07.02.19        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்:
இனிய குழந்தைகளே, நினைவு சக்தி மூலம் தூய்மையாகுவது ஒருவழியாகும். தண்டனை சக்தி மூலம் தூய்மையாகுவது இன்னொரு வழியாகும். நீங்கள் நினைவு சக்தி மூலம் தூய்மையாகி, ஓர் உயர்ந்த அந்தஸ்தைக் கோர வேண்டும்..

கேள்வி:
தந்தையே ஆன்மிக சத்திரசிகிச்சை நிபுணர் ஆவார். அவர் உங்களுக்கு எவ்வகையான பொறுமையை கொடுப்பதற்காக வந்துள்ளார்?

பதில்:
அந்தச் சத்திர சிகிச்சை நிபுணர்கள், தங்களுடைய நோயாளிகளுக்கு, அவர்கள் விரைவில் குணமடைவார்கள் என்ற நம்பிக்கையூட்டுவதுடன், அவர்களைப் பொறுமையாக இருக்கச் செய்வதைப் போன்று, ஆன்மீக சத்திர சிகிச்சை நிபுணரும் குழந்தைகளாகிய உங்களுக்கு நம்பிக்கையூட்டுகின்றார்: குழந்தைகளே, மாயையின் நோயையிட்டுப் பயப்படாதீர்கள். அந் நோய்கள் அனைத்தையும் வெளியேற்றுகின்ற அத்தகைய மருந்தையே சத்திரசிகிச்சை நிபுணர் உங்களுக்குக் கொடுக்கின்றார். அறியாமைப் பாதையில், நீங்கள் ஒருபோதும் கொண்டிராத எண்ணங்களும் வரும். எவ்வாறாயினும், நீங்கள் அனைத்தையும் சகித்துக் கொள்ள வேண்டும். சிறிதளவு முயற்சி செய்யுங்கள். இப்பொழுது உங்களுடைய சந்தோஷ நாட்கள் நெருங்கிவிட்டன.


ஓம் சாந்தி.
எல்லையற்ற தந்தை, குழந்தைகளாகிய உங்கள் அனைவருக்கும் விளங்கப்படுத்துகிறார். தந்தை வந்துவிட்டார் என்ற செய்தி, இப்பொழுது அனைவரையும் சென்றடைகிறது என்பதை நீங்கள் உறுதிப்படுத்த வேண்டும். தந்தை உங்களுக்குப் பொறுமையைக் கொடுக்கின்றார். ஏனெனில், பக்தி மார்ககத்தில், நீங்கள் கூவி அழைத்தீர்கள்: பாபா, வந்து எங்களுக்கு விடுதலை அளிப்பதுடன் எங்களைத் துன்பத்திலிருந்தும் விடுவித்து விடுங்கள். இன்னும் சொற்ப நாட்கள் மாத்திரமே எஞ்சியுள்ளன என்று தந்தை உங்களுக்கு நம்பிக்கையூட்டு;கிறார். எவராவது நோயிலிருந்து குணமடையும்போது, அவர் இப்பொழுது ஓகே என்று அவர்கள் அவருக்கு நம்பிக்கையூட்டுவார்கள். இந்த அழுக்கான உலகில் இன்னும் சொற்ப நாட்களே எஞ்சியுள்ளன என்பதையும், பின்னர் நீங்கள் புதிய உலகிற்குச் செல்வீர்கள் என்பதையும், குழந்தைகளாகிய நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். நீங்கள் அதற்குத் தகுதி வாய்ந்தவர்கள் ஆகவேண்டும். அப்பொழுது நோய்கள் போன்ற எவையும் உங்களுக்குத் தொல்லை கொடுக்கமாட்டாது. தந்தை உங்களுக்குப் பொறுமையைக் கொடுத்துக் கூறுகிறார்: சிறிதளவு முயற்சி செய்யுங்கள். வேறு எவராலும் அவ்வாறான பொறுமையை உங்களுக்குக் கொடுக்க முடியாது. நீங்கள் தமோப்பிரதான் ஆகியுள்ளீர்கள். உங்களை மீண்டும் ஒருமுறை சதோப்பிரதான் ஆக்குவதற்காகவே தந்தை இப்பொழுது