07.03.19        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்:
இனிய குழந்தைகளே, ஞானம் என்ற இலாகா யோகம் என்ற இலாகாவில் இருந்து வேறுபட்டது. யோகத்தைக் கொண்டிருப்பதன் மூலம் ஆத்மாக்களாகிய நீங்கள் சதோபிரதான் ஆகுகின்றீர்கள். நீங்கள் யோகத்தைக் கொண்டிருப்பதற்கு ஏகாந்தம் அவசியமாகும்.

கேள்வி:
உங்கள் நினைவு எந்த அடிப்படையில் ஸ்திரமாக இருக்கின்றது?

பதில்:
உங்களிடம் இருக்கின்ற அனைத்தையும் மறந்துவிடுவதன் அடிப்படையிலாகும். நீங்கள் உங்கள் சரீரத்தையும் நினைவு செய்யக் கூடாது. நீங்கள் கொண்டிருக்கும் அனைத்தையும் இறை சேவைக்குப் பயன்படுத்துங்கள். இதற்கு முயற்சி தேவை. அனைத்தையும் அர்ப்பணிப்பதன் மூலம், உங்களுடைய நினைவு ஸ்திரமாக இருக்கும். குழந்தைகளாகிய நீங்கள் பாபாவை அன்புடன் நினைவு செய்தால், உங்கள் நினைவு அவரின் நினைவை ஈர்க்கும். பாபாவும் உங்களுக்கு சக்தியை (கரண்ட்) கொடுப்பார். அதன் மூலம் ஆத்மாக்களாகிய நீங்கள் சதா ஆரோக்கியமானவர்கள் ஆகுவதுடன், உங்களுடைய ஆயுட்காலமும் அதிகரிக்கும்.

ஓம் சாந்தி.
இப்பொழுது இரண்டு விடயங்கள் இருக்கின்றன. ஞானமும், யோகமும். தந்தை உங்களுக்கு கொடுப்பதற்காகப் பெரும் பொக்கிஷத்தை வைத்திருக்கிறார். தந்தையை அதிகளவு நினைவு செய்பவர்கள் பெருமளவு சக்தியை (கரண்ட்) பெறுகின்றார்கள். ஏனெனில் உங்கள் நினைவு அவருடைய நினைவை ஈர்க்கின்றது. நினைவே பிரதான விடயம் என்பதால், இதுவே சட்டம் ஆகும். ஒருவர் ஞானத்தைப் பெருமளவில் கொண்டிருப்பின், அவர் நினைவையும் கொண்டிருக்கின்றார் என்று அர்த்தம் அல்ல. இல்லை. ஞானத்தின் இலாகா வேறுபட்டதாகும். யோகம் என்னும் பாடம் மிகவும் மகத்துவமானது ஞானம் யோகத்தை விடக்குறைவானது. ஆத்மாக்கள் யோகத்தின் மூலம் அதாவது, பெருமளவு நினைவைக் கொண்டிருப்பதன் மூலம் சதோபிரதான் ஆகுகின்றார்கள். நீங்கள் நினைவு செய்யாதவரையில், சதோபிரதான் ஆகுவதென்பது சாத்தியமற்றதாகும். குழந்தைகளாகிய, நீங்கள் நாள் முழுவதும் தந்தையை நினைவு செய்யவில்லை எனில், தந்தையும் உங்களை நினைவு செய்யமாட்டார். குழந்தைகளே, நீங்கள் நல்ல நினைவைக் கொண்டிருக்கும்போது, அந்நினைவு தந்தையின் நினைவை ஈர்க்கும். நீங்கள் தந்தையை ஈர்க்கின்றீர்கள் இதுவும் நாடகத்தில ஏற்கனவே நிச்சயிக்கப்பட்டிருப்பதுடன் மிகத்தெளிவாகப் புரிந்துகொள்ளப்படவும் வேண்டும். நீங்கள் நினைவைக் கொண்டிருப்பதற்கு, பெருமளவு ஏகாந்தம் தேவைப்படுகின்றது. காலம் தாழ்த்தி வந்தவர்கள் உயர்ந்த ஓர் அந்தஸ்தைப் பெறுவதற்கு அடிப்படை நினைவாகும். அவர்கள் பெருமளவு நினைவில் நிலைத்திருக்கின்றார்கள். அவர்களுடைய நினைவு தந்தையின் நினைவை ஈர்க்கின்றது. குழந்தைகளாகிய நீங்கள், அதிகளவு நினைவு செய்யும் போது, தந்தையும் உங்களை அதிகளவு நினைவு செய்கிறார். அவர் உங்களைக் கவர்கின்றார். 