07.12.18        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்:
இனிய குழந்தைகளே, அநாதியான சத்திர சிகிச்சையாளரிடமிருந்து எதனையும் மறைக்காதீர்கள். நீங்கள் எதற்கேனும் கீழ்ப்படியாதிருந்தால், அதற்காக மன்னிப்புக் கேளுங்கள். தவறினால், அதன் சுமை தொடர்ந்தும் அதிகரிப்பதனால், நீங்கள் அவப்பெயரை ஏற்படுத்துபவர் ஆகுவீர்கள்.

கேள்வி:
உண்மையான வருமானத்திற்கான அடிப்படை என்ன? சுய முன்னேற்றத்திற்கு தடைகள் ஏன் ஏற்படுகின்றன?

பதில்:
கல்வியே உண்மையான வருமானத்திற்கு அடிப்படையாகும். நீங்கள் நன்றாகக் கற்காது விட்டால், உங்களால் உண்மையான வருமானத்தை ஈட்ட முடியாது. உங்கள் சகவாசம் தவறாக இருக்கும் போதே, உங்கள் முன்னேற்றத்திற்கு தடைகள் ஏற்படுகின்றன. நல்ல சகவாசம் உங்களை கரையேற்றுகின்றது, தீய சகவாசம் உங்களை மூழ்கச் செய்கின்றது என்று கூறப்படுகின்றது. நீங்கள் தீய சகவாசத்தைக் கொண்டிருந்தால், கற்காதிருப்பதுடன், தோல்வி அடைவீர்கள். சகவாசமே உங்களை, ஒருவருக்கொருவர் ஆழ்நரகத்திற்கு இட்டுச் செல்கின்றது. ஆகையாலேயே குழந்தைகளாகிய நீங்கள், கொண்டிருக்கும் உங்கள் சகவாசத்தின் செல்வாக்கையிட்டு மிகவும் அவதானமாக இருக்க வேண்டும்.

பாடல்:
நீங்களே அன்புக் கடல்; நாங்கள் ஒரு துளிக்காக தவித்துக் கொண்டிருக்கின்றோம்.

ஓம்சாந்தி.
குழந்தைகள் எல்லையற்ற தந்தையின் புகழைப் பாடுகின்றார்கள். இது பக்தி மார்க்கத்திற்கான புகழாகும். தகுதியான குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது தந்தையின் புகழை நேரடியாக பாடுகின்றீர்கள். எல்லையற்ற தந்தை மாத்திரமே ஞானக் கடல் என்பதால், அவர் வந்தே ஞானத்தை எங்களுக்குக் கொடுத்து, எங்களை சுவர்க்கத்தின் அதிபதிகள் ஆக்குகின்றார் என்பதை நீங்கள் புரிந்து கொண்டிருக்கின்றீர்கள். கடவுளிடம் ஞானம் உள்ளது. அது இறை ஞானம் என்று அழைக்கப்படுகின்றது. பரமாத்மாவான பரமதந்தையே ஞானத்தைக் கொடுக்கின்றார். யாருக்கு? குழந்தைகளுக்கு. ஞான தேவி என்ற பெயர் உங்கள் மம்மாவிற்குக் கொடுக்கப்பட்டுள்ளது. ஜெகதாம்பாள் ஞான தேவி என்பதால், அவரது குழந்தைகளிடமும் அதே ஞானம் இருக்க வேண்டும். ஞான தேவியான சரஸ்வதிக்கு கடவுள் ஞானத்தைக் கொடுக்கின்றார், ஆனால் அதனை அவர் யார் மூலமாகக் கொடுக்கின்றார்? இவை மிகவும் நன்றாகப் புரிந்து கொள்ளப்பட வேண்டிய விடயங்களாகும். யார் ஜெகதாம்பாள் என்பது உலகத்திற்குத் தெரியாது. ஜெகதாம்பாள் ஒருவரே உள்ளார் என்பது குழந்தைகளாகிய உங்களுக்குத் தெரியும். அவர்கள் பல பெயர்களைக் கொடுத்திருக்கின்றார்கள். சரஸ்வதி