08.06.22        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்: இனிய குழந்தைகளே, பாவச் செயல்களைச் செய்வதிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்கு, சரீரமற்றவராக இருப்பதை மீண்டும் மீண்டும் பயிற்சி செய்யுங்கள். இந்தப் பயிற்சியானது உங்களை மாயையை வெல்பவர்கள் ஆக்குவதுடன்;, உங்கள் யோகம் சதா இணைக்கப்பட்டிருப்பதற்கும் உதவுகிறது.

கேள்வி:
உங்கள் யோகம் துண்டிக்கப்படாமல் இருப்பதற்கு நம்பிக்கையின் எந்த விடயம் மிகவும் உறுதியாக இருக்க வேண்டும்?

பதில்:
சத்திய, திரேதா யுகங்களில், நாங்கள் தூய்மையாக இருந்தோம். துவாபர, கலியுகங்களில் நாங்கள் தூய்மையற்றவர்கள் ஆகினோம். இப்பொழுது நாங்கள் மீண்டும் ஒருமுறை தூய்மையானவர்களாக வேண்டும். இந்த நம்பிக்கை உறுதியாகினால், உங்கள் யோகம் துண்டிக்கப்பட மாட்டாது. மாயை உங்களைத் தோற்கடிக்க மாட்டாள்.

பாடல்:
அன்பிற்கினியவருடன் இருப்பவர்கள் மீதே ஞான மழை பொழிகின்றது.

ஓம் சாந்தி.
இனிமையிலும் இனிமையான குழந்தைகளாகிய நீங்கள் இந்தப் பாடலின் அர்த்தத்தைப் புரிந்துகொண்டீர்கள். இது பௌதீக மழைக்கான கேள்வியல்ல: அது கடலுக்கும், நதிகளுக்கும் பொருந்துகின்றது, ஆனால் இது ஞானக் கடலாகும். அவர் வந்து ஞானமழையைப் பொழியும்பொழுதே, அறியாமை இருள் அகல்கிறது. யாரால் இதனைப் புரிந்துகொள்ள முடியும்? தங்களைப் பிரஜாபிதா பிரம்மாகுமார்களும், குமாரிகளும் எனக் கருதுபவர்களால் ஆகும். சிவனே உங்கள் தந்தை, அவரே பிரம்மாகுமார்கள், குமாரிகள் அனைவரினதும் பாட்டனாரும், அவரே அசரீரியானவரும் எனக் குழந்தைகளாகிய நீங்கள் புரிந்துகொள்கின்றீர்கள். நீங்கள் பிரஜாபிதா பிரம்மாகுமார்களும், குமாரிகளும் என்ற நம்பிக்கை உங்களுக்கு இருப்பதால், நீங்கள் இதனை மறக்கக்கூடாது. நீங்கள் மாத்திரமன்றி, குழந்தைகள் அனைவருமே அன்பிற்கினியவருடன் இருக்கின்றார்கள், அவர்கள் அனைவரும் முரளியைச் செவிமடுக்கின்றார்கள். ஞான மழை குழந்தைகளுக்காக மாத்திரமே பொழியப்படுகின்றது; இந்த ஞானத்தினாலேயே காரிருள் அகற்றப்படுகின்றது. நீங்கள் காரிருளில் இருந்தீர்கள், இப்பொழுது ஒளியைப் பெற்றுள்ளீர்கள் என்பதைப் புரிந்துகொள்கின்றீர்கள். நீங்கள் அனைத்தையும் அறிந்து கொள்கின்றீர்கள். பரமாத்மாவாகிய பரமதந்தையின் சரிதையையும் நீங்கள் அறிவீர்கள். சிவபாபாவின் சரிதையை அறியாதவர்கள், உங்கள் கரங்களை உயர்த்துங்கள்! இப்பிறவியை மாத்திரமன்றி, கடவுளின் வாழ்க்கை வரலாற்றையும் அனைவரும் அறிவார்கள்;. சிவபாபாவின் சரிதையில் எத்தனை பிறவிகள் இருக்கின்றன என்பதை நீங்கள் அறிவீர்களா? இந்த நாடகத்தில் சிவபாபாவின் பாகம் என்ன என்பதை நீங்கள் அறிவீர்களா? நீங்கள் அவரையும், ஆரம்பம் முதல் மத்தியினூடாக