07.05.22        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


இனிய குழந்தைகளே, இப்பொழுது தந்தையைப் போன்று, ஆத்ம உணர்வுடையவர்கள் ஆகுங்கள். குழந்தைகள் தன்னைப் போன்று ஆகி, தன்னுடன் வீடு திரும்ப வேண்டும் என்பதே தந்தையின் ஒரேயொரு விருப்பம் ஆகும்.

கேள்வி:
எந்த அற்புதத்தைப் பார்க்கும்பொழுது, குழந்தைகளாகிய நீங்கள் தந்தைக்கு நன்றி செலுத்துகிறீர்கள்?

பதில்:
பாபா எவ்வாறு தனது கடமையைப் பூர்த்தி செய்கிறார் என்பதே நீங்கள் பார்க்கும் அற்புதம் ஆகும். அவர் தனது குழந்தைகளுக்கு இராஜயோகத்தைக் கற்பித்து, அவர்களைத் தகுதிவாய்ந்தவர்கள் ஆக்குகிறார். அத்தகையதோர் இனிய பாபாவுக்குக் குழந்தைகளாகிய நீங்கள் அகத்தே நன்றி கூறுகிறீர்கள். பாபா கூறுகிறார்: நன்றி என்னும் இவ்வார்த்தை பக்திக்கு உரியதாகும். குழந்தைகளுக்கு ஓர் உரிமை உள்ளது, இதற்காக அவருக்கு நன்றி செலுத்துகின்ற கேள்வியே கிடையாது. நாடகத்துக்கேற்ப தந்தை ஆஸ்தியைக் கொடுக்க வேண்டும்.

பாடல்:
கடவுளின் சகபாடிகளாக உள்ளவர்களைப் புயல்களால் என்னதான் செய்ய முடியும்?

ஓம் சாந்தி.
இப்பாடல் குழந்தைகளுக்கானதாகும். சர்வசக்திவானாகிய பரமாத்மா பரமதந்தையின் சகபாடிகளை மாயையின் புயல்களால் என்ன செய்ய முடியும்? அவை அப்பௌதீகப் புயல்கள் அன்றி, ஆத்மாவின் ஒளியை அணைக்கின்ற மாயையின் புயல்கள் ஆகும். உங்களை விழித்தெழச் செய்கின்ற சகபாடியை நீங்கள் இப்பொழுது கண்டுகொள்வதனால், மாயையினால் என்ன செய்ய முடியும்? இராவணனாகிய மாயையை வெற்றி கொள்கின்ற மகாவீரர் என்னும் தலைப்பு உங்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ளது. நீங்கள் எவ்வாறு வெற்றி அடைவீர்கள்? குழந்தைகளாகிய நீங்கள் பாப்தாதாவின் முன்னிலையில் நேருக்கு நேர் அமர்ந்திருக்கிறீர்கள். பாப்பும் தாதாவும், தந்தையும் மூத்த சகோதரரும் என அழைக்கப்படுகிறார்கள். ஆகவே, அவர்கள் பாப்தாதா ஆவார்கள். ஆன்மீகத் தந்தை உங்கள் முன்னிலையில் அமர்ந்திருக்கிறார் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் புரிந்துகொள்கிறீர்கள். ஆன்மீகத் தந்தை ஆத்மாக்களுடன் பேசுகிறார். ஆத்மாக்கள் பௌதீக அங்கங்களினூடாகச் செவிமடுக்கிறார்கள், அவர்கள் பேசவும் செய்கிறார்கள். குழந்தைகளாகிய நீங்கள் சரீர உணர்வுடையவர்களாக இருக்கும் பழக்கத்தை