07.07.20        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்:
இனிய குழந்தைகளே, முயற்சி செய்து தெய்வீகக் குணங்களை மிக நன்றாகக் கிரகியுங்கள். என்றுமே எவருக்கும் துன்பம் விளைவிக்காதீர்கள். நீங்கள் அசுரத்தனமான செயற்பாடுகள் எதனையும் கொண்டிருக்கக்கூடாது.

கேள்வி:
உங்கள் அலங்காரத்தை எந்த அசுர குணங்கள் சீர்குலைக்கின்றன?

பதில்:
உங்களுக்குக்கிடையில் சண்டை சச்சரவுகளில் ஈடுபடுதல், முகம்கோணுதல், உங்கள் நிலையத்தில் குழப்பங்களை உருவாக்கித் துன்பத்தை விளைவித்தல் போன்ற அசுர குணங்கள் உங்கள் அலங்காரத்தைச் சீர்குலைக்கின்றன. தந்தைக்குச் சொந்தமாகிய பின்னரும், அந்த அசுர குணங்களைத் துறக்காமல், தொடர்ந்தும் தவறாகச் செயற்படுகின்ற குழந்தைகள் பெரும் இழப்பினால் வேதனைப்படுகின்றார்கள். கணக்கு, கணக்குத்தான்! தந்தையுடன் தர்மராஜும் உள்ளார்.

பாடல்:
கள்ளங்கபடமற்ற பிரபுவைப் போன்று தனித்துவமானவர் எவரும் இல்லை.

ஓம் சாந்தி.
கடவுளே அதிமேலானவர் என்பதை ஆன்மீகக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். மக்கள் இதனைப் பற்றிய பாடல்களைப் பாடுகின்றார்கள். ஆனால் நீங்கள் இதனைத் தெய்வீகக் காட்சிகளில் காண்கின்றீர்கள். அவரே உங்களுக்குக் கற்பிக்கின்றார் என்பது உங்கள் புத்திக்குப்; புரிகின்றது. ஆத்மாக்களே தங்கள் சரீரங்களினூடாகக் கற்கின்றனர். ஆத்மாக்களே சரீரங்களினூடாக அனைத்தையும் செய்கின்றனர். ஓர் ஆத்மா தனது பாகத்தை நடிப்பதற்கு, ஓர் அழியும் சரீரத்தை ஏற்கின்றார். ஒவ்வோர் ஆத்மாவிலும் முழுப் பாகமும் பதியப்பட்டுள்ளது. 84 பிறவிகளும் ஆத்மாவிலேயே பதியப்பட்டுள்ளன. அனைத்திற்கும் முதலில் உங்களை ஆத்மாக்களாகக் கருதுங்கள். தந்தையே சர்வசக்திவான்;. குழந்தைகளாகிய நீங்கள் அவரிடமிருந்து சக்தியைப் பெறுகின்றீர்கள். யோகம் செய்வதனால் நீங்கள் அதிகளவு சக்தியைப் பெற்று, அந்தச் சக்தியின் மூலம் நீங்கள் தூய்மையாகுகின்றீர்கள். தந்தை உங்களுக்கு முழு இராச்சியத்தையும் ஆட்சிபுரிவதற்கான சக்தியைக் கொடுக்கின்றார். அவர் உங்களுக்கு அத்தகைய மகா சக்தியைக் கொடுக்கின்றார். விஞ்ஞானத்தின் அகங்காரத்தைக் கொண்டவர்கள் பல விடயங்களை விநாசத்திற்காக உருவாக்குகின்றார்கள். அவர்களின் புத்தி விநாசத்திற்காகச் செயற்படுகின்றது, ஆனால் உங்கள் புத்தி ஓர் அழிவற்ற அந்தஸ்தைக் கோருவதற்குச் செயற்படுகிறது. நீங்கள் பெருமளவு சக்தியைப் பெற்று, அந்தச் சக்தியின் மூலம் உலக இராச்சியத்தைப் பெறுகிறீர்கள். அங்கு, மக்கள், மக்களை ஆட்சி செய்யும் அரசாங்கம் இருப்பதில்லை. அங்கு அது அரசர், அரசியின் இராச்சியமாகும். கடவுளே அதிமேலானவர். மக்கள் அவரையே