08.03.19        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்:
இனிய குழந்தைகளே, ஞானக்கடலைக் கடைந்து நீங்கள் சொற்பொழிவாற்றக்கூடிய தலைப்புக்களைத் தேர்ந்தெடுங்கள். அனைத்து இடங்களினதும் சொற்பொழிவுகளின் தலைப்பு ஒரேமாதிரியாக இருக்க வேண்டும். இது உங்களுக்கிடையே ஒற்றுமை நிலவ அடிப்படை ஆகுகின்றது.

கேள்வி:
நீங்கள் திறமைச் சித்தியுடன் சித்தியெய்துவதற்கு, குழந்தைகளாகிய நீங்கள் தொடர்ந்தும் செய்ய வேண்டிய முயற்சி என்ன?

பதில்:
சகல கர்ம பந்தனங்களுக்கும் அப்பாற் செல்வதற்கான முயற்சியை நீங்கள் செய்ய வேண்டும். நீங்கள் எவருடனாவது பேசும்போது, அவரை ஓர் ஆத்மாவாக, உங்கள் சகோதராகக் கருதி அந்தச் சகோதரரைப் பாருங்கள். நீங்கள் தந்தையைச் செவிமடுக்கும்போது, தந்தையை நெற்றியின் நடுவில் பாருங்கள். அனைவர் மீதும் இந்தச் சகோதரப் பார்வையைப் பேணுவதன் மூலம், சகோதரத்துவ அன்பும் உறவுமுறையும் உறுதியாகுகின்றது. இதற்கு முயற்சி தேவை, ஆனால் இந்த முயற்சியே நீங்கள் திறமைச் சித்தியெய்த உங்களுக்கு உதவுகின்றது. ஓர் உயர்ந்த அந்தஸ்தைக் கோர இருக்கும் குழந்தைகள் இந்த முயற்சியை நிச்சயமாகச் செய்வார்கள்.

ஓம் சாந்தி.
இனிமையிலும் இனிமையான குழந்தைகளே, இதுவே மரண பூமி என்பதும், இதற்கு நேர்மாறான அமரத்துவப் பூமியும் உள்ளது என்பதும் உங்களுக்கு விளங்கப்படுத்தப்பட்டுள்ளது. பக்திமார்க்கத்தில், சங்கர் பார்வதிக்கு அமரத்துவ பூமியின் கதையைக் கூறினார் என்று காட்டப்பட்டுள்ளது. நீங்கள் இப்பொழுது அந்த அமரத்துவ பூமிக்குச் செல்கின்றீர்கள். உங்களுக்கு இந்தக் கதையைக் கூறுபவர் சங்கரர் அல்ல, ஒரேயொரு தந்தையாகிய ஞானக்கடலே உங்களுக்கு இந்தக் கதையைக் கூறுகிறார். இந்தக் கதையை உங்களுக்குக் கூறுமளவிற்கு சங்கரர் ஞானக்கடல் அல்ல. மரணத்தை எவ்வாறு வெற்றி கொள்ள வேண்டும் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் விளங்கப்படுத்த வேண்டும். இந்த ஞானமே உங்களை அமரத்துவமானவராகவும், அநாதியானவராகவும் ஆக்குவதுடன் உங்கள் ஆயுட்காலத்தையும் அதிகரிக்கின்றது. அங்கு மரணம் என்பது இல்லை. இங்கு, ஐந்து விகாரங்களையும் வெற்றி கொள்வதன் மூலம், அதாவது, இராவணனை வெற்றி கொள்வதன் மூலம் நீங்கள் அமரத்துவ பூமியாகிய இராமருடைய இராச்சியத்தின் அதிபதிகள் ஆகுகின்றீர்கள். இராவணனுடைய இராச்சியம் மரணபூமியாகும், இராமரின் இராச்சியம் அமரத்துவபூமியாகும். தேவர்களுக்கு ஒருபொழுதும் மரணம் வருவதில்லை. அங்கு எமதர்மன் இல்லை 'மனிதர்களால் எவ்வாறு மரணத்தை வெற்றி கொள்ள முடியும்" என்ற தலைப்பு மிகவும் சிறந்ததாகும். இவ்விடயங்கள் அனைத்தும் ஞானமாகும். அமரத்துவபூமியாக இருந்த பாரதத்தில் மக்கள் நீண்ட ஆயுட்காலத்தைக் கொண்டிந்தார்கள். பாம்பின் உதாரணம் சத்திய