06.10.21        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்:
இனிய குழந்தைகளே, தந்தை புதிய வீடான சுவர்க்கத்தை உங்களுக்காகவே உருவாக்குவதால், இப்பழைய உலகில் எல்லையற்ற விருப்பமின்மையைக் கொண்டிருங்கள்.

கேள்வி:
இந்த அழிவற்ற உருத்திர யாகத்திற்கு எவற்றினால் தடைகள் ஏற்படுகின்றன?

பதில்:
இது சிவபாபாவினால் உருவாக்கப்பட்ட, அழிவற்ற உருத்திர யாகம் ஆகும். இதனால், மனிதர்களிலிருந்து தேவர்களாக மாறுவதற்காக நீங்கள் தூய்மையாகுகின்றீர்கள். நீங்கள் பக்தியை நிறுத்துவதாலும் தடைகள் ஏற்படுகின்றன. மக்கள் அமைதி நிலவ வேண்டும் என்றும், விநாசம் இடம்பெறக்கூடாது என்றும் விரும்புகின்றனர். தந்தையோ பழைய உலகின் விநாசத்திற்காகவே இந்த உருத்திர ஞான யாகத்தை உருவாக்கியுள்ளார். இதற்குப் பின்னரே அமைதியான உலகம் வரும்.

ஓம் சாந்தி.
ஓம் சாந்தி என்பதன் அர்த்தத்தைத் தந்தை குழந்தைகளான உங்களுக்கு விளங்கப்படுத்தியுள்ளார். ஆத்மாவான எனது ஆதிதர்மம் அமைதியாகும். நீங்கள் அமைதி தாமத்திற்குச் செல்வதற்கு முயற்சி செய்ய வேண்டியதில்லை. ஆத்மாக்கள் அமைதி சொரூபங்களும், அமைதிதாம வாசிகளும் ஆவார்கள். இங்கே நீங்கள் குறுகிய காலத்திற்கே அமைதியாக இருக்க முடியும். ஆத்மா கூறுகின்றார்: எனது பௌதீக அங்கங்கள் எனும் ஹார்மோனியம் களைப்படைந்து விட்டது. இப்பொழுது நான் எனது ஆதிதர்மத்தில் என்னை ஸ்திரப்படுத்துகின்றேன்; நான் எனது சரீரத்திலிருந்து பற்றற்றவர் ஆகுகின்றேன். எவ்வாறாயினும், ஆத்மா செயல்களைச் செய்ய வேண்டும். எவ்வளவு காலத்திற்குத்தான் நீங்கள் அமைதியாக அமர்ந்திருப்பீர்கள்? ஆத்மா கூறுகின்றார்: நான் அமைதிதாம வாசி. இங்கே ஒரு சரீரத்தினுள் வருவதாலேயே நான் பேசுபவன் ஆகுகின்றேன். நான் ஓர் ஆத்மா, இது எனது சரீரம். ஆத்மாக்களே தூய்மையானவர்களாகவும், தூய்மையற்றவர்களாகவும் ஆகுகின்றார்கள். ஓர் ஆத்மா தூய்மையற்றவராகும்பொழுது, அவரது சரீரமும் தூய்மையற்றதாகுகின்றது. சத்திய யுகத்தில் பஞ்ச தத்துவங்களும் சதோபிரதானாக இருக்கின்றன, ஆனால் இங்கோ பஞ்ச தத்துவங்கள் தமோபிரதானாக உள்ளன. தங்கத்தில் கலப்படம் கலக்கப்படும்பொழுது, அது தூய்மையற்றதாகுகின்றது. எனவே, அதனைச் சுத்தப்படுத்துவதற்கு, அது பின்னர் தீயில் இடப்படுகின்றது. அது யோகத் தீ என அழைக்கப்படுவதில்லை. யோகத் தீ மூலம் பாவங்கள் எரிக்கப்படுகின்றன. பரமாத்மாவே ஆத்மாக்களைத் தூய்மையற்றவர்களிலிருந்து தூய்மையானவர்கள் ஆக்குகின்றார். ஒரேயொருவரின் பெயரே