08.02.19        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்:
இனிய குழந்தைகளே, நான் எப்பொழுதும் சப்தத்திற்கு அப்பாற்பட்டவன். நான் குழந்தைகளாகிய உங்களைச் சப்தத்திற்கு அப்பால் அழைத்துச் செல்வதற்கு வந்துள்ளேன். இது இப்பொழுது உங்கள் அனைவரதும் ஓய்வு ஸ்திதியாகும். நீங்கள் இப்பொழுது சப்தத்திற்கு அப்பால் வீடு செல்ல வேண்டும்.

கேள்வி:
நீங்கள் யாரைச் சிறந்த முயற்சி செய்யும் மாணவர் என்று அழைப்பீர்கள்? பிரதான அறிகுறிகள் எவை?

பதில்:
எவ்வாறு தன்னுடன் பேசுவது என்றும், எவ்வாறு சூட்சுமமாகக் கற்பது என்றும் அறிந்தவரே, ஒரு சிறந்த முயற்சி செய்யும் மாணவர் ஆவார். முயற்சி செய்கின்ற மாணவர்கள் தொடர்ந்தும் தங்களைச் சோதிப்பார்கள்: நான் என்னில் ஏதாவது அசுர சுபாவத்தைக் கொண்டுள்ளேனா? நான் எந்தளவுக்குத் தெய்வீகக் குணங்களைக் கிரகித்துள்ளேன்? நான் ஏதாவது குற்ற எண்ணங்களைக் கொண்டுள்ளேனா? எந்தளவுக்குத் தாங்;கள் சதா சகோதரத்துவப் பார்வையைக் கொண்டிருக்கின்றார்கள் என்பதைப் பார்ப்பதற்கு அவர்கள் தங்களுடைய பதிவேட்டை வைத்திருப்பார்கள்.


ஓம் சாந்தி.
பாபா சப்தத்திற்கு அப்பால் செல்வதற்கு முயற்சி செய்கின்ற, அதாவது, வீடு செல்வதற்கு முயற்சி செய்கின்ற ஆன்மீகக் குழந்தைகளுக்கு விளங்கப்படுத்துகின்றார். அது ஆத்மாக்கள் அனைவரதும் வீடாகும். நீங்கள் இப்பொழுது அச் சரீரங்களை நீக்கி வீடு திரும்ப வேண்டும் என்பதைப் புரிந்துகொள்கிறீர்கள். தந்தை கூறுகின்றார்: உங்களைத் திரும்பவும் வீட்டிற்கு அழைத்துச் செல்வதற்கு நான் வந்துள்ளேன். இதனாலேயே நீங்கள் அச்சரீரங்களிற்கும் சரீர உறவுமுறைகளுக்கும் அப்பால் இருக்க வேண்டும். இது தீய உலகமாகும். தான் இப்பொழுது வீடு திரும்ப வேண்டும் என்பதை ஆத்மா அறிவார். தந்தை உங்களைத் தூய்மையாக்குவதற்கு வந்துள்ளார். நாங்கள் மீண்டும் ஒருமுறை தூய உலகிற்குச் செல்ல வேண்டும். நீங்கள் இந்த ஞானக்கடலை உங்களின் உள்ளாரக் கடைய வேண்டும். வேறு எவரும் அத்தகைய எண்ணங்களைக் கொண்டிருக்க மாட்டார்கள். நீங்கள் விருப்பத்துடன் அச் சரீரங்களை நீக்கி, வீடு திரும்பி, பின்னர் புதிய உலகில் புதிய, தூய உறவுமுறைகளுக்குள் மீண்டு;ம் வருவீர்கள் என்பது உங்களுக்குத் தெரியும். வெகுசிலரே, இவ் விழிப்புணர்வைக் கொண்டிருக்கின்றார்கள். தந்தை கூறுகின்றார்: இளைஞர்கள், முதிர்ச்சியடைந்தவர்கள், வயோதிபர்கள்; - நீங்கள் அனைவரும் வீடு திரும்பி, பின்னர் புதிய உலகில் தூய உறவுமுறைக்குள் மீணடும் வர வேண்டும். நீங்கள் இப்பொழுது வீடு திரும்புவதற்கான முன்னேற்பாடுகளைச் செய்கின்றீர்கள் என்பது உங்களுடைய புத்தியில் மீண்டும் மீண்டும் பிரவேசிக்க வேண்டும். எதையாவது