08.02.21        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்:
இனிய குழந்தைகளே, இப்பொழுது குறிப்பாகப் பாரதத்திலும், பொதுவாக முழு உலகிலும் வியாழ சகுனங்கள் நிலவப் போகின்றன. பாபா குழந்தைகளாகிய உங்களின் மூலம் பாரதத்தைச் சந்தோஷ பூமியாக்குகின்றார்.

கேள்வி:
16 சுவர்க்கக் கலைகளும் நிறைந்தவர்களாகுவதற்குக் குழந்தைகளாகிய நீங்கள் என்ன முயற்சியைச் செய்ய வேண்டும்?

பதில்:
யோக சக்தியைச் சேமிப்பதற்கான முயற்சியாகும். யோக சக்தி மூலமே நீங்கள் 16 சுவர்க்கக் கலைகளும் நிறைந்தவர்கள் ஆகுகின்றீர்கள். இதற்கு, தந்தை கூறுகின்றார்: தானம் செய்யுங்கள், சகுனங்களின் கிரகணம் அகற்றப்படும். உங்களை வீழச் செய்கின்ற காமம் என்ற விகாரத்தைத் தானம் செய்யுங்கள், நீங்கள் 16 சுவர்க்கக் கலைகளும் நிறைந்தவர்கள் ஆகுவீர்கள். சரீர உணர்வைத் துறந்து, ஆத்ம உணர்வுடையவர்கள் ஆகுங்கள். சரீரம் பற்றிய உணர்வு அனைத்தையும் துறந்து விடுங்கள்.

பாடல்:
நீங்களே தாயும், நீங்களே தந்தையும்!

ஓம் சாந்தி.
இனிமையிலும் இனிமையான ஆன்மீகக் குழந்தைகளாகிய நீங்கள் உங்களின் ஆன்மீகத் தந்தையின் புகழைக் கேட்டீர்கள். அம்மக்கள் தொடர்ந்தும் இவ்வாறு பாடுகின்றார்கள், குழந்தைகளாகிய நீங்களோ அந்த பாபாவிடமிருந்து உங்களின் ஆஸ்தியை நடைமுறையில் பெறுகின்றீர்கள். பாபா உங்களின் மூலம் பாரதத்தைச் சந்தோஷ பூமியாக்குகின்றார் என்பதை நீங்கள் புரிந்துகொள்கின்றீர்கள். அவர் யார் மூலம் அதைச் செய்விக்கின்றாரோ, அவர்கள் நிச்சயமாகச் சந்தோஷ தாமத்தின் அதிபதிகள் ஆகுவார்கள். குழந்தைகளாகிய நீங்கள் பெருமளவு சந்தோஷத்தைக் கொண்டிருக்க வேண்டும். பாபாவின் புகழ் எல்லையற்றது. நாங்கள் அவரிடமிருந்தே எங்களின் ஆஸ்தியைக் கோருகின்றோம். இப்பொழுது குழந்தைகளாகிய உங்களின் மீது, அதாவது, முழு உலகின் மீதும் அழிவற்ற வியாழ சகுனங்கள் நிலவுகின்றன. இப்பொழுது குறிப்பாகப் பாரதத்திலும், பொதுவாக முழு உலகிலும் வியாழ சகுனங்கள் இருக்கப் போவதைப் பிராமணர்களாகிய நீங்கள் மாத்திரமே அறிவீர்கள், ஏனெனில், நீங்கள் இப்பொழுது 16 சுவர்க்கக் கலைகளும் நிறைந்தவர்கள் ஆகுகின்றீர்கள். இந்நேரத்தில் எவ்விதக் கலைகளும் இல்லை. குழந்தைகளாகிய நீங்கள் பெருமளவு சந்தோஷத்தைக் கொண்டிருக்க வேண்டும். நீங்கள் இங்கே சந்தோஷமாக இருப்பதாகவும், வெளியே சென்றதும் அந்தச் சந்தோஷம் மறைந்து விடுவதாகவும் இருக்கக்கூடாது. நீங்கள் யாரைப் புகழ்ந்தீர்களோ, அவர் இப்பொழுது உங்கள் முன்னால் பிரசன்னமாகி இருக்கின்றார். 