யுகத்திற்குப் பொருந்தும். பாம்பு தனது தோலை நீக்கிய பின்; இயல்பாகவே வேறொன்றைப் பெறுகிறது. இதுவே எல்லையற்ற விருப்பமின்மை என அழைக்கப்படுகின்றது. முழு உலகமும் அழியப்போகின்றது என்பதையும் நீங்கள் உங்கள் பழைய சரீரங்களை நீக்கவேண்டும் என்பதையும் நீங்கள் அறிவீர்கள். இப்போதுள்ள உங்கள் பழைய தோல், உங்கள் 84 பிறவிகளின் இறுதியினதாகும். இது அமரத்துவபூமியில் நிகழ்வதில்லை. அங்கு, அவர்கள் தங்கள் பழைய சரீங்கள்; உக்கிய நிலையை அடைந்ததும், அதனை நீக்கிவிட்டு புதியதொன்றை எடுக்கவேண்டும் என்பதை அவர்கள் உணர்ந்துகொள்வார்கள். நீங்களும் ஒரு காட்சியைக் காண்பிர்கள். புரிந்துகொள்ளுதல் என்பது நுண்ணறிவு என்றும் அழைக்கப்படுகின்றது. உங்கள் புதிய தோல் உங்களுக்காகத் தயாராக உள்ளது ஆகவே நீங்கள் இப்பொழுது உங்கள் பழைய தோலை நீக்கவேண்டும். இவ்வாறே அங்கு நிகழ்கிறது. மரணமே இல்லாத அவ்வுலகம் அமரத்துவபூமி என்று அழைக்கப்படுகின்றது. சரியான நேரத்தில் நீங்கள் உங்கள் சரீரத்தை நீக்குவீர்கள். ஆமையின் உதாரணம் இங்கும் பொருந்தும். அது தனது வேலைகளை முடித்தபின் உள்நோக்கிச்; சென்றுவிடுகின்றது, இங்குள்ள உதாரணங்கள் பக்கதிமார்க்கத்தில் உள்ளவர்களினால் பெயரளவில் மாத்திரமே பிரதிபண்ணப்பட்டுள்ளது, அவர்கள் எதனையும் புரிந்துகொள்வதில்லை. ராக்கி, தஷேரா, தீபாவளி, ஹோலி போன்ற பக்தி மார்க்கத்தில் கொண்டாடப்படும் அனைத்துப் பண்டிகைகளும் இந்த நேரத்திற்கே பொருந்தும் என்பதை நீங்கள் இப்பொழுது புரிந்துகொள்கின்றீர்கள். இவ்விடயங்கள் சத்தியயுகத்தில் இருப்பதில்லை. மனிதர்களால் எவ்வாறு மரணத்தை வெற்றிகொள்ளமுடியும், எவ்வாறு அனைத்து ஆத்மாக்களும் மரணபூமியை விட்டு அமரத்துவ பூமிக்குச் செல்கின்றனர் என்பதைப் போன்ற தலைப்புக்களைக் கொண்ட ஒரு பட்டியலைத் தயாரியுங்கள். அவர்கள் ஒரு நாடகத்தின் கதையை எழுதிய பின், இன்று இன்ன நாடகம் இடம் பெறும், என்று கூறுவது போன்று நீங்களும் அவர்களுக்கு விளங்கப்படுத்துவதற்கு முன்னர் இந்தக் கருத்துக்கள் அனைத்தையும் எழுதவேண்டும். நீங்கள் கருத்துக்களைக் கொண்ட ஒரு பட்டியலைக் வைத்திருக்க வேண்டும், இன்று இத்தலைப்பு உங்களுக்கு விளங்கப்படுத்தப்படும். இராவண இராச்சியத்தை வி;ட்டு நீங்கள் எவ்வாறு தேவர்களின் இராச்சியத்திற்குச் செல்லமுடியும்? என்ற விளக்கம் ஒரேமாதிரியானதாகும். ஆனால் மக்கள் பல தலைப்புக்களைச் செவிமடுக்கும்போது, எல்லையற்ற தந்தையிடமிருந்து எவ்வாறு எல்லையற்ற ஆஸ்தியைப் பெற்று பெருமளவு சந்தோஷத்தை அனுபவிக்கமுடியும் என்பதை அவர்கள் புரிந்துகொள்கின்றனர். சந்நியாசிகள் 125ஆவது யாகத்தைக் கொண்டாடுவது பற்றியும் அதற்குக் கீழே கலைந்துரையாடுவதற்கான தலைப்புப் பட்டியலும் பத்திரிகையில் எழுதப்பட்டுள்ளது. இங்கு, தந்தை