பிரஜாபிதா பிரம்மாவின் வாய்வழித் தோன்றல் என்பது மக்களுக்குத் தெரியாது. தந்தையான கடவுளே அவருக்கு ஞானத்தைக் கொடுக்கின்றார். உலகச் சக்கரம் எவ்வாறு சுழல்கின்றது என்பதற்கான ஞானத்தை தந்தையான கடவுள் கொடுக்கின்றார். தந்தை குழந்தைகளாகிய உங்களுக்கு ஞானத்தைக் கொடுத்தார். சரஸ்வதி அதனை எவ்வாறு பெற்றுக் கொண்டார்? நிச்சயமாக, அவர் பிரஜாபிதா பிரம்மாவின் வாய்வழித்தோன்றல் என்பதால், ஞானக் கடலான பரமாத்மாவான பரமதந்தை, பிரம்மாவின் மூலமே சரஸ்வதிக்குக் ஞானத்தைக் கொடுத்திருக்க வேண்டும். அதே ஞானத்தையே அவர் பிறருக்கும் கொடுத்திருக்க வேண்டும். தந்தையான கடவுளே உங்களுக்குக் கற்பிக்கின்றார். எனவே நிச்சயமாக தந்தையான கடவுளின் குழந்தைகளே மாஸ்டர் கடவுள்களாவார்கள். ஆகையாலேயே அவருக்கு ஞான தேவி என்ற பெயர் கொடுக்கப்பட்டது. கீதையின் கடவுள் என்றும் அழைக்கப்படுகின்ற ஞானக் கடலிடமிருந்தே, நீங்களும் உங்கள் மம்மாவும் இப்பொழுது ஞானத்தைப் பெறுகின்றீர்கள் என்பது குழந்தைகளாகிய உங்களுக்குத் தெரியும். கடவுள் ஒருவரேயாவார். எந்த தேவருமோ மனிதருமோ கடவுளாக ஆக முடியாது. அவரே ஞான தேவி என்பதால் அவரிடம் உள்ள ஞானம் எது? இராஜ யோகமாகும். ஞான தேவியான சரஸ்வதி இந்த இலகு இராஜயோக ஞானத்தின் மூலமாகவே, செல்வத்தின் தேவியான இலக்ஷ்மி ஆகுகின்றார். ஞானதேவிக்கான புகழ் உள்ளதைப் போன்றே, குழந்தைகளாகிய உங்களுக்கும் புகழ் உள்ளது. அனைவருமே பிரஜாபிதா பிரம்மாவின் குழந்தைகள் ஆவார்கள். அவர்கள் மம்மாவின் குழந்தைகள் என்று அழைக்கப்படுவதில்லை. அவர்கள் பிரம்மாவின் கமல வாயின் மூலம் பிறப்பெடுத்தவர்கள். இறை குழந்தைகளாகிய உங்கள் அனைவருக்கும் நம்பிக்கை உள்ளது. தந்தையான கடவுள் கூறுகின்றார்: குழந்தைகளாகிய உங்கள் முன்னால் மாத்திரமே நான் பிரசன்னமாகுகின்றேன். அவர்கள் மாத்திரமே என்னை அறிந்துள்ளார்கள். எனவே ஜெகதாம்பாள் ஞான தேவி ஆவார். இது இலகு இராஜயோக ஞானமேயன்றி, எந்தச் சமயநூல்களைச் சார்ந்ததுமல்ல. கடவுள் இந்த ஞானத்தை அவருக்குக் கொடுத்தததால், அவர் ஞானதேவி என்று அழைக்கப்பட்டார். ஜெகதாம்பாள் ஒரு தாயாவார். பின்னர், அவர் தனது அடுத்த பிறவியில், அவர் செல்வத்தின் தேவியான இலக்ஷ்மி ஆகுகின்றார். அவரிடமே மக்கள் தமது வேண்டுகோளை விடுக்கின்றனர். ஆகையால், ஜெகதாம்பாள் இராஜயோகம் என்ற ஆஸ்தியை தந்தையிடமிருந்தே பெறுகின்றார் என்பதனை இது நிரூபிக்கின்றது. அவர் ஞான தேவி என்று அழைக்கப்படுகின்றார். ஞானமே வருமானத்திற்கான வழியாகும். இதுவே உண்மையான தந்தையிடமிருந்து பெறப்படுகின்ற