08.09.21        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்:
இனிய குழந்தைகளே, உங்களுக்கு மூத்தவர்களுக்கு மதிப்பளிப்பது ஒரு தெய்வீகக் குணமாகும். திறமைசாலிகளையும், மிக நன்றாக விளங்கப்படுத்துபவர்களையும் பின்பற்றுங்கள்.

கேள்வி:
சத்தியயுகத்தில் ஏன் பக்தி மார்க்கத்துச் சம்பிரதாயங்கள் எதுவும் இருப்பதில்லை?

பதில்:
ஏனெனில், ஞானக்கடலான தந்தை உங்களுக்கு ஞானத்தைக் கொடுத்து, உங்களைச் சற்கதிக்குள் அனுப்புகின்றார். நீங்கள் உங்கள் பக்தியின் பலனைப் பெறுகின்றீர்கள். நீங்கள் ஞானத்தைப் பெற்றதும், பக்தியைக் கைவிடுகின்றீர்கள். அது (சத்தியயுகம்) ஞானத்தின் வெகுமதிக்குரிய காலமாக இருப்பதால், பக்தி, தபஸ்யா, தான தர்மம் போன்றவற்றிற்கான அவசியம் என்ன? அந்த வழக்கங்கள் எவையும் அங்கு இருக்க முடியாது.

ஓம் சாந்தி.
தூய்மையாக்குபவராகிய கடவுள் சிவன் பேசுகின்றார். தந்தை இங்கமர்ந்திருந்து குழந்தைகளாகிய உங்களுக்கு ஞானத்தைக் கொடுக்கின்றார். நான் இங்கு வரும்பொழுது தூய்மையற்றவர்களைத் தூய்மையாக்குவதற்காக ஞானத்தைப் பேசுகின்றேன் எனக் குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்தப்பட்டுள்ளது. வேறு எவராலுமே இந்த ஞானத்தை உங்களுக்குக் கற்பிக்க முடியாது. அவர்கள் பக்தியையே கற்பிக்கின்றார்கள். தங்களைப் பிரம்மாகுமாரர்கள், குமாரிகளாகக் கருதும் குழந்தைகள் மாத்திரமே இந்த ஞானத்தைக் கற்கின்றார்கள். தில்வாலா ஆலயம் உங்கள் முன்னால் உள்ளது. அங்கும் நீங்கள் இராஜயோக தபஸ்யாவில் அமர்ந்திருக்கிறீர்கள். உலக மாதாவாகிய ஜெகதம்பாவும், மக்களின் தந்தையாகிய பிரஜாபிதாவும் உள்ளனர். குமாரிகளும், அரைக் குமாரிகளும் உள்ளனர். தந்தை உங்களுக்கு இராஜயோகம் கற்பிக்கின்றார். இராச்சியத்தின் படம் மேலே (கூரை மீது சுவர்க்கம்) உள்ளது. தந்தை உங்களுக்குப் பக்தியைக் கற்பிப்பதில்லை. உங்களுக்குக் கற்பித்து விட்டு பிரிந்து சென்றவருக்கே நீங்கள் பக்தி செய்கின்றீர்கள். எவ்வாறாயினும், உங்களுக்கு இராஜயோகத்தைக் கற்பித்து, இராச்சியத்தையும் ஸ்தாபித்து விட்டு, பிரிந்து சென்றவர் யார் என்பதை மக்கள் அறியார்கள். பக்தி ஞானத்திலிருந்து வேறுபட்டது என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது அறிவீர்கள். ஒரேயொருவரால் மாத்திரமே ஞானத்தைப் பேச முடியும்; வேறெவராலும் இதனைச் செய்ய முடியாது. ஒரேயொரு ஞானக் கடலே உள்ளார். அவர் மாத்திரமே வந்து ஞானத்தின் மூலம் தூய்மையற்றவர்களைத் தூய்மையாக்குகின்றார். வேறு எந்த ஆன்மீக ஒன்றுகூடல்களிலும் உள்ள எவராலும் ஞானத்தைக் கற்பிக்க