07.01.19        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்:
இனிய குழந்தைகளே, மக்கள் தங்கள் சரீரங்களின் நன்மைக்காகப் பல வழிமுறைகளை உருவாக்குகிறார்கள். ஆனால், தந்தை மாத்திரமே ஆத்மாவின் முன்னேற்றத்திற்கும், ஏறும் ஸ்திதிக்குமான வழிமுறைகளை உங்களுக்குக் கொடுக்கின்றார். இது தந்தையின் பொறுப்பு மாத்திரமேயாகும்.

கேள்வி:
குழந்தைகளாகிய நீங்கள் தொடர்ந்தும், நிலையான முன்னேற்றத்தை அடைவதற்குத் தந்தை கொடுக்கும் மேன்மையான வழிகாட்டல்கள் எவை?

பதில்:
குழந்தைகளே, முன்னேற்றம் அடைய வேண்டுமாயின்: 1. எப்போதும் நினைவு யாத்திரையில் நிலைத்திருங்கள். தந்தையை நினைவுசெய்வதன் மூலமே ஆத்மாவிலுள்ள துரு அகற்றப்படும். 2. ஒருபோதும் கடந்த கால நினைவுகளுடனோ அல்லது எதிர்காலத்தின் எதிர்பார்ப்புகளுடனோ இருக்காதீர்கள். 3. உங்கள் சரீரத்தின் ஜீவனோபாயத்திற்குத் தேவையான செயல்களைச் செய்யுங்கள். ஆயினும், உங்களுக்கு இருக்கும் நேரத்தை வீணாக்காதீர்கள். தந்தையை நினைவு செய்வதில் உங்கள் நேரத்தைத் தகுதி வாய்ந்த முறையில் பயன்படுத்துங்கள். 4. குறைந்தபட்சம் எட்டு மணித்தியாலம் இறை சேவை செய்யுங்கள். நீங்கள் தொடர்ந்தும் முன்னேறுவீர்கள்.

ஓம்சாந்தி.
ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளாகிய உங்களுக்கு அதாவது, ஆத்மாக்களாகிய உங்களுக்கு விளங்கப்படுத்துகிறார். பரமாத்மாவே ஆத்மாக்களுக்கான பொறுப்பைக் கொண்டுள்ளார் என்றும், அவரால் மாத்திரமே ஆத்மாக்கள் அனைவருக்கும் முன்னேற்றத்திற்கும், மன அமைதிக்கும் வழிகாட்ட முடியும் என்று மக்கள் கூறுகின்றார்கள். ஆத்மா ஏனைய அனைத்திலிருந்தும் விடுபட்டு, நெற்றியின்; மத்தியில் இருக்கின்றார். பொதுவாக, சரீரத்தின் ஏனைய பகுதிகளுக்கு நோய் இருக்கின்ற போதிலும், நெற்றிக்கு ஏற்படுவதில்லை. உங்களுக்குத் தலைவலி ஏற்பட்டாலும் கூட, ஆத்மாவின் சிம்மாசனம் அமைந்திருக்கும் இடத்திற்கு எச்சிரமமும் இருக்காது. ஏனெனில், ஆத்மா அச் சிம்மாசனத்திலே அமர்ந்திருக்கிறார். ஆத்மாவை முன்னேற்றமடையச் செய்து, உங்களுக்கு மன நிம்மதியைத் தரக்கூடிய சத்திர சிகிச்சையாளர் பரமாத்மா ஒரேயொருவரே ஆவார். ஆத்மா முன்னேற்றமடையும் போது மாத்திரமே ஆரோக்கியத்தையும் செல்வத்தையும் பெற முடியும். உங்கள் சரீரத்தை நீங்கள் எவ்வளவு கவனித்தாலும், அதன் மூலம் எவ்விதமான முன்னேற்றமும் ஏற்பட மாட்டாது. சரீரத்திற்கு ஏதேனும் ஒரு தொந்தரவு முரண்பாடு இருந்து கொண்டிருக்கும். தந்தையைத் தவிர வேறு எவராலும் ஆத்ம முன்னேற்றம் அளிக்க முடியாது. உலகிலுள்ள ஏனையோர் அனைவருமே சரீரத்தின் முன்னேற்றத்திற்கே