06.11.19        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்:
இனிய குழந்தைகளே, நீங்கள் தந்தையின் நினைவை எவ்வளவு நேரம் கொண்டிருக்கின்றீர்கள் என உங்களைச் சோதித்துப் பாருங்கள். ஏனெனில் நினைவு செய்வதில் இலாபமும், மறப்பதில் நட்டமும் உள்ளன.

கேள்வி:
இப் பாவாத்மாக்களின் உலகில், முற்றிலும் அசாத்தியமானது எது? ஏன்?

பதில்:
இங்கே, எவரும் தான் ஒரு புண்ணியாத்மா என்று கூறுவது முற்றிலும் அசாத்தியமாகும். ஏனெனில், உலகம் கலியுகமாகவும், தமோபிரதானாகவும் உள்ளது. மனிதர்கள் புண்ணியச் செயல்கள் எனக் கருதுபவை உண்மையில் பாவச் செயல்களாகும், ஏனெனில் அவர்கள் புரியும் செயல்கள் ஒவ்வொன்றும் ஏதோவொரு விகாரத்தின் ஆதிக்கத்திற்கு உட்பட்டதாகும்.

ஓம் சாந்தி.
குழந்தைகளாகிய நீங்கள் பிரம்மாவின் குழந்தைகள் என்பதையும், பிரம்மாகுமாரர்களும், குமாரிகளும் என்பதையும், பின்னர் நீங்கள் தேவர்கள் ஆகவுள்ளீர்கள் என்பதையும் புரிந்துகொள்கின்றீர்கள். நீங்கள் மாத்திரமே இதனைப் புரிந்துகொள்கின்றீர்கள். ஏனையோர் இதனைப் புரிந்துகொள்வதில்லை. பிரம்மாகுமாரர்களும், குமாரிகளுமாகிய நீங்கள் எல்லையற்றதொரு கல்வியைக் கற்கின்றீர்கள் என்பதை அறிவீர்கள். நீங்கள் 84 பிறவிகளினதும், உலகச் சக்கரத்தினதும் கல்வியைக் கற்பதுடன், தூய்மையாக வேண்டும் என்ற கற்பித்தல்களையும் பெறுகின்றீர்கள். இங்கமர்ந்திருக்கும்பொழுது, தூய்மையாகுவதற்காக குழந்தைகளாகிய நீங்கள் நிச்சயமாகத் தந்தையை நினைவுசெய்கின்றீர்கள். உங்கள் இதயத்தை வினவுங்கள்: நான் உண்மையிலேயே தந்தையின் நினைவில் அமர்ந்;திருந்தேனா அல்லது இராவணாகிய மாயை எனது புத்தியை வேறு எங்கேனும் அழைத்துச் சென்று விட்டாளா? தந்தை கூறியுள்ளார்: என்னை மாத்திரம் நினைவுசெய்தால், உங்கள் பாவங்கள் அழிக்கப்படும். ஆகையால், இப்பொழுது நீங்கள் ஒவ்வொருவரும் உங்களை வினவ வேண்டும்: நான் பாபாவின் நினைவில் நிலைத்திருந்தேனா அல்லது எனது புத்தி வேறு எங்கேனும் சென்றதா? இந்த விழிப்புணர்வு இருக்க வேண்டும்: நான் எவ்வளவு நேரத்திற்கு பாபாவின் நினைவில் நிலைத்திருந்தேன்? எங்கு, எவ்வளவு நேரத்திற்கு எனது புத்தி வேறு எங்கோ சென்றிருந்தது? உங்கள் சொந்த ஸ்;திதியைச் சோதித்துப் பாருங்கள். நீங்கள் எவ்வளவு நேரம் தந்தையை நினைவுசெய்கின்றீர்கள்? அதனைச் செய்வதால் மாத்திரமே நீங்கள் தூய்மையாகுவீர்கள். உங்கள் இலாப, நட்டக் கணக்கை நீங்கள் வைத்திருக்க வேண்டும். நீங்கள் அதனைச் செய்யும் பழக்கத்தை உருவாக்கினால், நினைவில் இருப்பதுடன், தொடர்ந்தும் அதைக் குறித்துக் கொள்வீர்கள். அனைவருமே தனது சட்டைப்பையில் ஒரு நாட்குறிப்பை