07.11.23        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்: இனிய குழந்தைகளே, எச்சரிக்கையாக இருப்பதுடன் கல்வியிலும் முழுக் கவனம் செலுத்துங்கள். சிவபாபாவுடன் நீங்கள் ஒரு நேரடித் தொடர்பு கொண்டிருப்பதாக நினைக்காதீர்கள். இவ்வாறு கூறுவதும் சரீர உணர்வேயாகும்.

பாடல்:
எவ்வாறு பாரதம் அழிவற்றதொரு யாத்திரை ஸ்தலமாகும்?

பதில்:
பாரதமே தந்தையின் பிறப்பிடம் என்பதாலாகும். அது அழிவற்றதொரு பூமி ஆகும். சத்திய, திரேதா யுகங்களில் அழிவற்ற பூமியில், உயிருள்ள தேவர்கள் ஆட்சி செய்தார்கள். அந்நேரத்தில் பாரதம் சிவாலயம் என அழைக்கப்பட்டது. பின்னர் பக்தி மார்க்கத்தில் அவர்கள் உயிரற்ற விக்கிரகங்களைச் செய்து, அவற்றைப் பூஜித்தார்கள். அவர்கள் பல சிவாலயங்களையும் உருவாக்கினார்கள். ஆதலால் அது அந்நேரத்திலும் ஒரு யாத்திரை ஸ்தலமாகவே இருந்தது. இதனாலேயே பாரதத்தை அழிவற்றதொரு யாத்திரை ஸ்தலம் என்றும் அழைக்க முடியும்.

பாடல்:
ஓ இரவுப் பயணியே களைப்படையாதீர், விடியற்பொழுது வெகு தொலைவில் இல்லை...

ஓம் சாந்தி.
ஓ இரவுப் பயணிகளே, களைப்படைய வேண்டாம் என உங்களை எச்சரிப்பவர்; யார்? சிவபாபாவே இதைக் கூறுகிறார். குழந்தைகளிற்; சிலர், சிவபாபாவே தங்களுக்கு அனைத்தும் என நினைப்பதால் அவருடன் மாத்திரமே தொடர்பு கொண்டுள்ளனர். எவ்வாறாயினும், அவரும் பிரம்மாவின் வாய் மூலமாக மாத்திரம் பேசுகிறார், இல்லையா? சிவபாபா, தங்களை நேரடியாகத் தூண்டுவதாகச் சிலர் நினைக்கிறார்கள். ஆயினும் அவ்வாறு நினைப்பது தவறு. சிவபாபா நிச்சயமாக பிரம்மாவின் மூலமே கற்பித்தல்களைக் கொடுப்பார். அவர் உங்களுக்கு விளங்கப்படுத்துகிறார்: குழந்தைகளே! களைப்படையாதீர்கள்! நீங்கள் சிவபாபாவுடன் ஒரு தொடர்பைக் கொண்டிருப்பினும் சிவபாபா, 'மன்மனாபவ!" என்றே கூறுகிறார். பிரம்மாவும் 'மன்மனாபவ!" என்றே கூறுகிறார். பிரம்மகுமாரர்களும், பிரம்மகுமாரிகளும் 'மன்மனாபவ!" என்றே கூறுகின்றனர். எவ்வாறாயினும், எச்சரிப்பதற்கு ஒரு வாய் தேவைப்படுகிறது. குழந்தைகளில் சிலர் தங்களுடைய தொடர்பு அந்த ஒரேயொருவருடனேயே என நினைக்கிறார்கள். எவ்வாறாயினும், அவர் பிரம்மாவினூடாகவே வழிகாட்டல்களைக் கொடுப்பார், இல்லையா? நீங்கள் வழிகாட்டல்கள் முதலியவற்றை அவரிடமிருந்து தொடர்ந்து நேரடியாகப் பெறுவீர்களாயின், அவர் இங்கு வரவேண்டிய அவசியம் என்ன? குழந்தைகளிற் சிலர் இத்தகைய எண்ணங்களைக் கொண்டுள்ளனர்: சிவபாபா பிரம்மாவின் வாய் மூலமாகப் பேச முடியுமாயின், அவர் என்னுடைய