07.03.20        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்:
இனிய குழந்தைகளே, நீங்கள் யோகசக்தி மூலம் முழு உலகையும் தூய்மையாக்க வேண்டும். யோகசக்தி மூலம் மாயையை வெல்வதால், நீங்கள் உலகை வென்றவர்களாக முடியும்.

கேள்வி:
தந்தையின் பாகம் என்ன? எதன் அடிப்படையில் குழந்தைகளாகிய நீங்கள் அந்தப் பாகத்தை இனங்கண்டு கொண்டீர்கள்?

பதில்:
அனைவருடைய துன்பத்தை அகற்றுவதும் அனைவரையும் இராவணனின் சங்கிலிகளில் இருந்து விடுவிப்பதுற்குஅவர்களுக்குச் சந்தோஷத்தை அளிப்பதும் தந்தையின் பாகம் ஆகும். தந்தை வரும்பொழுது பக்தியாகிய இருள் முடிவடைகின்றது. தந்தையே உங்களுக்கு அவருடைய சொந்த அறிமுகத்தையும் அவருடைய சொத்தின் அறிமுகத்தையும் கொடுக்கின்றார். ஒரேயொரு தந்தையை அறிந்துகொள்வதனால், நீங்கள் அனைத்தையும் அறிந்து கொள்கின்றீர்கள்.

பாடல்:
நீங்களே தாயும், நீங்களே தந்தையும்.

ஓம் சாந்தி.
குழந்தைகளாகிய நீங்கள் ஓம்சாந்தி என்பதன் அர்த்தத்தைப் புரிந்துகொண்டிருக்கின்றீர்கள். நீங்கள் ஒவ்வொருவரும் ஓர் ஆத்மா எனவும், நீங்கள் இந்த உலக நாடகத்தில் பிரதான பாகங்களைக் கொண்டிருக்கின்றீர்கள் எனவும் தந்தை விளங்கப்படுத்தியுள்ளார். யாருக்கு இந்தப் பாகங்கள் உண்டு.? ஆத்மாக்கள் சரீரங்களை ஏற்றுத் தங்கள் பாகங்களை நடிக்கின்றார்கள். ஆகவே அவர் இப்பொழுது குழந்தைகளாகிய உங்களை ஆத்ம உணர்வுடையவர்கள் ஆக்குகின்றார். நீங்கள் நீண்டகாலமாகச் சரீர உணர்வுடையவர்களாக இருந்து வந்துள்ளீர்கள். இப்பொழுது உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதித் தந்தையை நினைவுசெய்யுங்கள். எங்கள் பாபாநாடகத் திட்டத்துக்கேற்பஇப்பொழுது வந்துள்ளார். தந்தை இரவில் வருகின்றார். அவர் எப்பொழுது வருகிறார் என்பதற்கான திகதி அல்லது நேரம் பதிவுசெய்யப்படவில்லை. ஒரு சரீரபிறப்பை எடுப்பவர்களுக்கு ஒரு திகதியும் நேரமும் உள்ளன. அந்த ஒரேயொருவர் பரலோகத் தந்தை ஆவார். அவர் ஒரு சரீர பிறப்பை எடுப்பதில்லை. அவர்கள் கிருஷ்ணரின் பிறப்புக்கான திகதி, நேரம் போன்றவற்றைக் கொடுக்கின்றார்கள். அந்த ஒரேயொருவரையிட்டு,(சிவன்) அவர் ஒரு தெய்வீகப் பிறப்பை எடுக்கின்றார் என்று கூறப்பட்டுள்ளது. தந்தை இவரில் பிரவேசித்துஇது ஓர் எல்லையற்ற நாடகம் என்று எங்களுக்குக் கூறுகின்றார். இந்நாடகத்தில், அரைக்கல்பத்திற்கு இரவே உள்ளது. இரவிலே, காரிருள் உள்ளபொழுதே நான் வருகின்றேன். அதற்கென திகதி அல்லது நேரம் கிடையாது. தற்பொழுது, பக்தியும் தமோபிரதானாக உள்ளது. அரைக் கல்பத்திற்கு எல்லையற்ற பகல் உள்ளது. தந்தையே கூறுகிறார்: நான் இவரில் பிரவேசித்துள்ளேன். கடவுள் பேசுகிறார் எனக் கீதையில் கூறப்படுகின்றது. எவ்வாறாயினும்,எந்தவொருமனிதரும் கடவுளாக இருக்க முடியாது. கிருஷ்ணரும் ஒரு மனிதரே, ஆனால் தெய்வீகக் குணங்களை உடையவர் ஆவார். இதுவே