இறுதி வரையான அவருடைய சரிதையையும் அறிவீர்கள். பக்தி மார்க்கத்தில் மக்கள் நம்பிக்கையுடன் செய்யும் பக்திக்கான பலனை நான் நிச்சயமாகக் கொடுக்கவேண்டும். அந்த உருவங்கள் இப்பொழுது உயிருள்ள வடிவத்தில் இல்லை. நான் மாத்திரமே காட்சிகளை அருள்கின்றேன். அரைச் சக்கரமாகப் பக்தி தொடர்கிறது என்பதையும், பக்திக்கான உங்கள் விருப்பங்கள் இப்பொழுது முடிவடைந்துவிட்டன என்பதையும் நீங்கள் புரிந்துகொள்கின்றீர்கள். இப்பொழுது நீங்கள் குழந்தைகளாகி விட்டதால், நிச்சயமாக ஓர் ஆஸ்தியைப் பெறுவீர்கள். ஒர் (லௌகீக) தந்தை தனது குழந்தைகளுக்கு ஆஸ்தியைக் கொடுக்கின்றார்; இது ஒரு நியதியாகும். உங்கள் முகங்கள் இப்பொழுது சற்கதியை நோக்கித் திரும்பி உள்ளன. அசரீரி உலகையும், சூட்சும உலகையும், பௌதீக உலகையும், இந்த எல்லையற்ற நாடகத்தின் பிரதான நடிகர் யார் என்பதையும் நீங்கள் அறிவீர்கள். அவரே படைப்பவரும், இயக்குனரும், கரன்கரவன்காரும் ஆவார். அவர் வழிகாட்டல்களைக் கொடுப்பதுடன், கற்பிக்கின்றார். அவர் கூறுகின்றார்: நான் உங்களுக்கு இராஐயோகம் கற்பிப்பதற்கு வந்துள்ளேன். இது ஒரு செயலாகும், அத்துடன் நான் மற்றவர்கள் செயற்படவும் தூண்டுகிறேன். அரைக் கல்பமாக நீங்கள் மாயையின் செல்வாக்கில் பிழையான செயல்களையே புரிந்தீர்கள். இது வெற்றி, தோல்வி பற்றிய ஒரு விளையாட்டாகும். மாயை உங்களைப் பிழையான செயல்களைச் செய்யவைக்கின்றாள். உங்களைப் பிழையான செயல்களைச் செய்ய வைக்கும் எவரையேனும் எவ்வாறு கடவுள் என அழைக்க முடியும்? கடவுள் கூறுகின்றார்: நான் மாத்திரமே எவ்வாறு உண்மையான செயல்களைச் செய்வது என அனைவருக்கும் கற்பிப்பவர். இப்பொழுது இது அனைவருக்கும் கணக்குத் தீர்க்கும் காலமாகும். அனைவரும் புதைகுழியில் இருந்து விழித்தெழுமாறு செய்யப்பட வேண்டும். அனைவரும் இடுகாட்டில் புதைக்கப்பட்டுள்ளனர். தந்தை வந்து, அனைவரையும் விழித்தெழச் செய்கின்றார். மரணம் முன்னால் உள்ளது. பிரம்மாவின் சரீரத்தின் மூலம் சிவபாபா எங்களுக்கு அனைத்து விடயங்களையும் விளங்கப்படுத்துகின்றார். சிவபாபா உட்பட, அனைவரது சரிதையையும் இப்பொழுது அறிந்துள்ளதால், நீங்;கள் மேன்மையானவர்கள். எதனையும் அறியாதவர்கள் சமயநூல்களை வாசிப்பவர்களுக்கு முன்னால் சென்று தலை வணங்குகிறார்கள். நீங்கள் தலை வணங்கக்கூடாது. இது மிகவும் இலகுவான ஒரு விடயமாகும். நீங்கள் அமைதி தாமமாகிய, அசரீரி உலகவாசிகளாகி, பின்னர் சந்தோஷ தாமத்திற்குச் செல்வீர்கள் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் புரிந்துகொள்கின்றீர்கள். நீங்கள் இப்பொழுது பிரஜைபிதா பிரம்மாகுமாரர்களும் குமாரிகளும் ஆவீர்கள். நீங்கள் சிவபாபாவின் பேரக் குழந்தைகள். சிவபாபாவை