08.01.19        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்:
இனிய குழந்தைகளே, தூய்மையாகுவதற்கு நினைவு யாத்திரையைக் கொண்டிருப்பது அவசியமாகும். இதுவே பிரதான பாடம். யோக சக்தியின் மூலம், நீங்கள் சேவையாளராகவும், நற் குணங்கள் நிறைந்தவராகவும் ஆக முடியும்.

கேள்வி:
எவ்வாறு குழந்தைகளாகிய நீங்கள் கற்கும் யோகம் தனித்துவமானது?

பதில்:
இன்று வரை, மக்கள் கற்று, ஒருவருக்கொருவர் கற்பித்த யோகங்கள் அனைத்தும், மனிதர்களை மனிதர்களுடனேயே தொடர்புபடுத்துவதாகும். எவ்வாறாயினும் நாங்கள் இப்பொழுது அசரிரீயான ஒரேயொருவருடன் யோகம் செய்கின்றோம். அசரீரியான ஆத்மாக்கள் அசரீரியான தந்தையை நினைவுசெய்யும்பொழுது, அது தனித்துவமானதாகும். உலக மக்கள் கடவுளை நினைவுசெய்யும்பொழுது, அவரது அறிமுகம் இல்லாமலேயே அவரை நினைவுசெய்கின்றார்கள். ஒருவரின் தொழிலை அறிந்துகொள்ளாமல் அவரை நினைவுசெய்வது பக்தியாகும். ஞானம் நிறைந்த குழந்தைகள் கடவுளின் அறிமுகத்துடன் அவரை நினைவுசெய்கின்றார்கள்.

ஓம் சாந்தி.
ஆன்மீகத் தந்தை இங்கமர்ந்திருந்து குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார். எல்லாவற்றிற்கும் முதலில் குழந்தைகளாகிய நீங்கள் தந்தையின் அறிமுகத்தைப் பெற்றிருக்கின்றீர்கள். ஒரு குழந்தை பிறந்தவுடனேயே, அவர் முதலில் தனது பெற்றோரின் அறிமுகத்தைப் பெறுகின்றார். நீங்கள் செய்யும் முயற்சிக்கு எற்ப, வரிசைக்கிரமமாக, படைப்பவரான தந்தையின் அறிமுகத்தை நீங்களும், பெற்றிருக்கின்றீர்கள். தந்தை மாத்திரமே அதிமேலானவர் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிந்திருப்பதால், நீங்களும் பிறருக்கு அவரது புகழைக் கூற வேண்டும். நீங்கள் புகழ் பாடுகின்றீர்கள்: சிவனுக்கு வந்தனங்கள். பிரம்மாவிற்கு வந்தனங்கள் என்றோ, விஷ்ணுவிற்கு வந்தனங்கள் என்றோ கூறுவது சரியெனத் தோன்றவில்லை. சிவனுக்கு வந்தனங்கள் என்று கூறுவதே சரியாகும். பிரம்ம தேவனுக்கு வந்தனம் என்றும் அல்லது விஷ்ணு தேவனுக்கு வந்தனம் என்றும் கூறுவது சரியாகும். அவர்கள் தேவர்கள் என்றே அழைக்கப்பட வேண்டும். கடவுள் அதிமேலானவர்;. எவராவது வரும்பொழுது. அனைத்திற்கும் முதலில் நீங்கள் அவருக்குத் தந்தையின் புகழை நிச்சயமாகக் கூற வேண்டும். அவர் பரமதந்தை ஆவார். தந்தையின் புகழை எவ்வாறு கூறுவது என்பதைக் குழந்தைகள் மறந்து விடுகின்றார்கள். அவரே பரமதந்தையும், ஆசிரியரும், சற்குருவும் ஆவார் என்பதை முதலில் விளங்கப்படுத்துங்கள். மூவருமே நினைவுசெய்யப்பட வேண்டும். உண்மையில், சிவபாபாவை மாத்திரமே நீங்கள் மூன்று வடிவிலும் நினைவுசெய்ய வேண்டும். இதனை நீங்கள் உறுதியாக்கிக் கொள்ளுங்கள். உங்களுக்குத் தந்தையின் புகழைத் தெரியும் என்பதாலேயே