உண்மையான வருமானமாகும். நீங்கள் இப்பொழுது செய்யும் முயற்சிக்கு ஏற்ப, வரிசைக்கிரமமாக, உண்மையான வருமானத்தை ஈட்டிக் கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் கற்காது விட்டால், உங்களால் உண்மையான வருமானத்தை ஈட்ட முடியாது. நீங்கள் நல்ல சகவாசத்தைக் கொண்டிருக்காத போது, உங்களால் கற்கவோ அல்லது முன்னேறவோ முடியாது. நல்ல சகவாசம் உங்களை அக்கரையேற்றுகின்றது, தீய சகவாசம் உங்களை மூழ்கச் செய்கின்றது. நீங்கள் தீய சகவாசம் கொண்டிருந்து, கற்காது விட்டால், நீங்கள் சித்தி எய்தாது, தொடர்ந்தும் பின்னாலேயே அமர்ந்திருப்பீர்கள். ஆசிரியருக்கு இதற்கான காரணம் தெரியும், எனினும் தந்தைக்கு இது தெரியாது. ஆம், போதியளவு கற்காததாலும், தீய சகவாசம் கொண்டிருந்ததாலேயே நீங்கள் சித்தி எய்தவில்லை என்பதை தந்தை நிச்சயமாக அறிவார். உதாரணமாக ஒருவருக்கொருவர் அவர்கள் அன்பு செலுத்தி, இருவருமே கற்காத போது, அவர்கள் ஒருவரையொருவர் ஆழ் நரகத்திற்கு இட்டுச் செல்கின்றார்கள். அவர்கள் கற்பதில்லை என்பதால், அவர்கள் பிரித்து வைக்கப்பட வேண்டும் என்பதை தந்தை புரிந்து கொண்டிருக்கின்றார். கற்காதிருந்தால், மனிதர்கள் விவேகமற்றவர்கள் எனப்படுகின்றார்கள். அவர்கள் கற்றால், அவர்கள் விவேகமானவர்கள் என்று அழைக்கப்படுகின்றார்கள். நீங்கள் கடவுளின் வழிகாட்டல்களைப் பின்பற்றாத போது, நீங்கள் மாற்றாந்தாய் குழந்தை என்று கூறப்படுகின்றது. எவ்வாறாயினும், இதன் அர்த்தத்தை அவர்கள் புரிந்து கொள்ளவில்லை. கற்காதவர்கள் தூய்மை அற்றவர்களாகவே இருப்பார்கள் என்பது உங்களுக்குத் தெரியும். அவர்கள் சித்தி அடையாததால், பின்னர் ஓடி விடுகின்றார்கள். தந்தை கூறுகின்றார்: ஓ, இராவணனே, நீ, எனது குழந்தைகளையும் விழுங்கி விடுகின்றாய்! நீ மிகவும் சக்தி வாய்ந்தவன்! அதன் பின்னர் குழந்தைகள் சாத்தானின் வழிகாட்டல்களைப் பின்பற்றுகின்றார்கள். அவர்கள் ஸ்ரீமத்தைப் பின்பற்றுவதில்லை. நான் ஒவ்வொரு அடியிலும் பாபாவின் வழிகாட்டல்களைப் பின்பற்றுவேன் என்று உங்களுக்குள் நீங்கள் சத்தியம் செய்து கொள்ள வேண்டும். ஸ்ரீமத்தைப் பின்பற்றாதவர்கள் அசுர வழிகாட்டல்களைப் பின்பற்றுகின்றவர்கள் எனப்படுகின்றார்கள். அத்தகையவர்களால் உயர்ந்ததோர் அந்தஸ்தை அடைய முடியாது என்பதை பாபா புரிந்து கொள்கின்றார். உங்களால் ஒருவருக்கு விளங்கபடுத்த முடியாதிருந்தால், நீங்கள் இராவணனின் ஆதிக்கத்தில் இருக்கின்றீர்கள் என்றே அழைக்கப்படுகின்றீர்கள். நீங்கள், உங்கள் புத்தி தூய்மை ஆகுவதற்கான யோகத்தை செய்வதில்லை. புத்திக்கான