குறிப்பிடப்படுகின்றது. அவர்கள் கூவியழைக்கின்றனர்: ஓ தூய்மையாக்குபவரே, வாருங்கள்! நாடகத் திட்டத்திற்கேற்ப, அனைவரும் தூய்மையற்றவர்களாகவும், தமோபிரதானாகவும் ஆகவேண்டும். இது ஒரு விருட்சமாகும். பொதுவாக ஒரு விருட்சத்தின் விதை அதற்கு அடியிலேயே இருக்கும். ஆனால், இவ்விருட்சத்தின் விதையானவர் அதற்கு மேலே உள்ளார். நீங்கள் தந்தையைக் கூவியழைக்கும்பொழுது, உங்களின் புத்தி மேல் நோக்கியே செல்கின்றது. நீங்கள் எவரிடமிருந்து ஆஸ்தியைக் கோருகின்றீர்களோ, அவர் இப்பொழுது கீழே வந்து விட்டார். அவர் கூறுகின்றார்: நான் இங்கே வர வேண்டியுள்ளது. எனது இந்த மனித உலக விருட்சமானது, எண்ணற்ற, பல்வேறு சமயங்களைக் கொண்டது. அது இப்பொழுது முற்றிலும் உக்கிய, தமோபிரதான் நிலையை அடைந்துள்ளது. தந்தை இங்கமர்ந்திருந்து, குழந்தைகளான உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார். சத்தியயுகத்தில் முதலில் தேவர்கள் இருக்கின்றனர். இப்பொழுது கலியுகத்தில் அசுரர்களே உள்ளனர். அசுரர்களுக்கும் தேவர்களுக்கும் இடையில் யுத்தம் இடம்பெறவில்லை. நீங்கள் இப்பொழுது யோக சக்தியால் அசுரத்தனமான ஐந்து விகாரங்களையும் வெற்றிகொள்கின்றீர்கள். இதில் வன்முறையான யுத்தம் என்ற கேள்வி இல்லை. நீங்கள் எவ்விதமான வன்முறைகளிலும் ஈடுபடுவதில்லை. நீங்கள் எவரையும் தொடுவது கூட இல்லை. நீங்கள் இரட்டை அகிம்சாவாதிகள். காம வாளைப் பயன்படுத்துவதே அனைத்திலும் மகா பாவமாகும். தந்தை கூறுகின்றார்: இக்காம விகாரமானது அதன் ஆரம்பம் முதல் மத்தியினூடாக இறுதிவரை துன்பத்தையே விளைவிக்கின்றது. நீங்கள் எந்த விகாரத்திலும் ஈடுபடக்கூடாது. மக்கள் தேவர்களின் முன்னிலையில் புகழ் பாடுகின்றார்கள்: நீங்கள் தெய்வீகக் குணங்கள் அனைத்தும் நிறைந்தவர்கள், முற்றிலும் விகாரமற்றவர்கள். ஆத்மாக்கள் இந்த அங்கங்கள் மூலம் புரிந்துகொள்கின்றனர். மக்கள் கூறுகின்றனர்: நாங்கள் தூய்மையற்றவர்களாகி விட்டோம்; அவர்கள் நிச்சயமாக ஏதோவொரு காலத்தில் தூய்மையாக இருந்தார்கள் என்பதே அதன் அர்த்தமாகும். இதனாலேயே தாங்கள் தூய்மையற்றவர்களாகி விட்டதாக அவர்கள் கூறுகின்றனர். மக்கள் கூவியழைக்கின்றனர்: ஓ தூய்மையாக்குபவரே, வாருங்கள்! தூய்மையாக இருக்கும்பொழுது, எவருமே அவரைக் கூவியழைப்பதில்லை. அது சுவர்க்கம் என அழைக்கப்படுகின்றது. இங்கே சாதுக்களும், புனிதர்களும் ஓதுகின்றார்கள்;: ஓ தூய்மையாக்குபவரான, சீதையின் இராமரே, வாருங்கள்! அவர்கள் செல்லுமிடமெல்லாம் தொடர்ந்தும் இவ்வாறு பாடுகின்றனர். முழு