நீங்கள் அவரைப் புகழ்கின்றீர்கள். அதிமேலான தந்தை கற்களிலும் கூழாங்கற்களிலும் இருக்கின்றார் என்று அவர்கள் கூறியுள்ளார்கள். அவர் மனித வடிவத்திலும் உள்ளார் என்றும் அவர்கள் கூறுகின்றார்கள். எவ்வாறாயினும், அவரால் எப்பொழுதும் ஒரு மனித சரீரத்தில் இருக்க முடியாது. அவர் கடனாகவே அதனைப் பெறுகின்றார். அவரே கூறுகின்றார்: நான் இவரின் சரீரத்தையே ஆதாரமாக எடுக்கின்றேன். எனவே, முதலாவது விடயத்தை அதாவது தந்தையே சத்தியமானவர் என்பதை உறுதியாக்கிக் கொள்ளுங்கள். அவர் மாத்திரமே உங்களுக்குச் சத்திய நாராயணனின் கதையைக் கூறுகின்றார். உண்மையான தந்தை மாத்திரமே உங்களைச் சாதாரண மனிதரில் இருந்து நாராயணனாக மாற்றுகின்றார். சத்தியயுகத்தில் இலக்ஷ்மி நாராயணனின் இராச்சியம் இருந்தது. அவர்கள் எவ்வாறு அப்படி ஆகினார்கள் என்றும், அவர்களை அவ்வாறு ஆக்கியது யார் என்றும், எப்பொழுது கதை கூறப்பட்டது என்றும், எப்பொழுது இராஜயோகம் கற்பிக்கப்பட்டது என்றும் நீங்கள் இப்பொழுதே புரிந்துகொள்கி;றீர்கள். ஏனைய யோகங்கள் அனைத்தும் மனிதர்களுடன் மனிதர்கள் செய்கின்ற யோகமாகும். மனிதர்கள் அசரீரியான ஒரேயொருவருடன் யோகம் செய்கின்ற வேறு எவ்விதமான யோகமும் அவர்களிடம் இல்லாததுடன், அவரின் அறிமுகத்தையும் அவர்கள் அறிந்து கொள்ளவில்லை. இக்காலத்தில், சிவனுடன் மக்கள் யோகம் செய்து, அவரை வழிபட்ட பொழுதிலும், அவரை எவருமே அறியார். பிரஜாபிதா பிரம்மா நிச்சயமாகச் சரீர உலகிலேயே இருப்பார் என்பதையும் அவர்கள் புரிந்துகொள்ளவில்லை. அவர்கள் குழப்பம் அடைந்துள்ளார்கள். பிரஜாபிதா பிரம்மா சத்தியயுகத்;தில் இருப்பார் என அவர்கள் எண்ணுகின்றார்கள். முதலில் அவர் சத்தியயுகத்தில் இருப்பாராயின், அவரை ஏன் அவர்கள் சூட்சும உலகில் காட்டியுள்ளார்கள்? அவர்கள் அதன் அர்த்தத்தைப் புரிந்துகொள்ளவில்லை. இந்தச் சரீரதாரி கர்ம பந்தனத்தில் கட்டுண்டுள்ளார், ஆனால் அந்தச் சூட்சுமதாரியோ கர்மாதீத் அடைந்துவிட்டார். எவரிடமும் இந்த ஞானம் இல்லை. ஒரேயொரு தந்தை மாத்திரமே உங்களுக்கு ஞானத்தைக் கொடுக்கின்றார். அவர் வந்து உங்களுக்கு ஞானத்தைக் கொடுத்த பின்னரே உங்களால் அதனைப் பிறருக்குக் கொடுக்க முடியும். தந்தையின் அறிமுகத்தைப் பிறருக்குக் கொடுப்பது மிகவும் இலகுவாகும். நீங்கள் அல்ஃபாவை விளங்கப்படுத்த வேண்டும். அந்த ஒரேயொருவரே ஆத்மாக்கள் அனைவரினதும் எல்லையற்ற தந்தையாவார். அவரது அறிமுகத்தை எவருக்கும் கொடுப்பது சிரமமானதல்ல. அது மிகவும் இலகுவாகும். எவ்வாறாயினும் உங்களுக்கு நம்பிக்கையோ அல்லது பயிற்சியோ இல்லாதிருந்தால், உங்களால் பிறருக்கு விளங்கப்படுத்த முடியாது. நீங்கள் எவருக்கும் ஞானத்தைக் கொடுக்காதிருந்தால், உங்களுக்கு ஞானம் இல்லை