'பாபா கருணை கொண்டிருங்கள்! பரிவு கொண்டிருங்கள்! என நீங்கள் கூறும் போது, அதற்கும் நினைவு தேவைப்படுகின்றது. உங்கள் நினைவு சரியானதாக இருக்குமாயின், இயல்பாகவே அதன் கவர்ச்சி இருப்பதுடன் சக்தியையும் (கரண்ட்) நீங்கள் பெறுவீர்கள் நீங்கள் பாபாவை நினைவு செய்யும்போது அந்நினைவு உங்களை முற்றிலும் நிரப்புகின்றது என்பதை ஆத்மாக்களாகிய நீங்கள் உள்ளார்த்;தமாக அறிந்து கொள்கின்றீர்கள். ஞானம் உங்கள் செல்வமாகும். நினைவு உங்களுக்கு பாபாவின் நினைவை ஈர்ப்பதற்கு உதவுகின்றது. இதன் மூலம் நீங்கள் ஆரோக்கியமாகவும் தூய்மையாகவும் ஆகுகின்றீர்கள். முழு உலகையும் தூய்மைப் படுத்துமளவிற்கு அவர் பெருமளவு சக்தியைக் கொண்டிருக்கின்றார். இதனாலேயே மக்கள் அவரை அழைக்கின்றார்கள். ஓ பாபா! வந்து தூய்மையற்ற எங்களைத் தூய்மை ஆக்குங்கள்! மக்கள் எதையும் அறியமாட்டார்கள். அவர்கள் வெறுமனே கூவி அழைப்பதுடன், தங்கள் நேரத்தையும் வீணாக்குகின்றார்கள். அவர்கள் தந்தையை அறியவும் மாட்டார்கள். அவர்கள் தீவிரபக்தி செய்தாலும் காசியில் உள்ள சிவன் கோயிலில் தங்களை அர்ப்பணித்தாலும் எதையும் பெற்றுக்கொள்வதில்லை. அவர்கள் இன்னமும் பாவங்கள் செய்ய ஆரம்பிக்கின்றார்கள். மாயை உடனடியாக அவர்களைச் சிக்க வைக்கின்றாள். அவர்கள் எதையும் பெறுவதில்லை. தந்தையே தூய்மையாக்குபவர் என்பதை இப்பொழுது நீங்கள் அறிந்துள்ளீர்கள். எனவே உங்களை நீங்கள் அவரிடம் அர்ப்பணிக்க வேண்டும். சிவனும் சங்கரரும் ஒருவர் என மக்கள் நினைக்கின்றார்கள், அதுவும் கூட அறியாமையே ஆகும். இங்கு பாபா மீண்டும் மீண்டும் கூறுகின்றார்: மன்மனாபவ! என்னை நினைவு செய்யுங்கள், நீங்கள் தூய்மை ஆகுவீர்கள். நீங்கள்; மரணத்தை வெற்றி கொள்கிறீர்கள். எனினும் இதற்காக எவ்வளவு முயற்சி செய்தாலும் அதற்கேற்ப மாயையும் உங்கள் வழியில் தடைகளை ஏற்படுத்துவாள். ஏனெனில் தந்தையை நினைவு செய்வதன் மூலம் நீங்கள் அவளைவிட்டு விலகிவிடுவீர்கள் என்பதை அவள் அறிவாள். நீங்கள் என்னுடையவர்களாக ஆகியதினால் நீங்கள் அனைத்தையும் துறக்க வேண்டும். உங்கள் நண்பர்கள், உறவினர்கள், செல்வம் போன்றவற்றை நீங்கள் இனிமேலும் நினைவு செய்யக்கூடாது. ஒரு கதை இருக்கின்றது. அதில் கைத்தடியைக்கூட துறந்துவிட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அனைத்தையும் துறந்துவிடுங்கள் என