நினைவுசெய்கிறார்கள். அவர்கள் இலக்ஷ்மி, நாராயணனுக்காக ஆலயங்களைக் கட்டி, அவர்களை வழிபட்டபொழுதிலும், கடவுளே அதிமேலானவராக நினைவுகூரப்படுகின்றார். இலக்ஷ்மி, நாராயணனே உலகின் அதிபதிகளாக இருந்தார்கள் என்பதை நீங்கள் இப்பொழுது புரிந்துகொள்கிறீர்கள். உலகின் அதிமேலான இராச்சியம் எல்லையற்ற தந்தையிடமிருந்தே பெறப்படுகின்றது. அத்தகையதோர் உயர்ந்த அந்தஸ்தை நீங்கள் பெறவுள்ளீர்கள்! ஆகவே, குழந்தைகளாகிய நீங்கள் அதிகளவு சந்தோஷத்தை அனுபவம் செய்ய வேண்டும்! உங்களுக்கு ஏதாவது ஒன்றைக் கொடுப்பவரை நீங்கள் நிச்சயமாக நினைவுசெய்வீர்கள். ஒரு மணவாட்டிக்குத் தனது கணவன் மீது அதிகளவு அன்பு இருக்கும்; அவள் தனது வாழ்வையே அவருக்காகக் கொடுக்கின்றாள். அவர் மரணிக்கும்பொழுது, அவள் அதிகளவு விரக்தியில் அழுகிறாள். அந்த ஒரேயொருவரே கணவர்களுக்கெல்லாம் கணவர். நீங்கள் அதிமேலான அந்தஸ்தைக் கோர வேண்டுமென்பதற்காக அவர் இப்பொழுது உங்களை மிகவும் நன்றாக அலங்கரிக்கின்;றார். ஆகவே குழந்தைகளாகிய நீங்கள் அதிகளவு போதையைக் கொண்டிருக்க வேண்டும்! இங்கு நீங்கள் தெய்வீகக் குணங்களைக் கிரகிக்க வேண்டும். பலர் இன்னமும் அதிகளவில் அசுரக் குணங்களைக் கொண்டிருக்கின்றார்கள். சண்டை சச்சரவுகள் செய்தல், முகம் கோணுதல், நிலையத்தில் குழப்பங்களை உருவாக்குதல் அனைத்தும் அசுர குணங்களாகும். பாபா பல செய்திகளைப் பெறுவதால், அனைத்தையும் அறிவார். காமமே மிகக்கொடிய எதிரி, ஆனால் கோபமும் குறைவான எதிரியல்ல. இன்னாருக்கு அதிகளவு அன்பு காட்டப்பட்டது. ஏன் எனக்கு அன்பு காட்டப்படவில்லை?, இன்னாரிடம் அபிப்பிராயம் கேட்கப்பட்டது. என்னிடம் ஏன் கேட்கப்படவில்லை? இவ்வாறு கூறுபவர்கள் பலர் உள்ளனர். ஏனெனில் அவர்களின் புத்தியில் சந்தேகம் உள்ளது. ஓர் இராச்சியம் ஸ்தாபிக்கப்படுகின்றது. அத்தகையவர்கள் என்ன அந்தஸ்தைப் பெறுவார்கள்? அந்தஸ்தில் பெருமளவு வேறுபாடு உள்ளது. சுத்தம் செய்பவர்களும் பெரிய மாளிகைகளில் வசிப்பார்கள். ஏனையோர் வேறு எங்காவது நல்ல வீடுகளில் வசிப்பார்கள். தெய்வீகக்குணங்களைக் கிரகிப்பதற்கு நீங்கள் ஒவ்வொருவரும் உங்களுக்காக மிக நல்ல முயற்சியைச் செய்ய வேண்டும். நீங்கள் சரீர உணர்வுடையவர் ஆகுவதனாலேயே, அசுரத்தனமான செயல்கள் இடம்பெறுகின்றன. நீங்கள் ஆத்ம உணர்வுடையவராகி இவை அனைத்தையும் மிக நன்றாகக் கிரகிக்கும்பொழுது உங்களால், உயர்ந்ததோர் அந்தஸ்தைக் கோர முடியும். நீங்கள் அதற்கேற்பவே அத்தகைய தெய்வீகக் குணங்களைக் கிரகிப்பதற்கு முயற்சி செய்ய வேண்டும். என்றுமே எவருக்கும் துன்பம் விளைவிக்காதீர்கள். நீங்கள் துன்பத்தை அகற்றி, சந்தோஷத்தை அருளுகின்ற தந்தையின் குழந்தைகள். என்றுமே