முடியாது. அவர்கள் தங்களை ஸ்ரீ ஸ்ரீ 108 ஜகத்குரு என்றோ, கடவுள் என்றோ அழைத்தாலும், அவர்களில் ஒருவரால் கூட தானே அனைவரதும் பரமதந்தையும், பரமாத்மாவும், ஞானக் கடலும் எனக் கூறமுடியாது. அவர்களில் எவரையும் பரமதந்தை என எவருமே அழைப்பதில்லை. பரமதந்தையே தூய்மையாக்குபவர் என்பதை நீங்கள் அறிவீர்கள். இக் கருத்துக்களை உங்கள் புத்தியில் மிக நன்றாக வைத்திருங்கள். பிரம்மாகுமாரிகளான நீங்கள் பக்தியைக் கைவிட்டுவிட்டீர்கள் என மக்கள் கூறுகின்றனர். எவ்வாறாயினும், நீங்கள் ஞானத்தைப் பெற்றதும் பக்தியைக் கைவிடவே வேண்டும். நீங்கள் பக்திக்குள் செல்லும்பொழுது, ஞானத்தைக் கைவிடுவதை அறிந்திருக்கின்றீர்கள் என்றில்லை. இல்லை, நீங்கள் இயல்பாகவே இராவணனின் இராச்சியத்திற்குள் செல்கின்றீர்கள். பாபா இப்பொழுது உங்களுக்கு இராஜயோகம் கற்பிக்கின்றார் என்ற புரிந்துணர்வை நீங்கள் பெற்றுள்ளீர்கள். இராஜயோகம் ஞானமாகும், அதைப் பக்தி என அழைக்க முடியாது. கடவுளே ஞானக்கடல். அவர் ஒருபொழுதும் பக்தியைக் கற்பிப்பதில்லை. பக்தியின் பலன் ஞானமாகும், ஞானத்தின் மூலம் சற்கதி பெறப்படுகின்றது. கலியுகத்தின் இறுதியில் அனைவருமே சந்தோஷமற்றிருக்கின்றனர். இதனாலேயே இந்தப் பழைய உலகம் துன்ப பூமி என அழைக்கப்படுகின்றது. நீங்கள் இப்பொழுது இவ்விடயங்களைப் புரிந்துகொள்கின்றீர்கள். தந்தை உங்களுக்கு உங்களுடைய பக்தியின் பலனை, அதாவது, சற்கதியை அருள்வதற்காகவே வந்துள்ளார். அவர் உங்களுக்கு இராஜயோகம் கற்பிக்கின்றார். இது பழைய உலகம், இது அழிக்கப்பட வேண்டும். எங்களுக்குப் புதிய உலகில் ஓர் இராச்சியம் தேவை. இது இராஜயோக ஞானமாகும். ஒரேயொரு பரமாத்மா பரமதந்தை சிவனால் மாத்திரமே ஞானத்தைக் கற்பிக்க முடியும். ஞானக்கடல் என அழைக்கப்படுபவர் அவரேயன்றி, கிருஷ்ணர் அல்ல. கிருஷ்ணரின் புகழ் வேறுபட்டது. அவர் நிச்சயமாகத் தனது முன்னைய பிறவியில் அத்தகைய செயல்களைச் செய்தார். அதனாலேயே அவர் ஓர் இளவரசர் ஆகினார். நீங்கள் இராஜயோக ஞானத்தைப் பெறுகின்றீர்கள் என்பதையும், பின்னர் நீங்கள் புதிய உலகில் சுவர்க்கத்தின் இளவரசர்கள், இளவரசிகள் ஆகுவீர்கள் என்பதையும் இப்பொழுது அறிவீPர்கள். சுவர்க்கம் சற்கதியாகும். ஆனால் நரகமோ சீரழிவாகும். நாங்கள் எங்களுக்காகவே ஓர் இராச்சியத்தை ஸ்தாபிக்கின்றோம். இந்த ஞானத்தைப் பெற்று, தூய்மையாகாதவர்கள் இராச்சியத்திற்குள் செல்ல மாட்டார்கள். ஏனெனில் சத்தியயுகத்தில் வெகுசிலரே இருப்பார்கள். கலியுகத்தின் இறுதியில் உள்ளவர்களில் பலர் நிச்சயமாக முக்தி தாமத்தில் இருப்பார்கள். அவர்கள் மறைவதில்லை, ஆனால் அவர்கள் அனைவரும் வீட்டிற்குத் திரும்பிச் செல்கின்றார்கள். 