மற்றவர்கள் உங்களுக்குக் கூறுவார்கள், ஆனால் உங்கள் சரீரத்தை நினைவு செய்யக்கூடாது என எவருமே ஒருபோதும் கூறமாட்டார்கள். தந்தை கூறுகின்றார்: அந்த சரீரம் பழையது இதையும் நீங்கள் மறந்துவிடவேண்டும். பக்தி மார்க்கத்திற்குரிய அனைத்தையும் நீங்கள் மறந்துவிட வேண்டும். நீங்கள் அனைத்தையும் முற்றுமுழுதாக மறந்து விடவேண்டும். உங்களிடம் உள்ள அனைத்தையும் சேவைக்காக உபயோகிக்கின்ற போதே உங்கள் நினைவு ஸ்திரமாக இருக்கும். நீங்கள் உயர்ந்த அந்தஸ்தைக் கோரவேண்டுமாயின் பெருமளவு முயற்சிசெய்ய வேண்டும். நீங்கள் உங்கள் சரீரத்தைக் கூட நினைவு செய்யக்கூடாது. நீங்கள் சரீரமற்று வந்தீர்கள். சரீரமற்றே திரும்பவேண்டும். தந்தை குழந்தைகளாகிய உங்களுக்குக் கற்பிக்கின்றார். அவர் ஆசைகள் அற்றவர். அவர் சேவை செய்கின்றார். தந்தை மாத்திரமே இந்த ஞானத்தைக் கொண்டிருக்கின்றார். இது தந்தையும் குழந்தைகளும் சேர்ந்து நடிக்கின்ற ஒரு நாடகமாகும். குழந்தைகளாகிய நீங்கள் தந்தையை நினைவு செய்யும்போது தந்தை இங்கிருந்து உங்;களுக்கு ஒரு சேர்ச்லைட் கொடுக்கின்றார். குழந்தைகள் தந்தையை பெருமளவில் ஈர்க்கும் போது தந்தை அமர்ந்திருந்து அவர்களுக்கு ஒளியைக் கொடுக்கின்றார். அவர்களால் போதுமான அளவு தந்தையை ஈர்க்க முடியாதபோது இந்த பாபா அமர்ந்திருந்து தந்தையை நினைவு செய்கின்றார். எவருக்காவது எந்நேரத்திலேனும் சக்தி (கரண்ட்) தேவைப்படும்போது பாபாவின் நித்திரைக்கு இடையூறு ஏற்படுகின்றது. யாருக்காவது சக்தி (கரண்ட்) தேவைப்படும் போது அவர் அதுபற்றி அக்கறை காட்டுகின்றார். ஞானத்தைக் கற்பதன் மூலம் உங்களுடைய ஆயுட்காலம் நீடிப்பதில்லை. இந்த சக்தியை (கரண்ட்) நீங்கள் பெறுவதன் மூலம் உங்கள் ஆயுட்காலம் நீடிப்பதுடன் நீங்கள் என்றென்றும் ஆரோக்கியமாக இருப்பீர்கள். உலகத்தில் சிலர் 125 இல் இருந்து 150 வயதுவரை இருக்கின்றனர். அவர்கள் நிச்சயமாக ஆரோக்கியமானவர்களாக இருப்பார்கள். அவர்கள் பெருமளவில் பக்தியையும் செய்திருப்பார்கள். பக்தியில் நன்மை இருக்கின்றது. அதில் எவ்வித தீங்கும் இல்லை. எவ்வித பக்தியும் செய்யாதவர்களின் நடத்தை நன்றாக இருக்க மாட்டாது. பக்தியில் கடவுள் நம்பி;க்கையுள்ளது. எனவே அவர்கள் பொய் பேசுவதோ பாவம் செய்வதோ இல்லை. அத்துடன் தங்கள் தொழிலில் கோபம் அடைவதும் இல்லை. பக்தர்களும் போற்றப் படுகின்றார்கள். பக்திமார்க்கம் எப்போது ஆரம்பமாகியது என மக்கள் அறியமாட்டார்கள். அவர்கள் இந்த ஞானத்தையும் அறியமாட்டார்கள். பக்திமார்க்கமும் சக்தி வாய்ந்ததாக ஆகுகின்றது. ஆனால் இந்த