மனிதர்களின் உலகம் ஆகும்; இது தேவர்களின் உலகம் அல்ல. பாடப்பட்டுள்ளது: பிரம்ம தேவருக்கு வந்தனங்கள். அவர் ஒரு சூட்சும உலகவாசி ஆவார். அங்கு தசை அல்லது எலும்புகள் கிடையாது என்பது குழந்தைகளாகிய உங்களுக்குத் தெரியும். அங்கு சூட்சுமமான வெண்ணிற ஓளியின் நிழல் உள்ளது. ஆத்மாக்கள் அசரீரி உலகில் இருக்கும்பொழுது, அவர்களுக்குச் சூட்சும சரீரங்கள் அல்லது எலும்புகளாலான சரீரங்கள்கிடையாது. மனிதர்கள் இதில் எதனையும் அறியார்கள். இவை அனைத்தையும் தந்தை மட்டுமே வந்து உங்களுக்குக் கூறுகிறார். வேறு எவருமன்றி, பிராமணர்களாகிய நீங்கள் மட்டுமே இதைச் செவிமடுப்பவர்கள்.பிராமணகுலம்பாரதத்தில் மட்டுமே உள்ளது,பரமாத்மாவாகிய, பரமதந்தைபிரஜாபிதா பிரம்மாவினூடாக, பிராமண தர்மத்தை ஸ்தாபிக்கும்பொழுது மட்டுமே, அது இருக்க முடியும். அவரை படைப்பவர் என்று அழைக்க முடியாது. அவர் ஒரு புதிய படைப்பைப் படைக்கிறார் என்பதல்லை. அவர் அதைப் புத்;துயிர் பெறச்;செய்கிறார். நீங்கள் அவரைக் கூவியழைக்கின்றீர்கள்: ஓ பாபா, இத்தூய்மையற்ற உலகில் வந்து எங்களைத் தூய்மையாக்குங்கள்அவர் இப்பொழுது உங்களைத் தூய்மையாக்குகின்றார். நீங்கள் பின்னர் யோகசக்தி மூலம் இவ்வுலகைத் தூய்மையாக்குகின்றீர்கள். மாயையை வெல்வதால், நீங்கள் உலகை வென்றவர்கள் ஆகுகிறீர்கள். யோகாவின சக்தி அறிவியலின் சக்தி என்றும் அழைக்கப்படுகின்றது. ரிஷிகள், முனிவர்கள் மற்றும் பலர் அமைதியை வேண்டுகின்றார்கள், ஆனால் அவர்களுக்கு அமைதி என்பதன் அர்த்தம் தெரியாது. இங்கு உங்கள் பாகங்களை நீங்கள்நிச்சயமாக நடிக்க வேண்டும். மௌன தாமமே உங்களுடைய இனிய, மௌன வீடாகும். மௌனதாமமே உங்கள் வீடு என்பதை ஆத்மாக்களாகிய நீங்கள் இப்பொழுது அறிவீர்கள். எங்கள் பாகங்களைநடிப்பதற்கே நாங்கள்இங்கு வந்துள்ளோம். அவர்களும் தந்தையை கூவியழைக்கின்றார்கள்: ஓ தூய்மையாக்குபவரே, துன்பத்தை அகற்றுபவரே, சந்தோஷத்தை அளிப்பவரே, வந்து இராவணனின் இச்சங்கிலிகளிலிருந்து எங்களை விடுவியுங்கள்! பக்தி இரவும், ஞானம் பகலும் ஆகும். இரவு முடிவுக்கு வரும்பொழுது, ஞானத்துக்கு வெற்றி கிடைக்கின்றது. இது சந்தோஷத்தையும் துன்பத்தையும் பற்றிய ஒரு நாடகமாகும். ஆரம்பத்தில், நீங்கள் சுவர்க்கத்தில் இருந்தீர்கள்.நீங்கள்படிப்படியாகக் கீழே வந்து,பின்னர் நரகத்தை அடைந்தீர்கள் என்பதைஇப்பொழுது நீங்கள்அறிவீர்கள். கலியுகம் எப்பொழுது முடிவுறும் அல்லது சத்தியயுகம் எப்பொழுது ஆரம்பமாகும் என்பதை எவரும் அறியார். தந்தையை அறிந்துகொள்வதால், நீங்கள் அவரிடமிருந்து அனைத்தையும் அறிந்துகொள்கின்றீர்கள். மக்;கள் கடவுளைத் தேடுகையில், அதிகளவு தடுமாறித் திரிகிறார்கள். அவர்கள் தந்தையை அறியார்;. அவர் வந்து அவருடைய சொந்த அறிமுகத்தையும் அவருடைய சொத்தின் அறிமுகத்தையும் அவரேகொடுக்கும்பொழுது மட்டுமே, அவர்களால் அவரை அறிய