கூறுகின்றார்: முழு உலகமும் முற்றாக அர்ப்பணிக்கப்படும் இந்த யாகத்தை நான் ஒரு தடவையே உருவாக்குகிறேன். அவர்கள் பல யாகங்களை உருவாக்கிப் பல பெரிய ஊர்வலங்கள் போன்றவற்றை நடத்துகின்றனர். ருத்திர சிவபாபாவே இந்த ஒரு யாகத்தை இங்கேயே உருவாக்குகின்றார் என்பதையும். அதனுள் பழைய உலகம் முழுவதும் முற்றிலுமாக அர்ப்பணமாகப் போகின்றது என்பதையும் நீங்கள் புரிந்துகொள்கின்றீர்கள். புதிய உலகம் ஸ்தாபிக்கப்படுவதுடன் நீங்கள் தேவர்கள் ஆகுகின்றீர்கள். தந்தை இவை அனைத்தையும் உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார். படைப்பவரான தந்தை வந்து தன்னைப் பற்றிய ஞானத்தை உங்களுக்குக் கொடுப்பதுடன், படைப்பின் ஆரம்பம், மத்தி, இறுதியின் ஞானத்தையும் கொடுக்கின்றார். அவர் இராஜயோகத்தையும் உங்களுக்குக் கற்பிக்கின்றார். சத்தியயுகத்தில் தூய தேவர்கள் இருக்கின்றனர். அவர்களும் இராச்சியத்தை ஆட்சி செய்கின்றனர். அது ஆதி சனாதன தேவி தேவதா தர்மம் என்றும் அழைக்கப்படுகின்றது. இந்தத் தலைப்புக்களையும் நீங்கள் கொண்டிருக்கலாம்: சத்தியயுகத்தின் ஆதி சனாதன தேவிதேவதா தர்மம் எவ்வாறு ஸ்தாபிக்கப்படுகிறது? உலகம் முழுவதும் அமைதி எவ்வாறு உருவாக்கப்படுகிறது? வந்து இதைப் புரிந்து கொள்ளுங்கள். எவ்வாறு அமைதியை உருவாக்குவது என்பதற்கான அறிவுரையை பரமாத்மாவாகிய பரமதந்தையைத் தவிர வேறு எவராலும் உங்களுக்குக் கூறமுடியாது. கருத்துத் தெரிவிக்கும் மக்களுக்கு பரிசுகள் வழங்கப்படும். எவரால் உலகில் அமைதியை ஏற்படுத்தமுடியும் என்பதையும் அதனை எவ்வாறு செய்து முடிக்கலாம்? என்பதையும் கொண்ட தலைப்பும் இருக்கின்றது. ஞானக்கடலைக் கடைந்து பல தலைப்புக்களைக் கொண்ட ஒரு பட்டியலைத் தயாரியுங்கள். அதே தலைப்பு அனைத்து இடங்களிலும் எற்றுக்கொள்ளும் வகையில் தயாரியுங்கள். அப்போது உங்கள் அனைவருக்கிடையேயும் ஒரு தொடர்பு இருக்கும்;. ஒரு பட்டியலைத் தயாரித்து முன்னரே அனைவருக்கும் அறிவியுங்கள். அதே சொற்பொழிவே அனைத்து இடங்களுக்கும் கொடுக்கப்படவுள்ளது என அனைவரும் அறியும் வகையில் அந்தச் செய்தி டெல்கிக்கு அனுப்பப்படவேண்டும், இதுவே ஒற்றுமை என்றழைக்கப்படுகின்றது. உலகமெங்கும் ஒற்றுமையின்மை காணப்படுகின்றது, ஆனால் இராம இராச்சியத்தின் புகழ் என்பது சிங்கமும் ஆடும் ஒரே குளத்தில் ஒன்றாக நீர் அருந்துகின்றமையாகும். அத்தகைய ஒரு கதை திரேதாயுகத்திற்குக் கொடுக்கப்பட்டால் அது சத்தியயுகத்தில் எவ்வாறு இருந்திருக்கும்? சமயநூல்களில் பல்வேறு கதைகள் எழுதப்பட்டுள்ளன. தந்தை ஒருவரால் உங்களுக்குக் கூறப்பட்டுள்ள கதையை மாத்திரம் நீங்கள் இப்பொழுது செவிமடுத்துக் கொள்ளுங்கள். அவர்கள் உலகில் எண்ணற்ற