ஞானத்தின் ஆதிக்கம் வளர்ச்சி அடையும்போது பக்தி முழுமையாகத் துறக்கப்பட்டுவிடும். இந்த நாடகம் சந்தோஷத்தையும் துன்பத்தையும், பக்தியையும் ஞானத்தையும் பற்றியதாகும். கடவுள் சந்தோஷத்தையும் துன்பத்தையும் கொடுக்கிறார் என்றும் பின்னர் அவர் சர்வவியாபகர் என்றும் மக்கள் கூறுகின்றனர்! சந்தோஷமும், துன்பமும் ஆகிய இரண்டும் இரு வேறுபட்ட விடயங்களாகும். நாடகத்தை அறியாததனால் அவர்கள் எதையும் புரிந்துகொள்வதில்லை. ஆத்மாக்கள் அனைவரும் தங்கள் சரீரத்தை நீக்கி வேறொன்றை எடுக்கின்றார்கள். நீங்கள் மாத்திரமே இதனை அறிவீர்கள். சத்தியயுகத்தில் நீங்கள் ஆத்ம உணர்வில் இருப்பீர்கள் எனக் கூறப்படவில்லை. இப்பொழுது தான் நீங்கள் ஆத்ம உணர்வு உடையவராக வேண்டும் எனத் தந்தை உங்களுக்குக் கற்பிக்கின்றார். அவர் கூறுகின்றார்: உங்களை ஒர் ஆத்மாவாகக் கருதி தந்தையை நினைவு செய்யுங்கள். நீங்கள் தூய்மையாக வேண்டும். அது தூய சந்தோஷதாமம் ஆகும். சந்தோஷமான காலத்தில் அவரை எவரும் நினைவு செய்வதில்லை. அவர்கள் துன்பத்தை அனுபவிக்கும் போது மாத்திரமே கடவுளை நினைவு செய்கின்றார்கள். நாடகம் எவ்வளவு அற்புதமானது எனப்பாருங்கள். நீங்கள் மாத்திரமே, வரிசைக்கிரமமாக இதனைப்புரிந்து கொள்கின்றீர்கள். ஒரு சொற்பொழிவு ஆற்றுகின்ற நேரத்தில் மீட்டல் செய்வதற்காக நீங்கள் குறிப்புகளை எழுதுகின்றீர்கள். வைத்தியர்களும், சட்டத்தரணிகளும் குறிப்புகளைக் குறித்துக் கொள்கின்றார்கள். நீங்கள் இப்பொழுது தந்தையின் வழிகாட்டல்களைப் பெறுகின்றீhக்ள். நீங்களும் ஒரு சொற்பொழிவை ஆற்றுவதற்கு முன்னர் மீண்டும் மீட்டல் செய்யவேண்டும். பாபா இவரினுள் பிரவேசித்துள்ளார். தந்தை உங்களுக்கு விளங்கப்படுத்தும்போது, இவரும் செவிமடுக்கின்றார். அவர் உங்களுக்கு குறிப்புகள் கொடுக்காவிட்டால், உங்களுக்கு விளங்கப்படுத்துவதற்கு நான் எவ்வாறு அவற்றை அறிந்து கொள்வது? தந்தை கூறுகின்றார்: இது உங்கள் பல பிறவிகளின் இறுதிப்பிறவியாகும். பிரம்மா, விஷ்ணுவின் படங்களும் இருக்கின்றன. நீங்கள் வரிசைக்கிரமமாகவே உங்கள் இராச்சியத்திற்கு செல்வீர்கள். நீங்கள் எந்த அளவிற்கு நினைவு செய்து, எந்த அளவிற்கு கிரகிக்கின்றீர்களோ அதற்கேற்பவே ஒரு அந்தஸ்தைக் கோருகின்றீர்கள். தந்தை கூறுகின்றார்: நான் மிகவும் சூட்சுமமான, ஆழமான விடயங்களை விளங்கப்படுத்துகின்றேன். நீங்கள் புதிய கருத்துக்களைக் குறிப்பெடுத்துக் கொள்ள வேண்டும். பழைய கருத்துக்களில் எவ்வித பயனும் இல்லை. நீங்கள் ஒரு சொற்பொழிவை ஆற்றியபின், குறிப்பிட்ட ஒரு கருத்தை