07.11.19        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்:
இனிய குழந்தைகளே, தந்தை உங்களுக்கு ஆன்மீகக் கலையைக் கற்பிக்க வந்துள்ளார். இக்கலையின் மூலம் நீங்கள் சூரியனுக்கும், சந்திரனுக்கும் அப்பாலுள்ள சாந்தி தாமத்துக்குச் செல்கின்றீர்கள்.

கேள்வி:
தமது விஞ்ஞானத்தைப் பற்றிய பெருமையைக் கொண்டிருப்பவர்களுக்கும், தமது மௌனத்தைப் பற்றிய பெருமையைக் கொண்டிருப்பவர்களுக்கும் இடையிலுள்ள வேறுபாடு என்ன?

பதில்:
தமது விஞ்ஞானத்தைப் பற்றிய பெருமையைக் கொண்டிருப்பவர்கள், சந்திரனுக்கும், நட்சத்திரங்களுக்கும் செல்வதற்குப் பெருமளவு பணத்தைச் செலவு செய்கிறார்கள். அவர்கள் தமது சரீரத்தைப் பணயம் வைப்பதுடன், தங்களது ரொக்கற் பழுதடைந்து விடுமோ எனப் பயப்படுகின்றனர். உங்கள் மௌனத்தையிட்டுப் பெருமையுடன் இருக்கும் குழந்தைகளாகிய ஒரு சத செலவுமின்றி சந்திரனுக்கும், நட்சத்திரங்களுக்கும் அப்பாலுள்ள பரந்தாமத்திற்குச் செல்கின்றீர்கள். நீங்கள் உங்களுடைய சரீரத்தை இங்கு விட்டுச்செல்வதனால் உங்களுக்கு எவ்வித பயமும் இருப்பதில்லை.

ஓம் சாந்தி.
ஆன்மீகத் தந்தை இங்கிருந்து ஆன்மீகக் குழந்தைகளுக்கு விளங்கப்படுத்துகின்றார். சந்திரனுக்குச் செல்வதற்காகத் தொடர்ந்தும் முயற்சி செய்து கொண்டிருக்கின்ற விஞ்ஞானிகளைப் பற்றிக் குழந்தைகள் கேள்விப்படுகிறார்கள். சந்திரனுக்கு செல்ல முயற்சிப்பதிலேயே அம்மக்கள் பெருமளவு பணத்தைச் செலவு செய்கின்றனர். எனினும், அவர்களுக்கு அங்கு செல்வதற்கு அதிக பயம் உள்ளது. இப்பொழுது உங்களைப் பற்றிச் சிந்தித்துப் பாருங்கள்! உங்கள் வசிப்பிடம் எது? அவர்கள் சந்திரனுக்குச் செல்கின்றார்கள். ஆனால் நீங்களோ சூரியனுக்கும், சந்திரனுக்கும் அப்பாலுள்ள பரந்தாமத்திற்குச் செல்கின்றீர்கள். அந்த மக்கள் மேலே அங்கு செல்லும்பொழுது, அவர்களுக்கு ஏராளமான பணம் வெகுமதியாக அளிக்கப்படுகின்றது. அவர்கள் தமது பயணத்திலிருந்து திரும்பி வந்தவுடன், அவர்கள் நூறாயிரக்கணக்கான பரிசுகளைப் பெற்றுக்கொள்கின்றனர். அவர்கள் மேலே செல்லும்பொழுது தங்கள் உடலைப் பணயம் வைத்தே செல்கின்றனர். அவர்கள் தமது விஞ்ஞானத்தைப் பற்றிப் பெருமை கொள்கின்றார்கள், நீங்கள் உங்களுடைய மௌனத்தையிட்டுப் பெருமை கொள்கின்றீர்கள். பிரம்ம தத்துவமான, அமைதி தாமத்துக்கு ஆத்மாக்களாகிய நீங்கள் திரும்பவுள்ளீர்கள் என்பதை அறிவீர்கள். ஆத்மாக்களே அனைத்தையும் செய்கின்றனர். அந்த ஆத்மாக்களும் தங்களுடைய சரீரத்துடன் மேலே செல்கின்றனர். அது மிக அபாயகரமானது. அவர்கள் மேலிருந்து கீழே வீழ்ந்து மரணிக்கும் பயத்தைக் கொண்டுள்ளனர். அவை அனைத்தும் பௌதிகக் கலைகளாகும். தந்தை உங்களுக்கு ஆன்மீகக் கலையைக் கற்பிக்கின்றார். இக்கலையைக் கற்பதன் மூலம் நீங்கள் மிகப்பெரிய பரிசைப் பெற்றுக் கொள்கின்றீர்கள். இது