07.10.20        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்:
இனிய குழந்தைகளே, இங்கு ஆத்ம உணர்வில் அமர்ந்திருங்கள். இதை உங்களுக்குள் தொடர்ந்தும் அரையுங்கள்: நான் ஓர் ஆத்மா. ஆத்ம உணர்வுடையவர்கள் ஆகுங்கள்! உங்கள் உண்மையான அட்டவணையை எழுதுவதால், நீங்கள் தொடர்ந்தும் விவேகிகள் ஆகுவதுடன், பெரும் நன்மையையும் அனுபவம் செய்வீர்கள்.

கேள்வி:
இந்த எல்லையற்ற நாடகத்தை அறிந்துள்ள குழந்தைகள் மிகவும் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டிய நியதி என்ன?

பதில்:
இது அழியாததொரு நாடகமாகும். இதில் ஒவ்வொரு நடிகரும் தனக்குரிய நேரத்திலே தனது பாகத்தை நடிப்பதற்கு வரவேண்டும். என்றும் அமைதி தாமத்திலேயே நிலைத்திருக்க விரும்புவதாக எந்தவொரு நடிகராவது கூறுவது நியதிக்கு முரணானதாகும். அவ்வாறாயின், அவர் ஒரு நடிகர் என அழைக்கப்பட மாட்டார். உங்களுக்கு இந்த எல்லையற்ற விடயங்களை எல்லையற்ற தந்தை மாத்திரமே கூறுகிறார்.

ஓம் சாந்தி.
உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதியவாறு இங்கு அமர்ந்திருங்கள். சரீர உணர்வைத் துறந்து அமர்ந்திருங்கள். எல்லையற்ற தந்தையே குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்துகிறார். விவேகமற்றவர்களுக்கே இவ்விடயங்கள் விளங்கப்படுத்தப்பட வேண்டும். ஆத்மாக்களாகிய நாங்கள் விவேகமற்றவர்கள் ஆகிவிட்டோம் என அவர் கூறும்பொழுது, தந்தை எங்களுக்கு உண்மையையே கூறுகிறார் என்பதை ஆத்மாக்களாகிய நீங்கள் புரிந்துகொள்கிறீர்கள். இந்த ஆத்மாவாகிய நான், அழியாதவரும், இச்சரீரம் அழியக்கூடியதுமாகும். நான் ஆத்ம உணர்வைத் துறந்து, சரீர உணர்வில் சிக்கிவிட்டேன். ஆகவே, நான் விவேகமற்றவர் ஆவேன். தந்தை கூறுகிறார்: சரீர உணர்வுக்குள் வருவதால், குழந்தைகள் அனைவரும் விவேகமற்றவர்கள் ஆகிவிட்டார்கள். இப்பொழுது நீங்கள் தந்தையால் ஆத்ம உணர்வுடையவர்கள் ஆக்கப்படுகிறீர்கள், ஆகவே, நீங்கள் முழுமையாகவே விவேகிகள் ஆகுகிறீர்கள். சிலர் இவ்வாறு ஆகுகிறார்கள், வேறு சிலரோ இவ்வாறு ஆகுவதற்கு முயற்சி செய்கிறார்கள். விவேகமற்றவர்கள் ஆகுவதற்கு உங்களுக்கு அரைக்கல்பம் எடுத்துள்ளது. இப்பொழுது, இந்த இறுதிப் பிறவியில், நீங்கள் விவேகிகள் ஆகவேண்டும். அரைக்கல்பமாக, நீங்கள் படிப்படியாக விவேகமற்றவர்கள் ஆகியதுடன், இப்பொழுது நூறு வீதம் விவேகமற்றவர்கள் ஆகிவிட்டீர்கள்! நாடகத் திட்டத்துக்கேற்ப, நீங்கள் சரீர உணர்வுடையவர்களாகி, தொடர்ந்தும் வீழ்ந்தீர்கள். இப்பொழுது உங்களுக்குப் புரிந்துணர்வு கொடுக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், நீங்கள் தொடர்ந்தும் பெருமளவு