செய்பவர்கள் பாபாவுடன் திரும்பிச் செல்வார்கள். இப்பொழுது எதையாவது கடவுளின் பெயரில் செய்பவர்கள், புதிய உலகில் பல மில்லியன்களை உடையவர்கள் ஆகுவார்கள். அம்மக்கள் இப்பழைய உலகில் அனைத்தையும் மறைமுகமாகச் செய்கின்றார்கள். கடவுள் தங்களுக்கு அதன் பலனைக் கொடுப்பார் என்று அவர்கள் நம்புகிறார்கள். அவர்கள் தற்காலிகப் பலனை மாத்திரமே பெறுகிறார்கள் என்று தந்தை உங்களுக்கு இப்பொழுது விளங்கப்படுத்துகின்றார். இப்பொழுது நான் வந்து உங்களுக்கு ஆலோசனை வழங்குகிறேன்: இப்பொழுது கொடுப்பவர்கள், அதைப் பல மில்லியன்களாக 21 பிறவிகளுக்குப் பெறுவார்கள். நீங்கள் சென்று ஓர் ஆடம்பரமான வீட்டில் பிறவியெடுப்பீர்கள் அல்லது நாராயணனாகவோ அல்லது இலக்ஷ்மியாகவோ ஆகுவீர்கள் என்பதை நீங்கள் புரிந்துகொள்கின்றீர்கள். எனவே, அப்பொழுது நீங்களும் அந்தளவு முயற்சியைச் செய்ய வேண்டும். இந்த அழுக்கான, பழைய உலகை விட்டு நீங்குவதற்கு நாங்கள் ஆயத்தங்களைச் செய்கின்றோம். நாங்கள் இப் பழைய உலகையும் பழைய சரீரங்களையும் துறக்க வேண்டும். நீங்கள் இறுதியில் வேறு எவரையும் நினைவுசெய்யாத அளவிற்குத் தயாராக இருக்க வேண்டும். நீங்கள் பழைய உலகை அல்லது உங்கள் நண்பர்களையும், உறவினர்களையும் நினைவுசெய்தால், உங்கள் நிலை என்னவாக இருக்கும்? கூறப்பட்டுள்ளது: இறுதியில் ஒரு பெண்ணை நினைவுசெய்பவர்கள் இதனாலேயே நீங்கள் தந்தையைப் பின்பற்ற வேண்டும். தான் வயோதிபராக இருப்பதன் காரணமாக, தான் தனது சரீரத்தை நீக்க வேண்டும் என்று பாபா நினைக்கின்றார் என்பதல்ல. இல்லை, நீங்கள் அனைவரும் வயோதிபர்கள்; இது அனைவரதும் ஓய்வு ஸ்திதியாகும். அனைவரும் வீடு திரும்ப வேண்டும். இதனாலேயே தந்தை கூறுகின்றார்: இப்பழைய உலகிலிருந்து உங்கள் புத்தியின் யோகத்தைத் துண்டித்து விடுங்கள். இப்பொழுது நீங்கள் உங்களுடைய வீட்டிற்குத் திரும்பிச் செல்ல வேண்டும். பின்னர் அங்கு நீங்கள் எவ்வளவு காலம் இருக்க வேண்டுமோ, அவ்வளவு காலத்திற்கு அங்கு இருப்பீர்கள். நீங்கள் தாமதமாக உங்களுடைய பாகத்தை நடிக்க வேண்டியிருந்தால், அந்தளவு தாமதமாகவே நீங்கள் ஒரு சரீரத்தைப் பெற்று, உங்கள் பாகத்தை நடிப்பீர்கள். சிலர் 5000 வருடங்களுக்கு ஒரு நூறு வருடங்கள் குறைவாக அமைதி தாமத்தில் இருப்பார்கள்; அவர்கள் இறுதியில் வருவார்கள். ஒருவர் தன்னைக் காசியில் அர்ப்பணிக்கின்றபொழுது, அவருடைய பாவங்கள் அனைத்தும் அழிக்கப்படுகின்றன. இறுதியில் வருபவர்கள் எவ்வளவு பாவங்களைச் சேகரிப்பார்கள்? அவர்கள் வந்து செல்வார்கள், ஆனால் எவராலும் அநாதியான முக்தியைப் பெற முடியாது. அவர்கள் அங்கிருந்து என்ன செய்வார்கள்? அவர்கள் நிச்சயமாகத் தங்கள் பாகங்களை நடிக்க வேண்டும். உங்கள் பாகங்கள் ஆரம்பத்தில் வருவதாகும். எனவே