வந்துள்ளார். இப்பொழுது, ஆத்மாக்கள் அனைவரும் தூய்மையாக வேண்டும்: சிலர் யோக சக்தியினாலும், ஏனையவர்கள் தண்டனையின் சக்தியினாலும் தூய்மையாகுகின்றார்கள்: தண்டனையின் சக்தியும் உள்ளது. தண்டனை மூலம் தூய்மையடைபவர்களின் அந்தஸ்து குறைக்கப்படும். குழந்தைகளாகிய நீங்கள் தொடர்ந்தும் ஸ்ரீமத்தைப் பெறுவீர்கள். தந்தை கூறுகிறார்: தொடர்ந்து என்னை மாத்திரம் நினைவு செய்யுங்கள். உங்கள் பாவங்கள் அனைத்தும் எரிக்கப்படும். நீங்கள் நினைவில் நிலைத்திருக்காதிருந்தால், உங்கள் பாவங்கள் நூறு மடங்கு அதிகரிக்கும், ஏனெனில், நீங்கள் பாவ ஆத்மாக்கள் ஆகியதன் மூலம் என்னை இழிவுபடுத்தியிருக்கின்றீர்கள். மக்கள் கூறுவார்கள்: அவர்கள் அசுர நடத்தை கொண்டிருக்கும் வகையில், கடவுள் அவர்களுக்கு அத்தகைய வழிகாட்டல்களைக் கொடுத்தாரா? உயர்வும், தாழ்வும் உள்ளது. குழந்தைகள் தோற்கடிக்கப்படுகிறார்கள். சிறந்த குழந்தைகளும் தோற்கடிக்கப்படுகிறார்கள் என்பதனால் அவர்களின் பாவங்கள் அழிக்கப்படுவதில்லை. பின்னர் அவர்கள் வருந்த நேரிடும். மிகவும் அழுக்கான இந்த உலகில் அனைத்தும் தொடர்ந்து நிகழ்கின்றது. நீங்கள் தந்தையைக் கூவி அழைத்தீர்கள்: பாபா, வந்து எங்களுக்கு எதிர்காலப் புதிய உலகிற்கான பாதையைக் காட்டுங்கள். இந்தப் பக்கத்தில் பழைய உலகமும், அந்தப் பக்கத்தில் புதிய உலகமும் உள்ளது என்பதை பாபா அறிவார். நீங்கள் படகுகள். நீங்கள் இப்பொழுது மிகவும் மேன்மையான மனிதர்கள் ஆகுவதற்காக முன்னேறிச் செல்கின்றீர்கள். பழைய உலகிலிருந்து உங்கள் நங்கூரம் உயர்த்தப்பட்டுள்ளது. நீங்கள் செல்லவேண்டிய வீட்டையே நீங்கள் நினைவு செய்யவேண்டும். தந்தை கூறியுள்ளார்: என்னை நினைவு செய்வதன் மூலம் உங்கள் துரு அகற்றப்படும். யோக சக்தி அல்லது தண்டனையின் சக்தி உள்ளது. ஒவ்வொரு ஆத்மாவும் நிச்சயமாகத் தூய்மையாக வேண்டும். தூய்மையாகாது எவராலும் வீட்டிற்குத் திரும்பிச் செல்ல முடியாது. ஒவ்வொருவரும் தங்களுக்குரிய பாகத்தைப் பெற்றுள்ளனர். தந்தை கூறுகிறார்: இது உங்களுடைய இறுதிப் பிறவியாகும். கலியுகம் இன்னும் குழந்தைப் பருவத்திலேயே உள்ளது என்று மக்கள் கூறுகிறார்கள். மக்கள் இப்பொழுது இருப்பதிலும் பார்க்க, மென்மேலும் சந்தோஷமற்று இருப்பார்கள் என்பதே அதன் அர்த்தமாகும். சங்கம யுகத்துப் பிராமணர்களாகிய நீங்கள், இத் துன்ப பூமி முடிவடைய உள்ளது என்பதைப் புரிந்துகொள்கிறீர்கள். தந்தை உங்களுக்குப் பொறுமையைக் கொடுக்கிறார். முன்னைய கல்பத்திலும் தந்தை கூறினார்: சதா என்னை மாத்திரம் நினைவு செய்யுங்கள். உங்கள்; பாவங்களின் துரு அகற்றப்படும். நான் இந்த உத்தரவாதத்தை உங்களுக்குக் கொடுக்கிறேன். கலியுகம் நிச்சயமாக