08.05.22    Avyakt Bapdada     Tamil Lanka Murli    31.12.90     Om Shanti     Madhuban


தபஸ்யாவே எல்லாவற்றிலும் மகத்தான கொண்டாட்டமாகும். தபஸ்யா என்றால் தந்தையுடன் களிப்பை அனுபவித்தல் என்று அர்த்தம்.


இன்று, பாப்தாதா எங்கும் உள்ள குழந்தைகளுக்கு, புதிய ஞானத்தால் புதிய வாழ்க்கையை, புதிய மனோபாவத்தை, புதிய பார்வையை, புதிய உலகை அனுபவம் செய்யும் குழந்தைகளுக்கு அன்பான வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறார். தற்சமயம், எங்கும் உள்ள குழந்தைகள் தமது இதயங்களின் தொலைக்காட்சியில் தற்போதைய தெய்வீகக் காட்சியைப் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். எல்லோருக்கும் ஒரேயொரு எண்ணமே உள்ளது: தொலைவில் இருக்கும்போதும் நெருக்கத்தை அனுபவம் செய்தல். பாப்தாதாவும் குழந்தைகள் எல்லோரையும் பார்க்கிறார். பாப்தாதா குழந்தைகளின் இதயங்களில் இருந்து வரும் அவர்களின் புதிய ஊக்கத்திற்கும் உற்சாகத்திற்குமான வாழ்த்துக்களின் சங்கீதத்தைக் கேட்கிறார். எல்லோரிலும் இருந்து வெளிப்படும் அன்பு நிறைந்த பல்வகை சங்கீதத்தின் ஒலி மிகவும் அழகாக உள்ளது. இதனாலேயே, பாப்தாதா அதற்குப் பிரதிபலனாகப் பதிலளிக்கிறார்: எல்லா வேளைக்கும், புது வருடத்திற்காக, புதிய ஊக்கத்திற்கும் உற்சாகத்திற்கும் எல்லாவேளையும் உங்களுக்குள் தெய்வீகத்தை ஏற்படுத்திக்கொள்வதற்கும் வாழ்த்துக்கள். புது வருடத்திற்காக ஒரு நாளுக்கு மட்டும் வாழ்த்துக்கள் வழங்கப்படுவதில்லை. ஆனால், சங்கமயுகத்தின் ஒவ்வொரு கணமும் அநாதியான தந்தையின் அநாதியான அன்பின் பொறுப்பை நிறைவேற்றுவதற்குக் குழந்தைகளின் வாழ்க்கையில் புதுமையை ஏற்படுத்தும். இதனாலேயே, ஒவ்வொரு கணமும், நீங்கள் அழியாத தந்தையிடமிந்து அழியாத வாழ்த்துக்களைப் பெறுகிறீர்கள். பிராமணர்களான நீங்கள் எல்லோரும் பாப்தாதாவின் விசேடமான சந்தோஷமான வாழ்த்துக்களால் முன்னேறிச் செல்கிறீர்கள். பிராமண வாழ்க்கையில் பராமரிப்பிற்கான அடிப்படை, வாழ்த்துக்களே. நீங்கள் வாழ்த்துக்களின் சந்தோஷத்துடன் தொடர்ந்து முன்னேறிச் செல்கிறீர்கள். நீங்கள் தந்தையிடமிருந்து எல்லா வேளையும் வாழ்த்துக்களைப் பெறுகிறீர்கள். ஆசிரியரின் ரூபத்தில், சபாஷ், சபாஷ்! என்ற வார்த்தைகள் உங்களைத் திறமைச் சித்தி எய்த வைக்கின்றன. ஒவ்வொரு மேன்மையான செயலுக்கும் சற்குருவின் ரூபத்தில் ஆசீர்வாதங்கள், வாழ்க்கையை இலேசானதாகவும் களிப்பானதாகவும் ஆக்கும். இதனாலேயே, நீங்கள் பலமில்லியன் மடங்கு பாக்கியசாலிகள். நீங்கள் பாக்கியத்தை அருள்பவரான கடவுளின் குழந்தைகள் ஆகியுள்ளீர்கள். அதாவது, நீங்கள் முழுப் பாக்கியத்தினதும் உரிமையைக் கோரியுள்ளீர்கள். மக்கள் விசேடமான நாட்களில் விசேடமான வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறார்கள். நீங்கள் புது வருடத்தில் மட்டுமா வாழ்த்துக்களைப் பெறுகிறீர்கள்? முதலாம் திகதிக்குப் பின்னர், அது இரண்டாம் திகதி ஆகியபின்னர், வாழ்த்துக்கள் நின்றுவிடுமா? உங்களுக்கு, ஒவ்வொரு கணமும் எப்போதும் விசேடமானது. சங்கமயுகம் விசேடமான யுகமாகும். வாழ்த்துக்களுக்கான யுகமாகும். ஒவ்வொரு நாளும் அமிர்தவேளையில், நீங்கள் தந்தையிடமிருந்து வாழ்த்துக்களைப் பெறுகிறீர்கள்தானே? இந்தத் தினம் பெயரளவில் புதிய வருடமாகக் கொண்டாடப்படுகிறது. ஆனால், ஒவ்வொரு கணமும் களிப்பிற்கான கணம் என்பதை நினைவில் வைத்திருங்கள். சந்தோஷம் உள்ளது. சந்தோஷத்தைத் தவிர வேறு எதுவும் இல்லை, அப்படித்தானே? உங்களின் வாழ்க்கையில் என்ன உள்ளது என யாராவது கேட்டால், நீங்கள் என்ன பதில் சொல்வீர்கள்? களிப்புள்ளது. களிப்பைத் தவிர வேறு எதுவும் இல்லை. நீங்கள் இந்த வாழ்க்கையில் முழுக் கல்பத்திற்குமான களிப்பை அனுபவம் செய்கிறீர்கள். ஏனென்றால், தந்தையைச் சந்திக்கும் களிப்பை அனுபவம் செய்வது, உங்களுக்கு முழுக்கல்பத்திற்கான இராச்சிய உரிமைக்கான அனுபவத்தையும் பூஜிக்கத்தகுதி வாய்ந்தவர் ஆகுவதற்கான உரிமையையும் கொடுக்கும். இந்த வேளையிலேயே உங்களுக்கு இரண்டின் ஞானமும் உள்ளது: பூஜிக்கத்தகுதி வாய்ந்தவராகவும் ஆள்பவராகவும் இருத்தல். இதனாலேயே, நீங்கள் இப்போது களிப்பை அனுபவம் செய்கிறீர்கள்.