விளங்கப்படுத்தியிருந்தால், அது அவர்கள் புத்தியில் பதிந்திருக்கலாம் என நினைப்பீர்கள். நீங்கள் ~ஞானத்தைப் பேசுபவர்கள்| ஆனால் வரிசைக் கிரமமாக இருக்கின்றீர்கள். அனைவரிலும் சிறந்தவர்கள் மகாராத்திகள் ஆவார்கள். பாபா வேறுபட்டவர் பாப், தாதா இருவரும் இணைந்திருக்கின்றார்கள். மம்மாவினுடைய விளக்கங்களே அனைத்திலும் மிகச்சிறந்ததாகும். சம்பூரணமான மம்மாவின் காட்சிகளை குழந்தைகள் கண்டிருக்கின்றார்கள். அவசியமேற்படும்போது பாபா பிரவேசித்து அவருடைய பணியை நிறைவேற்றுகின்றார். இவ் விடயங்கள் அனைத்தும் புரிந்து கொள்ளப்பட வேண்டியவையாகும்;. நீங்கள் நேரம் கிடைக்கும் போது கற்கிறீர்கள். நீங்கள் நாள் முழுவதும் தொழில் போன்றவற்றை செய்ய வேண்டியுள்ளது. ஞானக் கடலைக் கடைவதற்கு உங்களுக்கு நேரம் தேவையாகும், அதற்கு உங்களுக்கு மௌனம் தேவையாகும். உதாரணத்திற்கு, நன்றாக சேவை செய்யும் ஒருவருக்கு சக்தி (கரண்ட்) கொடுக்கப்பட வேண்டும் என்பதால், அவருக்கு உதவி செய்யுமுகமாக அவர் நினைவுசெய்யப்படுகின்றார். முதலில், முகத்தை நினைவுசெய்யுங்கள், அதன் பின்னர் ஆத்மாவை நினைவு செய்யுங்கள். நீங்கள் அத்தகைய வழிமுறைகளை உருவாக்க வேண்டும். சேவை செய்யும் குழந்தைகள் கஷ்டத்தை அனுபவம் செய்வதனால், அவர்களுக்கு உதவியளிக்க வேண்டும். நீங்கள் உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதி தந்தையை நினைவு செய்வதுடன் பின்னர் அந்த ஆத்மாவை சிறிதளவு நினைவு செய்யுங்கள். இது அவர்களுக்கு சேர்ச்லைட்டைக் கொடுப்பது போன்றதாகும். நீங்கள் குறிப்பிட்ட இடத்தில் அமர்ந்து நினைவு செய்ய வேண்டும் என்பதல்ல. நடக்கின்ற போதும், சுற்றித்திரிகின்ற போதும், உங்களுடைய உணவை உட்கொள்ளும் போதும் தந்தையை நினைவு செய்யுங்கள். நீங்கள் மற்றவர்களுக்கு கரண்ட்டை (சக்தியை) கொடுக்க வேண்டுமாயின், நீங்கள் இரவு முழுவதும் விழித்திருக்க வேண்டும். குழந்தைகளே, நீங்கள் தந்தையை எந்தளவு நினைவு செய்கின்றீர்களோ அதற்கேற்பவே பாபா உங்களால் கவரப்பட்டு உங்களுக்கு ஒளியைக் கொடுப்பார் என்று உங்களுக்கு விளங்கப்படுத்தப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கு ஒரு சேர்ச்லைட்டைக் கொடுப்பது பாபாவின் தொழிலாகும். பெருமளவு சேர்ச்லைட் கொடுப்பதற்குத் தேவைப்படும் போதெல்லாம் இந்த பாபா தந்தையை பெருமளவு நினைவு செய்வார். எனவே தந்தையும் சேர்ச்லைட்டைக் கொடுக்கின்றார். நீங்கள் ஓர் ஆத்மாவை நினைவு செய்து பின்னர் ஒரு சேர்ச்லைட்டைக் கொடுங்கள். இந்த பாபாவும் ஒரு சேர்ச்லைட்டைக் கொடுக்கின்றார். கருணை என்றோ அல்லது