கதைகளைத் தொடர்ந்தும் உருவாக்குகின்றனர். துவாபரயுகத்தின் ஆரம்பத்திலிருந்து கலியுக இறுதிவரை உருவாக்கப்பட்ட இந்த சமயநூல்கள் போன்றவையும் அங்கு இருப்பதில்லை. பக்திமார்க்கத்தின் அனைத்தும் முடிவடைந்துவிடும். இங்கு நீங்கள் பார்க்கும் அனைத்தும் தீயவையாகும். ஆகவே, பார்த்தும் பார்க்காதீர்கள், கேட்டும் கேட்காதீர்கள். தந்தை உங்களுக்கு விளங்கப்படுத்தும் விடயங்களை மாத்திரமே உங்கள் புத்தியில் வைத்திருங்கள். சங்கமயுகத்து பிராமணர்களாகிய நாம் மிகவும் மேன்மையானவர்கள். நாம் தேவர்களைவிட மேன்மையானவர்கள். இந்த நேரத்தில், நாம் கடவுளின் குழந்தைகள். எமது எண்ணிக்கை தொடர்ந்தும் படிப்படியாக அதிகரிக்கின்றது. அத்தகைய இலகுவான விடயமும் எவருடைய புத்தியிலும் இருப்பதில்லை. நீங்கள் கடவுளின் குழந்தைகள், ஆகையால் நீங்கள் நிச்சயமாக சுவர்க்கத்தின் அதிபதிகள் ஆகவேண்டும், ஏனெனில் தந்தையே சுவர்க்கத்தை ஸ்தாபிப்பவர். கல்பத்தின் கால எல்லை நூறாயிரக்கணக்கான வருடங்கள் என கொடுக்கப்பட்டமையால் அவர்களால் எதனையும் நினைவிற்கொள்ள முடியவில்லை. தந்தை வந்து உங்களுக்கு ஞாபகப்படுத்துகின்றார். இது 5000 வருடங்களுக்கான விடயமாகும். நீங்கள் தேவர்களாக இருந்தீர்கள். அவர் மீண்டும் உங்களை அவ்வாறு ஆக்குகின்றார். தனிப்பட்ட முறையில் செவிமடுப்பதால் நீங்கள் பெருமளவு சந்தோஷத்தை அனுபவம் செய்வதுடன் புத்துணர்ச்சியும் அடைகின்றீர்கள். தமது ஆஸ்தியைத் தந்தையிடமிருந்தே தாம் பெற்றுக்கொள்ளவேண்டும் என்பதைப் புத்திசாலியான, விவேகமுள்ள குழந்தைகள் தமது புத்தியில் கொண்டிருப்பார்கள்.;. தந்தை புதிய உலகைப் படைக்;கின்றார், ஆகவே நாம் நிச்சயமாக அந்தப் புதிய உலகில் இருக்கவேண்டும். அனைவரும் ஒரேயொரு தந்தையின் குழந்தைகள். அனைவரின் தர்மமும் வேறுபட்டது, அனைவரும் வசிக்கும் இடமும் வேறுபட்டதாகும். ஒவ்வொருவரும் வேறுபட்ட வழியில் வந்து போகின்றனர். அவர்கள் எவ்வாறு சென்று பரந்தாமத்தில் வசிக்கின்றனர் என்பதும் புத்தியில் உள்ளது. பரந்தாமத்தில் வம்சாவளி விருட்சமும் உள்ளது. வம்சாவளி விருட்சம் சூட்சும உலகில் காணப்படமுடியாதுள்ளது. சூட்சும உலகில் காணப்படும் எதுவானாலும் காட்சிகளே ஆகும். அவை அனைத்தும் நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டுள்ளன. நீங்கள் சூட்சும உலகிற்குச் செல்லும்போது நீங்கள் அனைத்தையும் ஒரு மௌனப் படத்தைப் பார்ப்பது போன்று பார்ப்பீர்கள். முதலில், அவர்கள் தயாரித்த படங்கள் மௌனமாக இருந்தன, பின்னர் அவர்கள் அதனை ஒலியுடன் தயாரிக்க ஆரம்பித்தனர். மௌனத்தை மட்டும் கொண்ட ஒரு நாடகத்தை உங்களால் தயாரிக்க முடியாது. குழந்தைகளாகிய நீங்கள் எவ்வாறு மௌனமாக வாழ்கின்றீர்கள் என்பதை நீங்கள் புரிந்துகொள்கின்றீர்கள். அங்கு ஆத்மாக்களின் வம்சாவளி