இந்த வருடம் நீங்கள் என்ன செய்வீர்கள்? நீங்கள் புதுமையை ஏற்படுத்துவீர்கள்தானே? இந்த வருடத்தைப் பண்டிகைக்கான வருடமாகக் கொண்டாடவேண்டும். நாங்கள் தபஸ்யா செய்யப் போகிறோமா அல்லது கொண்டாட்டங்களைச் செய்யப் போகிறோமா என நீங்கள் நினைக்கிறீர்களா? தபஸ்யா என்பது எல்லாவற்றிலும் மகத்தான கொண்டாட்டமாகும். ஏனென்றால், நீங்கள் எப்படியும் ஹத்த யோகம் செய்யப்போவதில்லை. தபஸ்யா என்றால் தந்தையுடன் களிப்பை அனுபவம் செய்தல்: சந்திப்பதில் களிப்பு, சகல பேறுகளையும் கொண்டிருப்பதில் களிப்பு, நெருக்கத்தை அனுபவம் செய்வதில் களிப்பு, சமமாக இருக்கும் ஸ்திதியில் களிப்பு. எனவே, இது ஒரு கொண்டாட்டம்தானே? சேவைக்காக நீங்கள் மிகப் பெரிய கொண்டாட்டங்களைச் செய்யமாட்டீர்கள். ஆனால், தபஸ்யாவின் சூழல் ஆத்மாக்களை ஈர்த்து, வார்த்தைகளால் செய்யும் எந்தவொரு கொண்டாட்டத்தை விடவும் அதிகமாக பாபாவைக் கவரும். தபஸ்யா என்பது ஓர் ஆன்மீகக் காந்தமாகும். அது தொலைவிலிருந்தே ஆத்மாக்களை அமைதியையும் சக்தியையும் அனுபவம் செய்ய வைக்கும். நீங்கள் உங்களுக்குள் என்ன புதுமையை ஏற்படுத்துவீர்கள்? எல்லோரும் புதுமையையே விரும்புகிறார்கள். எனவே, எப்போதும் உங்களைச் சோதித்துப் பாருங்கள்: இன்று, நான் எனது மனதில், அதாவது, எனது எண்ணங்களின் சக்தியில் என்ன குறிப்பிட்ட சிறப்பியல்பை ஏற்படுத்தினேன்? அத்துடன் எந்தளவிற்கு எனது மனம் மூலமான சேவை, அதாவது, ஏனைய ஆத்மாக்கள்மீது நல்லாசிகளையும் தூய உணர்வுகளையும் கொண்டிருக்கும் வழிமுறையானது அதிகரிக்கும்? உங்களின் மேன்மையான ஸ்திதியில் நீங்கள் என்ன புதுமையை ஏற்படுத்தினீர்கள்? என்று அர்த்தம். அத்துடன் கூடவே, எந்தளவிற்கு நான் எனது வார்த்தைகளில் இனிமையின் திருப்தியின் இலேசான தன்மையின் புதுமையை ஏற்படுத்தினேன்? பிராமண ஆத்மாக்களின் வார்த்தைகள் சாதாரணமான வார்த்தைகளல்ல. நீங்கள் உங்களுக்காகவும் ஏனைய ஆத்மாக்களுக்காகவும் இந்த மூன்று விடயங்களையும் உங்களின் வார்த்தைகளில் அனுபவம் செய்ய வேண்டும். இதுவே புதுமை எனப்படுகிறது. இவற்றுடன்கூடவே, ஒவ்வொரு செயலிலும் புதுமை என்றால் ஒவ்வொரு செயலும் உங்களையும் ஏனைய ஆத்மாக்களையும் பேறுகளை அனுபவம் செய்ய வைக்கும். நீங்கள் உடனடிப் பலனுடன் எதிர்காலக் கர்ம பலனின் சேமிப்பையும் அனுபவம் செய்ய வேண்டும். தற்சமயம், நீங்கள் உடனடிப் பலனாக சந்தோஷத்தினதும் சக்தியினதும் திருப்தியை அனுபவம் செய்ய வேண்டும். அத்துடன் எதிர்காலச் சேமிப்பையும் அனுபவம் செய்ய வேண்டும். நீங்கள் அதன்பின்னர், உங்களை சதா சம்பூரணமானவராகவும் முழுமையானவராகவும் அனுபவம் செய்வீர்கள். கர்மத்தின் விதையானது பேறுகளின் மரத்தால் நிறைந்திருக்க வேண்டும். அது வெறுமையாக இருக்கக்கூடாது. முழுமையாக நிரம்பியிருக்கும் ஓர் ஆத்மா இயல்பாகவே ஆன்மீக போதையைக் கொண்டிருப்பார். நீங்கள் இத்தகைய புதுமையான செயல்களைச் செய்துள்ளீர்களா? அத்துடன்கூடவே, உங்களின் உறவுமுறைகளிலும் தொடர்புகளிலும் நீங்கள் என்ன புதுமையை ஏற்படுத்த வேண்டும்?