முயற்சி செய்யவேண்டும், ஏனெனில் குழந்தைகளாகிய உங்களுக்குத் தெய்வீகக் குணங்களும் இருக்க வேண்டும். நீங்கள் முழுமையாகவே தூய்மையானவராகவும், தெய்வீகக் குணங்கள் அனைத்தும் நிறைந்தவராகவும், 16 சுவர்க்கக் கலைகள் நிறைந்தவராகவும் இருந்தீர்கள் என்பது குழந்தைகளாகிய உங்களுக்குத் தெரியும். இப்பொழுது, இந்நேரத்தில், நீங்கள் தெய்வீகக் குணங்கள் அற்றவர்களாக, தெய்வீகக் குணங்கள் எஞ்சியிராதவர்களாக ஆகிவிட்டீர்கள். நீங்கள் செய்யும் முயற்சிக்கேற்ப, வரிசைக்கிரமமாக, குழந்தைகளாகிய நீங்கள் இந்த நாடகத்தைப் புரிந்துகொள்கிறீர்கள். இதைப் புரிந்துகொள்வதற்குக் குழந்தைகளாகிய உங்களுக்குப் பல வருடங்கள் எடுத்துள்ளன. எவ்வாறாயினும், புதியவர்கள் மிகவும் விவேகிகள் ஆகுகிறார்கள். ஏனையோரையும் அவ்வாறு ஆக்குவதற்கு, அவர்கள் தொடர்ந்தும் முயற்சி செய்கிறார்கள். சிலர் முற்றிலும் எதையும் புரிந்துகொள்வதில்லை. அவர்கள் விவேகமற்றவர்களாக இருக்கிறார்கள். உங்களை விவேகிகள் ஆக்குவதற்குத் தந்தை வந்துள்ளார். மாயையினால், நீங்கள் விவேகமற்றவர்கள் ஆகினீர்கள் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். நாங்கள் பூஜிக்கத் தகுதிவாய்ந்தவர்களாக இருந்தபொழுது, விவேகிகளாக இருந்தோம், பின்னர் நாங்கள் பூஜிப்பவர்கள் ஆகியதால், விவேகமற்றவர்கள் ஆகினோம். ஆதிசனாதன தேவிதேவதா தர்மம் மறைந்துவிட்டது. உலகிலுள்ள எவருக்கும் இவ்விடயங்கள் தெரியாது. இராச்சியத்தை ஆட்சி செய்த இந்த இலக்ஷ்மியும் நாராயணனும் மிகவும் விவேகிகளாக இருந்தார்கள்! தந்தை கூறுகிறார்: அது உங்களுக்கும் பொருந்துகிறது. உங்களுக்கும் அதுவே பொருந்துகிறது என்பதை நீங்கள் சிந்திக்க வேண்டும். இவ்விடயங்கள் மிகவும் தெளிவாகப் புரிந்துகொள்ளப்பட வேண்டும். தந்தையைத் தவிர எவராலும் அவற்றை உங்களுக்கு விளங்கப்படுத்த முடியாது. தந்தையே அனைவரிலும் மேலானவர் என்பதையும், அனைவரிலும் அதிவிவேகமானவர் என்பதையும் நீங்கள் இப்பொழுது உணர்ந்து கொள்கிறீர்கள். அவரே ஞானக்கடலும், அனைவருக்கும் சற்கதி அருள்பவரும், தூய்மையாக்குபவரும் ஆவார். இப்புகழ் அனைத்தும் ஒரேயொருவருக்குரியதாகும். அதிமேன்மையான தந்தையே வந்து, குழந்தாய், குழந்தாய் எனக் கூறி, உங்களுக்கு மிக நன்றாக விளங்கப்படுத்துகிறார்: குழந்தைகளே, நீங்கள் இப்பொழுது தூய்மையாக வேண்டும். இதற்கான மருந்து ஒன்று தந்தையிடம் மாத்திரமே உள்ளது. அவர் கூறுகிறார்: யோகத்தைக் கொண்டிருப்பதால், நீங்கள் எதிர்கால 21 பிறவிகளுக்கு நோயிலிருந்து விடுபட்டவர்கள் ஆகுவீர்கள். உங்களுடைய நோய்கள், வேதனைகள் அனைத்தும் முடிவடைந்து, நீங்கள் முக்தி