என்பதே அதன் அர்த்தமாகும். ஞானம் இல்லாதிருந்தால் அது பக்தியாகும். அங்கே சரீர உணர்வே உள்ளது. ஆத்ம உணர்வுடையவர்களே ஞானம் நிறைந்தவர்கள். நான் ஓர் ஆத்மா, எனது தந்தையான பரமாத்மாவாகிய பரமதந்தையே, தந்தையும், ஆசிரியரும், சற்குருவும் ஆவார். பிரஜாபிதா பிரம்மாவும் உள்ளார். தந்தை உங்களுக்கு பிரஜாபிதா பிரம்மாவினதும், தனதும் தொழிலையும் கூறியுள்ளார். மக்கள் சிவனையும் சங்கரரையும்; ஒன்றிணைத்து, இருவரும் ஒருவரே என்று கூறுகின்றார்கள். சங்கரர் தனது கண்ணைத் திறந்தபொழுது விநாசம் இடம்பெற்றது என அவர்கள் கூறுகின்றார்கள். விநாசம் குண்டுகளின் மூலமும், இயற்கை அனர்த்தங்களின் மூலமும் இடம்பெறும். அவர்கள் கூறுகிறார்கள்: சிவா, சங்கர், மகாதேவ்! அந்தப் படங்கள் மிகச்சரியானவை அல்ல. அப்படங்கள் யாவும் பக்தி மார்க்கத்திற்கு உரியவை. அங்கே அவ்வாறான எதுவுமே இல்லை. பிரஜாபிதா பிரம்மாவும் சரீரதாரியாவார். அவருக்குப் பல குழந்தைகள் உள்ளனர். எனவே, அப்படங்கள் யாவும் வழிபடுவதற்காகவாகும். தந்தை உங்களுக்கு விளங்கப்படுத்தியுள்ளார்: இவர் (பிரம்மா) சரீரதாரி (வியக்த்), அவரோ சூட்சுமமானவர் (அவ்யக்த்) ஆவார். அவர் அவ்யக்த் ஆகும்பொழுது, அவர் ஒரு தேவதை ஆகுகின்றார். இரு இடங்கள் நிச்சயமாக உள்ளன: அசரீரி உலகம், சூட்சும உலகம்;. நீங்களும் சூட்சும உலகிற்குச் செல்கின்றீர்கள். மனிதரான பிரஜாபிதா பிரம்மா பின்னர் தேவதை ஆகுகின்றார் என்று தந்தை விளங்கப்படுத்தியுள்ளார். பின்னர் அவருக்கு ஓர் இராச்சியமும் காட்டப்பட்டது. அவர் அங்கே ஆட்சிசெய்வார். சூட்சும உலகின் படம் இல்லாமல் விளங்கப்படுத்துவது மிகவும் சிரமமாகும். உண்மையில், விஷ்ணுவின் நான்கு கரங்களைக் கொண்ட உருவம் இருப்பதில்லை. அது பக்தி மார்க்கத்திற்கான படமாகும். ஆத்மாவே தூய்மையற்றவரிலிருந்து தூய்மையாக வேண்டும் என்று தந்தை விளங்கப்படுத்தியுள்ளார். ஆத்மாக்கள் தூய்மையாகித் தமது உலகிற்குச் செல்வார்கள். ஆத்மாக்கள் அசரீரி உலகில் வசிக்கின்றார்கள். இங்கே சரீரதாரிகளாக ஆகுகின்றார்கள். எவ்வாறாயினும் சூட்சும உலகில் எந்தவொரு முக்கியமான கதையும் கூறப்படவில்லை. இந்நேரத்தில் மாத்திரமே தந்தை சூட்சும உலகைப் பற்றிய இரகசியங்களை உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார். எனவே, அசரீரியான உலகம், சூட்சும உலகம், சரீர உலகம் என்பன உள்ளன. ஆகையால், முதன்முதலில், அனைவருக்கும் தந்தையின் அறிமுகத்தைக் கொடுங்கள். பக்தி மார்க்கத்தில் பாபாவை மக்கள் ஓ கடவுளே!, ஒ பிரபு! என்றெல்லாம் கூவி அழைக்கின்றார்கள். ஆனால் அவர்களுக்கு அவரைத் தெரியாது. பரமாத்மாவான சிவனுக்கு வந்தனங்கள் என்று எப்பொழுதும் கூறப்படுகின்றது. சிவதேவர் என என்றுமே கூறப்படவில்லை. பிரம்ம