நீங்கள் செய்யும் முயற்சிக்கேற்ப, வரிசைக்கிரமமாக 21 பிறவிகளுக்கு நீடிக்கப்போகும் பரிசாகும். தற்காலத்தில்; அரசாங்கம் ஓர் அதிர்ஷ்டலாபச் சீட்டை வைத்திருக்கின்றது. இத்தந்தை உங்களுக்கு ஒரு பரிசு கொடுக்கிறார். அவர் உங்களுக்கு என்ன கற்பிக்கின்றார்?; அவர் அதிமேலேயுள்ள உங்கள் வீட்டுக்கு உங்களை அழைத்துச் செல்கின்றார். உங்களுடைய வீடு எங்கே இருக்கின்றது என்றும், நீங்கள் இழந்த இராச்சியம் எங்கே இருக்கின்றது என்றும், நீங்கள் இப்பொழுது நினைவு செய்கின்றீர்கள். இராவணன் உங்களிடமிருந்து அதை அபகரித்துவிட்டான். இப்பொழுது மீண்டும் ஒருமுறை நீங்கள் உங்களுடைய உண்மையான வீட்டிற்குச் செல்ல இருப்பதுடன், உங்கள் இராச்சியத்தையும் கோரிக்;கொள்வீர்கள். முக்திதாமமே உங்களுடைய வீடு என்பது எவருக்குமே தெரியாது. இப்பொழுது தந்தை தனது குழந்தைகளுக்குக் கற்பிப்பதற்காக எங்கிருந்து வருகிறார் என்று பாருங்கள்;! அவர் வெகுதொலைவில் இருந்து வருகிறார்! ஆத்மாக்களும் ரொக்கற்றுகளே, அவர்கள் சந்திரனிலும், நட்சத்திரங்களிலும் என்ன இருக்கின்றது என்பதை மேலே சென்று பார்க்க முயற்சிக்கின்றார்கள். இங்குள்ள அரங்கங்களில் உள்ள வெளிச்சத்தைப் போன்றே சந்திரனும் நட்சத்திரங்களும் இந்த மேடைக்கான வெளிச்சங்களாகும் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் புரிந்து கொள்கின்றீர்கள். நீங்கள் நூதனசாலைகளில் மின்விளக்கு அலங்காரங்களையும் கொண்டுள்ளீர்கள். பின்னர் இது சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள் வெளிச்சம் கொடுக்கும் எல்லையற்ற உலகமாக ஆகும். சூரியனும், சந்திரனும் தேவர்கள் என்று மக்கள் நம்புகின்றனர். ஆனால் அவர்கள் தேவர்கள் அல்லர். எவ்வாறு தந்தை வந்து உங்களை சாதாரண மனிதரிலிருந்து தேவர்களாக மாற்றுகின்றார் என்பதை இப்பொழுது நீங்கள் புரிந்துகொண்டுள்ளீர்கள். ஞான சூரியனும், ஞானச்சந்திரனும் அதிர்ஷ்ட நட்சத்திரங்களும் இருக்கின்றனர். இந்த ஞானத்தின் மூலம் குழந்தைகளாகிய நீங்கள் முக்தியைப் பெறுகின்றீர்கள். நீங்கள் மிகவும் தொலை தூரத்திற்குச் செல்கின்றீர்கள்! தந்தை வீட்டிற்குத் திரும்புவதற்கான வழியை உங்களுக்குக் காட்டியுள்ளார். தந்தையின்றி எவராலும் வீடு திரும்ப முடியாது. தந்தை வந்து உங்களுக்குக் கற்பிக்கும் பொழுது நீங்கள் இதனைப்புரிந்து கொள்கின்றீர்கள். ஆத்மாவாகிய நீங்கள் தூய்மையாகினால் மாத்திரமே உங்களால் வீடு திரும்ப முடியும் என்பதை நீங்கள் புரிந்து கொள்கின்றீர்கள். நீங்கள் யோகசக்தியின் மூலமாகவோ அல்லது தண்டனையின் மூலமாகவோ தூய்மையாக வேண்டும். தந்தை தொடர்ந்தும் கூறுகின்றார்: நீங்கள் எவ்வளவுக்கு அதிகமாக அவரை நினைவு செய்கின்றீர்களோ, அவ்வளவுக்குத் தூய்மையாகுவீர்கள். அவரை நினைவு செய்யாததால் நீங்கள் தூய்மையற்றவர்களாக இருப்பதுடன் பெருமளவு