08.11.20    Avyakt Bapdada     Tamil Lanka Murli    01.10.87     Om Shanti     Madhuban


வாழ்க்கையை மாற்றுவதற்கான அடிப்படை, இறையன்பே ஆகும்.


இன்று, அன்புக்கடல் தனது அன்பான குழந்தைகளைச் சந்திப்பதற்காக வந்திருக்கிறார். தந்தையினதும் குழந்தைகளினதும் அன்பானது இந்த உலகையே அன்பெனும் இழையால் கட்டுகிறது. அன்புக்கடலினதும் அன்பினால் நிறைந்த நதிகளும் சந்திக்கும்போது, அன்பு நிறைந்த நதிகளும் தந்தையைப் போல் மாஸ்ரர் அன்புக்கடல்களாக ஆகுகிறார்கள். இதனாலேயே, உலகிலுள்ள ஆத்மாக்கள் இயல்பாகவே அன்பெனும் அனுபவத்தினால் தொடர்ந்து நெருக்கமாக வருகிறார்கள். எந்தளவிற்கு இந்த ஆத்மாக்களுக்குத் தெரியாமல் இருந்தாலும், நீண்ட காலத்திற்குக் குடும்பத்தின் அன்பில்லாமல் அவர்கள் கல்லைப் போல் ஆகியிருந்தாலும், தூய அன்பாலும் இறையன்பாலும், கல்லைப் போன்ற இந்த ஆத்மாக்களும், இறை குடும்பத்தின் அன்பினால் உருகி, நீரைப் போல் ஆகிவிடுகிறார்கள். இதுவே இறை குடும்பத்தின் அன்பின் அற்புதம் ஆகும். அவர்கள் எந்தளவிற்கு ஒதுங்கி இருந்தாலும், இறையன்பானது இயல்பாகவே அவர்களை ஒரு காந்தம் போல் கவர்ந்து, நெருக்கமாகக் கொண்டுவந்து விடுகிறது. இதுவே இறையன்பின் நடைமுறைப் பலன் என்று அழைக்கப்படுகிறது. எவ்வளவுதான் சிலர் தங்களை வேறு பாதையில் இருப்பவர்களாகக் கருதினாலும், இறையன்பானது அவர்களை ஒத்துழைப்பவர்களாக்கி, நாம் அனைவரும் ஒன்றே என்ற இழையினால் கட்டிவிடுகிறது. அத்துடன் அவர்களை முன்னேறச் செய்கிறது. உங்களுக்கு இந்த அனுபவம் இருக்கிறதல்லவா?

அன்பானது அனைத்திற்கும் முதலில் அவர்களை ஒத்துழைக்கச் செய்கிறது. படிப்படியாக அவர்களை ஒத்துழைக்கச் செய்வதன் மூலம், சரியான வேளையில் இயல்பாகவே அது அவர்களை இலகு யோகிகளாகவும் ஆக்கிவிடும். ஒத்துழைப்பதன் அடையாளம், இன்று, அவர்கள் ஒத்துழைப்பார்கள். நாளை, அவர்கள் இலகு யோகிகள் ஆகுவார்கள். மாற்றத்தின் அடிப்படை இறையன்பே ஆகும். அதாவது, அதுவே வாழ்க்கையின் மாற்றத்தின் விதையாகும். தங்களில் இறையன்பை அனுபவம் செய்வதன் விதையை வைத்திருக்கும் ஆத்மாக்கள் இயல்பாகவே ஒத்துழைப்பவராக இருக்கும் மரத்தை வளரச் செய்வார்கள். சரியான வேளையில், இலகு யோகிகள் ஆகும் பழமும் புலப்படும். ஏனென்றால், மாற்றத்திற்கான விதை நிச்சயமாகப் பழத்தைக் கொடுக்கும். சில பழங்கள் விரைவாகத் தோன்றுகின்றன. ஏனைய பழங்கள் அதற்கேயுரிய நேரத்தில் தோன்றுகின்றன. மாஸ்ரர் அன்புக் கடல்களான, உலக சேவையாளர் குழந்தைகளான நீங்கள் அனைவரும் எங்கும் என்ன செய்கிறீர்கள் என்று பாருங்கள்! நீங்கள் இறை குடும்பத்தின் அன்பெனும் விதைகளை உலகெங்கும் விதைக்கிறீர்கள். நீங்கள் எங்கே சென்றாலும், ஒருவர் ஆஸ்திகரோ அல்லது நாஸ்திகரோ, அவர் தந்தையை அறிந்திருக்காவிட்டாலும் அல்லது ஏற்றுக் கொள்ளாவிட்டாலும், அவர் நிச்சயமாக சிவ குலத்தைச் சேர்ந்த