5000 வருடங்களுக்கு முன்னர் தந்தை உங்களுக்கு இராச்சியத்தைக் கொடுத்துச் சென்றார் எனத் தந்தை விளங்கப்படுத்துகின்றார். படிப்படியாக அனைவரும் கூவியழைப்பதை நீங்கள் பார்ப்பீர்கள். நீங்கள் தொடர்ந்தும் சுலோகங்களை உருவாக்குவீர்கள். ஒரு தர்மமும், ஒரு மொழியும், ஓர் இராச்சியமுமே இருக்க வேண்டும் என இந்திரா காந்தி கூறுவதுண்டு. அவரினுள் இருந்து பேசுபவரும் ஓர் ஆத்மாவே. உண்மையில் பாரதத்தில் ஓர் இராச்சியம் மாத்திரமே இருந்தது என்றும், அது இப்பொழுது உங்கள் முன்னிலையில் உள்ளது என்றும் ஆத்மா புரிந்துகொள்கின்றார். அனைத்தும் எந்நேரத்திலும் முற்றாக அழிக்கப்படலாம் என்பதை நீங்கள் புரிந்துகொள்கின்றீர்கள். இது புதியதல்ல. பாரதம் நிச்சயமாக மீண்டும் 16 சுவர்க்கக் கலைகளும் நிறைந்ததாக வேண்டும். இந்த யோக சக்தியால் நீங்கள் 16 சுவர்க்கக் கலைகளும் நிறைந்தவர்கள் ஆகுகின்றீர்கள் என்பதை அறிவீர்கள். தானம் செய்யுங்கள், கிரகணத்தின் சகுனங்கள் அகற்றப்படும் எனக் கூறப்படுகின்றது. தந்தையும் கூறுகின்றார்: விகாரங்களையும், குறைபாடுகளையும் தானம் செய்யுங்கள். இது இராவண இராச்சியமாகும். தந்தை வந்து உங்களை அதிலிருந்து விடுதலை செய்கின்றார். காமமே அனைத்து விகாரங்களிலும் மிகப்பெரிய குறைபாடாகும். நீங்கள் சரீர உணர்வுடையவர்கள் ஆகிவிட்டீர்கள். இப்பொழுது நீங்கள் ஆத்ம உணர்வு உடையவர்கள் ஆகவேண்டும். நீங்கள் உங்களின் சரீரங்களின் உணர்வைத் துறக்க வேண்டும். குழந்தைகளாகிய நீங்கள் மாத்திரமே இவ்விடயங்களைப் புரிந்துகொள்கின்றீர்கள்; உலகம் இவ்விடயங்களைப் புரிந்துகொள்வதில்லை. 16 கலைகளும் நிறைந்திருந்த பாரதம் சம்பூரண தேவர்களின் இராச்சியமாக இருந்தது, அது இப்பொழுது கிரகணத்தைக் கொண்டிருக்கின்றது. அங்கு இலக்ஷ்மி நாராயணனின் இராச்சியம் இருந்தது. பாரதம் சுவர்க்கமாக இருந்தது, அது இப்பொழுது விகாரங்களின் கிரகணத்தால் பீடிக்கப்பட்டுள்ளது, இதனாலேயே தந்தை கூறுகின்றார்: தானம் செய்யுங்கள், கிரகணத்தின் சகுனங்கள் அகற்றப்படும். காம விகாரமே உங்களை வீழ்த்துகின்றது. இதனாலேயே தந்தை கூறுகின்றார்: இதைத் தானம் செய்யுங்கள், நீங்கள் 16 சுவர்க்கக் கலைகளும் நிறைந்தவர்கள் ஆகுவீர்கள். நீங்கள் அதைத் தானம் செய்யாவிட்டால், உங்களால் இவ்வாறு ஆகமுடியாது. ஆத்மாக்கள் தங்களுக்கெனச் சொந்தப் பாகங்களைப் பெற்றுள்ளனர், இல்லையா? இது உங்களின் புத்தியில் உள்ளது. ஆத்மாக்களான நீங்கள் அத்தகைய மகத்தான பாகங்களைக் கொண்டிருக்கின்றீர்கள்! நீங்கள் உங்களின் உலக இராச்சியப் பாக்கியத்தைக் கோருகின்றீர்கள். இது எல்லையற்ற நாடகம், இதில் பல நடிகர்கள் உள்ளனர். இலக்ஷ்மியும், நாராயணனுமே முதற்தரமான