யோகமும் செய்யப்பட வேண்டும். கடவுளின் குழந்தைகளின் நடத்தை மிகவும் இராஜரீகமாக இருக்க வேண்டும். பிறப்பிலிருந்தே ஒரு அரசர் திறமைசாலியாக இருக்க முடியாது. ஆகையாலேயே பாபா கூறுகின்றார்: ஸ்ரீமத்தைப் பின்பற்றுவதன் மூலம், இராவணனது 5 விகாரங்களையும் வெற்றி கொள்ள வேண்டும். ஸ்ரீமத்தை பின்பற்றாதவர்களையிட்டு பாபா கூறுகின்றார்: அவர்கள் அசுர வழிகாட்டல்களைப் பின்பற்றுகின்றார்கள். சிலர் ஸ்ரீமத்தை 5 வீதமும், வேறு சிலர் 10 வீதமுமே பின்பற்றுகின்றார்கள். அதற்கான கணக்குள்ளது. எனவே ஜெகதாம்பாள் ஒரேயொருவரே ஆவார். ஜெகதாம்பாள் பிரம்மாவின் வாய்வழித் தோன்றலான சரஸ்வதி ஆவார். அது அவரது முழுப் பெயராகும். சரஸ்வதி வீணையுடன் காட்டப்படுகின்றார். அவர் ஞானதேவி ஆவார். அவரின் குழந்தைகளும் நிச்சயமாக இருக்க வேண்டும். அவர்களும் தமது வீணைகளைக் கொண்டிருக்க வேண்டும். பாருங்கள் சரஸ்வதி விருட்ச படத்தில் அமர்ந்திருக்கின்றார். அவர் இராஜயோகத்தைக் கற்று, பின்னர், செல்வத்தின் தேவியான இலக்ஷ்மி ஆகுகின்றார். ஆரோக்கியம், செல்வம், சந்தோஷம் என்ற அனைத்தும் அதில் அடங்குகின்றது. பரமாத்மாவான பரமதந்தையைத் தவிர வேறு எவராலும் அதனை உங்களுக்குக் கொடுக்க முடியாது. அவர் தந்தையான சுவர்க்கக் கடவுள் ஆவார். பாருங்கள், மம்மா இப்பொழுது சேவை செய்கின்றார். உதாரணமாக, யாராவது மம்மாவிற்கு ஒரு அழைப்பிதழைக் கொடுத்தால், அவர்களுக்கு முதலில் மம்மாவின் தொழிலைத் தெரியவேண்டும். அவர் யார் என்ற ஞானம் அவர்களுக்கு இருக்க வேண்டும். உலகத்திற்கு இது தெரியாது. கிருஷ்ணர் அவமதிக்கப்பட்டார், எனினும் அது சாத்தியமில்லை என்று அவர்கள் கூறுகின்றார்கள். அது சாத்தியமில்லை. சிவபாபாவே அதிகளவான அவமானங்களை ஏற்றுக் கொண்டார், இரண்டாம் இலக்கத்தில் பிரம்மா உள்ளார். கிருஷ்ணரும் பிரம்மாவும், என்றாலும் எவராலும் கிருஷ்ணரை இகழ முடியாது. ஞானதேவியான சரஸ்வதியே எதிர்காலத்தில் இராதை ஆகுகின்றார் என்பது எவருக்கும் தெரியாது. அவரது திருமணத்தின் பின்னரே, அவர் செல்வத்தின் தேவியான இலக்ஷ்மி ஆகுகின்றார். ஆரோக்கியம், செல்வம், சந்தோஷம் அனைத்தும் அதில் அடங்குகின்றன. விளங்கப்படுத்துவதற்கு நீங்கள் மகத்தான போதையைக் கொண்டிருக்க வேண்டும். மம்மா யாரென்பதை நீங்கள் விளங்கப்படுத்த வேண்டும். அவர் பிரம்மாவின் வாய் மூலம் பிறந்த புதல்வியான சரஸ்வதி ஆவார். பாரத மக்களுக்கு எதுவுமே தெரியாது. அவர்களுக்கு எந்த ஞானமும் இல்லை. அதிகளவு குருட்டு நம்பிக்கை உள்ளது. பாரதமக்களுக்கு அதிகளவு குருட்டு நம்பிக்கை