நினைவுசெய்வதன் மூலம், நீங்கள் சந்தோஷ ஆஸ்தியைப் பெறுவீர்கள். நாங்கள் தூய்மையாக இருந்தோம், நாங்கள் தூய்மையற்றவர்கள் ஆகினோம், நாங்கள் மீண்டும் ஒருமுறை தூய்மையாக வேண்டும்; என்ற இந்த நம்பிக்கையைக் குழந்தைகளாகிய நீங்கள் கொண்டிருக்கிறீர்கள். இந்த நம்பிக்கை இல்லையாயின், உங்களால் யோகம் செய்ய இயலாதிருப்பதுடன், ஒரு நல்ல அந்தஸ்தையும் பெற மாட்டீர்கள். ஒரு தூய வாழ்க்கை நல்லது. குமாரிகளுக்குப் பெருமளவு மரியாதை உள்ளது, ஏனெனில் இந்நேரத்தில் குமாரிகளாகிய நீங்கள் பெருமளவு சேவை செய்கின்றீர்கள். நீங்கள் தூய்மையாக இருக்கின்றீர்கள்; இந்நேரத்தின் தூய்மையே பக்தி மார்க்கத்தில் பூஜிக்கப்படுகின்றது. இந்த உலகம் மிகவும் அழுக்கானது. கீசகனின் (மகாபாரதத்தில் ஒரு வில்லன்) கதையும் உள்ளது. மிகவும் தீய எண்ணங்களுடன் வருபவர்களே கீசகன்; என அழைக்கப்படுகிறார்கள். இதனாலேயே பாபா கூறுகின்றார்: மிகவும் அவதானமாக இருங்கள்! இது முட்கள் நிறைந்த, மிகவும் தீய உலகமாகும். நாங்கள் அமைதி தாமத்திற்குச் சென்று, பின்னர் சந்தோஷ தாமத்திற்குச் செல்வோம்; எனும் பெரும் சந்தோஷத்தை நீங்கள் கொண்டிருக்க வேண்டும். நாங்கள் சந்தோஷ தாமத்தின் அதிபதிகளாக இருந்தோம், பின்னர் நாங்கள் சக்கரத்தைச் சுற்றி வந்தோம். நீங்கள் இந்த நம்பிக்கையைக் கொண்டிருக்க வேண்டும். நீங்கள் சரீரமற்றவர்களாகும் பழக்கத்தை உங்களில் பதித்துக்கொள்ள வேண்டும். இல்லாவிடில் மாயை உங்களை உண்டுவிடுவாள், உங்கள் யோகமும் துண்டிக்கப்படும், உங்கள் பாவங்களும் அழிக்கப்பட மாட்டாது. நினைவில் இருப்பதற்கு நீங்கள் அதிக முயற்சி செய்யவேண்டும். பாபாவை நினைவு செய்வதன் மூலமே நீங்கள் சதா ஆரோக்கியமானவர்களாக முடியும். இயலுமானவரை சரீரமற்றவர்களாகித் தந்தையை நினைவுசெய்யுங்கள். ஆத்மாக்களாகிய எங்களின் தந்தையான, பரமாத்மா, பரமதந்தையே எங்களுக்குக் கற்பிக்கின்றார். அவர் கல்பம் கல்பமாக எங்களுக்குக் கற்பிப்பதுடன், எங்கள் இராச்சிய பாக்கியத்தையும் எங்களுக்குக் கொடுக்கின்றார். நீங்கள் யோக சக்தியின் மூலம் உங்கள் இராச்சியத்தை ஸ்தாபிக்கின்றீர்கள். ஓர் அரசன் ஓர் இராச்சியத்தை ஆட்சிசெய்கின்றார். அவருடைய சேனை அவருடைய இராச்சியத்துக்காக யுத்தம் செய்கின்றது. ஆனால் இங்கே நீங்கள் உங்களுக்காகவே முயற்சி செய்கின்றீர்கள், தந்தைக்காக அல்ல. பாபா கூறுகின்றார்: நான் இராச்சியத்தை ஆட்சிசெய்வதுகூட இல்லை. நான் உங்களுக்கு இராச்சியத்தைக் கோரும் வழியைக் காட்டுகின்றேன். நீங்கள் அனைவருமே உங்கள் ஓய்வு பெறும் வயதில் இருக்கின்றீர்கள். இது அனைவரினதும் மரணிக்கும் காலமாகும்; இதில் இளைஞர், வயோதிபர் என்ற