விருட்சம் உள்ளதைப் போன்றே, இங்கும் மனிதர்களின் விருட்சம் உள்ளது. இந்த விடயங்கள் அனைத்தையும் உங்கள் புத்தியில் வைத்துக்கொண்டு அவற்றையிட்டு சொற்பொழிவாற்றுங்கள். இந்த விடயங்கள் அனைத்iயும் கற்பதற்கு நேரம் எடுக்கின்றது. நீங்கள் அனைத்தையும் புரிந்துகொண்;டாலும், அனைத்தையும் கிரகிக்கக்கூடியதாகவும் சந்தோஷத்தை அனுபவிக்கக் கூடியதுமான நினைவு யாத்திரை எங்கே? எவ்வாறு மிகச்சரியான யோகத்தைக் கொண்டிருப்பது என்பதை நீங்கள் இப்பொழுது கற்கின்றீர்கள். அனைவரையும் உங்கள் சகோதரர்களாகக் கருதி மரியாதை கொடுக்கவேண்டும் எனக் குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்தப்பட்டுள்ளது. நெற்றியே ஆத்மாவின் சிம்மாசனமாகும். இதனாலேயே 'அதிர்ஷ்ட இரதம்" நினைவுகூரப்படுகின்றது. நீங்கள் இவ்விடயங்களை மற்றவர்களுக்கு விளங்கப்படுத்தும்போது உங்கள் சதோதரர்களுக்கு விளங்கப்படுத்துகின்றீர்கள் என்ற உணர்விலேயே இருக்க வேண்டும். இந்த மனோபாவத்தைப் பேணுவதற்கு பெருமளவு முயற்சி தேவைப்படுகின்றது. இந்த முயற்சியைச் செய்வதன் மூலமே நீங்கள் உயர்ந்ததோர் அந்தஸ்தைப் பெறுகின்றீர்கள். தந்தையும் உங்களை இவ்வாறாகவே பார்க்கின்றார். தந்தையின் பார்வையும் நெற்றியின் நடுவிற்கே ஈர்க்கப்படுகின்றது. ஆத்மா ஒரு சின்னஞ்சிறிய புள்ளி. ஆத்மாவே செவிமடுக்கின்றார். நீங்களும் தந்தையை நெற்றியின் நடுவிலேயே பார்க்கிறீர்கள். பாபா இங்கிருக்கின்றார், சகோதரரும் (பிரம்மாவின் ஆத்மா) இங்கிருக்கின்றார். இத்தகைய விடயங்களை உங்கள் புத்தியில் கொண்டிருப்பதன் மூலம் ஞானக்கடலின் குழந்தைகளாகிய நீங்களும் ஞானக்கடல்கள் ஆகுகின்றீர்கள். இதனைச் செய்வது உங்களுக்கு இலகுவாகும். வீட்டில் தமது குடும்பங்களுடன் வசிப்பவர்களுக்கு இந்த ஸ்தியைப் பேணுவது சிறிது சிரமாக இருக்கும். செவிமடுத்தபின் அவர்கள் வீடு திரும்புகின்றனர். அவர்களின் வீட்டிலுள்ள சூழ்நிலை வேறுபட்டதாக இருக்கும். இங்கு அது இலகுவாகும். பாபா உங்களுக்கு மிக இலகுவான ஒரு வழிமுறையைக் கூறுகின்றார்: உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதி தந்தையை நினைவு செய்யுங்கள். மற்றவர்களை உங்கள் சகோதரர்களாகப் பாருங்கள். உங்கள் சகோதரத்துவப் பார்வையினூடாகவே உங்களால் கர்மபந்தனங்கள் அனைத்திற்;கும் அப்பாற் செல்லமுடியும். உங்களால் சரீரத்தை மறந்து தந்தையை மாத்திரம் நினைவு செய்யக்கூடியதாக இருக்கும். இந்த முயற்சியை நீங்கள் தொடர்ந்தும் செய்தால் உங்களால் திறமைச் சித்தியெய்த முடியும். எவ்வாறாயினும், வெகுசிலரால் மாத்திரமே இந்த ஸ்திதியைப் பேண முடியும், அவர்களே சுவர்க்கத்தின் அதிபதிகள் ஆகின்றனர். 