வைத்திருப்பதுண்டு. வியாபாரிகள் வைத்திருக்கும் நாட்குறிப்புகள் அனைத்தும் எல்லைக்குட்பட்டவை. உங்கள் நாட்குறிப்பு எல்லையற்றதாகும். ஆகையால், உங்கள் அட்டவணையை நீங்கள் குறித்துக்கொள்ள வேண்டும். தந்தையின் கட்டளை: உங்கள் வியாபாரம் மற்றும் ஏனைய அனைத்தையும் தொடர்ந்தும் செய்யுங்கள். எனினும் என்னை நினைவுசெய்யவும் நேரத்தை ஒதுக்குங்கள். உங்கள் கணக்கைச் சோதித்து, தொடர்ந்தும் உங்கள் இலாபத்தை அதிகரித்துக் கொள்ளுங்கள்; நட்டத்தை ஏற்படுத்திக் கொள்ளாதீர்கள். நீங்கள் யுத்தம் புரிகின்றீர்கள். எனவே, ஒரு விநாடி இலாபமும், அடுத்த விநாடி நட்டமும் ஏற்படுகின்றன. நீங்கள் இலாபத்தையா அல்லது நட்டத்தையா ஏற்படுத்துகின்றீர்கள் என்பதை உங்களால் மிக விரைவில் கண்டுகொள்ள முடியும். நீங்கள் வியாபாரிகள், அப்படித்தானே? அரிதாகச் சிலராலேயே இந்த வியாபாரத்தைச் செய்ய முடியும். நினைவுசெய்வதில் இலாபமும், மறப்பதில் நட்டமும் உள்ளன. இதனையிட்டு நீங்கள் உங்களைச் சோதிக்க வேண்டும். உயர்ந்ததோர் அந்தஸ்தைப் பெற இருப்பவர்கள், தாம் எவ்வளவு நேரம் மறந்த நிலையில் இருந்தோம் என்பதைப் பார்ப்பதில் அக்கறை கொண்டிருப்பார்கள். அவரே ஆத்மாக்கள் அனைவரதும் தந்தை என்பதையும், அவரே தூய்மையாக்குபவர் என்பதையும் குழந்தைகளாகிய நீங்கள் புரிந்துகொள்கின்றீர்கள். நாங்கள் ஆதியில் ஆத்மாக்களே. நாங்கள் எங்கள் வீட்டிலிருந்து இங்கே இறங்கி வந்து, சரீரங்களை எடுத்து, எங்கள் பாகங்களை நடிக்கின்றோம். சரீரங்கள் அழியக்கூடியன. ஆத்மாக்களோ அநாதியானவர்கள். ஆத்மாக்களாகிய எங்களிலேயே எங்கள் சம்ஸ்காரங்களும் உள்ளன. பாபா வினவுகின்றார்;: ஓ ஆத்மாக்களே, ஞாபகப்படுத்திப் பாருங்கள்: உங்கள் தற்போதைய பிறவியில் சிறுபராயத்திலிருந்து நீங்கள் தவறான செயல்கள் எதனையாவது செய்திருக்கின்றீர்களா? உங்களுக்கு மூன்று நான்கு வயதாக இருக்கும்பொழுதிலிருந்து செய்துள்ளவற்றையும், நீங்கள் எவ்வாறு உங்கள் சிறு பராயத்தைக் கழித்தீர்கள் என்பதையும், நீங்கள் என்ன செய்தீர்கள் என்பதையும்; உங்களால் நினைவுசெய்ய முடியும். முயற்சி செய்து நினைவுசெய்து பாருங்கள்: எதனையிட்டாவது உங்கள் மனச்சாட்சி உங்களை உள்ளார உறுத்துகின்றதா? சத்திய யுகத்தில் எந்தப் பாவச் செயலும் செய்யப்படுவதில்லை. ஆகையால் அங்கே இவ்வாறான கேள்வி இல்லை. இங்கே, பாவங்கள் தொடர்ந்தும் செய்யப்படுகின்றன. மக்கள் புண்ணியம் என்று கருதுகின்ற செயல்களும் உண்மையில் பாவங்களாகும். இது பாவாத்மாக்களின் உலகம். உங்கள் தொடர்புகளும் பாவாத்மாக்களுடனேயே உள்ளன. இங்கே புண்ணியாத்மாக்கள் இருப்பதில்லை. புண்ணியாத்மாக்களின் உலகில், ஒரு பாவாத்மாவேனும் இருப்பதில்லை. பாவாத்மாக்களின் உலகில், ஒரு புண்ணியாத்மாவேனும் இல்லை. குருமார்களின் கால்களில் மக்கள் விழுந்து