84 பிறவிகளின் சக்கரம் இப்பொழுது முடிவிற்கு வருவதால், குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது உங்கள் வீட்டை நினைவுசெய்கின்றீர்கள்; நாடகமும் முடிவிற்கு வருகின்றது. நீங்கள் சக்கரத்தில் பல தடவைகள் சுற்றி வந்துள்ளீர்கள். பிராமணக் குழந்தைகளான நீங்கள் மாத்திரமே இதனை அறிவீர்கள். பிராமணர்கள் தொடர்ந்தும் உருவாக்கப்படுகின்றார்கள். 16,108க்கான மாலை உள்ளது. சத்திய யுகத்தில் பலர் இருக்க மாட்டார்கள். சத்திய யுகத்தின் மாதிரி காட்டப்பட்டுள்ளது. அவர்கள் தங்க துவாரகையைக் (குஜராத்தில் உள்ள நகரம்) காட்டியுள்ளதைப் போல், பெரியதான ஒன்றின் சிறிய மாதிரியுரு உருவாக்கப்பட்டுள்ளது. துவாரகையில் கிருஷ்ணரின் இராச்சியம் இருந்ததாகக் கூறப்படுகிறது. அது துவாரகையிலா அல்லது டெல்கியிலா இருந்தது என நீங்கள் கூறுவீர்கள்? இங்கு டெல்கியிலேயே யமுனை நதிக்கரை உள்ளது. அங்கு கடலே உள்ளது. யமுனை நதிக்கரையிலேயே தலைநகரம் இருந்தது என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் புரிந்துகொள்கின்றீர்கள். துவாரகை தலைநகரம் அல்ல. டெல்கி மிகவும் பிரபல்யமானது. புகழப்படுகின்ற யமுனை நதியும் அங்கேயே இருக்க வேண்டும். டெல்கி தேவதைகளின் பூமியான, பரிஸ்தான் எனப்படுகின்றது. பிரதான சிம்மாசனம் கொண்ட இராச்சியம் டெல்கியிலேயே இருக்கும். பக்தி மார்க்கம் முடிவடைகின்றது, பின்னர் அது ஞான மார்க்கம் ஆகுகின்றது என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது புரிந்துகொள்கிறீர்கள். தெய்வீக இராச்சியம் ஸ்தாபிக்கப்படுகிறது. தந்தை கூறுகின்றார்: நீங்கள் முன்னேறிச் செல்லும்பொழுது, எத்தனை பேர் சித்தியடைகின்றனர், எந்தளவிற்குச் சித்தியடைகின்றனர் போன்ற அனைத்தையும் அறிந்துகொள்வீர்கள். ஒரு பாடசாலையில், இன்னார் எத்தனை புள்ளிகளுடன் சித்தியடைந்தார் என்பதையும், அவர் இப்பொழுது அடுத்த வகுப்புக்குச் செல்வார் என்பதையும்; நீங்கள் அறிந்துகொள்கின்றீர்கள். இங்கும் கூட, யார் சித்தியடைந்தார்கள், யார் மாற்றப்படுவார்கள் என்பது பற்றிய அனைத்தும் அதிகமாக இறுதியில் தெரியவரும். இந்த வகுப்பு பெரியது. இது ஓர் எல்லையற்ற வகுப்பாகும், நாளுக்கு நாள், நிலையங்களின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரிக்கும். சிலர் வந்து, மிக நன்றாக ஏழு நாள் பாடநெறியைப் பெறுவார்கள். ஓரிரு நாட்களுக்குரிய பாடநெறியும் சிறிய விடயமல்ல. கலியுகத்தின் விநாசம் சற்று முன்னாலேயே இருப்பதை நீங்கள் காணலாம். நீங்கள் இப்பொழுது