உலகமும் தூய்மையற்றிருக்கின்றது எனத் தந்தை விளங்கப்படுத்துகின்றார். இது இராவண இராச்சியம் ஆகும். அவர்கள் இராவணனை எரிக்கின்றனர். எனினும், அவனது இராச்சியம் எப்பொழுது ஆரம்பமாகியது என எவருமே அறியார். பக்தி மார்க்க சம்பிரதாயங்கள் அதிகம் உள்ளன. சிலர் ஒன்றைச் செய்ய, வேறு சிலர் வேறொன்றைச் செய்கின்றனர். சந்நியாசிகளும் பல வகையான யோகங்களைக் கற்பிக்கின்றனர். உண்மையில், யோகம் என்றால் என்ன என்பது எவருக்கும் தெரியாது. இதற்கு நீங்கள் எவரையும் குற்றஞ் சாட்ட முடியாது. இந்நாடகம் ஏற்கனவே நிச்சயிக்கப்பட்டது. நான் வரும்வரையில், அவர்கள் தங்கள் பாகங்களைத் தொடர்ந்தும் நடிக்க வேண்டும். ஞானமும், பக்தியும் உள்ளன. ஞானம் பகலாகும், அது சத்திய, திரேதா யுகங்களாகும். பக்தி இரவாகும், அது துவாபர, கலியுகங்களாகும். பின்னர் விருப்பமின்மை உள்ளது; பழைய உலகின் மீது விருப்பமின்மை உள்ளது. இந்த விருப்பமின்மை எல்லையற்றது, அவர்களுடைய விருப்பமின்மையோ எல்லைக்குட்பட்டதாகும். இப்பழைய உலகம் இப்பொழுது அழிக்கப்பட வேண்டும் என்பதை நீங்கள் அறிவீர்கள். ஒரு புதிய வீடு கட்டப்படும்பொழுது, பழைய வீட்டின் மீது விருப்பமின்மை ஏற்படுகின்றது. எல்லையற்ற தந்தை எப்படிப்பட்டவர் எனப் பாருங்கள்: அவர் உங்களுக்காகவே சுவர்க்கம் என்ற வீட்டைக் கட்டுகின்றார். சுவர்க்கம் புதிய உலகமும், நரகம் பழைய உலகமும் ஆகும். புதிய உலகம் பழையதாகி, பின்னர் மீண்டும் புதியதாகுகின்றது. புதிய உலகின் கால எல்லை என்ன என்பது எவருக்கும் தெரியாது. நாங்கள் இப்பொழுது பழைய உலகில் வாழ்ந்து கொண்டு, உலகைப் புதியதாக்குகின்றோம். இப்பழைய இடுகாட்டில், நாங்கள் தேவதைகளின் பூமியை உருவாக்குவோம். அங்கு, அதே யமுனை நதிக்கரையே இருக்கும், அதன் கரையில் மாளிகைகள் கட்டப்படும். இதே டெல்கியே யமுனை நதிக்கரையில் இருக்கும். பாண்டவர்களிடம் கோட்டைகள் இருந்ததாக அவர்கள் காண்பிக்கின்றனர். நாடக நியதிப்படி, அவை யாவும் நிச்சயமாக மீண்டும் ஒருமுறை உருவாக்கப்படும். நீங்கள் யாகங்கள் வளர்த்து, தபஸ்யா செய்து, தான தர்மங்கள் செய்ததால், மீண்டும் அவை செய்யப்பட வேண்டும். முதலில் நீங்கள் சிவனையே வழிபட்டீர்கள். நீங்கள் முதற்தரமான ஆலயங்களைக் கட்டினீர்கள். அது கலப்படமற்ற வழிபாடு எனப்படுகின்றது. இப்பொழுது நீங்கள் ஞான மார்க்கத்தில் இருக்கின்றீர்கள். இது கலப்படமற்ற ஞானமாகும். நீங்கள் முதலில் வழிபட்ட, சிவபாபா கூறுவதை மாத்திரமே செவிமடுக்கின்றீர்கள். அந்நேரத்தில் வேறு