பிரம்மாகுமார்களும் பிரம்மாகுமாரிகளுமான உங்களிடமிருந்து பெறுகின்ற இறை குடும்பத்தின் அன்பைப் போன்ற அன்பை வேறு எங்கும் தன்னால் பெற முடியாது என உணர்வார். அத்துடன் இந்த அன்பும் கனிவும் சாதாரணமானதல்ல, இது தனித்துவமான அன்பு, அதாவது, இது இறையன்பு என்பதையும் அவர் ஏற்றுக் கொள்வார். எனவே, நாஸ்திகராக இருந்த அவர் மறைமுகமாக ஓர் ஆஸ்திகர் ஆகிவிட்டார், இல்லையா? இது இறையன்பாக இருப்பதனால், அது எங்கிருந்து வந்தது? சூரியன் இருப்பதை அதன் கதிர்கள் இயல்பாகவே நிரூபிக்கின்றன. இறையன்பும் தனித்துவமான ஆன்மீக அன்பும் சுயநலமற்ற அன்பும் இயல்பாகவே அருள்பவரான தந்தை இருப்பதை நிரூபிக்கின்றன. அவர்கள் இறையன்பை அனுபவம் செய்வதனால், அவர்களின் உறவுமுறையானது மறைமுகமாக அன்புக் கடலான தந்தையுடன் ஏற்படுத்தப்படுகிறது. ஆனால் அவர்களுக்கு இது தெரியாது. ஏனென்றால், விதையானவர் முதலில் மறைமுகமாக இருப்பார். ஆனால் மரம் தெளிவாகப் புலப்படும். எனவே, இறையன்பின் விதையானது உங்கள் அனைவரையும் காலத்திற்கேற்ப நடைமுறையில் ஒத்துழைப்பவர்களாகவும் இலகுயோகிகளாகவும் வெளிப்படுத்துகிறது. அது தொடர்ந்து இடம்பெறும். எனவே, நீங்கள் அனைவரும் இறையன்பின் விதையைத் தூவும் சேவையைச் செய்கிறீர்கள். நீங்கள் நடைமுறையிலும் இரண்டு விசேடமான இலைகளான நல்லாசிகளும் தூய உணர்வுகளும் அவர்களை ஒத்துழைப்பவர்கள் ஆக்குவதைக் கண்டீர்கள். இந்த அடிமரம் இப்போது வளர்ந்து நடைமுறைப் பலனைக் காட்டும்.

குழந்தைகள் அனைவரினதும் பல்வகையான சேவைகளைப் பார்ப்பதில் பாப்தாதா மகிழ்ச்சி அடைகிறார். சொற்பொழிவுகள் ஆற்றிய குழந்தைகளாக இருந்தாலும், பௌதீகமான சேவை செய்த குழந்தைகளாக இருந்தாலும், சேவையின் வெற்றி அனைவரின் ஒத்துழைப்பினாலுமே பெறப்படுகிறது. ஒருவர் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்தாலென்ன அல்லது உணவுக்குப் பொறுப்பாக இருந்தாலென்ன, அனைவரின் ஐந்து விரல்களின் ஒத்துழைப்பாலேயே, அது எத்தனை பெரிய அல்லது எத்தனை மேன்மையான பணியாக இருந்தாலும், இலகுவாக நிறைவேறுகிறது. அதேபோல், ஒவ்வொரு பிராமணக் குழந்தையின் ஒத்துழைப்பாலும், ஒவ்வொரு பணியும் நீங்கள் நினைத்ததை விட ஆயிரம் மடங்கு இலகுவானதாக நிறைவேறுகிறது. இது யாருடைய அற்புதம்? அனைவருடையதும். இந்தப் பணியில் யாரெல்லாம் ஒத்துழைத்தார்களோ, நீங்கள் சுத்தத்தைப் பேணியிருந்தாலென்ன, மேசைகளைத் துடைந்திருந்தாலென்ன, அனைவரின் ஒத்துழைப்பின் பெறுபேறும் வெற்றியடைந்துள்ளது. இந்த ஒன்றுகூடலின் சக்தி மகத்துவமானது. இது மதுவனத்திற்கு வந்த குழந்தைகளால் மட்டும் நிகழவில்லை என்பதை பாப்தாதா பார்த்தார். ஏனென்றால், இங்கு பௌதீகமாக இல்லாத குழந்தைகளும், இந்தத் தேசத்திலும் வெளிநாடுகளிலும் உள்ள பிராமணக் குழந்தைகள் அனைவரும், தமது மனதில் நல்லாசிகளாலும் தூய