தண்டனையையும் அனுபவித்து நீங்கள் கொண்டிருந்த அந்தஸ்தும் அழிக்கப்பட்டுவிடும். நீங்கள் எவ்வாறு வீடு திரும்பலாம் என்பதைத் தந்தை தானே இங்கே அமர்ந்திருந்து உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார். பிரம்மதத்துவம் என்றால் என்னவென்றோ, சூட்சும உலகம் என்றால் என்னவென்றோ நீங்கள் அறிந்திருக்கவில்லை. ஆரம்பத்தில் மாணவர்களுக்கு எதுவுமே தெரியாது ஆனால் அவர்கள் கல்வி கற்க ஆரம்பிக்கும்பொழுது புரிந்துகொள்வார்கள். ஞானத்தில் சில கீழ் நிலையிலும், சில அதிமேல் நிலையிலும் உள்ளன. நீங்கள் ஜ- சி- எஸ் பரீட்சை எழுதினால் நீங்கள் ஞானம் நிறைந்தவர் என்று கூறப்படுகின்றது. இதைவிட உயர்ந்த ஞானம் எதுவுமில்லை. நீங்கள் அத்தகைய மேன்மையான ஞானத்தைக் கற்கின்றீர்கள். தந்தை தூய்மையாக்குவதற்கான வழியை உங்களுக்குக் காட்டுகின்றார். குழந்தைகளே, நீங்கள் என்னை மாத்திரம் நினைவு செய்தால், தூய்மையற்றவரிலிருந்து தூய்மையாகுவீர்கள். ஆதியில் ஆத்மாக்களாகிய நீங்கள் தூய்மையாகவே இருந்ததுடன் அப்பாலுள்ள உங்கள் வீட்டிலும் வசித்தீர்கள். நீங்கள் ஜீவன் முக்தியில் சத்தியயுகத்தில் இருந்தபொழுது, மற்றைய அனைவருமே முக்தி தாமத்தில் இருந்தார்கள். முக்தி தாமத்தையும், ஜீவன்முக்திதாமத்தையும் நீங்கள் சிவாலயம் என்று அழைக்கலாம். சிவபாபா முக்தி தாமத்தில் வசிக்கின்றார்;. ஆத்மாக்களாகிய குழந்தைகளும் அங்கேயே வசிக்கின்றீர்கள். இதுவே அதியுயர்ந்த ஆன்மீக ஞானமாகும். தாம் சென்று சந்திரனில் வசிக்க வேண்டுமென்று அவர்கள் கூறுகின்றனர். அவர்கள் பெருமளவு முயற்சிக்கின்றனர். அவர்கள் தமது தைரியத்தைக் காண்பிக்கின்றார்கள். அவர்கள் பலமில்லியன் மைல்கள் மேலே செல்கின்றனர். எவ்வாறாயினும் அவர்களது ஆசைகள் நிறைவடைவதில்லை, ஆனால் உங்கள் ஆசைகள் நிறைவேற்றப்படுகின்றன. அவர்கள் போலியான பௌதிக பெருமையைக்; கொண்டுள்ளனர் நீ;ஙகள் ஆன்மீகப் பெருமையைக் கொண்டுள்ளீர்கள். அவர்கள் மாயையின் விடயங்களுக்காக பெருமளவு தைரியத்தைக் காட்டுகின்றார்கள். அவர்களுக்குப் பெருமளவு கைதட்டல்களும், பாராட்டுகளும் வழங்கப்படுகின்றன. அவர்கள் பெருமளவு பணத்தையும் பெற்றுக்கொள்கின்றார்கள். அது 5 தொடக்கம் 10 மில்லியன் ரூபாய்களாகும். அவர்கள் பெறுகின்ற அனைத்துப் பணமும் அழியப்போகின்றது என்ற ஞானத்தை குழந்தைகளாகிய நீங்கள் கொண்டுள்ளீர்கள். சில நாள்களே எஞ்சியுள்ளன. இன்று அங்கே என்ன இருக்கின்றதோ நாளை அங்கு என்ன இருக்குமோ? இன்று நீங்கள் நரகவாசிகள், நாளை நீங்கள் சுவர்க்க வாசிகள் ஆகுவீர்கள். இதற்குப் பெருமளவு நேரம் எடுக்காது. அவர்களுடையது பௌதீக சக்தி, ஆனால் உங்களுடையதோ நீங்கள் மாத்திரமே அறிந்த ஆன்மீக சக்தியாகும். பௌதிக சக்தியினால் அவர்களால் எவ்வளவு தூரத்திற்கு செல்லமுடியும்? அவர்கள் சந்திரனையும், நட்சத்திரங்களையும் அடையலாம். ஆனால் பி;ன்னர் யுத்தம் ஆரம்பமாகி