உருவெடுக்கின்றன. சில கற்களில் தங்கப் புள்ளிகளும் உள்ளன. அவர்கள் தங்கத்தினாலான கைலாய மலை பற்றிப் பேசுகின்றார்கள். மலைகளிலேயே தங்கம் கண்டுபிடிக்கப்படுகின்றது, இல்லையா? சிறிதளவு தங்கத்தைக் கொண்ட சில கற்கள் உள்ளன. பின்னர் அவை மிக அழகாக வட்டமாக உருவெடுக்கின்றன. அவை விற்கப்படுகின்றன. அவர்கள் பளிங்கினாலும் விசேடமானவற்றை உருவாக்குகின்றார்கள். பக்தி மார்க்கத்தில் உள்ளவர்களை ஏன் அதிகளவு அலைந்து திரிகின்றீர்கள் என நீங்கள் கேட்டால், அவர்கள் குழப்பமடைகிறார்கள். தந்தையே கூறுகின்றார்: குழந்தைகளாகிய நீங்கள் பெருமளவு பணத்தை வீணாக்கி விட்டீர்கள். உங்களுடைய அலைந்து திரிதலும் நாடகத்தின் ஒரு பாகமாகும். இது ஞானத்தையும், பக்தியையும் பற்றிய நாடகமாகும். குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது முழுமையான புரிந்துணர்வுடையவர்கள் ஆக்கப்படுகின்றீர்கள். இந்த ஞானமே சந்தோஷத்திற்கான பாதையாகும். இந்த ஞானத்தின் மூலம் நீங்கள் சுவர்க்க இராச்சியத்தைப் பெறுகின்றீர்கள். இந்நேரத்தில் சகல அரசர்களும், அரசிகளும், பிரஜைகளும் நரகத்தின் அதிபதிகள். ஒருவர் மரணிக்கின்றபொழுது, அவர் சுவர்க்கவாசியாகி விட்டார் என மக்கள் கூறுகின்றார்கள். நீங்கள் இப்பொழுது இவ்விடயங்களைப் புரிந்துகொண்டுள்ளீர்கள். நாங்கள் சுவர்க்கவாசிகள் ஆகுவதற்காக, சுவர்க்கத்தை ஸ்தாபிக்கும் தந்தையுடன் இருக்கின்றோம் என நீங்கள் இப்பொழுது கூறுகின்றீர்கள். நீங்கள் ஞானத் துளிகளைப் பெறுகின்றீர்கள். நீங்கள் இந்த ஞானத்தில் சிறிதளவு கேட்டாலும், நிச்சயமாகச் சுவர்க்கத்திற்குச் செல்கிறீர்கள். மிகுதி எங்களின் முயற்சியிலேயே தங்கியுள்ளது. அவர்கள் கங்கைக் கலசத்தின் நீரில் சிறிதளவை அருந்துவதனால், தாங்கள் தூய்மையற்றவரிலிருந்து தூய்மையாகுவார்கள் என நம்புகின்றார்கள். அவர்கள் கலசத்தில் சிறிதளவு நீரைத் தங்களுடன் எடுத்துச் சென்று ஒவ்வொரு நாளும் தாங்கள் நீராடும் நீரில் ஒரு துளியை இடுகின்றார்கள். அவர்கள் அதனைக் கங்கையில் நீராடுவதாக நம்புகின்றார்கள். அவர்கள் கங்கைநீரைத் தங்களுடன் வெளிநாடுகளுக்கும் எடுத்துச் செல்கின்றார்கள். அவை அனைத்தும் பக்தியாகும். தந்தை கூறுகின்றார்: குழந்தைகளே, மாயை உங்களை மிகக்கடுமையாக அறைகின்றாள்; அவள் உங்களைப் பாவச்செயல்கள் செய்ய வைக்கின்றாள். ஆகையினால், சபையைக் கூட்டுங்கள். உங்களுக்காகச் சபை