08.07.20        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்:
இனிய குழந்தைகளே, தூய்மையே உங்கள் கல்வியின் அத்திவாரம். தூய்மை உள்ளபொழுது மாத்திரமே யோக சக்தியால் உங்களை நிரப்பிக்கொள்ள முடியும். யோக சக்தி உள்ளபொழுதே, அச்சக்தி உங்கள் வார்த்தைகளில் இருக்க முடியும்.

கேள்வி:
எத்தகைய முழு முயற்சியைக் குழந்தைகளாகிய நீங்கள் செய்ய வேண்டும்?

பதில்:
உங்கள் தலை மீதுள்ள பாவச்சுமையை அகற்றுவதற்கு முழு முயற்சி செய்யுங்கள். தந்தைக்குரியவராகிய பின்னர் நீங்கள் ஏதாவது பாவங்கள் செய்தால், மிகவும் பாரதூரமாக வீழ்ந்து விடுவீர்கள். நீங்கள் பிரம்மகுமார்கள், குமாரிகளை அவதூறு செய்தாலோ அல்லது அவர்களுக்கு ஏனைய சிரமங்களை விளைவித்தாலோ பெருமளவு பாவத்தைச் சேர்த்துக் கொள்வீர்கள். அப்பொழுது, நீங்கள் இந்த ஞானத்தைச் செவிமடுப்பதிலோ அல்லது அதை எடுத்துரைப்பதிலோ எவ்வித நன்மையும் இருக்காது.

ஓம் சாந்தி.
ஆன்மீகத் தந்தை, குழந்தைகளாகிய உங்களுக்கு நீங்கள் எவ்வாறு தூய்மையற்றவர்களிலிருந்து தூய்மையானவர்களாகி, தூய உலகின் அதிபதிகள் ஆகலாம் என்பதை விளங்கப்படுத்துகின்றார். சுவர்க்கமாகிய தூய உலகமானது விஷ்ணு பூமி என்றும், இலக்ஷ்மி நாராயணனின் இராச்சியம் என்றும் அழைக்கப்படுகின்றது. விஷ்ணுவின் உருவமானது, இலக்ஷ்மி நாராயணனின் இணைந்த ரூபத்தை உள்ளடக்கியதாகும். இதனாலேயே அவ்வாறு விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், விஷ்ணுவை வழிபடும்பொழுது, அவர் யார் என்பதை அவர்கள் அறியார்கள். அவர்கள் மகாலக்ஷ்மியையும் வழிபடுகின்றனர், எனினும் அவர் யார் என்பதையும் அவர்கள் அறியார்கள். பாபா இப்பொழுது குழந்தைகளாகிய உங்களுக்குப் பல்வேறு வழிகளிலும் விளங்கப்படுத்துகின்றார். இதை மிக நன்றாகக் கிரகியுங்கள், பரமாத்மாவிற்கு அனைத்தும் தெரியும் எனவும், நாங்கள் செய்வது நல்லதோ, தீயதோ அவர் அவை அனைத்தையுமே அறிவார் என்றும் சிலர் நம்புகின்றனர். அதுவே குருட்டு நம்பிக்கை எனும் உணர்வு என அழைக்கப்படுகின்றது. கடவுள் அவ்விடயங்களைப் பற்றி அறியமாட்டார். கடவுளே தூய்மையற்றவர்களைத் தூய்மையாக்குகின்ற, தூய்மையாக்குபவர் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். அவர் அவர்களைத் தூய்மையாக்கி, பின்னர் அவர்களைச் சுவர்க்கத்தின் அதிபதிகள் ஆக்குகின்றார். நன்றாகக் கற்பவர்கள் உயர்ந்ததோர் அந்தஸ்தைக் கோருவார்கள், ஆனால், ஒவ்வொருவரது இதயத்திலும் என்ன உள்ளது எனத் தந்தை அறிவார் என எண்ணாதீர்கள். அது விவேகமின்மை எனப்படுகின்றது. மனிதர்கள் என்ன செயல்களைச் செய்தாலும், அவை நல்லதாயினும், தீயதாயினும், அவற்றிற்கான பிரதிபலனை நாடகத்தின்படி நிச்சயமாகப் பெறுகின்றார்கள். தந்தைக்கு அதனுடன் தொடர்பு கிடையாது. எப்படியாயினும், பாபா அனைத்தையும் அறிவார்; என