நடிகர்கள்; அவர்கள் முதலாம் இலக்கப் பாகங்களைக் கொண்டுள்ளனர். விஷ்ணு பிரம்மாவாகவும், சரஸ்வதியாகவும் ஆகுகின்றார்;, பின்னர் பிரம்மாவும், சரஸ்வதியும் விஷ்ணு ஆகுகின்றனர். அவர்கள் எவ்வாறு 84 பிறவிகளை எடுக்கின்றனர்? முழுச் சக்கரமும் உங்களின் புத்தியில் உள்ளது. சமயநூல்களைக் கற்பதால் எவரும் எதையும் புரிந்துகொள்வதில்லை. ஒவ்வொரு சக்கரத்தினதும் கால எல்லை நூறாயிரக்கணக்கான ஆண்டுகள் என அவர்கள் கூறியுள்ளனர். அவ்வாறாயின், சுவஸ்திகா நான்கு சம பாகங்களைக் கொண்டதாக உருவாக்கப்பட்டிருக்க முடியாது. வியாபாரிகள் தங்களின் கணக்குப் புத்தகங்களில் சுவஸ்திகாவை வரைகின்றனர். அவர்கள் கணேசரைப் (சுவஸ்திகா) பூஜிக்கின்றனர். இது ஓர் எல்லையற்ற கணக்குப் புத்தகமாகும். சுவஸ்திகாவில் நான்கு பாகங்கள் உள்ளன. ஜெகந்நாதர் ஆலயத்தில் அவர்கள் பானையில் சோறு சமைக்கின்றனர், அது வெந்ததும் நான்கு சம பாகங்களாகப் பிரிவதைக் காணலாம். அங்கு, அவர்கள் சோறையே பிரசாதமாகப் படைக்கின்றார்கள். ஏனெனில், அங்குள்ள மக்கள் சோறையே பெருமளவில் உண்கின்றனர். ஸ்ரீநாத் துவார் ஆலயத்தில், சோறு பிரசாதமாகப் படைக்கப்படுவதில்லை. அங்கு அவர்கள் சமைக்கின்ற அனைத்திலும் சுத்திகரிக்கப்பட்ட வெண்ணெய் சேர்க்கப்பட்டிருக்கும். சுகாதாரத்தைப் பேணுவதற்காக, அவர்கள் சமைக்கும்பொழுது வாயை ஓரு துணியால் கட்டுகிறார்கள். பின்னர் படைப்பதற்காக, அப்பிரசாதத்தை மிகுந்த மரியாதையுடன் எடுத்துச் செல்;கிறார்கள். அது படைக்கப்பட்ட பின்னர், பிராமண வழிகாட்டிகளுக்கு வழங்கப்படுகின்றது. பின்னர் அவர்கள் அதைப் பெருமளவு கூட்டமுள்ள தங்கள் கடைகளுக்கு எடுத்துச் செல்கின்றார்கள். பாபாவும் அதைப் பார்த்திருக்கின்றார். இப்பொழுது குழந்தைகளாகிய உங்களுக்குக் கற்பிப்பவர் யார்? அதியன்பிற்கினிய தந்தை வந்து, உங்களின் சேவகர் ஆகுகின்றார். அவர் உங்களுக்குச் சேவை செய்கின்றார். நீங்கள் அந்தளவு போதையைக் கொண்டிருக்கின்றீர்களா? தந்தை ஆத்மாக்களாகிய எங்களுக்குக் கற்பிக்கின்றார்! ஆத்மாக்களே அனைத்தையும் செய்கின்றனர். ஆத்மாக்கள் செயல்களின் தாக்கத்திற்கு அப்பாற்பட்டவர்கள் என மனிதர்கள் கூறுகின்றனர். 84 பிறவிகளின் அழிவற்ற பாகங்கள் ஆத்மாக்களாகிய உங்களில் பதியப்பட்டிருப்பதை நீங்கள் அறிவீர்கள். ஆத்மாக்கள் செயல்களின் தாக்கத்திற்கு அப்பாற்பட்டவர்கள் எனக் கூறுவதில் பகலுக்கும் இரவுக்குமான வேறுபாடு உள்ளது. மக்கள் நான்கு முதல் ஆறு வாரங்களுக்கு அமர்ந்திருந்து இந்த ஞானத்தைப் புரிந்துகொள்ளும்பொழுதே, இக்கருத்துக்கள் அவர்களின் புத்தியில் பதியும். நாளுக்கு நாள், பல