தந்தை கூறுகின்றார்: குழந்தைகளே, இப்பழைய உலகைத் தொடர்ந்தும் மறந்துவிடுங்கள். இப்பொழுது நீங்கள் வீடு திரும்ப வேண்டும். உங்கள் 84 பிறவிகளின் பாகங்கள் முடிவடைந்து விட்டன. நீங்கள் தூய்மையற்றவர்கள் ஆகிவிட்டீர்கள். நீங்கள் இப்பொழுது உங்களை ஆத்மாக்களாகக் கருதித் தந்தையை நினைவுசெய்ய வேண்டும். தெய்வீகக் குணங்களைக் கிரகியுங்கள். தந்தை விளங்கப்படுத்துகின்றார்: குழந்தைகளே, தொடர்ந்தும் உங்களைச் சோதியுங்கள்: நான் அசுர சுபாவம் எதனையேனும் கொண்டிருக்கின்றேனா? உங்கள் சுபாவம் தெய்வீகமானதாக இருக்க வேண்டும். இதற்காக ஓர் அட்டவணையை வைத்திருங்கள், அது உறுதியானதாக ஆகும். எவ்வாறாயினும், மாயை ஓர் அட்டவணையை வைத்திருப்பதற்கு உங்களை அனுமதிக்காத அத்தகையவள் ஆவாள். நீங்கள் அதை இரண்டு முதல் நான்கு நாட்களுக்கு வைத்திருந்து, அது உங்கள் பாக்கியத்தில் இல்லாததன் காரணமாக, அதை விட்டுவிடுகின்றீர்கள். அது உங்கள் பாக்கியத்தில் இருந்தால், நீங்கள் உங்கள் பதிவேட்டை மிக நன்றாக வைத்திருக்கின்றீர்கள். பாடசாலையில், அவர்கள் நிச்சயமாக ஒரு பதிவேட்டை வைத்திருக்கின்றார்கள். இங்கும், கூட, அனைத்து நிலையங்களிலும் உள்ள நீங்கள் அனைவரும் உங்கள் அட்டவணையை அல்லது பதிவேட்டை வைத்திருக்க வேண்டும். பின்னர் நீங்கள் தினமும் வருகிறீர்களா என்பதைச் சோதியுங்கள். நான் தெய்வீகக் குணங்களைக் கிரகிக்கின்றேனா? சகோதர, சகோதரி என்னும் உறவுமுறையை விடவும் உயர்ந்த நிலைக்கு நீங்கள் செல்ல வேண்டும். ஆன்மீக சகோதரத்துவப் பார்வையே இருக்க வேண்டும். நான் ஓர் ஆத்மா. குற்றப் பார்வை இருக்கக்கூடாது. நீங்கள் பிரம்மகுமார்களும் குமாரிகளும் என்பதால், சகோதர, சகோதரி என்னும் உறவுமுறை உள்ளது. நீங்கள் ஒரேயொரு தந்தையின் குழந்தைகள். இச் சங்கமயுகத்தில் மாத்திரம் நீங்கள் சகோதர, சகோதரி என்கின்ற உறவுமுறையில் இருக்கின்றீர்கள், எனவே விகாரப் பார்வை முடிவடைகின்றது. நீங்கள் ஒரே தந்தையை மாத்திரம் நினைவுசெய்ய வேண்டும். நீங்கள் சப்தத்திற்கு அப்பால் செல்ல வேண்டும். இவ்விதமாக உங்களுடன் பேசுவது என்பது சூட்சுமமாகக் கற்பதாகும். எந்தச் சப்தத்தையும் எழுப்பத் தேவையில்லை. குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்துவதற்காகவே பாபா சப்தத்திற்குள் வரவேண்டியுள்ளது. நீங்கள் சப்தத்திற்கு அப்பால் செல்வதற்காக, அவர் உங்களுக்கு விளங்கப்படுத்தவும் வேண்டும். நீங்கள் இப்பொழுது வீடு திரும்ப வேண்டும். வந்து உங்களை அவருடன் அழைத்துச் செல்லுமாறு நீங்கள் தந்தையைக் கூவியழைத்தீர்கள்: நாங்கள் தூய்மையற்றவர்கள் ஆதலால் வீடு திரும்ப முடியாதுள்ளது. தூய்மையற்ற உலகில் உள்ள எவரால் எங்களைத் தூய்மையானவர்களாக்க