நீங்கள் ஒருபொழுதும் எண்ணக்கூடாது. விகாரத்தில் ஈடுபட்டு, தொடர்ந்தும் பாவம் செய்து கொண்டு இங்கு வருகின்ற அல்லது நிலையங்களுக்குச் செல்கின்ற, பலர் உள்ளார்கள். எப்படியோ பாபா அறிவார்;! என அவர்கள் எண்ணுகின்றார்கள். எவ்வாறாயினும், பாபா கூறுகின்றார்: நான் அவ்வியாபாரத்தைச் செய்வதில்லை. ஜனிஜனன்ஹார் (உள்ளேயிருக்கின்ற இரகசியங்களை அறிந்தவர்) என்ற வார்த்தையை அவர்கள் புரிந்துகொண்ட விதம் தவறானது. பல பிறவிகளின் பல பாவங்கள் உங்கள் தலை மீது உள்ளதால், வந்து, உங்களைத் தூய்மையற்றவரிலிருந்து தூய்மையாக்குமாறும், சுவர்க்க அதிபதிகள் ஆக்குமாறும் நீங்கள் தந்தையைக் கூவியழைக்கின்றீர்கள். இப்பிறவியின் பாவங்களும் உள்ளன. நீங்கள் இப்பிறவியில் செய்த பாவங்களை ஒப்;புக்கொள்ள (உழகெநளள) வேண்டும். பலர் தூய்மையாகுவதை மிகவும் சிரமமாகக் காணுமளவிற்கு அத்தகைய பாவங்களைச் செய்துள்ளனர். தூய்மையாகுவதே பிரதான விடயமாகும். கல்வி மிக இலகுவானது, ஆனால் எவ்வாறு பாவச்சுமையை அகற்றுவது என்ற முயற்சியை நீங்கள் செய்ய வேண்டும். பெருமளவு பாவம் செய்வதன் மூலம் பெருமளவு அவச்சேவை செய்கின்ற பலர் உள்ளனர். அவர்கள் பிரம்மகுமாரிகளின் ஆச்சிரமத்திற்குப் பல சிரமங்களை ஏற்படுத்த முயற்சி செய்கின்றனர். அவ்வாறு செய்வதால் அவர்கள் பெருமளவு பாவத்தைச் சேர்த்துக் கொள்கின்றனர். மற்றவர்களுக்கு ஞானத்தைக் கொடுப்பதால் பாவங்கள் அழிக்கப்பட மாட்டாது. யோகத்தின் மூலம் மாத்திரமே பாவங்கள் அழிக்கப்பட முடியும். அனைத்துக்கும் முதலில், யோகத்திற்கு முழு முயற்சி செய்யுங்கள். அப்பொழுது மாத்திரமே அம்பு ஒருவரைத் தாக்கும். நீங்கள் முதலில் தூய்மையாகி, யோகத்தைக் கொண்டிருப்பதால் மாத்திரமே உங்கள் வார்த்தைகளில் அந்தச் சக்தி இருக்க முடியும். இல்லாவிடில், நீங்கள் மற்றவர்களுக்கு எவ்வளவுதான் விளங்கப்படுத்தினாலும், அம்பு அவர்களைத் தாக்காது. எனவே, அது அவர்களது புத்தியில் புகமாட்டாது. பல பிறவிகளின் பாவங்கள் உள்ளன. இப்பொழுது செய்யப்படுகின்ற பாவங்கள், முன்னைய பல பிறவிகளில் செய்யப்பட்ட பாவங்களை விடவும் மிகவும் பெரிதாகுகின்றன. இதனாலேயே கூறப்படுகின்றது: சற்குருவை அவதூறு செய்;பவர்களால் தங்களது இலக்கை அடைய முடியாது. அந்த ஒரேயொருவரே உண்மையான பாபாவும், உண்மையான ஆசிரியரும், உண்மையான குருவும் ஆவார். தந்தை கூறுகின்றார்: பிரம்மகுமாரிகளுக்கு அவதூறை ஏற்படுத்துபவர்களும் பெருமளவு பாவத்தைச் சேர்த்துக் கொள்வார்கள். அனைத்துக்கும் முதலில், நீங்கள் தூய்மையாக வேண்டும். சிலர் மற்றவர்களுக்கு விளங்கப்படுத்துவதில் பெருமளவு ஆர்வம் கொண்டுள்ளனர், ஆனால் ஒரு சதம் பெறுமதியான யோகம் கூட அவர்களிடம் இல்லை. எனவே, அங்கு என்ன நன்மை இருக்கும்? தந்தை கூறுகின்றார்: நினைவின் மூலம் தூய்மையாகுவதே பிரதான