அவர்கள் அனைவரும் இறந்து விடுவார்கள். அவர்களின் கலை அங்கேயே முடிந்துவிடும். அது அதிமேலான பௌதிகக் கலையாகும். உங்களுடையது அதிமேலான ஆன்மீகக் கலையாகும். இனிய வீடென்று அழைக்கப்படுகின்ற அமைதி தாமத்திற்கு நீங்கள் செல்வீர்;கள். அம்மக்கள் மிகவும் மேலே செல்கின்றார்கள். நீங்கள் எத்தனை மைல்கள் மேலே செல்கின்றீர்கள் எனக் கணக்கிடுங்கள். நீங்கள் யார்? ஆத்மாக்கள்! தந்தை வினவுகின்றார் நான் எத்தனை மைல்கள் தொலைவில் வசிக்கின்றேன் என உங்களால் கணக்கிட முடியுமா? அவர்கள் திரும்ப முன்னரே எத்னை மைல்கள் சென்றார்கள் என்று அவர்களால் கணக்கிடமுடியும் அவர்கள் மிகவும் எச்சரிக்கையுடன் தாம் செல்லும் பாதையையும், திரும்பும் பாதையையும் பற்றி அவதானமாயிருக்கின்றனர். அவர்கள் பெருமளவு சத்தத்தை உருவாக்குகின்றனர். நீங்கள் எவ்வாறான சத்தம் செய்கின்றீர்கள்? நீங்கள் எங்கு செல்கின்றீர்கள் என்றோ எவ்வாறு திரும்புகின்றீர்கள் என்றோ எவருக்கும் தெரியாது. நீங்கள் பெறும் பரிசை நீங்கள் மட்டுமே அறிவீர்கள். இது அற்புதமாகும்! அது பாபாவின் அற்புதமாகும். இதைப் பற்றி எவருக்கும் தெரியாது. இது ஒரு புதிய விடயமல்ல என்று நீங்கள் கூறலாம். ஒவ்வொரு 5000 வருடங்களுக்கும் அவர்கள் தொடர்ந்தும் இதனைப் பயிற்சி செய்வார்கள். இந்த உலக நாடகத்தின் ஆரம்பம், மத்தி, இறுதியின் கால அளவை நீங்கள் மிகத்தெளிவாகப் புரிந்து கொண்டுள்ளீர்கள். ஆகவே பாபா உங்களுக்கு என்ன கற்பிக்கின்றார் என்பதையிட்டு நீங்கள் பெருமைப்பட வேண்டும். நீங்கள் மேன்மையான முயற்சியைச் செய்வதுடன் மீண்டும் இதனைச் செய்வீர்கள். வேறு எவருக்கும் இந்த விடயங்கள் தெரியாது. தந்தை மறைமுகமானவர். அவர் தினமும் உங்களுக்குப் பெருமளவு விளங்கப்படுத்துகின்றார். அவர் உங்களுக்கு பெருமளவு ஞானத்தைக் கொடுக்கின்றார். அம்மக்கள் ஓர் எல்லைக்குட்பட்ட இடத்திற்குச் செல்கின்றார்கள். ஆனால் நீங்களோ எல்லையற்றதிற்குச் செல்கின்றீர்கள். அவர்கள் சந்திரனுக்கும் செல்கின்றனர். ஆனால் அது பெரிய ஒளியாகும். வேறு எதுவுமில்லை. அங்கிருந்து பார்த்தால் பூமி மிகவும் சிறியதாகத் தென்படும். அவர்களின் உலக ஞானத்திற்கும் உங்களின் ஞானத்திற்கும் இடையில் பெருமளவு வேறுபாடு உள்ளது. ஆத்மாக்களாகிய நீங்கள் மிகவும் சிறியவர்கள், ஆனால் நீங்கள் மிக வேகமான ரொக்கற் ஆவீர்கள். ஆத்மாக்கள் மேலே வசிக்கின்றனர். பின்னர் அவர்களுடைய பாகத்தை நடிப்பதற்காக கீழிறங்கி வருகின்றனர். அவர் பரமாத்மா, ஆனால் அவர் எவ்வாறு வணங்கப்படுவார்? பூஜித்தல் நிச்சயமாக இடம்பெற வேண்டும். அரைக்கல்பத்துக்கு பகலாகிய ஞானமும், மற்றைய அரைக்கல்பத்துக்கு இரவாகிய பக்தியும் இருக்கின்றது என பாபா விளங்கப்படுத்தியுள்ளார். சங்கமயுகத்தில் நீங்கள் ஞானத்தைப் பெறுகின்றீர்கள். சத்தியயுகத்தில் இந்த