உள்ளது. அவர்கள் தாம் யாரை வழிபடுகின்றோம் என்பதையேனும் அறியாதுள்ளார்கள். கிறிஸ்தவர்களுக்கு தமது கிறிஸ்துவை பற்றித் தெரியும். சீக்கிய சமயத்தை குருநானக் ஸ்தாபித்தார் என்பது சீக்கியர்களுக்குத் தெரியும். அவர்கள் தமது சமய ஸ்தாபகரை அறிந்துள்ளார்கள். பாரத மக்களாகிய இந்துக்கள் மாத்திரமே அறியாதுள்ளார்கள். அவர்களது தொழில் என்னவென்பது தெரியாதால், குருட்டு நம்பிக்கையுடன் அவர்கள் தொடர்ந்தும் அவர்களை வழிபட்டுக் கொண்டே இருக்கின்றார்கள். அவர்கள் சக்கரத்தின் கால எல்லையை அதிகரித்து விட்டதால், அவர்கள் எதனையுமே அறியாதுள்ளார்கள். இஸ்லாமியரும் பௌத்தர்களும் பின்னர் வருகின்றார்கள். அவர்களுக்கு முன்னர் நிச்சயமாக அந்த தேவதேவியர்கள் இருந்திருக்க வேண்டும். அவர்கள் இங்கு இந்தளவு காலப்பகுதியில் இருந்தார்கள். ஏனைய சமயங்கள், அரைக்கல்பத்தை எடுத்தால், ஒரே தர்மமும் அரைக்கல்பத்திற்குக் காட்டப்பட வேண்டும். அது நூறாயிரம் ஆண்டுகள் என உங்களால் கூறமுடியாது. ஜெகதாம்பாள் ஆலயத்திற்குச் சென்று அங்கு இவ்வாறு விளங்கப்படுத்துங்கள்: யார் இந்த ஞானத்தை இந்த ஞான தேவிக்குக் கொடுத்தது? கிருஷ்ணர் ஜெகதாம்பாளிற்கு ஞானத்தை வழங்கினார் எனக் கூற முடியாது. எவ்வாறாயினும், இதனை நன்றாக பயிற்சி செய்பவர்களாலேயே விளங்கப்படுத்த முடியும். சிலர் அதிகளவு சரீர உணர்வினைக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் தொடர்ந்தும் ஒரு நண்பரை அல்லது உறவினரை அல்லது யாராவதொருவரை நினைவு செய்கிறார்கள். தந்தை கூறுகிறார்: நீங்கள் மற்றவர்களை நினைவு செய்தால், என்னை மறந்து விடுகின்றீர்கள். நாம் அனைவரிடமிருந்தும் துண்டித்து ஒரேயொருவருடன் எம்மை இணைத்துக் கொள்வோம் என்றும் நீங்கள் பாடினீர்கள். அவர் இப்போது இங்கு அமர்ந்திருக்கிறார். பாபா, நான் உங்களுக்குரியவன். நான் உங்களுடைய வழிகாட்டல்களைப் பின்பற்றுவேன். உங்களுடைய பெயரை இகழும் எந்தவிதமான செயல்களையும் நான் செய்ய மாட்டேன். பல குழந்தைகள் பாபாவிற்கு அவப்பெயரை ஏற்படுத்தும் செயல்களைச் செய்கிறார்கள். அவர்கள் இதனைப் புரிந்து கொள்ளும் வரைக்கும், அவர்கள் தொடர்ந்தும் அதிகளவு இகழவே செய்வார்கள். பெயரும் பெருமைப்படுத்தப்பட்டுள்ளது. ஓ கடவுளே, உங்களுடைய தெய்வீகச் செயல்கள் நினைவுகூரப்படுகின்றன! எவ்வாறாயினும், குழந்தைகளாகிய உங்களால் எவரும் புரிந்து கொள்ளாதவற்றைப் புரிந்து கொள்ள முடியும். தந்தை கூறுகிறார்: குழந்தைகளே, நான் சுயநலமற்ற சேவை செய்கிறேன். என்னை இகழ்பவர்களையும் நான் ஈடேற்றுகின்றேன். நான் பாரதத்தை தங்க