உணர்வுகளாலும் ஒத்துழைத்தார்கள். ஆத்மாக்கள் அனைவரினதும் நல்லாசிகளினதும் தூய உணர்வுகளினதும் இந்தக் கோட்டையானது ஆத்மாக்களில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது. இதற்குக் கருவியாக சக்திகளோ அல்லது பாண்டவர்களோ இருக்கக்கூடும். ஆமாம், ஒவ்வொரு பணிக்கும் விசேடமான சேவையாளர்கள் கருவிகள் ஆகுகிறார்கள். ஆனால் சூழலின் கோட்டை அனைவரின் ஒத்துழைப்பினால் மட்டுமே உருவாக்கப்படுகிறது. கருவிகளாக இருந்த குழந்தைகளை பாப்தாதா பாராட்டுகிறார். ஆனால், அனைத்திற்கும் மேலாக அவர் குழந்தைகள் எல்லோரையும் பாராட்டுகிறார். தந்தை அவ்யக்த் ஆகியிருப்பதனால், அவருக்குக் குழந்தைகளான நீங்கள் என்ன வாழ்த்துக்களைத் தெரிவிப்பீர்கள்? அவர் பௌதீகமான ரூபத்தில் குழந்தைகளான உங்களைக் கருவிகள் ஆக்கியுள்ளார். இதனாலேயே, பாப்தாதா சதா குழந்தைகளான உங்களின் பாடல்களை மட்டுமே பாடுகிறார். நீங்கள் தந்தையின் புகழ்ச்சிப் பாடல்களைப் பாடுகிறீர்கள். தந்தை உங்களின் பாடல்களைப் பாடுகிறார்.

நீங்கள் என்ன செய்திருந்தாலும், அதை மிக நன்றாகச் செய்தீர்கள். சொற்பொழிவு கொடுத்தவர்கள், நல்ல சொற்பொழிவுகள் ஆற்றினார்கள். மேடையை அலங்கரித்தவர்கள், அதை நன்றாக அலங்கரித்திருந்தார்கள். உணவைத் தயாரித்தவர்கள், உணவைப் பரிமாறியவர்கள், காய்கறி வெட்டியவர்கள் குறிப்பாக யோகியுக்தாக இருந்தார்கள். முதல் அத்திவாரம், காய்கறிகளை வெட்டுதல். காய்கறிகளை வெட்டாவிட்டால், என்ன உணவைத் தயாரிக்க முடியும்? சகல துறைகளைச் சேர்ந்தவர்களும் சகலகலாவல்ல சேவைக்கும் கருவிகள் ஆகினார்கள். சுத்தத்தைப் பேணியவர்கள், அனைத்தையும் சுத்தமாக வைத்திருக்காவிட்டால், அந்தளவு ஆதிக்கம் ஏற்படாது என்றும் உங்களுக்குக் கூறப்பட்டது. ஒவ்வொருவரின் முகமும் கடவுளின் அன்பினால் நிறைந்திருக்காவிட்டால், எவ்வாறு சேவையில் வெற்றி ஏற்படும்? நீங்கள் ஒவ்வொருவரும் என்ன வேலையைச் செய்திருந்தாலும், நீங்கள் அதை அன்பால் நிரப்பியே செய்தீர்கள். இதனாலேயே, அன்பின் விதை அவர்களில் தூவப்பட்டது. நீங்கள் அதை ஊக்கத்துடனும் உற்சாகத்துடனும் செய்தீர்கள். அதனாலேயே மற்றவர்களுக்கும் ஊக்கமும் உற்சாகமும் ஏற்பட்டது. வெவ்வேறானவர்கள் இருந்தாலும், அன்பெனும் இழையால், அவர்கள் ஒற்றுமையைப் பற்றி மட்டுமே பேசினார்கள். இதுவே சூழலின் குடையின் சிறப்பியல்பாகும். இந்தச் சூழல் பாதுகாப்புக் குடை ஆகுகிறது. எனவே, பாதுகாப்புக் குடையின் கீழ் இருந்ததால், அவர்களிடம் என்ன வகையான சம்ஸ்காரங்கள் இருந்தாலும், அவர்கள் அன்பின் ஆதிக்கத்தில் திளைத்திருந்தார்கள். உங்களுக்குப் புரிகிறதா? நீங்கள் எல்லோரும் சகல கடமைகளினதும் (பொறுப்புக்கள்) மகத்துவமான பொறுப்புக்களைக் கொண்டிருந்தீர்கள். நீங்கள் அனைவரும் சேவை செய்தீர்கள். சூழலின் காரணத்தினால், அவர்கள் வேறு எதையாவது பேச விரும்பினாலும், அவர்களால் அவ்வாறு செய்ய