எவருக்கும் துன்பம் விளைவிக்காதீர்கள். நிலையங்களைப் பராமரிப்பவர்களுக்கு மிகப்பெரிய பொறுப்பு உள்ளது. தந்தை கூறுகின்றார்: குழந்தைகளே, ஒருவர் ஒரு தவறு செய்தால் அவர் நூறு மடங்கு தண்டனையைச் சேமித்துக் கொள்கிறார். சரீர உணர்வுடையவர் ஆகுவதனால், பேரிழப்பு ஏற்படுகின்றது. ஏனெனில் அனைவரையும் சீர்திருத்துவதற்காகவே பிராமணர்களாகிய நீங்கள் கருவிகளாக்கப்பட்டுள்ளீர்கள். உங்களையே நீங்கள் சீர்திருத்தாவிட்டால், உங்களால் எவ்வாறு ஏனையோரைச் சீர்திருத்த முடியும்? அப்பொழுது பேரிழப்பு ஏற்படும். பாண்டவ அரசாங்கமும் உள்ளது. தந்தையே அதிமேலானவர், அவருடன் தர்மராஜும் உள்ளார். தர்மராஜ் மூலம் மிகக்கடுமையான தண்டனை அனுபவம் செய்யப்படுகின்றது. அத்தகைய பெரும் பிழையான செயல்களைச் செய்யும்பொழுது, பேரிழப்பு அனுபவம் செய்யப்படுகின்றது. கணக்கு என்றால் கணக்குதான், அனைத்துக்கும் கணக்கு உள்ளது! பாபா அனைத்துக் கணக்குகளையும் வைத்திருக்கின்றார். பக்தி மார்க்கத்திலும், சரியான கணக்கு உள்ளது. நீங்கள் செய்கின்ற அனைத்தினது கணக்கையும் கடவுள் வைத்திருக்கின்றார் என இன்னமும் கூறப்படுகின்றது. இங்கு தந்தையே கூறுகின்றார்: நீங்கள் செய்யும் அனைத்தினது முழுக் கணக்கும் தர்மராஜிடம் உள்ளது. அந்நேரத்தில் உங்களால் என்ன செய்ய முடியும்? நீங்கள் செய்தவற்றின் காட்சிகளைக் காண்பீர்கள். அங்கு சிறிதளவு தண்டனை இருக்கும். ஆனால், இங்கோ அதிகளவு தண்டனை இருக்கும். சத்தியயுகத்தில் குழந்தைகளாகிய நீங்கள் சிறை போன்ற கருப்பைக்குள் செல்ல மாட்டீர்கள். அங்கு கருப்பை ஒரு மாளிகை போன்றிருக்கிறது. அங்கு எவருமே பாவம் செய்வதில்லை. ஆகவே குழந்தைகளாகிய நீங்கள் அத்தகைய இராச்சிய பாக்கியத்தை அடைவதற்கு மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். சில குழந்தைகள் தங்கள் ஆசிரியர்களிலும் பார்க்க மிகவும் திறமைசாலிகள் ஆகுகின்றனர். அவர்களது பாக்கியம் அவர்களின் ஆசிரியர்களின் பாக்கியத்திலும் பார்க்க உயர்ந்ததாக ஆகுகின்றது. ஒருவர் மிக நன்றாகச் சேவை செய்யாவிட்டால், பிறவிபிறவியாக அவர் ஒரு வேலைக்காரனாக ஆகுவார் எனத் தந்தையும் விளங்கப்படுத்தியுள்ளார். குழந்தைகளாகிய உங்கள் முன்னால் தந்தை வந்ததும், அவர் உங்களிடம் வினவுகிறார்: குழந்தைகளே, இங்கு நீங்கள் ஆத்ம உணர்வில் அமர்ந்திருக்கின்றீர்களா? குழந்தைகளுக்கான தந்தையின் மேன்மையான வாசகங்கள்: குழந்தைகளே, ஆத்ம உணர்வுடையவர் ஆகுவதற்கு, நீங்கள் பெரும் முயற்சி செய்ய வேண்டும். நடந்தும் உலாவித் திரியும் வேளையிலும், ஞானக்கடலைத் தொடர்ந்தும் கடையுங்கள். பல குழந்தைகள் தாங்கள் இந்த அழுக்கான நரக உலகிலிருந்து, சந்தோஷ தாமத்திற்கு