கருத்துக்கள் வெளிப்படுகின்றன. இவை கஸ்தூரி (வாசனை) போன்றவை. குழந்தைகளுக்கு முழு நம்பிக்கை இருக்கும்பொழுது, தங்களைச் சீரழிவிலிருந்து சற்கதிக்குள் அழைத்துச் செல்வதற்கு உண்மையிலேயே பரமாத்மாவான பரமதந்தை வருகின்றார் என்பதைப் புரிந்துகொள்கின்றார்கள். தந்தை கூறுகின்றார்: இப்பொழுது உங்களுக்கு மீது வியாழ சகுனங்கள் உள்ளன. நான் உங்களைச் சுவர்க்கத்தின் அதிபதிகள் ஆக்கினேன், ஆனால் இராவணன் இப்பொழுது அனைவர் மீதும் இராகு கிரகணத்தின் சகுனத்தைப் படர விட்டுள்ளான். தந்தை உங்களை மீண்டும் ஒருதடவை சுவர்க்கத்தின் அதிபதிகளாக்குவதற்கு இப்பொழுது வந்து விட்டார். எனவே, நீங்களே உங்களுக்கு ஓர் இழப்பை ஏற்படுத்தக்கூடாது. வியாபாரிகள் எப்பொழுதும் தங்கள் கணக்குகளைச் சிறந்த ஒழுங்குமுறையில் பேணுகிறார்கள். தங்களுக்கே இழப்பை ஏற்படுத்திக் கொள்பவர்கள் முட்டாள்கள் எனப்படுகின்றனர். இப்பொழுது இதுவே அனைத்திலும் பெரிய வியாபாரமாகும். அரிதாக வெகு சில வியாபாரிகளே இவ்வியாபாரத்தைச் செய்கின்றனர். இவ்வியாபாரம் ஓர் அழிவற்ற வியாபாரமாகும், ஏனைய வியாபாரங்கள் அனைத்தும் மண்ணோடு மண்ணாகப் போகின்றன. நீங்களே இப்பொழுது உண்மையான வியாபாரம் செய்கின்றீர்கள். தந்தை ஞானக்கடலும், வியாபாரியும், இரத்தின வியாபாரியும் ஆவார். எத்தனை பேர் கண்காட்சிகளுக்கு வருகின்றார்கள் எனப் பாருங்கள். அவர்களில் அரிதாக ஒரு சிலரே நிலையங்களுக்கு வருகின்றனர். பாரதம் மிகப் பெரியது. நீங்கள் எங்கும் செல்ல வேண்டும். கங்கை நீர் பாரதத்தில் எங்கும் உள்ளது, இல்லையா? தூய்மையாக்குபவர் கங்கை நதியல்ல என்பதையும் நீங்கள் விளங்கப்படுத்த வேண்டும். ஞான கங்கைகளாகிய நீங்கள் எங்கும் செல்ல வேண்டும். நாலா திசைகளிலும் தொடர்ந்தும் மேலாக்கள், கண்காட்சிகள் போன்றவை இருக்கும். நாளுக்கு நாள், படங்கள் தொடர்ந்தும் உருவாக்கப்பட வேண்டும். அவற்றைப் பார்ப்பவர்கள் களிப்படைந்து, நீங்கள் விளங்கப்படுத்தும் விடயங்கள் மிக நல்லவை என உணரும் வகையில் அவை மிக அழகானவையாக இருக்க வேண்டும். இலக்ஷ்மி நாராயணனின் இராச்சியம் இப்பொழுது ஸ்தாபிக்கப்படுகின்றது. ஏணிப்படம் முதற்தரமானது. பிராமண தர்மமும் இப்பொழுது ஸ்தாபிக்கப்படுகின்றது. பிராமணர்களாகிய நீங்கள் பின்னர் தேவர்களாகுகின்றீர்கள். நீங்கள் இப்பொழுது முயற்சி செய்கின்றீர்கள். எனவே, தொடர்ந்தும் உங்கள் இதயத்தைக் கேளுங்கள்: எனக்குள்ளே சிறிய அல்லது பெரிய முள் ஏதாவது இருக்கின்றதா? என்னிடம் காமம் என்ற முள் இருக்கின்றதா? கோபத்தின் சிறிய முள் கூட மிகவும் தீயதே. தேவர்களிடம் கோபம் இருப்பதில்லை. சங்கரர் தனது