சதோபிரதான் ஆகவேண்டும். உங்கள் புத்தியின் யோகத்தைத் தந்தையுடன் இணைப்பதனால், நீங்கள் சதோபிரதானாகித் தூய உலகிற்குச் செல்வீர்கள் எனத் தந்தை உங்களுக்குக் கூறியுள்ளார். நீங்கள் முன்னைய கல்பத்தில் நாடகத்தில் உங்கள் பாகங்களை எவ்வாறு நடித்தீர்களோ, அவ்வாறே நிச்சயமாக உங்கள் பாகங்களை நடிக்க வேண்டும். பாரத மக்கள் இராச்சியத்தை ஆட்சிசெய்தார்கள், பின்னர் சனத்தொகை தொடர்ந்தும் அதிகரித்தது. ஒரு விருட்சமும் வளர்கின்றது. பாரத மக்கள் தேவ தர்மத்தைச் சேர்ந்தவர்கள், ஆனால்; அவர்கள் இப்பொழுது தூய்மையாக இல்லாததால், கிறிஸ்தவர்கள், கிறிஸ்துவை வழிபடுவதைப் போன்று, அவர்களும் அந்தத் தூய தேவர்களை வழிபடுகின்றனர். ஆதி சனாதனா தேவிதேவதா தர்மம் சத்திய யுகத்திலேயே இருக்கின்றது. தந்தையே சத்தியயுகத்தை ஸ்தாபிப்;பவர். சத்தியயுகத்தில் உண்மையிலேயே தேவர்களின் இராச்சியம் இருந்தது. அவர்கள் நிச்சயமாகத் தங்களது முன்னைய பிறவியில் முயற்சி செய்திருக்க வேண்டும், பழைய உலகம் மாற்றமடைந்து, புதியதாகுகின்ற சங்கமயுகத்திலேயே அது நிகழ்ந்திருக்க வேண்டும். கலியுகம் மாற்றமடைந்து, சத்திய யுகம் வருவதால், நிச்சயமாகக் கலியுகத்திலே தூய்மையற்றவர்கள் இருந்திருக்க வேண்டும். நீங்கள் இலக்ஷ்மி நாராயணன் படங்களை அல்லது புத்தகங்களை அச்சிடும்பொழுது, அதில், அவர்கள் தங்களுடைய முன்னைய பிறவியில் இலகு இராஜயோக ஞானத்தின் மூலம் முயற்சி செய்தனர் என்பது எழுதப்பட வேண்டும் என பாபா விளங்கப்படுத்தியுள்ளார். அங்கு அரசரும், அரசியும் மாத்திரம் இருக்க மாட்டார்கள்; பிரஜைகளும் உருவாக்கப்படுகின்றனர்;. மக்கள் அறியாமையில் இருப்பதால் எதையும் அறிந்துகொள்ளாமல், தொடர்ந்தும் பூஜிக்கின்றார்கள். அம்மக்கள் இலக்ஷ்மி, நாராயணனின் விக்கிரகங்களை வழிபடும்பொழுது, வெறுமனே அவற்றைப் பார்க்கின்றார்கள் என்பதை நீங்கள் இப்பொழுது புரிந்துகொள்கின்றீர்கள். அவர்களிடம் எந்த ஞானமும் கிடையாது. பக்தி செய்யாமல் கடவுளைக் கண்டறிய முடியாதென மக்கள் நம்புகின்றனர். கடவுள் வந்துவிட்டார் என நீங்கள் மற்றவர்களுக்குக் கூறினால், அவர்கள் உங்களைப் பார்த்துச் சிரிக்;கின்றார்கள். அவர்கள் கூறுகின்றனர்: கலியுகத்தின் இறுதியிலேயே கடவுள் வருவார். எவ்வாறு அவரால் இப்பொழுதே வந்திருக்க முடியும்? கலியுகத்தின் இறுதியிலேயே அவர் வருவாரெனத் தாங்கள் ஏன் கூறுகின்றார்கள் என்பதையேனும் அவர்கள் புரிந்துகொள்வதில்லை; அவர்கள் கிருஷ்ணரைத் துவாபர யுகத்தில் காட்டியுள்ளனர். மக்கள் எவ்விதப் புரிந்துணர்வுமின்றி, தொடர்ந்தும் தங்கள் மனதில் தோன்றுவதையெல்லாம் கூறுகின்றனர். இதனாலேயே