ஆசீர்வாதங்கள் என்றோ அல்லது வேறு ஏதாவது என்றோ நீங்கள் அதனைக் கூறலாம். ஒரு சேவதாரி குழந்தை நோய்வாய்ப்படும் போது, அந்த ஆத்மாவுக்கு சக்தி தேவை என்பதால், பாபா பரிவு கொண்டு இரவு முழுவதும் விழித்திருந்து அந்த ஆத்மாவை நினைவு செய்வார். ஆத்மாக்கள் நினைவைக் கொண்டிருந்தால் அதற்குப் பதிலாக பாபா அவர்களை நினைவுசெய்கின்றார். தந்தை குழந்தைகளில் பெருமளவு அன்பு கொண்டுள்ளார், எனவே அவருடைய நினைவு ஆத்மாவை வந்தடைகின்றது. எவ்வாறாயினும், ஞானம் இலகுவானது, அதில் எந்தவிதமான மாயையின் தடைகளும் இல்லை. நினைவு செய்வது பிரதான விடயமாயினும் இதில் தடைகள் பல உள்ளன. நினைவு செய்வதினால், உங்களுடைய புத்தி தங்கப்பாத்திரத்தைப் போன்றதாகின்றது என்பதனால் உங்களால் ஞானத்தை கிரகிக்க முடிகிறது. சிங்கத்தின் பால் தங்கப் பாத்திரத்தில் மட்டுமே வைக்க முடியுமெனக் கூறப்பட்டுள்ளது. தந்தையால் கொடுக்கப்படும் இந்த ஞானச் செல்வத்தைப் பெறுவதற்கு உங்களுக்கு ஒரு தங்கப் பாத்திரம் தேவைப்படுகின்றது. நீங்கள் நினைவு யாத்திரையில் இருந்தால் மட்டுமே இது இடம்பெற முடியும். நீங்கள் நினைவைக் கொண்டிராவிட்டால் உங்களால் உட்கிரகிக்க முடியாது. தந்தை உள்ளிருக்கும் இரகசியங்களை அறிந்தவர் என எண்ணாதீர்கள். எதிர்கால விடயங்களை முற்கூட்டியே கூறுவது பக்தி மார்க்கத்தில் நிகழ்கின்ற விடயங்களாகும். அவர்களுக்கு குழந்தை இருந்தால், அது குருவின் ஆசீர்வாதம் என அவர்கள் கூறுகிறார்கள். குழந்தையில்லாவிட்டால், அது கடவுளின் விருப்பம் என அவர்கள் கூறுகிறார்கள். பகலுக்கும் இரவுக்கும் வித்தியாசம் இருக்கின்றது. நாடகத்தின் இரகசியங்களை தந்தை மிகத் தெளிவாக குழந்தைகளுக்கு விளங்கப்படுத்துகிறார். உங்களுக்கு இந்த விடயங்கள் முன்பு தெரியாது. இது உங்களுடைய மரணித்து வாழும் மறுபிறப்பாகும். இப்பொழுது நீங்கள் தேவர்களாகுகின்றீர்கள் என்பது உங்களுக்குத் தெரியும். இலக்ஷ்மி நாராயணன் எவ்வாறு அவர்களுடைய இராச்சியத்தைப் பெற்றார்கள், அதனை எவ்வாறு மீண்டும் இழந்தார்கள் என்ற தலைப்பில் நீங்கள் பேச முடியும். எங்களால் அந்த முழு வரலாறையும், புவியியலையும் விளங்கப்படுத்த முடியும் என அவர்களுக்கு கூறுங்கள். இந்த பிரம்மா கூறுகின்றார்: நான் இலக்ஷ்மி நாராயணரை வழிபட்டேன், அத்துடன் நான் கீதையையும் கற்றேன். பாபா என்னுள் பிரவேசித்ததும் நான் அனைத்தையும் துறந்துவிட்டேன். நான் பாபா கூறுவதைப் போன்ற காட்சியைப் பெற்றேன்: என்னை நினைவுசெய்யுங்கள் உங்களுடைய பாவங்கள் அனைத்தும் அழிக்கப்படும். இந்த கீதையை கற்பதில் எந்தவிதமான