எந்தச் சமயங்களும் இருக்கவில்லை. அந்நேரத்தில் நீங்கள் மிகவும் சந்தோஷமாக இருந்தீர்கள். தேவ தர்மம் பெருமளவு சந்தோஷத்தைத் தரக்கூடியது. அப்பெயரைக் குறிப்பிடும்பொழுதே உங்கள் வாய் இனிக்கின்றது. ஒரேயொரு தந்தையிடமிருந்து மாத்திரமே நீங்கள் ஞானத்தைச் செவிமடுக்கின்றீர்கள். தந்தை கூறுகின்றார்: வேறு எவர் கூறுவதையும் செவிமடுக்காதீர்கள். இது உங்கள் கலப்படமற்ற ஞானமாகும். நீங்கள் இப்பொழுது எல்லையற்ற தந்தைக்குரியவர்கள். தந்தையிடமிருந்து மாத்திரமே உங்கள் முயற்சிகளுக்கேற்ப, வரிசைக்கிரமமாக உங்கள் ஆஸ்தியை நீங்கள் பெற்றுக் கொள்கின்றீர்கள். தந்தை ஒரு குறுகிய காலத்திற்கே சரீர ரூபத்திற்கு வந்துள்ளார். அவர் கூறுகின்றார்: குழந்தைகளான உங்களுக்கு மாத்திரமே நான் ஞானத்தைக் கொடுக்க வேண்டும். இது எனது நிரந்தரமான சரீரமல்ல. நான் இவரினுள் பிரவேசித்துள்ளேன். சிவனின் பிறந்ததினத்தை அடுத்து, உடனடியாகவே கீதையின் பிறப்பும் உள்ளது. அப்பொழுதிலிருந்தே அவர் ஞானத்தைக் கொடுக்க ஆரம்பிக்கின்றார். பரமாத்மா இந்த ஆன்மீக ஞானத்தை உங்களுக்குக் கொடுக்கின்றார். அதில் தண்ணீர் என்ற கேள்வியே இல்லை. தண்ணீரை ஞானம் என அழைக்க முடியாது. ஞானத்தினாலேயே நீங்கள் தூய்மையற்றவர்களிலிருந்து தூய்மையானவர்கள் ஆகுகின்றீர்கள். நீங்கள் தண்ணீரினால் தூய்மையாக முடியாது. உலகம் முழுவதும் நதிகள் உள்ளன. ஞானக்கடலான தந்தையே வந்து, இவரினுள் பிரவேசித்து, ஞானத்தைப் பேசுகின்றார். இங்கே மக்கள் கௌமுக்கிற்குச் (பசுவின் வாய்) செல்கின்றார்கள். உண்மையில், நீங்களே உயிர்வாழும் கௌமுக் ஆவீர்கள். உங்கள் வாய்களிலிருந்து ஞான அமிர்தம் வெளிப்படுகின்றது. ஒரு பசு பாலையே கொடுப்பதால், அதில் தண்ணீர் என்ற கேள்விக்கு இடமில்லை. அனைவருக்கும் சற்கதியருள்கின்ற தந்தையே இங்கமர்ந்திருந்து, அனைத்தையும் விளங்கப்படுத்துகின்றார். அனைவரும் இப்பொழுது சீரழிந்த நிலையிலுள்ளனர். மக்கள் ஏன் இராவணனின் கொடும்பாவியை எரிக்கின்றனர் என்பதை முன்னர் நீங்கள் அறிந்திருக்கவில்லை. எல்லையற்ற தசேரா இடம்பெறவுள்ளது என்பதை நீங்கள் இப்பொழுது அறிவீர்கள். இந்த முழு உலகமும் ஒரு தீவு (இலங்கை) ஆகும். முழு உலகிலும் இராவண இராச்சியமே நிலவுகின்றது. குரங்குச் சேனை இருந்தது என்றும், அவை ஒரு பாலத்தைக் கட்டின என்றும் சமயநூல்களில் கூறப்படுகின்றது. அவை யாவும் கற்பனைக் கதைகளே. பக்தி போன்றன தொடர்கின்றன. முதலில் கலப்படமற்ற பக்தியும், பின்னர் கலப்படமான பக்தியும் உள்ளன. தசேரா, இரக்ஷாபந்தன் போன்றன இந்நேரத்தையே குறிக்கின்ற, பண்டிகைகள் ஆகும். சிவனின் பிறந்ததினத்திற்குப் பின்னர் கிருஷ்ணரின் பிறந்ததினம் வருகின்றது. கிருஷ்ண பூமி இப்பொழுது ஸ்தாபிக்கப்படுகின்றது. இன்று இது அசுரனான, கம்சனின் பூமியாக உள்ளது, நாளை இது கிருஷ்ணரின் பூமியாகும். அசுர சமுதாயத்தினரே கம்சர்கள் என அழைக்கப்படுகின்றனர். பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் இடையில் ஒரு யுத்தம் இடம்பெறவில்லை. கிருஷ்ணரின் பிறப்பு சத்திய யுகத்திலேயே இடம்பெறுகின்றது. அவரே முதலாவது இளவரசர். அவர் கற்பதற்குப் பாடசாலைக்குச் செல்வார். அவர் வளர்ந்ததும், இராச்சிய சிம்மாசனத்தில் அமர்கின்றார். தூய்மையற்றவர்களைத் தூய்மையாக்குபவரான சிவபாபாவிற்கே அனைத்துப் புகழும் உரியது. நடனம் போன்றவை ஒருவரோடொருவர் சந்தோஷத்தில் கொண்டாடுவதற்கானவை. கிருஷ்ணர் இந்த ஞானத்தை இன்னொருவருக்குக் கொடுப்பது எவ்வாறு சாத்தியமாக இருக்க முடியும்? பாபா கூறுகின்றார்: பக்தி செய்ய வேண்டாம் என நீங்கள் எவருக்கும் கூறக்கூடாது; அவர்களாகவே அதனை விட்டுவிடுவார்கள். நீங்கள் பக்தியையும், விகாரங்களையும் துறக்கின்றீர்கள், இதனாலேயே குழப்பம் ஏற்படுகின்றது. பாபா கூறியுள்ளார்: நான் இந்த உருத்திர யாகத்தை உருவாக்குகின்றேன், இதில் அசுர சமுதாயம் தடைகளை விளைவிக்கின்றது. இது மனிதர்களைத் தேவர்களாக மாற்றுகின்ற, சிவபாபாவின் எல்லையற்ற யாகம் ஆகும். ஞான யாகத்திலிருந்து விநாசத்தின் சுவாலைகள் வெளிப்பட்டன என நினைவுகூரப்படுகின்றது. பழைய உலகம் அழிக்கப்பட்ட பின்னரே நீங்கள் புதிய உலகில் ஆட்சிசெய்வீர்கள். மக்கள் கூறுகின்றனர்: அமைதி நிலவ வேண்டும் என்று நாங்கள் கூறுகின்றோம், ஆனால் இந்தப் பிரம்மாகுமாரிகளோ விநாசம் இடம்பெற வேண்டும் என்று கூறுகின்றனர். ஞானத்தைப் புரிந்துகொள்ளாததாலேயே அவர்கள் இவ்வாறு கூறுகின்றனர். தந்தை விளங்கப்படுத்துகின்றார்: இப்பழைய உலகம் முழுவதும் இந்த ஞான யாகத்தில் அர்ப்பணிக்கப்பட வேண்டும். பழைய உலகம் தீக்கிரையாக வேண்டும். இயற்கை அனர்த்தங்களும் இடம்பெறும். அனைவரும் கடுகு விதைகள் போன்று நசுக்கப்பட்டு அழிக்கப்பட்டு விடுவார்கள். வெகுசில ஆத்மாக்கள் மாத்திரமே காப்பாற்றப்படுவார்கள். ஆத்மாக்கள் அழிவற்றவர்கள். இப்பொழுது எல்லையற்ற ஹோலிகா இடம்பெறவுள்ளது, அதில் அனைத்துச் சரீரங்களும் அழிக்கப்படும். எவ்வாறாயினும், ஆத்மாக்கள் தூய்மையாகி, வீடு திரும்புவார்கள். பொருட்கள் தீயில் இடப்படும்பொழுது தூய்மையாக்கப்படுகின்றன. அனைத்தையும் தூய்மையாக்குவதற்காகவே