உருவாக்கியுள்ளீர்கள். கல்பம் முழுவதிலும் நீங்கள் சரீரத்தின் விழிப்புணர்வைக் கொண்டிருந்தீர்கள். நீங்கள் ஒரு சரீரத்தை நீக்கி விட்டு, இன்னுமொன்றைப் பெற்றதனால், பெயரும் மாற்றப்பட்டது. சிலர் பரமானந்த் எனவும், வேறு சிலர் வேறொன்றாகவும் அழைக்கப்படுகிறார்கள். பாபா கூறுகிறார்: நான் அநாதியாகவே ஆத்ம உணர்வுடையவர், நான் எப்பொழுதுமே ஒரு சரீரத்தை எடுப்பதில்லை, ஆகவே நான் ஒருபொழுதுமே சரீரத்தின் விழிப்புணர்வைக் கொண்டிருக்க முடியாது. இச்சரீரம் இந்த தாதாவுக்கு உரியதாகும்; நான் அநாதியாகவே ஆத்ம உணர்வில் இருக்கிறேன். நான் குழந்தைகளாகிய உங்களை என்னைப் போன்று ஆக்க விரும்புகிறேன், ஏனெனில் நீங்கள் இப்பொழுது என்னுடன் திரும்ப வேண்டும். நீங்கள் சரீர உணர்வை நீக்க வேண்டும். இதற்குக் காலம் எடுக்கிறது. சரீர உணர்வுடையவராக இருக்கின்ற பழக்கம் நீண்டகாலமாகவே பதியப்பட்டுள்ளது. இப்பொழுது தந்தை கூறுகிறார்: உங்கள் சரீரத்தை நீக்கிவிட்டு, என்னைப் போன்று ஆகுங்கள், ஏனெனில் நீங்கள் என்னுடைய விருந்தாளிகளாகப் போகின்றவர்கள். நீங்கள் என்னுடன் திரும்பவுள்ளீர்கள். இதனாலேயே நான் கூறுகிறேன்: நீங்கள் ஓர் ஆத்மா என்னும் நம்பிக்கையை முதலில் வைத்திருங்கள். நான் மாத்திரமே இதனை ஆத்மாக்களுக்குக் கூறுகிறேன்: தந்தையை நினைவு செய்யுங்கள், அப்பொழுது, ஏனைய காட்சிகள் முடிவடையும். இதற்கே முயற்சி தேவை. நான் ஆத்மாக்களாகிய உங்களுக்குச் சேவை செய்கிறேன். ஆத்மாவே அங்கங்களினூடாகச் செவிமடுக்கிறார். ஆத்மாவாகிய நான், உங்களுக்கு பாபாவின் செய்தியைக் கொடுக்கிறேன். ஆத்மா தன்னை ஆண் எனவோ அல்லது பெண் எனவோ அழைப்பதில்லை. ஆண், பெண் என்னும் வார்த்தைகள் சரீரத்துக்கே கொடுக்கப்படுகின்றன. அவரே பரமாத்மா ஆவார். தந்தை கூறுகிறார்: ஓ ஆத்மாக்களே, நீங்கள் செவிமடுக்கிறீர்களா? ஆம், நான் செவிமடுக்கிறேன் என ஆத்மா கூறுகிறார். நீங்கள் உங்களுடைய தந்தையை இனங்கண்டு கொள்கிறீர்களா? அவரே ஆத்மாக்கள் அனைவரினதும் தந்தையாவார். நீங்கள் ஓர் ஆத்மா என்பதைப் போன்று, அவ்விதமாகவே, நான் உங்களுடைய தந்தை ஆவேன். அவர் பரமாத்மாவாகிய பரமதந்தை என அழைக்கப்படுகிறார். அவருக்குத் தனக்கெனச் சொந்தமாக ஒரு சரீரம் இல்லை. பிரம்மா, விஷ்ணு, சங்கரருக்கென அவர்களின் சொந்த ரூபங்கள் உள்ளன. ஓர் ஆத்மாவானவர் ஆத்மா எனவே அழைக்கப் படுகிறார், ஆனால் என்னுடைய பெயர் சிவன் ஆகும். சரீரத்துக்குப் பல