வணங்கினாலும், அவர்களும் புண்ணியாத்மாக்கள் அல்ல. இது தமோபிரதான் கலியுகமாகும். இங்கே புண்ணியாத்மாக்கள் இருப்பது அசாத்தியம். புண்ணியாத்மாக்கள் ஆகுவதற்காக, வந்து உங்களைத் தூய்மையாக்குமாறு ஆத்மாக்களாகிய நீங்கள் தந்தையைக் கூவி அழைக்கின்றீர்கள். ஒருவர் அதிகப் பணத்தைத் தானம் செய்வதாலோ அல்லது தர்மசாலைகள் போன்றவற்றைக் கட்டி புண்ணியச் செயல்களை அதிகளவு செய்வதாலோ அவர் ஒரு புண்ணியாத்மா என்றில்லை; இல்லை. திருமண விழாக்களிற்காக மண்டபங்கள் போன்றவற்றைக் கட்டுவதும் ஒரு புண்ணியச் செயல் அல்ல. இவ்விடயங்கள் புரிந்துகொள்ளப்பட வேண்டும். இது இராவண இராச்சியம்; இது பாவாத்மாக்கள் நிறைந்த அசுர உலகம். வேறு எவருமன்றி, நீங்களே இவ்விடயங்களை அறிவீர்கள். இராவணன் இருக்கின்றான், ஆனால் அவனை எவரும் இனங்காண்பதில்லை. சிவனின் உருவமும் உள்ளது, ஆனால் அவரையும் எவரும் இனங்காண்பதில்லை. அவர்கள் பெரிய சிவலிங்கம் போன்றவற்றைக் கட்டுகின்றார்கள். இருப்பினும் அவர் பெயருக்கும் வடிவத்திற்கும் அப்பாற்பட்டவர் என்றும், அவர் சர்வவியாபகர் என்றும் அவர்கள் கூறுகின்றார்கள். ஆகையாலேயே தர்மத்தின் அவதூறு ஏற்படும்பொழுது தான் வருவதாகத் தந்தை கூறியுள்ளார். உங்களை உலக அதிபதிகள் ஆக்குகின்ற, தந்தையான சிவபாபா பாரதத்தில் அவதூறு செய்யப்படுகின்றார். மனிதர்களின் கட்டளைகளைப் பின்பற்றியதால், நீங்கள் அவரை அதிகளவில் அவதூறு செய்துவிட்டீர்கள். மனித கட்டளைகளையும், இறை கட்டளைகளையும் பற்றிய புத்தகம் ஒன்று உள்ளது. உங்களுக்கு மாத்திரமே இதனைப் பற்றித் தெரியும், ஸ்ரீமத்தைப் பின்பற்றுவதால், எவ்வாறு நீங்கள் தேவர்கள் ஆகுகின்றீர்கள் என்பதை நீங்கள் பிறருக்கு விளங்கப்படுத்துகின்றீர்கள். இராவணனின் கட்டளைகளைப் பின்பற்றுவதால், நீங்கள் அசுர குணம் நிறைந்த மனிதர்கள் ஆகுகின்றீர்கள். மனித கட்டளைகள் அசுர கட்டளைகள் என அழைக்கப்படுகின்றன. மக்கள் தொடர்ந்தும் அசுரத்தனமான செயல்களையே செய்கின்றார்கள். கடவுள் சர்வவியாபி என்பதும், அவர் மீனிலும், முதலையிலும் அவதரிக்கின்றார் என்பதுமே அவர்கள் கூறுகின்ற பிரதான விடயங்களாகும். ஆகையால், அவர்கள் மிகவும் அசுரத்தனமாகவும் அழுக்காகவும் ஆகியுள்ளார்கள்! ஆத்மாக்களாகிய நீங்கள் ஒரு மீனிலோ முதலையிலோ பிறப்பெடுப்பதில்லை; நீங்கள் மனித சரீரங்களில் மாத்திரம் பிரவேசிக்கின்றீர்கள். நீங்கள் மீனாகவும், முதலையாகவும் ஆகுவதில்லை என்பதையும், அத்துடன் 8.4 மில்லியன் உயிரினங்களில் பிறப்பெடுப்பதில்லை என்பதையும் இப்பொழுது புரிந்துகொள்;கின்றீர்கள். நீங்கள் இப்பொழுது தந்தையின் ஸ்ரீமத்தைப் பெறுகின்றீர்கள். குழந்தைகளே, நீங்கள் 84 பிறவிகளை எடுக்கின்றீர்கள். 