வாய் மூலமாகவும் பேச முடியும். எவ்வாறாயினும், உங்களால் பிரம்மா இல்லாமல், சிவபாபாவுடன் தொடர்பு கொள்ள முடியாது. சிலர் பிரம்மாவுடனும், பிரம்மகுமாரர், குமாரிகளுடனும் முகங்கோணி, பின்னர் இத்தகைய விடயங்களைப் பேச ஆரம்பிக்கிறார்கள். நாங்கள் சிவபாபாவுடன் மாத்திரமே யோகம் செய்ய வேண்டும். குழந்தைகளாகிய எங்களுக்குக் கற்பித்தல்களைக் கொடுப்பதுடன் எங்களை எச்சரிப்பதற்கும் தந்தை சிலவற்றைக் கூறவே வேண்டும். தந்தை கூறுகின்றார்: நீங்கள் வகுப்புக்கு நேரத்திற்கு வருவதில்லை. இதைக் கூறியது யார்? சிவபாபா, பிரம்ம தாதா ஆகிய இருவருமே இதைக் கூறினார்கள். இருவருடைய சரீரமும் ஒன்N;றயாகும். எனவே அவர்கள் கூறுகிறார்கள்: எச்சரிக்கையாக இருந்து, கல்வியில் முழுக் கவனம் செலுத்துங்கள். அதிமேலான தந்தையே உங்களுக்குக் கற்பிக்கிறார். எல்லாவற்றுக்கும் முதலில் நீங்கள் சிவபாபாவைப் புகழ வேண்டும். அவருடைய புகழ் மிகவும் முக்;கியமானது. அவருடைய புகழ் எல்லையற்றது. அவருடைய புகழ் மிகவும் சிறந்தது. ஆயினும் குழந்தைகள் சிலவேளைகளில் மறந்துவிடுகிறார்கள். நீங்கள் ஞானக் கடலைக் கடைந்து, அவருடைய புகழ் முழுவதையும் எழுதவேண்டும். புதிய மனிதர் என அழைக்கப்படுபவர் யார்? உண்மையில் சுவர்க்கத்துப் புதிய மனிதர் கிருஷ்ணர் ஆவார். எவ்வாறாயினும் இந்நேரத்தின் உச்சிக்குடுமிகளான பிராமணர்கள் நினைவுகூரப்படுகின்றனர். குழந்தைகள் உருவாக்கப்படுவதால் அவர்களுக்குக் கற்பிக்கப்படுகிறது. இலக்ஷ்மி நாராயணன் புதிய மனிதர்கள் எனப்படுவார்களாயின் அவர்களுக்;கு ஞானம் கொடுக்கப்பட வேண்டிய அவசியம் இல்லை. எனவே புதிய மனிதர் யார்? இந்த விடயங்கள் புரிந்து கொள்ளப்படவும், விளங்கப்படுத்தப்படவும் வேண்டும். உலக சர்வ சக்திவானாகிய தந்தையே, சர்வசக்திவான். நீங்கள் தந்தையின் புகழில் உலக சக்திவான் என்ற வார்த்தைகளை எழுத மறந்துவிடுகிறீர்கள். பாரதமும் அழிவற்ற யாத்திரை ஸ்தலமாகப் போற்றப்படுகிறது. பக்தி மார்க்கத்திலே இது எவ்வாறு யாத்திரையாக ஆரம்பிக்கின்றன? பாரதம் எவ்வாறு அழிவற்ற யாத்திரை ஸ்தலம் என அழைக்கப்பட முடியும்? அது எவ்வாறு அழிவற்ற யாத்திரை ஸ்தலம் ஆகும்? நாங்கள் அதைச் சத்திய யுகத்தின் யாத்திரை ஸ்தலம் என அழைக்க முடியுமா? நாங்கள் அதை அழிவற்ற யாத்திரை ஸ்தலம் என அழைப்பது எவ்வாறு? இதுவே சத்திய திரேதா யுகங்களிலும், துவாபர கலியுகங்களிலும் ஒரு யாத்திரை ஸ்தலமாக இருந்துள்ளது என்பதைத் தெளிவாக விளங்கப்படுத்த வேண்டும்;;. நீங்கள் அதை அழிவற்றது எனக் கூறுவதால், அது