பெயர்கள் கொடுக்கப்பட்டுள்ளன. நான் ஒரு சரீரத்தைப் பெறுவதில்லை, அதனாலேயே எனக்குச் சரீரப் பெயர் கிடையாது. நீங்கள் சாலிகிராம்கள் ஆவீர்கள். ஆத்மாக்களாகிய நீங்கள் வினவப்படுகிறீர்கள்: ஓ ஆத்மாக்களே, நீங்கள் செவிமடுக்கிறீர்களா? நீங்கள் இப்பொழுது ஆத்ம உணர்வுடையவர்களாக இருக்கின்ற பயிற்சியைக் கொண்டிருக்க வேண்டும். ஓர் ஆத்மா அங்கங்களினூடாகச் செவிமடுத்துப் பேசுகிறார். தந்தை இங்கமர்ந்திருந்து, ஆத்மாக்களுக்கு விளங்கப்படுத்துகிறார். ஆத்மாக்கள் தந்தையை மறந்து விட்ட காரணத்தினால், விவேகமற்றவர்கள் ஆகிவிட்டார்கள். சிவனும் கடவுள், கிருஷ்ணரும் கடவுள் என்பதில்லை. கடவுள் கூழாங்கற்களிலும், கற்களிலும் இருக்கிறார் என அவர்கள் கூறுகிறார்கள். இத்தவறான எண்ணக் கருத்து முழு உலகிலும் பரவியுள்ளது. தாங்கள் தந்தையாகிய கடவுளின் குழந்தைகள் என்பதைப் பலர் ஏற்றுக் கொள்கிறார்கள், இருப்பினும், கடவுள் சர்வவியாவி எனப் பெரும்பான்மையினர் கூறுகிறார்கள். நீங்கள் அந்தப் புதைமணலிலிருந்து அனைவரையும் அகற்ற வேண்டும். முழு உலகமும் ஒருபுறத்தில்; உள்ளது, தந்தை மறுபுறத்தில் உள்ளார். கடவுளே, முழு உலகும் சற்கதியைப் பெறுகின்ற உங்கள் தெய்வீக விளையாட்டு தனித்துவமானது என்பதே, தந்தையின் புகழ் ஆகும். சற்கதியை அருள்பவர் ஒரேயொருவரே ஆவார். சற்கதியைப் பெறுவதற்கு மக்கள் அதிகளவில் பிரயத்தனம் செய்கிறார்கள். முக்தியையும், ஜீன்முக்தியையும் அருள்கின்ற சற்குரு ஒரேயொருவரே ஆவார். இப்பொழுது தந்தை கூறுகிறார்: அச்சாதுக்கள், புனிதர்கள் போன்றோருக்கு சற்கதியை அருள்வதற்கு நான் வர வேண்டும். நானே அனைவருக்கும் சற்கதியை அருள்பவர் ஆவேன். நான் ஆத்மாக்களுடன் பேசுகிறேன். நான் உங்கள் தந்தையாவேன். ஆத்மாக்களாகிய நீங்கள் அனைவரும் என்னுடைய குழந்தைகள் என வேறு எவராலும் கூற முடியாது: கடவுள் சர்வவியாபி என அவர்கள் கூறுவதனால், அவர்களால் ஒருபொழுதும் அதனைக் கூற முடியாது (அனைவரும் என்னுடைய குழந்தைகள்). தந்தையே கூறுகிறார்: பக்தர்களுக்கு பக்தியின் பலனைக் கொடுப்பதற்கு நான் வந்துவிட்டேன். கடவுள் மாத்திரமே பக்தர்களைப் பாதுகாப்பவர் என்பது நினைவு கூரப்படுகிறது. அனைவரும் பக்தர்கள் ஆதலால், நிச்சயமாக, கடவுள் அவர்களிலிருந்து வேறுபட்டவராக இருக்க வேண்டும். பக்தர்கள் கடவுளாக இருந்திருப்பின், அவர்கள் கடவுளை