மக்கள் யாகம் வளர்க்கின்றனர். அவை அனைத்தும் பௌதீகமானவை. இப்பொழுது முழு உலகமும் அர்ப்பணிக்கப்படவுள்ளது. விநாசத்திற்கு முன்னர் நிச்சயமாக ஸ்தாபனை இடம்பெற வேண்டும். நீங்கள் மற்றவர்களுக்கு விளங்கப்படுத்தும்பொழுது, முதலில் ஸ்தாபனையும், பின்னர் விநாசமும் இடம்பெறுகின்றன எனக் கூறுங்கள். பிரம்மாவின் மூலமே ஸ்தாபனை இடம்பெறுகின்றது. பிரஜாபிதா பிரம்மா மிகவும் பிரபல்யமானவர்; ஆதிதேவனும், ஆதிதேவியும் உள்ளனர். ஜெகதாம்பாளுக்கு நூறாயிரக்கணக்கான ஆலயங்கள் உள்ளன. பல களியாட்டங்கள் (மேலாக்கள்) இடம்பெறுகின்றன. ஜெகதாம்பாளின் குழந்தைகளான நீங்கள் ஞான, ஞானேஸ்வரிகள் (ஞானம் நிறைந்தவர்கள்) ஆவீர்கள், அதன்பின்னர் நீங்கள் இராஜ, இராஜேஸ்வரிகள் (இளவரசர்களும், இளவரசிகளும்) ஆகுகின்றீர்கள். நீங்கள் மிகவும் செல்வந்தர்கள் ஆகுகின்றீர்கள். பக்தி மார்க்கத்தில், தீபாவளிப் பண்டிகைக் காலத்தில், அழியக்கூடிய செல்வத்திற்காகவே மக்கள் இலக்ஷ்மியை வேண்டுகின்றார்கள். இங்கே, நீங்கள் அனைத்தையும் பெறுகின்றீர்கள். நீங்கள் நீண்ட ஆயுளைக் கொண்டிருப்பீர்களாக! உங்களுக்குப் புத்திர பாக்கியம் கிடைக்கட்டும்! அங்கே சராசரி ஆயுட்காலம் 150 வருடங்களாகும். இங்கே நீங்கள் எந்தளவிற்கு அதிகமாக யோகம் செய்கின்றீர்களோ, அந்தளவிற்கு அதிகமாக உங்கள் ஆயுட்காலம் அதிகரிக்கும். நீங்கள் ஈஸ்வரருடன் யோகம் செய்து, யோகேஸ்வரர்கள் ஆகுகின்றீர்கள். தந்தை கூறுகின்றார்: நான் சலவைத் தொழிலாளி. நான் அழுக்கான ஆடைகளான, ஆத்மாக்கள் அனைவரையும் சுத்தப்படுத்துகின்றேன். பின்னர் நீங்கள் தூய சரீரங்களைப் பெறுவீர்கள். நான் ஒரு விநாடியில் உலகில் உள்ள ஆடைகளைச் சுத்தம் செய்கின்றேன். மன்மனாபவ ஆகுவதனால் மாத்திரமே, ஆத்மாக்களும் சரீரங்களும் தூய்மையாகும். அது மந்திரவித்தை, இல்லையா? ஒரு விநாடியில் ஜீவன்முக்தி பெறுவது ஒரு சிறந்த வழியாகும். நடந்தும், உலாவியும் திரியும்பொழுதும் தந்தையை நினைவுசெய்யுங்கள். நான் உங்களுக்கு வேறெந்தச் சிரமத்தையும் கொடுப்பதில்லை. இப்பொழுது நீங்கள் ஒரு விநாடியில் ஏறும் ஸ்திதியில் உள்ளீர்கள். தந்தை கூறுகின்றார்: நான் இங்கே குழந்தைகளாகிய உங்கள் சேவகனாகவே வருகின்;றேன். நீங்கள் என்னைக் கூவியழைத்தீர்கள்: ஓ தூய்மையாக்குபவரே, வந்து எங்களைத் தூய்மையாக்குங்கள்! எனவே, நான் சேவகர், இல்லையா? நீங்கள் மிகவும் தூய்மையற்றவர்களாக ஆகும்பொழுது, கதறி அழுகின்றீர்கள். நான் இப்பொழுது வந்து விட்டேன். நான் ஒவ்வொரு கல்பத்திலும் வந்து, குழந்தைகளான