நான்கு யுகங்களிலும் இருந்துள்ளது என்பதை நீங்கள் நிரூபிக்க வேண்டும். யாத்திரைகள் முதலியன துவாபர யுகத்திலிருந்தே ஆரம்பிக்கின்றன. அப்படியாயின் பாரதம் அழிவற்ற யாத்திரை ஸ்தலம் என எவ்வாறு நாங்கள் எழுத முடியும்? சத்திய, திரேதா யுகங்களிலும் அது ஒரு யாத்திரை ஸ்தலம் ஆகும். ஏனெனில் அங்கேயே உயிருள்ள தேவர்கள் வாழ்கிறார்கள். இங்கே உயிரற்ற யாத்திரைகளே நிகழ்கின்றன. ஆயினும் அது சிவாலயமாக இருந்த பொழுது அது உண்மையான உயிருள்ள யாத்திரை ஸ்தலமாக இருந்தது. தந்தை மாத்திரமே இங்கே அமர்ந்திருந்து இவ்விடயங்களை விளங்கப்படுத்துகிறார். பாரதம் அழிவற்ற பூமி ஆகும். ஏனைய அனைத்தும் அழிக்கப்படுகின்றன. இவ்விடயங்கள் மனிதர்கள் எவருக்கும் தெரியாது. தூய்மையாக்குபவராகிய தந்தை இங்கே வருகிறார். அவரால் தூய்மையாக்கப்பட்ட தேவர்கள் சென்று, அந்தச் சிவாலயத்தில் வசிக்கின்றனர். இங்கே மக்கள் பத்திரிநாத், அமர்நாத் முதலியவற்றிக்குச் செல்கின்றனர். அங்கே பாரதமே ஒரு யாத்திரை ஸ்தலமாக விளங்குகிறது. அங்கே சிவபாபா இருப்பார் என்றில்லை. சிவபாபா, இப்பொழுது இங்கே இருக்கிறார். அவருடைய புகழ் அனைத்தும் இந்நேரத்திற்குரியதே ஆகும். இது சிவபாபாவின் பிறப்பிடம். எனவே பிரம்மாவின் பிறப்பிடமும் இதுவே ஆகும். இதைச் சங்கரரின் பிறப்பிடம் எனக் கூறமுடியாது. அவர் இங்கே வரவேண்டிய அவசியம் இல்லை. அவர் விநாசத்துக்கான கருவி ஆகியுள்ளார். விஷ்ணு வந்து, இராச்சியத்தைத் தன்னுடைய இரட்டை வடிவத்தின் மூலம் ஆட்சி செய்து, பராமரிக்கிறார். அவர்கள் ஒரு தம்பதியை விஷ்ணுவின் இரட்டை வடிவமாகக் காட்டியுள்ளனர். இது (விஷ்ணு) அவருடைய வடிவம் ஆகும். அவர் சத்திய யுகத்தில் வாழ்கிறார். எனவே, நாங்கள் ஒரேயொரு தந்தையின் புகழையே பாடவேண்டும். அவரே எங்களை மீட்பவர். மக்கள் சமய ஸ்தாபகர்களை மீட்பவர்கள் எனக் கூறுகிறார்கள். அவர்கள் கிறிஸ்து, புத்தர் முதலியோரைத் தங்களை மீட்பவர்கள் எனக் கூறுகிறார்கள். அவர்கள் அமைதியை ஸ்தாபிக்க வந்ததாக மக்கள் நம்புகின்றார்கள். எவ்வாறாயினும் அவர்கள் எந்தவித அமைதியையும் கொண்டுவருவதில்லை. அவர்கள் எவரையும் துன்பத்தில் இருந்தும் விடுவிப்பதில்லை. அவர்கள் தங்களுடைய சொந்தச் சமயங்களை ஸ்தாபிக்க வேண்டும், அவர்களுடைய சமயத்தைச் சேர்ந்தவர்கள், அவர்களைத் தொடர்ந்து கீழே வருகிறார்கள். மீட்பவர் என்னும் வார்த்தை மிகவும் நல்லது. இந்த வார்த்தையும் பயன்படுத்தப்படவேண்டும். இப்படங்கள் வெளிநாடுகளில் காட்டப்படும் பொழுது சகல