முடியவில்லை. அவர்களின் மனங்களில் எதையாவது நினைத்தாலும், அவர்களால் அதைப் பற்றிப் பேச முடியவில்லை. ஏனென்றால், உங்கள் அனைவரின் வாழ்க்கைகளின் நடைமுறை மாற்றத்தைப் பார்க்கும்போது, அவர்களும் இயல்பாகவே தொடர்ந்து மாற்றத்தை ஏற்படுத்துவதற்குத் தூண்டப்படுகிறார்கள். நீங்கள் நடைமுறை அத்தாட்சியைக் கண்டீர்கள், இல்லையா? சமயநூல்களின் அத்தாட்சியை விட நடைமுறை அத்தாட்சியே மிகவும் சக்திவாய்ந்தது. நடைமுறை அத்தாட்சியின் முன்னால் ஏனைய சகல வகையான அத்தாட்சிகளும் அமிழ்ந்து போகின்றன. இதுவே சேவையின் பெறுபேறு. இப்போதும், அன்பின் ஒத்துழைப்பு என்ற சிறப்பியல்பால் நீங்கள் தொடர்ந்து அவர்களை நெருக்கமாகக் கொண்டுவந்தால், அவர்கள் மேலும் தமது ஒத்துழைப்பில் தொடர்ந்து முன்னேறுவார்கள். எவ்வாறாயினும், சகல அதிகாரங்களின் ஒத்துழைப்பும் இருந்தால் மட்டுமே வெளிப்படுத்துகையின் சத்தம் உரத்து ஒலிக்கும்.

விசேடமான அதிகாரங்கள் அனைத்தும் ஒன்றுசேர்ந்து, ஒரே குரலில் உரத்துப் பேசினால் மட்டுமே உலகின் முன்னால் வெளிப்படுத்துகையின் திரைகள் திறக்கும். எனவே, தற்சமயம் நீங்கள் செய்த சேவைக்கான திட்டங்கள் இந்த நோக்கத்திற்காகவே, இல்லையா? சகல துறைகளையும் சேர்ந்தவர்கள், அதாவது, சகல அதிகாரங்களும் எங்களுடன் இணைந்து, ஒத்துழைப்பவர்களாகவும் அன்பாகவும் ஆகினால், அவர்கள் ஓர் உறவுமுறையை ஏற்படுத்துவதுடன் இலகு யோகிகளாகவும் ஆகுவார்கள். ஓர் அதிகாரமேனும் ஒத்துழைக்காவிட்டால், குளோபல் ஒத்துழைப்பு என நீங்கள் எடுத்துக்கொண்டுள்ள இந்தப் பணி எவ்வாறு வெற்றியடையும்?

விசேடமான அதிகாரங்களுக்கான அத்திவாரம் இப்போது இடப்பட்டுள்ளது. மதத்தின் துறை மிகவும் மகத்துவமான அதிகாரம், அல்லவா? அந்த விசேடமான அதிகாரத்துடன் இப்போது அத்திவாரம் ஆரம்பமாகிறது. அன்பின் விளைவை நீங்கள் கண்டீர்கள், இல்லையா? மக்கள் என்ன சொல்கிறார்கள்? எவ்வாறு உங்களால் ஒன்றாகப் பலரை இங்கே அழைக்க முடிந்தது? (இந்தியாவிலுள்ள மகாமண்டலேஸ்வரர்கள் அனைவரினதும் முதலாவது கருத்தரங்கு இடம்பெற்றது). அந்த மக்களும் இதையிட்டு வியப்படைகிறார்கள், அல்லவா? எவ்வாறாயினும், இறையன்பு என்ற ஒரேயொரு இழை இருந்தது. இதனாலேயே, அவர்களுக்கு வேறுபட்ட அபிப்பிராயங்கள் இருந்தாலும், ஒத்துழைக்க வேண்டும் என்ற ஒரேயொரு எண்ணமே இருந்தது. அதேபோன்று, சகல தொழில் துறையினரையும் ஒத்துழைக்கச் செய்யுங்கள். அவர்கள் அவ்வாறு ஆகுகிறார்கள். ஆனால், அவர்களை மேலும் நெருக்கமாகக் கொண்டுவந்து, மேலும் ஒத்துழைக்கச் செய்யுங்கள். ஏனென்றால், பொன்விழா இப்போது நிறைவு பெற்றுவிட்டது. எனவே, இப்போது நீங்கள் வெளிப்படுத்துகைக்கு மேலும் நெருங்கி வந்துவிட்டீர்கள். வைர விழா என்றால் வெளிப்படுத்துகையின் சத்தம் உரத்தும் தெளிவாகவும் ஒலிக்க வேண்டும் என்று அர்த்தமாகும். எனவே, இந்த வருடம், வெளிப்படுத்துகையின் திரை