வழிகளைக் கண்டுபிடிக்கின்றார்கள். ஆனால், அவற்றால் ஆத்மாவிற்கு முன்னேற்றம் அல்லது ஏறும் ஸ்திதி இருப்பதில்லை. தந்தையொருவரே அதனை உங்களுக்குக் கற்பிக்கின்றார். ஆத்மாவிலேயே அனைத்தும் தங்கியிருக்கிறது. ஆத்மாவே பதினாறு சுவர்க்கக் கலைகள் நிறைந்தவர் ஆகுகின்றார். பின்னர் ஆத்மாவே சுவர்க்கக் கலைகள் எதுவும் அற்றவர் ஆகுகின்றார். ஆத்மா பதினாறு சுவர்க்கக் கலைகள் நிறைந்தவர் ஆகுகின்றார். ஆத்மாவின் சுவர்க்கக் கலைகள் எவ்வாறு குறைவடைகின்றன என்பதைத் தந்தை மாத்திரமே உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார். தந்தை கூறுகிறார்: சத்தியயுகத்தில் நீங்கள் அதிகளவு சந்தோஷத்துடன் இருந்தீர்கள். ஆத்மா தனது ஏறும் ஸ்திதியில் இருந்தார். ஆத்மா எவ்வாறு முன்னேற்றம் அடையலாம் என்பதை ஏனைய சற்சங்களில் அவர்கள் விளங்கப்படுத்துவதில்லை. அவர்கள் பௌதீக போதையில் இருக்கிறார்கள். அவர்கள் சரீர உணர்வுடையவர்களாக இருக்கின்றார்கள், ஆனால் தந்தையோ உங்களை ஆத்ம உணர்வுடையவர்கள் ஆக்குகிறார். தமோபிரதான் ஆகியுள்ள ஆத்மாக்கள் சதோபிரதான் ஆக்கப்பட வேண்டும். இங்கே அனைத்திலும் ஆன்மீகம் உள்ளது. ஆனால் அங்கே அனைத்தும் பௌதீகமாகும். சத்திர சிகிச்சையாளர்கள் இருதயங்களை மாற்றும் சத்திரசிகிச்சையைச் செய்கிறார்கள். அதற்கு ஆத்மாவுடன் எந்தத் தொடர்பும் இல்லை. ஆத்மாக்கள் நெற்றியின் மத்தியில் இருக்கிறார்கள். ஆத்மாவிற்குச் சத்திர சிகிச்சை போன்ற எதனையும் செய்ய முடியாது. அச்சா. ஆத்மா ஒரு முறை மாத்திரமே ஈடேற்றப்படுகின்றார் என்று தந்தை விளங்கப்படுத்துகிறார். ஆத்மா தமோபிரதான் ஆகும் போது, ஆத்மாக்களின் ஈடேற்றத்திற்காகத் தந்தை வருகிறார். அவர் இல்லாமல், ஆத்மாக்கள் எவராலும் ஏறும் ஸ்திதியை அடைய முடியாது. தந்தை கூறுகிறார்: அத் தீய தமோபிரதான் ஆத்மாக்களினால் என்னிடம் வர முடியாது. மக்கள் உங்களிடம் வரும் போது, எவ்வாறு அமைதி ஏற்பட முடியும என்றும் எவ்வாறு முன்னேற்றம் அடைய முடியும் என்றும் உங்களைக் கேட்கிறார்கள். எவ்வாறாயினும், முன்னேற்றம் அடைந்த பின்னர், எங்கே செல்வார்களென்றோ அல்லது, என்ன நடைபெறும் என்றோ அவர்களுக்குத் தெரியாது. அவர்கள் கூவி அழைக்கின்றார்கள்: தூய்மையற்றவர்களைத் தூய்மையாக்க வாருங்கள். எங்களை ஜீவன்முக்தி தாமத்திற்கு அழைத்துச் செல்ல வாருங்கள். எனவே, அவர் ஆத்மாக்களைத் தன்னுடன் அழைத்துச் செல்வார். சரீரங்கள் இங்கே அழிக்கப்படும். எவ்வாறாயினும், இவ் விடயங்கள் எவருடைய புத்தியிலும் இல்லை. இவை கடவுளின் வழிகாட்டல்களாகும். ஏனைய அனைத்தும் மனிதர்களுடைய வழிகாட்டல்களாகும். கடவுளின் வழிகாட்டல்களைப் பின்பற்றுவதன் மூலம், நீங்கள் ஆகாயத்திற்குச் செல்கின்றீர்கள். அதாவது