தேவர் என்று கூறப்படுகின்றது. சிவன் மாத்திரமே பரமாத்மாவான பரமதந்தை என்று அழைக்கப்படுகின்றார். சிவதேவர் என்று ஒருபொழுதும் கூறுவதில்லை. பரமாத்மாவான சிவன் என்றே கூறப்படுகின்றது. அவரைச் சர்வவியாபி என்று அழைக்க முடியாது. தூய்மையற்றவர்களைத் தூய்மையாக்குகின்ற பணியை அவர் மேற்கொள்ள வேண்டும். எனவே அவரால் கற்களிலும் கூழாங்கற்களிலும் புகுந்து அதனைச் செய்ய முடியுமா? அதுவே காரிருள் என்று அழைக்கப்படுகின்றது. இதுவும் நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டுள்ளது. அதர்மம் மேலோங்கி இருக்கும்பொழுது, தந்தை வந்து விளங்கப்படுத்துகின்றார். அவதூறு யாருக்கு? அவர்கள் வாசகங்களைக் கூறியபின் அவற்றின் அர்த்;தத்தைக் கூறுகின்றார்கள். குழந்தைகளாகிய நீங்கள் அவர்களிடம் சென்று அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதைக் கவனிக்க வேண்டும். நீங்கள் அவர்களிடம் கூறவேண்டும்: நாங்கள் இவற்றிற்கான அர்த்தத்தை உங்களுக்குக் விளங்கப்படுத்துவோம். பின்னர் நேரடியாகவே இந்த ஞானத்தைக் கொடுங்கள். நீங்கள் பிரம்மகுமாரிகள் என்பதை அவர்கள் அறிய மாட்டார்கள். நீங்கள் வெள்iளை ஆடையை அணிந்தாலும், உங்கள் மீது எந்த அடையாளமும் இல்லை. அவர்கள் கூறுபவற்றை எவ்விடத்திலாவது நீங்கள் சென்று செவிமடுத்து, அதற்கான அர்த்தத்தை அவர்களிடம் வினவ வேண்டும். பின்னர் அவர்கள் உங்களிடம் என்ன கூறுகின்றார்கள் எனப் பாருங்கள். இப்படங்கள் அனைத்தும் விபரங்களைப் புரிந்து கொள்வதற்காகவே ஆகும். அதிகளவு ஞானம் உள்ளது. நீங்கள் கடலை மையாகப் பயன்படுத்தினாலும், ஞானத்திற்கு எந்த முடிவும் இல்லை. பின்னர் ஒரு விநாடியில் ஞானம் பெறுவதைப் பற்றியும் உங்களுக்குக் கூறப்பட்டுள்ளது. நீங்கள் தந்தையின் அறிமுகத்தை மாத்திரமே கொடுக்க வேண்டும். அந்த எல்லையற்ற தந்தையே சுவர்க்கத்தைப் படைப்பவர். அவரின் குழந்தைகளான நாங்கள் அனைவரும் சகோதரர்கள். எனவே, நாங்களும் நிச்சயமாகச் சுவர்க்க இராச்சியத்தைக் கொண்டிருப்போம். எவ்வாறாயினும், அனைவராலும் அதனைப் பெற முடியும் என்றில்லை. தந்தை பாரதத்திற்கு மாத்திரமே வருகின்றார் என்பதால், பாரத மக்கள் மாத்திரமே சுவர்க்கவாசிகள் ஆகுகின்றார்கள். ஏனையோர் பின்னரே வருகின்றார்கள். இது மிகவும் இலகுவாகும். ஆனால் அவர்களுக்குப் புரிவதில்லை. பாபா அதிசயித்தார். நடனமாடுபவர் போன்றோர் ஒருநாள் வந்து செவிமடுப்பார்கள். இறுதியில் வருபவர்கள் மேலும் திறமைசாலிகளாக இருப்பார்கள். எவருமே அவர்களிடம் சென்று சேவையும் செய்யலாம். உங்களிற் சிலருக்குத் தர்மசங்கடமாக உள்ளது. சரீர உணர்வே அதிகளவில் உள்ளது. பாபா கூறுகின்றார்: நீங்கள் விலைமாதருக்கும் விளங்கப்படுத்த வேண்டும். அவர்களே பாரதத்திற்கு