மொழிகளிலும் அச்சிடப்படும். அம்மக்கள் போப்பாண்டவர் முதலானோரின் புகழைப் பாடுகின்றார்கள். ஜனாதிபதி முதலியோரின்; புகழை அவர் மரணிக்கும் பொழுது பெரிதும் போற்றிப் பாடுகின்றார்கள். ஒருவர் எவ்வளவிற்குப் பெரியவராக இருக்கின்றாரோ, அவரின் புகழும் அவ்வளவிற்கு அதிகமாக இருக்கும். எவ்வாறாயினும் இந்நேரத்தில் அனைவரும் ஒரேமாதிரி ஆகிவிட்டனர். கடவுள் சர்வவியாபி என்று அவர்கள் கூறுகின்றனர். தாங்களே தந்தை எனக் கூறுவதால் ஆத்மாக்கள் அனைவரினதும் தந்தையை அவதூறு செய்கிறார்கள். லௌகீகக் குழந்தைகள் தாங்களே அவர்களின் தந்தை எனக் கூறமாட்டார்கள். ஆமாம், அவர்கள் தங்களுடைய படைப்பை உருவாக்கிக் கொள்ளும்போது, தந்தை ஆகுகின்றார்கள். அது சாத்தியமே. இங்கே, ஆத்மாக்களாகிய எங்கள் அனைவரினதும் தந்தை ஒரேயொருவரே ஆவார். நாங்கள் அவரது தந்தை ஆகமுடியாது. அவரைக் குழந்தை எனவும் அழைக்க முடியாது. ஆமாம், நாங்கள் சிவபாபாவை எங்கள் குழந்தையாக, அதாவது, வாரிசாக ஆக்குகிறோம் எனக் கூறுவது ஞான விளையாட்டேயாகும். இந்த விடயங்களைப் புரிந்துகொள்ளக்கூடிய மிகச்சிலரே இதனைப் புரிந்துகொள்வார்கள். அவர்கள் சிவனைத் தங்கள் குழந்தையாக்கி, அவருக்குத் தங்களை அர்ப்பணிப்பார்கள். குழந்தைகள் தங்களைத் தந்தையிடம் அர்ப்பணிக்கிறார்கள். ஒரு பரிமாற்றம் இடம்பெறுகின்றது. ஆஸ்திக்குப் பெருமளவு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. தந்தை கூறுகிறார்;: உங்கள் சரீரம் உட்பட அனைத்துக்கும் என்னை வாரிசு ஆக்குங்கள். எவ்வாறாயினும், சரீர உணர்வைத் துண்டிப்பதென்பது மிகச்சிரமமாகும். நீங்கள் ஓர் ஆத்மா என்ற நம்பிக்கை உடையவராகி, தந்தையை நினைவு செய்யும் பொழுதே உங்கள் சரீர உணர்வு துண்டிக்கப்பட முடியும். நீங்கள் ஆத்ம உணர்வு உடையவராகுவதற்குப் பெருமளவு முயற்சி தேவைப்படுகிறது. நாங்கள் அழிவற்ற ஆத்மாக்கள். நாங்கள் எங்களைச் சரீரங்களாகக் கருத ஆரம்பித்தோம். எங்களை மீண்டும் ஆத்மாக்களாகக் கருத ஆரம்பிப்பதற்கு இப்பொழுது பெருமளவு முயற்சி தேவைப்படுகின்றது. சரீர உணர்வே நோய்கள் அனைத்திலும் மிகப்பெரியதாகும். தங்களை ஆத்மாக்களாகக் கருதித், தந்தையை நினைவு செய்யாதவர்களின் பாவம் அழிக்கப்படமாட்டாது. தந்தை விளங்கப்படுத்துகின்றார்: நீங்கள் நன்றாகக் கற்றால் ஒரு பிரபு ஆகுவீர்கள். நீங்கள் ஸ்ரீமத்தைப் பின்பற்ற வேண்டும். இல்லாவிட்டால் ஸ்ரீஸ்ரீயின் இதயத்தில் இடம் பெறமுடியாது. நீங்கள் அவரின் இதயத்தில் இடம்பெற்றால் மாத்திரமே சிம்மாசனத்தில் அமரமுடியும். நீங்கள் கருணைமிக்கவராக