கண்ணைத் திறக்கும்பொழுது விநாசம் இடம்பெறுவதாகக் காட்டப்படுகின்றது. அதுவும் பொய்யான குற்றச்சாட்டே. விநாசம் இடம்பெற வேண்டும். சூட்சும லோகத்தில் சங்கரரைச் சுற்றிப் பாம்பு போன்ற எதுவும் இருக்க முடியாது. சூட்சும உலகிலோ, அசரீரி உலகிலோ பூங்காக்கள், தோட்டங்கள், அல்லது பாம்புகள் போன்றவை கிடையாது. அவ்விடயங்கள் அனைத்தும் இங்கேயே உள்ளன. சுவர்க்கமும் இங்கேயே உள்ளது. இந்நேரத்தில், மனிதர்கள் முட்களைப் போன்றுள்ளனர், அதனாலேயே இது முட்காடு எனப்படுகின்றது. சத்திய யுகம் பூந்தோட்டம் ஆகும். பாபா எவ்வகையான பூந்தோட்டத்தை உருவாக்குகின்றார் என நீங்கள் பார்க்கலாம். அவர் அதை மிக மிக அழகானதாக்குகின்றார். அவர் அனைவரையும் அழகானவர்கள் ஆக்குகின்றார். அவரே என்றும் அழகானவர். அவர் மணவாட்டிகளான உங்கள் அனைவரையும், அதாவது, குழந்தைகளாகிய உங்கள் அனைவரையும் அழகானவர்கள் ஆக்குகின்றார். இராவணன் உங்களை முற்றிலும் அவலட்சணமானவர்கள் ஆக்கிவிட்டான். உங்களின் மீது இப்பொழுது வியாழ சகுனங்கள் உள்ளன எனக் குழந்தைகளாகிய நீங்கள் சந்தோஷப்பட வேண்டும். அரைவாசிக் காலத்திற்கு மாத்திரமே சந்தோஷமும், அரைவாசிக் காலத்திற்குத் துன்பமும் இருந்தால் அதனால் என்ன நன்மை உள்ளது? இல்லை; முக்கால்வாசிக்குச் சந்தோஷமும், கால் பகுதிக்குத் துன்பமும் உள்ளன. இந்நாடகம் ஏற்கனவே நிச்சயிக்கப்பட்டது. நாடகம் ஏன் இவ்விதமாக உருவாக்கப்பட்டுள்ளது எனப் பலர் கேட்கின்றனர். இந்நாடகம் அநாதியானது. அது ஏன் உருவாக்கப்பட்டது என நீங்கள் கேட்க முடியாது. இந்த அநாதியான, அழிவற்ற நாடகம் ஏற்கனவே நிச்சயிக்கப்பட்டது. ஏற்கனவே நிச்சயிக்கப்பட்டதே நிகழ்கின்றது. எவராலும் அநாதியான முக்தியைப் பெற முடியாது. இந்த அநாதியான உலகம் சதாகாலமும் தொடர்வதுடன், தொடர்ந்தும் இருக்கும். முழுமையான பிரளயம் என்றும் ஏற்பட முடியாது. தந்தை உலகைப் புதியதாக்குகின்றார், ஆனால் பல சூட்சுமமான எல்லைகள் உள்ளன. மனிதர்கள் தூய்மையற்றவர்களாகவும், சந்தோஷமற்றவர்களாகவும் ஆகும்பொழுதே அவரைக் கூவியழைக்கின்றனர். தந்தை வந்து ஒவ்வொருவரதும் சரீரத்தைத் தூய்மையாக்குகின்றார், அதனால் நீங்கள் அரைக் கல்பத்திற்கு ஒருபொழுதும் அகால மரணத்தை அனுபவிக்க மாட்டீர்கள். நீங்கள் மரணத்தை வெற்றி கொள்கின்றீர்கள். எனவே, குழந்தைகளாகிய நீங்கள் பெருமளவு முயற்சி செய்ய வேண்டும். நீங்கள் எந்தளவிற்கு உயர்ந்த அந்தஸ்தைக் கோருகின்றீர்களோ, அந்தளவிற்கு நல்லது. பெரும் வருமானத்தைச் சம்பாதிப்பதற்காகவே அனைவரும் முயற்சி செய்கின்றனர். விறகு சேகரிப்பவர்கள் கூட தாங்கள் பெரும் வருமானத்தைச் சம்பாதிக்க