இந்த வருடம், நீங்கள் அருள்பவரின் குழந்தையாக, மாஸ்ரர் அருள்பவராக இருக்கும் உணர்வை அனுபவம் செய்ய வேண்டும். நீங்கள் ஒரு பிராமண ஆத்மாவுடனோ அல்லது சாதாரணமான ஆத்மாவுடனோ ஒரு தொடர்பையோ அல்லது உறவுமுறையோ உருவாக்கினாலும், அந்த ஆத்மா ஒரு மாஸ்ரர் அருள்பவரிடமிருந்து பேறுகளை அனுபவம் செய்வார். அவர்கள் தைரியத்தைப் பெறக்கூடும். ஊக்கத்தையும் உற்சாகத்தையும் பெறக்கூடும். அமைதியை அல்லது சக்தியைப் பெறக்கூடும். இலகுவாக முன்னேறக்கூடும் அல்லது சந்தோஷத்தைப் பெறக்கூடும். அவர்கள் தமது அனுபவங்களில் வளர்வதற்கு தங்களுக்குள் ஓர் இலகுவான வழிமுறையைக் கண்டுபிடிக்கட்டும். நீங்கள் ஒவ்வொருவருக்கும் ஏதாவதொன்றைக் கொடுக்க வேண்டும். நீங்கள் எடுக்க வேண்டியதில்லை. ஆனால் கொடுக்க வேண்டும். இவ்வாறு கொடுப்பதில் பெறுதல் அடங்கியுள்ளது. எவ்வாறாயினும், ஆத்மாவான நான், மாஸ்ரர் அருள்பவர் ஆகவேண்டும். இந்த முறையில், உங்களின் சுபாவத்திலும் சம்ஸ்காரங்களிலும் தந்தையை ஒத்தவர் ஆகுவதில் புதுமையை ஏற்படுத்த வேண்டும். எனது சுபாவம் என்ற உணர்வு இருக்கக்கூடாது. தந்தையின் சுபாவம் எத்தகையதோ, அதுவே எனது சுபாவம் ஆகும். பிரம்மாவின் சம்ஸ்காரங்களே பிராமணர்களின் சம்ஸ்காரங்கள் ஆகும். இந்த முறையில், ஒவ்வொரு நாளும் உங்களுக்குள் புதுமையை ஏற்படுத்துங்கள். அப்போது புதிய உலகம் இயல்பாகவே ஸ்தாபிக்கப்படும். எனவே, நீங்கள் புது வருடத்தில் என்ன செய்ய வேண்டும் என்பதைப் புரிந்து கொண்டீர்களா? கடந்த வருடம் இடம்பெற்ற நிறைவுக் கொண்டாட்டத்தைக் கொண்டாடுங்கள். அத்துடன் தற்போதைய சமநிலையையும் பாபாவுடன் நெருக்கத்தையும் கொண்டாடுங்கள். அத்துடன் உங்களின் எதிர்கால சதா வெற்றியையும் கொண்டாடுங்கள். பண்டிகைக்கான வருடத்தைக் கொண்டாடி, பறந்து கொண்டே இருங்கள்.