தாமத்துக்குச் செல்வீர்கள். அநாதியான சத்திர சிகிச்சை நிபுணரிடம் ஒரு மருந்து மாத்திரமே உள்ளது. அவர் வந்து, ஆத்மாக்களுக்கு ஒரு ஊசியை மாத்திரமே போடுகிறார். ஒருவர் ஒரு சட்டநிபுணராகவும், அத்துடன் ஒரு பொறியியலாளராகவும் ஆகுவதற்குக் கற்பார் என்றில்லை. இல்லை, ஒவ்வொருவருக்கும் அவரவருக்குரிய ஒரு தொழில் உள்ளது. தூய்மையற்றவரிலிருந்து எங்களைத் தூய்மையாக்குவதற்காக வாருங்கள் என நீங்கள் தந்தையைக் கூவியழைத்தீர்கள், ஏனெனில் தூய்மையற்றவராக இருப்பதில், துன்பமே உள்ளது. மௌன தாமம், தூய உலகம் என அழைக்கப்படுவதில்லை. சுவர்க்கம் மாத்திரமே தூய உலகம் என அழைக்கப்படுகிறது. மனிதர்கள் அமைதியையும், சந்தோஷத்தையும் விரும்புகிறார்கள் என உங்களுக்கு விளங்கப்படுத்தப்பட்டுள்ளது. சரீரங்;கள் இல்லாத இடத்திலேயே உண்மையான அமைதி இருக்கிறது, அது அமைதி தாமம் என அழைக்கப்படுகிறது. தாங்கள் அமைதி தாமத்திலேயே நிலைத்திருக்க விரும்புவதாகப் பலர் கூறுகிறார்கள். எவ்வாறாயினும், அது நியதியல்ல. அது அவ்வாறிருப்பின், அவர்கள் நடிகர்கள் என அழைக்கப்பட மாட்டார்கள். இப்பொழுது குழந்தைகளாகிய நீங்கள் நாடகத்தைப் புரிந்துகொள்கிறீர்கள். ஒரு நடிகர் தனது பாகத்தை நடிக்க வேண்டிய நேரத்தின் பொழுதே, அவர் மேடைக்கு வருவார். எல்லையற்ற தந்தை மாத்திரமே இந்த எல்லையற்ற விடயங்களை விளங்கப்படுத்துகிறார். அவர் ஞானக்கடல் எனவும் அழைக்கப்படுகிறார். அவரே அனைவருக்கும் சற்கதியை அருள்பவரும், தூய்மையாக்குபவரும் ஆவார். தத்துவங்களால் அனைவரையும் தூய்மையாக்க முடியாது. நீர் போன்றன, தத்துவங்கள் ஆகும். ஆகவே அவற்றால் எவ்வாறு சற்கதியை அருள முடியும்? ஆத்மாக்களே, ஒரு பாகத்தை நடிக்கிறார்கள். ஆத்மாக்களே ஹத்த யோகத்தின் பாகத்தை நடிக்கிறார்கள். விவேகிகள் மாத்திரமே இவ்விடயங்களைப் புரிந்துகொள்வார்கள். அவர்கள் எவ்வாறு பூஜிக்கத் தகுதி வாய்ந்தவர்களிலிருந்து பின்னர் பூஜிப்பவர்கள் ஆகுகிறார்கள் என்பதை மனிதர்களுக்கு விளங்கப்படுத்துவதற்கான ஒரு வழியை உருவாக்குமாறு தந்தை உங்களுக்கு அதிகளவில் விளங்கப்படுத்தியுள்ளார். பூஜிக்கத் தகுதிவாய்ந்தவர்கள் புதிய உலகில் இருக்கிறார்கள், பூஜிப்பவர்களோ பழைய உலகில் இருக்கிறார்கள். தூய்மையானவர்கள் பூஜிக்கத் தகுதிவாய்ந்தவர்களும், தூய்மையற்றவர்கள் பூஜிப்பவர்களும் ஆவர். இங்கு, அனைவரும் விகாரத்தினூடாகப் பிறந்ததனால் தூய்மையற்றவர்கள் ஆவர். அங்கு, அவர்கள் மேன்மையானவர்கள் ஆவர். நினைவுகூரப்படுகிறது: அவர்கள் முழுமையாகவே மேன்மையானவர்கள். குழந்தைகளாகிய நீங்கள் அவ்வாறு ஆகவேண்டும். இதற்கு