கேள்வியும் இருக்கவில்லை. தந்தை இவரினுள் பிரவேசித்து அவரை அனைத்திலும் இருந்து விட்டு விலகுமாறு செய்தார். அவர் கோயிலுக்குச் சென்று சிவனின் தரிசனத்தைப் பெற்றார் என்பதல்ல. பக்தி விடயங்கள் முற்றிலும் மறைந்துவிட்டது. படைப்பவரினதும், படைப்பின் ஆரம்பம், மத்தி, இறுதியின் ஞானத்தினாலும் புத்தி நிறைந்திருந்தது. தந்தையை அறிந்துகொள்வதினால், நீங்கள் அனைத்தையும் அறிந்து கொள்கின்றீர்கள். நீங்கள் இந்த அற்புதமான தலைப்புக்களை பற்றி எழுதினால் மக்கள் வியப்படைந்து செவிமடுக்க உங்களிடம் விரைந்து வருவார்கள். கோயிலுக்குச் சென்று அங்கு யாரிடமாவது வினவுங்கள்: இலக்ஷ்மி நாராயணர் உலக அதிபதிகளாக இருந்தபோது வேறு எந்தச் சமயமாவது இருந்ததா? அந்நேரத்தில் ஒரு பாரதம் மட்டுமே இருந்தது. எனவே சத்தியயுகம் நூறு ஆயிர வருடங்களுக்கானது என எப்படிக் கூற முடியும்? கிறிஸ்துவுக்கு மூவாயிரம் வருடங்களுக்கு முன் சுவர்க்கம் இருந்ததாக அவர்கள் கூறுகிறார்கள், அது எவ்வாறு நூறு ஆயிர வருடங்களாக இருக்க முடியும்? நூறு ஆயிர வருடங்களின் பின் சனத்தொகை கணக்கற்ற நுளம்புகளைப் போன்று இருக்கும். அவர்களுக்கு ஒரு சிறிதளவைக் கூறினால் அவர்களும் வியப்படைவார்கள். எவ்வாறாயினும், இந்த ஞானம் இந்தக் குலத்துக்குரியவர்களின் புத்தியில் மட்டுமே இருக்கும். இல்லாவிடில், பிரம்ம குமாரிகளின் ஞானம் அற்புதமானது என அவர்கள் கூறுவார்கள். புரிந்துகொள்வதற்கு உங்களுக்கு புத்தி தேவைப்படுகின்றது. நினைவுசெய்வதே முக்கியமான விடயமாகும். கணவனும் மனைவியும் ஒருவரை ஒருவர் நினைவு செய்கிறார்கள். ஆத்மாக்கள் பரமாத்மாவை நினைவு செய்கிறார்கள். இந்நேரத்தில், அனைவரும் நோய்வாய்ப்பட்டுள்ளார்கள், எனவே நோயிலிருந்து விடு;பட வேண்டும். இந்தத் தலைப்பை வைத்திருங்கள். அவர்களுக்குக் கூறுங்கள்: நீங்கள் மீண்டும் மீண்டும் நோயுற்றால், எங்களால் நீங்கள் மீண்டும் ஒருபோதும் நோயுறாதவாறு உயிர்கொடுக்கும் முலிகையை கொடுக்க முடியும். எவ்வாறாயினும், நாங்கள் கொடுக்கும் மருந்தை நீங்கள் ஒழுங்காக பயன்படுத்தினால் மட்டுமே இது நடைபெற முடியும். இந்த மருந்து விலைமதிக்க முடியாதது, அது சத்தியயுகம், திரேதாயுகம் முழுவதும் 21 பிறவிகளுக்கு நோயுறாதவாறு உங்களைத் தடுக்கும். அது சுவர்க்கம். இந்தக் குறிப்புக்களைக் குறித்து வைத்து அவற்றை எழுதுங்கள். நீங்களே சத்திரசிகிச்சை நிபுணர்களுக்கெல்லாம் சத்திரசிகிச்சை நிபுணர்கள். சத்திரசிகிச்சை நிபுணர்கள் அனைவரிலும் பார்க்க மகத்துவமான அழிவற்ற சத்திரசிகிச்சை நிபுணர், நீங்கள் 21 பிறவிகளுக்கு நோயுறாதவாறு