இரட்டை வெளிநாட்டவர்களான நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க விரும்புகிறீர்கள்தானே? மகிழ்ச்சியாக இருப்பதற்கு இரண்டு வார்த்தைகளை நினைவில் வைத்திருங்கள். முதலில், புள்ளி(டொட்), இரண்டாவதாக இல்லை (நொட்). எதற்கு இல்லை எனக் கூறுவதில்லை என்பதை நீங்கள் அறிவீர்கள்: மாயையை அனுமதிக்கக்கூடாது. எவ்வாறு இல்லை எனக் கூறுவது என உங்களுக்குத் தெரியுமா? அல்லது, அவளைச் சிறிதளவு அனுமதிப்பீர்களா? ஒரு புள்ளி வையுங்கள். அது இல்லை என்று ஆகிவிடும். உங்களுக்கு இரட்டைப் போதை உள்ளதல்லவா?

பாரதவாசிகள் என்ன செய்வீர்கள்? பாரதம் மகத்தான தேசம். இதுவே தற்காலத்தில் உள்ள சுலோகனாகும். பாரதத்தின் மகான் ஆத்மாக்கள் மகாத்மாக்கள் என நினைவு செய்யப்படுகிறார்கள். எனவே, பாரதம் மகத்தானது என்பதனால், பாரத மக்களும் மகாத்மாக்களே. எல்லா வேளையும் உங்களின் மகத்துவத்தின் ஊடாக, நீங்கள் பௌதீக ரூபத்தில் பாரதத்தை மகாத்மாக்களின் இடமாக, தேவாத்மாக்களின் இடமாக மாற்றுகிறீர்கள். சித்திரங்கள் முடிந்துவிடும். தேவாத்மாக்கள் வாழும் இடம் எல்லோருக்கும் வெளிப்படுத்தப்படும், இல்லையா? எனவே, நீங்கள் இரட்டை வெளிநாட்டவர்களோ, பாரதவாசிகளோ கிடையாது. ஆனால் இருவரும் இப்போது மதுவனவாசிகளே. அச்சா.

மாஸ்ரர் அருள்பவர்களாக எங்கும் உள்ள ஆத்மாக்களுக்கும், தந்தையிடமிருந்து சதா வாழ்த்துக்களைப் பெறுகின்ற விசேடமான ஆத்மாக்களுக்கும், சதா மகிழ்ச்சியுடன் இருக்கும் பாக்கியசாலி ஆத்மாக்களுக்கும், தமக்குள் சதா புதுமையை ஏற்படுத்தும் மகாத்மாக்களுக்கும், தேவதைகள் ஆகி அதனால் தேவாத்மாக்கள் ஆகுகின்ற அதிமேன்மையான ஆத்மாக்களுக்கும், ஒவ்வொரு கணமும் பாப்தாதாவின் அன்பும் நினைவும் வாழ்த்துக்களும் நமஸ்காரங்களும் உரித்தாகட்டும்.

பாப்தாதா குழுக்களைச் சந்திக்கிறார்:

1) நீங்கள் உங்களை ஆட்ட, அசைக்க முடியாத ஆத்மாக்களாக அனுபவம் செய்கிறீர்களா? ஒருபுறம், குழப்பம் நிலவுகிறது. மறுபுறம், சதா அசைக்க முடியாத பிராமண ஆத்மாக்களான நீங்கள் இருக்கிறீர்கள். அங்கு எந்தளவிற்கு அதிகமாகக் குழப்பம் இடம்பெறுகிறதோ, அந்தளவிற்கு அகத்தே உங்களின் ஆட்ட, அசைக்க முடியாத ஸ்திதி அதிகரிப்பதை நீங்கள் அனுபவம் செய்வீர்கள். என்னதான் நிகழ்ந்தாலும், எல்;லாவற்றிலும் பயன்படுத்தக்கூடிய இலகுவான வழிமுறையானது, எதுவும் புதியதல்ல! என்பதாகும். எதுவும் புதியதல்ல. நீங்கள் எப்போதாவது ஆச்சரியப்படுகிறீர்களா: என்ன நடக்கிறது? அல்லது, என்ன நடக்கும்? ஏதாவது புதியதாக இருக்கும்போதே ஆச்சரியம் ஏற்படும். நீங்கள் எதைப்பற்றியாவது சிந்திக்காமல் இருக்கும்போது, அதைப் பற்றி அறியாமலே இருக்கும்போது, அதைப் பற்றிப் புரிந்து கொள்ளாமல் இருக்கும்போது, அது சடுதியாக நிகழுமாக இருந்தால், நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். எனவே, எந்தவிதமான வியப்புக்குறியும் இருக்கக்கூடாது. ஆனால் முற்றுப்புள்ளி வையுங்கள். இந்த உலகமே குழப்பமானதாக (முன்ஜ்) உள்ளது. ஆனால் நீங்கள் மகிழ்ச்சியாக (மோஜ்) இருப்பவர்கள். அற்ப விடயங்களுக்கும் நாம் என்ன செய்வது? எவ்வாறு நாம் இதைச் செய்வது? என உலகம் சிந்திக்கிறது. ஆனால் நீங்களோ எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கிறீர்கள். உங்களின் குழப்பம் முடிவடைந்துவிட்டது. பிராமணர்கள் என்றால் மகிழ்ச்சி என்று அர்த்தம். ஆனால் ஷத்திரியர்கள் என்றால் குழப்பம் என்று அர்த்தம். அவர்களுக்குச் சிலவேளைகளில் மகிழ்ச்சியும் சிலவேளைகளில் குழப்பமும் காணப்படும். உங்களின் பெயர் பிரம்மாகுமார்கள், பிரம்மாகுமாரிகள் என நீங்கள் எல்லோரும் கூறுகிறீர்கள். நீங்கள் ஷத்திரிய குமார்கள், ஷத்திரிய குமாரிகள் இல்லையல்லவா? நீங்கள் சதா உங்களின் பாக்கியத்தின் சந்தோஷத்தில் இருக்கிறீர்கள். உங்களின் இதயங்களில் எப்போதும், இயல்பாகவும் ஒரேயொரு பாடலே இசைக்கின்றது: ஆஹா பாபா! ஆஹா எனது பாக்கியமே! இந்தப் பாடல் இயல்பாகவே ஒலிக்கிறது. நீங்கள் அதை இசைக்க வேண்டியதில்லை. அது அநாதியாகவே இசைக்கும். துயரக் குரல்கள் எல்லாம் முடிந்து விட்டன. நீங்கள் இப்போது ஆஹா! ஆஹா! எனக் கூறுகிறீர்கள். பெரும்பாலானோர் துயரத்தில் அழுகிறார்கள். ஆனால் மிகச்சிலரே ஆஹா! ஆஹா! எனக் கூறுகிறார்கள். எனவே, புது வருடத்தில் நீங்கள் எதை நினைவு செய்கிறீர்கள்? ஆஹா! ஆஹா! உங்களின் முன்னால் நீங்கள் எதைப் பார்த்தாலும், எதைக் கேட்டாலும், எதை நீங்கள் கூறினாலும், அனைத்தும் ஆஹா! ஆஹா! என்றிருக்க வேண்டும். ஐயோ, ஐயோ (துயரக்குரல்) என்றிருக்கக்கூடாது. ஓ! இப்போது என்ன நடந்தது? என்றிருக்கக்கூடாது. அதற்குப் பதிலாக, ஆஹா! என்ன நிகழ்ந்ததோ, அது மிகவும் நல்லது என்றிருக்க வேண்டும். யாராவது தீங்கு செய்தாலும், உங்களின் சக்தியால் அந்தத் தீங்கை நல்லதாக மாற்றுங்கள். இதுவே மாற்றம், இல்லையா? உங்களின் பிராமண வாழ்க்கையில் தீங்கு என்று எதுவும் இருக்க முடியாது. யாராவது உங்களை இகழ்ந்தாலும், அவ்வாறு உங்களை இகழ்பவரின் மகத்துவம் என்னவென்றால், அவர் உங்களுக்கு சகித்துக் கொள்ளும் பாடத்தைக் கற்பிக்கிறார். அது அவரின் மகத்துவம், ஏனென்றால் அவர் உங்களுக்கு மாஸ்ரர் ஆகியுள்ளார்! குறைந்தபட்சம் உங்களுக்குள் எவ்வளவு சகிப்புத்தன்மை இருக்கிறது என்பதை நீங்கள் அறிந்து கொண்டீர்கள். எனவே, அது தீமையா அல்லது நன்மையா? பிராமணர்களின் பார்வையில் தீங்கான எதுவும் இருக்க முடியாது. பிராமணர்களின் காதுகளில் தீங்கான எதுவும் கேட்காது. இதனாலேயே, பிராமண வாழ்க்கை என்பது மகிழ்ச்சியான வாழ்க்கையாகும். ஒரு கணம் தீங்கானதொன்றும், அடுத்த கணம் நல்லதொன்றும் நிகழுமாக இருந்தால், அங்கு மகிழ்ச்சி இருக்க முடியாது. உங்களுக்கு சதா மகிழ்ச்சி உள்ளது. மகிழ்ச்சியைத் தவிர வேறு எதுவும் இல்லை. முழுக்கல்பத்திலும், பிரம்மாகுமார்களும் பிரம்மாகுமாரிகளுமே மேன்மையானவர்கள். பிராமணர்களுடன் ஒப்பிடும்போது, தேவாத்மாக்களும் எதுவுமேயில்லை. எப்போதும் இந்தப் போதையைப் பேணுங்கள். சதா சந்தோஷமாக இருங்கள். மற்றவர்களையும் சதா சந்தோஷமாக வைத்திருங்கள். சந்தோஷமாக இருந்து, மற்றவர்களையும் சந்தோஷமாக வைத்திருங்கள். நான் சந்தோஷமாகத் தான் இருக்கிறேன் எனக் கூறாதீர்கள். இல்லை. நான் எல்லோரையும் சந்தோஷமாகவும் வைத்திருக்கிறேன் என்பதாகவும் இருக்க வேண்டும். நான் எப்படியோ சந்தோஷமாகவே இருக்கிறேன் என்பது சுயநலம். பிராமணர்களின் சேவை என்ன? நீங்கள் சந்தோஷத்திற்காக ஞானத்தைக் கொடுக்கிறீர்கள்.