நீங்கள் சாந்தி தாமத்தையும் சந்தோஷ தாமத்தையும் அடைகிறீர்கள். அதன் பின்னர், நாடகத்திற்கேற்ப நீங்கள் கீழே வரவும் வேண்டும். ஆத்மாவிற்கு ஈடேற்றம் அளிக்க, தந்தையைத் தவிர வேறு எந்தச் சத்திரசிகிச்சையாளரும் இல்லை. அதன் பின்னர் அச் சத்திரசிகிச்சையாளர் உங்களையும் தன்னைப் போன்றவர் ஆக்குகிறார். சிலர் மற்றவர்களில் மிக நல்ல முன்னேற்றத்தை ஏற்படுத்துகிறார்கள். சிலர், நடுத்தரமான முன்னேற்றத்தையும் ஏனையோர் மூன்றாந்தரமான முன்னேற்றத்தையுமே மற்றவர்களில் ஏற்படுத்துகிறார்கள். தந்தையொருவரே ஆத்மாக்களின் முன்னேற்றத்துக்குப் பொறுப்பானவர். உலகிலுள்ள எவருக்குமே இது தெரியாது. தந்தை கூறுகிறார்: அந்தச் சாதுக்கள் போன்றோரையும் ஈடேற்றுவதற்காகவே நான் வருகிறேன். ஆத்மாக்கள் முதலில் கீழிறங்கும் போது, அவர்கள் தூய்மையாக இருக்கிறார்கள். இப்போது தந்தை அனைவரிலும் முன்னேற்றத்தை ஏற்படுத்துவதற்காக வந்திருக்கின்றார். நீங்கள் செய்யும் முயற்சிக்கேற்ப, வரிசைக்கிரமமாகத் தொடர்ந்தும் முன்னேறிச் செல்வதைப் பாருங்கள். அங்கே, உங்களுக்கு முதல்தரமான சரீரமொன்று கிடைக்கும். தந்தை அழிவற்ற சத்திரசிகிச்சையாளர். அவர் மாத்திரமே வந்து உங்களுக்கு முன்னேற்றத்தை ஏற்படுத்துகிறார். அதன் பிறகு, நீங்கள் உங்கள் அதிமேலான இனிய வீட்டிற்;குச் செல்வீர்கள். அவர்கள் சந்திரனுக்குச் செல்கிறார்கள். நீங்கள் முன்னேற்றம் அடைவதற்காக அழிவற்ற சத்திரசிகிச்சையாளர் கூறுகிறார்: சதா என்னை மட்டும் நினைவு செய்யுங்கள் உங்கள் பாவங்கள் அழிக்கப்படும். உலகெங்குமுள்ள குழந்தைகளைத் தந்தை விடுதலை செய்கிறார். நீங்கள் சுவர்க்கத்திற்குச் செல்லும் போது, ஏனைய அனைவரும் சாந்தி தாமத்தில் இருப்பார்கள். தந்தை ஓர் அற்புதமான பணியை மேற்கொள்கிறார். இது தந்தையின் அற்புதமே! இதனாலேயே, உங்கள் வழியையும் முறையையும் நீங்களே அறிவீர்கள். என்று கூறப்படுகிறது. ஆத்மாக்களுக்கே வழிகாட்டல்கள் கொடுக்கப்படுகின்றன. ஆத்மா பிரிந்திருப்பாயின், அவரால் வழிகாட்டல்களைப் பெற முடியாது. கடவுளின் வழிகாட்டல்களின் மூலம் ஏறும் ஸ்திதியும், மனித வழிகாட்டல்களின் மூலம் இறங்கும் ஸ்திதியும் உள்ளன: இதுவும் நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டுள்ளது. அம்மக்கள் இப்போது சுவர்க்கம் இருப்பதாக நினைக்கிறார்கள். மேலும் நீங்கள் முன்னேறிச் செல்லும் போது, இது சுவர்க்கமா அல்லது நரகமா என்பதை நீங்களே அறிந்து கொள்வீர்கள். மொழிக்காக அவர்கள் அதிகளவு குழப்பத்தை விளைவிக்கிறார்கள். அவர்கள் சந்தோஷமின்றி இருக்கிறார்கள். சுவர்க்கத்தில் துன்பம் இருக்கமாட்டாது. பூமி