கூட்டுவது நல்லது. நீங்கள் உங்களுக்கே இராச்சிய திலகத்தை இடுகின்றீர்கள். ஆகையினால், உங்களைச் சோதியுங்கள். தமோபிரதானிலிருந்து சதோபிரதானாகுங்கள். நீங்கள் என்ன செய்ய வேண்டுமென, தந்தை ஸ்ரீமத் கொடுக்கின்றார். தெய்வீகக் குணங்களைக் கிரகியுங்கள். எதையாவது செய்பவர்கள் அதன் வெகுமதியைப் பெறுகிறார்கள். நீங்கள் சந்தோஷத்தில் மெய்சிலிர்க்க வேண்டும். நீங்கள் எல்லையற்ற தந்தையைக் கண்டுகொண்டீர்கள். ஆகையினால், நீங்கள் அவரது சேவையில் உதவியாளர்கள் ஆகவேண்டும். குருடர்களுக்குக் கைத்தடி ஆகுங்கள். நீங்கள் எந்தளவிற்கு இவ்வாறு ஆகுகின்றீர்களோ, அந்தளவிற்கு உங்களுக்கு நன்மை பயப்பீர்கள். பாபாவை மீண்டும் மீண்டும் நினைவு செய்யுங்கள். எங்கேயாவது விசேடமாக நடாத்தப்படும் தியானத்தில் அமர்ந்திருத்தல் என்ற கேள்விக்கு இடமில்லை. நீங்கள் நடக்கும்பொழுதும், உலாவித் திரியும்பொழுதும் அவரை நினைவுசெய்ய வேண்டும். நீங்கள் புகைவண்டிகளிலும் சேவை செய்யலாம். யார் அதிமேலானவர் என எவருக்கும் நீங்கள் விளங்கப்படுத்தலாம். அவரை நினைவுசெய்யுங்கள். அந்த ஒரேயொருவரிடமிருந்தே, நீங்கள் ஆஸ்தியைப் பெறுவீர்கள். ஆத்மாக்கள் தந்தையிடமிருந்தே எல்லையற்ற ஆஸ்தியைப் பெறுகின்றார்கள். சில ஆத்மாக்கள் அதிகளவு தான தர்மம் செய்துள்ளமையால் அரசர்களுக்குப் பிறக்கின்றார்கள். எவ்வாறாயினும், அது தற்காலிகமானது. அவர்களால் சதாகாலமும் அரசனாக முடியாது. ஆகையினால், தந்தை கூறுகின்றார்: இங்கே உங்களுக்கு 21 பிறவிகளுக்கு உத்தரவாதம் உள்ளது. அங்கே, நீங்கள் எல்லையற்ற தந்தையிடமிருந்து அந்த ஆஸ்தியைப் பெற்றீர்கள் என்று கூட அறியமாட்டீர்கள். இந்நேரத்திலேயே நீங்கள் இந்த ஞானத்தைப் பெறுகின்றீர்கள். எனவே நீங்கள் மிக நல்ல முயற்சி செய்ய வேண்டும். நீங்கள் முயற்சி செய்யாதுவிடின், உங்களுடைய சொந்தக் காலையே, கோடரியால் வெடடுவதைப் போன்றிருக்கும். தொடர்ந்தும் உங்கள் அட்டவணையை வைத்திருந்தால் அந்த அக்கறை இருக்கும். சிலர் அதை எழுதிவிட்டு, பாபா இதைப் பார்க்கும்பொழுது, என்ன கூறுவாரோ என யோசிக்கின்றனர். அவர்களுடைய நடத்தையிலும், செயற்பாடுகளிலும் பெருமளவு வேறுபாடு உள்ளது. எனவே, தந்தை கூறுகின்றார்: கவனயீனமாக இருப்பதை நிறுத்துங்கள்! இல்லையெனில் நீங்கள் அதிகளவு வருந்த வேண்டிவரும். இறுதியில் நீங்கள் செய்த