கேள்விக்கே இடமில்லை. ஓர் இளம் குழந்தை தனது லௌகீகத் தந்தையிடமிருந்து ஓர் ஆஸ்தியைப் பெறுவார் என நினைக்க வேண்டாம். அவர்கள் ஆஸ்தியைக் கோரும்வரை இந்த உலகம் இருக்கப்போவதில்லை. மக்கள் காரிருளில் இருக்கின்றார்கள். அவர்களுக்குப் பெருமளவு பணத்தைச் சம்பாதிப்பதற்கான ஆசை உள்ளது, ஏனெனில் தங்கள் பேரக்குழந்தைகள் அவற்றை உபயோகிக்கமுடியும் என அவர்கள் நினைக்கின்றார்கள். எவ்வாறாயினும் அவர்கள் எவரினதும் அந்த ஆசை நிறைவேறப் போவதில்லை. அனைத்துமே மண்ணோடு மண்ணாகி விடும். இந்த உலகமுமே அழிக்கப்பட்டு விடும். ஒரு குண்டு வீசப்படுவதால், அனைத்தும் அழிக்கப்பட்டுவிடும். எவரையும் காப்பாற்ற எவருமே இருக்க மாட்டார்கள். தங்கச் சுரங்கங்கள் போன்றவை இப்பொழுது முழுமையாக வெறுமையாகிவிட்டன. அவை அனைத்தும் புதிய உலகில் மீண்டும் நிறைந்திருக்கும். புதிய உலகில் அனைத்துமே புதியதாக இருக்கும். நாடகச்சக்கரம் இப்பொழுது நிறைவு பெறுவதுடன், அது மீண்டும் ஒருமுறை ஆரம்பமாகும். இப்பொழுது ஞானோதயம் கிடைத்திருக்கின்றது. ஞான சூரியன் தோன்றும்பொழுது, அறியாமை இருள் அகல்கிறது எனவும் கூறப்படுகிறது. இது அந்தச் சூரியனைப் பற்றிய கேள்வியல்ல. மக்கள் சூரியனுக்குத் தண்ணீரைப் படைக்கின்றார்கள். சூரியனே முழு உலகிலும் தண்ணீரைப் பரவுமாறு செய்தாலும், அவர்கள்; சூரியனுக்கே தண்ணீரைப் படைக்கின்றார்கள். இது பக்தியின் அதிசயமாகும்! அவர்கள் பின்னர் கூறுகின்றார்கள்: சூரிய தேவருக்கு வந்தனங்கள், சந்திர தேவருக்கு வந்தனங்கள். அவை எவ்வாறு தேவர்களாக இருக்கமுடியும்;? இங்கு மக்கள் அசுரர்களிலிருந்து தேவர்களாக மாறுகின்றார்கள். அவற்றை தேவர்கள் என்றழைக்க முடியாது; அவை சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள் ஆகும். மக்கள் சூரியனின் உருவமுள்ள கொடியை ஏற்றுகின்றார்கள். ஜப்பானில், சூரிய வம்சத்தைப்பற்றி அவர்கள் பேசுகின்றார்கள், ஆனால் உண்மையில் அவர்களிடம் ஞானம் இல்லாவிடினும், அனைவரும் ஞான சூரியனின் வம்சத்திற்கு உரியவர்களே. ஞான சூரியனுக்கும், அந்தச் சூரியனுக்கும் இடையில் அத்தகைய வித்தியாசம் உள்ளது. அவர்கள் இங்கே விஞ்ஞானத்தின் கண்டுபிடிப்புக்களை உருவாக்குகின்றார்கள், ஆனால், அதனால் என்ன பலன் உள்ளது? எதுவுமே இல்லை! விநாசம் நிச்சயமாக இடம்பெறும். விஞ்ஞானத்தினால் தாங்;கள் தங்களையே அழிக்கின்றார்கள் என்பதை விவேகிகள் புரிந்துகொள்கின்றார்கள். அவர்களுடையது விஞ்ஞானமும், உங்களுடையது மௌனமுமாகும். அவர்கள் விஞ்ஞானத்தினால் விநாசத்தை ஏற்படுத்துகிறார்கள், நீங்கள் மௌனத்தின் மூலம் சுவர்க்கத்தை ஸ்தாபிக்கின்றீர்கள். இது நரகமாகும், அனைவருடைய