முடியும்? சாதுக்கள், புனிதர்கள் போன்றவர்களால் உங்களைத் தூய்மையாக்க முடியாது. அவர்களே தூய்மையாகுவதற்காகச் சென்று கங்கையில் நீராடுகின்றார்கள். அவர்கள் தந்தையை அறியவும் மாட்டார்கள். முன்னைய கல்பத்தில் அவரை அறிந்தவர்களே இப்பொழுது முயற்சி செய்பவர்கள். தந்தையைத் தவிர எவராலும் இம் முயற்சியைச் செய்வதற்கு உங்களைத் தூண்ட முடியாது. தந்தையே அனைவரிலும் உயர்வானவர். அத்தகைய தந்தை கூழாங்கற்களிலும் கற்களிலும் இருக்கின்றார் என்று கூறுவதனால் மனிதர்கள் என்ன நிலையை அடைந்துள்ளார்கள் எனப் பாருங்கள். அவர்கள் தொடர்ந்தும் ஏணியில் கீழிறங்கினார்கள். ஒருபுறத்தில், அவர்கள் முற்றிலும் விகாரமற்றவர்களாகவும், மறுபுறத்தில் அம்மக்கள் முற்றிலும் விகாரமுடையவர்களாகவும் இருக்கின்றார்கள். முன்னைய கல்பத்தில் இவ்விடயங்களை நம்பியவர்கள் மாத்திரமே இப்பொழுது அவற்றை நம்புவார்கள். இங்கு வருகின்ற அனைவருக்கும் தந்தையின் கட்டளைகளைக் கூறுவது உங்கள் கடமையாகும். ஏணியின் படத்தை விளங்கப்படுத்துங்கள். இது இப்பொழுது அனைவரதும் ஓய்வு ஸ்திதியாகும். இப்பொழுது அனைவரும் அமைதி தாமத்திற்கு அல்லது சந்தோஷ தாமத்திற்குச் செல்வார்கள். புத்தியின் யோகசக்தி மூலம் தங்களை முற்றிலும் தூய்மையாக்கும் ஆத்மாக்களே சந்தோஷ தாமத்திற்குச் செல்வார்கள். பாரதத்தின் புராதன யோகம் நினைவுகூரப்படுகின்றது. தான் உண்மையிலேயே முதலில் இங்கு வந்தார் என்பதையும், தான் இப்பொழுது வீடு திரும்ப வேண்டும் என்பதையும் ஆத்மா இப்பொழுது நினைவுகூர்ந்துள்ளார். நீங்கள் இப்பொழுது உங்களுடைய பாகங்களை நினைவுசெய்கின்றீர்கள். இக்குலத்துக்கு உரியவர்களாக ஆகாதவர்கள்; தாங்கள் தூய்மையாக வேண்டும் என்பதை நினைவுசெய்ய மாட்டார்கள். தூய்மையாகுவதற்கே நீங்கள் முயற்சி செய்ய வேண்டும். தந்தை கூறுகின்றார்: உங்களை ஆத்மாக்கள் என்று கருதி என்னை நினைவுசெய்தால், பாவத்தை வென்றவர்கள் ஆகுவீர்கள், உங்களைச் சகோதர, சகோதரிகளாகக் கருதுங்கள், உங்கள் பார்வை மாறும். சத்தியயுகத்தில் உங்கள் பார்வை தீயதாக இருப்பதில்லை. தந்தை தொடர்ந்தும் விளங்கப்படுத்துகின்றார்: குழந்தைகளே, உங்களை வினவுங்கள்: நான் சத்தியயுகத்துத் தேவரா அல்லது கலியுகத்து மனிதரா? குழந்தைகளாகிய நீங்கள் மிகச்சிறந்த படங்கள், சுலோகங்கள் போன்றவற்றை உருவாக்க வேண்டும். நீங்கள் சத்தியயுகத்தவரா அல்லது கலியுகத்தவரா என்ற வினாவை ஒரு படம் வினவ வேண்டும். இரண்டாவது படம் இன்னுமொரு வினாவை வினவ வேண்டும். இந்த உற்சாகத்தை நீங்கள் எங்கும் உருவாக்க வேண்டும். தூய்மையற்றவர்களைத் தூய்மையாக்குவதற்குத் தந்தை உங்களுக்கு ஸ்ரீமத்தைக் கொடுக்கின்றார். எவ்வாறாயினும், உங்கள் வியாபாரம் போன்றவற்றைப் பற்றி எனக்கு