முடியும். தந்தையிடமிருந்தே ஆஸ்தி பெறப்படுகிறது, தாயிடமிருந்து அல்ல. இவர் மம்மா, தாய் எனவும் அழைக்கப்படுகிறார், ஆனால் நீங்கள் அவரிடமிருந்து ஓர் ஆஸ்தியைப் பெறுவதில்லை. நீங்கள் அவரை நினைவுசெய்யக்கூடாது. பிரம்மா, விஷ்ணு, சங்கரரும் சிவனின் குழந்தைகள் ஆவர். இதையும் எவரும் அறியார். ஒரேயொரு தந்தை மட்டுமே முழு,எல்லையற்ற உலகையும் படைப்பவர் ஆவார். ஏனைய அனைவரும் அவரின் படைப்பு, அவர்கள் எல்லைக்குட்பட்ட படைப்பவர்கள். இப்பொழுது குழந்தைகள் ஆகிய உங்களுக்குத் தந்தை கூறுகிறார்: என்னை நினைவுசெய்யுங்கள், உங்கள் பாவங்கள் அழிக்கப்படும். மனிதர்களுக்குத் தங்கள் தந்தையைத் தெரியாது, எனவே, அவர்கள் யாரை நினைவுசெய்வார்கள்? ஆகவே தந்தை கூறுகிறார்: அவர்கள் முழுமையான அநாதைகள் ஆகிவிட்டார்கள். இதுவும் நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டுள்ளது. பக்தி, ஞானம் இரண்டிலும் அதிமேன்மையான செயல், தானங்கள் வழங்குவதே ஆகும். பக்தி மார்க்கத்தில், மக்கள் கடவுளின் பெயரில் தானம் செய்கிறார்கள். எதற்காக? அவர்களுக்கு நிச்சயமாகச் சில விருப்பங்கள் உள்ளன. அவர்கள் எந்தச் செயலைச் செய்தாலும் அவர்கள்அதன் பலனைஅடுத்த பிறவியில்; பெறுவார்கள் என்பதை அவர்கள் புரிந்துகொள்கின்றார்கள். அவர்களின் இந்தப் பிறவியில் அவர்கள் எதைச்செய்தாலும்,அதன் பலனைஅவர்களின் அடுத்த பிறவியில்; பெறுவார்கள். அவர்கள் அதைப் பிறவிபிறவியாகப் பெற மாட்டார்கள்; அவர்கள் ஒரு பிறவிக்கு மட்டுமே அதன் பலனைப் பெறுகின்றார்கள். தானமளிப்பதே சிறந்த செயல் ஆகும். ஒரு தானி புண்ணியாத்மா என்று அழைக்கப்படுகின்றார். பாரதம் மகாதானி என்று கூறப்படுகின்றது. அவர்கள் பாரதத்தில் அளிப்பதைப் போன்று,வேறு தேசங்களில்பல்வேறு தானங்கள் அளிப்பதில்லை. தந்தையும் வந்து குழந்தைகளாகிய உங்களுக்குத் தானமளிக்கின்றார், பின்னர் குழந்தைகளாகிய நீங்கள் தந்தைக்குத் தானமளிக்கின்றீர்கள். பாபா, நீங்கள் வரும்பொழுது, நாங்கள் உங்களுக்குச் சரீரம், மனம், செல்வம்,அனைத்தையும் கொடுப்போம். எங்களுக்கு உங்களைத் தவிர வேறு யாருமில்லை தந்தை கூறுகின்றார்: எனக்கும் குழந்தைகளாகிய நீங்கள் மட்டும் இருக்கிறீர்கள். நீங்கள் என்னைத் தந்தையாகிய சுவர்க்கக் கடவுள், அதாவது, சுவர்க்கத்தைப் படைப்பவர் என்று அழைக்கின்றீர்கள். நான் வந்து சுவர்க்க இராச்சியத்தை உங்களுக்குக் கொடுக்கின்றேன். குழந்தைகளாகிய நீங்கள் பாபா, இவை அனைத்தும் உங்களுடையவை என்று கூறி அனைத்தையும் எனக்குக் கொடுக்கின்றீர்கள். பக்தி மார்க்கத்தில், நீங்களும் பாபா, இவை அனைத்தும் உங்களால் எங்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ளன என்று கூறுவது வழக்கமாகும். பின்னர், அது பயன்படுத்தப்பட்டதும் நீங்கள் சந்தோஷமற்றவர்கள் ஆகுகின்றீர்கள். அதுவே பக்தியின் தற்காலிகச் சந்தோஷம் ஆகும். தந்தை