வெகுவிரைவில் சென்று விடவேண்டும் என உணருகிறார்கள். தந்தை கூறுகின்றார்: மிகச் சிறந்த மகாராத்திகளும் யோகம் செய்வதில்லை. முயற்சி செய்வதற்கு அவர்களும் தூண்டப்பட வேண்டும். யோகம் இல்லாதிருந்தால் நீங்கள் முழுமையாகவே வீழ்ந்து விடுகிறீர்கள். ஞானம் மிகவும் இலகுவானது; முழு வரலாறும் புவியியலும் புத்தியில் புகுகின்றது. சிறந்த புத்திரிகளில் பலர் கண்காட்சிகளில் விளங்கப்படுத்துவதில் திறமைசாலிகளாக இருந்தபொழுதிலும், அவர்களிடம் யோகமோ அல்லது தெய்வீகக் குணங்களோ இருப்பதில்லை. சில குழந்தைகளின் தற்போதைய ஸ்திதியையிட்டு பாபா சிலசமயங்களில் அதிசயப்படுகின்றார்! உலகில் அதிகளவு துன்பம் உள்ளது! வெகு விரைவில் இவை அனைத்தும் முடிவடைய வேண்டும். பாபா (பிரம்மா) சந்தோஷ தாமத்திற்கு விரைவில் செல்வதற்காகக் காத்திருக்கின்றார். சிலர் தந்தையை சந்திப்பதற்குத்; தவித்துக் கொண்டிருப்பதைப் போன்று, சிலர் சந்தோஷ தாமத்திற்குச் செல்வதற்குத் தவித்துக் கொண்டிருக்கின்றார்கள். ஏனெனில் பாபா எங்களுக்கு சுவர்க்கத்திற்குச் செல்வதற்கான வழியைக் காட்டுகின்றார். சிலர் அத்தகைய தந்தையைப் பார்ப்பதற்கும் மிகத் தவிப்புடன் இருக்கிறார்கள். தாங்கள் தினமும் தந்தையை நேரடியாகச் செவிமடுக்க வேண்டும் என்ற உணர்வு அவர்களுக்கு உண்டு. இப்பொழுது இங்கு எவ்விதப் பிரச்சனைகளும் இல்லை என்பதை நீங்கள் புரிந்துகொள்கிறீர்கள். நீங்கள் வெளியில் வாழும்பொழுது உங்கள் பொறுப்புகள் அனைத்தையும் நிறைவேற்ற வேண்டும். இல்லையேல் அதிகளவில் முரண்பாடு இருக்கும். இதனாலேயே பாபா அனைவருக்கும் பொறுமையைக் கொடுக்கின்றார். இதற்கு மறைமுகமான முயற்சி அதிகம் தேவைப்படுகிறது. நினைவு செய்வதற்கான அந்த முயற்சியை எவராலும் செய்ய முடியாது. நீங்கள் மறைமுகமான நினைவில் நிலைத்திருக்கும்பொழுது உங்களால் தந்தையின் வழிகாட்டல்களைப் பின்பற்ற முடியும். சரீர உணர்வுடையவர் ஆகுவதனால் சிலர் தந்தையின் வழிகாட்டல்களையும் பின்பற்றுவதில்லை! பாபா கூறுகின்றார்: உங்கள் அட்டவணையை எழுதினால் நீங்கள் அதிகளவு முன்னேற்றமடைவீர்கள். இதனைக் கூறியவர் யார்? சிவபாபா! ஓர் ஆசிரியர் வீட்டுவேலையைக் கொடுக்கும்பொழுது அதனை மாணவர்கள் செய்கிறார்கள். இங்கு, மிகச்சிறந்த குழந்தைகளையும் இதனைச் செய்வதற்கு மாயை அனுமதிப்பதில்லை. மிகச்சிறந்த குழந்தைகளின் அட்டவணையை பாபா பெற்றிருந்தாலும் அவர் அத்தகைய குழந்தைகள் எந்தளவிற்கு நினைவில் நிலைத்திருந்தார்கள் எனப் பார்ப்பார். ஆத்மாக்களாகிய நீங்கள் ஒரேயொரு அன்பிற்கினியவரின் காதலிகள் எனப் புரிந்துகொள்கிறீர்கள். பல வகையான லௌகீகக் காதலிகளும், அன்பிற்கினியவர்களும் உள்ளனர். நீங்கள் மிகப்பழைய