உங்களுக்கு ஒரு மந்திரத்தைக் கொடுக்கின்றேன்: என்னை நினைவுசெய்யுங்கள்! இதுவே மன்மனாபவ என்பதன் அர்த்தமாகும். பின்னர் நீங்கள் விஷ்ணு தாமத்தின் அதிபதிகள் ஆகுவீர்கள். நீங்கள் விஷ்ணு தாமத்தின் இராச்சியத்தைக் கோரவே வந்துள்ளீர்கள். இராவணனின் பூமியின்; பின்னர், விஷ்ணுவின் பூமி உள்ளது. கம்சர்களின் பூமியின் பின்னர், கிருஷ்ணரின் பூமி உள்ளது. அனைத்தும் உங்களுக்கு மிகவும் இலகுவாக விளங்கப்படுத்தப்பட்டுள்ளது. தந்தை கூறுகின்றார்: இப்பழைய உலகின் மீதுள்ள பற்று அனைத்தையும் முடித்து விடுங்கள். நாங்கள் இப்பொழுது எங்களது 84 பிறவிகளைப் பூர்த்திசெய்து விட்டோம். நாங்கள் இப்பழைய ஆடைகளை நீக்கி, புதிய உலகிற்குச் செல்வோம். நினைவின் மூலமே உங்கள் பாவங்கள் அழிக்கப்படும். நீங்கள் இந்தளவிற்குத் தைரியத்தைக் கொண்டிருக்க வேண்டும். அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தந்தை தாயாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. உங்கள் வாயிலிருந்து எப்பொழுதும் ஞான அமிர்தம் வெளிப்படட்டும். அனைவரையும் முக்தி பெறச் செய்வதற்கு, அவர்களுக்கு ஞானத்தைக் கொடுங்கள். வேறு எவரையுமன்றி, ஒரேயொரு தந்தையின் ஞானத்தை மாத்திரமே செவிமடுங்கள்.

2. ஏறும் ஸ்திதிக்குச் செல்வதற்கு, நடக்கும்பொழுதும், உலாவித் திரியும்பொழுதும் தந்தையை நினைவுசெய்வதைப் பயிற்சி செய்யுங்கள். இப்பழைய உலகிலும், உங்களின் பழைய ஆடையிலும் உங்களுக்குள்ள பற்றை முடித்து விடுங்கள்.

ஆசீர்வாதம்:
நீங்கள் ஒரே பாதையைப் பின்பற்றி, ஒரேயொருவருடனேயே அனைத்து உறவுமுறைகளையும் கொண்டிருக்கின்ற, ஒரு சம்பூரண தேவதை ஆவீர்களாக.

உங்கள் புத்தியானது அசரீரி, பௌதீக ரூபங்களில் ஒரேயொரு தந்தையுடனேயே சகவாசத்தையும், உறவுமுறையையும் வைத்திருக்கட்டும், அப்பொழுது நீங்கள் ஒரு தேவதை ஆகுவீர்கள். சகல உறவுமுறைகளையும், சகல தொடர்புகளையும் ஒரேயொருவருடன் வைத்திருப்பவர்களே, சதாகாலமும் தேவதைகளாக இருக்கின்றார்கள். இந்தப் பாதை தடைசெய்யப்பட்டுள்ளது என்று அரசாங்கம் ஒரு அறிவிப்புப் பலகையை இடுவதைப் போல், அதேவழியில், அனைத்துப் பாதைகளையும் தடைசெய்யுங்கள், உங்கள் புத்தி அலைபாய்வதை நிறுத்தும். பாப்தாதாவின் கட்டளை: முதலில், அனைத்துப் பாதைகளையும் மூடுங்கள், இதனைச் செய்வதனால், நீங்கள் இலகுவில் ஒரு தேவதை ஆகுவீர்கள்.

சுலோகம்:
சேவைக்காகச் சதா ஊக்கத்தையும், உற்சாகத்தையும் கொண்டிருப்பதே, மாயையிடமிருந்து பாதுகாப்பாக இருப்பதற்கான வழி ஆகும்.