விளங்கப்படுத்துகிறார்: பக்தி மார்க்கத்தில், நீங்கள் மறைமுகமாகத் தானமளித்துப் புண்ணியத்தைச் செய்வது வழக்கம். நீங்கள் தொடர்ந்தும் அதன் பலனைப் பெற்றீர்;கள். இப்பொழுது, தற்சமயத்தில், நான் உங்களுக்குச் செயல்,பாவச்செயல், நடுநிலைச்செயலின் முக்கியத்துவத்தை விளங்கப்படுத்துகின்றேன். பக்திமார்க்கத்தில், நீங்கள் எந்தச் செயல்களைச் செய்திருப்பினும், அதன் தற்காலிகச் சந்தோஷத்தை என் மூலம் பெற்றீர்கள். உலகில் உள்ள வேறு யாருக்கும் இவ்விடயங்கள் தெரியாது. தந்தை மட்டும் வந்து உங்களுக்குக் கர்ம தத்துவத்தின் ஆழமான முக்கிய விடயங்களைக் கூறுகின்றார். சத்தியயுகத்தில் யாரும் தீய செயல்களை புரிவதில்லை. அங்கு சந்தோஷம் மற்றும் சந்தோஷம் மட்டுமே உள்ளது. மக்கள் சுவர்க்கத்தைச் சந்தோஷ தாமமாக நினைவுசெய்கின்றார்கள். அனைவரும் இப்பொழுது நரகத்தில் இருக்கின்றார்கள், அப்பொழுதும், இன்ன இன்னார் சுவர்க்கத்துக்குச் சென்றதாக அவர்கள் கூறுகின்றார்கள். ஆத்மாக்கள் சுவர்க்கத்தை அதிகளவு விரும்புகின்றார்கள்! ஆத்மாவே கூறுகின்றார்: இன்ன இன்னார் சுவர்க்கத்துக்குச் சென்றார். எவ்வாறாயினும், ஆத்மாக்கள் இப்பொழுது தமோபிரதானாக இருப்பதால்,அவர்களுக்குச் சுவர்க்கம் எது அல்லது நரகம் எது என்று தெரியாது. எல்லையற்ற தந்தை கூறுகிறார்: நீங்கள் அனைவரும் மிகவும் தமோபிரதான் ஆகிவிட்டீர்கள்! உங்களுக்கு நாடகம் பற்றித் தெரியாது. உலகச் சக்கரம் சுழல்கிறது என்பதைநீங்கள் புரிந்துகொள்கிறீர்கள். எனவே அது நிச்சயமாக ஒரே மாதிரியாகச் சுழல வேண்டும்.மக்கள் அதைக் கூறவேண்டும் என்பதற்காக வெறுமனே கூறுகிறார்கள். இப்பொழுது சங்கமயுகம் உள்ளது. இந்த ஒரு சங்கமயுகத்தின் புகழ் மட்டுமே உள்ளது. தேவர்களின் இராச்சியம் அரைக்கல்பமாக நீடிக்கிறது. பின்னர், அந்த இராச்சியம் எங்கு மறைகின்றது? யார் அதை வெல்கின்றார்;கள்? எவருக்கும் இது தெரியாது. தந்தை கூறுகிறார்: அதை இராவணன் வெற்றிகொள்கின்றான். அவர்கள் பின்னர் தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் இடையே ஒரு யுத்தத்தைக் காட்டியுள்ளார்கள். இப்பொழுது தந்தை விளங்கப்படுத்துகிறார்: நீங்கள் ஐந்து விகாரங்களாகிய, இராவணனால் தோற்கடிக்கப்படுகின்றீர்கள், பின்னர் நீங்கள் இராவணன் மீது வெற்றியும் அடைகின்றீர்கள். நீங்கள் பூஜிக்கத் தக்கவர்களாக இருந்தீர்கள், பின்னர் நீங்கள் பூஜிப்பவர்கள் ஆகினீர்கள்; நீங்கள் தூய்மையற்றவர்கள் ஆகினீர்கள். ஆகவே, நீங்கள் இராவணனால் தோற்கடிக்கப்பட்டீர்கள். இராவணன் உங்கள் எதிரி என்பதால்,இக்காலம் முழுவதும் அவனுடைய கொடும்பாவியை எரித்து வந்துள்ளீர்கள். எவ்வாறாயினும், நீங்கள் இதை அறிந்திருக்கவில்லை. இப்பொழுது தந்தை விளங்கப்படுத்துகின்றார்: இராவணன் காரணமாக, நீங்கள் தூய்மையற்றவர்கள் ஆகினீர்கள். இந்த விகாரங்கள் மாயை என்று