தந்தை கூறுகின்றார்: நீங்கள் முற்றிலும் விவேகமற்றவர்களாகி விட்டீர்கள்! தந்தை சர்வவியாபகர் என நீங்கள் கூறுகின்றீர்கள். வெளிப்புறமாகப் பார்க்கும்பொழுது, பக்தி மிகவும் அழகாக உள்ளது; அது அதிகப் பிரகாசத்தைக் கொண்டுள்ளது. உங்களிடம் அது போன்ற எதுவும் கிடையாது. நீங்கள் ஏனைய ஆன்மீக ஒன்றுகூடல்களுக்குச் செல்லும்பொழுது, அங்கு நிச்சயமாகச் சத்தம் இருக்கும், அவர்கள் பாடல்களைப் பாடுகின்றார்;கள். இங்கு, நீங்கள் பதிவுநாடாக்களை இசைப்பதையேனும் பாபா விரும்புவதில்லை. நீங்கள் மேலும் முன்னேறிச் செல்லும்பொழுது, இதுவும் ஒருவேளை முடிவிற்கு வரக்கூடும். தந்தை கூறுகின்றார்: அப்பாடல்கள் அனைத்தினதும் சாராம்சத்தை நான் உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றேன். உங்களுக்கு அவற்றின் அர்த்தம் தெரியும், ஏனெனில் இது ஒரு கல்வியாகும். நீங்கள் இராஜயோகம் கற்கின்றீர்கள் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். நீங்கள் குறைவாகக் கற்றால், பிரஜைகளில் ஒருவராக ஆகுவீர்கள். எனவே நீங்கள் மிகுந்த திறமைசாலிகளையே பின்பற்ற வேண்டும், ஏனெனில் அவர்கள் கல்வியில் அதிகக் கவனம் செலுத்துவதால், அதன்மூலம் நன்மை ஏற்படுகின்றது. மிக நன்றாக விளங்கப்படுத்துபவர்களிடமிருந்து கற்றுக்கொள்ளுங்கள். நிலையங்களிலுள்ள அனைவரும் மிக நன்றாக ஞானத்தை விளங்கப்படுத்துபவர்களையே நினைவுசெய்;கின்றார்கள். ஒரு நிலையத்தில் ஏற்கனவே சில பிரம்மாகுமாரிகள் இருப்பினும், அவர்கள் இன்னார் வரவேண்டும் எனக் கேட்கின்றார்கள், ஏனெனில் அவர் மிகவும் திறமைசாலி என அவர்கள் நினைக்கின்றார்கள். அப்படியாயின், அவருக்கு மதிப்பளிக்கப்பட வேண்டும். உங்களுக்கு மூத்தவர்களுக்கு மதிப்பளிக்கப்பட வேண்டும். இவர் ஞானத்தில் என்னை விடத் திறமைசாலி, எனவே அவர் நிச்சயமாக ஓர் உயர்ந்த அந்தஸ்தை அடைவார். இதில் எவ்வித அகங்காரமும் இருக்கக்கூடாது. மூத்தவர்களுக்கான கௌரவம்; பேணப்பட வேண்டும். ஒரு ஜனாதிபதி நிச்சயமாக அதிகளவில் கௌரவிக்கப்படுகின்றார். ஒவ்வொருவரின் கௌரவமும் வரிசைக்கிரமமானது. ஒருவருக்கொருவர் மதிப்பளிக்க வேண்டும். சட்டத்தரணிகளில் கூட வரிசைக்கிரமம் உள்ளது. ஒரு முக்கியமான வழக்கிற்கு மக்கள் மிகவும் திறமையான ஒரு சட்டத்தரணியையே ஏற்பாடு செய்கின்றார்;கள். சிலர் நூறாயிரக்கணக்கான ரூபாய்கள் செலவாகுகின்ற வழக்குகளையே எடுக்கின்றார்கள். அது நிச்சயமாக வரிசைக்கிரமமானது. யாராவதொருவர் என்னை விடவும் திறமைசாலியாயின், நான் அவருக்கு மதிப்பளிக்க வேண்டும். நிலையங்களும் பராமரிக்கப்பட வேண்டும். அனைத்துமே செய்யப்பட