முயற்சி தேவை. பிரதான விடயம் நினைவு செய்வதாகும். நினைவில் நிலைத்திருப்பது சிரமமானது எனவும், நீங்கள் விரும்பியளவுக்கு உங்களால் நினைவில் நிலைத்திருக்க இயலாதுள்ளது எனவும் நீங்கள் அனைவரும் கூறுகிறீர்கள். நீங்கள் நேர்மையுடன் உங்கள் அட்டவணையை எழுதினால், அதிகளவு நன்மையை அடைவீர்கள். தந்தை குழந்தைகளாகிய உங்களுக்கு மன்மனாபவவின் ஞானத்தைக் கொடுக்கிறார். நீங்கள் இதைப் புரிந்துணர்வுடன் கூறுகிறீர்கள். தந்தை உங்களுக்கு அனைத்தினதும் மிகச்சரியான அர்த்தத்தை விளங்கப்படுத்துகிறார். சில குழந்தைகள் தந்தையிடம் பல்வேறு வினாக்களை வினவுகிறார்கள், அவர்களுடைய இதயங்களை வெல்வதற்கு, அவர் அவர்களுக்கு ஒரு பதிலைக் கொடுக்கிறார். எவ்வாறாயினும், தந்தை கூறுகிறார்: தூய்மையற்றதைத் தூய்மையாக்குவதே, எனது பணியாகும். இதனாலேயே நீங்கள் என்னைக் கூவியழைத்தீர்கள். நீங்கள் தூய்மையாக இருந்தபொழுது, உங்கள் சரீரங்களும் தூய்மையாக இருந்தன என்பது ஆத்மாக்களாகிய உங்களுக்குத் தெரியும். இப்பொழுது ஆத்மாக்களும் சரீரங்களும் தூய்மையற்றவை ஆகிவிட்டன. 84 பிறவிகளின் கணக்கு உள்ளது. இப்பொழுது இவ்வுலகம் ஒரு முட்காடாகிவிட்டது என்பது உங்களுக்குத் தெரியும். இலக்ஷ்மியும் நாராயணனும் மலர்கள் ஆவார்கள். முட்கள் அவர்கள் முன்னிலையில் சென்று கூறுவார்கள்: நீங்கள் அனைத்துத் தெய்வீகக் குணங்களும் நிறைந்தவர்கள்; நாங்கள் பாவிகளான ஏமாற்றுக்காரர்கள் ஆவோம். காம விகாரமே மிகப்பெரிய முள்ளாகும். தந்தை கூறுகிறார்: இதை வென்று உலகை வெல்பவர்கள் ஆகுங்கள். கடவுள் ஏதோவொரு ரூபத்தில் வரவேண்டும் எனவும், அவர் பாக்கிய இரதத்தில் (பகீரதன்) பிரவேசிக்க வேண்டும் எனவும் மனிதர்கள் கூறுகிறார்கள். பழைய உலகை மீண்டும் புதியதாக்குவதற்கு, அவர் அதற்குள் வரவேண்டும்.புதிய உலகம் சதோபிரதான் என அழைக்கப்படுகிறது, பழைய உலகம் தமோபிரதான் என அழைக்கப்படுகிறது. இப்பொழுது பழைய உலகமே உள்ளதால், தந்தை நிச்சயமாக வரவேண்டும். தந்தை படைப்பவர் என அழைக்கப்படுகிறார். அவர் மிகவும் இலகுவாகக் குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்துகிறார்! நீங்கள் அதிகளவு சந்தோஷத்தை அனுபவம் செய்யவேண்டும்! உங்களில் எவராவது உங்கள் கர்மத்திற்கான வேதனையை அனுபவிப்பீர்களாயின், அதனை அனுபவம் செய்யவே வேண்டும். அதற்காக பாபாவினால் ஆசீர்வாதங்களைக் கொடுக்க முடியாது. நீங்கள் என்னைக் கூவியழைத்தீர்கள்: பாபா வந்து எங்கள் ஆஸ்தியை எங்களுக்குக் கொடுங்கள்! தந்தையிடமிருந்து நீங்கள் என்ன ஆஸ்தியைக் கோர விரும்புகிறீர்கள்? முக்தியும், ஜீவன் முக்தியும் ஆகும். ஞானக்கடலாகிய