காதலிகள். நீங்கள் இப்பொழுது ஆத்ம உணர்வுடையவர் ஆகவேண்டும். அனைத்தையும் சகித்துக் கொள்ள வேண்டும். அத்தகைய புத்திசாலிகள் என உங்களைக் கருத வேண்டாம்! உங்கள் எலும்புகளைக் கொடுக்குமாறு பாபா உங்களிடம் கேட்கவில்லை. பாபா கூறுகின்றார்: நன்றாகச் சேவை செய்யும் வகையில், உங்களை நல்ல ஆரோக்கியமாக வைத்திருங்கள். நீங்கள் நோயுற்றிருந்தால் படுக்கையில் இருக்க நேரிடும். சில குழந்தைகள் வைத்தியசாலைகளுக்குச் சேவைக்காகச் செல்லுமபொழுது ஒரு தேவதை வந்துள்ளார் என வைத்தியர்கள் உணர்வார்கள். அவர்கள் தங்களுடன் படங்களையும் எடுத்துச் செல்கிறார்கள். அத்தகைய சேவை செய்பவர்கள் கருணையுள்ளவர்கள் எனப்படுகிறார்கள். நீங்கள் அத்தகைய சேவை செய்யும்பொழுது யாராவதொருவர்; வெளித்தோன்றுவர். நீங்கள் எந்தளவிற்கு அதிகமாக நினைவு சக்தியைக் கொண்டிருக்கின்றீர்களோ, அந்தளவிற்கு அதிகமாக மக்களும் இங்கு ஈர்க்கப்படுவார்கள். இந்த நினைவில் மாத்திரமே சக்தி உள்ளது. முதலாவது தூய்மையாகும்! முதலாவதாகத் தூய்மையும், பின்னர் அமைதியும், அதன்பின் செழிப்பும் இருக்குமெனக் கூறப்பட்டுள்ளது. நீங்கள் நினைவுச் சக்தியினால் தூய்மையாகுகின்றீர்கள். பின்பு ஞானச் சக்தியும் உள்ளது. நினைவு செய்வதில் பலவீனமாகாதீர்கள். நினைவு செய்வதிலேயே தடைகள் ஏற்படுகின்றன. நினைவில் நிலைத்திருப்பதனால், நீங்கள் தூய்மையாகுவதுடன், தெய்வீகக் குணங்களையும் விருத்தி செய்வீர்கள். தந்தையின் புகழை நீங்கள் அறிவீர்கள். தந்தை அதிகளவு சந்தோஷத்தைக் கொடுக்கின்றார்! அவர் 21 பிறவிகளின் சந்தோஷத்திற்கு உங்களைத் தகுதியுடையவர் ஆக்குகின்றார். என்றுமே எவருக்கும் துன்பம் விளைவிக்காதீர்கள். சில குழந்தைகள் அவச்சேவை செய்வதால், தங்களுக்குத் தாங்களே ஒரு சாபத்தை இடுவதுடன், ஏனையோருக்கும்; பெரும் தொல்லையைக் கொடுக்கின்றார்கள். ஒருவர் கீழ்ப்படிவில்லாதவராக ஆகும்பொழுது அது அவர் தனக்குத்தானே சாபமிடுவது போன்றிருக்கும். அவச்சேவை செய்வதன் மூலம் சிலர் கீழே வீழ்ந்துவிடுகின்றனர். பல குழந்தைகள் விகாரத்தினாலோ அல்லது கோபமடைந்து கற்பதை நிறுத்துவதாலோ வீழ்ந்து விடுகின்றார்கள். இங்கு பலவிதமான குழந்தைகளும் அமர்ந்திருக்கின்றார்கள். அவர்கள் இங்கிருந்து புத்துணர்ச்சியூட்டப்பட்டுச் செல்லும்பொழுது, தங்கள் தவறுக்காக வருந்துகிறார்கள். எவ்வாறாயினும் அவர்கள் வருந்துவதனால் எதுவும் மன்னிக்கப்படுவதில்லை. தந்தை கூறுகின்றார்: நீங்களே உங்களை மன்னிக்க வேண்டும்! நினைவில் நிலைத்திருங்கள்! இது ஒரு கல்வி என்பதால் தந்தை எவரையும் மன்னிப்பதில்லை. தந்தை உங்களுக்குக் கற்பிக்கின்றார். குழந்தைகளாகிய நீங்கள் கற்பதனால், உங்கள் மீது நீங்களே