வேண்டும். பாபா நாள் முழுவதும் இதில் அக்கறை காட்டுகின்றார். எவ்வாறு கண்காட்சிகளை ஒழுங்குசெய்வது, எவ்வாறு நாங்கள் தமோபிரதானிலிருந்து சதோபிரதான் ஆகுவது என்பவற்றில் கவனம் செலுத்தப்பட வேண்டும். உங்களைச் சதோபிரதானாக்குவதற்கே தந்தை வந்துள்ளார். ஒரேயொரு தந்தையே தூய்மையாக்குபவர். இங்கு, கங்கையே தூய்மையாக்குபவர் என அவர்கள் கூறுகின்றனர், இதனாலேயே அவர்கள் அதில் பிறவிபிறவியாக நீராடுகின்றார்கள். எவ்வாறாயினும், அப்படிச் செய்வதனால், எவருமே தூய்மையாகவில்லை. அவை அனைத்தும் பக்தியாகும். ஓ தூய்மையாக்குபவரே, வாருங்கள்! என நீங்கள் கூவியழைப்பதால், அவர் நிச்சயமாகச் சங்கமயுகத்திலேயே வருகின்றார். அத்துடன் அவர் ஒரு தடவையே வருவார். நேபாளத்தில் அவர்கள் 8ம் நாள் பலி கொடுப்பதைப் போன்று, ஒவ்வொருவருக்கும் தத்தமது சொந்தச் சம்பிரதாயங்கள் உள்ளன. அவர்கள் ஒரு சிறு குழந்தையின் கரத்தில் (பயிற்சிக்காக) ஒரு துப்பாக்கியைக் கொடுத்துச் சுட வைப்பார்கள். அவரும் ஒரு பலி கொடுப்பார். அவர் வளர்ந்து பெரியவராகியதும் அவரால் ஒரு தடவையில் கன்றைக் கொல்லக்கூடியதாக இருக்கும். ஒருவர் குறைந்த பலத்தைப் பிரயோகித்து, அந்த விலங்கானது ஒரே தடவையில் கொல்லப்படாது விட்டால், அது பலியாகக் கருதப்பட மாட்டாது, அத்துடன் அது இறைவிக்குப் படைக்கப்படவும் மாட்டாது. அவை அனைத்தும் பக்தி மார்க்கமாகும். ஒவ்வொருவருக்கும் தத்தமது சொந்தக் கற்பனை உள்ளது. பலர் தமது கற்பனையாலே சீடர்கள் ஆகுகின்றார்கள். இங்கு இது முற்றிலும் புதிய விடயமாகும். குழந்தைகளாகிய நீங்கள் மாத்திரமே இதை அறிந்துகொள்ள முடியும். ஒரேயொரு தந்தையே இங்கிருந்தவாறு உலகின் ஆரம்பம், மத்தி, இறுதி பற்றிய ஞானத்தை உங்களுக்குக் கூறுகின்றார். நீங்களே சுயதரிசனச் சக்கரதாரிகள் என்ற சந்தோஷத்தைக் கொண்டிருக்கின்றீர்கள். வேறு எவராலும் இதனைப் புரிந்துகொள்ள முடியாது. நான் ஓர் ஒன்றுகூடலில், சுயதரிசனச் சக்கரதாரிகளான, அதிமேன்மையான பிராமணக் குல அலங்காரங்களே; என்று உங்களை அழைத்தால், நீங்கள் அதன் அர்த்தத்தைப் புரிந்துகொள்வீர்கள். புதியவர்கள் குழப்பமடைந்து என்ன கூறப்படுகின்றது என அதிசயிப்பார்கள், ஏனெனில் அவர்கள் விஷ்ணுவையே சுயதரிசனச் சக்கரதாரியாகக் கருதுகின்றனர். இது புதிய விடயமாகும். இதனாலேயே உங்களுக்குக் கூறப்படுகின்றது: சேவைக் களத்திற்குச் சென்றால், நீங்கள் அறிந்து கொள்வீர்கள். உங்களுடையது ஞானப் பாதையாகும். நீங்கள் ஜந்து விகாரங்களையும் வெற்றி கொள்கின்றீர்கள். உங்களின் யுத்தம் அந்த அசுரர்களுக்கு (ஜந்து விகாரங்கள்) எதிரானதாகும். நீங்கள் இப்பொழுது