அதிர்ச்சியும் இருக்க மாட்டாது. இப்போது பழைய உலகம் அழிக்கப்பட்டு, சுவர்க்கம் ஸ்தாபிக்கப்பட உள்ளது. அரைக் கல்பத்தின் பின்னர், அதுவும் மறைந்து விடும். துவாரகை கடலுக்குள் மூழ்கியது என்று கூறுகிறார்கள். தங்கத்திலானவை கீழே புதைந்து விட்டன. பூமி அதிர்ச்சியின் போது, அவை நிச்சயமாகக் கீழே புதைக்கப்படும். அவர்கள் கடலுக்குள் தோண்டி, அவற்றை வெளியே எடுத்து வருவதில்லை. நிலத்தைத் தோண்டும் போது, அங்கே புதையல்களைக் கண்டுபிடிக்கிறார்கள். தந்தை கூறுகிறார்: நான் அனைவரையும் ஈடேற்றுகின்றேன். அதன் பின்னர் அனைவரும் என்னை அவதூறு செய்து, அவமதிக்கிறார்கள். என்னை அவதூறு செய்பவர்களையும் நான் ஈடேற்றுகின்றேன். எனவே, நிச்சயமாக எனது புகழ் இருக்;கும். பக்தி மார்க்கத்தில் எவ்வளவு மரியாதை உள்ளது என்று பாருங்கள். குழந்தைகளாகிய நீங்களும் தந்தையை அதிகளவு புகழ்கிறீர்கள், படத்தில், 32 தெய்வீகக் குணங்களைக் காட்டுகின்றீர்கள். நீங்கள் இப்பொழுது தந்தையைப் போன்று தெய்வீகக் குணங்கள் நிறைந்தவர்கள் ஆகுகின்றீர்கள். எனவே, அதற்கேற்ற முயற்சியையும் நீங்கள் செய்ய வேண்டும். உங்கள் நேரத்தை நீங்கள் வீணாக்கக் கூடாது. அனைவரிலும் அதிமேலான தந்தை உங்களுக்குக் கற்பிப்பதால், நீங்கள் நாளாந்தம் கற்க வேண்டும். அந்த ஒரேயொருவரே அழிவற்ற தந்தையும், ஆசிரியரும் ஆவார். காலந்தாழ்ந்து வந்தவர்கள் பழையவர்களை விடவும் முன்னேறிச் செல்கின்றார்கள். முழு உலகமும் இப்பொழுது தந்தையின் ஊடாக முன்னேற்றமடைகிறது. தந்தையே ஸ்ரீகிருஷ்ணரையும் தெய்வீகக் குணங்கள் நிறைந்தவர் ஆக்கினார். அவர் ஒருவரே அனைவருக்கும் அருள்பவர். ஏனைய அனைவரும் பெறுபவர்களே. நீங்கள் செய்யும் முயற்சிக்கேற்ப வரிசைக்கிரமமாக இவ் வம்சம் உருவாக்கப்படுகிறது. எல்லையற்ற தந்தை எத்தனை இனிமையானவரென்றும் எத்தனை அழகானவரென்றும் பாருங்கள்! நீங்கள் அனைவருமே அதிமேலான தந்தையின் மூலமே இப்போது முன்னேறுகிறீர்கள். ஏனைய அனைவரும் ஏணியில் இறங்க வேண்டும். இது தந்தையின் அற்புதமே! நீங்கள் உண்டு, பருகி நீங்கள் செய்வதைச் செய்யுங்கள், ஆனால், தந்தையின் புகழைப் பாடுங்கள். பாபாவை நீங்கள் நினைவு செய்வதனால் உங்களால் உணவு உண்ண முடியாது என்றல்ல. இரவில் உங்களுக்கு அதிகளவு நேரம் உள்ளது. குறைந்தபட்சம் உங்களுக்கு எட்டு மணித்தியாலம் உள்ளது. தந்தை கூறுகிறார்: இந்த அரசாங்கத்திற்காகக் குறைந்தபட்சம் எட்டு மணித்தியாலமேனும் சேவை செய்யுங்கள். இங்கே வருபவர்களுக்கு ஆத்ம முன்னேற்றத்திற்கான வழியைக் காட்டுங்கள். ஜீவன்முக்தி என்றால், உலக அதிபதியாக இருப்பதாகும். முக்தி என்பது