விரும்புவதாகவே கூறுவார்கள். சிலர் ஏமாற்றுவதால், சம்பாதிக்கின்றார்கள். பணமே பிரச்சனைகளுக்கான காரணம். அங்கு எவரும் உங்களின் பணத்தைச் சூறையாட முடியாது. உலகில் என்ன நடைபெறுகின்றது எனப் பாருங்கள். அங்கு துன்ப விடயங்கள் எதுவும் இருக்காது. நீங்கள் இப்பொழுது தந்தையிடமிருந்து அத்தகையதோர் ஆஸ்தியைக் கோருகின்றீர்கள்! நீங்கள் சுவர்க்கத்திற்குச் செல்லத் தகுதிவாய்ந்தவர்களாக இருக்கின்றீர்களா என உங்களையே பரீட்சித்துப் பாருங்கள். (நாரதரின் உதாரணம்). மக்கள் தொடர்ந்தும் பல யாத்திரைகள் செல்கின்றனர், எனினும் அவர்கள் எதையும் பெறுவதில்லை. நாங்கள் நாலா திசைகளுக்கும் சென்றிருந்தும், உங்களை விட்டு வெகு தொலைவிலேயே இருக்கின்றோம் என்ற பாடலும்; உள்ளது. தந்தை இப்பொழுது உங்களுக்கு அத்தகையதொரு சிறந்த யாத்திரையைக் கற்பிக்கின்றார். இதில் சிரமம் இல்லை. தந்தை கூறுகின்றார்: என்னை நினைவுசெய்யுங்கள், உங்கள் பாவங்கள் அழிக்கப்படும். நான் குழந்தைகளாகிய உங்களுக்கு மிகச்சிறந்த வழிமுறையைக் கூறுகின்றேன், நீங்கள் இதைச் செவிமடுக்கின்றீர்கள். இச்சரீரத்தையே நான் கடனாக எடுக்கின்றேன். தனது சரீரத்;தை பாபாவிற்குக் கடனாகக் கொடுத்து விட்டதையிட்டு இந்தத் தந்தை அதிகளவு சந்தோஷமடைகின்றார். பாபா என்னை உலக அதிபதி ஆக்குகின்றார். இச்சரீரத்தின் பெயரே பாக்கிய இரதம். குழந்தைகளான நீங்கள் இப்பொழுது இராமரின் தாமத்திற்குச் செல்ல முயற்சி செய்கின்றீர்கள். எனவே, நீங்கள் முயற்சி செய்வதில் உங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். நீங்கள் ஏன் ஒரு முள்ளாக வேண்டும்? நீங்கள் பிராமணர்கள். அனைத்தும் முரளியிலேயே தங்கியுள்ளது. முரளியில்லாது விட்டால் நீங்கள் எங்கிருந்து ஸ்ரீமத்தைப் பெறுவீர்கள்? நீங்கள் பிறருக்கு விளங்கப்படுத்துவதற்காகப் பல நல்ல கண்காட்சிப் படங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்தப் பிரதான படங்களை உங்களின் கடையில் வைத்திருங்கள், பலர் நன்மை பெறுவார்கள். அவர்களிடம் கூறுங்கள்: உள்ளே வாருங்கள், இந்த உலகச் சக்கரம் எவ்வாறு சுழல்கின்றதென நாங்கள் உங்களுக்கு விளங்கப்படுத்துவோம். ஒருவருக்கு நன்மை செய்ய சற்று நேரம் ஒதுக்கினால் பரவாயில்லை. அந்த வியாபாரத்தைச் செய்வதுடன், நீங்கள் இந்த வியாபாரத்தையும் செய்யலாம். இது பாபாவின் அழியாத ஞான இரத்தினங்களின் கடையாகும். ஏணிப் படமே, முதற்தரமான படமாகும். கீதையின் கடவுளான சிவனின் படமும் உள்ளது. கடவுள் சிவன், பாரதத்திற்கு வந்ததாலேயே, சிவனின் பிறந்தநாள் இங்கு கொண்டாடப்படுகிறது. தந்தை இப்பொழுது