அவப் பெயரை ஏற்படுத்தியவர்கள்;. இதற்குப் பிரதானமாக யோக சக்தியே தேவைப்படுகிறது. அனைவரும் முற்றிலும் தூய்மையற்றவர்கள் என்பதால், தூய்மையாகுவதற்கு நினைவு யாத்திரை அவசியமாகும். அந்த நினைவு சக்தி இந் நேரத்தில் சற்றுக் குறைவாகவே உள்ளது. சிலருக்கு ஞானம் உள்ளது. ஆனால் அவர்களுக்கு நினைவுசெய்வதில் குறைபாடு உள்ளது. இதுவே சிரமமான பாடமாகும். இதில் நீங்கள் சித்தியடையும்பொழுதே நற் குணங்கள் அற்றவர்களை உங்களால் ஈடேற்ற முடியும். நல்ல, அனுபவம் வாய்ந்த தாய்மார்கள் அவர்களிடம் சென்று விளங்கப்படுத்தலாம். குமாரிகளுக்கு அந்தளவு அனுபவம் இல்லை. தாய்மார்களால் அவர்களுக்கு விளங்கப்படுத்த முடியும். தந்தை கூறுகின்றார்: தூய்மையாகுங்கள், நீங்கள் உலக அதிபதிகள் ஆகுவீர்கள். உலகம் தானாகவே சிவாலயமாக மாறும். சத்தியயுகம் சிவாலயம் என்றே அழைக்கப்படுகின்றது. அங்கே அதிகளவு சந்தோஷம் உள்ளது. தந்தை கூறுகின்றார்: இப்பொழுது தூய்மையாக இருப்பதற்கான சத்தியத்தைச் செய்யுங்கள் என்று அவர்களிடம் கூறுங்கள்;. அத்தகைய தூய்மையற்றவர்களைத் தூய்மையாக்குவதற்கு வாள் மிகவும் கூரியதாக இருக்க வேண்டும். இதற்கு இன்னமும் காலம் தேவையாக இருக்கலாம். நீங்கள் வரிசைக்கிரமமாகவே விளங்கப்படுத்துகின்றீர்கள். நிலையங்களில் வாழ்கின்றவர்கள் அனைவருமே ஒரேமாதிரியாக இருப்பதில்லை என்பது பாபாவிற்குத் தெரியும். சேவைக்காக வெளியில் செல்கின்றவர்களிலும் இரவுக்கும் பகலுக்கும் உள்ள வித்தியாசம் உள்ளது. எனவே, எல்லாவற்றிற்கும் முதலில் நீங்கள் எவருக்கும் விளங்கப்படுத்தும்பொழுது, முதலில் தந்தையின் அறிமுகத்தைக் கொடுங்கள். தந்தையைப் புகழுங்கள். தந்தையைத் தவிர வேறு எவராலும் இந்தத் தெய்வீகக் குணங்கள் அனைத்தையும் கொண்டிருக்க முடியாது. அவர் மாத்திரமே உங்களையும் தெய்வீகக் குணங்கள் நிறைந்தவர் ஆக்குகின்றார். தந்தையே சத்தியயுகத்தை ஸ்தாபிக்கின்றார். இப்பொழுது இது நீங்கள் அதிமேன்மையானவர் ஆகுகின்ற சங்கமயுகமாகும். அவர் இங்கமர்ந்திருந்து ஆத்மாக்களாகிய உங்களுக்குக் கூறுவது: சரீரம் ஆத்மாவிற்கு உரியது என்பதை விளங்கப்படுத்துங்கள். ஒருவர் எவ்வளவு புரிந்துகொண்டிருக்கின்றார் என்பது அவரது முகத்தில் தெரியும். மாறுபடும் மனோநிலையைக் கொண்டவர்களின் முகங்கள் முற்றாக மாற்றமடைகின்றன. உங்களை நீங்கள் ஓர் ஆத்மாவாகக் கருதி இங்கு அமரும்பொழுது முகம் நன்றாகவிருக்கும். இதற்காகவும் முயற்சி செய்ய வேண்டும். வீட்டில் குடும்பத்துடன் வாழ்பவர்கள் இதற்காக அதிகளவு முயற்சி செய்வதில்லை, ஏனெனில் அவர்கள் தமது நாளாந்த வேலைகளைச் செய்ய வேண்டியுள்ளது. நடக்கும்பொழுதும், நடமாடித் திரியும்பொழுதும், அமர்ந்திருக்கும்பொழுதெல்லாம் இதனைப் பயிற்சி