அழைக்கப்படுகின்றன. மாயையை வெல்பவர்கள் உலகை வென்றவர்கள் ஆகுகின்றார்கள். இராவணனே உங்களுடைய மிகப்பழைய எதிரி ஆவான். ஸ்ரீமத்தைப் பின்பற்றுவதால், இப்பொழுது நீங்கள் இந்த ஐந்து விகாரங்களையும் வெற்றிகொள்கின்றீர்கள். உங்களை வெற்றியாளர்கள் ஆக்குவதற்குத் தந்தை வந்துள்ளார். இது ஒரு விளையாட்டாகும். மாயையிடம் தோற்பவர்கள் அனைத்தையும் இழக்கின்றார்கள், மாயையை எதிர்த்து வெல்பவர்கள் அனைத்தையும் வெல்கின்றார்கள். தந்தை மட்டும் உங்களை வெல்லச் செய்கின்றார். இதனாலேயே அவர் சர்வசக்திவான் என்று அழைக்கப்படுகின்றார். இராவணனும் ஒரு சர்வசக்திவானுக்குக் குறைந்தவன் அல்ல. ஆனால் அவன் துன்பம் கொடுப்பதால்,புகழப்படுவதில்லை. இராவணன் மிகவும் சக்திமிக்கவன் ஆவான். அவன் உங்கள் இராச்சியத்தை அபகரிக்கின்றான். நீங்கள் அதை எவ்வாறுஇழக்கின்றீர்கள், நீங்கள் அதைஎவ்வாறு திரும்பவும் வெல்கின்றீர்கள் என்பதை இப்பொழுது நீங்கள்புரிந்துகொள்கிறீPர்கள். ஆத்மாக்களும் அமைதியை விரும்புகின்றார்கள்: நான்எனது வீட்டுக்குத் திரும்பிச் செல்ல விரும்புகின்றேன். பக்தர்கள் கடவுளை நினைவுசெய்கின்றார்கள், ஆனால், அவர்கள் புத்தி கல்லைப் போன்று இருப்பதால்,கடவுளே தந்தை, ஆகவே நிச்சயமாக அவரிடமிருந்து ஓர் ஆஸ்தியைப் பெற வேண்டும் என்பதை அவர்கள் புரிந்துகொள்வதில்லை. நீங்கள் நிச்சயமாக அதைப் பெறுகின்றீர்கள், ஆனால் நீங்கள் எப்பொழுது அதைப் பெறுகின்றீர்கள் அல்லது நீங்கள் அதைப்பின்னர்எப்படிஇழக்கின்றீர்கள் என்பது உங்களுக்குத் தெரியாது. தந்தை கூறுகின்றார்:நான் பிரம்மாவின் இச்சரீரத்தில்; அமர்ந்திருந்து உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றேன். எனக்கும் பௌதீக அங்கங்கள் தேவை. எனக்கென சொந்தமாகப் பௌதீக அங்கங்களை நான் கொண்டிருப்பதில்லை. சூட்சும உலகிலும் புலன் அங்கங்கள் உள்ளன. ஒரு மௌனப் படத்தைப் போன்று நீங்கள் நடந்தும் உலாவியும் திரிகின்றீர்கள். அந்தச் சலனப் படங்களும் பேசும்படங்களும் வெளிப்பட்டன, ஆகவே தந்தை அதை விளங்கப்படுத்துவதற்கு இலகுவானதாகக் கண்டுகொள்கின்றார். அவர்களுக்குப் பௌதீகச் சக்தி உள்ளது, உங்களுக்கோ யோகசக்தி உள்ளது. அந்த இரண்டு சகோதரர்களும் (ரஷ்யா, அமெரிக்கா) ஒன்றிணைந்திருப்பின், முழு உலகையும் ஆட்சிபுரிந்திருப்பார்கள். எவ்வாறாயினும், தற்சமயம், அவர்கள் பிரிந்துள்ளனர். குழந்தைகளாகிய நீங்கள் மௌனத்தின் தூய பெருமையைக் கொண்டிருக்கின்றீர்கள். நீங்கள் மௌனத்தாலும்மன்மனபவவின் அடிப்படையிலும் உலகை வெல்கின்றீர்கள். அவர்கள் விஞ்ஞானத்தில் பெருமையைக் கொண்டிருக்கின்றார்கள். உங்களை ஆத்மாக்களாகக் கருதித் தந்தையை நினைவுசெய்யும், மௌனத்தின் பெருமை உங்களுக்கு உள்ளது. இந்நினைவினூடாக நீங்கள் சதோபிரதான் ஆகுகின்றீர்கள். பாபா உங்களுக்கு மிகவும் இலகுவானதொரு வழிமுறையைக் காட்டுகின்றார். உங்கள் சுவர்க்க