அழிக்கப்பட்டுச், சத்தியயுகம் நிச்சயமாக வரும் என்பதையும் அவர் உங்களுக்கு விளங்கப்படுத்துகிறார். நீங்கள் இந்த உத்தரவாதத்தைப் பெறுகிறீர்கள். குழந்தைகளாகிய உங்களிடம் இந்த நம்பிக்கை உள்ளது. ஆனால், நினைவில் நிலைத்திருக்காததால் நீங்கள் ஏதோவொரு பாவச் செயலைச் செய்கிறீர்கள். பாபா, நான் கோபப்படுகிறேன் என்று நீங்கள் கூறுகிறீர்கள். அதுவும், ஒரு தீய ஆவி என்று அழைக்கப்படுகிறது. இந்த இராவணனின் இராச்சியத்திலுள்ள ஐந்து விகாரங்களும் துன்பத்தையே கொடுக்கின்றன. இறுதியில் கர்மக் கணக்குகளையும் முடிக்க வேண்டும். காமம் என்ற விகாரத்தினால் முன்னர் ஒருபோதும் தொந்தரவு செய்யப்படாதவர்களிடமிருந்து காமம் என்ற நோய் வெளிப்படுகின்றது. அவர்கள் கூறுகிறார்கள்: எனக்கு முன்பு ஒருபோதும் இவ்வாறான தீய எண்ணங்கள் ஏற்பட்டதில்லை. எனவே, அவை ஏன் இப்பொழுது என்னை தொந்தரவு செய்கின்றன? இது ஞானம். அனைத்து நோய்களையும் ஞானம் வெளித்தோன்றச் செய்யும். பக்தி அனைத்து நோய்களையும் வெளித்தோன்றச் செய்வதில்லை. இது ஒரு தூய்மையற்ற விகாரம் நிறைந்த உலகம். 100 வீதம் தூய்மையற்றுள்ளது. 100வீதம் தூய்மையற்றவர்களாக இருந்த நீங்கள் இப்பொழுது 100 வீதம் தூய்மையானவர்களாக வேண்டும். 100 வீதம் சீரழிந்ததாக இருந்த உலகம், 100 வீதம் தூய்மையாகவும், மேன்மையானதாகவும் ஆகவேண்டும். தந்தை கூறுகிறார்: குழந்தைகளாகிய உங்களை அமைதி தாமத்திற்கும், சந்தோஷ தாமத்திற்கும் அழைத்துச் செல்வதற்காகவே நான் வந்துள்ளேன். என்னை நினைவு செய்வதுடன், உலகச்சக்கரத்தையும் சுழற்றுங்கள். எவ்விதமான பாவச் செயல்களையும் செய்யாதீர்கள். அத் தேவர்கள் கொண்டிருந்த நற் குணங்களைக் கிரகியுங்கள். பாபா உங்களுக்கு எவ்விதக் கஷ்டத்தையும் ஏற்படுத்துவதில்லை. சில வீடுகளில் அனைத்தையும் தீயில் இட்டு; பெரும் சேதத்தை விளைவிக்கின்ற தீய ஆத்மாக்கள் உள்ளார்கள். இந் நேரத்தில் அனைத்து மனிதர்களும் தீங்கு விளைவிப்பவர்களே. பௌதீக முறையிலும் கர்ம வேதனை இருக்கும். சரீரத்தின் மூலம் ஆத்மாக்கள் ஏதோவொரு துன்பத்தை விளைவிக்கின்றார்கள். ஓர் ஆத்மாவிற்கு ஒரு சரீரம் இல்லாதபோதும், அவர் துன்பத்தை விளைவிக்கின்றார்;. நீங்கள் பேய் என்று அழைப்பது ஒரு வெள்ளை நிழலைப் போன்றது என்பதைக் குழந்தைகள் பார்த்திருப்பார்கள். எவ்வாறாயினும், நீங்கள் அதைப்பற்றி நினைக்கக்கூடாது. நீங்கள் தந்தையை எந்த அளவுக்கு அதிகமாக நினiவு செய்கின்றீர்களோ, அந்த அளவுக்கு அவை அனைத்தும் முடிந்துவிடும். அவையும் கர்மக் கணக்குகளே. ஒரு வீட்டிலுள்ள பெண் பிள்ளைகள் தாங்கள் தூய்மையாக இருக்கப்போகின்றோம் என்று கூறுவார்கள். ஆத்மாவே, இதனைக் கூறுகிறார். தூய்மையாக