நினைவு செய்யத் தேவையில்லை. அனைவரும் கடவுளைத் தங்கள் சொந்த மொழியில் ஏதோவொன்றாக அழைக்கிறார்கள். எவ்வாறாயினும், அவருடைய மிகச்சரியான பெயர் சிவன் ஆகும். ஒருவர் இன்னுமொரு நபரை அவமரியாதை அல்லது அவதூறு செய்தால், அவருக்கெதிராக ஒரு வழக்கு பதியப்படுகிறது, ஆனால் இது நாடகம் ஆகும், இதனைப் பற்றி எவராலும் எதனையும் கூற முடியாது. நீங்கள் சந்தோஷமற்றவர்கள் ஆகிவிட்டீர்கள் என்பதையும், இதுவும் மீண்டும் நடைபெறும் என்பதையும் தந்தை அறிவார். அதே கீதை, சமயநூல்கள் போன்றவை மீண்டும் வெளிப்படும், ஆனால் கீதை போன்றவற்றைக் கற்பதனால், எவரும் எதனையும் புரிந்துகொள்வதில்லை. சக்தி தேவைப்படுகிறது. ஓ குழந்தைகளே, என்னுடன் யோகம் செய்வதனால், உங்கள் பாவங்கள் அழிக்கப்படும் எனச் சமயநூல்களைக் கற்பவர்களால் எவருக்கும் கூற முடியாது. அவர்கள் கீதையைக் கற்று, அதனைக் கூறுகிறார்கள். நீங்கள் இப்பொழுது அனுபவப்பட்டுள்ளீர்கள். நீங்கள் எவ்வாறு 84 பிறவிகளின் சக்கரத்தைச் சுற்றுகிறீர்கள் என்பதைப் புரிந்துகொள்கிறீர்கள். அதற்குரிய நேரத்துக்கேற்ப, நாடகத்தில் அனைத்தும் நடைபெறுகிறது. தந்தை ஆத்மாக்களாகிய குழந்தைகளுடன் பேசுகிறார்: நான் ஆத்மாக்களுடன் பேசுகிறேன், இந்த ஆத்மாவாகிய நான், இந்த உதடுகளினூடாகப் பேசுகிறேன், ஆத்மாவாகிய நீங்கள் உங்கள் செவிகளினூடாகச் செவிமடுக்கிறீர்கள், நான் ஓர் ஆத்மா என்னும் தந்தையின் செய்தியை நான் கொடுக்கிறேன் என்பதனை எவ்வாறு விளங்கப்படுத்துவது என்பதைக் கற்றுக்கொள்ளுங்கள். இதனை விளங்கப்படுத்துவது மிகவும் இலகுவானதாகும். ஆத்மாவாகிய நீங்கள், ஒரு சரீரத்தை நீக்கி விட்டு, இன்னுமொன்றைப் பெறுகிறீர்கள். ஆத்மா 84 பிறவிகளைப் பூர்த்தி செய்துள்ளார். தந்தை இப்பொழுது கூறுகிறார்: கடவுள் சர்வவியாபியாக இருப்பின், மனித பரமாத்மா என்றே நீங்கள் கூற வேண்டும். அவர்கள் ஏன் பின்னர் மனிதர்களைப் பற்றிப் பேசுகிறார்கள்? நீங்கள் இந்த ஆத்மாவுடன் பேசுகிறீர்கள். என்னுடைய சகோதர ஆத்மாக்களே, நான் 5000 வருடங்களுக்கு முந்திய தந்தையின் செய்தியைக் கூறுகிறேன் என்பதை நீங்கள் புரிந்துகொள்கிறீர்களா? தந்தை கூறுகிறார்: என்னை நினைவு செய்யுங்கள். இது துன்ப பூமி ஆகும். சத்தியயுகமே சந்தோஷ பூமியாகும். ஓ ஆத்மாக்களே, நீங்கள் சந்தோஷ பூமியில் இருந்தீர்கள். நீங்கள் 84 பிறவிகளின் சக்கரத்தைச் சுற்றி