8 மணிகளைக் கொண்டுள்ள உருத்திர மாலையும் உள்ளது, ஆகவே நீங்கள் முயற்சி செய்யவேண்டும். ஓர் உயர்ந்த அந்தஸ்தைக் கோருபவர்கள் என்ன நடந்தாலும் நிச்சயமாக முயற்சி செய்வார்கள். மற்றவிடயங்களில் ஈடுபடவேண்டிய அவசியமே இல்லை. அன்பும் உறவுமுறையும் சகோதரத்துவப் பார்வையினூடாகவே உருவாகுகின்றது, அந்தக் காட்சி உறுதியாகுகின்றது. ஆகவே, தந்தை கூறுகின்றார்: நான் உங்களுக்குப் பல ஆழமான விடயங்களை விளங்கப்படுத்துகின்றேன். அவை அனைத்தையும் பயிற்சியில் இடுவதற்கு முயற்சி தேவைப்படுகின்றது. நீங்கள் இங்கு அமர்ந்திருக்கும் போது, உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதுங்கள். ஆத்மாவே செவிமடுக்கிறார். நீங்கள் செவிமடுக்கின்ற ஆத்மாவைப் பார்க்கிறீர்கள். ஆத்மாக்கள் செயல்களின் விளைவுகளுக்கு அப்பாற்பட்டவர்கள் என அம்மக்கள் கூறுகிறார்கள். சரீரம் செவிமடுக்கின்றதா? அது தவறானது. தந்தை அவ்வளவு ஆழமான விடயங்களை உங்களுக்குக் கூறுகிறார். குழந்தைகளாகிய நீங்களே முயற்சி செய்ய வேண்டும். முன்னைய கல்பத்தில் ஏதோவொரு தகுதியைப் பெற்றவர்களே மீண்டும் முயற்சி செய்வார்கள். அவர்கள் தங்களுடைய சொந்த அனுபவத்தையும் கூறுகிறார்கள்: நான் இவ்வாறு உரையாடி, செவிமடுத்து இந்தப் பழக்கத்தை வளர்த்துக்கொண்டுள்ளேன். ஆத்மாவிற்கே 'மன்மனாபவ" எனக் கூறப்படுகிறது. உங்கள் ஒவ்வொருவருக்கும் 'மன்மனாபவ" என்று கூறப்படுகிறது. அதாவது 'தந்தையை நினைவு செய்யுங்கள்". இந்த முயற்சி மறைமுகமானது. மாணவர்கள் சென்று, கற்பதற்காக மரத்தடியில் அமர்கிறார்கள். அது பௌதீக விடயமாகும். இவை அனைத்தையும் இப்பொழுது பயிற்சி செய்வதன் மூலம், பழக்க வழங்கங்கள் நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. நீங்கள் புதிய விடயங்களைச் செவிமடுக்கிறீர்கள். நீங்கள் இப்பொழுது செவிமடுப்பதையே, புதியவர்களும் வந்து செவிமடுப்பார்கள். தாம் தாமதமாக வந்துவிட்டதாகச் சிலர் கூறுகிறார்கள். ஆயினும், நீங்கள் உண்மையிலேயே மிகவும் முதல் தரமான, ஆழமான, சூட்சும விடயங்களைச் செவிமடுத்து, முயற்சி செய்வதால் நீங்கள் மிக உயர்ந்ததோர் அந்தஸ்தைப் பெறுகிறீர்கள். அது நல்லது. மாயை உங்களை இறுதி வரையும் விடப்போவதில்லை. நீங்கள் வெற்றி பெறும் வரை மாயையுடனான உங்களுடைய யுத்தம் தொடரும். பின்னர் நீங்கள் திடீரென்று சென்றுவிடுவீர்கள். நீங்கள் எந்தளவுக்கு நினைவைக் கொண்டிருக்கின்றீர்கள் என்பதைப் பொறுத்தே நீங்கள் தந்தையிடம் செல்கின்றீர்கள் என்ற விழிப்புணர்வுடையவராகிப் பின் சரீரத்தை விட்டு நீங்குவீர்கள். பிரம்ம தத்துவத்துடன் கலக்கும் இலட்சியத்தைக் கொண்டிருப்பவர்கள், சரீரத்தை விட்டு நீங்கும் போது எங்கும் முழுமையான அமைதியைப் பரப்புகிறார்கள் என்பதை பாபா பார்த்துள்ளார். எவ்வாறாயினும் எவராலும் அநாதியான விடுதலை பெறவோ அல்லது வீடு திரும்பவோ இன்னமும் முடியவில்லை. இந்த