சிட்டுக்குருவி ஆக்குகிறேன். உங்களை உயர்த்துவதில் நான் முதலாம் இலக்கத்தில் உள்ளேன். எவ்வாறாயினும், மக்கள் என்னை சர்வவியாபி என்று அழைத்து, பெருமளவில் இகழ்கிறார்கள். நான் குழந்தைகளாகிய உங்களுக்கு ஞானத்தை வழங்குகிறேன். அதனால் இந்த ஞான யாகத்திற்கு அசுர சமுதாயத்தில் இருந்து பல தடைகள் ஏற்படுகின்றன. இதனை மிகச்சரியாகப் புரிந்து கொள்ள முடியாத குழந்தைகளாலேயே சகல குப்பைகளும் இங்கு வந்து வீழ்கின்றன என பாபா விளங்கப்படுத்துகிறார். அவர்கள் என்னை இகழ்கிறார்கள். சில குழந்தைகள் மிக நல்ல சேவை செய்கிறார்கள். ஆனால் சிலர் அவச்சேவையே செய்கிறார்கள். ஒருபுறம் சிலர் ஆக்கத்தை செய்கிறார்கள். ஆனால் இன்னொருபுறம், ஏனையவர்களும் ஞானத்தைக் கொண்டிராததால் அழிவை ஏற்படுத்துகிறார்கள். சூரிய, சந்திர வம்ச இராச்சியங்கள் ஸ்தாபிக்கப்படுகின்றன. முழுமையாகப் புரிந்து கொள்ளாதவர்களுக்கு நீங்கள் விளங்கப்படுத்த வேண்டும். அவர்களிடம் கருணை கொள்ள வேண்டும். தந்தைக்கு உரியவரான பின்னர், யாராவதொருவர் தனது ஆஸ்தியைக் கோராவிடின், அவரால் என்ன பயன்? நீங்கள் தந்தையை இனங்கண்டுள்ளீர்கள். எனவே, உங்களுடைய ஆஸ்தியைக் கோருவதற்கு நீங்கள் முழுமையான முயற்சி செய்வதுடன் ஸ்ரீமத்தையும் பின்பற்ற வேண்டும். தந்தைக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் விதத்தில் எந்தவிதமான செயல்களையும் செய்யாதீர்கள். காமமும் கோபமுமே கொடிய எதிரிகள் எனத் தந்தை அறிவார். அவை தொடர்ந்தும் உங்களை உங்களுடைய மூக்கிலும் காதுகளிலும் பிடித்துக் கொள்கின்றன. அவை நிகழும். ஆனால் நீங்கள் அதற்கு அப்பால் செல்ல வேண்டும். சிலர் பெயரிலும் ரூபத்திலும் அகப்பட்டுக் கொள்கிறார்கள். குழந்தைகள் அனைவரும் ஒரேமாதிரியானவர்கள் அல்லர். தந்தை இன்னமும் உங்களை எச்சரிக்கிறார்: கவனமாக இருங்கள்! நீங்கள் ஏதாவது தவறான செயல்களைச் செய்து என்னை இகழ்ந்தால், உங்களுடைய அந்தஸ்து அழிக்கப்பட்டு விடும். மாயையும் சக்திசாலிகளுடன் சக்திசாலியாகி, அவர்களுடன் சண்டையிடுவாள். நீங்கள் தந்தையை நினைவு செய்யும்போது, மாயையின் புயல்கள் உங்களை வேறு எங்கேயாவது எடுத்துச் சென்று விடும். சில குழந்தைகள் உண்மையைக் கூறுவதில்லை. அத்துடன் அவர்கள் அறிவுரையும் பெறுவதில்லை. நீங்கள் அநாதியான சத்திரசிகிச்சை நிபுணரிடமிருந்து எதனையும் மறைக்கக்கூடாது. நீங்கள் அவரிடம் எதனையும் கூறாவிட்டால், நீங்கள் மேலும் அழுக்காகுவீர்கள். பாபா ஜனிஜனன்ஹார் (உள்ளேயுள்ள இரகசியங்களை அறிந்திருப்பவர்) என்றும் அவர் அனைத்தையும் அறிவார் என