பிரம்மாந்தத்தின் அதிபதியாக இருப்பதாகும். இதை விளங்கப்படுத்துவது இலகுவானது. ஆனாலும், சிலரது பாக்கியத்தில் இது இல்லையென்றால், அவர்களால் என்ன முயற்சியைச் செய்ய முடியும்? தந்தை விளங்கப்படுத்துகிறார்: தந்தையை நினைவு செய்யாது ஆத்மாவிலுள்ள துரு அகற்றப்பட முடியாது. நீங்கள் நாள் முழுவதும் ஞானத்தைக் கொடுத்தாலும், தந்தையை நினைவு செய்யாது, ஆத்மாவினால் முன்னேற முடியாது. தந்தை அதிகளவு அன்புடன் குழந்தைகளாகிய உங்களுக்கு தினமும் விளங்கப்படுத்துகிறார். ஆனால், நீங்கள் முன்னேறுகிறீர்களா இல்லையா என்பதை நீங்களே புரிந்து கொண்டிருப்பீர்கள். இங்கேயிருக்கும் குழந்தைகளாகிய நீங்கள் மாத்திரமன்றி, அனைத்து நிலையங்களிலுமுள்ள குழந்தைகளும் இதைக் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். பதிவு செய்யும் இந்த இயந்திரம் இங்கே வைக்கப்பட்டுள்ளது. அதில் பதிவு செய்யப்பட்டு, சேவைக்குச் செல்கிறது. அது அதிகளவு சேவை செய்கிறது. குழந்தைகள் தாங்கள் சிவபாபாவின் முரளியைக் கேட்டுக் கொண்டிருக்கிறோம் என்று புரிந்து கொள்கிறார்கள். அதை அவர்கள் உங்கள் மூலம் கேட்கும் போது அது நேரடியானது அல்ல. பின்பு, அவர்கள் அதனை நேரடியாகக் கேட்பதற்காக இங்கே வருகிறார்கள். பாபா அதனை பிரம்மாவின் வாய் மூலம் பேசுகிறார், அதாவது, அவர் வாயினால் ஞானாமிர்தத்தைக் கொடுக்கிறார். இந்த நேரத்தில் உலகம் தமோபிரதானாகி உள்ளதால், அதன் மீது ஞான மழை பொழியப்பட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. அதிகளவு மழைநீர் இருக்கிறது. அந்த நீரின் மூலம் யாருமே தூய்மையாக முடியாது. இவை அனைத்தும் ஞான விடயங்களாகும். தந்தை கூறுகிறார்: இப்போது, விழித்தெழுங்கள்! நான் உங்களை அமைதி தாமத்திற்கு அழைத்துச் செல்கிறேன். இதில் ஆத்மாவாகிய உங்களுக்கு முன்னேற்றம் உள்ளது. ஏனையவை அனைத்தும் பௌதீக விடயங்கள் ஆகும். நீங்கள் மட்டுமே ஆன்மீக விடயங்களைச் செவிமடுக்கிறீர்கள். நீங்கள் மட்டுமே கோடானு கோடீஸ்வரர்களாகவும், பாக்கியசாலிகளாகவும் ஆகுகிறீர்கள். தந்தை ஏழைகளின் பிரபு ஆவார். ஏழைகள் மட்டுமே இதனைச் செவிமடுக்கின்றார்கள். ஆகையாலேயே தந்தை கூறுகிறார்: இந்த ஞானத்தைக் கல்லுப் புத்தியுடையவர்களுக்கும் தெய்வீகக் குணங்கள் அற்றவர்களுக்கும் கொடுங்கள். அவை சத்தியயுகத்தில் இருப்பதில்லை. அது எல்லையற்ற சிவாலயமாகும். இப்போது இது எல்லையற்ற விலைமாதர் இல்லமாகும். இது முற்றிலும் தமோபிரதான் ஆகும். இந்தத் தூய்மையற்ற உலகம் இப்போது மாற வேண்டும். பாரதத்திலேயே இராம இராச்சியமும் இராவண இராச்சியமும் உள்ளன. எண்ணற்ற