செய்வதால் அவர்களால் உறுதியானவர்களாக முடியும். நினைவுசெய்வதனால் மாத்திரமே நீங்கள் தூய்மையாகுகின்றீர்கள். ஆத்மாக்களாகிய நீங்கள் எந்தளவிற்கு நினைவுசெய்கின்றீர்களோ, அதற்கேற்பவே தூய்மை ஆகுவீர்கள். சத்தியயுகத்தில், நீங்கள் சதோபிரதானாக இருந்ததால், மிகவும் சந்தோஷமாக இருந்தீர்கள். இப்பொழுது நீங்கள் சங்கமயுகத்தில் ஆடிப் பாடிக் களிப்புடன் இருக்கின்றீர்கள். ஆகவே நீங்கள் எல்லையற்ற தந்தையைக் கண்டு கொண்டுள்ளதால், உங்களுக்கு இதனை விட வேறு என்ன வேண்டும்? நீங்கள் தந்தையிடம் உங்களை அர்ப்பணிக்க வேண்டும். செல்வந்தவர்கள் அரிதாகவே வெளிப்படுகின்றார்கள். ஏழைகளே இதனைப் பெறுகின்றார்கள். நாடகம் இவ்வாறாக உருவாக்கப்பட்டுள்ளது. நாளடைவில், விரிவாக்கம் தொடர்ந்தும் இடம்பெறும். பல மில்லியன் மக்களில் ஒரு கைப்பிடி அளவினரே வெற்றி மாலையில் மணிகள் ஆகுவர். எவ்வாறாயினும், பிரஜைகளும் வரிசைக்கிரமமாக உருவாக்கப்பட வேண்டும். பலர் உருவாக்கப்படுவார்கள். பல வகையினரும் உள்ளனர்;: பணக்காரர்களும் ஏழைகளும். முழு இராச்சியமும் ஸ்தாபிக்கப்படுகின்றது. ஏனைய அனைவரும் தத்தமது பிரிவுகளுக்குத் திரும்பிச் செல்வார்கள். எனவே, தந்தை விளங்கப்படுத்துகின்றார்: குழந்தைகளே, நீங்கள் தெய்வீகக் குணங்களையும் கிரகிக்க வேண்டும். உங்கள் உணவும் பானமும் நன்றாக இருக்க வேண்டும். ஒரு குறிப்பிட்ட உணவை விசேடமாக உண்ண வேண்டும் என்ற விருப்பம் இருக்கக்கூடாது. இங்கேயே அத்தகைய ஆசைகள் ஏற்படும். ஓய்வு ஸ்திதியில் இருப்பவர்களைக் கொண்ட பல ஆச்சிரமங்களை பாபா பார்த்துள்ளார். அவர்கள் அங்கே மிகவும் அமைதியாக வாழ்கின்றார்கள். இங்கே, பாபா இந்த எல்லையற்ற விடயங்கள் அனைத்தையும் விளங்கப்படுத்துகின்றார். விலைமாதர்களும், தெய்வீகக் குணங்கள் அற்றவர்களும் வந்து, உங்களை விடத் திறமைசாலிகள் ஆகுவார்கள். உங்களது சந்தோஷப் பாதரசம் அதிகரிக்கும் வகையில், அவர்கள் முதற்தரமான பாடல்களைப் பாடுவார்கள். அந்தளவிற்கு கீழே விழுந்தவர்களுக்கு நீங்கள் விளங்கப்படுத்தி அவர்களை மேன்மையடையுமாறு செய்யும்பொழுதே உங்கள் பெயர் போற்றப்படும். அவர்கள் கூறுவார்கள்: நீங்கள் விலைமாதரையும் மிகவும் மேன்மையடையச் செய்கின்றீர்கள். சூத்திரர்களாகிய நாங்கள் இப்பொழுது பிராமணர்கள் ஆகியுள்ளோம், பின்னர் நாங்கள் தேவர்களாகி, பின்னர் சத்திரியர்கள் ஆகுவோம். ஒருவரால் முன்னேற முடியுமா இல்லையா என்பதை பாபாவினால் புரிந்துகொள்ள முடியும். இறுதியில் வருகின்றவர்களால் அவர்களை விட முன்னேறிச் செல்ல முடியும். நீங்கள் மேலும் முன்னேறும்பொழுது, நீங்கள் அனைத்தையும் பார்ப்பீர்கள். இப்பொழுதும் பார்க்கின்றீர்கள். புதிய குழந்தைகள் சேவை செய்வதில் அதிகளவு ஆர்வம் கொண்டு;ள்ளனர். அச்சா.