ஞானம் எதுவுமே இருக்காது. இதனாலேயே இந்த யுகம் அதி மங்களகரமான சங்கமயுகம் எனப்படுகின்றது. பாபா உங்கள் அனைவரையும் அதிமேன்மையானவர்களாக ஆக்குகின்றார். ஆத்மாக்களாகிய நீங்கள் வெகு தொலைவிற்குச் செல்கின்றீர்கள். இதையிட்டு உங்களுக்கு சந்தோஷம் ஏற்படுகின்றது. அவர்கள் பெருமளவு பணத்தைப் பெறவேண்டும் என்பதற்காகத் தங்களது கலையைக் காட்டுகின்றார்கள். அவர்கள் எவ்வளவுதான் பெற்றுக்கொண்டாலும் அவற்றில் எதையுமே அவர்களால் கொண்டுசெல்ல இயலாது என்பதை நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். அனைவருமே மரணிக்கப்போகின்றனர் ஏனெனில் அனைத்தும் அழியப்போகின்றது. நீங்கள் இப்போது விலைமதிக்க முடியாத பெருமளவு பெறுமதி வாய்ந்த இரத்தினங்களைப் பெற்றுக்கொள்கின்றீர்கள். ஒவ்வொரு வாசகமும் நூறாயிரக்கணக்கான பெறுமதி வாய்ந்ததாகும். அவற்றை நீண்டகாலமாக நீங்கள் செவிமடுத்தீர்கள். கீதையில் மிகவும் பெறுமதி வாய்ந்த ஞானம் உள்ளது. இந்த கீதை மாத்திரமே மிகப் பெறுமதி வாய்ந்த கீதை என்று அழைக்கப்படுகின்றது. கடவுளின் மேன்மையான வழிகாட்டல்களைக் கொண்டுள்ள கீதையே அனைத்து சமய நூல்களினதும் இரத்தினமாகும். அவர்கள் தொடர்ந்தும் கீதையைக் கற்கின்றனர். ஆனால் அவர்கள் அதன் அர்த்தத்தையும், கீதையைக் கற்பதனால் என்ன நிகழும் என்பதையும் புரிந்து கொள்வதில்லை. தந்தை கூறுகிறார்: இப்பொழுது என்னை நினைவு செய்யுங்கள், நீங்கள் தூய்மையாகுவீர்கள். அவர்கள் கீதையைக் கற்றாலும், அவர்களில் ஒருவரேனும் தந்தையுடன் யோகம் செய்வதில்லை. அவர்கள் தந்தையை சர்வவியாபகர் என அழைக்கின்றனர். அவர்களால் தூய்மையாக முடியாது. இலக்ஷ்மி, நாராயணன் படம் இப்பொழுது உங்களின் முன்னால் உள்ளது. அவர்கள் தெய்வீக குணங்களைக் கொண்டுள்ளதால் தேவர்கள் என்று அழைக்கப் படுகின்றார்கள். ஆத்மாக்களாகிய நீங்கள் தூய்மையாக வேண்டும். பின்னர் அனைவரும் வீடு திரும்ப வேண்டும். புதிய உலகில் அதிக மனிதர்கள் இருப்பதில்லை. மற்றைய ஆத்மாக்கள் அனைவரும் வீடு திரும்ப வேண்டும். உங்களை அதி மேன்மையானவர்கள் ஆக்கி சாதாரண மனிதரிலிருந்து தேவர்களாக மாற்றும் மிகவும் அற்புதமான ஞானத்தைத் தந்தை கொடுக்கின்றார். ஆகையால் நீங்கள் அத்தகைய கல்வியில் பெருமளவு கவனம் செலுத்தவேண்டும். நீங்கள் சென்ற சக்கரத்தில் எத்தகைய கவனம் செலுத்தினீர்களோ, அதே கவனத்தையே நீங்கள் இப்பொழுதும் செலுத்துவீர்கள் என்பது புரிந்துகொள்ளப்படுகின்றது. இதனை நீங்களும் புரிந்து கொள்ளலாம். உங்கள் சேவையின் செய்தியைச் செவிமடுப்பதில் தந்தையும் பூரிப்படைகின்றார். நீங்கள் தந்தைக்கு ஒருபொழுதும் எழுதாவிடின் உங்கள் புத்தியின் யோகமானது கற்களையும் கூழாங்கற்களையும் நோக்கி ஈர்க்கப்பட்டுள்ளது என்றும், ஆத்மாக்களாகிய நீங்கள் சரீர உணர்வினால் தந்தையை மறந்துவிட்டீர்கள் என்றும் புரிந்துகொள்ளப்படுகின்றது. ஒரு