முயற்சியின் காட்சிகளை நிச்சயமாகக் காண்பீர்கள். அப்பொழுது நீங்கள் அதிகளவு கண்ணீர் விடுவீர்கள். இந்த ஆஸ்தியையா ஒவ்வொரு கல்பத்திலும் நான் பெறுவேன்? பின்னர் நீங்கள் பணிப்பெண்ணாகவோ அல்லது வேலையாளாகவோ ஆகுவீர்கள். முன்னர் அவர்கள் திரான்சில் சென்று இன்னார், இன்னார் வேலையாளாகவோ அல்லது வேறெதுவாகவோ ஆகுவார்கள் எனக் கூறுவதுண்டு. பின்னர், பாபா அதை நிறுத்திவிட்டார். இறுதியில் குழந்தைகளாகிய நீங்கள் காட்சிகளைக் காண்பீர்கள். காட்சிகள் கொடுக்கப்படாமல் எவ்வாறு நீங்கள் தண்டிக்கப்பட முடியும்? அது நியதியல்ல. குழந்தைகளாகிய உங்களுக்குப் பல யுக்திகள் கொடுக்கப்பட்டுள்ளன. குழந்தைகளே, காமமே கொடிய எதிரி என பாபா கூறுகின்றார் என உங்கள் கணவரிடம் கூறுங்கள். அதை வென்றிடுங்கள்! மாயையை வென்றவர்கள் உலகை வெற்றிகொள்கின்றார்கள். இப்பொழுது நான் சுவர்க்கத்தின் அதிபதியாகுவதா அல்லது உங்களால் தூய்மையற்றவளாகி நரகத்திற்குச் செல்வதா? மிகுந்த அன்புடனும், பணிவுடனும் அவருக்கு விளங்கப்படுத்துங்கள். ஏன் என்னை நரகத்திற்கு அனுப்புகின்றீர்கள்? பல குழந்தைகள் தொடர்ந்தும் இவ்வாறு தமது கணவன்மாருக்கு விளங்கப்படுத்தி, கடைசியில் அவர்களை இங்கே அழைத்து வருகின்றார்கள். பின்னர் கணவன் கூறுகின்றார்: இவளே என்னுடைய குரு; இவள் எனக்கு நல்ல பாதையைக் காட்டியுள்ளாள். அவர்கள் வந்து பாபாவின் பாதங்களில் வீழ்கின்றார்கள். சிலநேரங்களில் வெற்றியும், சிலநேரங்களில் தோல்வியும் இருக்கின்றன. ஆகையினால், குழந்தைகளாகிய நீங்கள் மிக, மிக இனிமையானவர்கள் ஆகவேண்டும். சேவை செய்பவர்களே அதிகளவு நேசிக்கப்படுவார்கள். தந்தையாகிய கடவுள் குழந்தைகளாகிய உங்களிடம் வந்துள்ளார், நீங்கள் அவரது ஸ்ரீமத்தைப் பின்பற்ற வேண்டும். ஸ்ரீமத்தைப் பின்பற்றாததனால், புயல்கள் வரும்பொழுது நீங்கள் வீழ்கின்றீர்கள். அவ்வாறானவர்களும் இருக்கின்றார்கள். அவர்களால் என்ன பயன்? இந்தக் கல்வி பொதுவானதல்ல. ஏனைய அனைத்து ஆன்மீக ஒன்றுகூடல்களிலும் காதுகளைத் திருப்திப்படுத்துகின்ற மகிழ்ச்சியே இருக்கின்றது. அதன் மூலம் அவர்கள் தற்காலிகச் சந்தோஷத்தையே பெறுகின்றார்கள். இங்கே, நீங்கள் 21 பிறவிகளுக்குச் தந்தையிடமிருந்து சந்தோஷத்தைப் பெறுகின்றீர்கள். பாபா அமைதி, சந்தோஷத்தின் கடலாவார். நாங்களும் தந்தையிடமிருந்து ஆஸ்தியைப் பெற