கருணை கொள்ள வேண்டும். நீங்கள் நற்பண்புகளையும் (அயnநெசள) கொண்டிருக்க வேண்டும். பாபா பதிவேட்டைக் கொண்டு வருமாறு ஆசிரியர்களிடம் கேட்கின்றார். பாபா ஒவ்வொருவரினதும் செய்திகளையும் கேட்கும்பொழுது, வழிகாட்டுகின்றார். அப்பொழுது மாணவர்களிற் சிலர் தங்கள் ஆசிரியர் தங்களைப் பற்றி பாபாவிற்கு (சநிழசவநன) அறிவித்துள்ளார் எனச் சிந்திப்பதால், மேலும் அதிக அவச்சேவை செய்ய ஆரம்பிக்கின்றார்கள். இங்கு பெருமளவு முயற்சி தேவைப்படுகின்றது. மாயை ஒரு கொடிய எதிரி. அவள் குரங்கு போன்றுள்ள உங்களை மாற்றி ஓர் ஆலயத்தில் இருக்கத் தகுதி வாய்ந்தவராகுவதற்கு உங்களை அனுமதிப்பதில்லை. உயர்ந்ததோர் அந்தஸ்தைக் கோருவதற்குப் பதிலாக சிலர் மேலும், கீழே வீழ்ந்து எழும்ப முடியாதவர்கள் ஆகிவிடுகின்றார்கள்; அவர்கள் மரணித்து விடுகிறார்கள். இது மிக உயர்ந்ததோர் இலக்கு எனத் தந்தை குழந்தைகளுக்கு மீண்டும், மீண்டும் விளங்கப்படுத்துகின்றார். நீங்கள் உலக அதிபதிகள் ஆக வேண்டும். பிரபல்யமானவர்களின் குழந்தைகள் மிகவும் இராஜரீகத்துடன் நடந்து கொள்கின்றார்கள். அவர்கள் தங்கள் தந்தையின் கௌரவம் பாதிப்படையக்கூடாது என்பதிலேயே அக்கறையாக இருக்கின்றார்கள். உங்கள் தந்தை மிகவும் நல்லவர், ஆனால் நீங்களோ மிகவும் தகுதியற்றவர்! நீங்கள் உங்கள் தந்தையின் கௌரவத்தை இழக்கச செய்கிறீர்கள் எனச் சிலரையிட்டுக் கூறப்படும். இங்கு ஒவ்வொருவரும் தத்தமது சொந்தக் கௌரவத்தைத் தாங்களாகவே இழந்து விடுகின்றார்கள். பெருமளவு தண்டனை அனுபவம் செய்யப்படுகின்றது. பாபா உங்களை எச்சரிக்கின்றார்: நீங்கள் முன்னேறும்பொழுது மிகவும் எச்சரிக்கையாக இருங்கள். சிறைப் பறவைகள் ஆகாதீர்கள். இங்கு சிறைப்பறவைகள் உள்ளன. சத்தியயுகத்தில் சிறைகள் எதுவும் இல்லை. இருப்பினும் இப்பொழுது நீங்கள் கற்று உயர்ந்ததோர் அந்தஸ்தைக் கோரவேண்டும். கவனயீனமாகித் தவறுகள் செய்யாதீர்கள்! எவருக்கும் துன்பம் விளைவிக்காதீர்கள்! நினைவு யாத்திரையில் நிலைத்திருங்கள்! நினைவே மிகவும் பயனுள்ளது. கண்காட்சிகளில் விளங்கப்படுத்த வேண்டிய முக்கிய விடயம்: தந்தையின் நினைவைக் கொண்டிருப்பதன் மூலமே நீங்கள் தூய்மையாகுவீர்கள். அனைவரும் தூய்மையாகுவதையே விரும்புகின்றார்கள். இது தூய்மையற்ற உலகம். ஒரேயொரு தந்தையே அனைவருக்கும் சற்கதியை அருள்வதற்கு வருகின்றார். கிறிஸ்து, புத்தர் போன்றோர் எவருக்கும் சற்கதியை வழங்கமுடியாது. மக்கள் பிரம்மாவின் பெயரைக் குறிப்பிட்டாலும், பிரம்மாவினாலும் சற்கதியை அருளமுடியாது. அவர் தேவ தர்மத்தின் கருவியாவார். சிவபாபா தேவதர்மத்தை ஸ்தாபித்தபொழுதிலும் பிரம்மா, விஷ்ணு, சங்கரர் ஆகியோரும் நினைவுகூரப்படுகின்றார்கள். மக்கள் திரிமூர்த்தி