மீண்டும் வந்துள்ளார். யாகமும் உருவாக்கப்பட்டுள்ளது. குழந்தைகளான உங்களுக்கு இராஜயோகத்தின் ஞானம் கொடுக்கப்பட்டுள்ளது. தந்தை மாத்திரமே வந்து உங்களை அரசர்களுக்கெல்லாம் அரசர் ஆக்குகின்றார். தந்தை கூறுகின்றார்: விகாரத்தில் ஈடுபடுகின்ற தற்போதைய அரசர்கள் தலைவணங்கும் சூரிய வம்ச அரசர்களாகவும், அரசிகளாகவும் நான் உங்களை ஆக்குகின்றேன். சுவர்க்கத்தின் சக்கரவர்த்தியாகவும், சக்கரவர்த்தினியாகவும் ஆகுவதற்கு முழு முயற்சி செய்யப்பட வேண்டும். நீங்கள் வீடு கட்டுவதை பாபா தடுக்கவில்லை; நீங்கள் அவற்றைக் கட்டலாம். இல்லாவிட்டாலும், பணம் எப்படியும் தூசாகவே போகின்றது. பதிலாக, நீங்கள் ஏன் ஒரு வீட்டைக் கட்டிச் சௌகரியமாக வாழக்கூடாது? பணம் பயன்படுத்தப்பட வேண்டும். வீடுகளைக் கட்டுங்கள், உணவுக்காகவும் சிறிதளவு பணத்தை வைத்திருங்கள். மக்கள் தான தர்மங்கள் செய்கின்றார்கள். உதாரணமாக, காஷ்மீர் மன்னர் தனது தனிப்பட்ட சொத்துக்கள் அனைத்தையும் ஆரிய சமாஜிகளுக்குத் தானம் செய்தார். மக்கள் தமது சொந்த சாதி, சமயத்தைச் சேர்ந்தவர்களுக்கே அனைத்தையும் செய்கிறார்கள். இங்கு அவ்வாறில்லை. இங்கு அனைவருமே குழந்தைகள். இங்கு சாதி போன்றவற்றிற்கான கேள்விக்கே இடமில்லை. அவை எல்லைக்குட்பட்ட சாதி போன்றவை. நான் ஆத்மாக்களாகிய உங்களைத் தூய்மையாக்கி, உங்களுக்கு உலக இராச்சியத்தைக் கொடுக்கின்றேன். நாடகத்திற்கேற்ப, பாரத மக்களாகிய நீங்களே உங்களின் இராச்சிய பாக்கியத்தைப் பெறுகிறீர்கள். இப்பொழுது உங்கள் மீது வியாழ சகுனங்கள் உள்ளதைக் குழந்தைகளாகிய நீங்கள் புரிந்துகொள்கின்றீர்கள். ஸ்ரீமத் கூறுகிறது: சதா என்னை மாத்திரமே நினைவுசெய்யுங்கள்! வேறு எதையுமே நீங்கள் செய்ய வேண்டியதில்லை. பக்தி மார்க்கத்தில் வியாபாரிகள் புண்ணியத்திற்காகச் சிறிதளவை ஒதுக்கி வைக்கின்றார்கள். அவர்கள் தங்களின் அடுத்த பிறவியில் அதற்கான தற்காலிக வெகுமதியைப் பெறுகிறார்கள். நான் இப்பொழுது இங்கு நேரடியாக வந்துள்ளேன். எனவே, நீங்கள் அனைத்தையும் இப்பணிக்காகவே பயன்படுத்த வேண்டும். எனக்கு எதுவும் தேவையில்லை. சிவபாபா தனக்காக வீடுகள் போன்றவற்றைக் கட்ட வேண்டுமா? இவை அனைத்தும் பிராமணர்களான உங்களுக்கே ஆகும். ஏழைகள், செல்வந்தவர்கள் அனைவரும் இங்கு ஒன்றாக இருக்கின்றனர். கடவுள் அனைவர் மீதும் சமமான பார்வையைக் கொண்டிருக்கவில்லை என எண்ணிச் சிலர் குழப்பமடைகின்றனர். சிலருக்கு வசிப்பதற்குப் பெரிய மாளிகைகள் கொடுக்கப்பட்டுள்ளன, ஆனால் சிலரோ குடிசைகளில் வாழ வேண்டியுள்ளது என அவர்கள் கூறுகின்றனர். அவர்கள் சிவாபாபாவை மறந்து