காதல் திருமணத்தைப் பற்றிச் சிந்தித்துப் பாருங்கள். அவர்கள் ஒருவருக்கொருவர் பெருமளவு அன்பு கொண்டிருக்கின்றனர். எவ்வாறாயினும் பின்னர் சிலர் தமது மனதை மாற்றி, தமது மனைவியைக் கொன்று விடுகின்றனர். உங்கள் காதல் திருமணம் அந்த ஒருவருடனாகும். தந்தை வந்து தனது அறிமுகத்தைக் கொடுக்கின்றார். அவரின் அறிமுகத்தை நீங்கள் இயல்பாகப் பெற்றுக்கொள்வதில்லை. தந்தை வரவேண்டும். உலகம் பழையதானதும் தந்தை வருகின்றார். அவர் பழைய உலகைப் புதிதாக்க நிச்சயமாக சங்கமயுகத்தில் மாத்திரம் வருகின்றார். புதிய உலகை ஸ்தாபிப்பதே தந்தையின் கடமையாகும். அவர் உங்களை சுவர்க்கத்தின் அதிபதிகள் ஆக்குகின்றார். ஆகவே தந்தை மீது நீங்கள் பெருமளவு அன்பு கொண்டிருக்க வேண்டும். பின்னர் ஏன் நீங்கள் பாபா நான் உங்களை மறந்துவிட்டேன் என்று கூறுகின்றீர்கள். தந்தை மிகவும் மேன்மையானவர். அவரைவிட மேன்மையாவர் வேறெவரும் இல்லை. மக்கள் முக்தி பெறுவதற்கு கடுமையாக முயற்சிக்கின்றனர். அவர்கள் பல வழிகளில் முயற்சிக்கின்றனர். பெருமளவு பொய்களும், ஏமாற்றுதல்களும் இடம்பெறுகின்றது. மகாரிஷி போன்றோர் பெரியளவில் போற்றப் படுகின்றார்கள். பின்னர் அரசாங்கம் அவர்களுக்கு 10 அல்லது 20 ஏக்கர் நிலம் கொடுக்கின்றது. அது அரசாங்கம் மதப்பற்றில்லாதது என்றல்ல, அங்கு மதப்பற்றுள்ள சில மந்திரிகளும், மதப்பற்றில்லாத சில மந்திரிகளும் உள்ளனர். சிலர் மதத்தையே நம்புவதில்லை. மதமே சக்தி என்று கூறப்படுகின்றது. முழு பாரதத்தையே விழுங்குமளவிற்கு கிறீஸ்தவர்கள் பெருமளவு பலத்தைக் கொண்டிருந்தனர் இப்பொழுது பாரதத்தில் எந்தப்பலமுமே எஞ்சியில்லை. அங்கே பெருமளவு சண்டை சச்சரவுகள் போன்றன இருக்கின்றன. இதே பாரதம் முன்னர் எவ்வாறிருந்தது தந்தை எங்கு, எவ்வாறு வருகின்றார் என்று எவருக்கும் தெரியாது. எவருக்கும் எதுவுமே தெரியாது. முதலைகள் இருக்கும் தூய்மையற்ற மிகவும் சீரழிந்த உலகிற்கே தந்தை வருகிறார் என்பதை நீங்கள் புரிந்துள்ளீர்கள். மக்கள் எதையுமே உண்ணக்கூடியவர்களாக இருக்கின்றனர். பாரதமக்களே பெரும்பாலும் வைஷ்ணவர்களாக இருந்தனர். இதுவே வைஷ்ணவ இராச்சியம். அப்படித்தானே? அந்த மகத்தான தூய தேவர்களுக்கும் அனைத்து வகையானவற்றையும் உண்பவர்களாக இப்பொழுதிருக்கும் மக்களுக்கும் இடையில் பெருமளவு வேறுபாடு இருக்கின்றது! இங்கே நரமாமிசத்தை உண்பவர்களும் இருக்கின்றார்கள். பாரதத்தின் நிலைமை என்னவாகியுள்ளது? தந்தை இப்பொழுது அனைத்து இரகசியங்களையும் விளங்கப்படுத்துகின்றார். பாபா ஆரம்பத்திலிருந்து இறுதிவரை அனைத்து ஞானத்தையும் உங்களுக்குக் கொடுக்கின்றார். இந்த பூமிக்கு முதலில் வந்தவர்கள் நீங்களே, அதன் பின்னர் சனத்தொகை அதிகரிக்கின்றது. சிறிது காலத்தின் பின் துன்பத்தின் அழுகை இருப்பதுடன், அவர்கள் தொடர்ந்தும் அழுவார்கள். சுவர்க்கத்தில் பெருமளவு