திறக்க ஆரம்பித்து விட்டது. ஒருபுறம், வெளிநாடுகளினூடாக பாரதத்தில் வெளிப்படுத்துகை இடம்பெற்றது. இன்னொரு புறம், மகாமண்டலேஸ்வரர்களின் மகத்தான பணியின் வெற்றி ஏற்பட்டது. வெளிநாட்டில், ஐக்கிய நாடுகள் அமையம் கருவியாகியது. அவர்கள் குறிப்பாக மிகவும் பிரபல்யமானவர்கள். பாரதத்தில், மதத்தின் அதிகாரம் மிகவும் பிரபல்யமானது. எனவே, மதத்தின் அதிகாரத்தினூடாக தர்மாத்மாக்களின் வெளிப்படுத்துகையை ஏற்படுத்துதல் என்பது வெளிப்படுத்துகையின் திரையைத் திறக்க ஆரம்பிப்பதாகும். இன்னமும், அது திறக்க ஆரம்பித்தே உள்ளது. இன்னும் திறக்க வேண்டியுள்ளது. அது முழுமையாகத் திறக்கவில்லை. இது திறக்க ஆரம்பிக்கிறது என்று மட்டுமே உள்ளது. அந்தப் பணிக்கு வெளிநாட்டில் உள்ள குழந்தைகள் கருவிகள் ஆகினார்கள். அதுவும் ஒரு விசேடமான பணியே. வெளிப்படுத்தும் விசேடமான பணியில், நீங்கள் இந்தப் பணிக்குக் கருவிகள் ஆகினீர்கள். இந்த இறுதி வெளிப்படுத்துகையில் கதாநாயக பாகத்தை நடிப்பதற்குக் கருவிகள் ஆகிய வெளிநாட்டுக் குழந்தைகளுக்கு பாப்தாதா விசேடமான பாராட்டுக்களைத் தெரிவிக்கிறார். நீங்கள் பாரதத்தில் குழப்பத்தை உருவாக்கினீர்கள், இல்லையா? இந்தச் சத்தம் அனைவரின் காதுகளையும் வந்தடைந்தது. வெளிநாட்டின் இந்தச் சத்தம் குறைந்தபட்சம் பாரதத்தின் கும்பகர்ணர்களை எழுப்புவதற்குக் கருவி ஆகியது. எவ்வாறாயினும், இன்னமும், இந்தச் சத்தம் கேட்டுள்ளதே தவிர, அவர்கள் விழித்தெழ வேண்டியுள்ளது. நீங்கள் அவர்களை விழித்தெழச் செய்ய வேண்டும். இந்தச் சத்தம் அவர்களின் காதுகளை மட்டுமே சென்றடைந்துள்ளது. தூக்கத்தில் உள்ள ஒருவருக்கு ஒரு சத்தம் கேட்டால், அவர் சிறிதளவு அசைவார். சிறியதொரு அசைவு காணப்படும். எனவே, அந்த அசைவு உருவாக்கப்பட்டுள்ளது. அந்த அசைவினால், அவர்கள் சிறிதளவு விழித்துள்ளார்கள். அத்துடன் இதில் ஏதோவொன்று இருக்கிறது என்பதை அவர்கள் புரிந்து கொண்டுள்ளார்கள். நீங்கள் உரத்த சத்தம் செய்யும்போது, அவர்கள் விழித்தெழுவார்கள். இப்போது செய்த சத்தம், முன்னரை விடச் சிறிதளவு உரத்து ஒலித்தது. அதேபோன்று, சகல அதிகாரங்களும் ஒன்றாக மேடையில் ஒரு சிநே-மிலனை (அன்பான சந்திப்பு) வைத்தால் அது அற்புதமாக இருக்கும். இறை பணியின் வெளிப்படுத்துகை சகல அதிகாரங்களினதும் ஆத்மாக்களால் ஆரம்பித்து வைக்கப்படும்போது, வெளிப்படுத்துகையின் திரை முழுமையாகத் திறக்கும். இதனாலேயே, நீங்கள் இப்போது செய்யும் நிகழ்ச்சிகளில், சகல அதிகாரங்களினதும் சிநேமிலன் இடம்பெற வேண்டும் என்ற இலக்கை வைத்திருக்க வேண்டும். சகல அதிகாரங்களினதும் சிநேமிலன் இடம்பெற முடியும். உதாரணமாக, சாதாரணமான சாதுக்களை நீங்கள் அழைத்தால், அது பெரிய விடயமல்ல. ஆனால், நீங்கள் சகல மகாமண்டலேஸ்வரர்களையும் அழைத்தீர்கள். உண்மையில், சங்கராச்சாரியார் வந்திருந்தால், இந்த