07.06.22        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


இனிய குழந்தைகளே, தந்தையின் அறிமுகத்தை எவ்வாறு நீங்கள் அனைவருக்கும் கொடுக்கலாம் என்பது பற்றிய அக்கறையையே இரவுபகலாகக் கொண்டிருங்கள். தந்தை மகனை வெளிக்காட்டுகின்றார், மகன் தந்தையை வெளிக்காட்டுகின்றார்; இதற்கு மாத்திரமே உங்கள் புத்தியைப் பயன்படுத்துங்கள்.

கேள்வி:
இந்த ஞானம் சற்றேனும் வீணாகாமலிருப்பதற்கு, நீங்கள் எதில் கவனம் செலுத்த வேண்டும்?

பதில்:
இந்த ஞானச் செல்வத்தைக் கொடுப்பதற்கு முன்னர், ஒருவர் எங்கள் பிராமணக் குலத்திற்கு உரியவரா என நாடித் துடிப்பை அறிந்துகொள்ளுங்கள். சிவபாபாவின் அல்லது தேவர்களின் பக்தர்களுக்கு ஞானச் செல்வத்தைக் கொடுப்பதற்கு முயற்சி செய்யுங்கள். அனைவரும் இந்த ஞானத்தைப் புரிந்துகொள்ள மாட்டார்கள். சூத்திரர்களிலிருந்து பிராமணர்களாக மாறப் போகின்றவர்கள் மாத்திரமே இதனைப் புரிந்துகொள்வார்கள். நீங்கள் குறைந்தபட்சம் ஒரு விடயத்தையேனும் அனைவருக்கும் கூறுவதற்கு முயற்சி செய்ய வேண்டும்: ஓரேயொரு தந்தையே அனைவருக்கும் சற்கதி அருள்பவர். அவர் கூறுகிறார்: சரீரமற்றவராகி, என்னை நினைவுசெய்யுங்கள், உங்கள் படகு அக்கரை செல்லும்.

பாடல்:
ஓம் நமசிவாய.

ஓம் சாந்தி.
தந்தை இங்கமர்ந்திருந்து, குழந்தைகளுக்கு விளங்கப்படுத்துகிறார். இரு தந்தையரும் பிரசன்னமாக உள்ளனர். விளங்கப்படுத்துபவர் அந்தத் தந்தையாகவோ, இந்தத் தந்தையாகவோ இருந்நதாலும், தந்தையே இங்கமர்ந்திருந்து விளங்கப்படுத்துகின்றார். நீங்கள் மௌனமாக பாபாவின் நினைவில் அமர்ந்திருக்கும்பொழுது, அதுவே உண்மையான அமைதி என அறியப்படுகின்றது. இதுவே உடனடிப் பலனைத் தருகின்ற, உண்மையான அமைதியாகும்; ஏனையவை போலியானவை. சுயத்தின் ஆதி தர்மத்தை நீங்கள் அறிய மாட்டீர்கள். ஆத்மாக்கள் தங்களது பரமாத்மாவான பரமதந்தையை அறியார்கள், எனவே, வேறு எவரால் அமைதியையும், சக்தியையும் வழங்க முடியும்? தந்தை மாத்திரமே அமைதியை அருள்பவர். எனவே, தந்தை கூறுகின்றார்: குழந்தைகளே, சரீரமற்றவர் ஆகுங்கள், உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதியவாறு அமர்ந்திருங்கள். நீங்கள் அழிவற்றவர். உங்கள் ஆதிதர்மத்தில் நிலைத்திருங்கள். வேறு எவருமே இவ்வாறு அமர்ந்திருப்பதில்லை. நிச்சயமாக ஆத்மாக்கள் ஒரு சரீரத்தை நீக்கி, இன்னொன்றை எடுக்கிறார்கள். ஒரேயொரு பரமாத்மா பரமதந்தையே உள்ளார். அவரது புகழ் மிகவும் மகத்தானது. அவரே தந்தை, அவர் சர்வவியாபகரல்ல. உங்களால் இந்த ஒரு விடயத்தை நிரூபிக்க முடியுமாயின், அதுவே உங்கள் வெற்றியாகும். கீதையின் கடவுள் யாரென்பதையும் இது