இருக்கவேண்டாம் என்று ஞானம் இல்லாதவர்கள் கூறுவார்கள். பின்னர் அங்கு ஒரு சண்டை ஏற்பட்ட பின் அதிகளவு குழப்பநிலை ஏற்படும். நீங்கள் இப்பொழுது தூய ஆத்மாக்களாக ஆகுகின்றீர்கள். அந்த ஆத்மாக்கள் தூய்மையற்றவர்கள் என்பதனால், அவர்கள் துன்பத்தை விளைவிக்கிறார்கள். அவர்களும் ஆத்மாக்களேயாவார்கள். அவர்கள் தீய ஆத்மாக்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். அவர்கள் சரீரத்துடனும், சரீரம் இல்லாமலும் துன்பத்தை விளைவிக்கிறார்கள். ஞானம் இலகுவானது. நீங்கள் சுய தரிசன சக்கரத்தைச் சுழற்றுபவர்கள் ஆகவேண்டும். எவ்வாறாயினும், தூய்மையே பிரதான விடயமாகும். இதற்கு, நீங்கள் தந்தையை அதிகளவு சந்தோஷத்துடன் நினைவு செய்யவேண்டும். இராவணன் தீங்கு விளைவிப்பவன் என்று கூறப்படுகிறான். இந் நேரத்தில், இது தீய உலகமாகும். அவர்கள் தொடர்ந்து ஒவ்வொருவரிடத்தில் இருந்தும் பல வகையான துன்பத்தைப் பெறுகின்றார்கள். தூய்மையற்றவர்கள் தீயவர்கள் எனப்படுவர். தூய்மையற்ற ஆத்மாக்களில் பல்வேறு வகையான ஐந்து விகாரங்கள் உள்ளன. சிலரிடம் காமம், சிலரிடம் கோபம், சிலரிடம் மற்றவர்களுக்குத் துன்பத்தை ஏற்படுத்தும் பழக்கம், சிலரிடம் மற்றவர்களுக்கு தீங்கு விளைவிக்கும் பழக்கம் என்பன உள்ளன. காமம் என்ற பழக்கத்தை உடையவர்கள் கோபமடைந்து, தங்களுக்குக் கிடைக்காவிட்டால் எவருக்காவது அடிப்பார்கள். இந்த உலகம் அவ்வாறானதாகும். ஆகவே தந்தை வந்து உங்களுக்குப் பொறுமையைக் கொடுக்கிறார்: ஓ ஆத்மாக்களே, பொறுமையாக இருங்கள்! தொடர்ந்து என்னை நினைவு செய்வதுடன், தெய்வீகக் குணங்களைக் கிரகியுங்கள். உங்களுடைய தொழில்; போன்றவற்றைச் செய்யவேண்டாம் என்று அவர் கூறுவதில்லை. அதேபோன்று இராணுவத்தில் இருப்பவர்கள் போருக்குச் செல்லவேண்டும். சிவபாபாவின் நினைவில் இருக்குமாறு அவர்களுக்குக் கூறப்பட்டுள்ளது. அவர்கள், கீதையின் வாசகங்களைக் கேட்டு, தாங்கள் ஒரு போர்முனையில் மரணித்தால், தாங்கள் சுவர்க்கத்திற்குச் செல்வோம் என்று நம்புகிறார்கள். இதனாலேயே அவர்கள் சந்தோஷமாகப் போருக்குச் செல்கிறார்கள். எவ்வாறாயினும், அது அவ்வாறில்லை. பாபா இப்பொழுது கூறுகிறார்: நீங்கள் சுவர்க்கத்திற்குச் செல்லலாம். ஆனால், சிவபாபாவை நினைவு செய்யுங்கள். சிவபாபா மாத்திரம் நீங்கள் நினைவு செய்யவேண்டும். நிச்சயமாக நீங்கள் சுவர்க்கத்திற்குச் செல்வீர்கள்.; வருபவர்கள் எவராயினும், அவர்கள் மீண்டும் சென்று தூய்மையற்றவர்கள் ஆகினாலும், அவர்கள் நிச்சயமாக சுவர்க்கத்திற்குச் செல்வார்கள். அவர்கள் தண்டனையை அனுபவம் செய்து, தூய்மையாகிப், பின்னர் நிச்சயமாக அங்கு செல்வார்கள். தந்தை கருணை மிக்கவர். தந்தை