என்ன தெரியும்? வந்து மனிதர்களிலிருந்து தேவர்களாக மாறுவதற்கான பாதையை உங்களுக்குக் காட்டுமாறு நீங்கள் தந்தையைக் கூவியழைத்தீர்கள். நான் வந்து உங்களுக்கு இதைக் காட்டுகின்றேன். இது அத்தகையதோர் இலகுவான விடயம்! நான் உங்களுக்குக் கொடுக்கின்ற சமிக்ஞை மிகவும் இலகுவானது: மன்மனபவ! உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதித் தந்தையை நினைவுசெய்யுங்கள். இதன் அர்த்தத்தைப் புரிந்து கொள்ளாததால், அவர்கள் கங்கையைத் தூய்மையாக்குபவர் என்று கூறிவிட்டார்கள். தந்தையே தூய்மையாக்குபவர் ஆவார். இது இப்பொழுது அனைவருக்கும் கணக்குத் தீர்க்கும் காலமாகும். நான் உங்கள் கர்மக் கணக்குகளைத் தீர்க்கச் செய்து, உங்களைத் திரும்பவும் வீட்டிற்கு அழைத்துச் செல்கின்றேன். தந்தை விளங்கப்படுத்தும்பொழுது நீங்கள் புரிந்துகொள்கின்றீர்கள், ஆனால் அது உங்களுடைய பாக்கியத்தில் இல்லாதுவிட்டால், நீங்கள் வீழ்கின்றீர்கள். தந்தை கூறுகின்றார்: உங்களைச் சகோதர, சகோதரிகளாகக் கருதுங்கள். நீங்கள் ஒருபொழுதும் தீய பார்வையைக் கொண்டிருக்கக்கூடாது. சிலர் காமம் எனும் தீய ஆவியைக் கொண்டிருக்கின்றார்கள்; ஏனையோர்கள் பேராசை எனும் தீய ஆவியைக் கொண்டிருக்கின்றார்கள். சிலவேளைகளில், அவர்கள் நல்ல உணவைப் பார்க்கும்பொழுது, அவர்கள் அதனால் தூண்டப்படுகின்றார்கள். ஒருவர் வறுத்த கடலையை விற்பதை அவர்கள் பார்க்கும்பொழுது, சிறிதளவை உண்ண விரும்புகின்றார்கள். பின்னர், அவற்றை நீங்கள் உண்டால், நீங்கள் பலவீனமாக இருப்பதன் காரணமாக, விரைவில் பாதிக்கப்பட்டவர்கள் ஆகுவதுடன், உங்கள் புத்தியும் சீரழிகின்றது. எவருக்குத் தாயும் தந்தையும் விசேடமானவர்களும் ஒரு நற்சான்றிதழைக் கொடுக்கின்றார்களோ, அவர்களையே நீங்கள் பின்பற்ற வேண்டும். யக்யாவில் இருந்து பெறுபவற்றை மிகவும் இனிமையானதாகக் கருதி, அவற்றையே நீங்கள் உண்ண வேண்டும். நீங்கள் தூண்டப்படக்கூடாது. யோகமும் தேவைப்படுகின்றது. யோகம் இல்லாதுவிடின், நான் இதை உண்ண வேண்டும், இல்லாதுவிடின், நான் நோய்வாய்ப்படுவேன் என்று கூறுவீர்கள். நீங்கள் இங்கு தேவர்களாகுவதற்கே வந்துள்ளீர்கள் என்பது உங்கள் புத்தியில் இருக்க வேண்டும். நீங்கள் இப்பொழுது வீடு திரும்ப வேண்டும், நீங்கள் சென்று உங்கள் தாயின் கருப்பையில் ஒரு குழந்தை ஆகுவீர்கள். தாய் உண்டு அருந்துவது அனைத்தும் தாயின் கருப்பையில் உள்ள குழந்தையைப் பாதிக்கின்றது. இவ்விடயங்கள் எதுவும் அங்கிருக்காது. அங்கு, அனைத்தும் முதற்தரமானதாக இருக்கும். எங்கள் தாய்மார்கள் எங்களுக்குப்; போஷாக்கினை அளிக்கின்ற, முதற்தரமானவற்றையே உண்பார்கள். அங்கு, அனைத்தும் முதற்தரமானதாக இருக்கின்றன. நீங்கள் பிறவி