8.4 மில்லியனில் 84 எத்தனை சதவீதமாகும்? அவர்கள் கூறுவதில் பொய்மை, முற்றிலும் பொய்மையே உள்ளது, அவர்கள் கூறுவதில் சற்றேனும் உண்மையில்லை. இதன் அர்த்தத்தையும் நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். பாரதத்தின் நிலையைப் பாருங்கள்! சுவர்க்கம் என்று அழைக்கப்பட்ட பாரதம் சத்தியபூமி என்றும் அழைக்கப்பட்டது. அரைக் கல்பத்திற்கு இராம இராச்சியம் உள்ளது. மற்றைய அரைக் கல்பத்திற்கு இராவண இராச்சியம் உள்ளது. இராவண இராச்சியம் அசுர சமுதாயம் என்றும் அழைக்கப்படுகின்றது. வார்த்தைகள் மிக வலிமையானவை. அரைக்கல்பத்திற்குத் தேவ இராச்சியம் தொடர்கின்றது. அவர்கள் முதலாம், இரண்டாம் எட்வர்ட் எனக் கூறுவதைப் போன்று, முதலாம் இலக்ஷ்மி நாராயணன், இரண்டாம் இலக்ஷ்மி நாராயணன், மூன்றாம் இலக்ஷ்மி நாராயணன் போன்றோர் உள்ளனர் எனத் தந்தை விளங்கப்படுத்தியுள்ளார். முதலாவது வம்சமும், பின்னர் இரண்டாவது வம்சமும் உள்ளது. இவ்வாறே அது தொடர்கின்றது. முதலில் சூரிய வம்ச இராச்சியமும், பின்னர் சந்திர வம்சமும் உங்களுக்கு உள்ளன. தந்தை வந்து நாடகத்தின் இரகசியங்களை மிகத் தெளிவாக விளங்கப்படுத்தியுள்ளார். இவ்விடயங்கள் உங்கள் சமயநூல்களில் குறிப்பிடப்படவில்லை. சமயநூல்களில் சில வரிகள் உள்ளபொழுதிலும், சமயநூல்களை உருவாக்கியவர்கள் எதனையும் புரிந்துகொள்ளவில்லை. பெனாரஸிற்கு பாபா சென்றபொழுது, அவருக்கு இவ்வுலகமே பிடிக்கவில்லை. அவர் அங்கு அமர்ந்திருந்து சுவர்களில் கோடுகளை வரைவதுண்டு. தந்தையே என்னை அவை அனைத்தையும் செய்யத் தூண்டினார். அந்நேரத்தில் நான் ஒரு குழந்தையாக இருந்ததால், முழுமையான புரிந்துணர்வு இருக்கவில்லை. என்னை யாரோ அவை அனைத்தையும் செய்ய வைக்கிறார்கள் என்ற உணர்வு மாத்திரமே இருந்தது. நான் விநாசத்தின் காட்சிகளைக் கண்டபொழுது, உள்ளார்த்தமான சந்தோஷமும் இருந்தது. இரவில், நான் உறங்கியபொழுது, பறப்பதைப் போன்றே உணர்ந்தேன். எவ்வாறாயினும் நான் எதனையும் புரிந்துகொள்ளவில்லை. நான் வெறுமனே கோடுகளை மாத்திரம் போட்டேன். ஏதோ ஒரு சக்தி எனக்குள் பிரவேசித்திருப்பதை மாத்திரம் உணர்ந்தேன். நான் வியப்படைவேன். முன்னர் நான் வியாபாரம் போன்றவற்றைச் செய்தேன். ஆனால் அப்பொழுது என்ன நடைபெற்றதெனில், நான் சிலரைப் பார்க்கும்பொழுது, அவர்கள் விரைவில் திரான்ஸில் செல்வார்கள். நான் வினவுவேன்: என்ன நடக்கின்றது? நான் யாரைப் பார்க்கின்றேனோ அவர்கள் கண்களை மூடிக்கொள்வார்கள். அப்பொழுது அவர்களிடம், நீங்கள் என்ன பார்த்தீர்கள் என வினவினால், தாங்கள் வைகுந்தத்தைப் பார்த்ததாக அல்லது கிருஷ்ணரைப் பார்த்ததாகப் பதிலளிப்பார்கள். இவ்விடயங்களும் புரிந்துகொள்ளப்பட வேண்டும். ஆகையாலேயே