பிரம்மாவைப் பற்றிப் பேசுகிறார்கள். தந்தை கூறுகின்றார்: அவர் ஒரு குருவும் அல்ல. ஒரேயொரு குரு மாத்திரமே உள்ளார். நீங்கள் அவர் மூலமாக ஆன்மீகக் குருமார் ஆகுகின்றீர்கள். ஏனைய அனைவரும் சமய ஸ்தாபகர்கள். ஒரு சமய ஸ்தாபகரை எவ்வாறு சற்கதி அருள்பவர் என அழைக்க முடியும்? இவை மிகவும் ஆழமான விடயங்கள், இவை புரிந்துகொள்ளப்பட வேண்டும். சமய ஸ்தாபகர்கள், தமது சமயத்தை ஸ்தாபிக்கிறார்கள். பின்னர் அவர்களின் சீடர்கள் அவர்களைப் பின்தொடர்கின்றார்கள். அவர்களால் அனைவரையும் வீட்டிற்குத் திரும்பவும் அழைத்துச் செல்ல முடியாது. அவர்கள் மறுபிறவிகள் எடுக்க வேண்டும். இந்த விளக்கம் அவர்கள் அனைவருக்கும் பொருந்துகின்றது. எந்தவொரு குருவினாலும் சற்கதி அளிக்க முடியாது. தந்தை விளங்கப்படுத்துகின்றார்: ஒரேயொரு குருவும், தூய்மையாக்குபவருமே உள்ளார். அவர் மாத்திரமே அனைவருக்கும் சற்கதி அருள்பவரும், விடுதலையளிப்பவரும் ஆவார். எங்களிடம் ஒரேயொரு குரு மாத்திரமே உள்ளார் என அனைவரிடமும் கூறுங்கள். அவரே அனைவருக்கும் சற்கதி அருளி, அவர்களைத் திரும்பவும் வீட்டிற்கு, அதாவது, அமைதிதாமத்திற்கும் சந்தோஷதாமத்திற்கும் அழைத்துச் செல்கிறார். சத்தியயுக ஆரம்பத்தில் வெகுசிலரே இருக்கின்றனர். அது யாருடைய இராச்சியம் என்பதை நீங்கள் நிச்சயமாகப் படங்களில் காட்டுகின்றீர்கள். பாரத மக்களும், அந்தத் தேவர்களை வழிபடுபவர்களும், உண்மையில் அவர்களே (இலக்ஷமியும் நாராணயனும்) சுவர்க்கத்தின் அதிபதிகளாக இருந்தவர்கள் என்பதையும், சுவர்க்கத்தில் அவர்களது இராச்சியமே இருந்தது என்பதையும் விரைவில் நம்புவார்கள். அந்நேரத்தில் ஏனைய ஆத்மாக்கள் அனைவரும் எங்கிருந்தார்கள்? அவர்கள் நிச்சயமாக அசரீரி உலகில் இருந்தார்கள் என நீங்கள் கூறுவீர்கள். இவ்விடயங்களை இப்பொழுது நீங்கள் புரிந்து கொள்கின்றீர்கள். முன்னர் நீங்கள் எதனையும் அறிந்திருக்கவில்லை. இப்பொழுது உங்கள் புத்தியில் சக்கரம் சுழல்கின்றது. உண்மையில், 5000 வருடங்களுக்கு முன்பு பாரதத்தில் இது அவர்களுடைய இராச்சியமாக இருந்தது. பின்னர் ஞானத்திற்கான வெகுமதி முடிவிற்கு வரும்பொழுது பக்திமார்க்கம் ஆரம்பமாகுகிறது. பின்னர் பழைய உலகில் ஆர்வமின்மை இருக்க வேண்டும். அவ்வளவே! இப்பொழுது நாங்கள் புதிய உலகிற்குச் செல்வோம். பழைய உலகிலிருந்து இதயம் இப்பொழுது அகற்றப்படுகின்றது. அங்கு கணவன், குழந்தைகள் போன்றோர் மிகச்சிறந்தவர்களாவே இருப்பார்கள். எல்லையற்ற தந்தை உங்களை உலக அதிபதிகள் ஆக்குகின்றார். உலக அதிபதிகளாக ஆகுகின்ற குழந்தைகளாகிய நீங்கள் மிக மேன்மையான எண்ணங்களையும், இராஜரீகமான நடத்தையையும் கொண்டிருக்க