ஒரேயொரு தந்தையே முக்தியையும், ஜீவன் முக்தியையும் அருள்பவர் ஆவார். இதனாலேயே, அவர் ஞானத்தை அருள்பவர் என அழைக்கப்படுகிறார். கடவுள் ஞானத்தைக் கொடுத்தார், ஆனால் அவர் அதை எப்பொழுது கொடுத்தார் என்றோ அல்லது யார் மூலம் அதைக் கொடுத்தார் என்றோ எவருக்கும் தெரியாது. அவர்கள் அனைத்தையும் ஒன்றாகக் கலந்துவிட்டார்கள். அவர் யாருக்கு ஞானத்தைக் கொடுத்தார் என்பது எவருக்கும் தெரியாது. இப்பொழுது, இங்கு இந்த பிரம்மா அமர்ந்திருக்கிறார், அவர் நாராயணனாக இருந்தார் என்பதும், அவர் 84 பிறவிகளை எடுத்துவிட்;டார் என்பதும் அவருக்குத் தெரியும். அவர் இப்பொழுது முதல் இலக்கமாக இருக்கிறார். அவருடைய கண்கள் எவ்வாறு திறந்தன என்ற தன்னுடைய அனுபவத்தை பாபா பகிர்ந்துகொள்கிறார். உங்கள் கண்கள் திறந்துவிட்டன என நீங்களும் கூறுகிறீர்கள்; மூன்றாவது கண் திறந்துவிட்டது. நீங்கள் தந்தையினதும், முழுச் சக்கரத்தினதும் ஞானத்தைப் பெற்றுள்ளீர்கள் என நீங்கள் கூறுகிறீர்கள். நான் எவ்வாறிருப்பினும், எப்படி இருப்பினும் என்னும் புரிந்துணர்வு மூலம் என் கண்கள் திறந்தன. அது அத்தகையதோர் அற்புதம் ஆகும்! முதலில், நான் ஓர் ஆத்மா, ஆனால் நான் என்னைச் சரீரமாகவே கருதினேன். ஆத்மா கூறுகிறார்: நான் ஒரு சரீரத்தை விட்டு நீங்கி, இன்னுமொன்றை எடுக்கிறேன். அவ்வாறிருந்தும், நான் ஓர் ஆத்மா என்பதை மறந்து, சரீர உணர்வுடையவர் ஆகினேன். முதலில், இங்கமர்ந்திருந்து உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதுவதற்கு நான் உங்களுக்குப் புரிந்துணர்வைக் கொடுக்கிறேன். தொடர்ந்தும் இதை உங்களுக்குள் அரையுங்கள்: நான் ஓர் ஆத்மா. உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதாததால், நீங்கள் தந்தையை மறக்கிறீர்கள். நீங்கள் மீண்டும் மீண்டும் சரீர உணர்வடையவர்கள் ஆகுகிறீர்கள் என்பதை உண்மையிலேயே நீங்கள் உணர்கிறீர்கள். நீங்கள் முயற்சி செய்ய வேண்டும். இங்கு அமர்ந்திருக்கும்பொழுது, ஆத்ம உணர்வு ஸ்திதியில் அமர்ந்திருங்கள். தந்தை கூறுகிறார்: நான் குழந்தைகளாகிய உங்களுக்கு இராச்சியத்தைக் கொடுப்பதற்காக வந்துள்ளேன். நீங்கள் அரைக்கல்பமாக என்னை நினைவு செய்கின்றீர்கள். அவர்களின் முன்னிலையில் ஏதாவது ஒரு சூழ்நிலை வரும்பொழுது, அவர்கள் ஓ இராமா! எனக் கூவி அழைக்கிறார்கள். எவ்வாறாயினும், யார் ஈஸ்வர் என்பதோ அல்லது யார் இராமர் என்பதோ அவர்களுக்குத் தெரியாது. ஞானக்கடலும், தூய்மையாக்குபவரும், அனைவருக்கும் சற்கதியை அருள்பவரும், பரமாத்மாவாகிய, திரிமூர்த்தி பரம தந்தை, சிவனே ஆவார் என்பதை நீங்கள் நிரூபிக்க