நான் அனைத்தையும் துறந்து எதனையாவது புரிந்துகொள்ள முயற்சிப்பதற்காக பெனாரஸிற்குச் சென்றேன். நான் நாள் முழுவதும் அங்கு அமர்ந்திருப்பதுண்டு. நான் பென்சிலால் சுவரில் வரைந்து கொண்டிருப்பதைத் தவிர வேறு எதுவும் செய்யவில்லை. நான் ஒரு சிறு குழந்தையாகவே இருந்தேன்! நான் அவ்விடயங்களைப் பார்த்தபொழுது, இனியும் அந்த வியாபாரம் எதனையும் நான் செய்ய விரும்பவில்லை என்பதையும், நான் எனது வியாபாரம் போன்றவற்றைத் துறக்க வேண்டும் என்றும் உணர்ந்தேன். நான் அந்தக் கழுதைத் தொழிலை விட்டு விடுவதில் சந்தோஷம் அடைந்தேன்; அது இராவண இராச்சியமாகும். இராவணன் தலை மீது ஒரு கழுதையின் தலை சித்தரிக்கப்பட்டுள்ளது. எனவே அது ஓர் இராச்சியமல்ல, அது கழுதைத் தொழில் என்றே எண்ணினேன். ஒரு கழுதை மீண்டும் மீண்டும் மண்ணில் புரண்டு, சலவைக்காரர் சுத்தமாகக் கழுவியதை அழுக்காக்கியவாறு இருக்கின்றது. தந்தையும் வினவுகின்றார்: நீங்கள் என்னவாக இருந்தீர்கள்? நீங்கள் இப்பொழுது என்ன ஸ்திதியை அடைந்துள்ளீர்கள்? தந்தை மாத்திரமே இங்கமர்ந்திருந்து இதனை விளங்கப்படுத்துகின்றார். இந்த தாதாவும் இதனை விளங்கப்படுத்துகிறார். இருவரும் தொடர்ந்தும் இவ்வாறு விளங்கப்படுத்துகிறார்கள். உங்கள் மத்தியில் இந்த ஞானத்தை மிகவும் நன்றாக விளங்கப்படுத்தக்கூடியவர்கள் திறமைசாலிகள் என அழைக்கப்படுகின்றார்கள். நீங்கள் அனைவரும் வரிசைக்கிரமமானவர்கள். ஓர் இராச்சியம் ஸ்தாபிக்கப்படுகின்றது எனவும், அனைவரும் நிச்சயமாக வரிசைக்கிரமமாக ஓர் அந்தஸ்தைப் பெறுவார்கள் எனவும் குழந்தைகளாகிய நீங்கள் விளங்கப்படுத்துகின்றீர்கள். ஆத்மாக்கள் கல்பம், கல்பமாகத் தங்கள் பாகங்களை நடிக்கின்றார்கள். அனைவருமே ஞானத்தைச் சமமாகப் புரிந்துகொள்வார்கள் என்றில்லை. இந்த ஸ்தாபனை மிக அற்புதமானது! ஏனையோர் ஸ்தாபனையைப் பற்றிய ஞானத்தைக் கொடுப்பதில்லை. உதாரணமாக, சீக்கிய சமயம்; ஸ்தாபிக்கப்பட்டபொழுது, ஒரு தூய ஆத்மா பிரவேசித்தார், சிறிது காலத்தின் பின்னர் சீக்கிய சமயம் ஸ்தாபிக்கப்பட்டது. அவர்களின் தலைவர் யார்? குரு நானக். அவர் வந்த பின்னரே, ஜாப்சாஹிப் (சீக்கியரின் பிரார்த்தனை) உருவாக்கப்பட்டது. ஆரம்பத்தில், ஆத்மாக்கள் புதியவர்களாக இருக்கின்றார்கள். ஏனெனில் அவர்கள் தூய்மையானவர்கள். ஒரு தூய ஆத்மா மகாத்மா என அழைக்கப்படுகின்றார். ஒரேயொரு தந்தை மாத்திரமே பரம் என அழைக்கப்படுகின்றார். அவர்கள் ஒரு சமயத்தை ஸ்தாபிப்பதால் மகான்கள் என அழைக்கப்படுகின்றார்கள். அவர்களைத் தொடர்ந்து அவர்களைப் பின்பற்றுபவர்கள் வரிசைக்கிரமமாகக் கீழிறங்கி வருகின்றார்கள். ஐயாயிரம் வருடங்களுக்கு முன்னர், புதிய ஆத்மா ஒருவர் வந்து, சீக்கிய சமயத்தை