ஆகவேண்டும். மக்கள் மிகவும் சந்தோஷமற்று இருக்கிறார்கள். அவர்கள் பார்வைக்கு மிகவும் செல்வந்தராக இருக்கிறார்கள். பாருங்கள்! போப்பாண்டவர் எவ்வளவு மரியாதையைப் பெறுகிறார்! தந்தை கூறுகின்றார்: நான் மிகவும் ஆணவம் அற்றவர். தங்களை வரவேற்பதற்கு அதிகளவு பணத்தைச் செலவிடவேண்டாமென அம்மக்கள் கூற மாட்டார்கள் ஆனால், பாபா தான் செல்லும் இடங்களுக்கு எல்லாம் முன்கூட்டியே பின்வருமாறு எழுதுகின்றார்: நீங்கள் கோலாகலமாக எதனையும் செய்ய வேண்டியதில்லை. நான் மறைமுகமானவர் என்பதால் அனைவரும் புகையிரத நிலயத்திற்கு வரவேண்டும் என்றில்லை. அதைச் செய்ய வேண்டும் என்ற அவசியமும் இல்லை. இவர் யார் என எவருக்குமே தெரியாது. அவர்கள் ஏனைய அனைவரையும் அறிவார்கள். ஆனால் அவர்களுக்குச்; சிவபாபாவைத் தெரியாது. எனவே மறைமுகமாக இருப்பதே நல்லது. நீங்கள் எவ்வளவிற்கு ஆணவமற்றவராக இருக்கிறீர்களோ அவ்வளவிற்கு நல்லது. உங்கள் ஞானம் மௌனமாக இருப்பதற்கே ஆகும். நீங்கள் அமர்ந்திருந்து தந்தையின் புகழைப் பாட வேண்டும். தந்தையே, தூய்மையாக்குபவர் என்றும், சர்வசக்திவான் என்றும் மக்கள் அதிலிருந்து புரிந்து கொள்வார்கள். நீங்கள் தந்தையிடமிருந்து மாத்திரமே ஓர் ஆஸ்தியைப் பெறுகிறீர்கள். குழந்தைகளைத் தவிர வேறு எவராலும் இதைக் கூற முடியாது. நீங்கள் புதிய உலக ஆஸ்தியைச் சிவபாபாவிடம் இருந்து பெறுவதாகக் கூறுகிறீர்கள். படங்கள் உள்ளன. நாங்களும் அத் தேவர்கள் போல் ஆகுகின்றோம். சிவபாபா எங்கள் ஆஸ்தியைப் பிரம்மா மூலம் எங்களுக்கு வழங்குகிறார். இதனாலேயே, நாங்கள் சிவபாபாவைப் புகழ்கிறோம். எங்கள் இலட்சியமும், இலக்கும் மிகத் தெளிவானது. அவரே கொடுப்பவர். அவர் ஒருவரே எங்களுக்குப் பிரம்மா மூலமாகக் கற்பிக்கிறார். நீங்கள் இப்படங்களைப் பயன்படுத்தி விளங்கப்படுத்த வேண்டும். சிவனின் ஏராளமான ரூபங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. தந்தை வந்து, தூய்மையற்ற உலகைத் தூய்மையாக்கி, அனைவரையும் முக்திக்கும், ஜீவன்முக்திக்கும் அழைத்துச் செல்கிறார். இது படங்களில் மிகவும் தெளிவாக இருக்கிறது. இதனாலேயே நீங்கள் இவற்றை அனைவருக்கும் கொடுக்க வேண்டும் என பாபா வலியுறுத்துகிறார். அவ்வாறு செய்வதால் அவர்கள் அவற்றை எடுத்துச் சென்று கற்க முடியும். அவர்கள் இங்கிருந்து எடுத்துச்செல்லும் பொருட்களைத் தங்கள் இடங்களை அலங்கரிப்பதற்குப் பயன்படுத்துகிறார்கள். இது ஒரு நல்ல விடயமே