வேண்டும். பிரம்மா, விஷ்ணு, சங்கரரின் பிறப்புக்கள் ஒன்றாகவே இடம்பெறுகின்றன. இது வெறுமனே சிவஜெயந்தி என்றல்லாது, திரிமூர்த்தி சிவஜெயந்தி ஆகும். சிவனின் பிறந்ததினம் உள்ளபொழுது, நிச்சயமாக அது பிரம்மாவின் பிறந்ததினமாகவும் உள்ளது. மக்கள் சிவனின் பிறந்த தினத்தைக் கொண்டாடுகிறார்கள், ஆனால் பிரம்மா என்ன செய்தார்? லௌகீகத் தந்தையும், அப்பாலுள்ள தந்தையும் (பரலோகம்), பின்னர் இந்தத் தனித்துவமான (அலௌகீக) தந்தையும் இருக்கிறார்கள். இவர் பிரஜாபிதா பிரம்மா ஆவார். தந்தை கூறுகிறார்: இப்பொழுது உங்களுக்குப் புதிய உலகத்துக்கான புதிய ஞானம் கொடுக்கப்படுகிறது. பின்னர் இது மறைந்துவிடும். படைப்பவராகிய தந்தையினதும், படைப்பினதும் ஞானம் இல்லாதவர்கள், அறியாதவர்களாக இருக்கிறார்கள்; அவர்கள் அறியாமை என்னும் உறக்கத்தில் உறங்குகிறார்கள். ஞானத்தின் மூலம் பகலும், பக்தியின் மூலம் இரவும் உள்ளது. மக்கள் சிவராத்திரியின் அர்த்தத்தை சற்றேனும் அறியாதுள்ளார்கள். இதனாலேயே அவருடைய பிறந்த தினத்துக்கான பொது விடுமுறைத் தினத்தையும் அவர்கள் இரத்துச் செய்துவிட்டார்கள். அனைவருடைய தீபத்தையும் ஏற்றுவதற்குத் தந்தை வருகிறார் என்பதை இப்பொழுது நீங்கள் புரிந்துகொள்கிறீர்கள். நீங்கள் தீபங்கள், மெழுகுவர்த்திகள் போன்ற அனைத்தையும் ஏற்றும்பொழுது, அது உங்களுக்கு மிகவும் முக்கியமான நாள் என்பதை மக்கள் புரிந்துகொள்கிறார்கள். நீங்கள் இப்பொழுது புரிந்துணர்வுடன் அனைத்தையும் ஒளியேற்றுகிறீர்கள். அம்மக்கள் இதைப் புரிந்துகொள்வதில்லை. உங்கள் சொற்பொழிவுகளிலிருந்து அவர்கள் இதை முழுமையாகப் புரிந்துகொள்வதில்லை. இப்பொழுது இராவண இராச்சியம் உலகம் முழுவதிலும் பரவியுள்ளது. இங்கு மக்கள் மிகவும் சந்தோஷமற்று இருக்கிறார்கள். மந்திர சக்தி உடையவர்கள் ஏனையோரைப் பெருமளவுக்குத் தொந்தரவு செய்கிறார்கள். தீய ஆத்மாக்களைப் பற்றிய ஆக்கங்கள் செய்தித்தாள்களில் உள்ளன. அவர்கள் பெரும் தொந்தரவை விளைவி;க்கிறார்கள். பாபா கூறுகிறார்: அவற்றுடன் உங்களுக்கு எந்தத் தொடர்பும் கிடையாது. தந்தை உங்களுக்கு அனைத்து விடயங்களையும் நேரடியாகக் கூறுகிறார்: குழந்தைகளே, என்னை நினைவு செய்வதால், நீங்கள் தூய்மையாகுவீர்கள். உங்களுடைய துன்பம் அனைத்தும் அகற்றப்படும். அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தந்தை தாயாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. தந்தையை மிகச்சரியாக நினைவு செய்வதற்கும், ஆத்ம உணர்வுடையவர் ஆகுவதற்கும் முயற்சி செய்யுங்கள். உங்கள் அட்டவணையை நேர்மையாக வைத்திருங்கள். இதைச் செய்வதால், பெருமளவு நன்மை இருக்கும்.