ஒன்றுகூடலில் மகத்தான சிறப்பு இருந்திருக்கும். எவ்வாறாயினும், அவரின் பாக்கியமும் இப்போது திறக்கும். அவர் குறைந்தபட்சம் அகத்தே ஒத்துழைக்கிறார். குழந்தைகள் மிகக் கடினமாக உழைத்திருக்கிறார்கள். ஆனால் மக்களின் அபிப்பிராயங்களையும் கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது. சகல அதிகாரங்களும் ஒன்றுசேர்ந்து, அதிமேன்மையான அதிகாரம், இறை அதிகாரம், ஆன்மீக அதிகாரம் ஒரேயொரு கடவுளின் அதிகாரமே எனக்கூறும் அந்த நாளும் வரும். இதனாலேயே, நீங்கள் நீண்ட காலத்திற்கான திட்டத்தைச் செய்துள்ளீர்கள், இல்லையா? இந்தக் காலம் முழுவதும் உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அதனால் உங்களால் அனைவரையும் அன்பெனும் இழையால் கட்டி, அவர்களை நெருக்கமாகக் கொண்டுவர முடியும். இந்த அன்பானது காந்தம் போன்று ஆகும். அதனால், அவர்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து ஒரு குழுவாகத் தந்தையின் மேடையில் வருவார்கள். நீங்கள் இத்தகைய திட்டத்தைச் செய்திருக்கிறீர்கள், அல்லவா? அச்சா.

சேவையாளர்களான நீங்கள் அனைவரும் நீங்கள் செய்த சேவை அனைத்தினதும் நடைமுறைப் பலனைப் பெற்றுள்ளீர்கள். இல்லாவிட்டால், இது இப்போது புதியவர்கள் பாபாவைச் சந்திக்கும் முறையாகும். நீங்கள் அனைவரும் தொடர்ந்து சந்திப்புக்களைக் கொண்டாடியவண்ணம் ஓய்வெடுக்கும் ஸ்திதியை இப்போது அடைந்து விட்டீர்கள். நீங்கள் இப்போது உங்களின் இளைய சகோதர, சகோதரிகளுக்கு அவர்களின் முறையைக் கொடுக்கிறீர்கள். நீங்கள் ஓய்வெடுக்கும் ஸ்திதியை அடைந்துவிட்டதால், மற்றவர்களுக்கு ஒரு வாய்ப்பை வழங்குகிறீர்கள். ஆமாம், அனைவரின் ஆசைகளும் தொடர்ந்து அதிகரிக்கும். இப்போது தமக்கும் பாபாவைச் சந்திப்பதற்கு ஒரு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என அனைவரும் கூறுவார்கள். எவ்வளவு அதிகமாக நீங்கள் பெறுகிறீர்களோ, அந்தளவிற்கு உங்களின் ஆசைகளும் அதிகரிக்கும். அப்போது நீங்கள் என்ன செய்வீர்கள்? மற்றவர்களுக்கு ஒரு வாய்ப்பை வழங்குவதென்றால், உங்களை முழுமையாகத் திருப்தியானவர்களாக அனுபவம் செய்வதாகும். ஏனென்றால், பழையவர்கள் அனுபவசாலிகள் ஆவார்கள். நீங்கள் பேறுகளின் சொரூபங்கள். பேறுகளின் சொரூபங்களாக இருக்கும் ஆத்மாக்கள், அனைவருக்காகவும் நல்லாசிகளைக் கொண்டிருப்பார்கள். மற்றவர்களை முன்னால் வைப்பார்கள். அல்லது, நீங்களும் இப்போது சந்திக்க வேண்டும் என நீங்கள் நினைக்கிறீர்களா? இதிலும் நீங்கள் சுயநலமற்றவர்களாக இருக்க வேண்டும். நீங்கள் விவேகிகள். நீங்கள் ஆரம்பம், மத்தி, முடிவினைப் புரிந்து கொள்பவர்கள். நீங்கள் காலத்தையும் புரிந்து கொள்கிறீர்கள். சடப்பொருளின் ஆதிக்கத்தையும் நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். நீங்கள் ஒவ்வொருவரும் உங்களின் பாகத்தைப் புரிந்து