2) உலகிலுள்ள மேன்மையான ஆத்மாக்கள் எவ்வளவுதான் நினைவு செய்யப்பட்டாலும், நீங்கள் அவர்களைவிட அதிமேன்மையானவர்கள். தந்தை இப்போது உங்களுக்குச் சொந்தமானவர். எனவே, நீங்கள் மிகமேன்மையானவர்கள் ஆகியுள்ளீர்கள்! நீங்கள் அதிமேன்மையானவர்கள் ஆகியுள்ளீர்கள். அதிமேலான தந்தை உங்களை எல்லோரிலும் அதிமேன்மையான ஆத்மாக்கள் ஆக்கியுள்ளார் என்பதை உங்களின் விழிப்புணர்வில் எப்போதும் வைத்திருங்கள். உங்களின் பார்வை அதிமேன்மையானது ஆகியுள்ளது. உங்களின் மனோபாவமும் அதிமேன்மையானது ஆகியுள்ளது. அனைத்தும் மாறிவிட்டன. இப்போது, நீங்கள் யாரையாவது பார்க்கும்போது, நீங்கள் அவர்களை ஆத்ம உணர்வுப் பார்வையுடன் பார்க்கிறீர்கள். எல்லோருக்கும் உங்களின் மனோபாவமும் நன்மை செய்வதாக ஆகியுள்ளது. பிராமண வாழ்க்கை என்றால் ஒவ்வோர் ஆத்மாவின்மீதும் உங்களின் பார்வையும் மனோபாவமும் மேன்மையானவை ஆகியுள்ளன.

3) நீங்கள் உங்களை வெற்றி நட்சத்திரங்களாக அனுபவம் செய்கிறீர்களா? எங்கு சகல சக்திகளும் உள்ளனவோ, அங்கு வெற்றி உங்களின் பிறப்புரிமை ஆகும். நீங்கள் எத்தகைய பணியைச் செய்தாலும், அது உங்களின் சரீர வாழ்வாதாரத்திற்கோ அல்லது இறை சேவைக்காகவோ இருந்தாலும், அந்தப் பணியைச் செய்யத் தொடங்க முன்னர், இந்த நம்பிக்கையை வைத்திருங்கள். நம்பிக்கை வைத்திருப்பது நல்லதே. ஆனால், இந்த நடைமுறை அனுபவத்தைக் கொண்டதோர் ஆத்மாவாகி, உங்களின் நம்பிக்கையையும் போதையையும் பேணுங்கள். இந்தப் பிராமண வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கான இலகுவான வழிமுறை சகல சக்திகளும் ஆகும். நீங்களே சகல சக்திகளின் அதிபதிகள் ஆவீர்கள். ஆகவே, எந்தவொரு வேளையிலும் நீங்கள் என்ன சக்திக்குக் கட்டளை இடுகிறீர்களோ, அது உங்களின் முன்னால் பிரசன்னமாகும். சில சேவையாளர்கள் நீங்கள் கட்டளை இடும்போதெல்லாம் சேவைக்குத் தயாராக இருப்பார்கள். அதேபோல், சகல சக்திகளும் உங்களின் கட்டளைகளின்படி செயல்பட வேண்டும். நீங்கள் எந்தளவிற்கு அதிகமாக மாஸ்ரர் சர்வசக்திவான் என்ற ஆசனத்தில் அமர்ந்திருக்கிறீர்களோ, அந்தளவிற்குச் சகல சக்திகளும் உங்களின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படியும். நீங்கள் சிறிதளவேனும் இந்த விழிப்புணர்வெனும் ஆசனத்தில் இருந்து கீழே இறங்கினால், சக்திகளும் உங்களின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படியாது. பணியாட்களிலும் சிலர் கீழ்ப்படிவானவர்கள். ஆனால் ஏனையோர் உங்களுக்குச் சிறிதளவு பிரச்சனை கொடுப்பார்கள். எனவே, உங்களின் சக்திகள் அனைத்தும் உங்களின் முன்னால் எவ்வாறு செயல்படுகின்றன? அவை கீழ்ப்படிவாக உள்ளனவா? அல்லது, அவை சிறிதளவு பிந்தியே வருகின்றனவா? உங்களின் பௌதீக அங்கங்கள் நீங்கள் எதையாவது செய்யச் சொன்னதும் உங்களின் கட்டளைகளுக்கேற்ப செய்வதைப் போல், இந்தச் சூட்சுமமான சக்திகளும் உங்களின் கட்டளைகளுக்கேற்ப செயல்பட வேண்டும். சோதித்துப் பாருங்கள்: நாள் முழுவதும், இந்தச் சக்திகள் அனைத்தும் எனது கட்டளைகளுக்கேற்ப செயற்படுகின்றனவா? இப்பொழுதில் இருந்தே இந்தச் சக்திகள் உங்களின் கட்டளைகளின்படி செயல்பட்டால் மட்டுமே, உங்களால் இறுதியில் வெற்றி அடைய முடியும். இதற்கு நீண்ட காலத்திற்கான இந்தப் பயிற்சி தேவைப்படுகிறது. எனவே, இந்தப் புது வருடத்தில், எல்லாவற்றையும் உங்களின் கட்டளைகளின்படி செயல்பட வைக்கும் விசேடமான பயிற்சியைச் செய்யுங்கள். ஏனென்றால், நீங்கள் உலக இராச்சியத்தை அடைய விரும்புகிறீர்கள்தானே? ஓர் உலக இராச்சிய அதிகாரி ஆகுவதற்கு முன்னர், சுய இராச்சிய அதிகாரி ஆகுங்கள்.