நிரூபிக்கும். உங்களுக்குப் பல கருத்துக்கள் கொடுக்கப்பட்டுள்ளன. சற்குரு அமரத்துவமானவர் என்றும், அவர் அமரத்துவ ரூபமானவர் என்றும் சீக்கியர்களும் கூறுகின்றனர். அத்துடன், அவர் விடுதலையளிப்பவர் என்றும், அனைவருக்கும் சற்கதியருள்பவர் என்றும் கூறப்படுகின்றது. அவர் வந்து, எங்களைத் துன்பத்திலிருந்து விடுவிக்கின்றார். தந்தை மாத்திரமே தூய்மையாக்குபவரும் ஆவார். நீங்கள் எப்பொழுதும் இத்தகைய கருத்துக்களைக் கடைய வேண்டும். தந்தை மறக்கப்பட்டு விட்டதாலேயே அனைவரும் சீரழிந்துள்ளனர். ஒரேயொருவரே கடவுள், எனவே, வேறு எவரையும் கடவுள் என அழைக்க முடியாது. சூட்சுமலோக வாசிகளையும் கடவுள் என அழைக்க முடியாது. ஓரேயொருவரே அதிமேலான கடவுள் ஆவார். இங்கே, இது மறுபிறவி எடுக்கின்ற மனிதர்களின் உலகமாகும். பரமாத்மா பரமதந்தை மறுபிறவி எடுப்பதில்லை. அப்பொழுது கடவுள் பூனைகள், நாய்கள் போன்றவற்றில் இருக்கின்றார் என எவ்வாறு உங்களால் கூற முடியும்? நீங்கள் எவ்வாறு தந்தையின் அறிமுகத்தை அனைவருக்கும் கொடுக்கலாம் என்பதே நாள் முழுவதும் உங்கள் புத்தியில் நிலைத்திருக்க வேண்டும். எவ்வாறு அனைவருக்கும் பாதையைக் காண்பிக்கலாம் என்பது பற்றியே இரவுபகலாக நீங்கள் அக்கறை கொண்டிருக்க வேண்டும். ஒரேயொருவர் மாத்திரமே தூய்மையற்றவர்கள் அனைவரையும் தூய்மையாக்குகின்றார். அப்பொழுது கீதையின் கடவுளும் நிரூபிக்கப்படுவார். குழந்தைகளாகிய நீங்கள் மாத்திரமே வெற்றியாளர்களாக இருப்பீர்கள், ஆனால் நீங்கள் முயற்சி செய்தால் மாத்திரமே அது நிகழும். யானைப் படையினரும், குதிரைப் படையினரும், காலாற் படையினரும் உள்ளனர். பாரதம் மாத்திரமே தந்தையிடமிருந்து ஆஸ்தியைப் பெற்றது என்றும், பின்னர் அது அபகரிக்கப்பட்டது என்றும் குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது புரிந்துகொள்கின்றீர்கள். தந்தை இப்பொழுது அதை மீண்டும் ஒரு தடவை உங்களுக்குத் திரும்பவும் கொடுக்கின்றார். தந்தை பாரதத்திற்கு மாத்திரமே வருகின்றார். இப்பொழுது இருக்கின்ற சமயங்கள் யாவும் அழிக்கப்பட்டு, பின்னர் அது சத்திய யுகமாக இருக்கும். துன்பக் கூக்குரலின் பின்னர், வெற்றி இருக்கும். துன்ப வேளையின்பொழுது, மக்கள் இராமரைக் (கடவுள்) கூவியழைக்கின்றனர். அவர்கள் கூறுகின்றனர்: இராமரின் (கடவுள்) பெயரில் ஒரு தானம் கொடுங்கள். இதைப் பற்றிய சுலோகங்களும் (வாசகங்கள்) உள்ளன. சீக்கியர்களும் அமரத்துவ சிம்மாசனத்தைப் பற்றிப் பேசுவது மிகவும் பிரபல்யமாக உள்ளது. குழந்தைகளாகிய உங்களின் சிம்மாசனம் என்ன? ஆத்மாக்களாகிய நீங்கள் இப்பொழுது அமரத்துவ ரூபங்கள். மரணம் ஒருபொழுதும் உங்களை நெருங்க முடியாது. இச்சரீரங்கள் அழிந்து விடும். அமரத்துவ சிம்மாசனம் அமிர்தசரசில் இருப்பதாக அவர்கள் நினைக்கின்றனர். எவ்வாறாயினும், பிரம்ம தத்துவமே அமரத்துவ சிம்மாசனமாகும். ஆத்மாக்களாகிய நாங்கள் அவ்விடத்து வாசிகள். பாபா, உங்கள் சிம்மாசனத்தை விட்டுக் கீழிறங்கி வாருங்கள் என்றும் பாடப்படுகின்றது. அது அனைவருக்குமான அமைதி சிம்மாசனம், ஆனால் இராச்சிய சிம்மாசனம் அனைவருக்குமானது அல்ல. பாபாவின் சிம்மாசனமே எங்கள் சிம்மாசனமாகும். நாங்கள் எங்களுடைய பாகங்களை நடிப்பதற்காக அங்கிருந்து வருகிறோம்; இல்லாவிடில், ஆகாயத்தை விட்டு இறங்கி வருதல் என்ற கேள்வியே இருக்காது. எவருக்கு, எவ்வாறு நாங்கள் தந்தையின் அறிமுகத்தைக் கொடுக்கலாம் என்பதற்கே குழந்;;தைகளாகிய நீங்கள் உங்கள் புத்தியைப் பயன்படுத்த வேண்டும். தந்தை மகனை வெளிக்காட்டுகிறார். மகன் தந்தையை வெளிக்காட்டுகிறான்;. எங்கள் பாபா யார்? அவரின் எந்தச் செல்வத்திற்கும், அவரின் எந்தச் சொத்திற்கும் நாங்கள் அதிபதிகள் ஆகுகின்றோம்? இவை அனைத்தும் உங்கள் புத்தியில் உள்ளது. தந்தையின் அறிமுகமே பிரதான விடயம். சகல குழப்பங்களும் இதைப் பற்றியதே; முழு நாடகமும் இந்த ஒரு தவறை அடிப்படையாகக்; கொண்;டதாகும். இராவணனே உங்களை இத்தவறைச் செய்ய வைக்கிறான். சத்திய யுகத்தில் நீங்கள் ஆத்ம உணர்வில் இருக்கின்றீர்கள். நாங்கள் ஆத்மாக்கள். எவ்வாறாயினும், பரமாத்மாவான பரமதந்;;தையை எங்களுக்குத் தெரியும் என எங்களால் அங்கே கூறமுடியாது. இல்லை, அங்கே சந்தோஷமே இருக்கும். துன்ப வேளையின்பொழுதே அனைவரும் கடவுளை நினைவுசெய்கின்றனர். பக்தி மார்க்கம் முடிவடைந்து, ஞான மார்க்கம் ஆரம்பித்து விட்டது. நீங்கள் ஆஸ்தியைப் பெற்றிருப்பீர்கள் (எதிர்காலத்தில்), எனவே, நீங்கள் ஏன் கடவுளை அங்கே நினைவுசெய்ய வேண்டும்? நீங்கள் கல்பம் கல்பமாக ஆஸ்தியைப் பெறுகிறீர்கள். இந்நாடகம் அவ்விதமாகவே உருவாக்கப்பட்டுள்ளது. எவருக்கும் தந்தையைத் தெரியாது. தந்தை இப்பொழுது குழந்தைகளாகிய உங்களுக்குத் தன்னை அறிமுகப்படுத்தியுள்ளார். இவ்விடயங்களையே உங்கள் புத்தி இரவுபகலாகக் கடைய வேண்டும். இது புத்திக்கான உணவாகும்: தந்தையின் அறிமுகம் எவ்வாறு அனைவருக்கும் கொடுக்கப்பட முடியும்? தந்தையின் மறு அவதாரம் ஒன்று மாத்திரமே நினைவுகூரப்படுகிறது. அவர் தூய்மையற்றவர்களைத் தூய்மையாக்குவதற்குக் கலியுக இறுதியினதும், சத்திய யுகத்தின் ஆரம்பத்தினதும் சங்கமத்தில் நிச்சயமாக வருவார் என்பதை நீங்கள் புரிந்துகொள்கின்றீர்கள். கீதையே பிரதானமான சமயநூலாகும். கீதையின் மூலமே