எடுக்கும்பொழுது, உங்கள் உணவும் பானமும் தூய்மையானதாக இருக்கின்றன. எனவே, அத்தகைய சுவர்க்கத்திற்குச் செல்வதற்கு நீங்கள் ஆயத்தங்களைச் செய்ய வேண்டும். நீங்கள் தந்தையை நினைவுசெய்ய வேண்டும். தந்தை வந்து உங்களைப் புத்தாக்கம் செய்கின்றார். அவர்கள் இருதயமாற்றுச் சத்திர சிகிச்சையைச் செய்வதைப் போன்று, தாங்கள் இளமையாக ஆகுவார்கள் என்று நம்பி அம்மக்கள் குரங்கினுடைய சுரப்பிகளை மனிதர்களுக்கு இடுகின்றார்கள். தந்தை உங்களுக்கு இன்னுமோர் இதயத்தைக் கொடுக்க மாட்டார். அவர் வந்து உங்களை மாற்றுகின்றார். அவை அனைத்தும் விஞ்ஞானம் ஆகும். அவர்கள் தொடர்ந்தும் குண்டுகள் போன்றவற்றை உற்பத்தி செய்கின்றார்கள். அவ்விடயங்கள் அனைத்தும் உலகை அழிக்கும். அது தமோபிரதான் புத்தியாகும். அந்த விதி உருவாக்கப்பட்டுள்ளது என்பதால் அவர்கள் சந்தோஷம் அடைகின்றார்கள். குண்டுகள் நிச்சயமாக உருவாக்கப்பட வேண்டும். ஏவுகணைகள் அவர்களுடைய வயிற்றிலிருந்து வெளிவந்தன, இன்ன இன்ன நடைபெற்றன என்று சமயநூல்களில் எழுதப்பட்டுள்ளன. அவ்விடயங்கள் அனைத்தும் பக்தி மார்க்கத்திற்குரியவை என்று தந்தை இப்பொழுது விளங்கப்படுத்தியுள்ளார். நான் மாத்திரமே உங்களுக்கு இராஜயோகத்தைக் கற்பித்தேன். அது ஒரு கதையே ஆகும். அதைச் செவிமடுப்பதால், உங்கள் நிலைமை என்ன ஆக வேண்டுமோ, அவ்வாறு ஆகியுள்ளது. இப்பொழுது தந்தை உங்களுக்குச் சத்திய நாராயணனின் கதையை, மூன்றாம் கண்ணின் கதையை, அமரத்துவக் கதையைக் கூறுகின்றார். இக்கல்வியினூடாக, நீங்கள் அந்த அந்தஸ்தை அடைகின்றீர்கள். எவ்வாறாயினும், அவர்கள் காட்டுவதைப் போன்று, சக்கரத்தைச் சுழற்றி அனைவரையும் அதன் மூலம் கொலை செய்யும் கிருஷ்ணர் போன்ற எவரும் இருக்கவில்லை. நான் உங்களுக்கு இராஜயோகத்தைக் கற்பித்து, உங்களைத் தூய்மையாக்குகின்றேன். நான் உங்களைச் சுயதரிசனச் சக்கரதாரிகள் ஆக்குகின்றேன். அவர்கள் கிருஷ்ணரை ஒரு சக்கரத்துடன் காட்டியுள்ளார்கள். அவர் எவ்வாறு சுயதரிசனச் சக்கரத்தைச் சுழற்றுவார்? அது மந்திர வித்தைக்கான கேள்வி அல்ல. அவை அனைத்தும் அவதூறுகள் ஆகும். அது அரைக் கல்பத்திற்குத் தொடர்கின்றது. நாடகம் மிகவும் அற்புதமானது! இது இப்பொழுது இளைஞர்கள், முதியவர்கள் அனைவரதும் ஓய்வு ஸ்திதியாகும். நாங்கள் இப்பொழுது வீடு திரும்ப வேண்டும், எனவே நாங்கள் தந்தையை நினைவுசெய்ய வேண்டும். வேறு எதுவும் நினைவு செய்யப்படக்கூடாது. அத்தகைய ஸ்திதியை நீங்கள் கொண்டிருக்கும்பொழுது மாத்திரம் உங்களால் ஓர் உயர்ந்த அந்தஸ்தை அடைய முடியும். நீங்கள் உங்கள் இதயத்தை வினவ வேண்டும்: எந்தளவிற்கு எனது பதிவேடு நன்றாக இருக்கின்றது? பதிவேட்டிலிருந்து உங்கள் செயற்பாடுகளைப் பற்றியும் நீங்கள் ஒழுங்காகக் கற்கின்றீர்களா அல்லது இல்லையா என்பதையும் உங்களால் கூறமுடியும். சிலர் பொய்கூடக் கூறுகின்றார்கள். தந்தை கூறுகின்றார்: உண்மையைக் கூறுங்கள். நீங்கள் உண்மையைக் கூறாதுவிடின், உங்கள் பதிவேடு பாழாக்கப்பட்டு விடும். நீங்கள் தூய்மையாகுவீர்கள் என்று நீங்கள் கடவுளுக்குச் சத்தியம் செய்கின்றீர்கள். எனவே, பின்னர், நீங்கள் அச்சத்தியத்தை மீறினால், உங்கள் நிலை என்னவாகும்? நீங்கள் விகாரத்தில் வீழ்ந்தால், முழு நாடகமுமே முடிவடைந்து விடுகின்றது. சரீர உணர்வே முதல் எதிரியாகும். பின்னர் காமமும், அதன்பின்னர் கோபமும் உள்ளன. சரீர உணர்வு இருக்கும்பொழுது, ஒருவருடைய மனோநிலை தூய்மையற்றதாகுகின்றது. இதனாலேயே தந்தை கூறுகின்றார்: நீங்கள் ஆத்ம உணர்வுடையவர்கள் ஆகுவீர்களாக. இவரே அர்ச்சுனர் ஆவார். இவர் கிருஷ்ணரின் ஆத்மாவும் ஆவார். அவர் பிரவேசிப்பவரின் பெயர் மாற்றப்பட்டது. அவருடைய பெயர் அர்ச்சுனர் இல்லை. இவ்விருட்சம் போன்ற அனைத்தும் உங்களுடைய கற்பனை என்று மக்கள் கூறுகின்றார்கள். நீங்கள் கற்பனை செய்பவை அனைத்தையும், பின்னர் ஒரு குறித்த காலத்தில் நீங்கள் காண்பீர்கள். சுவர்க்கத்திற்குச் சென்று மீண்டும் சிறுகுழந்தைகள் ஆகுவீர்கள் என்று குழந்தைகளாகிய நீங்கள் மிகவும் சந்தோஷமாக இருக்க வேண்டும். பின்னர் உங்கள் பெயர், ரூபம், இடம், காலம் போன்ற அனைத்தும் புதிதாக இருக்கும். இது எல்லையற்ற நாடகமாகும். ஏற்கனவே நிச்சயிக்கப்பட்டவை மீண்டும் இடம்பெறுகின்றது. அது நடைபெற வேண்டும், எனவே நாங்கள் ஏன் கவலைப்பட வேண்டும்? இப்பொழுது குழந்தைகளாகிய நீங்கள் உங்கள் புத்தியில் நாடகத்தின் இரகசியங்களைக் கொண்டிருக்கின்றீர்கள். பிராமணர்களாகிய உங்களைத் தவிர, வேறு எவருக்கும் இவை தெரியாது. இந்நேரத்தில், உலகிலுள்ள மக்கள் அனைவரும் பூஜிப்பவர்கள் ஆவார்கள். எங்கு பூஜிப்பவர்கள் இருக்கின்றார்களோ, அங்கு பூஜிக்கத் தகுதிவாய்ந்த ஒரு நபரேனும் இருக்க முடியாது. சத்திய, திரேதா யுகங்களில் பூஜிக்கத் தகுதிவாய்ந்தவர்கள் இருக்கின்றார்கள். கலியுகத்தில் பூஜிப்பவர்களே இருக்கின்றார்கள், எனவே நீங்கள் எவ்வாறு உங்களைப் பூஜிக்கத் தகுதிவாய்ந்தவர்கள் என்று அழைக்க முடியும்? தேவர்கள் மாத்திரமே பூஜிக்கத் தகுதிவாய்ந்தவர்கள் ஆவார்கள். மனிதர்கள் பூஜிப்பவர்கள் ஆவார்கள். தந்தை பிரதான விடயத்தை விளங்கப்படுத்துகின்றார்: நீங்கள் தூய்மையாக விரும்பினால், சதா என்னை மாத்திரம் நினைவுசெய்யுங்கள். நாடகத்திற்கேற்ப, ஒருவர் எவ்வளவு முயற்சி செய்திருந்தாரோ, அந்தளவு முயற்சியையே அவர் செய்வார். அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்தோதோ தொலைந்து இப்போது கண்டெடுக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.