ஆகும். திரைச் சீலையும் மிகவும் பயனானது. இப்படங்கள் தொடர்ந்தும் திருத்தம் செய்யப்படுகின்றன. மீட்பவர் எனும் வார்த்தையும் அவசியமாகும். வேறு எவருமே மீட்பவரோ, தூய்மையாக்குபவரோ அல்லர். தூய ஆத்மாக்கள் கீழிறங்கி வருகின்ற போதிலும் அவர்கள் எவரையும் தூய்மையாக்குவதில்லை. அவர்களுடைய சமயத்தைச் சேர்ந்த ஆத்மாக்கள் கீழிறங்கி வந்து, தங்களுடைய பாகங்களை நடிக்கிறார்கள். இக் கருத்துக்களை விவேகமான குழந்தைகள் மாத்திரமே கிரகிப்பார்கள். நீங்கள் ஸ்ரீமத்தை முழுமையாகப் பின்பற்றாத பொழுது உங்களால் கற்க முடியாமல் பின்னர் தோல்வியடைகிறீர்கள். பாடசாலையில் ஒருவரின் நடத்தையும் அவதானிக்கப்படுகிறது. இவரின் குணாதிசயங்கள் எத்தகையது? சரீர உணர்வினாலேயே விகாரங்கள் அனைத்தும் வருகின்றன. அப்பொழுது தாரணை எதுவும் இடம்பெற முடியாது. தந்தை கீழ்ப்படிவுள்ள குழந்தைகளை மாத்திரமே நேசிக்கிறார். நீங்கள் பெருமளவு முயற்சி செய்ய வேண்டும். நீங்கள் எவருக்கேனும் விளங்கப்படுத்தும் பொழுது தந்தையின் புகழையும், நீங்கள் எவ்வாறு ஆஸ்தியைத் தந்தையிடமிருந்து பெறுகிறீர்கள் என்பதையுமே முதலில் கூறவேண்டும். நீங்கள் தந்தையின் புகழ் முழுவதையும் எழுத வேண்டும். உங்களால் படங்களை மாற்ற முடியாததாயினும் நீங்கள் முழுக் கற்பித்தல்களையும் எழுத வேண்டும். தந்தையின் புகழ் வேறுபட்டது, கிருஷ்ணர் தந்தையிடமிருந்து ஆஸ்தியைப் பெற்றதால் அவரின் புகழ் வேறுபட்டது. தந்தையை அறியாததாலேயே, அவர்களால் பாரதமே மிகச் சிறந்த யாத்திரை ஸ்தலம் புரிந்து கொள்ள முடிவதில்லை. பாரதமே அழிவற்ற யாத்திரை ஸ்தலம் என நீங்கள் அவர்களுக்குக் கூறி, நிரூபிக்க வேண்டும். குழந்தைகளாகிய நீங்கள் அமர்ந்திருந்து இவ்விடயங்களை விளங்கப்படுத்தும் போது அதைக் கேட்கும் மக்கள் வியப்படைவார்கள். பாரதம் வைரம் போன்று இருந்தது. எனவே அதைச் சிப்;பி போன்று ஆக்கியது யார்? பெருமளவு விளங்கப்படுத்துவதும், ஞானக் கடலைக் கடைவதும் அவசியமாகும். 'இதில் இத்திருத்தம் செய்யப்பட வேண்டும்" என பாபா உடனடியாகக் கூறுகிறார். குழந்தைகள் அதை பாபாவிடம் காட்டுவதில்லை. ஆயினும் அத்திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் என பாபா விரும்புகிறார். இயந்திரம் ஏன் பழுதானது என ஒரு பொறியியலாளரால் புரிந்து கொள்ள முடியவில்லை. அவரது உதவிப் பொறியியலாளர் சிலவற்றைச்; செய்வதால் இயந்திரம் சரியாகிவிடும் என்பதைக் காண்பித்தார். இயந்திரமும் உண்மையிலேயே தொழிற்படத் தொடங்கியது. அந்தப் பொறியியலாளரும் பூரிப்படைந்தார். அந்நபருக்குப் பரிசு வழங்கப்பட வேண்டும் என