ஆஸ்தியைக் குழந்தைகளாகிய உங்களுக்கு மீண்டும் ஒருமுறை கொடுப்பதற்கு சிவபாபா வந்துள்ளார் என்பது உங்களுக்குத் தெரியும். ஊங்களிடம் எந்தக் கலியுகப் பந்தனங்களைக் இருப்பினும், தந்தை கூறுகின்றார்: அவற்றை மறந்துவிடுங்கள்! உங்கள் ஐந்து விகாரங்களையும் எனக்குத் தானம் செய்யுங்கள்! நீங்கள் நீண்டகாலமாக,எனது, எனது என்று கூறி வந்துள்ளீர்கள்: என் கணவன், இது என்னுடையது, அது என்னுடையது. இவை அனைத்தையும் மறந்துவிடுங்கள். அனைத்தையும் பார்க்கையில், எதிலும்; பற்று இல்லாதிருக்கட்டும். இவ்விடயங்களைக் குழந்தைகளாகிய உங்களுக்கு மட்டும் பாபா விளங்கப்படுத்துகின்றார். தந்தையை அறியாதவர்களால் இப்பாஷையைப் புரிந்துகொள்ள முடியாது. தந்தை வந்து சாதாரண மனிதர்களைத் தேவர்களாக மாற்றுகின்றார். சத்தியயுகத்திலேயே தேவர்கள் உள்ளார்கள். கலியுகத்தில் சாதாரண மனிதர்களே உள்ளார்கள். இப்பொழுதும், இன்னமும் தேவர்களின் அடையாளங்கள் உள்ளவிக்கிரகங்கள் உள்ளன. நீங்கள் என்னைதூய்மையாக்குபவர் என்று அழைக்கின்றீர்கள். நான் சீரழிந்தவர் ஆகுவதில்லை. நீங்கள் கூறுகின்றீர்கள்: நாங்கள் தூய்மையாக இருந்தோம், பின்னர் நாங்கள் சீரழிந்தவர்களாகவும், தூய்மையற்றவர்களாகவும் ஆகினோம். இப்பொழுது, நீங்கள் வந்து எங்களைத் தூய்மையாக்க வேண்டும், அதனால் நாங்கள் எங்கள் வீட்டுக்குத் திரும்பிச் செல்ல முடியும். இது ஆன்மீக ஞானம். இவை அழிவற்ற ஞான இரத்தினங்கள். இது புதிய ஞானம். நான் இப்பொழுது உங்களுக்கு இந்த ஞானத்தைக் கற்பித்து, உங்களுக்குப் படைப்பவரினதும் படைப்பின் ஆரம்பம், மத்தி, இறுதியினதும் இரகசியங்களைக் கூறுகின்றேன். இது இப்பொழுது பழைய உலகம் ஆகும். உங்கள் நண்பர்கள், உறவினர்கள்,உங்கள் சரீரம் உட்பட,அனைத்திலிருந்தும் உங்கள் பற்று அனைத்தையும் அகற்றுங்கள். குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது அனைத்தையும் தந்தைக்குக் கொடுக்கின்றீர்கள். தந்தை பின்னர் 21 பிறவிகளுக்கான உங்கள் சுவர்க்க இராச்சியத்தைக் கொடுக்கின்றார். கொடுப்பதும் எடுப்பதும் நடைபெறுகிறது, இல்லையா? தந்தை 21 பிறவிகளுக்கான உங்கள் இராச்சியப் பாக்கியத்தை உங்களுக்குக் கொடுக்கின்றார். மக்கள் 21 பிறவிகள் 21 தலைமுறைகள் பற்றிப் பேசுகின்றார்கள். நீங்கள் 21 பிறவிகளுக்கு முழு ஆயுட்காலத்தைக் கொண்டிருக்கின்றீர்கள் என்பதே அதன் அர்த்தமாகும். அங்கு, நீங்கள் நடுத்தர வயதிலே உங்கள் சரீரத்தை நீக்க மாட்டீர்கள்;. அங்கு அகாலமரணம் கிடையாது. நீங்கள் அமரத்துவமானவர்களாகி, அமரத்துவ தாமத்தின் அதிபதிகள் ஆகுகிறீர்கள். அங்கு உங்களுக்கு ஒருபொழுதும் மரணம் வருவதில்லை. இப்பொழுது நீங்கள் மரணிப்பதற்கு முயற்சி செய்கின்றீர்கள். தந்தை கூறுகிறார்: உங்கள் சொந்தச் சரீரம் உட்பட, சரீர உறவினர்கள் அனைவரையும் துறவுங்கள், ஒரேயொரு தந்தையுடனேயே