வந்தீர்கள். நீங்கள் நிச்சயமாகச் சதோபிரதான், சதோ, ரஜோ, தமோ ஸ்திதிகளினூடாகச் செல்ல வேண்டும். இப்பொழுது எங்களை ஸ்ரீ கிருஷ்ணரின் பூமிக்குத் திரும்பிச் செல்ல அனுமதியுங்கள். அங்கே நீங்கள் என்னவாக ஆக விரும்புவீர்கள்? நீங்கள் ஒரு சக்கரவர்;த்தி அல்லது சக்கரவர்த்தினி ஆகுவீர்களா அல்லது ஒரு வேலையாள் ஆகுவீர்களா? இவ்விதமாக ஆத்மாக்களுடன் பேசுங்கள். அந்த உற்சாகம் இருக்கட்டும். நீங்களே பரமாத்மா என்பதல்ல. பரமாத்மா ஞானக்கடல் ஆவார். அவர் ஒருபொழுதும் ஓர் அறியாமைக்கடலாக ஆகுவதில்லை. நீங்கள் அறியாமைக் கடலாகவும், ஞானக்கடலாகவும் ஆகுகிறீர்கள். தந்தையிடமிருந்து ஞானத்தைப் பெறுவதனால், நீங்கள் மாஸ்டர் கடல்கள் ஆகுகிறீர்கள். உண்மையில், ஒரேயொரு தந்தையே கடல் ஆவார். ஏனைய அனைவரும் ஆறுகள் ஆவார்கள். ஒரு வேறுபாடு உள்ளது. ஆத்மாக்கள் விவேகமற்றவர்கள் ஆகிவிடும்பொழுதே, இவை அனைத்தும் ஆத்மாக்களுக்கு விளங்கப்படுத்தப்படுகின்றது. சுவர்க்கத்தில் இவற்றில் எதுவுமே விளங்கப்படுத்தப்படுவதில்லை. இங்கே, அனைவரும் விவேகமற்றவர்களாகவும், தூய்மையற்றவர்களாகவும், சந்தோஷமற்றவர்களாகவும் உள்ளார்கள். ஏழைகள் மாத்திரமே சௌகரியமாக அமர்ந்திருந்து, இந்த ஞானத்தைப் புரிந்துகொள்கிறார்கள். செல்வந்தர்களுக்குச் சொந்தப் போதை உள்ளது. அரிதாகவே அவர்களில் எவராவது வெளிப்படுவார்கள். அரசர் ஜனகர் அனைத்தையும் கொடுத்தார். இங்கே, அனைவரும் ஜனகர்கள் ஆவார்கள். நீங்கள் ஜீவன்முக்திக்குள் செல்வதற்கு ஞானத்தைப் பெறுகிறீர்கள், ஆகவே நீங்கள் ஆத்மாக்கள் என்பதை நீங்கள் உறுதியாக்க வேண்டும். பாபா, நாங்கள் உங்களுக்கு எவ்வளவுக்கு நன்றி செலுத்த முடியும்? நாடகத்துக்கேற்ப, நீங்கள் ஓர் ஆஸ்தியைக் கொடுத்து, நாங்கள் உங்களுடைய குழந்தைகளாக ஆகவேண்டும். இதில் நன்றி செலுத்துவதற்கு என்ன உள்ளது? நாங்கள் உங்களுடைய வாரிசுகளாக வேண்டும். இதில் நன்றி என்னும் கேள்வியே கிடையாது. தந்தையே வந்து இதனை விளங்கப்படுத்தி, எங்களைத் தகுதிவாய்ந்தவர்கள் ஆக்குகிறார். அவர்கள் புகழ் பாடும்பொழுதே, பக்தி மார்க்கத்தில் நன்றிகள் என்னும் வார்த்தை வெளிப்படுகிறது. தந்தை தனது கடமையைப் பூர்த்தி செய்ய வேண்டும். அவர் சுவர்க்கத்துக்கான பாதையைக் காட்டுவதற்கு மீண்டும் ஒருமுறை வருகிறார். நாடகத்துக்கேற்ப, பாபா இராஜயோகத்தைக் கற்பிப்பதற்கு வர