தேவர்களாகுவதால், யுத்தம் என்ற கேள்வியில்லை. அசுரர்கள் இருக்குமிடத்தில் தேவர்கள் இருக்க முடியாது. நீங்கள் தேவர்களாகப் போகின்ற பிராமணர்கள், அதற்காகவே முயற்சி செய்கின்றீர்கள். உருத்திரரின் ஞான யாகத்திற்குப் பிராமணர்கள் நிச்சயமாகத் தேவைப்படுகின்றனர். பிராமணர்களின்றி இந்த யாகம் இருக்க முடியாது. சிவனே உருத்திரர், எனவே கிருஷ்ணரின் பெயர் எங்கிருந்து வந்தது? நீங்கள் முழு உலகிலும் முற்றிலும் தனித்துவமானவர்கள், உங்களில் வெகுசிலரே இருக்கின்றீர்கள். சிட்டுக்குருவிகள் சமுத்திரத்தை விழுங்கியதாகக் கூறப்படுகின்றது. சமயநூல்களில் பல கட்டுக்கதைகள் உள்ளன. தந்தை கூறுகின்றார்: இப்பொழுது அவை அனைத்தையும் மறந்து, சதா என்னை மாத்திரம் நினைவுசெய்யுங்கள். ஆத்மாக்களே தந்தையை நினைவுசெய்கின்றார்கள். ஒரேயொரு தந்தையே உள்ளார். ஓ பரமாத்மா அல்லது ஓ கடவுளே என அவர்கள் கூறும்பொழுது, நீள்கோள வடிவை அவர்கள் நினைவுசெய்வதில்லை. அவர்கள் ஈஸ்வரர் அல்லது பிரபு எனக் கூறுகின்றனர். ஆத்மாக்கள் தந்தையிடமிருந்து அரைக்கல்பத்திற்குச் சந்தோஷத்தைப் பெற்றதனாலேயே, அவரைப் பக்தி மார்க்கத்தில் நினைவுசெய்கிறார்கள். நீங்கள் இப்பொழுது ஆத்மாக்களினதும், பரமாத்மாவினதும் ஞானத்தைப் பெற்றுள்ளீர்கள். ஆத்மாக்களாகிய நாங்கள் அனைவரும் அசரீரி உலகவாசிகள். நாங்கள் எங்கள் பாகங்களை நடிப்பதற்காக அங்கிருந்து வரிசைக்கிரமமாக வருகின்றோம். தேவர்களே முதலில் வருகின்றனர். கிறிஸ்துவிற்கு முன்னர் தேவ தர்மம் இருந்ததாகக் கூறப்படுகின்றது. அது 5000 வருடங்களுக்கான விடயமாகும். அம்மக்கள் ஏதோவொன்றை 50,000 வருடங்கள் பழைமையானது என்று கூறுகின்றார்கள். எவ்வாறாயினும் நாடகம் 5000 வருடங்களை மாத்திரமே கொண்டதென்பதால், 50,000 வருடங்கள் பழைமை வாய்ந்த எதுவுமே இருக்க முடியாது. இவையே பிரதான சமயங்களாகும். கட்டடங்கள் போன்றவை யாவும் இச்சமயங்களைச் சார்ந்தவர்களுக்கு உரியவை. ஆரம்பத்தில் அம்மக்;கள் ரஜோகுணி புத்தியைக் கொண்டிருந்தனர். இப்பொழுது அவர்கள் மேலும் அதிகமான தமோபிரதான் புத்தியைக் கொண்டவர்களாகி விட்டனர். கண்காட்சிகளில் அதிகளவு விளங்கப்படுத்தப்படுகின்றது. எவராலும் இதனைப் புரிந்துகொள்ள முடிவதில்லை. பிராமணர்களின் மரக்கன்;று நாட்டப்பட வேண்டும். எனவே ஞானம் பக்தியிலிருந்து வேறுபட்டது எனக் குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்தப்படுகின்றது. ஞானத்தின் மூலம் சற்கதி பெறப்படுகின்றது. இதனாலேயே கூறப்படுகின்றது: ஓ தூய்மையாக்குபவரே, வாருங்கள்! எங்களைத் துன்பத்திலிருந்து