படகும் மூழ்கிவிட்டது. அந்தப் பக்கம் அந்தச் சேனைகள் இருக்கின்றன, இந்தப் பக்கம் யோக சக்தியுடைய சேனைகளாகிய நீங்கள் உள்ளீர்கள். நீங்கள் அவர்களை மீட்கிறீர்கள். உங்களுக்கு அத்தகைய பெரும் பொறுப்புள்ளது. எனவே நீங்கள் முழுமையான உதவியாளர்களாக வேண்டும். இந்தப் பழைய உலகம் அழியப் போகின்றது. நீங்கள் இப்பொழுது நாடகத்தைப் புரிந்துகொண்டுள்ளீர்கள். இது இப்பொழுது சங்கம காலமாகும். தந்தை எங்கள் படகுகளை அக்கரைக்குக் கொண்டுசெல்ல வந்துள்ளார். இராச்சியம் முழுமையாக ஸ்தாபிக்கப்பட்டதும், விநாசம் இடம்பெறும் என்பதை நீங்கள் புரிந்துகொள்கின்றீர்கள். எவ்வாறாயினும், இடையில் ஒத்திகைகள் இடம்பெறும். பல யுத்தங்கள் நடைபெறுகின்றன் இது ஓர் அசுத்த உலகமாகும். பாபா எங்களை அழகிய உலகிற்கு அனுப்புவார் என்பதை நீங்கள் புரிந்துகொள்கின்றீர்கள். நாங்கள் இந்தப் பழைய ஆடைகளைக் களைந்து, புதிய ஆடைகளை அணிய வேண்டும். தந்தை ஓர் உத்தரவாதத்தை அளிக்கின்றார்: கல்பம் கல்பமாக நான் உங்கள் அனைவரையும் மீண்டும் வீட்டுக்கு அழைத்துச் செல்கின்றேன். இதனாலேயே எனது பெயர் மகாகாலன் ஆகும். நான் கருணையுள்ளவரான, தூய்மையாக்குபவர் எனவும் அறியப்படுகின்றேன். ஸ்ரீமத்தைப் பின்பற்றுவதன் மூலம் நீங்கள் சுவர்க்கத்திற்குச் செல்ல முயற்சி செய்கிறீர்கள் என்பதைப் புரிந்துகொள்கின்றீர்கள். பாபா கூறுகின்றார்: நீங்கள் என்னை நினைவுசெய்தால், நான் உங்களைச் சுவர்க்கத்திற்கு அனுப்புவேன், அத்துடன் நீங்கள் உங்கள் ஜீவனோபாயத்திற்காகச் சம்பாதிக்கவும் வேண்டும். செயல்களைச் செய்யாமல் எவராலும் இருக்க முடியாது. செயல்களைத் துறந்து இருப்பதும் சாத்தியமில்லை. குளிப்பது போன்றவையும் செயல்களைச் செய்வதாகும். அனைவரும் இறுதியில் முழு ஞானத்தையும் பெறுவார்கள்: சிவபாபா தங்களுக்குக் கற்பிக்கின்றார் என அவர்கள் கூறுவது சரியானதே என்பதை அவர்கள்; புரிந்துகொள்வார்கள். அசரீரியான கடவுள் பேசுகின்றார். கடவுள் ஒரேயொருவரே. இதனாலேயே பாபா தொடர்ந்தும் கூறுகின்றார்: அசரீரியான சிவனுடன் அனைவருக்கும் உள்ள உறவுமுறை என்ன என்பதை அவர்களிடம் வினவுங்கள். அனைவரும் சகோதரர்கள் என்பதால், நிச்சயமாகச் சகோதரர்களுக்கு ஒரு தந்தை இருக்கவேண்டும்! இல்லாவிட்டால், அவர்கள் எங்கிருந்து வந்திருப்பார்கள்? மக்கள் பாடுகிறார்கள்: நீங்களே எங்கள் தாயும் தந்தையும். இது தந்தையின் புகழாகும். தந்தை கூறுகின்றார்: நானே உங்களுக்குக் கற்பிப்பவர், நீங்கள் பின்னர் உலகின் அதிபதிகளாகின்றீர்கள். இங்கு அமர்ந்திருக்கும் பொழுதும், நீங்கள் சிவபாபாவையே நினைவுசெய்ய வேண்டும். நீங்கள் சரீரத்தை மாத்திரமே அக்கண்களினால் காண்கிறீர்கள், ஆனால் உங்கள் புத்தியினால் சிவபாபாவே எங்களுக்குக் கற்பிப்பவர் என்பதைப் புரிந்துகொள்;கின்றீர்கள்.