விடயம். மக்கள் தூய்மையாகுவதற்காகக் கூவியழைக்கின்றனர். பக்தி மார்க்கத்தில், அவர்கள் தடுமாறித் திரிந்து, பெருமளவில் அநாவசியமாக ஓசையெழுப்பும் பழக்கத்தை விருத்தி செய்துவிட்டனர். அவர்கள் கடவுளைப் பிரார்த்திக்கின்றனர், ஆனால் கடவுளுக்குச் செவிகள் கிடையாது. எவ்வாறு அவர் செவிகள் அல்லது வாய் இல்லாமல் எதையாவது கேட்கவோ அல்லது கூறவோ முடியும்? அவர் அவ்யக்தமானவர் (சூட்சுமமானவர்). அவை அனைத்தும் குருட்டு நம்பிக்கையாகும். நீங்கள் எந்தளவிற்கு அதிகமாகத் தந்தையை நினைவுசெய்கின்றீர்களோ, அந்தளவிற்கு அதிகமாக உங்கள் பாவங்களை அழிப்பீர்கள். இவர் என்னைப் பெருமளவில் நினைவுசெய்கின்றார் அல்லது அவர் என்னை மிகவும் குறைந்தளவே நினைவுசெய்கின்றார் என, தந்தை அனைத்தையும் அறிவார் என்று எண்ணாதீர்கள். நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் சொந்த அட்டவணையைப் பார்க்க வேண்டும். தந்தை உங்களுக்குக் கூறியுள்ளார்: நினைவைக் கொண்டிருப்பதால் மாத்திரமே உங்கள் பாவங்களை நீங்கள் அழிப்பீர்கள். நீங்கள் எந்தளவிற்கு பாபாவை நினைவு செய்கின்றீர்கள் என்றும் அவர் உங்களிடம் கேட்கின்றார். இதை உங்களது நடத்தையிலிருந்தும் பார்க்க முடியும். நினைவைத் தவிர வேறு வழிகளால் உங்கள் பாவங்கள் அழிக்கப்பட முடியாது. நீங்கள் ஒருவருக்கு ஞானத்தை எடுத்துரைப்பதால், உங்கள் பாவங்களும், அந்த நபரது பாவங்களும் அழிக்கப்படும் என்றில்லை; இல்லை. நீங்கள் நினைவில் நிலைத்திருக்கும்பொழுது மாத்திரமே உங்கள் பாவங்கள் அழிக்கப்பட முடியும். தூய்மையாகுவதே பிரதான விடயம். தந்தை கூறுகின்றார்: இப்பொழுது நீங்கள் எனக்குரியவர்கள் ஆகிவிட்டதால், எப்பாவத்தையும் செய்யாதீர்கள். இல்லாவிடில், நீங்கள் பாரதூரமாக வீழ்ந்துவிடுவீர்கள். பின்னர், உயர்ந்ததோர் அந்தஸ்தைக் கோரமுடியும் என்ற நம்பிக்கை உங்களிடம் முற்றாகவே இருக்க மாட்டாது. ஒரு கண்காட்சியில் நீங்கள் பலருக்கு விளங்கப்படுத்தும்பொழுது, நீங்கள் பெருமளவு சேவை செய்து விட்டதாக எண்ணி, மிகவும் சந்தோஷப்படுகின்றீர்கள். எவ்வாறாயினும், தந்தை கூறுகின்றார்: அனைத்துக்கும் முதலில், குறைந்தபட்சம் நீங்கள் தூய்மையாக வேண்டும். தந்தையை நினைவுசெய்யுங்கள்! பலர் நினைவில் சித்தி அடைவதில்லை. ஞானம் மிக இலகுவானது. நீங்கள் 84 பிறவிகளின் சக்கரத்தை அறிந்துகொள்ள வேண்டும். ஏனைய கல்விகளில், அவர்கள் கணிதத்தைக் கற்று, அதிகளவு முயற்சி செய்ய வேண்டியுள்ளது. அவர்கள் எதைச் சம்பாதிப்பார்கள்? ஒருவர் கற்கும்பொழுதே மரணித்துவிட்டால், அக்கல்வி முடிவடைந்து விடுகின்றது. நீங்கள் நினைவில் நிலைத்திருக்குமபொழுது, உங்களால் ஞானத்தைக் கிரகிக்க முடிகின்றது. நீங்கள் தூய்மையாகாமல் உங்கள் பாவங்களை அழிக்காதிருப்பதால் பெருமளவு தண்டனை கிடைக்கும். உங்கள் நினைவு எப்படியோ பாபாவைச் சென்றடைகின்றது என