சமயங்கள் நிலவும் போது, அமைதியின்மையும் உள்ளது. எக்காலமும் யுத்தம் தொடர்ந்தும் இடம்பெறுகிறது. இப்போது மிகவும் உக்கிரமாக யுத்தம் இடம்பெறவுள்ளது. மகா யுத்தம் இடம்பெற்ற பின்னர், அது முடிவடையும், ஏனெனில், இராச்சியம் ஸ்தாபிக்கப்பட வேண்டும் என்பதால் உங்கள் கர்மாதீத் நிலையை நீங்கள் அடைந்திருப்பீர்கள். இப்போது எவராலும் கூற முடியாது. அந்த ஸ்திதியை அடைந்த பின்னர், கல்வி முடிவடைந்து விடும். அதன் பின்னர், உங்கள்; முயற்சிக்கேற்ப நீங்கள் மாற்றம் செய்யப்படுவீர்கள். இந்த வைக்கோற்போர் தீப்பிடித்து, உடனடியாகவே விநாசம் இடம்பெறும். அதுவே காரணமற்ற இரத்த வெள்ளம் என்று அழைக்கப்படுகிறது. அனைவரும் அநாவசியமாக மரணிப்பார்கள். இரத்த ஆறுகள் ஓடும். அதன் பின்னர் பாலாறும் நெய்யாறும் ஓடும். விரக்திக் கூக்குரலின் பின்னர் வெற்றி முரசு கொட்டும். ஏனைய அனைவரும் அறியாமை என்ற உறக்கத்தில் உறங்கிக் கொண்டிருக்கும் போதே மரணிப்பார்கள். மிகவும் சாதுரியமாக ஸ்தாபனை இடம்பெற வேண்டும். தடைகளும், தாக்குதல்களும் இடம்பெறும். தாய்மார்களினால் சுவர்க்க வாயில்; திறக்கப்படும். பல ஆண்கள் இருக்கின்ற போதிலும், பிறப்புக் கொடுப்பதால், ஆண்களை விடப் பெண்களே அதிகளவு வெகுமதியைப் பெறுகிறார்கள். அனைவரும் வரிசைக்கிரமமாகச் சுவர்க்கத்திற்குச் செல்வார்கள். சிலர் அடுத்தடுத்த இரு பிறவிகள் ஆணாகவே பிறக்கக்கூடும். நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டிருக்கும் கணக்கே இடம்பெறும். ஆத்ம முன்னேற்றம் இருக்கும் போது, அதிகளவு மாற்றங்கள் இருக்கும். சிலர் அதிமேலானவர்களாகவும் சிலர் அதிகீழானவர்களாகவும் ஆகுகிறார்கள். அரசர்களுக்கும் பிரஜைகளுக்கும் இடையில் பெரியதொரு வேறுபாடு உள்ளது. இனிமையிலும் இனிமையான குழந்தைகளுக்குத் தந்தை விளங்கப்படுத்துகிறார்: இப்போது, முயற்சி செய்யுங்கள். யோகத்தின் மூலம் தூய்மையாகுங்கள். அப்போதே, தாரணை இருக்க முடியும். இலக்கு மிகவும் உயர்ந்தது. உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதித் தந்தையை நீங்கள் அதிகளவு அன்போடு நினைவு செய்ய வேண்டும். ஆத்மாக்கள் பரமாத்மாவை நேசிக்கிறார்கள். இது ஆன்மீக அன்பாகும். இதனூடாகவே ஆத்மா முன்னேற்றமடைகின்றது. பௌதீகமான அன்பினால் ஆத்மாக்கள் வீழ்ச்சியடைகிறார்கள். சிலருக்கு பாக்கியத்தில் இல்லாத போது, அவர்கள் விட்டுச் சென்று விடுகின்றார்கள். யாகம் (யக்ஞம்) பரமாரிக்கப்படல் வேண்டும். தாய்மார்கள் கொடுக்கும் ஒவ்வொரு சதங்களே இந்த யாகத்தின் சேவைக்குப் பயன்படுகின்றது. இ;ங்கே, ஏழைகளே பின்னர் செல்வந்தவர்கள் ஆகுகிறார்கள். அனைத்தும் கல்வியிலேயே தங்கியுள்ளது. இப்போது நீங்கள் திருமண