இந்த இராஜயோகமும், ஞானமழையும் தந்தையுடன் இருப்பவர்களுக்கே ஆகும். தூய்மையற்றவற்றைத் தூய்மையாக்குவதே தந்தையின் பணி ஆகும். அவரே ஞானக் கடல். நீங்கள் சிவபாபாவின் பேரக் குழந்தைகள் என்பதையும், பிரம்மாவின் குழந்தைகள் என்பதையும், சிவனே பிரம்மாவின் தந்தை என்பதையும் புரிந்துகொள்கின்றீர்கள். சிவபாபாவிடமிருந்தே ஆஸ்தி பெறப்படுகின்றது, அவரே நினைவுசெய்யப்பட வேண்டியவர். இப்பொழுது நீங்கள் விஷ்ணுவின் தாமத்திற்குச் செல்லப் போகின்றீர்கள். நீங்கள் உங்கள் நங்கூரங்களை இங்கிருந்து உயர்;த்துகின்றீர்கள். சூத்திரர்களின் படகுகள் இன்னும் அப்படியே நிற்கின்றன, ஆனால் உங்கள் படகுகளோ செல்கின்றன. நீங்கள் நேரடியாக வீடு திரும்பிச் செல்வீர்கள். நீங்கள் உங்களுடைய பழைய ஆடைகளை விட்டுச் செல்லவேண்டும். நாடகம் இப்பொழுது முழுமையாக முற்றுப்பெறப் போகின்றது, நீங்கள் உங்கள் ஆடைகளைக் களைந்து, வீடு திரும்ப வேண்டும். அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. பிழையான செயல்கள் எதனையும் செய்யாதீர்கள். மரணம் முன்னால் உள்ளது. இது தீரவுக் காலம் ஆதலால், அனைவரையும் கல்லறையிலிருந்து விழித்தெழச் செய்ய வேண்டும். தூய்மையாகி, அனைவரையும் தூய்மையாக்கும் சேவையைச் செய்யுங்கள்.

2. இந்த அசுத்த உலகில் எவ்விதமான ஆசைகளையும் கொண்டிருக்காதீர்கள். அனைவரினதும் மூழ்கியுள்ள படகை மீட்பதற்கு, தந்தையின் முழுமையான உதவியாளர்கள்; ஆகுங்கள்.

ஆசீர்வாதம்:
நீங்கள் யோகத்தின் மூலம் பரிசோதனை செய்வதால், உங்கள் பொக்கிஷங்கள் அனைத்தையும் அதிகரித்து, ஒரு வெற்றிகரமான தபஸ்வி ஆகுவீர்களாக.

தந்தையிடமிருந்து நீங்கள் பெற்றுள்ள பொக்கிஷங்கள் அனைத்தையும் பயன்படுத்தி, யோகத்தின் மூலம் பரிசோதனை செய்யுங்கள். உங்கள் பரிசோதனையானது பொக்கிஷங்களின் குறைந்தளவு செலவுடன், மகத்தான பேறைக் கொண்டிருப்பதாகும். உதாரணமாக, நேரமும், எண்ணங்களுமே மேன்மையான பொக்கிஷங்களாகும். ஆகவே, குறைந்தளவு எண்ணங்களைப் பயன்படுத்துங்கள், ஆனால் பெரும் பேறானது இருக்கட்டும். சாதாரண மக்கள் இரண்டு அல்லது நான்கு நிமிடங்கள் எதனையாவது பற்றிச் சிந்தித்த பின்னரே வெற்றியை அடைகின்றார்கள். ஆனால் நீங்களோ ஓரிரு விநாடிகளில் அந்தப் பணியை மேற்கொள்கின்றீர்கள். குறைந்த நேரத்தையும், வெகுசில எண்ணங்களையும் பயன்படுத்தி, பெரும் பேற்றை நீங்கள் அடையும்பொழுது, யோகத்தின் மூலம் பரிசோதனை செய்கின்ற, ஒரு வெற்றிகரமான தபஸ்வி என்று கூறப்படுவீர்கள்.

சுலோகம்:
உங்கள் விழிப்புணர்வில் உங்கள் ஆதியும் அநாதியுமான சம்ஸ்காரங்களை வைத்திருப்பதால், ஆட்ட, அசைக்க முடியாதவர்களாக இருப்பீர்கள்.