நினைக்காதீர்கள். அதையிட்டு பாபா என்ன செய்வார்? நீங்கள் பாபாவை நினைவுசெய்தால், தூய்மையாகுகின்றீர்கள். அதையிட்டு பாபா என்ன செய்ய வேண்டும்? பாபா, மிக நன்;று! என்று உங்களுக்குக் கூறுவாரா? பல குழந்தைகள் தந்தையின் நிலையான நினைவைக் கொண்டிருப்பதாகக் கூறுகின்றனர். அவர்கள் கூறுகின்றனர்: அவரைத் தவிர வேறு யார் எனக்கு இருக்கின்றனர்? அவர்கள் இவ்வாறாகத் தொடர்ந்தும் பொய் பேசுகின்றனர். நினைவிற்குப் பெருமளவு முயற்சி தேவைப்படுகின்றது. தாங்கள் பாபாவை நினைவுசெய்கின்றோமா இல்லையா என்பதையேனும் அவர்களால் புரிந்துகொள்ள முடியாதுள்ளது. அறியாமையினால் தாங்கள் எப்பொழுதும் நினைவில் இருப்பதாக அவர்கள் கூறுகின்றனர். எவருமே முயற்சி செய்யாமல் உலக அதிபதியாகி, உயர்ந்ததோர் அந்தஸ்தைக் கோர முடியாது. நீங்கள் நினைவுச் சக்தியைக் கொண்டிருக்கும்பொழுது மாத்திரமே உங்களால் சேவை செய்ய முடியும். பின்னர் நீங்கள் எந்தளவிற்குச் சேவை செய்துள்ளீர்கள் என்றும், எத்தனை பிரஜைகளை உருவாக்கியுள்ளீர்கள் என்றும் பார்க்கப்படும். அதற்கான கணக்கு இருக்க வேண்டும். நான் எத்தனை பேரை எனக்குச் சமனாக ஆக்கியுள்ளேன்? நீங்கள் முதலில் பிரஜைகளை உருவாக்க வேண்டும். பின்னரே உங்களால் ஓர் இராஜ அந்தஸ்தைக் கோர முடியும். தற்பொழுது அவையெதுவும் கிடையாது. நீங்கள் யோகத்தில் நிலைத்திருந்து, அச்சக்தியால் உங்களை நிரப்பும்பொழுது மாத்திரமே அம்பு ஒருவரை மிகச்சரியாகத் தாக்கும். பீஷ்ம பிதாமகரும், துரோணாச்சாரியாரும் இறுதியில் ஞானத்தைப் பெற்றதாக மகாபாரத நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆத்மாவிலிருந்து தூய்மையின்மை முழுவதும் அகற்றப்பட்டு, அந்த ஆத்மா சதோபிரதான் ஆகும்பொழுது, அவ்வாத்மாவில் சக்தி இருப்பதுடன், அம்பும் விரைவில் மற்றவர்களைத் தாக்கும். பாபாவிற்கு அனைத்தும் தெரியும் என ஒருபொழுதும் எண்ணாதீர்கள். பாபாவிற்கு எதையும் அறிந்துகொள்வதற்கான அவசியம் என்ன உள்ளது? எதையாவது செய்பவர்கள் அதற்கான வெகுமதியைப் பெறுகின்றார்கள். பாபா ஒரு பற்றற்ற பார்வையாளராக அனைத்தையும் தொடர்ந்தும் அவதானிக்கின்றார். சிலர் பாபாவிற்கு எழுதுகின்றனர்: பாபா, நான் சேவை செய்வதற்கு இன்ன இன்ன இடத்திற்குச் சென்றேன். பாபா கேட்கின்றார்: அனைத்துக்கும் முதலில், நீங்கள் நினைவு யாத்திரையில் இருக்கின்றீர்களா? ஏனைய அனைவரிடமிருந்தும் உங்கள் தொடர்பைத் துண்டித்து, ஒரேயொரு தந்தையுடன் உங்களை இணைத்துக்கொள்வதே நீங்கள் செய்ய வேண்டிய முதலாவது விடயமாகும். நீங்கள் ஆத்ம உணர்வுடையவர் ஆகவேண்டும். நீங்கள் வீட்டில் வாழும்பொழுதும், இவ்வுலகையும், உங்கள் சரீரத்தையும் பழையதாகவே கருதவேண்டும். அனைத்தும் அழிக்கப்படவுள்ளது. நாங்கள் தந்தை மீதும், அவரது ஆஸ்தி மீதும் மாத்திரமே அக்கறை கொண்டுள்ளோம். உங்களை