விளங்கப்படுத்துகின்றார்: பாவச் செயல்களைச் செய்யாதீர்கள். அப்பொழுது நீங்கள் பாவச் செயல்களை வென்றவர்கள் ஆகுவீர்கள். இந்த இலக்ஷ்மி நாராயணனும் பாவச் செயல்களை வென்றவர்கள். பின்னர் இராவண இராச்சியத்தில் அவர்களும் பாவம் செய்பவர்களாக ஆகுகிறார்கள். விக்ரம ராஜாவின் யுகம் ஆரம்பிக்கின்றது. மக்களுக்கு எதுவுமே தெரியாது. இலக்ஷ்மியும், நாராயணனும் எவ்வாறு பாவத்தை வென்றவர்கள் ஆகினார்கள் என்பது குழந்தைகளாகிய உங்களுக்கு இப்பொழுது தெரியும். அங்கே முதல் இலக்கப் பாவத்தை வென்றவர்கள் இருந்தார்கள் என்றும்; 2500 வருடங்களின் பின்னர் பாவச் செயல்களைச் செய்பவர்களது யுகம் ஆரம்பமானதென்றும் கூறலாம். பற்றை வென்ற அரசனின் கதை ஒன்று உள்ளது. தந்தை கூறுகிறார்: பற்றை வென்றவர்கள் ஆகுங்கள். சதா என்னை மாத்திரம் நினைவு செய்யுங்கள். உங்கள் பாவங்கள் அழிக்கப்படும். நீங்கள் தூய்மையாகுவதன் மூலம் 2500 ஆண்டுகளுக்கு மேலாகச் செய்த பாவங்களை அழிக்கமுடியும். அத்துடன், இந்த 50 முதல் 60 வருடங்களில் நீங்கள் உங்களை சதோப்பிரதானாகவும் ஆக்கலாம். உங்களிடம் யோக சக்தி இல்லையென்றால், நீங்கள் கடைசியில் ஒரு இலக்கத்தைப் பெறுவீர்கள். மாலை மிகவும் பெரியதாகும். பாரதத்தின் மாலை விசேடமானது. முழு நாடகமும் இதில் தங்கியுள்ளது. இதிலுள்ள முக்கிய விடயம் நினைவு யாத்திரையாகும். இதில் வேறு எந்தக் கஷ்டமும் இல்லை. பக்தி மார்க்கத்தில், அவர்களின் புத்தியின் யோகம் பலருடன் தொடர்புபட்டிருக்கும். அவர்கள் அனைவரும் படைப்புகள். அவர்களை நினைவு செய்வதன் மூலம் எவரும் நன்மையடைய மாட்டார்கள். தந்தை கூறுகிறார்: எவரையும் நினைவு செய்யாதீர்கள். பக்தி மார்க்கத்தில் நீங்கள் பக்தி; செய்வது வழக்கம். ஆகவே இப்பொழுது, இறுதியில் என்னை மாத்திரம் நினைவு செய்யுங்கள். தந்தை மிகத் தெளிவாக உங்களுக்கு விளங்கப்படுத்துகிறார். முன்னர், இதை நீங்கள் அறிந்திருக்கவில்லை. இப்பொழுது நீங்கள் ஞானத்தைப் பெற்றுள்ளீர்கள். தந்தை கூறுகிறார்: அனைவர்களிடமிருந்தும் உங்களைத் துண்டித்து, ஒரெயொருவருடனேயே உங்களைத் தொடர்புபடுத்துங்கள். அப்பொழுது உங்கள் பாவங்கள் யோகத்தீயினால் எரிக்கப்படும். நீங்கள் அதிகளவு பாவத்தைச் செய்துகொண்டிருக்கிறீர்கள். நீங்கள் காமம் என்ற வாளைப் பயன்படுத்திக் கொண்டிருந்தீர்கள். ஆரம்பம் முதல், மத்தி ஊடாக இறுதிவரை நீங்கள் ஒருவருக்கொருவர் துன்பத்தை விளைவித்தீர்கள். முக்கியமான விடயம் காம வாளாகும். அதுவும் நாடகத்தில் உள்ளது. ஏன், அவ்வாறு ஒரு நாடகம் உருவாக்கப்பட்டது என்று நீங்கள் வினவ முடியாது. இந்த நாடகம் அநாதியானது. அதில் எனக்கும் ஒரு பாகம் உள்ளது. எப்பொழுது அந்த நாடகம் உருவாக்கப்பட்டது