இனிமையிலும்இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டெடுக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:

1. தூய்மையற்றவர்களைத் தூய்மையாக்குகின்ற சேவையைச் செய்யுங்கள். விலைமாதருக்கும், நற்குணங்கள் அற்றவர்களுக்கும் ஞானத்தைக் கொடுத்து, விழுந்தவர்களை ஈடேற்றுங்கள். அவர்களை நீங்கள் ஈடேற்றும்பொழுதே, உங்கள் பெயர் போற்றப்படும்.

2. உங்கள் பார்வையைத் தூய்மையாக்குவதற்கு, நடந்தும் உலாவியும் திரியும் பொழுதெல்லாம்: நான் ஓர் ஆத்மா, நான் ஓர் ஆத்மாவுடன் உரையாடுகின்றேன் என்பதைப் பயிற்சி செய்யுங்கள். தந்தையின் நினைவில் நிலைத்திருங்கள். நீங்கள் தூய்மையாகுவீர்கள்.


ஆசீர்வாதம்:
நீங்கள் ஏகாந்தத்தில் நிலைத்திருந்து ஒரு நிமிடம் ஒருமுகப்பட்ட ஸ்திதியைக் கொண்டிருப்பதால், சக்திமிக்க அனுபவத்தைக் கொண்டிருந்து, பிறருக்கும் அதனைக் கொடுப்பீர்களாக.

ஏகாந்தத்தில் இருப்பது என்றால் உங்களை ஒரு சக்திவாய்ந்த ஸ்திதியில் ஸ்திரப்படுத்துவது என்று அர்த்தம் ஆகும். நீங்கள் உங்களை விதை ஸ்திதியில் ஸ்திரப்படுத்த முடியும், உங்களால் ஒரு வெளிச்ச வீடாகவும் சக்தி வீடாகவும் ஆகி, உலகிற்கு ஒளியையும் சக்தியையும் கொடுக்க முடியும் அல்லது உங்களைத் தேவதை ஸ்திதியில் ஸ்தாபிப்பதால் அவ்யக்த ஸ்திதியின் அனுபவத்தைப் பிறருக்குக் கொடுக்க முடியும். நீங்கள் உங்களை ஒருமுகப்படுத்தி, இந்த ஸ்திதியில் உங்களை ஒரு நிமிடமோ அல்லது ஒரு விநாடியோ ஸ்தாபித்தால், உங்களுக்கும் பிறருக்கும் பெருமளவு நன்மையளிக்க முடியும். நீங்கள் இதனைப் பயிற்சி செய்வதே அவசியம் ஆகும்.

சுலோகம்:
ஒரு பிரம்மச்சாரியின் ஒவ்வோர் எண்ணமும் வார்த்தையும் தூய்மையின் அதிர்வலைகளால் மூழ்கியிருக்கின்றன.


தந்தை பிரம்மாவிற்குச் சமமானவர் ஆகுவதற்கான விசேட முயற்சி:
செயல்களைச் செய்யும்பொழுதும், தந்தை பிரம்மாவைப் போன்று தேவதை ஸ்திதியை அனுபவம் செய்வதற்கு அடிக்கடி உங்கள் மனதை அசரீரி, தேவதை ரூபங்களின் மூலம் பயிற்றுவியுங்கள். தந்தை பிரம்மாவை நீங்கள் பௌதீக ரூபத்தில் கண்டீர்கள் - அவர் எப்பொழுதும் இலேசாகவும் ஒளியாகவும் இருந்தார். அவர் சேவையைப் பற்றிய சுமை எதனையும் கூட கொண்டிருக்கவில்லை. அதேபோன்று, தந்தையைப் பின்பற்றுங்கள், நீங்கள் இலகுவாகத் தந்தைக்குச் சமமானவர் ஆகுவீர்கள்.