ஸ்தாபித்தார். அந்நேரத்தில் எவ்வாறு கிராந்த் இருந்திருக்க முடியும்? சுக்மணி (அமைதிப் பாடல்) ஜாப்சாஹிப் போன்றன அதன்பின்னரே எழுதப்பட்டிருக்க வேண்டும். அவர்கள் என்ன கற்பிக்கின்றார்கள்? அவர்களுக்கு உற்சாகம் உள்ளபொழுது, அமர்ந்திருந்து தந்தையைப் புகழ்கின்றார்கள். ஆனால் அவர்களின் புத்தகங்கள் போன்றன அவர்களில் பலர் இருக்கும்பொழுதே, பின்னரே எழுதப்பட்டன. ஏனெனில் அவற்றை வாசிப்பதற்கும் உங்களுக்கு மக்;கள் தேவை. ஒவ்வொரு சமயத்தினதும் சமயநூல்கள், அந்தச் சமயம் ஸ்தாபிக்கப்பட்ட பின்னரே உருவாக்கப்படுகின்றன. பக்தி மார்க்கம் ஆரம்பித்த பின்னரே சமயநூல்கள் வாசிக்கப்படுகின்றன. ஞானம் தேவையாகும். ஆரம்பத்தில், ஆத்மாக்கள் சதோபிரதானாக இருக்கின்றார்கள். அதன்பின்னர் அவர்கள் சதோ, ரஜோ, தமோ ஆகுகின்றார்கள். பெருமளவு வளர்ச்சி ஏற்பட்ட பின்னரே, சமயத்தின் புகழ் இருப்பதுடன், அதற்குரிய சமயநூல்களும் உருவாக்கப்படுகின்றன. இல்லாவிடின், எவ்வாறு வளர்ச்சி இருக்கும்? அவர்கள் பின்பற்றுபவர்கள் ஆகவேண்டும். சீக்கிய சமயத்திற்குரிய ஆத்மாக்கள் வந்து பின்பற்ற வேண்டும். அதற்குப் பெருமளவு காலம் தேவை. புதிதாக வருகின்ற ஆத்மாக்கள் துன்பத்தை அனுபவம் செய்வதில்லை; நியதி அதனை அனுமதிப்பதில்லை. ஆத்மாக்கள் தங்கள் சதோபிரதான் ஸ்திதியிலிருந்து சதோ, ரஜோ, தமோ ஸ்திதிகளுக்குள் செல்லும்பொழுதே துன்பத்தை அனுபவம் செய்கின்றார்கள். இதுவே நியதி. இங்கே, அவர்கள் கலந்து காணப்படுகின்றார்கள்; இராவண சமுதாயமும் இராம சமுதாயமும் உள்ளன. இன்னமும், நீங்கள் முழுமை அடையவில்லை. நீங்கள் முழுமை அடையும்பொழுது, உங்கள் சரீரங்களை நீக்குவீர்கள். கர்மாதீத ஸ்திதியில் உள்ளவர்களுக்குத் துன்பம் இருக்க மாட்டாது. அவர்களால் இந்த அழுக்கான உலகில் வாழ முடியாது; அவர்கள் இங்கிருந்து சென்றாக வேண்டும். இங்கிருப்பவர்கள் கர்மாதீதம் அடையாமல் இருக்கின்றார்கள். அனைவராலும் ஒரேநேரத்தில் கர்மாதீதம் அடைய முடியாது. விநாசம் இடம்பெற்றாலும், சிலர் எஞ்சியிருப்பார்கள்; முழுப் பிரளயமும் இடம்பெற மாட்டாது. இராமர் சென்றபொழுது, இராவணனும் சென்;றான் என்று பாடப்படுகின்றது. இராவணனின் குடும்பம் மிகப் பெரியது. உங்கள் குடும்பம் மிகச் சிறியது. எண்ணற்ற சமயங்கள் உள்ளன. உண்மையில் உங்கள் குடும்பமே பெரிதாக இருக்க வேண்டும். ஏனெனில் தேவ தர்மமே முதலாவதாகும். இப்பொழுது அவர்கள் அனைவரும் கலந்து காணப்படுகின்றார்கள். பலரும் கிறிஸ்தவர்கள் ஆகியுள்ளார்கள். சந்தோஷமும், ஓர் அந்தஸ்தும் கிடைக்கும் என்பதை மக்கள் காணும்பொழுது, அவர்கள் அந்தச் சமயத்;திற்குரியவர்கள் ஆகுகின்றார்கள். பாப்பரசர் வரும்பொழுதெல்லாம், பலரும் கிறிஸ்தவர்கள் ஆகுகின்றார்கள். எனவே அப்பொழுது