என்றோ, அல்லது எப்பொழுது அது முடிவடையும் என்றோ நீங்கள் வினவக் கூடாது. ஆத்மாவில் ஒரு பாகம் பதியப்பட்டுள்ளது. ஆத்மா என்றுமே தேய்ந்து விடுவதில்லை. ஓர் ஆத்மா அழியாதவர். அவருக்கு ஓர் அழியாத பாகம் உள்ளது. நாடகமும் அழியாதது என்று சொல்லப்படுகிறது. மறுபிறவி எடுக்காத தந்தை வந்து, அனைத்து இரகசியங்களையும் உங்களுக்கு விளங்கப்படுத்துகிறார். உலகின் ஆரம்பம், மத்தி, இறுதி பற்றிய இரகசியங்களை வேறு எவராலும் உங்களுக்கு விளங்கப்படுத்த முடியாது. அவர்களுக்குத் தந்தையின் தொழிலையோ அல்லது ஆத்மாவின் தொழிலையோ தெரியாது. உலகச் சக்கரம் தொடர்ந்தும் சுழல்கிறது. இப்பொழுது இதுவே அனைத்து மனிதர்களும் மேன்மையானவர்களாகுகின்ற, மிக மங்களகரமான சங்கம யுகமாகும். அமைதி தாமத்தில் அனைத்து ஆத்மாக்களும் தூய்மையானவர்களாகவும், மேன்மையானவர்களாகவும் ஆகுகிறார்கள். அமைதி தாமமே தூய உலகமாகும். புதிய உலகமும் தூய்மையானது. அங்கு அமைதி உள்ளது. பின்னர், நீங்கள் ஒரு சரீரத்தைப் பெறும்போது நீங்கள் உங்கள் பாகத்தை நடிக்கிறீPர்கள். ஒவ்வொருவரும் தங்கள் சொந்தப் பாகத்தைப் பெற்றுள்ளார்கள் என்பது எங்களுக்குத் தெரியும். அது எங்கள் வீடாகும். நாங்கள் அங்கு அமைதியாக இருப்போம். இங்கு, நாங்கள் எங்கள் பாகங்களை நடிக்கவேண்டும். தந்தை இப்பொழுது கூறுகிறார்: பக்தி மார்க்கத்தில், நீங்கள் என்னைக் கலப்படமற்ற முறையில் வணங்கும் போதும் சந்தோஷமாக இருக்கவில்லை. இப்பொழுதோ கலப்படமான பக்தியினால் நீங்கள் சந்தோஷமற்றவர்களாக ஆகியுள்ளீர்கள். தந்தை கூறுகிறார்: இப்பொழுது தெய்வீகக் குணங்களைப் பின்பற்றுங்கள். ஏன் இன்னும் அசுரத்தனமான குணங்கள் உள்ளன? வந்து உங்களைத் தூய்மையாகுவதற்காக நீங்கள் தந்தையைக் கூவி அழைத்தீர்கள். ஆகவே, ஏன் நீங்கள் தூய்மையற்றவர்கள் ஆகுகிறீர்கள்? அதிலும், நீங்கள் காமம் என்ற முக்கிய விகாரத்தை நிச்சயமாக வெற்றிகொள்ள வேண்டும். பின்னர் நீங்கள் உலகை வென்றவர்கள் ஆகுவீர்கள். மக்கள் கடவுளையிட்டுக் கூறுகிறார்கள்: அவர் பூஜிப்பவரும், அவர் பூஜிக்கத் தகுதிவாய்ந்தவரும். அவர்கள் அவரைக் கீழே கொண்டுவருகிறார்கள் என்பதே அதன் அர்த்தமாகும். அவ்வாறான பாவச் செயல்களைச் செய்ததனால், உலகம்; விகாரம் நிறைந்ததாகியுள்ளது. கருட புராணத்தில், அவர்கள் தேளும், பல்லியும் கடிக்கும்; ஆழ் நரகத்தையிட்டுக் கூறுகிறார்கள். அவர்கள் அமர்ந்திருந்து, சமய நூல்களில் எதனை எழுதியுள்ளார்கள் என்று பாருங்கள்! தந்தை விளங்கப்படுத்தியுள்ளார்: சமய நூல்கள் போன்றவை அனைத்தும் பக்தி மார்க்கத்திற்கு உரியவையாகும். அவற்றின் மூலம் எவரும் என்னைச் சந்திக்க