உங்கள் உறவுமுறைகள் அனைத்தையும் வைத்திருங்கள். இப்பொழுது நீங்கள் சந்தோஷ உறவுமுறைகளுக்குள் செல்ல வேண்டும். நீங்கள் தொடர்ந்தும் துன்ப பந்தனங்களை மறப்பீர்கள். வீட்டில் உங்கள் குடும்பத்துடன் வசிக்கையில், நீங்கள் தூய்மையாக வேண்டும். தந்தை கூறுகின்றார்: சதா என்னை மட்டும் நினைவுசெய்யுங்கள், அத்துடன், தெய்வீகக் குணங்களையும் கிரகியுங்கள். இந்தத்தேவர்களைப் போன்று ஆகுங்கள். இது உங்கள் இலக்கும் இலட்சியமும் ஆகும். இலக்ஷ்மியும் நாராயணனும் சுவர்க்க அதிபதிகளாக இருந்தார்கள். அவர்கள் எவ்வாறு அந்த இராச்சியத்தைக் கோரினார்கள்? அவர்கள் பின்னர் எங்கு சென்றார்கள்? எவருக்கும் இது தெரியாது. குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது இத்தெய்வீகக் குணங்களைக்; கிரகிக்க வேண்டும். ஒருபொழுதும் எவருக்கும் துன்பத்தை விளைவிக்காதீர்கள். தந்தை துன்பத்தை அகற்றிச் சந்தோஷத்தை அளிப்பவர்; ஆவார். ஆகவே, நீங்கள் அனைவருக்கும் இந்தச் சந்தோஷத்துக்கான பாதையைக் காட்ட வேண்டும், அதாவது, குருடர்களுக்கான கைத்தடிகளாக வேண்டும். நீங்களும் குருடர்களாக இருந்தீர்கள்;;நீங்கள் குருடர்களின் குழந்தைகளாக இருந்தீர்கள். இப்பொழுது தந்தை உங்களுக்கு ஞானமாகிய மூன்றாவது கண்ணைக் கொடுத்துள்ளார். எவ்வாறு தந்தை அவருடைய பாகத்தை நடிக்கின்றார் என்பதை நீங்கள் இப்பொழுது அறிவீர்கள். இப்பொழுது தந்தை உங்களுக்குக் கற்பிக்கின்ற அனைத்தும் பின்னர் மறைந்து விடும். தேவர்களுக்கு இந்த ஞானம் கிடையாது. பிரம்மாவின் வாய்வழி தோன்றிய குழந்தைகளான, பிராமணர்களாகிய நீங்கள் மட்டுமே,படைப்பவரினதும் படைப்பினதும் ஞானத்தை அறிந்துகொள்கின்றீர்கள். இதை வேறு எவராலும் அறிய முடியாது. இலக்ஷ்மியும் நாராயணனும் இந்த ஞானத்தைக் கொண்டிருந்திருப்பார்கள் எனின், அது மிகவும் ஆதியான காலத்திலிருந்து தொடர்வதாக அர்த்தப்படும். அங்கு, ஞானத்துக்கான அவசியமில்லை, ஏனெனில் அங்கு அனைவரும் சற்கதியின் ஸ்திதியில் இருக்கிறார்கள். இப்பொழுது நீங்கள் அனைத்தையும் தந்தைக்குக் கொடுக்கின்றீர்கள், பின்னர் தந்தை உங்களுக்கு அனைத்தையும் 21 பிறவிகளுக்குக் கொடுக்கின்றார். வேறு எவராலும் அத்தகையதொரு தானத்தைச் செய்ய முடியாது. நீங்கள் அனைத்தையும் கொடுக்க வேண்டும் என்பதை நீங்கள் அறிவீர்கள். பாபா, இவை அனைத்தும் உங்களுக்கு உரியவை ஆகும். நீங்களே எங்களுக்கு அனைத்தும் ஆவீர்கள். நீங்களே தாயும் தந்தையும் ஆவீர்கள். அவர் தனது பாகத்தை நடிக்கின்றார். அவர் குழந்தைகளாகிய எங்களைத் தத்தெடுத்து,பின்னர் அவரே எங்களுக்குக் கற்பிக்கிறார். அதன்பின்னர், அவரே குருவாகி, எங்களைத் திரும்பவும் வீட்டுக்கு அழைத்துச் செல்கிறார். அவர் கூறுகின்றார்: என்னை நினைவுசெய்யுங்கள், நீங்கள் தூய்மையாகுவீர்கள். பின்னர் நான் உங்களைத் திரும்பவும் என்னுடன் வீட்டுக்கு