நாடகத்தில் அனைத்து நடிகர்களும் தேவைப்படுகிறார்கள். அவர்கள் அனைவரும் இறுதியில் இங்கு கீழே இருக்க வேண்டும். மேலே ஒரு ஆத்மாவேனும் இல்லாமல் இருக்கும் பொழுது அனைவரும் வீடு திரும்ப வேண்டும். எவ்வளவுதான் மனிதர்கள் இருந்தாலும், அவர்கள் அனைவரும் வீடு திரும்ப வேண்டும், சிலரே இங்கு எஞ்சியிருப்பார்கள். அனைவரும் செல்வதை நாம் பார்ப்போம் என அவர்கள் கூறுவார்கள். சத்தியயுகம் இந்த நேரத்திலேயே ஸ்தாபிக்கப்படுகிறது. பல மில்லியன் கணக்கான மனிதர்கள் இருப்பதால், அனைவரும் செல்வதை நாங்கள் பார்ப்போம். பின்னர் நாங்கள் எங்களுடைய சொந்த இராச்சியத்திற்குச் செல்வோம். மற்றவர்கள் நாற்பது முதல் ஐம்பது பேர்வரை செல்வதைப் பார்ப்பார்கள், ஆனால் நீங்கள் எத்தனை ஆத்மாக்கள் செல்வதைப் பார்ப்பீர்கள்? ஆத்மாக்கள் அனைவரும் பூச்சிகளின் கூட்டம் போல் அமைதி தாமத்திற்குத் திரும்புவார்கள். உங்களையும் மற்றவர்கள் அனைவரையும் மீண்டும் வீட்டிற்கு அழைத்துச் செல்வதற்காக நான் வந்துள்ளேன். நான் பின்னர் உங்களை மீண்டும் கீழே அனுப்பி வைப்பேன். இவை அற்புதமான விடயங்கள். பில்லியன் கணக்கான மனிதர்கள் வீடு திரும்புவார்கள். அவர்கள் அனைவரும் செல்வதை நீங்கள் பார்ப்பீர்கள். அனைவரும் வீட்டிற்கு, பரந்தாமத்திற்குத் திரும்புவார்கள். இந்த விடயங்கள் அனைத்திலும் உங்களுடைய புத்தி இப்பொழுது வேலை செய்ய வேண்டும். விருட்சம் படிப்படியாக வளர்ந்து மீண்டும் பெரிதாகும். ருண்ட மாலை உருத்திர (சிவன்); மாலையாக மாறும். உருத்திர (சிவனின்) மாலை எவ்வாறு ருண்ட (விஷ்ணு) மாலையாகுகின்றது என்பது உங்களுடைய புத்தியில் உள்ளது. உங்களுக்கிடையேயும், ஆழமான, சூட்சுமமான புத்தியைக் கொண்டிருப்பவர்களால் மாத்திரமே இந்த சூட்சும விடயங்கள் அனைத்தையும் புரிந்து கொள்ள முடியும். தந்தை இதை உங்களுக்கு பல்வேறு முறைகளில் விளங்கப்படுத்துவதால், உங்களால் அவரை நினைவு செய்ய முடியும். உருத்திர மாலையிலிருந்து நீங்கள் ருண்ட மாலைக்குச் செல்வீர்கள். அதன் பின்னர் நீங்கள் வரிசைக்கிரமமாக கீழ் இறங்குகிறீர்கள். உருத்திர மாலை மிகப் பெரியது! வேறு எவரும் இந்த ஞானத்தைப் புரிந்து கொள்வதில்லை. மிக ஆரம்பம் முதலே வேறு எவராலும் இந்த ஞானத்தை அறிந்து கொள்ள முடியவில்லை. சங்கமயுக பிராமணர்களாகிய உங்களால் மாத்திரமே இவை அனைத்தையும் புரிந்து கொள்ள முடியும். சங்கமயுகத்தை மாத்திரம் நினைவு செய்யுங்கள், ஞானம் அனைத்தும் உங்கள் புத்தியில் புகும். கலங்கரை விளக்குகளாகிய நீங்கள் அனைவருக்கும் அவர்களுடைய இலக்கைக் காட்டுகிறீர்கள். நீங்கள் அவ்வளவு நல்ல கலங்கரை விளக்;குகளாக ஆகுகிறீர்கள். இங்கு உங்களுக்கு பொருந்தாத எந்த விடயமும் இல்லை. நீங்கள் சத்திர சிகிச்சையாளர்களும், அடகு