வேண்டும். அவர் ஆஸ்தியைக் கொடுக்க வேண்டும். பின்னர் நீங்கள் உங்களுடைய முயற்சிகளின் அளவுக்கேற்ப சுவர்க்கத்துக்குச் செல்வீர்கள். பாபா உங்களை அனுப்புவார் என்பதல்ல. நீங்கள் செய்துள்ள முயற்சிக்கேற்ப, இயல்பாகவே சுவர்க்கத்துக்குச் செல்வீர்கள். இதில் எனக்கு நன்றி செலுத்துவதற்கு எதுவுமேயில்லை. பாபா காட்டுகின்ற விளையாட்டைப் பார்த்து நீங்கள் இப்பொழுது வியப்படைகிறீர்கள். முன்னர் நாங்கள் இதனை அறிந்திருக்கவில்லை, ஆனால் நாங்கள் இப்பொழுது அதனை அறிவோம். பாபா, நாங்கள் இந்த ஞானத்தை மீண்டும் மறந்து விடுவோமா? ஆம் குழந்தைகளே, இந்த ஞானம் என்னுடைய புத்தியிலிருந்தும், உங்களுடைய புத்தியிலிருந்தும் மறைந்து விடும். பின்னர், ஞானம் கொடுக்கப்பட வேண்டிய காலத்தின்பொழுது, அது வெளிப்படும். நான் இப்பொழுது நிர்வாணா தாமத்துக்குத் திரும்பவுள்ளேன், பின்னர் பக்தி மார்க்கத்தில் நான் எனது பாகத்தை நடிப்பேன். ஆத்மாவில் அச்சம்ஸ்காரங்கள் இயல்பாகவே வெளிப்படுகின்றன. ஒரு கல்பத்தின் பின்னர் இதே சரீரத்தில் வருவேன். இது உங்கள் புத்தியில் உள்ளது, ஆனால், எப்படியிருப்பினும், நீங்கள் ஆத்ம உணர்வில் இருக்க வேண்டும். இல்லாவிட்டால், நீங்கள் சரீர உணர்வில் இருப்பீர்கள். தந்தையையும், ஆஸ்தியையும் நினைவு செய்வதே, பிரதான விடயமாகும். நீங்கள் உங்கள் முயற்சிக்கேற்ப, கல்பம் கல்பமாக உங்கள் ஆஸ்தியைக் கோருகிறீர்கள். இது அத்தகையதோர் இலகு வழியில் உங்களுக்கு விளங்கப்படுத்தப்படுகிறது, ஆனால் அந்த இலக்கை அடைவதற்கு மறைமுகமான முயற்சி தேவையாகும். முதலில் ஓர் ஆத்மா வரும்பொழுது, நிச்சயமாக அவர் ஒரு தூய, சதோபிரதான் ஆத்மாவாக இருக்கிறார். பின்னர் அவர் நிச்சயமாக ஒரு பாவம் செய்யும் தமோபிரதான் ஆத்மாவாக ஆகவேண்டும். நீங்கள் நிச்சயமாகத் தமோபிரதானிலிருந்து சதோபிரதான் ஆகவேண்டும். என்னை நினைவு செய்யுங்கள் என்னும் செய்தியைத் தந்தை கொடுத்துள்ளார். முழுப் படைப்புமே தந்தையிடமிருந்து ஓர் ஆஸ்தியைப் பெறுகிறது. அவரே அனைவருக்கும் சற்கதியை அருள்பவர் ஆவார். அவரே அனைவர் மீதும் இரக்கம் உள்ளவர், அதாவது, அவர் அனைவர் மீதும் கருணை உள்ளவர் ஆவார். சத்தியயுகத்தில் துன்பம் கிடையாது. ஏனைய ஆத்மாக்கள் அனைவரும் சென்று, அமைதி தாமத்தில் வசிக்கிறார்கள். இது இப்பொழுது தீர்வுக்கான