பெருமளவு விரிவாக்கம் இருகின்றது. சத்தியயுகத்தில் ஒரு மகனும் ஒரு மகளுமே இருக்கின்றார்கள். வேறு எந்தச் சமயமும் அவ்வாறு வளர்வதில்லை. இப்பொழுது பாருங்கள்! கிறிஸ்தவர்களே அனைவரிலும் அதிகப் பலம் வாய்ந்தவர்கள். பல குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்குப் பரிசுகள் கொடுக்கப்படுகின்றன, ஏனெனில் அவர்களுக்கு இராணுவத்திற்குப் பயன்படுத்தும் வகையில் மனிதர்கள் தேவை. அவர்கள் அனைவருமே கிறிஸ்தவர்கள்: ரஷ்யர்கள், அமெரிக்கர்கள் அனைவருமே கிறிஸ்தவர்கள் ஆவார்கள். எவ்வாறு இரு குரங்குகள் சண்டையிட்டபொழுது, பூனை வெண்ணெயை உண்டது என்ற கதையும் உள்ளது. அது நிச்சயிக்கப்பட்ட நாடகமாகும். முன்னர், இந்துக்களும் முஸ்லீம்களும் சேர்ந்து வாழ்ந்தார்கள். பிரிவினை ஏற்பட்டபொழுதே, பாகிஸ்தான் என்ற வேறான நாடு உருவாக்கப்பட்டது. இது நிச்சயிக்கப்பட்ட நாடகத்தில் உள்ளது. இரு நாடுகள் சண்டையிடும்பொழுது, அவர்கள் போர்த்தளபாடங்களைக் கொள்வனவு செய்கின்றனர், வியாபாரமும் இடம்பெறும். அதுவே அவர்களின் மிகவும் முக்கியமான வியாபாரமாகும். ஆனால் நாடகத்தில் உள்ள வெற்றி எனும் நியதி உங்களுடையதே. உங்களை வேறு எவருமே வெற்றிகொள்ள முடியாது என்பது 100மூ நிச்சயமாகும். ஏனைய அனைவரும் அழிக்கப்படுவார்கள். புதிய உலகில் உங்கள் இராச்சியமே உள்ளது எனவும், அதற்குத் தகுதியானவர்கள் ஆகுவதற்காகவே கற்கின்றீர்கள் எனவும் நீங்கள் அறிவீர்கள். நீங்கள் தகுதியானவர்களாக இருந்தீர்கள், ஆனால் இப்பொழுது தகுதியற்றவர்கள் ஆகியுள்ளீர்கள். நீங்கள் மீண்டும் தகுதியானவர்கள் ஆகவேண்டும். மக்கள் பாடுகிறார்கள்: ஓ தூய்மையாக்குபவரே, வாருங்கள்! ஆனால் அதன் அர்த்தம் என்ன என்பதை அவர்கள் புரிந்து கொள்வதில்லை. இது ஒரு காடாகும். தந்தை இப்பொழுது வந்துள்ளார். அவர் வந்து, முட்காட்டைப் பூந்தோட்டமாக மாற்றுகின்றார். அது தேவர்களின் உலகமாகும். இது அசுர உலகமாகும். முழு மனித உலகினதும் இரகசியங்கள் உங்களுக்கு விளங்கப்படுத்தப்பட்டுள்ளன. உங்கள் தர்மத்தை நீங்கள் எவ்வாறு மறந்தீர்கள் என்பதையும், எவ்வாறு உங்கள் தர்மம் சீரழிந்தது என்பதையும், எவ்வாறு உங்கள் செயல்கள் அனைத்தும் பாவம் மிக்கவையாகின என்பதையும் நீங்கள் இப்பொழுது புரிந்துகொள்கின்றீர்கள். செயல்களினதும், பாவச் செயல்களினதும், தூய செயல்களினதும் ஆழமான தத்துவத்தை பாபா உங்களுக்கு விளங்கப்படுத்தியுள்ளார். நீங்கள் நேற்று எவ்வாறு இருந்தீர்கள், இன்று நீங்கள் எவ்வாறு ஆகியுள்ளீர்கள் என்பதைப் புரிந்துகொள்;கின்றீர்கள். அது நெருங்கி வருகின்றது, அப்படித்தானே? பாபா கூறுகின்றார்: நேற்று, நான் உங்களைத் தேவர்கள் ஆக்கினேன்; நான் உங்களுக்கு உங்களுடைய அந்த