முடியாது. அவர்கள் மேலும் தமோப்பிரதான் ஆகியுள்ளார்கள். இதனாலேயே அவர்கள் என்னை வந்து, தங்களைத் தூய்மையாக்குமாறு கூவி அழைக்கிறார்கள். ஆகவே அவர்கள் தூய்மையற்று இருக்கிறார்கள் என்பதே அதன் அர்த்தமாகும். மக்கள் எதனையுமே புரிந்து கொள்வதில்லை தங்களி;ன் புத்தியில் நம்பிக்கை உள்ளவர்கள் வெற்றியடைவார்கள். அவர்கள் இராவணனை வெற்றிகொண்டு, இராம இராச்சியத்தினுள் வருவார்கள். தந்தை கூறுகிறார்: காமத்தை வெல்லுங்கள். இதனால் குழப்பநிலை உள்ளது. ஏன், நாங்கள் அமிர்தத்தைத் துறந்து, நஞ்சை அருந்தவேண்டும் என்று அவர்கள் கூறுகிறார்கள். அமிர்தம் என்ற பெயரைக் கேட்டவுடன், அது கௌமுக்கிலிருந்து (பசுவின் வாய்) வெளித்தோன்றுவதாக அவர்கள் நினைக்கிறார்கள். கங்கை நீரை அமிர்தம் என்று அழைக்க முடியாது. அது ஞான அமிர்தத்தைக் குறிக்கிறது. ஒரு மனைவி தனது கணவனின் காலைக் கழுவி, அந்த நீரை அமிர்தம் எனக் கருதிப் பருகுகிறாள். அது அமிர்தமானால், அவள் ஒரு வைரத்தைப் போன்று ஆகுவாள். தந்தை உங்களுக்கு இந்த ஞானத்தைக் கொடுக்கிறார். இதன் மூலம் நீங்கள் வைரத்தைப் போன்று ஆகுகிறீர்கள். அவர்கள் நீரை அந்த அளவுக்குப் புகழடையச் செய்துள்ளார்கள். நீங்கள் ஞான அமிர்தத்தைப் பருகுவதற்குக் கொடுக்கிறீர்கள். அவர்கள் நீரைக் கொடுக்கிறார்கள். பிராமணர்களாகிய உங்களைப்பற்றி எவருக்கும் தெரியாது. அவர்கள் கௌரவர்களைப் பற்றியும், பாண்டவர்களைப் பற்றியும் கூறுவார்கள். ஆனால் அவர்கள் பாண்டவர்களைப் பிராமணர்கள் எனக் கருதுவதில்லை. இவ் வார்த்தைகள் கீதையில் குறிப்பிடப்படவில்லை. அதனால் அவர்கள் பாண்டவர்களைப் பிராமணர்களாகக் கருதுவதில்லை. தந்தை இங்கு அமர்ந்திருந்து, அனைத்துச் சமய நூல்களினதும் சாரத்தையும் விளங்கப்படுத்துகிறார். அவர் குழந்தைகளாகிய உங்களுக்குக் கூறுகிறார்: சமய நூல்களில் நீங்கள் கற்றவற்றிற்கும், நான் கூறுவனவற்றிற்கும் இடையே சீர்தூக்கிப் பாருங்கள். நீங்கள் முன்னர் கேள்விப்பட்ட அனைத்தும் தவறானவை. சரியானவற்றையே இப்பொழுது நீங்கள் செவிமடுக்கிறீர்கள். தந்தை விளங்கப்படுத்தியுள்ளார்: நீங்கள் அனைவரும் பக்தர்களான சீதைகள். கடவுளான இராமர் ஒருவரே பக்தியின் பலனைக் கொடுக்கிறார். அவர் கூறுகிறார்: பலனைக் கொடுப்பதற்காக நான் வருகிறேன். சுவர்க்கத்தில் நீங்கள் எல்லையற்ற சந்தோஷத்தை அனுபவம் செய்வீர்கள் என்பது உங்களுக்குத் தெரியும். அந் நேரத்தில் ஏனையவர்கள் அனைவரும் அமைதி தாமத்தில் இருப்பார்கள். அவர்களுக்கு அமைதி கிடைக்கும். அங்கு, அந்த உலகில் சந்தோஷம், அமைதி தூய்மை இருந்தன. அங்கு அனைத்தும், இருந்தன. உலகில் ஒரு தர்மம் மாத்திரம் இருந்தபோது அமைதி இருந்ததென்று