2. காம விகாரமே பெருந் துன்பத்தை விளைவிக்கும் முள்ளாகும். யோகசக்தி மூலம் அதை வெற்றிகொண்டு, தூய்மையற்றவரிலிருந்து தூய்மையானவர் ஆகுங்கள். வேறு எதனுடனும் உங்களுக்குத் தொடர்பு இல்லை.

ஆசீர்வாதம்:
தடைகள் உட்புகாத பிரகாசமான தேவதை ஆடையை எப்பொழுதும் நீங்கள் அணிந்திருப்பதன் மூலம் சதா தடைகளை அழிப்பவர் ஆகுவீர்களாக.

உங்களையிட்டும் பிறரையிட்டும் சதா தடைகளை அழிப்பவர் ஆகுவதற்கு, கேள்விகுறிகளுக்கு விடைகொடுங்கள். முற்றுப்புள்ளி இடுவதன் மூலம் உங்கள் அனைத்து சக்திகளினதும் களஞ்சியத்தையும் நிரப்பி வைத்திருங்கள். உங்கள் தடைகள் உட்புகாத, பிரகாசிக்கின்ற தேவதை ஆடையை எப்பொழுதும் அணிந்திருங்கள். சேறான ஆடையை அணியாதீர்கள். இத்துடன், சகல தெய்வீகக் குணங்களின் ஆபரணங்களினால் அலங்கரிக்கப்பட்டிருங்கள். எட்டு ஆயுதங்களையும் ஏந்திக் கொண்டிருக்கும் சக்தியாக, முழுமையான விக்கிரகமாகவிருந்து, மேன்மையான வாழ்க்கை என்ற உங்கள் பாதங்களை தாமரை மலரின் மீது வைத்திருங்கள்.

சுலோகம்:
கல்வியில் முழு கவனம் செலுத்தினால், முதற் பிரிவில் ஒரு இலக்கத்தை கோருவீர்கள்.


இந்த இறைஞானம் அனைத்து மனித ஆத்மாக்களுக்குமானதாகும்.

முதன்முதலில், ஒரு கருத்தை உங்கள் மனதில் நிச்சயமாக வைத்திருக்க வேண்டும். மனித உலகின் விதையானவர் கடவுளாக இருப்பதுடன் கடவுளிடமிருந்தே நாங்கள் ஞானத்தை பெறுகின்றோம். நாங்கள் பெறுகின்ற ஞானம்; மனிதர்களுக்கு அவசியமாகும். சகல சமயத்தை சேர்ந்தவர்களுக்கும் இந்த ஞானத்தைப் பெறும் உரிமை உள்ளது. ஒவ்வொரு சமயத்தைச் சேர்ந்தவர்களின் ஞானமும் அவர்களுக்கே உரியதாக இருந்த போதிலும், சமயநூல்களும் அவர்களுக்கே உரியதாயினும், அவர்களின் அபிப்பிராயங்கள் அவர்களுக்கே உரியதாக இருப்பினும், அவர்களின் சம்ஸ்காரங்கள் அவர்களுக்கே உரியதாயினும், எது எவ்வாறாயினும் இந்த ஞானம் அனைவருக்குமானதாகும். அவர்களால் இந்த ஞானத்தைப் பெற்றுக் கொள்ள முடியாதிருக்கலாம், அவர்களால் எங்கள் குலத்திற்குள் வர முடியாதிருப்பினும், அவருடன் யோகத்தை கொண்டிருப்பதன் மூலம், அவர்களால் நிச்சயமாக தூய்மையாக முடியும், ஏனெனில் அவரே அனைவரதும்; தந்தை ஆவார். இந்தத் தூய்மையை கொண்டு அவர்களால் தத்தமது பிரிவில் நிச்சயமாக ஒரு அந்தஸ்தை கோர முடியும், ஏனெனில் மனித ஆத்மாக்கள் அனைவரும் யோகத்தின் மீது நம்பிக்கைக் கொண்டிருக்கிறார்கள். பலரும் தமக்கு முக்தி வேண்டுமென விரும்புகிறார்கள், ஆனால், இந்த யோகத்தைக் கொண்டிருப்பதனால் மாத்திரமே அவர்களால் தண்டனையில் இருந்து விடுதலை பெற்று முக்தியை பெறுவதற்கான சக்தியை பெற முடியும்.