மாதேஷ்வரிஜியின் பெறுமதிமிக்க மேன்மையான வாசகங்கள்

எங்களை முட்களின் உலகிலிருந்து மலர்களின் நிழலிற்கு அழைத்துச் செல்லுங்கள். கடவுளையிட்டு மாத்திரமே இது பாடப்பட முடியும். மக்கள் மிகவும் சந்தோஷமற்றுள்ளபொழுது, கடவுளை நினைவுசெய்கின்றார்கள்: கடவுளே, எங்களை முட்களின் உலகிலிருந்து மலர்களின் நிழலிற்கு அழைத்துச் செல்லுங்கள்! நிச்சயமாக அத்தகைய ஓர் உலகம் இருக்கின்றது என்பதையே இது காட்டுகின்றது. இவ்வுலகம் இப்பொழுது முட்களால் நிறைந்துள்ளது என்பதை மனிதர்கள் அனைவரும் அறிவார்கள், இதன் காரணமாக மக்கள் சந்தோஷமின்மையையும், அமைதியின்மையையும் உணர்ந்து, மலர்களின் உலகை நினைவுசெய்கின்றார்கள். எனவே நிச்சயமாக அத்தகையதோர் உலகம் இருந்திருக்க வேண்டும், அதன் சம்ஸ்காரங்கள் ஆத்மாக்களில் உள்ளன. துன்பமும், அமைதியின்மையும் எங்கள் கர்ம பந்தனங்களின் கணக்குகளே என்பதை நாங்கள் அறிவோம். இவ்விதமாக அரசர்களிலிருந்து ஆண்டிவரை, மனிதர்கள் அனைவரும் கட்டுப்பட்டுள்ளார்கள், இதனாலேயே கடவுளே கூறுகின்றார்: இவ்வுலகமானது கலியுகம், அது கர்ம பந்தனங்கள் அனைத்தினாலும் உருவாக்கப்பட்டுள்ளது. எதிர்கால உலகமானது சத்திய யுகமாக இருந்தது, அது மலர்களின் உலகம் என்று அழைக்கப்பட்டது. அவ்வுலகம் கர்ம பந்தனத்திலிருந்து விடுபட்டதாகும், அது ஜீவன்முக்தியடைந்த தேவர்களின் இராச்சியமாக இருந்தது; அது இப்பொழுது இல்லை. நாங்கள் ஜீவன்முக்தி பற்றிப் பேசும்பொழுது, எங்கள் சரீரங்களிலிருந்து நாங்கள் விடுபட்டுள்ளோம் என்று அர்த்தமல்ல. தங்கள் சரீரங்களைப் பற்றிய விழிப்புணர்வு அவர்களுக்கு இருக்கவில்லை, ஆனால் தங்கள் சரீரங்களில் இருக்கும்பொழுது, அவர்களுக்குத் துன்பம் எதுவும் இருக்கவில்லை. அங்கே கர்ம பந்தனம் எதுவும் இருக்கவில்லை என்பதே அதற்கு அர்த்தமாகும். பிறவி எடுக்கும்பொழுதோ அல்லது தங்கள் சரீரங்களை விட்டு நீங்கும்பொழுதோ, ஆரம்பத்திலிருந்து மத்தியினூடாக இறுதிவரை அவர்கள் சந்தோஷத்தைக் கொண்டிருந்தார்கள். எனவே ஜீவன்முக்தி என்றால், உயிருடன் இருக்கும்பொழுதே, கர்மாதீதமாக இருப்பது என்று அர்த்தமாகும். தற்சமயத்தில், முழு உலகமும் ஐந்து விகாரங்களினால் கட்டுப்பட்டுள்ளது. எங்கும் ஐந்து விகாரங்களே உள்ளன என்பதும், இந்த ஐந்து தீய ஆவிகளையும் வெற்றி கொள்வதற்கு மக்களிடம் போதுமானளவு சக்தி இல்லை என்பதுமே இதன் அர்த்தமாகும். இப்பொழுதே கடவுள் வந்து, எங்களை இந்த ஐந்து விகாரங்களிலிருந்தும் விடுவித்து, தேவ அந்தஸ்து எனும் எதிர்கால வெகுமதியை அடைவதற்கு உதவுகின்றார். அச்சா.