இருக்கின்றோம். நீங்கள் சேவை செய்கின்றபொழுதே அதைப் பெறுவீர்கள். இதனாலேயே நீங்கள் எப்பொழுதும் உங்கள் பட்ஜை அணிந்திருக்க வேண்டும். நாங்கள் சகல தெய்வீகக் குணங்களும் நிறைந்தவர்கள் ஆகவேண்டும். நீங்கள் எவருக்கும் துன்பம் விளைவிக்கவில்லையா எனச் சோதியுங்கள். எனது நடத்தை அசுரத்தனமானதா? மாயை உங்களை அவ்வாறான செயல்களைச் செய்ய வைக்கின்றாள், கேட்கவே வேண்டாம்! மிக நல்ல குடும்பத்திலிருப்பவர்களும் எவ்வாறு மாயை தங்களை ஒரு பாவச்செயலைச் செய்ய வைத்தாள் என பாபாவிடம் கூறுகின்றனர். சிலர் உண்மையைக் கூறுகின்றார்கள். அதேநேரம் மற்றவர்கள் உண்மையைக் கூறாது நூறு மடங்கு தண்டனையைச் சேர்த்துக் கொள்கின்றார்கள். பின்னர் தொடர்ந்தும் அந்தப் பழக்கம் அதிகரிக்கின்றது. நீங்கள் தந்தையிடம் கூறுகின்றபொழுது, அவர் உங்களை எச்சரிப்பார். பாபா கூறுகின்றார்: நீங்கள் பாவம் செய்திருந்தால், அதை உங்கள் பதிவேட்டில் எழுதி பாபாவிடம் கூறுங்கள், அப்பொழுது உங்கள் பாவத்தின் அரைவாசி முடிந்துவிடும். நீங்கள் பாபாவிடம் கூறாது, தொடர்ந்தும் அவரிடமிருந்து மறைத்தால் தொடர்ந்தும் தவறான செயல்களையே செய்வீர்கள். பின்னர் சாபத்திற்கு ஆளாகுவீர்கள். உண்மையைக் கூறாததனால் ஒருமுறை செய்வதற்குப் பதிலாக, நீங்கள் நூறு தடவைக்கு மேலாக அதனைத் தொடர்ந்தும் செய்வீர்கள். பாபா உங்களுக்கு மிக நல்ல அறிவுரைகளை வழங்குகின்றார், ஆனால் அது சிலரைச் சிறிதளவும் தொடுவதில்லை. அது அவர்கள் தொடர்ந்தும் தங்கள் சொந்தப் பாக்கியத்தை உதைத்து விடுவது போன்றதாகும். அவர்கள் பெருமளவு சேதத்தை விளைவிக்கின்றார்கள். இறுதியில், ஒவ்வொருவரும் என்னவாக ஆகுவார்கள் என்ற காட்சியை அனைவரும் காண்பார்கள். அவர்கள் இன்னொரு வகுப்பிற்கு மாற்றப்படுவதற்கு முன்னர் புள்ளிகளைப் பெறுகிறார்கள். அவர்கள் மாற்றப்படுவதற்கு முன்னர் அவர்களுடைய பெறுபேறுகள் அறிவிக்கப்படுகின்றன. நீங்கள் உங்களுடைய வகுப்பிற்குச் செல்லும்பொழுது, உங்களுடைய புள்ளிகளை அறிந்துகொள்வீர்கள். பின்னர் நீங்கள் அதிகளவில் அழுவீர்கள். ஒருமுறை பெறுபேறுகள் அறிவிக்கப்பட்ட பின்னர், உங்களால் என்ன செய்ய இயலும்? உங்களுடைய பாக்கியத்தில் என்ன உள்ளதோ அதைக் கோருவீர்கள். தந்தை குழந்தைகள் அனைவரையும் எச்சரிக்கின்றார். கர்மாதீத ஸ்திதியை இப்பொழுது அடைய முடியாது. நீங்கள் கர்மாதீத ஸ்திதியை அடைந்தால், நீங்கள் உங்களுடைய