வீட்டில் குடும்பத்துடன் வசிக்க வேண்டாம் என்றோ அல்லது எவருடனும் பேசவேண்டாம் என்றோ பாபா உங்களுக்குக் கூறவில்லை. தாங்கள் ஒருவரின் திருமணத்திற்குச் செல்லலாமா எனச் சிலர் பாபாவிடம் கேட்கின்றனர். பாபா கூறுகின்றார்: நீங்கள் செல்லலாம். அங்கு சென்று, சேவை செய்யுங்கள். உங்கள் புத்தியின் யோகம் சிவபாபாவுடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். நினைவுச் சக்தியால் மாத்திரமே பல பிறவிகளின் பாவங்கள் எரிக்கப்பட முடியும். நீங்கள் இங்கும் தொடர்ந்தும் பாவம் செய்வீர்களாயின், பெருமளவு தண்டனை கிடைக்கும். தூய்மையாகும் வேளையில் விகாரத்தின் காரணமாக ஒருவர் வீழ்ந்து விட்டால், அவர் மரணித்து விடுகின்றார். அவர் முற்றுமுழுதாக நொருங்கிவிடுவார். நீங்கள் ஸ்ரீமத்தைப் பின்பற்றாததால் பெருமளவு இழப்பு ஏற்படுகின்றது. ஒவ்வோர் அடியிலும் ஸ்ரீமத் பெறப்பட வேண்டும். சிலர் யோகம் செய்யமுடியாத அளவிற்கு அத்தகைய பாவங்கள் செய்கின்றனர். அவர்களால் நினைவில் இருக்க முடியாதுள்ளது. பின்னர் அவர்கள் மற்றவர்களிடம் சென்று, கடவுள் வந்துவிட்டார் என்றும், அவரிடம் சென்று அவர்களது ஆஸ்தியைக் கோருமாறும் கூறினால், மற்றவர்கள் அவர்களை நம்ப மாட்டார்கள். அம்பும் அவர்களைத் தாக்காது. பக்தர்களுக்கு ஞானத்தைக் கொடுக்குமாறும், அதை விரும்பாதவர்களிடம் அவற்றை வீணாக்க வேண்டாம் என்றும் பாபா உங்களுக்குக் கூறியுள்ளார். இல்லாவிடில், இது அதிக அவதூறுகளையே ஏற்படுத்தும். சில குழந்தைகள் பாபாவிடம் கேட்கின்றனர்: நான் தானம் செய்யும் பழக்கத்தைக் கொண்டுள்ளேன். நான் இப்பொழுது ஞான மார்க்கத்தில் உள்ளதால், என்ன செய்ய வேண்டும்? பாபா உங்களுக்கு ஆலோசனை கூறுகின்றார்: குழந்தைகளே, ஏழைகளுக்குத் தொடர்ந்தும் தானம் செய்வதற்குப் பலர் உள்ளனர். ஏழைகள் பட்டினியால் மரணிக்க மாட்டார்கள். சமய பக்கிரிகளிடம் கூட பெருந்தொகையான பணம் உள்ளது. எனவே, உங்கள் புத்தி அத்தகைய விடயங்கள் அனைத்திலிருந்தும் அகற்றப்பட வேண்டும். தானங்கள் கொடுப்பதையிட்டு நீங்கள் மிகவும் எச்சரிக்கையாக இருப்பது அவசியம்;. தொடர்ந்தும் அத்தகைய செயல்களைச் செய்கின்ற பலர் உள்ளனர், கேட்கவும் வேண்டாம்! தங்கள் தலை மீதுள்ள பாவச்சுமைகள் அதிகரிப்பதையேனும் அவர்கள் உணராதுள்ளனர். ஞான மார்க்கம் என்பது வெறும் வேடிக்கையும், விளையாட்டுக்களும் அல்ல. தர்மராஜூம் தந்தையுடன் இருக்கின்றார். தர்மராஜிடமிருந்து பெருமளவு தண்டனையை அனுபவிக்க நேரிடும். கூறப்படுகின்றது: தர்மராஜ் இறுதிக் கணக்கை எடுக்கும்பொழுது, உங்களுக்கு அனைத்துமே தெரிய வரும். பல பிறவிகளுக்கான தண்டனையை அனுபவிக்க அதிக நேரம் எடுக்காது. ஒருவர் காசியில் தன்னை அர்ப்பணிக்கின்ற உதாரணத்தையும் பாபா உங்களுக்கு விளங்கப்படுத்தியுள்ளார். அது பக்தி மார்க்கம், ஆனால் இது ஞான மார்க்கமாகும். மனிதர்களை