பாக்கியம் கொண்டவர்கள் ஆகுகின்றீர்கள். உங்கள் எல்லோருக்கும் இந்த உணர்வு உள்ளது. மாலையின் மணிகளாகப் போகின்றவர்களுக்கு இந்த நல்ல உணர்வு இருக்க வேண்டும். தொடர்ந்தும் சிவபாபாவை நினைவு செய்து, சேவை செய்யும்போது, அதிகளவு முன்னேற்றம் ஏற்படும். உங்கள் சரீரத்தையும் நீங்கள் சிவபாபாவின் சேவைக்காக அர்ப்பணிக்க வேண்டும். நாள் முழுவதும் இப் போதையில் இருப்பது, உங்கள் மாமியார் வீட்டிற்குப் போவது போன்றதன்று! நீங்கள் எந்தளவு முன்னேற்றம் அடைந்திருக்கிறீர்கள் என்பதை நீங்கள் சோதித்துப் பார்க்க வேண்டும். பாபா கூறுகிறார்: கடந்த காலத்தின் நினைவையோ எதிர்காலத்திற்கான எதிர்பார்ப்பையோ கொண்டிருக்காதீர்கள். உங்கள் ஜீவனோபாயத்திற்காக நீங்கள் செயல்களைச் செய்ய வேண்டும். உங்களுக்கு நேரமிருக்கும் போதெல்லாம் தந்தையை நினைவு செய்தால், உங்கள் பாவங்கள் அழிக்கப்படும். பந்தனத்தில் இருப்பவர்களுக்கும் பாபா விளங்கப்படுத்துகிறார்: அதிகளவு அன்புடனும் பணிவுடனும் உங்கள் கணவருக்கு நீங்கள் விளங்கப்படுத்த வேண்டும். அவர் உங்களை அடித்தால், அவருக்கு நீங்கள் மலர்கள் தூவ வேண்டும். உங்களை பாதுகாத்துக் கொள்வதற்கு, நீங்கள் மிகவும் சாதுரியமாக இருக்க வேண்டும். உங்கள் கண்கள் மிகவும் சாந்தமாக இருக்க வேண்டும். அவை என்றுமே தளம்பல் அடையக் கூடாது. இதனாலேயே, அங்கதன் உதாரணமாகக் காட்டப்பட்டுள்ளார். அவர் முற்றிலும் ஆட்ட அசைக்க முடியாதவராக இருந்தார். நீங்கள் அனைவருமே மகாவீரர்கள். கடந்த காலத்தில் நடந்தவற்றை நீங்கள் நினைவு செய்யவே கூடாது. எப்போதும் முகமலர்ச்சியோடு இருங்கள். நாடகத்தில் உறுதியாக இருங்கள். தந்தையே கூறுகிறார்: நானும் நாடகத்தின் பந்தனத்தால் கட்டுண்டு இருக்கிறேன். அதில் வேறெதுவுமே இல்லை. கிருஷ்ணர் சுயதரிசன சக்கரத்தினால் அசுரர்களைக் கொன்றார் என்று எழுதப்பட்டிருக்கிறது. அவை அனைத்தும் கதைகள் ஆகும். தந்தையால் வன்முறையில் ஈடுபட முடியாது. அந்தத் தந்தை ஆசிரியரும் ஆவார். அவர் எவரையேனும் கொல்வது சாத்தியமில்லை. அவையனைத்தும் தற்காலத்தையே குறிக்கின்றன. ஒருபுறம் எண்ணற்ற பல மனிதர்களும், மறுபுறம் நீங்களும் இருக்கிறீர்கள். வர விரும்புபவர்கள் தொடர்ந்தும் வருவார்கள். முன்னைய கல்பத்தைப் போன்றே, அவர்கள் தொடர்ந்தும் தமது அந்தஸ்தைப் பெறுவார்கள். இ;தில் அதிசயம் என்ற கேள்விக்கே இடமில்லை. தந்தை கருணைமிக்கவர். அவர் துன்பத்தை நீக்கிச் சந்தோஷத்தை அருள்பவர். எனவே அவரால் எவ்வாறு துன்பத்தைக்; கொடுக்க முடியும்? அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தந்தை தாயாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.