நம்பிக்கையும் போதையும் ஒவ்வொரு குழந்தைக்கும் பறக்கும் ஸ்திதிக்கான அனுபவத்தைக் கொடுக்கின்றன. இரட்டை வெளிநாட்டவர்களான நீங்கள் அதிர்ஷ்டசாலிகள். ஏனென்றால் நீங்கள் பறக்கும் ஸ்திதிக்கான நேரத்தில் வந்துள்ளீர்கள். நீங்கள் உயரே ஏறுவதற்குச் சிரமப்பட வேண்டியதில்லை. வெற்றித் திலகம் உங்களின் நெற்றிகளில் சதா பிரகாசிக்கின்றன. இந்த வெற்றித் திலகங்கள் மற்றவர்கள் சந்தோஷத்தைப் பெறச் செய்யும். ஏனென்றால், வெற்றியாளர் ஆத்மாவின் முகம் எப்போதும் மலர்ச்சி நிறைந்ததாக இருக்கும். உங்களின் மலர்ச்சி நிறைந்த முகங்களைப் பார்க்கும்போது, எல்லோரும் அந்த சந்தோஷத்தால் கவரப்படுகிறார்கள். ஏனென்றால், உலகிலுள்ள ஆத்மாக்கள் சந்தோஷத்தைத் தேடுகிறார்கள். ஆகவே, உங்களின் முகங்களில் சந்தோஷப் பிரகாசத்தை அவர்கள் பார்க்கும்போது, அவர்களும் சந்தோஷம் அடைகிறார்கள். நீங்கள் ஏதோவொரு பேற்றினைப் பெற்றுள்ளீர்கள் என அவர்கள் உணர்ந்து கொள்கிறார்கள். நீங்கள் மேற்கொண்டு முன்னேறும்போது, சந்தோஷக் கவர்ச்சியுள்ள உங்களின் முகங்கள் அந்த ஆத்மாக்களுக்கு ஒரு விநாடியில் சேவை செய்யும். நீங்கள் எல்லோரும் அந்த அன்பையும் சந்தோஷத்தையும் கண்டபோதே பிராமணர்கள் ஆகினீர்கள், அப்படித்தானே? எனவே, இந்தத் தபஸ்யா வருடத்தில் நீங்கள் இந்த வகையான சேவையைச் செய்ய வேண்டும்.

4) நீங்கள் வேறு எவரும் இன்றி ஒரேயொரு தந்தைக்குச் சொந்தமாக இருக்கும் ஸ்திதியில் சதா ஸ்திரமாக இருக்கும் ஒத்துழைக்கும் ஆத்மாக்களா? ஒரேயொருவரை நினைவு செய்வது இலகுவானது. ஆனால் பலரை நினைவு செய்வது கஷ்டமானது. பலவற்றின் விரிவாக்கத்தைக் கைவிட்டு, ஒரேயொரு தந்தையான சாரத்தின் ரூபத்திற்குச் சொந்தமான அனுபவத்தில் தங்கியிருப்பதில் அதிகளவு சந்தோஷம் உள்ளது. சந்தோஷம் உங்களின் பிறப்புரிமை. அது தந்தையின் பொக்கிஷமாகும். எனவே, தந்தையின் பொக்கிஷங்கள் குழந்தைகளின் பிறப்புரிமையாகும். ஒரு பொக்கிஷம் உங்களுக்குச் சொந்தமாக இருக்கும்போது, அது உங்களுடையது என்ற பெருமை உங்களுக்கிருக்கும். எனவே, நீங்கள் அதை யாரிடமிருந்து பெற்றுள்ளீர்கள்? அழியாத தந்தையிடமிருந்து. எனவே, அழியாத தந்தை கொடுக்கும் எதுவாயினும் அழியாததாகவே இருக்கும். அழியாத பொக்கிஷங்களின் போதையும் அழியாதது. யாராலும் இந்த போதையை உங்களிடமிருந்து எடுக்க முடியாது. அது தீங்கு விளைவிக்கும் போதையும் இல்லை. அது உங்களுக்குப் பேறுகளை ஏற்படுத்தும் போதையாகும். மற்றைய போதையானது உங்களின் பேறுகளை நீங்கள் இழக்கச் செய்யும் போதையாகும். எனவே, நீங்கள் சதா யாரை நினைக்கிறீர்கள்? ஒரேயொரு தந்தை. வேறெவரும் கிடையாது. இரண்டாவது அல்லது மூன்;றாவது நபர் யாராவது இருந்தால், முரண்பாடுகள் ஏற்படும். ஆனால் ஒரேயொரு தந்தை மட்டுமே இருக்கும்போது, உங்களிடம் நிலையான ஸ்திதி காணப்படும். ஒரேயொருவரின் அன்பிலே அமிழ்ந்திருப்பது மிகவும் நன்றாக இருக்கும். ஏனென்றால், ஆத்மாக்களின் ஆதிரூபம், நிலையாக இருப்பதாகும்.