அர்ப்பணிப்பதும் நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டுள்ளது. அவ்விடயங்கள் அனைத்தும் புரிந்துகொள்ளப்பட வேண்டும். இந்நாடகம் ஏன் உருவாக்கப்பட்டது என்றோ அல்லது நாங்கள் ஏன் சக்கரத்தினுள் கொண்டு வரப்பட்டோம் என்றோ கேட்காதீர்கள். அனைவரும் தொடர்ந்தும் சக்கரத்தினுள் வர வேண்டும். இந்நாடகம் ஏற்கெனவே நிச்சயிக்கப்பட்டது. நீங்கள் சக்கரத்தினுள் வந்திருக்கா விட்டால், உலகமே இருந்திருக்காது. அநாதியான முக்தி இருக்க முடியாது. பிரதானமானவர் கூட அநாதியான முக்தியைக் கொண்டிருக்க முடியாது. சக்கரம் 5000 வருடங்களின் பின்னர் அதேபோன்று சுழலும். இதுவே நாடகம். மற்றவர்களுக்கு ஞானத்தை விளங்கப்படுத்துவதாலோ, அதைக் கொடுப்பதாலோ எவராலும் ஓர் அந்தஸ்தைப் பெறமுடியாது. முதலில், நீங்கள் தூய்மையற்றவர்களிலிருந்து தூய்மையானவர்களாக வேண்டும். பாபாவிற்கு அனைத்தும் தெரியும் என எண்ணாதீர்கள். அனைத்தையும் அறிந்து, பாபா என்னதான் செய்வார்? அனைத்திற்கும் முதலில், ஆத்மாவாகிய நீங்கள் ஸ்ரீமத்திற்கேற்ப என்ன செய்கின்றீர்கள் என்பதையும், எந்தளவிற்கு பாபாவை நினைவுசெய்கின்றீர்கள் என்பதையும் அறிந்துகொள்ளுங்கள். அவை அனைத்தையும் பாபா அறிந்துகொள்வதால் என்ன நன்மை கிடைக்கும்? நீங்கள் எதைச் செய்தாலும் அதற்குரிய பலனைப் பெறுகின்றீர்கள். நீங்கள் எவ்வாறு செயற்படுகின்றீர்கள் என்பதிலிருந்தும், உங்கள் சேவையிலிருந்தும் நீங்கள் நல்ல சேவை செய்கின்றீர்களா என பாபாவால் கூறமுடியும். தந்தைக்குரியவராகிய பின்னரும் இன்னார் பல பாவச் செயல்களைச் செய்துள்ளார். எனவே, அவர் கொடுக்கின்ற ஞானத்தில் சக்தி கிடையாது. இந்த ஞான வாள் நினைவுச் சக்தி என்ற கூர்மையைக் கொண்டிருக்க வேண்டும். யோக சக்தியால் நீங்கள் முழு உலகையும் வெற்றி கொள்கின்றீர்கள். ஞானத்தால், நீங்கள் புதிய உலகில் உயர்ந்ததோர் அந்தஸ்தைக் கோருகின்றீர்கள். அனைத்துக்கும் முதலில், தூய்மையாகுங்கள். நீங்கள் தூய்மையாகும்வரை, உங்களால் உயர்ந்ததோர் அந்தஸ்தைக் கோர முடியாது. நீங்கள் ஒரு சாதாரண மனிதனிலிருந்து நாராயணனாக மாறுவதற்கே இங்கு வருகின்றீர்கள். தூய்மையற்றவர்கள் நாராயணனாக முடியாது. நீங்கள் தூய்மையாகுவதற்குச் சரியான வழிமுறையைப் பயன்படுத்த வேண்டும். நிலையங்களைப் பராமரிக்கின்ற, விசேட அன்பிற்கினிய சில குழந்தைகள் கூட இதற்குப் பெருமளவு முயற்சி செய்ய வேண்டியுள்ளது. அவர்கள் இம்முயற்சியை எடுக்காததால் அந்த ஆத்மாக்களில் அந்தச் சக்தி இல்லை, அப்பொழுது அம்பும் இலக்கைத் தாக்க முடியாது. நினைவு யாத்திரை இருப்பதில்லை; அவர்கள் வெறுமனே கண்காட்சிகளில் பலருக்கு விளங்கப்படுத்துகின்றனர். நினைவைக் கொண்டிருப்பதன் மூலம் நீங்கள் முதலில் தூய்மையாக வேண்டும்; பின்னர் ஞானம் உள்ளது. நீங்கள் தூய்மையாகும்பொழுது, உங்களால் ஞானத்தைக் கிரகிக்க