கொள்கிறீர்கள். பாப்தாதாவும் எப்போதும் குழந்தைகளான உங்களைச் சந்திக்கவே விரும்புகிறார். குழந்தைகள் சந்திக்க விரும்பினால், அதற்குக் காரணம், தந்தை முதலில் உங்களைச் சந்திக்க விரும்புவதாலேயே ஆகும். இதனாலேயே, குழந்தைகளான நீங்களும் சந்திக்க விரும்புகிறீர்கள். எவ்வாறாயினும், தந்தை காலத்தையும் சடப்பொருளையும் கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது. அவர் இந்த உலகிற்கு வரும்போது, இந்த உலகின் அனைத்தையும் அவர் கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது. அவர் இங்கிருந்து தொலைவில் சூட்சுமவதனத்தில் இருக்கும்போது, அங்கு தண்ணீர், நேரம் அல்லது தங்குமிடம் என்ற எந்தவிதமான பிரச்சனையும் கிடையாது. குஜராத்தில் இருப்பவர்கள் அண்மையில் வசிக்கிறார்கள். எனவே, நீங்கள் அதன் பலனைப் பெற்றுள்ளீர்கள், இல்லையா? குஜராத்தில் இருப்பவர்கள் எப்போதும் தயாராக இருப்பது அவர்களின் சிறப்பியல்பாகும். நீங்கள் ஹா ஜி (ஆமாம்) என்ற பாடத்தை மிகவும் உறுதியாக்கியுள்ளீர்கள். உங்களுக்குத் தங்குவதற்கு எங்கு இடம் கொடுத்தாலும் நீங்கள் அங்கே தங்குகிறீர்கள். சகல சூழ்நிலைகளிலும் சந்தோஷமாக இருக்கும் சிறப்பியல்பும் உங்களுக்கு உள்ளது. குஜராத்தில் நல்ல வளர்ச்சி காணப்படுகிறது. சேவைக்கான உற்சாகம், உங்களைத் தடைகளில் இருந்து விடுவிப்பதுடன், மற்றவர்களுக்கும் நன்மையை ஏற்படுத்துகிறது. சேவை செய்யும் உணர்வைக் கொண்டிருப்பதிலும் வெற்றி ஏற்படுகிறது. சேவை செய்வதில் நான் என்ற உணர்வு இருக்குமாயின், அதைச் சேவை செய்வதற்கான தூண்டுதல் என்று அழைக்க முடியாது. சேவைக்கான உணர்வுகள் வெற்றியை ஏற்படுத்தும். அதில் நான் என்ற உணர்வு கலக்குமாயின், அதற்கு அதிக கடினமான உழைப்பும் அதிகளவு நேரமும் தேவைப்படும். நீங்களும் திருப்தியாக இருக்கமாட்டீர்கள். சேவை செய்வதற்கான தூண்டுதல் உள்ள குழந்தைகள், தாங்களும் முன்னேறுவதுடன் மற்றவர்களையும் முன்னேறச் செய்வார்கள். நீங்கள் சதா பறக்கும் ஸ்திதியை அனுபவம் செய்வீர்கள். உங்களுக்கு நல்ல தைரியம் உள்ளது. எங்கு தைரியம் உள்ளதோ, அங்கு ஒவ்வொரு பணியிலும் பாப்தாதா எப்போதும் உதவி செய்வார்.

மகாராத்திகள் எவ்வாறாயினும் மகாதானிகளே. சேவை செய்வதற்கு வந்திருக்கும் மகாராத்திகளான நீங்கள் அனைவரும், மகாதானிகளா? ஆசீர்வாதங்களை அருள்பவர்களா? மற்றவர்களுக்கு ஒரு வாய்ப்பை அளிப்பதும் மகாதானமே, ஓர் ஆசீர்வாதமே ஆகும். நீண்ட காலம் பிரிந்திருந்து இப்போது கண்டெடுக்கப்பட்டுள்ள குழந்தைகள், காலத்திற்கேற்ப தமது பாகங்களை நடிப்பதில் எப்போதும் ஒத்துழைக்கிறார்கள். தொடர்ந்தும் அவ்வாறு செய்வார்கள். ஆமாம், ஆசை இருக்கும். ஏனென்றால், இது தூய ஆசையாகும். எவ்வாறாயினும், அதை எவ்வாறு அமிழ்த்துவது என்பதையும் நீங்கள் அறிவீர்கள். இதனாலேயே, நீங்கள் அனைவரும் எப்போதும் திருப்தியாக இருக்கிறீர்கள்.