எண்ணாதீர்கள். இல்லை. நீங்கள் உங்களுடைய கீழ்ப்படிவின்மையைப் பற்றி சிவபாபாவிடம் கூறவேண்டும். சிவபாபா, நான் இந்தத் தவறைச் செய்தேன். நான் இப்போது உங்களிடம் மன்னிப்பு கேட்க விரும்புகிறேன். நீங்கள் மன்னிப்புக் கேட்காவிட்டால், நீங்கள் தொடர்ந்தும் தவறுகளைச் செய்வீர்கள். அதாவது, நீங்கள் தொடர்ந்தும் உங்களுடைய தலையில் உள்ள பாவச்சுமையை அதிகரிப்பீர்;கள். தந்தை விளங்கப்படுத்துகிறார்: உங்களுடைய அந்தஸ்தை கல்பம் கல்பமாக அழிக்காதீர்கள். நீங்கள் உங்களுடைய உயர்ந்த அந்தஸ்தை இப்போது உருவாக்காவிட்டால், கல்பம் கல்பமாக அது உங்களுடைய நிலைமையாகவே இருக்கும். இது ஞானமாகும். சென்ற கல்பத்தில் இருந்ததைப் போன்று இராச்சியம் ஸ்தாபிக்கப்படுவதை பாபா அறிவார். பாப்தாதாவால் அதிகளவைப் புரிந்து கொள்ள முடியும். இவர் இன்னமும் விசேடமான அதியன்பிற்குரிய குழந்தை ஆவார். தாய்மார்களின் புகழ் அதிகரிக்கப்பட வேண்டும். தாய்மார்கள் முன்னணியில் வைக்கப்படுகிறார்கள். பாபா சகோதரர்களுக்கு விளங்கப்படுத்துகிறார்: அவர்களை (தாய்மார்களை) நீங்கள் முன்னால் வைக்க வேண்டும். சகோரர்களாலும் அதிகளவு சேவை செய்ய முடியும். படங்களை பயன்படுத்தி விளங்கப்படுத்துங்கள்: இவர் அதிமேலான கடவுள் ஆவார். அதன்பின்னர், திரிமூர்த்தி பிரம்மா, விஷ்ணு, சங்கரர் இருக்கிறார்கள். அவர்களின் மேலானவர் யார்? யாருடைய பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது? அனைவருமே பிரஜாபிதா பிரம்மாவினூடாகவே நாம் ஆஸ்தியைப் பெறுகிறோம் என்று கூறுவார்கள். சங்கரனையோ அல்லது விஷ்ணுவையோ தந்தை என அழைக்க முடியாது. நீங்கள் அவர்களிடமிருந்து ஆஸ்தியைப் பெறுவதில்லை. இவர் பிரஜாபிதா பிரம்மா என அழைக்கப்படுகிறார். நீங்கள் அவரிடமிருந்து என்ன ஆஸ்தியைப் பெறுகிறீர்கள்? பிரம்மா சிவபாபாவின் குழந்தை. சிவபாபா ஞானக்கடலான சுவர்க்கத்தை ஸ்தாபிப்பவர் ஆவார். எனவே, நீங்கள் நிச்சயமாக சுவர்க்கத்திற்கான கற்பித்தல்களையே பெறுகிறீர்கள். இந்த வழிகாட்டல்கள் இராஜயோகத்திற்கானவை. தந்தை பிரம்மாவினூடாக உங்களுக்கு ஸ்ரீமத்தை வழங்குகிறார். இது தேவர்கள் ஆகுவதற்காகும். அந்த பிரம்ம குமாரி பின்னர் செல்வத்தின் தேவியான ஸ்ரீ இலக்ஷ்மி ஆகுகிறார். இவர்கள் பிராமணர்கள். மற்றவர்கள் தேவர்கள். அசரீரி உலகில் அனைவரும் ஆத்மாக்களே. பாபா குழந்தைகளுக்குப் பெருமளவு விளங்கப்படுத்துகின்றாராயினும் புரிந்து கொள்ள வேண்டியவர்களே புரிந்து கொள்வார்கள். மனிதர்கள் குருட்டு நம்பிக்கையின் அடிப்படையிலேயே சந்நியாசிகளையும் குருமார்களையும் பின்பற்றுகிறார்கள். அவர்களிடம் இருந்து