முடியும். தூய்மையற்றவர்களால் ஞானத்தைக் கிரகிக்க முடியாது. நினைவே பிரதான பாடம். லௌகீகக் கல்வியில் பல பாடங்கள் உள்ளன. பிரம்மகுமார்கள், குமாரிகள் ஆகுவதற்கு மக்கள் உங்களிடம் வருகின்றனர். பிரம்மகுமார், பிரம்மகுமாரியாக, அதாவது, சகோதர, சகோதரியாக ஆகுவதென்பது உங்கள் மாமியார் வீட்டிற்குச் செல்வது போன்றதல்ல! நீங்கள் பெயரளவில் மாத்திரம் இவ்வாறு ஆகக்கூடாது. ஒரு தேவர் ஆகுவதற்கு, நீங்கள் நிச்சயமாக முதலில் தூய்மையாக வேண்டும். அதன்பின்னர் கல்வியும் உள்ளது. நீங்கள் கற்று, ஆனால் தூய்மையாகாவிட்டால் உங்களால் உயர்ந்ததோர் அந்தஸ்தைக் கோர முடியாது. தூய ஆத்மாக்கள் தேவைப்படுகின்றனர். நீங்கள் தூய்மையாகும்பொழுது மாத்திரமே உங்களால் தூய உலகில் உயர்ந்ததோர் அந்தஸ்தைக் கோர முடியும். பாபா தூய்மையை அதிகளவில் வலியுறுத்துகின்றார். நீங்கள் தூய்மையைப் பேணும்வரை, உங்களால் எவருக்கும் ஞானத்தைக் கொடுக்க முடியாது. எவ்வாறாயினும், பாபா எதனையும் பார்ப்பதில்லை. அவர் இங்கமர்ந்திருந்து அனைத்தையும் விளங்கப்படுத்துகின்றார். பக்தி மார்க்கத்தில், மக்கள் தங்கள் பக்திக்கான வெகுமதியைப் பெறுகின்றார்கள். அதுவும் நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டுள்ளது. ஒரு சரீரமின்றி, தந்தையால் எவ்வாறு பேச முடியும்? எவ்வாறு அவரால் எவரையேனும் செவிமடுக்க முடியும்? ஓர் ஆத்மா சரீரத்தைக் கொண்டிருக்கும்பொழுதே அவரால் பேசவும், செவிமடுக்கவும் முடியும். தந்தை கூறுகின்றார்: நான் எந்த அங்கங்களையும் கொண்டிருக்கவில்லை. எனவே, எவ்வாறு நான் எவரையும் செவிமடுக்கவோ அல்லது எதையும் அறிந்துகொள்ளவோ முடியும்? தாங்கள் விகாரத்தில் ஈடுபடுவதை பாபா அறிவார் என்றும், அவ்வாறு அவர் அறிந்திராவிட்டால் அவரைக் கடவுளாகத் தாங்கள் கருதமாட்டோம் என்றும் சிலர் நம்புகின்றனர். அத்தகைய பலர் உள்ளனர். தந்தை கூறுகின்றார்: நீங்கள் தூய்மையாகுவதற்கான வழியை உங்களுக்குக் காட்டுவதற்கே நான் வந்துள்ளேன். நான் அனைத்தையும் பற்றற்ற பார்வையாளராகப் பார்க்கின்றேன். ஒருவர் தகுதிவாய்ந்தவரா, தகுதியற்றவரா என்பதை அக்குழந்தையின் நடத்தையிலிருந்து பார்க்க முடியும். நீங்கள் சேவைக்கான அத்தாட்சியை வழங்க வேண்டும். நீங்கள் செய்பவற்றுக்கான வெகுமதியைப் பெறுகிறீர்கள் என்பதையும் நீங்கள் அறிவீர்கள். நீங்கள் ஸ்ரீமத்தைப் பின்பற்றினால் மேன்மையானவர்கள் ஆகுகின்றீர்கள். நீங்கள் ஸ்ரீமத்தைப் பின்பற்றாவிட்டால், அழுக்காகி, வீழ்ந்து விடுகின்றீர்கள். நீங்கள் எதையாவது கேட்க வேண்டுமாயின், அதைத் தெளிவாகக் கேளுங்கள். குருட்டு நம்பிக்கை என்ற கேள்விக்கே இடமில்லை. பாபா கேட்கின்றார்: நீங்கள் நினைவுச் சக்தியைக் கொண்டிராவிட்டால், எவ்வாறு தூய்மையாகுவீர்கள்? சிலர் இப்பிறவியில் கூட அத்தகைய