விடைபெறும் வேளையில் புது வருடத்தின் புண்ணிய ஆரம்பத்திற்கான வாழ்த்துக்கள்.

எங்கும் உள்ள அழகான, அதிர்ஷ்டமான குழந்தைகள் எல்லோருக்கும் விசேடமான புதிய ஊக்கத்திற்கும் பதிய உற்சாகத்திற்கும் ஒவ்வொரு கணத்திற்கும் வாழ்த்துக்கள். நீங்களும் வைரங்கள். உங்களின் வாழ்க்கைகளும் வைரங்கள். எனவே, எப்போதும் வைர காலை, வைர மாலை, வைர இரவு என்றிருக்கட்டும். இந்த வழிமுறையால், நீங்கள் மிக விரைவாக உங்களின் சொந்த இராச்சியத்தை ஸ்தாபித்து அங்கே ஆட்சி செய்வீர்கள். நீங்கள் உங்களின் சொந்த இராச்சியத்தை விரும்புவீர்கள்தானே? எனவே, இப்போது அதை விரைவாக ஏற்படுத்தி, அங்கே ஆட்சி செய்யுங்கள். உங்களின் முன்னால் உங்களின் சொந்த இராச்சியத்தை நீங்கள் பார்க்கின்றீர்கள்தானே? எனவே, இப்போது தேவதைகளாகி, அத்துடன் தேவர்கள் ஆகுங்கள். எங்கும் உள்ள குழந்தைகள் எல்லோருக்கும், விசேடமாகப் பலமில்லியன் மடங்கு அன்பையும் நினைவுகளையும் ஏற்றுக் கொள்ளுங்கள். வெளிநாட்டில் இருப்பவர்களும் இந்தத் தேசத்தைச் சேர்ந்தவர்களும் தபஸ்யாவிற்காக மிக நல்ல ஊக்கத்தையும் உற்சாகத்தையும் கொண்டிருக்கிறார்கள். எங்கு தபஸ்யா உள்ளதோ, அங்கு இயல்பாகவே சேவை இடம்பெறும். சதா வெற்றிக்காக வாழ்த்துக்கள். நீங்கள் ஒவ்வொருவரும், இந்த முழு உலகமும் உங்களைப் பார்க்கும் வகையில் புதுமையைச் செய்து காட்ட வேண்டும். புதுமையின் வெளிச்சவீடு ஆகுங்கள். அச்சா. நீங்கள் ஒவ்வொருவரும் உங்களுக்காக அன்பையும் நினைவையும் வாழ்த்துக்களையும் ஏற்றுக் கொள்ளுங்கள்.

ஆசீர்வாதம்:
நீங்கள் உங்களின் தூய எண்ணங்களாலும் மேன்மையான சகவாசத்தாலும் இலேசாக இருந்து, அலௌகீக தேவதையாக சந்தோஷ நடனம் ஆடுவீர்களாக.

பிராமணக் குழந்தைகளான உங்களுக்கு, ஒவ்வொரு நாளின் முரளியும் தூய எண்ணங்களேயாகும். நீங்கள் ஒவ்வொரு நாளும் காலையில் தந்தையிடமிருந்து பல தூய எண்ணங்களைப் பெறுகிறீர்கள். நீங்கள் இந்தத் தூய எண்ணங்களால் உங்களின் புத்தியை மும்முரமாக வைத்திருந்து, தந்தையின் சகவாசத்தில் சதா இருங்கள். நீங்கள் இலேசானவராகி, சதா சந்தோஷ நடனம் ஆடுவீர்கள். சந்தோஷமாக இருப்பதற்கான இலகுவான வழிமுறை, சதா இலேசாக இருப்பதாகும். தூய எண்ணங்கள் இலேசானவை. வீணான எண்ணங்கள் பாரமானவை. எனவே, சதா தூய எண்ணங்களால் உங்களை மும்முரமாக வைத்திருந்து, இலேசாக இருங்கள். அத்துடன் தொடர்ந்து சந்தோஷ நடனம் ஆடுங்கள். நீங்கள் அலௌகீக தேவதை என்று அழைக்கப்படுவீர்கள்.

சுலோகம்:
இறையன்பின் பராமரிப்பின் ரூபம், இலகு யோகி வாழ்க்கையாகும்.