காலம் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் புரிந்துகொள்கிறீர்கள். துன்பத்தின் கர்மக்கணக்கு யோகசக்தி மூலம் தீர்க்கப்பட வேண்டும். பின்னர் ஞானத்தினூடாகவும், யோகத்தினூடாகவும் உங்கள் எதிர்காலத்துக்கான சந்தோஷக் கணக்கு சேகரிக்கப்பட வேண்டும். நீங்கள் அதிகளவுக்குச் சேகரிக்கும்பொழுது, அதிகளவு சந்தோஷத்தைப் பெறுவதுடன், அதிகளவு துன்பக் கணக்கும் தீர்க்கப்படுகிறது. இப்பொழுது சக்கரத்தின் சங்கமத்தில் துன்பக் கணக்குகளைத் தீர்ப்பதுடன், மறுபுறத்தில், நாங்கள் சேகரிக்கவும் செய்கிறோம். இது ஒரு வியாபாரமாகும். பாபா ஞான இரத்தினங்களைக் கொடுத்து, உங்களைத் தெய்வீகக் குணங்கள் உடையவராக்குகிறார், ஆனால் அது நீங்கள் ஒவ்வொருவரும் எவ்வளவுக்குக் கிரகிக்கிறீர்கள் என்பதிலேயே தங்கியுள்ளது. ஒவ்வொரு இரத்தினமும் மில்லியன் பெறுமதிவாய்ந்தவை, அவற்றினூடாக நீங்கள் எதிர்காலத்தில் சதா சந்தோஷமானவர்கள் ஆகுகிறீர்கள். இது துன்பபூமி, ஆனால் அதுவோ சந்தோஷ பூமி ஆகும், சுவர்க்கத்தில் சதா சந்தோஷத்தைத் தவிர எதுவுமேயில்லை என்பதைச் சந்நியாசிகள் அறிய மாட்டார்கள். ஒரேயொரு தந்தையே கீதையினூடாகப் பாரதத்தை மிகவும் மேன்மையானதாக ஆக்குகிறார். அம்மக்கள் பல்வேறு சமயநூல்கள் போன்றவற்றைக் கூறுகிறார்கள், இருப்பினும், உலகம் பழையதாக வேண்டும். தேவர்கள் முதலில் இராம இராச்சியத்தில் புதிய உலகில் இருந்தார்கள். தேவர்கள் இப்பொழுது இல்லை. அவர்கள் எங்கே சென்றார்கள்? யார் 84 பிறவிகளை எடுத்தார்? வேறு எவருக்கும் 84 பிறவிகளுக்கான கணக்கு இருக்க முடியாது. நிச்சயமாகத் தேவ தர்மத்துக்குரியவர்களே 84 பிறவிகளை எடுப்பவர்கள் ஆவார்கள். இலக்ஷ்மியும் நாராயணனும் கடவுள் என மக்கள் எண்ணுகிறார்கள். அவர்கள் கூறுகிறார்கள்: நான் எங்கே பார்த்தாலும் உங்களை மாத்திரமே பார்க்கிறேன். அச்சா, சர்வவியாபகம் என்னும் கருத்து மூலம் அவர்கள் சந்தோஷப்படுகிறார்களா? நீண்டகாலமாகவே சர்வவியாபகம் என்னும் எண்ணக் கருத்து தொடர்ந்து வந்துள்ளது, இருப்பினும், பாரதம் ஏழ்மையாற் பீடிக்கப்பட்டு;ள்ள, நரகமாக ஆகியுள்ளது. கடவுள் பக்தியின் பலனைக் கொடுக்க வேண்டும். ஆன்மீக முயற்சி செய்பவர்களாகிய சந்நியாசிகளால் எவ்வாறு பக்தியின் பலனைக் கொடுக்க முடியும்? மனிதர்களால் சற்கதியை அருள்பவர்களாக இருக்க முடியாது. இத்தர்மத்துக்குரியவர்கள் அனைவரும் மீண்டும் வருவார்கள். சந்நியாசி