உங்களுக்கு மருந்தைக் கொடுக்கின்றார். இப்பொழுது இது சங்கமயுகம் ஆகும். மக்கள் இவ்விடயங்களை கேட்கும்போது சந்தோஷம் அடைவார்கள். கடவுள் கூறுகின்றார்: நான் அழிவற்ற சத்திரசிகிச்சை நிபுணர். மக்கள் அவரை இன்னமும் நினைவு செய்கிறார்கள்: ஓ தூய்மையாக்குபவரே! அழிவற்ற சத்திரசிகிச்சை நிபுணரே வாருங்கள்! நான் இப்பொழுது வந்துள்ளதால், அனைவருக்கும் இவ்விடயங்களை விளங்கப்படுத்துங்கள். இறுதியில் அனைவரும் நிச்சயமாக புரிந்துகொள்வார்கள். பாபா தொடர்ந்தும் உங்களுக்கு விவேகமான வழிமுறைகளைக் கொடுப்பார். அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய எப்போதோ தொலைந்து இப்போது கண்டெடுக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு தந்தையாகவும் தாயாகவும் இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை, ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. தந்தையிடமிருந்து சேர்ச்லைட்டைப் பெறுவதற்கு, அதிகாலையில் எழுந்து தந்தையின் நினைவில் நிலைத்திருங்கள். இரவு முழுவதும் விழித்திருந்து பிறருக்கு சக்தி (கரண்ட்) கொடுப்பதன் மூலம் தந்தையின் உதவியாளராகுங்கள்.

2. உங்களிடம் உள்ள அனைத்தையும் இறை சேவைக்குப் பயன்படுத்துவதன் மூலம் அதனைத் தகுதி வாய்ந்த முறையில் உபயோகியுங்கள். உங்களுடைய பழைய சரீரத்தை மறந்து தந்தையின் நினைவில் இருங்கள். உங்களை முற்றாக அர்ப்பணித்து ஆத்ம உணர்வுடையவராகுவதற்கு தொடர்ந்தும் முயற்சி செய்யுங்கள்.

ஆசீர்வாதம்:
உங்கள் கருணையான உணர்வுகளை வெளிப்படுத்துவதன் மூலம், கருணை நிறைந்தவராகி, ~எனது| மற்றும் ~உனது| என்பவற்றின் சகல குழப்பங்களையும் முடிவடையச் செய்வீர்களாக.

காலத்திற்குக் காலம், பல ஆத்மாக்கள் துன்ப அலைகளில் சிக்கிக் கொள்கிறார்கள். இயற்கையின் குழப்பம் சிறிதளவு ஏற்படும் போதும், கிளர்ச்சிகளின் போதும் பல ஆத்மாக்கள் வேதனையடைந்து, கருணைக்காக வேண்டுகின்றார்கள். நீங்கள் அத்தகைய ஆத்மாக்களின் அழைப்பை கேட்கும் போது, உங்கள் கருணை உணர்வுகளை வெளிப்படுத்துங்கள். உங்கள் பூஜிக்கத்தகுதி வாய்ந்த கருணை வடிவத்தை எடுங்கள். உங்களை சம்பூர்ணமானவர் ஆக்குங்கள், அப்பொழுது இந்தத் துன்ப உலகம் முடிவடையும். இப்பொழுது, மாற்றத்திற்கான நல்லாசிகளின் அலைகளை விரைவான வேகத்தில் பரவச் செய்தால், ~எனது| மற்றும் ~உனது| என்பவற்றின் குழப்பங்கள் முடிவடையும்.

சுலோகம்:
வீணான எண்ணங்கள் என்ற சுத்தியலினால், மலை போன்ற பிரச்சினைகளை உடைக்க முயற்சிப்பதற்குப் பதிலாக, உயரப் பாய்வதனால், மலையை கடந்து பாய்ந்து செல்லுங்கள்.