அவர் கூறினார். எனவே அவரது சம்பளம் உயர்த்தப்பட்டது. தந்தையும் கூறுகிறார்: ஜெகதீஸ் (சஞ்ஜய்) சிலநேரங்களில்; நல்ல கருத்துக்களைக் கொண்டு வருகையில் பாபா பூரிப்படைகிறார், அவ்வாறே நீங்கள் இதை மிகச்சரியாகச் செய்தால் அது ஓர் அற்புதம் என நான் கூறுவேன். குழந்தைகளுக்குச் சேவை செய்வதில் ஆர்வம் இருக்க வேண்டும். அக் கண்காட்சிகளும், மேலாக்கள் அனைத்தும் தொடர்ந்தும் இடம்பெறுகின்றன. எங்கேனும் யாருடைய கண்காட்சியாயினும் இடம்பெறும் பொழுது அவர் இக்கண்காட்சியையும் நிகழ்த்த வேண்டும். இங்கே புத்தி முழுமையாகத் திறக்கப்பட வேண்டும். நீங்கள் அனைவருக்கும் சந்தோஷத்தைக் கொடுக்க வேண்டும். பாடசாலையில் கற்பவர்கள் வரிசைக்கிரமமாக இருக்கிறார்கள். அவர்கள் கற்காது விடின், அவர்களுடைய நடத்தையும் நன்றாக இருக்காது. அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்பொழுhதோ தொலைந்து இப்பொழுது கண்டெடுக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும,; நினைவுகளும், காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. நீங்கள் எவருடனேனும் முகங்கோணி, அதனால் கற்பதை நிறுத்திவிடாதீர்கள். சரீர உணர்வைத் துறவுங்கள், உங்கள்மீது கருணை கொள்ளுங்கள். தந்தையைப் போன்று அகங்காரமற்றவர் ஆகுங்கள்.

2. நன்னடத்தைகளைக் கிரகியுங்கள். அனைவருக்கும் சந்தோஷத்தைக் கொடுங்கள். கீழ்ப்படிவானவர்களாக இருங்கள்.

ஆசீர்வாதம்:
தயாராக இருக்கின்ற சக்தியினால் ஒரு விநாடியில் முற்றுப்புள்ளி வைக்கின்ற, பற்றை வென்றவர்களாகவும் நினைவு சொரூபமாகவும் இருப்பீர்களாக.

இறுதி பரீட்சையின் போது. ~~ஒரு விநாடியில் முற்றுப்புள்ளி இடுதல்|| என்ற கேள்வியே கொடுக்கப்படும். வேறு எதனையும் நினைவுசெய்யாதீர்கள்: நானும் தந்தையும் மாத்;திரமே, வேறு எதுவும் இல்லை. ஒரு விநாடியில் வேறு எவருக்குமன்றி தந்தைக்கு மாத்திரமே உரியவராகுங்கள். இந்த எண்ணத்தைக் கொண்டிருப்பதற்குமே நேரம் எடுக்கும், ஆனால் அந்த விழிப்புணர்விலே நிலைத்திருங்கள், சற்றேனும் அசையாதிருக்க வேண்டும். ~~ஏன்?|| அல்லது ~~என்ன?|| என்ற எந்த எண்ணமும் இல்லாதிருக்கும் போது, உங்களால் பற்றை வென்றவர்களாகவும் நினைவு சொரூபமாகவும் ஆகமுடியும். எனவே, தேவையான போது, விரிவாக்கத்திற்கும், தேவையான போது தயாராகவும் இருக்க பயிற்சி செய்யுங்கள். உங்கள் தடுப்பு சக்திமிக்கதாக உள்ளதை உறுதி செய்யுங்கள்.

சுலோகம்:
தமது சுய மரியாதையில், அகங்காரம் அற்றிருப்பவர்கள் சதா பணிவாக இருக்கிறார்கள்.