இராச்சிய பாக்கியத்தைக் கொடுத்தேன். பின்னர், அவை யாவும் எங்கு சென்றன? உங்களுக்கு ஞாபகம் உள்ளதா? பக்தி மார்க்கத்தில் நீங்கள் அதிகச் செல்வத்தை இழந்தீர்கள். அது நேற்றைய தினத்திற்கான கேள்வியாகும். உங்கள் உள்ளங்கையில் உங்களுக்கு வைகுந்தத்தைக் கொடுப்பதற்கே தந்தை வருகின்றார். இந்த ஞானம் உங்கள் புத்தியில் இருக்க வேண்டும். உங்கள் கண்கள் உங்களைப் பெருமளவில் ஏமாற்றுகின்றன என பாபா விளங்கப்படுத்தியுள்ளார். உங்கள் குற்றக் கண்களை நீங்கள் ஞானத்தினால் குற்றமற்றவையாக ஆக்க வேண்டும். அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தந்தை தாயாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும், நினைவுகளும், காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கின்றார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. உங்கள் எல்லையற்ற நாட்குறிப்பேட்டில் உங்கள் அட்டவணையைக் குறித்துக் கொள்ளுங்கள்: நான் எவ்வளவு நேரம் நினைவுசெய்தேன்? நினைவுசெய்ததனால், எவ்வளவு இலாபம் ஈட்டப்பட்டது? நட்டம் ஏதும் ஏற்பட்டதா? நினைவு நேரத்தில் எனது புத்தி எங்கே சென்றது?

2. இப்பிறவியில் உங்கள் மிகவும் சிறிய வயதிலிருந்து நீங்கள் செய்துள்ள தவறான செயல்களையும், பாவங்களையும் குறித்துக் கொள்ளுங்கள். உங்கள் மனச்சாட்சியை உறுத்துகின்ற எதனைப் பற்றியும் தந்தையிடம் கூறுவதனால் நீங்கள் இலேசாகி விடுவீர்கள். நீங்கள் இனிமேலும் பாவச் செயல்கள் எதனையும் செய்யக்கூடாது.


ஆசீர்வாதம்:
நீங்கள் கடவுளிடம் அன்பானவர்களாக இருந்து, ஒருவரின் நல்ல குணத்தினால் ஆதிக்கம் செலுத்தப்படாது இருப்பதற்குப் பதிலாக, அதனை உங்களில் கிரகிப்பீர்களாக.

நீங்கள் கடவுளிடம் அன்பானவர்களாக இருக்க விரும்பினால், அப்பொழுது சரீர உணர்வின் தடைகள் எதுவும் இருக்கின்றனவா எனச் சோதியுங்கள். சில குழந்தைகள் இவர் மிகவும் நல்லவர், இதனாலேயே நான் அவர் மீது சிறிது கருணையை உணர்கின்றேன் என்று கூறுகின்றார்கள். சிலரின் சரீரத்தின் மீது சிலர் பற்று கொண்டிருக்கின்றார்கள், ஏனையோர் சிலரின் நற்குணம் அல்லது சிறப்பியல்பு மீது பற்றைக் கொண்டிருக்கின்றனர். எவ்வாறாயினும், அந்தச் சிறப்பியல்பை அல்லது நற்குணத்தைக் கொடுத்தவர் யார்? ஒருவர் சிறந்தவராக இருந்தால், அப்பொழுது நீங்கள் அந்த நல்ல குணத்தை உங்களில் கிரகிக்கலாம், ஆனால் அந்த நல்ல குணத்தினால் ஆதிக்கம் செலுத்தப்படாதீர்கள். பற்றற்றவராகவும் கடவுளிடம் அன்பானவராகவும் இருங்கள். அன்பான குழந்தைகள், அதாவது, கடவுளிடம் அன்பு கொண்டுள்ளவர்கள் சதா பாதுகாப்பாக இருக்கின்றார்கள்.

சுலோகம்:
மௌனச் சக்தியானது வெளிப்படட்டும், அப்பொழுது சேவையின் வேகம் துரிதமாகும்.