 

தாரணைக்கான சாராம்சம்:

1.இறை அரசாங்கத்திற்காகக் குறைந்தபட்சம் எட்டு மணித்தியாலம் சேவை செய்து, உங்கள் நேரத்தைத் தகுதிவாய்ந்த வழியில் பயன்படுத்துங்கள். தந்தையைப் போன்று தெய்வீகக் குணங்கள் நிறைந்தவர் ஆகுங்கள்.

2.கடந்தவற்றை நினைவு செய்யாதீர்கள். கடந்தவை கடந்தவையாகவே இருக்கட்டும். எப்பொழுதும் முகமலர்ச்சியுடன் இருங்கள். நாடகத்தின் மீது மிகவும் உறுதியாக இருங்கள்.

ஆசீர்வாதம்:
தந்தையிடமிருந்து பல்கோடிமடங்கு உதவியைப் பெறுவதற்குத் தகுதிவாய்ந்த குழந்தைகள் மாயையின் தாக்குதலுக்குச் சவால் விடுகிறார்கள். மாயையின் கடமை வருவது, எங்கள் கடமை வெற்றி அடைவது என அவர்கள் கூறுகிறார்கள். அத்தகைய குழந்தைகள் மாயையின் சிங்கம் போன்ற வடிவத்தை ஓர் எறும்பு போன்று கருதுகிறார்கள். ஏனெனில் இந்த மாயையின் இராச்சியம் முடிவடையப் போகின்றது என்பதை அவர்கள் அறிவார்கள். பல தடவைகள் லெற்றியாளர்களாக இருந்த ஆத்மாக்களாகிய உங்களுக்கு வெற்றி 100 வீதம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவாதத்தி;;ன் போதையானது தந்தையிடமிருந்து பல்கோடிமடங்கு உதவியைப் பெறுவதற்கான உரிமையைக் கோருவதற்கு உதவுகிறது. இந்தப் போதையுடன் நீங்கள் இலகுவாக மாயையை வென்றவர் ஆகுவீர்கள்.

சுலோகம்:
சுலோகம்: உங்கள் எண்ணத்தின் சக்தியைச் சேமித்து உங்களுக்கும் பிறருக்கும் பயன்படுத்துங்கள்.


தந்தை பிம்மாவிற்குச் சமமானவர் ஆகுவதற்கான விசேட முயற்சி.
உங்களுக்கு பிரம்மபாபாவிடம் அன்பு இருக்குமாயின் தந்தையைப் போன்று தேவதை ஆகுங்கள். ஒளியைப் போன்ற உங்கள் தேவதை வடிவம், நீங்கள் அவ்வாறு ஆகவேண்டும் என்பதற்காக உங்கள் முன்னால் எப்பொழுதும் தென்படட்டும். உங்கள் எதிர்கால வடிவமும் தென்படட்டும். இப்பொழுது இதைத் துறந்து அதை ஏற்றுக் கொள்ளுங்கள். இத்தகைய அனுபவத்தை நீங்கள் கொண்டிருக்கும் போது நீங்கள் சம்பூரணத்தை அண்மித்து விட்டீர்கள் என்று புரிந்து கொள்ளுங்கள்.