அழைத்துச் செல்வேன். உருவாக்கப்பட்டுள்ள இந்த யாகமானது, சிவனின் ஞான யாகம் ஆகும். இதில் உங்கள் சரீரம், மனம், செல்வத்தை நீங்கள் அர்ப்பணிக்கின்றீர்கள். நீங்கள் சந்தோஷத்தில் அனைத்தையும் அர்ப்பணிக்கின்றீர்கள். ஆத்மாக்கள் மட்டுமே எஞ்சியிருக்கின்றனர். பாபா, நாங்கள் இப்பொழுது உங்கள் ஸ்ரீமத்தை மட்டுமே பின்பற்றுவோம். தந்தை கூறுகிறார்: வீட்டில் உங்கள் குடும்பத்துடன் வசிக்கையில், நீங்கள் தூய்மையாக வேண்டும். ஒருவர் 60 வயதை அடையும்பொழுது, ஓய்வுபெறும் ஸ்திதிக்குள் செல்வதற்கு அவர் முன்னேற்பாடுகளைச் செய்கின்றார். எவ்வாறாயினும், அவர் வீடு திரும்புவதற்கான முன்னேற்பாடுகளை செய்வதில்லை. நீங்கள் இப்பொழுது சத்குருவிடமிருந்து ஒரு மந்திரத்தைப் பெறுகின்றீர்கள்: மன்மனபவ! கடவுள் பேசுகின்றார்: என்னை நினைவுசெய்யுங்கள், உங்கள் பாவங்கள் அழிக்கப்படும். அனைவருக்கும் கூறுங்கள்: இது இப்பொழுது உங்கள் அனைவருக்கும் ஓய்வுபெறும் வயது ஆகும். சிவபாபாவை நினைவுசெய்யுங்கள்! நீங்கள் இப்பொழுது உங்கள் வீட்டுக்குத் திரும்பிச் செல்ல வேண்டும். அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டெடுக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. உங்கள் புத்தியிலிருந்து உங்கள் கலியுகத்துக் கர்ம பந்தனங்கள் அனைத்தையும் அகற்றுவதாலும்,ஐந்து விகாரங்களை தானமளிப்பதாலும்,ஆத்மாவை சதோபிரதான் ஆக்குங்கள். மௌனத்தின் தூய பெருமையை பேணுங்கள்.

2. இந்த உருத்திர யாகத்தில் உங்கள் சரீரம், மனம், செல்வத்தை சந்தோஷத்துடன்,அர்ப்பணிப்பதால், அவற்றை ஒரு தகுதிவாய்ந்த வழியில் பயன்படுத்துங்கள். தற்சமயம்,தந்தைக்கு அனைத்தையும் கொடுத்துத் தந்தையிடமிருந்து 21 பிறவிகளுக்கு உங்கள் இராச்சியத்தைக் கோருங்கள்.

ஆசீர்வாதம்:
நீங்கள் சதா ஆட்ட, அசைக்க முடீயாதவராக இருப்பதுடன் ஒரு கருவி என்ற விழிப்புணர்வுடன் அனைத்துக் கிளர்ச்சிகளையும் முடித்து விடுங்கள்.

நீங்கள் ஒரு கருவியாக இருப்பதை அறிந்திருக்கும் போது,அனைத்துப் பல்வகைநான் மற்றும் எனது என்பவற்றை இலகுவாக முடிக்கின்றீர்கள்.இந்த விழிப்புணர்வு, அனைத்துப் பல்வகைக் கிளர்ச்சிகளில் இருந்து உங்களை விடுவிக்கின்றது. மற்றும்ஆட்ட, அசைக்க முடியாத ஸ்திதியின் அனுபவத்தை உங்களுக்குத் தருகின்றது. நீங்கள் சேவைக்காகக் கஷ்டப்பட்டு உழைக்க வேண்டியதில்லை. ஏனெனில் கருவியாக இருப்பவர்களின் புத்திகள்,அவர்கள் எதைச் செய்தாலும் அவர்களைப் பார்ப்பவர்கள் அதைச் செய்வார்களென அறிந்திருக்கின்றன. சேவைக்குக் கருவியாக இருப்பதென்பது மேடைக்கு வருவதாகும். அனைவரின் பார்வையும் இயல்பாகவே மேடைக்கு இழுக்கப்படுகின்றது. இந்த விழிப்புணர்வு, உங்கள் பாதுகாப்புக்கான ஒரு வழிமுறையாக மாறும்.

சுலோகம்:
அனைத்துச்சூழ்நிலைகளிலிருந்தும் விடுபடுங்கள். நீங்கள் தந்தையாகிய கடவுளின் ஆதரவை அனுபவம் செய்வீர்கள்.