சரீரங்களை நீக்க வேண்டியிருக்கும். இன்னமும் சில பாவங்களும், கர்மக் கணக்குகளும் எஞ்சியுள்ளன. இதனாலேயே உங்களால் மிகச்சரியான யோகம் செய்ய முடியாதுள்ளது. நீங்கள் இப்பொழுது கர்மாதீத ஸ்திதியை அடைந்து விட்டதாக உங்களில் எவருமே கூறமுடியாது. நீங்கள் நெருங்கி வரும்பொழுது, அதன் பல அறிகுறிகள் தென்படும். அனைத்தும் உங்கள் ஸ்திதியிலும், விநாசத்திலுமே தங்கியுள்ளது. உங்களது கல்வி முடிவடைய இருக்கின்றபொழுது, யுத்தம் சரியாக உங்களின் தலைக்கு மேல் நிற்பதை நீங்கள் காண்பீர்கள். அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தந்தை தாயாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. மாயையின் ஆதிக்கத்துக்குட்படுவதால், அசுர நடத்தையைக் கொண்டிராதீர்கள். உங்கள் நடத்தை பற்றிய பதிவேட்டை வைத்திருங்கள். நீங்கள் வருந்த வேண்டியதான எதையும் செய்யாதீர்கள்.

2. பெருமளவு அன்புடனும், பணிவுடனும் சேவை செய்யுங்கள். மிக இனிமையானவர் ஆகுங்கள். உங்கள் உதடுகளிலிருந்து அசுரத்தனமான வார்த்தைகள் வெளிவர அனுமதிக்காதீர்கள். நீங்கள் வைத்திருக்கும் சகவாசத்தில் மிகவும் எச்சரிக்கையாக இருங்கள். தொடர்ந்தும் ஸ்ரீமத்தைப் பின்பற்றுங்கள்.

ஆசீர்வாதம்:
நீங்கள் இணைந்த சிவசக்தி ரூபத்தைக் கொண்டிருந்து, உங்கள் மனதிலுள்ள எண்ணங்கள் மூலமும், உங்கள் மனோபாவம் மூலமும் மேன்மையான அதிர்வலைகள் எனும் நறுமணத்தைப் பரப்புவீர்களாக.

இந்நாட்களில், அவர்கள் பௌதீக உதவியின் மூலம் ரோஜா, சந்தனம் போன்ற பல்விதமான நறுமணங்களைச் சூழலில் பரப்புகின்றார்கள். அதேபோன்று, நீங்கள் அனைவரும் சிவசக்தி எனும் இணைந்த ரூபத்தைக் கொண்டிருந்து, உங்கள் மனதிலுள்ள எண்ணங்கள் மூலமும், உங்கள் மனோபாவம் மூலமும் சந்தோஷம், அமைதி, அன்பு, பேரானந்தம் எனும் நறுமணத்தைப் பரப்ப வேண்டும். ஒவ்வொரு நாளும் அமிர்த வேளையில் ஒரு நீர்த் தூவி (கழரவெயin) போன்று, சகல ஆத்மாக்களின் மீதும் வெவ்வேறு மேன்மையான அதிர்வலைகளைப் பன்னீர்ச் செம்பைப் பயன்படுத்தித் தெளிப்பதைப் போன்று தெளிக்க வேண்டும். உங்கள் எண்ணங்கள் எனும் இயல்பான ஆளியை முடுக்கி, உலகில் தூய்மையற்ற மனோபாவங்கள் எனும் துர்நாற்றத்தை முடித்து விடுங்கள்.

சுலோகம்:
சந்தோஷத்தை அருள்பவரிடமிருந்து சந்தோஷப் பொக்கிஷக் களஞ்சியத்தைப் பெறுவதே, அவரது அன்பின் அடையாளமாகும்.