தாம் எதனைப் பெற்றுக் கொள்வோம் என்பதுகூட அவர்களுக்குத் தெரியாதுள்ளது. நீங்கள் ஓர் அந்தஸ்தைப் பெறுவீர்கள் என்பதை ஆசிரியர் அறிந்துள்ளார். எவ்வாறாயினும், அவர்கள் தாம் பின்பற்றுவர்களிடமிருந்து தாம் என்ன பேற்றை பெறுகின்றோம்; என்பது அவர்களுக்குத் தெரியாது. அது குருட்டு நம்பிக்கை ஆகும். எனினும், அவர்கள் பின்பற்றுபவர்கள் அல்லர்! அவர்கள் உங்களை தம்மைப் போன்றவர் ஆக்குவதும் இல்லை, நீங்கள் அவர்களைப் போன்று ஆகுவதும் இல்லை. அவர்களுக்கு இலக்கும் இலட்சியமும் என்னவென்பது சற்றேனும் தெரியாது. அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தந்தை தாயாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

 
தாரணைக்கான சாராம்சம்:

1. தீய சகவாசத்தின் ஆதிக்கத்திலிருந்து எப்பொழுதும் உங்களை பாதுகாத்துக் கொள்ளுங்கள். இந்த உண்மையான கல்வியைக் கற்று, உண்மையான வருமானத்தின் கையிருப்பை சேமித்துக் கொள்ளுங்கள்.

2. ஒவ்வொரு அடியிலும் பாபாவின் ஸ்ரீமத்தைப் பின்பற்றுவேன் என்ற சத்தியத்தை உங்களுக்குள் செய்து கொள்ளுங்கள்.

ஆசீர்வாதம்:
ஒரேயொருவருக்கு விசுவாசமாக இருப்பதனால் ஆசீர்வாதங்களை அருள்பவரை பூரிப்படையச் செய்யும் இரகசியத்தை அறிந்து கொள்வதன் மூலம் முழுமையான வெற்றி சொரூபம் ஆகுவீர்களாக.

ஆசீர்வாதங்களை அருள்பவரின் ஆசீர்வாதங்கள் முடிவற்றவையாகும். விரும்பியவர்கள் தேவையான அளவை தமக்காகப் பெற்றுக் கொள்ள முடியும். பொக்கிஷ களஞ்சியம் திறந்தே உள்ளது. சில குழந்தைகள் அந்தத் திறந்த பொக்கிஷக்களஞ்சியத்திலிருந்து தம்மை முழுமையாக நிறைத்துக் கொள்கின்றார்கள். ஏனையோரோ தமது சக்திக்கேற்றவாறு தம்மை நிறைத்துக் கொள்கின்றார்கள். ஆசீர்வாதங்களை அருள்பவர் என்ற வடிவில் கள்ளங்கபடமற்ற பிரபு உங்கள் புத்தியிலேயே அதிகபட்சம் நிரப்புகின்றார். அவரை பூரிப்படையச் செய்கின்ற வழியை நீங்கள் அறிந்திருந்தாலே உங்களால் முழுமையான வெற்றியை ஈட்டிக் கொள்ள முடியும். ஆசீர்வாதங்களை அருள்பவர் அதிகளவு நேசிக்கும் வாசகம்: ~ஒரேயொருவருக்கு விசுவாசமாக இருத்தல்.| உங்கள் எண்ணத்திலேனும் கனவிலேனும் வேறு எவருமே இல்லாதிருக்கட்டும். நீங்கள் ஒரேயொருவருக்கே அல்லாது வேறு எவருக்கும் உரியவர் அல்ல என்ற மனோபாவம் உங்களில் இருக்கட்டும். இந்த இரகசியத்தை புரிந்து கொண்டிருப்பவர்களின் புத்தி சதா நிறைந்திருக்கும்.

சுலோகம்:
ஒரே நேரத்தில் உங்கள் எண்ணங்களினாலும் வார்த்தைகளினாலும் சேவை செய்வதால், உங்களால் தொடர்ந்தும் இரட்டை பலனை பெற முடியும்.