தாரணைக்கான சாராம்சம்:
1. உங்கள் கல்வியின் பதிவேட்டை வைத்திருங்கள். நான் எவ்வளவிற்குச் சகோதரத்துவப் பார்வையைக் கொண்டிருக்கின்றேன்?, என்னுடைய சுபாவம் தெய்வீகமானதாக ஆகிவிட்டதா? என்று அவதானிப்பதற்கு உங்களுடைய அட்டவணையைப் பாருங்கள்.

2. உங்களுடைய நாக்கைப் (சுவை, உணவு) பெருமளவு கட்டுப்பாட்டுடன் வைத்திருங்கள். நீங்கள் தேவர்கள் ஆகுகின்றீர்கள், எனவே உங்கள் உணவிலும் பானத்திலும் பெருமளவு கவனம் செலுத்த வேண்டும் என்பது உங்கள் புத்தியில் இருக்க வேண்டும். உங்களுடைய சுவை அரும்புகள் விஷமத்தனத்தை விளைவிக்கக்கூடாது. நீங்கள் தாயையும் தந்தையையும் பின்பற்ற வேண்டும்.

ஆசீர்வாதம்:
ஒவ்வொரு கணத்தையும், உங்களது இறுதி கணம் என கருதுவதன் மூலம், சதா ஒரு தீவிர முயற்சியாளராக இருந்து, எப்பொழுதும் ஆயத்தமாக இருப்பீர்களாக.

உங்கள் இறுதிக்கணத்திற்கான எந்த உத்தரவாதமும் இல்லை என்பதால் ஒவ்வொரு கணத்தையும் உங்கள் இறுதிக்கணமாகக் கருதி, எப்பொழுதும் ஆயத்தமாக இருங்கள். எப்பொழுதும் ஆயத்தமாக இருப்பது என்றால் தீவிர முயற்சியாளராக இருப்பது என்று அர்த்தமாகும். விநாசத்திற்கு இன்னமும் சற்று காலம் உள்ளது என்றும் அதற்குள் நீங்கள் ஆயத்தமாகி விடுவீர்கள் என்றும் நினைக்க வேண்டாம். இல்லை. ஒவ்வொரு கணமும் இறுதிகணம் என்பதால் நீங்கள் சதா பற்றிலிருந்தும், பாவமானதும் வீணானதுமான எண்ணங்களிலிருந்தும் விடுபட்டிருக்கும் போதே நீங்கள் எப்பொழுதும் ஆயத்தமாகவுள்ள ஆத்மா எனப்படுவீர்கள். செய்வதற்கு இன்னமும் பணிகள் எஞ்சியிருப்பினும், உங்கள் ஸ்திதி எப்பொழுதும் அப்பால் இருக்கட்டும், அப்பொழுது எது நடந்தாலும் அது நன்றாகவே நடக்கும்.

சுலோகம்:
சட்டத்தை உங்கள் கைகளில் எடுப்பதென்றால் கோபத்தின் சுவடை கொண்டிருப்பதாகும்.