உங்களால் வைரங்களைப் போலாக முடியும். ஏனைய அனைத்துச் சமயநூல்களும் கீதையின் குழந்தைகளாகும். அவற்றிலிருந்து உங்களால் ஓர் ஆஸ்தியைப் பெற முடியாது. கீதையே அனைத்திலும் அதியுயர்ந்த இரத்தினமாகும். ஸ்ரீமத் பிரபல்யமானது. ஸ்ரீ என்றால் அதிமேலானதாகும். உருத்திர ஸ்ரீ ஸ்ரீ 108ன் மணிமாலையும் உள்ளது. இதுவே சிவபாபாவின் மாலையாகும். அவரே சகல ஆத்மாக்களினதும் தந்தை என நீங்கள் புரிந்துகொள்கிறீர்கள். அனைவரும் பாபா, பாபா என அவரைக் கூவியழைக்கின்றனர். அவர்கள் பாபாவினால் உருவாக்கப்பட்டுள்ள படைப்புக்கள். எவராலும் இதனைப் புரிந்துகொள்ள முடியாது. பாபா கூறுகிறார்: நான் உங்களுக்குப் பெரும் சிரமத்தைக் கொடுப்பதில்லை. நீங்கள் தந்தையை மறந்ததாலேயே வீழ்ந்தீர்கள். நீங்கள் அவரை இனங்கண்டு கொள்ள வேண்டும். நீங்கள் இப்பொழுது காரிருளிலிருந்து பேரொளிக்குள் வந்துள்ளீர்கள். நீங்கள் ஞான நடனம் ஆடவேண்டும். மீரா பக்தி நடனம் ஆடினார். ஆனால் அதில் எந்த அர்த்தமும் இல்லை. மக்கள் வியாசரைக் கடவுள் என்று கூறுகின்றனர், ஆனால் கீதையைப் பேசுகின்ற தந்தையே வியாசர் என்று குறிப்பிடப்படுகின்றார். நீங்கள் எவருக்கும் இதனை நிரூபிக்கலாம்: ஒரேயொரு பாபாவே இருக்கிறார், நாங்கள் அவரிடமிருந்து மாத்திரமே எங்கள் ஆஸ்தியைப் பெறுகின்றோம். பாரதத்திற்குச் சுவர்க்க ஆஸ்தியை வழங்க யாரால் முடியும்? தந்தையைத் தவிர, எவராலுமே சுவர்க்கத்தை ஸ்தாபிக்க முடியாது. அனைவரையும் விடுதலையாக்குவது ஒரேயொரு தந்தையின் பணியே ஆகும். போப்பாண்டவர் கூறுகிறார்: ஏகத்துவம் (ழநெநௌள) இருக்க வேண்டும், ஆனால், அது எவ்வாறு சாத்தியம்? நாங்கள் அனைவரும் இப்பொழுது ஒரேயொருவருக்கே உரியவர்கள். ஆகவே நாங்கள் அனைவரும் எவ்வாறு சகோதர, சகோதரிகளாக இருக்கின்றோம்? இதுவும் புரிந்துகொள்ளப்பட வேண்டும். ஏகத்துவம் எனில் தந்தைத்துவம் இருப்பதாகும். எனவே, இங்கே அனைவரும் சகோதரர்களே. முழு உலகும் கூறுகின்றது: ஓ, தந்தையாகிய கடவுளே, எங்கள் மீது கருணை காட்டுங்கள்! ஆகவே, நிச்சயமாகக் கருணையற்ற ஒருவரும் இருக்க வேண்டும். கருணையற்றவர் யார் என அவர்கள் புரிந்துகொள்வதில்லை. ஒரேயொரு தந்தை மாத்திரமே கருணை கொண்டவர். மக்கள் எரித்து வருகின்ற இராவணன் கருணையற்றவன், ஆனால் அவன் எரிவதில்லை. ஓர் எதிரி மரணித்து விட்டானாயின், அவனை மீண்டும் மீண்டும் எரிக்க வேண்டிய அவசியமில்லை. தாங்கள் தொடர்ந்தும் என்ன செய்கிறார்கள் என்று எவருமே புரிந்துகொள்வதில்லை. முன்னர் நீங்களும் காரிருளினுள் இருந்தீர்கள், இப்பொழுது நீங்கள் இருளில் இல்லை. ஆகவே, ஒரேயொரு தந்தையால் மாத்திரமே பாரதத்தைச் சந்தோஷ பூமியாக்க முடியும் என்று எவ்வாறு மக்களுக்கு விளங்கப்படுத்தலாம்? பாபாவின் அறிமுகம் கொடுக்கப்பட வேண்டும். அனைவரும் இதனைப் புரிந்துகொள்ள மாட்டார்களாயினும், இதுவும் விளங்கப்படுத்தப்பட வேண்டும். சூத்திரர்களிலிருந்து பிராமணர்கள் மாறவுள்ளவர்களே இதனைப் புரிந்துகொள்வார்கள். பாபா கூறுகிறார்: எனது பக்தர்களுக்கு இந்த ஞானத்தைக் கொடுப்பதற்கு முயற்சி செய்யுங்கள். இந்த ஞானச் செல்வத்தை வீணாக்காதீர்கள். தேவர்களின் பக்தர்கள் நிச்சயமாகத் தேவ குலத்திற்கு உரியவர்கள். ஒரேயொரு தந்தையே அதிமேலானவர். அனைவரும் அவரை நினைவு செய்கிறார்கள். இவரே சிவபாபா. தந்தையிடமிருந்தே ஆஸ்தி பெறப்பட வேண்டும். நற்செயல்;களைச் செய்து விட்டுச் சென்றவர்கள் பூஜிக்கப்படுகிறார்கள். இங்கு, கலியுகத்திலே அசுர கட்டளைகள் மாத்திரமே இருப்பதால், எவராலும் நற்செயல்களைச் செய்ய முடிவதில்லை. இங்கே சந்தோஷம் எங்கே இருக்கின்றது? தந்தை மிகத் தெளிவாக விளங்கப்படுத்துகிறார், ஆயினும், நீங்கள் மற்றவர்களுக்குத் தந்தையின் அறிமுகத்தைக் கொடுக்கும்பொழுதே அது அவர்களின் புத்தியில் பதியும். அவரே தந்தையும், ஆசிரியரும், அத்துடன் சற்குருவும் ஆவார். அவருக்குத் தந்தையோ அல்லது ஆசிரியரோ கிடையாது. முதலாவதாக அவரே தாயும் தந்தையுமாக இருக்கிறார், பின்னர் ஆசிரியராகி, அதன்பின்னர் சற்கதியை அருள்வதற்காக குருவும் ஆகுகிறார். இது ஓர் அற்புதமே! ஒரேயொருவரே எல்லையற்ற தந்தை; அவரே தந்தையும், ஆசிரியரும், சற்குருவும் ஆவார். தந்;தையே அதிமேலானவர் என நீங்கள் புரிந்துகொள்கிறீர்கள். அவரே சுவர்க்க ஆஸ்தியைப் பாரதத்திற்குக் கொடுப்பவர். நரகத்தின் பின்னர் சுவர்க்கம் இருக்க வேண்டும். விநாசச் சுவாலைகள் நரகத்தின் விநாசத்திற்காக ஏற்கனவே தயாராகி விட்டன. ஹோலிப் பண்டிகையின்பொழுது, அவர்கள் ஒரு முகமூடியை அணிந்து, ஒருவரையொருவர் பரிகசிக்கும் முகமாக கேட்பார்கள்: சுவாமிஜி, இவரின் வயிற்றிருந்து என்ன வெளிவரப் போகின்றது? நிச்சயமாக, ஜரோப்பியர்களான யாதவர்களின் புத்தியிலேயே இந்த விஞ்;ஞானக் கண்டுபிடிப்புக்களில் பல வெளிப்பட்டுள்ளதைக் காண முடிகின்றது. நீங்கள் இந்த ஒரு விடயத்தை மாத்திரம் விளங்கப்படுத்த முயற்சி செய்ய வேண்டும்: ஒரேயொரு தந்தையே சற்கதி அருள்பவர். தந்தை பாரதத்திற்கு மாத்திரமே வருகிறார். இதுவே அதிமகத்தான யாத்திரைத் தலமாகும். பாரதம் புராதன தேசமாக இருந்தது என அவர்கள் கூறுகின்றனர், ஆனால் அவர்கள் எதனையும் புரிந்துகொள்வதில்லை. புராதனமாக இருந்த ஒன்று மீண்டும் அவ்வாறே ஆகும் என நீங்கள் இப்பொழுது புரிந்துகொள்கிறீர்கள். நீங்கள் இராஜயோகத்தைக் கற்றீர்கள், அதனை