முடிவற்ற ஓதுதல் என்றால் சதா கடவுளை நினைவு செய்வதாகும்

ஒரு கூற்று உள்ளது: உங்கள் ஒவ்வொரு சுவாசத்திலும் முடிவற்ற ஓதுதலை தொடர்ந்தும் ஓதுங்கள். இதன் மிகச்சரியான அர்த்தம் என்ன? முடிவற்ற ஓதுதல் என நாங்கள் கூறும் போது, அதன் உண்மையான அர்த்தம், எதுவுமே ஓதாமல், ஒவ்வொரு மூர்ச்சிலும் சதா உங்கள் புத்தியினால் பரமாத்மா பரமதந்தையோடு யோகம் செய்வதாகும். கடவுளின் இந்த நினைவானது எப்பொழுதுமே ஒவ்வொரு மூர்ச்சிலும் தொடர்ந்தும் இருப்பதாகும். சதா கடவுளின் இந்த நினைவே முடிவற்ற ஓதுதல் என அழைக்கப்படுகின்றது. அல்லது, வார்த்தையினால் ஏதோ ஒன்றை ஓதிக் கொண்டிருக்க, அதாவது உங்கள் மனதில் மௌனமாக இராமா, இராமா என தொடர்ந்தும் எப்பொழுதுமே கூறிக் கொண்டிருக்க முடியாது. தமது உதடுகளினால் தாம் ஓதுவதில்லை என்றும் தாம் அதனை இதயத்தில் ஓதுவதாகவும், அதுவே முடிவற்ற ஓதுதல் என்றும் மக்கள் நினைக்கிறார்கள். எவ்வாறாயினும் இது சிந்திக்க வேண்டிய விடயமாகும்: வார்த்தைகளும் முடிவற்ற ஓதுதலும் உள்ள இடத்தில்: அதனை ஓதிக் கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை. நீங்கள் அமர்ந்திருந்து உங்கள் மனதை ஒரு விக்கிரத்தின் மீது ஒருமுகப்படுத்த வேண்டியதில்லை. நீங்கள் எதனையுமே மீண்டும் மீண்டும் கூறவேண்டியதில்லை, ஏனெனில், அவர்களாலும் சதா உண்ணவோ பருகவோ முடியாது. எவ்வாறாயினும், நாங்கள் கொண்டிருக்கும் கடவுளின் நினைவானது, எப்பொழுதும் தொடர்ந்தும் இருக்கக் கூடியது, ஏனெனில் இது மிக இலகுவானதாகும். உதாரணமாக. ஒரு குழந்தை தனது தந்தையை நினைவு செய்கின்றது: அந்த நேரத்தில் தந்தையின் படத்தை அக்குழந்தை தன் முன்னால் வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை, அக்குழந்தை தனது எண்ணங்களில், வார்த்தைகளில், செயல்களில் தந்தையின் நினைவை அதாவது அவரது தொழில், அவரது செயற்பாடுகள், அவரின் குணங்கள் போன்றவற்றையே கொண்டிருக்கின்றார். அதனை நினைவு செய்வதனால், குழந்தையின் செயல்களும் தொடர்ந்தும் அவ்வாறே ஆகுகின்றது, அதுவே தந்தையை மகன் காட்டுகின்றார் என்பதாகும். உண்மையில், நாங்களும் எங்கள் இதயத்திலிருந்து ஏனைய அனைவரது நினைவுகளையும் அகற்றி, பரமாத்மா பரமதந்தையின் நினைவை மாத்திரமே கொண்டிருக்க வேண்டும். இதில், நடக்கும் போதும், அமரும் போதும், உண்ணும் போதும், பருகும் போதும் எங்களால் சதா நினைவில் தொடர்ந்தும் நிலைத்திருக்க முடியும். இந்த நினைவில் நிலைத்திருப்பதனூடாகவே எங்களால் கர்மாதீத் ஆக முடியும். இந்த இயற்கையான நினைவே முடிவற்ற ஓதுதல் என்று அழைக்கப்படுகின்றது. அச்சா.