பிடிப்பவர்களும் சலவைக்காரர்களும் ஆவீர்கள். இந்த விஷேச குணங்கள் அனைத்தும் உங்களுக்குள் இருப்பதால், இந்தப் புகழ் அனைத்தும் உங்களுக்குப் பொருந்தும். இருந்தாலும் அது நீங்கள் செய்யும் முயற்சிகளுக்கு ஏற்ப வரிசைக்கிரமமாக இருக்கிறது. நீங்கள் செய்யும் பணிகளுக்கு ஏற்ப நீங்கள் புகழைப் பெறுகிறீர்கள். தந்தை உங்களுக்கு கொடுக்கின்ற வழிக்காட்டல்களைப் பற்றிச் சிந்தித்துப் பார்க்க வேண்டும். குழந்தைகளே, கருத்தரங்குகளை நடத்துவது குழந்தைகளாகிய உங்களுடைய பணியாகும். நீங்கள் செய்யும் எதனையும் தந்தை நிறுத்த மாட்டார். நல்லது. அதிகளவு விளங்கப்படுத்துவதால் என்ன நன்மை இருக்கிறது? தந்தை கூறுகிறார்: மன்மனாபவ! பாபா அந்தளவு போசாக்கான உணவை உங்களுக்கு ஊட்டுகிறார். அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டெடுக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தந்தை, தாயாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. எப்பொழுதும் இந்தப் போதையை பேணுங்கள்: சங்கமயுக பிராமணர்களாகிய நாங்கள் தேவர்களை விடவும் மேன்மையானவர்கள், ஏனெனில், நாங்கள் கடவுளின் குழந்தைகளும், மாஸ்டர் ஞானக் கடல்களும் ஆவோம். இந்த நேரத்திலேயே நாங்கள் இந்த சிறப்பியல்புகள் அனைத்தையும் எமக்குள் கிரகிக்கின்றோம்.

2. தந்தை விளங்கப்படுத்துகின்ற விடயங்களை மாத்திரம் உங்கள் புத்தியில் வைத்திருங்கள். ஏனைய அனைத்தையும் கேட்டும் கேட்காதிருங்கள். ஏனைய அனைத்தையும் பார்த்தும் பார்க்காதிருங்கள். தீயதைச் செவிமடுக்காதீர்கள்! தீயதைப் பார்க்காதீர்கள்!

ஆசீர்வாதம்:
ஒரு கவலையற்ற சக்கரவர்த்தியாகவிருந்து, மாயையின் சகல நிழலிலிருந்தும் விலகிச் சென்று, நினைவு என்ற பாதுகாப்புக் குடையின் கீழ் இருப்பீர்களாக.

தந்தையின் நினைவு என்ற பாதுகாப்புக் குடையின் கீழ் சதா இருப்பவர்கள், தாம் பாதுகாப்பாக இருக்கின்ற அனுபவத்தைப் பெறுகின்றார்கள். மாயையின் நிழலில் இருந்து உங்களை பாதுகாப்பதற்கு தந்தையின் பாதுகாப்புக் குடையின் கீழ் இருப்பதே வழியாகும். பாதுகாப்புக் குடையின் கீழ் இருப்பவர்கள் எப்பொழுதும் கவலையற்ற சக்கரவர்த்திகளாக இருக்கின்றார்கள். கவலைகள் ஏதேனும் இருப்பின், உங்கள் சந்தோஷம் மறைந்து விடும். உங்கள் சந்தோஷம் மறையும் போது, நீங்கள் பலவீனம் அடைவதுடன், மாயையின் செல்வாக்கின் நிழலும் இருக்கும், ஏனெனில், பலவீனமே மாயையை வரவழைக்கின்றது. உங்கள் கனவிலேனும் மாயையின் நிழல் ஏதேனும் இருந்தால், அவள் அதிகளவு விரக்தியை ஏற்படுத்துவாள் என்பதாலேயே நீங்கள் சதா பாதுகாப்புக் குடையின் இருக்க வேண்டும்.

சுலோகம்:
புரிந்துணர்வு என்ற ஸ்குரூரைவர் (ளஉசநறனசiஎநச) மூலமாக கவனயீனம் என்ற தளர்ந்த திருகாணியை இறுக்கமாக்கி, சதா உஷாராக இருங்கள்.