தர்மத்தினுள் மாற்றப்பட்டுள்ளவர்களும் பலர் இருக்கிறார்கள். அவர்களும் வருவார்கள். இவ்விடயங்கள் அனைத்தும் புரிந்துகொள்ளப்பட வேண்டும். பாபா விளங்கப்படுத்துகிறார்: நீங்கள் ஓர் ஆத்மாவாக இருக்கின்ற பயிற்சியைப் பேண வேண்டும். ஆத்மாவின் உதவியுடன் சரீரம் தொழிற்படுகிறது. சரீரம் அழியக்கூடியது, ஆனால் ஆத்மாவோ அழிவற்றவர் ஆவார். இச்சின்னஞ்சிறிய ஆத்மாவில் முழுப் பாகமும் பதியப்பட்டுள்ளது. அது அத்தகையதோர் அற்புதம்! விஞ்ஞானிகள் கூட இதனைப் புரிந்துகொள்வதில்லை. இந்தச் சின்னஞ்சிறிய ஆத்மாவில் ஓர் அமரத்துவமான, அழிவற்ற பாகம் பதியப்பட்டுள்ளது. ஆத்மா அழிவற்றவர், அவருடைய பாகமும் அழிவற்றதாகும். அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. சக்கரங்களின் சங்கமத்தில் யோகசக்தி மூலம் துன்பக் கணக்குகளைத் தீர்த்து, உங்கள் புதிய கணக்கில் சேமியுங்கள். ஞான இரத்தினங்களைக் கிரகித்து, தெய்வீகக்குணங்கள் உடையவர்கள் ஆகுங்கள்.

2. நான் ஓர் ஆத்மா. நான் எனது சகோதரராகிய, ஆத்மாவுடன் பேசுகிறேன். இச்சரீரம் அழியக்கூடியதாகும். பயிற்சி செய்யுங்கள்: நான் எனது சகோதர ஆத்மாவுக்குச் செய்தியைக் கொடுக்கிறேன்.

ஆசீர்வாதம்:
உங்கள் நல்லாசிகளாலும், மேன்மையான நோக்கங்களாலும் அனைவராலும் நேசிக்கப்படுபவர் ஆகி, வெற்றியாளராகவும் வெற்றிமாலையில் கோர்க்கப்படுபவராகவும் ஆகுவீர்களாக.

எந்த ஒரு நோக்கத்துடன் யார் எதனைக் கூறினாலும் அல்லது அவர்கள் உங்களுடன் எவ்வாறு பழகினாலும், நீங்கள் ஒவ்வொருவர் மீதும் எப்பொழுதும் நல்லாசிகள் கொண்டிருப்பவராகவும், மேன்மையான நோக்கங்கள் உடையராகவும் இருக்க வேண்டும். இதில் நீங்கள் வெற்றியாளர் ஆகினால், நீங்கள் மாலையில் கோர்க்கப்படும் உரிமையை பெறுவீர்கள். ஏனெனில், அனைவராலும் நேசிக்கப்படுவதற்கான வழி, உங்கள் உறவுமுறையிலும் தொடர்பிலுமுள்ள ஒவ்வொருவர் மீதும் மேன்மையான உணர்வுகளைக் கொண்டிருப்பதாகும். அத்தகைய மேன்மையான நோக்கங்களைக் கொண்டிருப்பவர்கள் சதா அனைவருக்கும் சந்தோஷத்தைக் கொடுத்து சந்தோஷத்தைப் பெறுவார்கள். இதுவும் சேவை செய்வதும், நல்லாசிகள் கொண்டிருந்து உங்கள் மனதினூடாக சேவை செய்வதற்கான மேன்மையான வழியுமாகும். அத்தகைய சேவை செய்பவர்கள், வெற்றி மாலையின் முத்துகள் ஆகுகின்றார்கள்.

சுலோகம்:
செயல்களில் யோகத்தை அனுபவம் செய்வதே ஒரு கர்மயோகியாக இருப்பதாகும்.