சந்தோஷம் இருப்பதைப் பாருங்கள்! உங்கள் இலக்கினதும், குறிக்கோளினதும் சின்னத்தைப் பாருங்கள். இவை அனைத்தையும் குழந்தைகளாகிய நீங்கள் கிரகிக்க வேண்டும். இது மிகவும் மகத்தான கல்வியாகும்! தந்தை அனைத்தையும் மிகத் தெளிவாக விளங்கப் படுத்துகின்றார்! அவர் மணிமாலையின் இரகசியத்தையும் விளங்கப்படுத்துகின்றார். குஞ்சம் சிவபாபாவைக் குறிக்கின்றது. பின்னர் இது குடும்பப் பாதையாகையால், அங்கு இரட்டை மணிகள் இருக்கின்றன. தனிவழிப்பாதையில் இருப்பவர்களுக்கு மணிமாலையைச் சுழற்றுவதற்கு எந்த உரிமையுமில்லை. இது தேவர்களின் மணிமாலையாகும். எவ்வாறு அவர்கள் இராச்சியத்தைக் கோரிக்கொண்டனர்? உங்;களுக்குள்ளேயும் நீங்கள் வரிசைக்கிரமமானவர்கள். உங்களில் சிலரால் எவருக்கும் பயமின்றி விளங்கப்படுத்த முடியும். நீங்கள் கூறுகின்றீர்கள்: வாருங்கள் வேறு எவருமே கூறமுடியாத விடயங்களை நாங்கள் உங்களுக்குக் கூறுகின்றோம். சிவபாபாவைத் தவிர வேறு எவருக்குமே அது தெரியாது. அவர்களுக்கு இராஜயோகம் கற்பித்தவர் யார்? அவர்கள் எவ்வாறு 84 பிறவிகள் எடுத்து, எவ்வாறு தேவர்கள், சத்திரியர்கள், வைசியர்கள், சூத்திரர்களாகினார்கள் என அவர்களுடன் இருந்து மிக இனிமையான முறையில் அவர்களுக்கு விளங்கப் படுத்த வேண்டும். தந்தை உங்களுக்குக் கொடுக்கின்ற ஞானம் மிக இலகுவானது. ஆனால் நீங்களும் தூய்மையாக வேண்டும், அப்பொழுதே உங்களால் ஓர் உயர்ந்த அந்தஸ்த்தைக் கோரிக்கொள்ள முடியும். நீங்களே முழுஉலகிலும் அமைதியை ஸ்தாபிப்பவர்கள். அந்த இராச்சியத்தின் பாக்கியத்தை தந்தை உங்களுக்குக் கொடுக்கின்றார். அவரே அருள்பவர்;;: அவர் எதனையும் ஏற்றுக்;;கொள்வதில்லை. இது உங்கள் கல்விக்கான பரிசாகும். வேறு எவராலும் உங்களுக்கு இந்தப் பரிசைக்கொடுக்க முடியாது. ஆகவே அத்தகைய தந்தையை ஏன் அன்புடன் நினைவு செய்யக்கூடாது? உங்கள் லௌகீகத் தந்தையை வாழ்நாள் முழுவதும் நினைவு செய்கின்ற பொழுது, உங்களால் ஏன் பரலோகத் தந்தையை நினைவு செய்ய இயலாதுள்ளது. இது ஓரு யுத்தகளம் என்று தந்தை உங்களுக்குக் கூறியுள்ளார். தூய்மையாகுவதற்கு காலமெடுக்கும்: யுத்தம் முடியும் வரை காலமெடுக்கும். ஆரம்பத்தில்; வந்தவர்கள் முற்றிலும் தூய்மையாகுவார்கள் என்றில்லை. மாயையுடனான உங்கள் யுத்தம் பெருமளவு விசையுடன் இடம்பெறுகின்றது என பாபா கூறுகின்றார். மிக நல்ல குழந்தைகளையுமே வெற்றி கொள்ளும் அளவுக்கு மாயை மிகவும் சக்தி வாய்ந்தவள். வீழ்ந்தவர்களால் எவ்வாறு முரளியைச் செவிமடுக்க முடியும்? அவர்கள் தமது நிலையத்துக்கே செல்வதில்லை, ஆகையால், அவர்களால் எவ்வாறு எதையும் கண்டுகொள்ள முடியும்? மாயை அவர்களை ஒரு சதத்திற்கேனும் பெறுமதியற்றவர்களாக ஆக்கிவிட்டாள். அவர்கள் முரளியைக் கற்றால் அவர்களால் எச்சரிக்கையாக இருக்க