இப்பொழுது மீண்டும் ஒருமுறை கற்கிறீர்கள். பாபா கல்பம் கல்பமாக இந்த ஞானத்தை எங்களுக்குக் கொடுக்கிறார் என்பது உங்கள் புத்தியில் உள்ளது. சிவனுக்குப் பல பெயர்கள் கொடுக்கப்பட்டுள்ளன. பபுல்;நாதருக்கும் ஆலயம் உள்ளது. முட்களை மலர்களாக மாற்றுபவரே பபுல்நாதர் எனப்படுகிறார். அத்தகைய பல பெயர்கள் உள்ளன் அவற்றின் அர்த்தங்களை உங்களால் விளங்கப்படுத்த முடியும். ஆகவே முதலில், அனைவரும் மறந்துவிட்ட தந்தையின் அறிமுகத்தைக் கொடுங்கள். அவர்கள் முதலில் தந்தையை அறிந்துகொண்டால், பின்னர் அவர்களின் புத்தியானது யோகம் செய்ய முடியும். நீங்கள் தந்தையிடமிருந்து உங்கள் ஆஸ்தியைப் பெற வேண்டும். நீங்கள் முக்தி தாமத்திலிருந்து ஜீவன்முக்தி தாமத்திற்குச் செல்ல இருக்கின்றீர்கள். இது தூய்மையற்ற பந்தன வாழ்க்கை. பாபா கூறுகிறார்: சரீரமற்றவர்கள் ஆகுங்கள்! சரீரமற்றவர்களாகி, தந்தையை நினைவுசெய்யுங்கள்! இதனைச் செய்வதன் மூலமே உங்கள் படகு அக்கரைக்குச் செல்லும்;. ஒரேயொருவரே ஆத்மாக்கள் அனைவரதும் தந்;;தை. தந்தையின் கட்டளை: என்;னை நினைவுசெய்யுங்கள்;, ஏனெனில் இந்த யோகத்தின் மூலம் உங்கள் பாவங்கள் அழிக்கப்பட்டு, உங்கள் இறுதி எண்;ணங்கள் உங்களது இலக்கிற்கு உங்களை இட்டுச் செல்லும். நாங்கள் வீடு திரும்ப வேண்டும். இயன்றவரை விரைவாகத் திரும்பிச் செல்லுங்கள். எவ்வாறாயினும், இது விரைவாக நடைபெற முடியாது. நீங்கள் ஓர் உயர்ந்த அந்தஸ்தைப் பெற விரும்பினால், பாபாவை நினைவுசெய்ய வேண்டும். நாங்கள் ஒரேயொரு தந்தையின் குழந்தைகள். தந்தை இப்பொழுது கூறுகிறார்: மன்மனாபவ! கிருஷ்;ணர் இவ்வாறு கூறுவதில்லை. கிருஷ்ணர் எங்கே? பிரஜாபிதா பிரம்மா மூலம் தந்தையான பரமாத்மா பரமதந்தையே ஸ்தாபனையை மேற்கொள்கின்றார். ஆகவே, அவர் நிச்சயமாக இங்கே வர வேண்டும். இது தூய்மையற்ற பௌதீக உலகமாகும், ஆனால், அதுவோ தூய உலகமாகும். தூய்மையற்ற உலகில் தூய்மையானவர்கள் எவருமே இருக்க முடியாது. விருட்சப் படத்தில் பிரம்மா உச்சியில் நிற்பதாகக் காட்டப்பட்டுள்ளார், அத்துடன் கீழே இவர் (பிரம்மா) தபஸ்யா செய்வதாகவும் காட்டப்பட்டுள்ளார். சூட்சும உலகில் இவரின் முகச்சாயல்களைக் காணலாம். இவர் ஒரு தேவதை ஆகுகின்றார். தற்;சமயம், ஸ்ரீ கிருஷ்ணர் அவலட்சணமானவராக இருக்கிறார். நீங்கள் முதலாவது விடயத்;தை விளங்கப்படுத்தும்வரை வேறு எதுவுமே புரிந்துகொள்ளப்பட மாட்டாது. இதற்கே முயற்சி தேவை. தந்தையை நினைவுசெய்வதை மாயை மிக விரைவாகவே உங்களை மறக்கச் செய்கிறாள். சிலர் நம்பிக்கையுடன் எழுதுகிறார்கள்: நாங்கள் நிச்சயமாக