மாதேஷ்வரியின் பெறுமதி மிக்க வாசகங்கள்
கடவுளின் நிலையான நினைவைக் கொண்டிருப்பதற்காக அமர்தல்.

நாங்கள் கடவுளின் நினைவில் அமர்வதன் நோக்கம் என்ன? நாங்கள் வெறுமனே கடவுளின் நினைவில் அமரக்கூடாது, ஆனால் ஒவ்வொரு கணத்திலும் நடந்தும், உலாவியும் திரியும்பொழுதும் கடவுளின் நினைவைக் கொண்டிருக்க வேண்டும். நாங்கள் அறிந்திருப்பவர்களை மாத்திரமே, எங்களால் நினைவுசெய்ய முடியும், அதாவது அவரது பெயரும், ரூபமும் எவை என்று அறிந்தாலே நினைவுசெய்ய முடியும். கடவுள் பெயருக்கும், ரூபத்திற்கும் அப்பாற்பட்டவர் என நாங்கள் கூறினால், அப்பொழுது, எந்த ரூபத்தில் நாங்கள் அவரை நினைவுசெய்ய வேண்டும்? கடவுள் சர்வவியாபி எனவும், பின்னர் அவர் எங்கும் பிரசன்னமாகி இருக்கின்றார் எனவும் நாங்கள் கூறுகின்றோம், எனவே, நாங்கள் யாரை நினைவுசெய்ய வேண்டும்? நாங்கள் நினைவைப் பற்றிப் பேசினால், அப்பொழுது நாங்கள் நினைவுசெய்வதற்கு நிச்சயமாக ஒரு ரூபம் இருக்க வேண்டும். நினைவு எனும்பொழுது, ஒருவர் நினைவுசெய்பவரும், மற்றவர் நினைவுசெய்யப்படுபவரும் ஆவார்கள். ஆகவே, நினைவுசெய்பவர் நிச்சயமாக நினைவுசெய்யப்படுபவரிலிருந்து வேறுபட்டவர். எனவே, கடவுள் சர்வவியாபி அல்ல என்பதே அதன் அர்த்தமாகும். ஆத்மாக்கள் கடவுளின் பாகங்கள் என்று நாங்கள் கூறும்பொழுது, கடவுள் துண்டுகளில் (பாகங்களில்) இருக்கின்றாரா? கடவுள் அழியக்கூடியவர், அவரது நினைவும் அழியக்கூடியது என்பதே அதன் அர்த்தமாக இருக்கும். கடவுள் அழிவற்றவர் என்பதையும், அந்த அழிவற்ற பரமாத்மா பரமதந்தையின் குழந்தைகளான, ஆத்மாக்களாகிய நாங்களும் அழிவற்றவர்கள் என்பதையும் மக்கள் அறிந்துகொள்வதில்லை. எனவே, நாங்கள் அவருடைய படைப்புக்கள், அவருடைய ஒரு பாகமல்ல. கடவுளே வந்து, குழந்தைகளாகிய எங்களுக்குக் கொடுக்கின்ற இந்த ஞானம் எங்களுக்குத் தேவை. குழந்தைகளாகிய எங்களுக்கான கடவுளின் மேன்மையான வாசகங்கள்: குழந்தைகளே, நான் என்னவாக இருக்கின்றேன், நான் எவ்வாறானவர் என அறிந்து, என்னை நினைவுசெய்வதால், நீங்கள் நிச்சயமாக என்னை அடைவீர்கள். சந்தோஷத்திற்கும், துன்பத்திற்கும் அப்பாற்பட்ட, தந்தையாகிய நான், சர்வவியாபியாக இருந்திருந்தால், இந்த நாடகத்தில் சந்தோஷமும், துன்பமும் இருக்க மாட்டாது. எனவே, நான் சர்வவியாபி அல்ல. ஏனைய ஆத்மாக்களைப் போன்றே, நானும் ஓர் ஆத்மாவே, ஆனால் ஆத்மாக்கள் அனைவருடனும் ஒப்பிடும்பொழுது, எனது தெய்வீகக் குணங்கள் அதியுயர்வானவை (பரம்), இதனாலேயே நான் பரமாத்மாவான, கடவுள் என்று அழைக்கப்படுகின்றேன். அச்சா.