முடியும். எவ்வாறாயினும் அவர்கள் அசுத்தச் செயல்கள் செய்வதில் மும்மரமாக இருக்கின்றார்கள். அவர்கள் எவ்வாறு மாயையினால் கோற்கடிக்கப்பட்டார்கள், என்பதையும் பாபா என்ன எங்களுக்கு விளங்கப்படுத்துகிறார், இருப்பினும் அவர்கள் என்ன செய்கிறார்கள்! என்பதை ஒரு விவேகமான குழந்தை அவர்களுக்கு விளங்கப்படுத்த வேண்டும். மாயை மற்றவர்களை விழுங்குவதை நீங்கள் பார்க்கும்பொழுது, நீங்கள் அவர்களைப் பாதுகாக்க முயற்சி செய்ய வேண்டும். அப்பொழுது மாயை அவர்களை முழுமையாக விழுங்கமாட்டாள். அவர்கள் மீண்;டும் உணர்வுக்குக் கொண்டுவரப்பட வேண்டும். அல்லாவிடின், அவர்கள் சற்குருவின் பெயரை இழிவுபடுத்துவதனால் அவர்களால் ஓர் உயர்ந்த அந்தஸ்த்தைக் கோரிக்கொள்ள முடியாது. அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தந்தை தாயாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும், நினைவுகளும், காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கின்றார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. தந்தையிடமிருந்து மௌனக் கலையைக் கற்று இந்த எல்லைக்குட்பட்ட உலகிற்கு அப்பாலுள்ள எல்லையற்ற உலகிற்குச் செல்லுங்கள். இந்த அற்புதமான ஞானத்தை எங்களுக்குக் கொடுப்பதன் மூலம், அத்தகைய மகத்தான பரிசைத் தந்தை எங்களுக்குக் கொடுத்துள்ளார். எனவே, அந்த போதை இருக்க வேண்டும்.

2. நீங்கள் மிக இனிமையான முறையில் பயமற்றுச் சேவை செய்யவேண்டும். மாயையுடனான யுத்தத்தில் சக்தி வாய்ந்தவர்களாக இருந்து அவளை வெற்றி கொள்ளுங்கள். முரளியைச் செவிமடுத்து எச்சரிக்கையாக இருப்பதுடன், மற்றவர்களையும் எச்சரிக்கையாக இருக்கத் தூண்டுங்கள்.


ஆசீர்வாதம்:
சுயராச்சியத்திற்கான சம்ஸ்காரங்களினால் எதிர்கால இராச்சியத்திற்கான உரிமையை கோருகின்ற ஒரு பாக்கியசாலி ஆத்மா ஆகுவீர்களாக.

நீண்ட காலத்திற்கு உங்களையே நீங்கள் ஆட்சிசெய்கின்ற சம்ஸ்காரங்கள், நீண்ட காலத்திற்கு எதிர்கால இராச்சியத்தை நீங்கள் ஆளுவதற்கு உரிமையுடையவர்களாக உங்களை ஆக்குகிறது. நீங்கள் மீண்டும் மீண்டும் ஆதிக்கத்திற்கு உள்ளாகி, உரிமை கோரும் சம்ஸ்காரங்களை கொண்டிருக்காது விட்டால், தம்மைத்தாமே ஆட்சி செய்கின்ற இராச்சியத்தில் நீங்கள் இருப்பீர்களே அல்லாது நீங்கள் இராச்சிய பாக்கியத்தைப் பெற மாட்டீர்கள். எனவே, ஞானக் கண்ணாடியில் உங்கள் பாக்கிய ரூபத்தைப் பாருங்கள். இதனை நீண்ட காலத்திற்கு பயிற்சி செய்வதனால், உங்களுடைய விசேடமான ஒத்துழைக்கின்ற பணியாட்களை, இராச்சியத்தில் உங்கள் கட்டுப்பாட்டில் பணியாற்றும் உங்கள் சகபாடிகளாக ஆக்கிக் கொள்ள முடியும். நீங்கள் ஓர் அரசர் ஆகினால் மாத்திரமே நீங்கள் ஒரு பாக்கியசாலி ஆத்மா எனப்படுவீர்கள்.

சுலோகம்:
சக்காஷ் கொடுக்கின்ற சேவையை செய்ய வேண்டுமாயின், எல்லையற்ற ஆர்வமின்மை என்ற உங்கள் மனோபாவம் வெளிப்படட்டும்.