நாராயணனின் அந்தஸ்தைப் பெறுவோம். ஆனால் அவர்கள் மறந்து விடுகிறார்கள். மாயை மிகவும் சக்திசாலி. மாயை எத்தனை புயல்களைக் கொண்டு வந்தாலும், நீங்கள் அசையவே கூடாது. அதுவே இறுதி ஸ்திதியாகும். மாயை உங்களுடன் மிகப் பலமாக யுத்தம் செய்வாள். ஆடுகளைப்; போன்று இருப்பவர்களை அவள் உடனடியாகவே வீழச் செய்வாள். நீங்கள் பயப்படக்கூடாது. நோய் குணமடைவதற்கு, முன்னர் அது பலமுடன் வெளியில் வரும் என ஆயுர்வேத மருத்துவர்கள் கூறுகின்றனர். மாயையின் புயல்கள் பல வரும். நீங்கள் மிகவும் உறுதியானவர்களாகியதும், மாயையிடமிருந்து வருகின்ற அழுத்தம் குறைவடையும். நீங்கள் அசையவே மாட்டீர்கள் என்று அவள் புரிந்துகொள்வாள். பாபா மாத்திரமே வந்து, உங்களைக் கல்லுப்புத்தி உடையவர்களிலிருந்து, தெய்வீகப் புத்தி கொண்டவர்களாக மாற்றுகிறார். இது மிகவும் களிப்பூட்டுகின்ற ஞானமாகும். பாரதத்தின் புராதன யோகம் நினைவுகூரப்படுகிறது. நீங்கள் மாத்திரமே இதனைப் புரிந்துகொள்கிறீர்கள். அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தந்தை தாயாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. சரீரமற்றவர்களாகி, தந்தையை நினைவுசெய்யுங்கள். உங்கள் ஆதிதர்மத்தில் ஸ்திரமாக இருப்பதைப் பயிற்சி செய்யுங்கள். ஞான நடனமாடி, பிறரையும் ஆடச் செய்யுங்கள்.

2. மாயையின் புயல்களால் அசைக்கப்படாதீர்கள்; பயப்படாதீர்கள். உறுதியானவர்களாகி மாயையின் அழுத்தத்தை முடித்து விடுங்கள்.

ஆசீர்வாதம்:
நீங்கள் சர்வசக்திவானாக இருந்து, உங்கள் பொறுப்புக்கள் அனைத்தையும் தந்தையிடம் கையளித்து, ஆத்மாக்களுக்குச் சேவை செய்கின்ற விளையாட்டை விளையாடுவீர்களாக.

எந்தப் பணியை மேற்கொள்ளும்பொழுதும், சர்வசக்திவான் தந்தையே உங்கள் சகபாடி என்பதையும், நீங்கள் ஒரு மாஸ்டர் சரவசசக்திவான் என்பதையும் சதா அறிந்திருங்கள், அப்பொழுது நீங்கள் எவ்விதமான சுமையையும் கொண்டிருக்க மாட்டீர்கள். எதனையேனும் உங்கள் பொறுப்பு என்று நீங்கள் கருதும்பொழுதே, உங்கள் தலை சுமை ஆகுகின்றது. இதனாலேயே, பிராமண வாழ்வில், உங்கள் பொறுப்புக்கள் அனைத்தையும் தந்தையிடம் கையளிக்கும்பொழுது, நீங்கள் செய்கின்ற சேவையானது ஒரு விளையாட்டாக அனுபவம் செய்யப்படும். உங்கள் மனதில் எவ்வளவு பெரிய பணி இருந்தாலும், நீங்கள் எந்தளவு கவனத்தைச் செலுத்த வேண்டியிருந்தாலும் பரவாயில்லை, ஒரு மாஸ்டர் சர்வசக்திவானாக ஆசீர்வதிக்கப்படுவதால், நீங்கள் களைப்பற்றவராக இருப்பீர்கள்.

சுலோகம்:
முரளிதரரின் முரளி மூலம் தங்கள் சரீரங்களின் விழிப்புணர்வையும் மறந்து, சந்தோஷ ஊஞ்சலில் ஊஞ்சலாடுபவர்களே, உண்மையான கோப, கோபியர் ஆவர்.