வேண்டும். உணவைப் பொறுத்தவரை, நீங்கள் மிகக் குறைவாகவும் உண்ணக்கூடாது அல்லது பேராசை எதுவும் இருக்கவும் கூடாது. நினைவில் நிலைத்திருப்பவர்களின்; உணவு மிகவும் சூட்சுமமானது (இலேசான உணவு). பலரின் புத்தி உணவினால் ஈர்க்கப்படுகின்றது. குழந்தைகளாகிய உங்களுக்கு உலக அதிபதிகள் ஆகுகின்ற சந்தோஷம் இருக்க வேண்டும். கூறப்பட்டுள்ளது: சந்தோஷத்தைப் போன்ற போஷாக்கு வேறு எதுவும் இல்லை. அத்தகைய சந்தோஷத்தை நீங்கள் சதா பேணிக் கொண்டால், உங்கள் உணவும், பானமும் மிகவும் இலேசாகிவிடும். நீங்கள் அதிகமாக உண்ணும்பொழுது மிகவும் பாரமாக (hநயஎல) உணர்வதால் தூங்கி விடுவீர்கள். பின்னர் நீங்கள் கூறுகிறீர்கள்: பாபா, எனக்குத் தூக்கமாக இருக்கிறது! உங்கள் உணவு நிலையானதாகவும் இருக்க வேண்டும். நல்ல உணவு என்பதால் நீங்கள் அதிகமாக உண்கிறீர்கள் என்றிருக்கக்கூடாது. அச்சா.

இனிமையிலும் இனிமையான அன்புக்குரிய எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தந்தை தாயாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும் ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. நாங்கள் துன்பத்தை அகற்றிச் சந்தோஷத்தை அருள்பவரான தந்தையின் குழந்தைகள். நாங்கள் எவருக்கும் துன்பத்தை விளைவிக்கக்கூடாது. அவச்சேவை செய்வதன் மூலம் உங்களை நீங்களே சபிக்காதீர்கள்.

2. மிக மேன்மையான, இராஜரீகமான எண்ணங்களைக் கொண்டிருங்கள். கருணையுள்ளவராகி, சேவையில் மிகவும் மும்முரமாக ஈடுபடுங்கள். உணவு, பானத்தின் மீதுள்ள பேராசையைத் துறந்திடுங்கள்.

ஆசீர்வாதம்:
நீங்கள் நாடகத்தின் ஞானம் மூலம் மாயையையும், சடப்பொருளையும் வென்றவராக இருப்பதுடன், உங்கள் ஸ்திதியையும் அசைக்க முடியாததாக ஆக்குவீர்களாக.

சடப்பொருள் அல்லது மாயையின் மூலம் எவ்வகையான பரீட்சைத்தாள் வந்தாலும் பரவாயில்லை, சிறிதளவு குழப்பத்தையேனும் கொண்டிராதீர்கள். இது என்ன? இது ஏன் நடைபெற்றது? போன்ற கேள்விகளை நீங்கள் கொண்டிருக்கும்பொழுது, ஒரு பிரச்சனை உங்களைத் தாக்கினால், நீங்கள் தோல்வி அடைகின்றீர்கள். எனவே எது நடைபெற்றாலும், உள்ளிருந்து ஆகா! இனிய நாடகமே, ஆகா! எனும் இந்த ஓசையே எழட்டும். ஓ, என்ன நடைபெற்றது? எனும் அத்தகைய எண்ணங்கள் இல்லாதிருக்கட்டும். எந்த எண்ணத்திலும் தளம்பல் எதுவும் இல்லாத வகையில் உங்கள் ஸ்திதியானது இருக்க வேண்டும். உங்கள் ஸ்திதியானது சதா ஆட்ட, அசைக்க முடியாததாக இருக்கட்டும். அப்பொழுது நீங்கள் மாயையை வென்றவராகவும், சடப்பொருளை வென்றவராகவும் இருக்கின்ற ஆசீர்வாதத்தைப் பெறுவீர்கள்.

சுலோகம்:
நல்ல செய்திகளைக் கூறுவதும், சந்தோஷத்தைக் கொடுப்பதுமே அதி மேன்மையான கடமையாகும்.