விடுவித்து, எங்கள் வழிகாட்டியாகி, எங்களை உங்களுடன் திரும்பவும் அழைத்துச் செல்லுங்கள்! தந்தை வந்து ஆத்மாக்களாகிய உங்களைத் தன்னுடன் திரும்பவும் அழைத்துச் செல்கின்றார். இங்கு சரீரங்கள் அனைத்தும் அழிக்கப்பட்டுவிடும். விநாசம் இடம்பெறும். சமயநூல்களில், ஒரு மகாபாரத யுத்தம் மாத்திரமே நினைவுகூரப்படுகின்றது. இது அN;த மகாபாரத யுத்தம் எனக் கூறப்பட்டுள்ளது. அது இடம்பெற்றாக வேண்டும். தொடர்ந்தும் அனைவருக்கும் தந்தையின் அறிமுகத்தைக் கொடுங்கள். தமோபிரதானிலிருந்து சதோபிரதான் ஆகுவதற்கு ஒரேயொரு வழியே உள்ளது. தந்தை கூறுகின்றார்: சதா என்னை மாத்திரம் நினைவுசெய்யுங்கள், உங்கள் பாவங்கள் அழிக்கப்பட்டு, ஆத்மா என்னுடன் வீட்டிற்குத் திரும்பி வருவார். அனைவருக்கும் இச்செய்தியைத் தொடர்ந்தும் கொடுங்கள். பலரும் நன்மை அடைவார்கள். அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தந்தை தாயாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. இக்கல்வியில் திறமைசாலிகளாக உள்ளவர்களினதும், மிகவும் நன்றாக விளங்கப்படுத்துபவர்களினதும் சகவாசத்தைக் கொண்டிருங்கள். அவர்களுக்கு மதிப்பளியுங்கள். எதையிட்டும் ஒருபொழுதும் அகங்காரம் கொண்டிருக்காதீர்கள்.

2. புதிய ஞானக் கருத்துக்களை மிக நன்றாகப் புரிந்துகொண்டு, விளங்கப்படுத்துங்கள். நீங்களே சுயதரிசனச் சக்கரதாரிகள் என்ற சந்தோஷத்தைப் பேணுங்கள்.

ஆசீர்வாதம்:
நீங்கள் ஓரேயொரு தந்தையின் நினைவில் சதா உங்களை இழந்துள்ள, ஒரு பற்றற்ற பார்வையாளராகி, உங்கள் ஸ்திதியை நிலையானதாகவும், ஸ்திரமானதாகவும் ஆக்குவீர்களாக.

இப்பொழுது, நீங்கள் என்றுமே எண்ணாத, கனவு கூட கண்டிராத அத்தகைய பரீட்சைத்தாள்கள் வரும். எவ்வாறாயினும், நீங்கள் ஓர் எல்லையற்ற நாடகத்தை ஒரு பற்றற்ற பார்வையாளராகப் பார்ப்பதைப் போல் உங்கள் பயிற்சியும் இருக்கட்டும். துன்பமோ அல்லது சந்தோஷமோ, அது எவ்விதமான வித்தியாசத்தையும் ஏற்படுத்த மாட்டாது. அதேபோன்று, ஒருவருக்குக் களிப்பூட்டும் பாகம் இருக்கலாம், இன்னுமோர் அன்பான ஆத்மா ஓர் அதி துன்பமான பாகத்தைக் கொண்டிருக்கலாம். ஒவ்வொருவரினது பாகத்தையும் பற்றற்ற பார்வையாளராகப் பாருங்கள், உங்கள் ஸ்திதி நிலையானதாகவும், ஸ்திரமானதாகவும் இருக்கட்டும். எவ்வாறாயினும், நீங்கள் ஓரேயொரு தந்தையின் நினைவில் உங்களை இழந்திருக்கும்பொழுதே, உங்களால் அத்தகையதொரு ஸ்திதியைக் கொண்டிருக்க முடியும்.

சுலோகம்:
திடசங்கற்பத்துடன் கூடிய நம்பிக்கை மூலம் உங்கள் பாக்கியத்தை நிர்ணயித்துக் கொள்ளுங்கள், அப்பொழுது நீங்கள் என்றுமே கவலையற்றவராக இருப்பீர்கள்.