விடுகின்றனர். அவர்கள் சிவபாபாவின் நினைவில் இருந்தால், ஒருபொழுதும் அத்தகைய விடயங்களைக் கூறமாட்டார்கள். அனைவரும் கருத்திற் கொள்ளப்பட வேண்டும். அவர்கள் வீடுகளில் அவ்வாறு வாழ்ந்திருந்தால், அதேபோன்ற சௌகரியங்கள் அவர்களுக்குக் கொடுக்கப்பட வேண்டும். இதனாலேயே அனைவரையும் உபசரிக்குமாறு உங்களுக்குக் கூறப்படுகின்றது. உங்களிடம் ஏதாவது இல்லாவிட்டால், அது உங்களுக்குக் கொடுக்கப்பட முடியும். தந்தை, தனது குழந்தைகளை நேசிக்கின்றார். வேறு எவராலும் அந்தளவு அன்பு வைத்திருக்க முடியாது. நீங்கள் முயற்சி செய்ய வேண்டும் எனப் பல தடவைகள் குழந்தைகளாகிய உங்களுக்குக் கூறப்பட்டுள்ளது. பிறருக்காகத் திறமையான வழிமுறைகளை உருவாக்குங்கள். இதற்கு, குழந்தைகள் தொடர்ந்தும் விளங்கப்படுத்தக்கூடிய வகையில் மூன்றடி நிலமே உங்களுக்குத் தேவை. முக்கியஸ்தர் ஒருவரிடம் பெரிய மண்டபமொன்று இருந்தால், அவரிடம் கேளுங்கள்: நாங்கள் இங்கு படங்களை வைக்கலாமா? நாங்கள் இங்கு காலையிலும், மாலையிலும் ஓரிரு மணித்தியாலங்கள் வகுப்புக்களை நடாத்தி விட்டுச் சென்று விடுவோம். அனைத்துச் செலவுகளையும் நாங்களே பார்த்துக் கொள்வோம், உங்களின் பெயர் பிரபல்யமாகும். பலர் வந்து, சிப்பிகளிலிருந்து வைரங்களாக மாறுவார்கள். அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தந்தை, தாயாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. உங்களைச் சோதித்து, உங்களுக்குள் இருக்கும் சகல முட்களையும் அகற்றுங்கள். இராமரின் (இறை) தாமத்துக்குச் செல்ல முயற்சி செய்யுங்கள்.

2. அழியாத ஞான இரத்தினங்களின் வியாபாரத்தைச் செய்வதனால், எவருக்காவது நன்மை செய்வதற்கு, நேரத்தை ஒதுக்குங்கள். அழகானவர்களாகி, பிறரையும் அழகானவர்கள் ஆக்குங்கள்.

ஆசீர்வாதம்:
நீங்கள் ஒரு முற்றுப்புள்ளியை இடுவதால், மேன்மையான ஸ்திதி எனும் பதக்கத்தைப் பெறுகின்ற, ஒரு மகாவீரர் ஆவீர்களாக.

இந்த அநாதியான நாடகத்தில் இந்த ஆன்மீகச் சேனையில் உள்ள போர் வீரர்களுக்கு எவருமே ஒரு பதக்கத்தைக் கொடுப்பதில்லை, ஆனால் நாடகத்திற்கேற்ப, அவர்கள் இயல்பாகவே ஒரு மேன்மையான ஸ்திதி எனும் பதக்கத்தைப் பெறுகின்றார்கள். ஒவ்வொருவரினதும் பாகத்தைப் பற்றற்ற பார்வையாளர்களாகப் பார்ப்பவர்களும், ஒரு முற்றுப்புள்ளியை இடுபவர்களும் மாத்திரமே இந்தப் பதக்கத்தைப் பெறுகின்றார்கள். அவர்களின் அனுபவமே அத்தகைய ஆத்மாக்களின் அத்திவாரம் ஆகும், இதனாலேயே பிரச்சனைகள் எனும் எல்லைகள் எதுவுமே அவர்களைத் தடுக்க முடியாது.

சுலோகம்:
ஒரு பறக்கும் பறவையாகி, பாதகமான சூழ்நிலை எனும் மலையைக் கடந்து சென்று, உங்கள் இலக்கை அடையுங்கள்.