நீங்கள் விளங்கப்படுத்துகிறீர்கள். இருந்தபோதும் அவர்கள் எதையும் புரிந்துகொள்வதில்லை. எவரும் இங்கு தங்குவதில்லை. இறுதி நேரத்தில் பலர் வருவார்கள். அவர்கள் வேறு எங்கே செல்வார்கள்? இதுவே ஒரேயொரு கடையாகும். ஒரு கடைக்காரரிடம் விற்பனைக்கு நல்ல பொருட்கள் இருந்தால், அவர் அவற்றை ஒரு நிர்ணயிக்கப்பட்ட விலையில் விற்பார். இது சிவபாபாவின் கடையாகும். அவர் அசரீரியானவர். பிரம்மாவும் நிச்சயமாகத் தேவைப்படுகிறார். நீங்கள் பிரம்ம குமாரர்கள், பிரம்ம குமாரிகள் என்று அழைக்கப்படுகிறீர்கள். உங்களைச் சிவ குமாரிகள் என்று அழைப்பதில்லை. பிராமணர்களும் நிச்சயமாகத் தேவைப்படுகிறார்கள். நீங்கள் பிராமணர்கள் ஆகாது எவ்வாறு தேவர்கள் ஆகுவீர்கள்? அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டெடுக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தந்தை, தாயாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை, ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. நீங்கள் தேவர்களைப் போன்று திவ்ய குணங்களைக் கிரகித்துக் கொள்ள வேண்டும். உங்களிடம் இருக்கின்ற கோபம் போன்ற தீய சம்ஸ்காரங்கள் அகற்றப்பட வேண்டும். நீங்கள் பாவத்தை வென்றவர்கள் ஆகவேண்டும். எனவே, எவ்வித பாவச் செயல்களையும் செய்யாதீர்கள்.

2. வைரங்கள் போன்று மேன்மையானவர்கள் ஆகுவதற்கு ஞானம் என்ற அமிர்தத்தைப் பருகுவதுடன், ஏனையவர்களுக்கும் பருகக் கொடுங்கள். காமம் என்ற விகாரத்தின்மீது முற்றிலுமாக வெற்றி கொள்ளுங்கள். உங்களைச் சதோபிரதான் ஆக்குங்கள். நினைவு சக்தியின் மூலம் உங்கள் பழைய கர்மக்கணக்குகளை முடித்து விடுங்கள்.

ஆசீர்வாதம்:
இலகுயோகம் என்ற ஆன்மிக முயற்சியினால் வசதிகளை பரிசோதனை செய்யும் ஓர் ஆத்மாவாக, அவற்றை வெற்றி கொள்வீர்களாக.

வசதிகளை கொண்டிருக்கும் போது, அவற்றை பரிசோதனை செய்யும் வேளையில், உங்கள் யோக ஸ்திதி தளம்பல் அடையாதிருக்கட்டும். ஒரு யோகியாகி, பரிசோதனை செய்தலே பற்றற்று இருப்பதாகும். அனைத்தையும் கொண்டிருக்கும் போதும், ஒரு கருவியாக இருந்து, அவற்றின் கவர்ச்சியிலிருந்து உங்களை விடுவித்து, அவற்றைக் கொண்டு பரிசோதனையை செய்யுங்கள். உங்களுக்கு எந்த ஆசையேனும் இருந்தால், அந்த ஆசைகள் உங்களை நல்லவர்கள் ஆக்க மாட்டாது, அத்துடன் முயற்சி செய்வதில் உங்கள் நேரம் விரயமாகும். அந்த நேரத்தில், உங்கள் ஆன்மிக முயற்சியை நீங்கள் பேண முயற்சித்தாலும், வசதிகள் உங்களை கவர்ந்திழுக்கும். ஆகையால் இலகுயோகம் என்ற ஆன்மிக முயற்சியை செய்து, வசதிகளை அதாவது சடப்பொருளை வெற்றி கொள்பவர் ஆகுங்கள்.

சுலோகம்:
திருப்தியாகவிருந்து, அனைவரையும் திருப்தி அடையச் செய்தலே திருப்திமணியாக இருப்பதாகும்.