பாவங்களைச் செய்கின்றனர், கேட்கவும் வேண்டாம்! இது பாவாத்மாக்களின் உலகம், சத்தியயுகம் புண்ணியாத்மாக்களின் உலகமாகும். இது சங்கமயுகம். சிலர் எதையும் கிரகிக்க முடியாத அளவிற்கு மந்தமான புத்தியைக் கொண்டுள்ளனர்;; அவர்களால் பாபாவை நினைவுசெய்ய முடியாதுள்ளது. பின்னர், அது மிகவும் தாமதமாகி விடும், ஏனெனில், வைக்கோற்போர் தீ மூட்டப்பட்டுவிடும், அவர்களால் யோகத்தில் நிலைத்திருக்க முடியாதிருக்கும். அந்நேரத்தில், விரக்திக் கூக்குரல்கள் மிக அதிகமாக இருக்கும். இன்னமும் பெருமளவு துன்ப மலைகள் வீழவுள்ளன. தந்தையிடமிருந்து உங்கள் இராச்சியப் பாக்கியத்தை எவ்வாறு பெறுவது என்ற ஒரே அக்கறையையே நீங்கள் கொண்டிருக்க வேண்டும். சரீர உணர்வைத் துறந்து, சேவையில் ஈடுபட்டிருங்கள்! நன்மை அளிப்பவர் ஆகுங்கள்! உங்கள் பணத்தை வீணாக்காதீர்கள்! தானங்கள் பெறத் தகுதியில்லாத, தூய்மையற்றவர்களுக்கு ஒருபொழுதும் தானங்கள் செய்யாதீர்கள். இல்லாவிடில், தானம் செய்பவர் அந்தச் சுமையைச் சேர்த்துக்கொள்கின்றார். நீங்கள் வெளியில் சென்று, கடவுள் வந்துவிட்டார் என முரசு கொட்ட வேண்டும் என்றில்லை. தங்களைக் கடவுள் என அழைக்கின்ற அத்தகைய பலர் பாரதத்தில் உள்ளனர். எவருமே உங்களை நம்ப மாட்டார்கள். நீங்கள் இப்பொழுது ஞானோதயத்தைப்; பெற்றுள்ளீர்கள் என்பதை அறிவீர்கள். அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டெடுக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. கற்பதுடன், நீங்கள் நிச்சயமாகத் தூய்மையாகவும் வேண்டும். ஒரு தகுதிவாய்ந்த, கீழ்ப்படிவான குழந்தையாகி, உங்கள் சேவைக்கான அத்தாட்சியை வழங்குங்கள். ஸ்ரீமத்தைப் பின்பற்றி, உங்களை மேன்மையானவர் ஆக்குங்கள்.

2. உங்கள் பணத்தை வீணாக்காதீர்கள். தூய்மையற்றவர்களுக்கு ஒருபொழுதும் தானங்கள் கொடுக்காதீர்கள். தகுதிவாய்ந்தவர்களுக்கு, ஞானச் செல்வத்தைத் தானம் செய்யுங்கள்.

ஆசீர்வாதம்:
நீங்கள் உங்களைச் சேவையிலும், உங்கள் தொடர்புகளிலும் சதா வளைத்துக் கொள்கின்ற உங்கள் சிறப்பியல்பு மூலம் ஒரு வெற்றி சொரூபம் ஆகுவீர்களாக.

தங்களை வளைத்துக் கொள்கின்ற சிறப்பியல்பை உடைய குழந்தைகள் இலகுவில் சத்தியயுகத்து ஸ்திதியை அடைகின்றார்கள். நேரத்துக்கும் சந்தர்ப்பங்களுக்கும் ஏற்ப உங்கள் தாரணையை வெளிப்படுத்துவதற்கு, நீங்கள் வளைந்து கொடுக்க வேண்டும். தங்களை வளைத்துக் கொள்பவர்களே நிஜத் தங்கம் ஆவார்கள். நீங்கள் சாகார் பாபாவின் சிறப்பியல்பைக் கண்டீர்கள்: நேரத்துக்கும், நபருக்கும் ஏற்ப (சாகார் பாபா) அவரது ரூபம் இருந்தது. அதேபோன்று தந்தையைப் பின்பற்றுங்கள், நீங்கள் இலகுவில் சேவையிலும், உங்கள் தொடர்புகளிலும் ஒரு வெற்றி சொரூபம் ஆகுவீர்கள்,

சுலோகம்:
உங்களிடம் சகல சக்திகளும் இருக்கும்பொழுது, தடைகளற்ற சேவை உங்களுடன் உள்ளது.