பாப்தாதாவும் ஒவ்வொரு குழந்தையுடனும் ஒரு சந்திப்பைக் கொண்டாட விரும்புகிறார். அதனால் எந்தவிதமான கால வரையறைகளும் இருக்கக்கூடாது என்றும் விரும்புகிறார். எவ்வாறாயினும், உங்களின் இந்த உலகில் இந்த வரையறைகள் அனைத்தும் கருத்தில் கொள்ளப்பட வேண்டியுள்ளது. இல்லாவிட்டால், பாப்தாதா ஒவ்வொரு விசேட இரத்தினத்தின் புகழையும் பாடினால், அது மிக மேன்மையானதாக இருக்கும். குறைந்தபட்சம் ஒவ்வொரு குழந்தையின் சிறப்பியல்புகளைப் பற்றி ஒரு பாடலாவது இயற்ற வேண்டியிருக்கும், ஆனால்............ இதனாலேயே, எந்தவிதமான வரையறைகளும் இல்லாத சூட்சுமவதனத்திற்குச் செல்லும்படி பாபா உங்களைக் கேட்கிறார்.

கடவுளின் அன்பிலே அமிழ்ந்திருக்கும் குழந்தைகள் அனைவருக்கும், ஒவ்வொரு விநாடியும் அனைவருடனும் ஒத்துழைப்பவர்களுக்கும், வெளிப்படுத்துகையின் திரையை நீக்கி, உலகிற்குத் தந்தையை வெளிப்படுத்துபவர்களுக்கும், கவர்கின்ற ரூபங்களாகி, நடைமுறை அத்தாட்சியைக் கொடுக்கும் சொரூபங்கள் ஆகும் ஆத்மாக்கள் அனைவருக்கும், எப்போதும் தந்தையினதும் அனைவரினதும் பணியில் ஒத்துழைப்பவர்களாகி, ஒரேயொருவரின் பெயரைப் பெருமைப்படுத்துபவர்களுக்கும், உலகின் இஷ்ட தெய்வங்கள் ஆகும் குழந்தைகளுக்கும், உலகின் விசேடமான குழந்தைகளுக்கும், பாப்தாதாவின் ஆழமான அன்பும் நினைவுகளும் உரித்தாகட்டும். அத்துடன் கூடவே, இந்தத் தேசத்திலும் வெளிநாடுகளிலும் உள்ள நெருக்கமான, அன்புடன் தந்தையின் முன்னால் வருகின்ற குழந்தைகள் அனைவருக்கும், தயவுசெய்து உங்களின் சேவைக்காக வாழ்த்துக்களை ஏற்றுக் கொள்ளுங்கள். அத்துடன் பாப்தாதாவிடமிருந்து விசேடமான அன்பையும் நினைவுகளையும் பெற்றுக் கொள்ளுங்கள்.

ஆசீர்வாதம்:
நீங்கள் தாமரையைப் போல் ஒரு பற்றற்ற பார்வையாளராகி, ஞானம் நிறைந்தவர் என்ற சிறப்பியல்புடன் எந்தவிதமான சம்ஸ்காரங்களின் முரண்பாடுகளில் இருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்வீர்களாக.

இறுதிவரை, சிலருக்கு ஒரு பணிப்பெண்ணின் சம்ஸ்காரங்கள் இருக்கும். ஏனையோருக்கு ஓர் அரசரின் சம்ஸ்காரங்கள் இருக்கும். அவர்களின் சம்ஸ்காரங்கள் மாறுவதற்காகக் காத்திருக்காதீர்கள். ஆனால், எவரின் ஆதிக்கமும் உங்களின் மீது இல்லாதிருக்க வேண்டும். ஏனென்றால், முதலாவதாக, ஒவ்வொருவரின் சம்ஸ்காரங்களும் வெவ்வேறானவை. இரண்டாவதாக, அவை மாயையின் வடிவில் வரும். ஆகவே, ஒழுங்கு முறைகளின் கோட்டிற்குள் இருந்தவண்ணம் எந்தவொரு தீர்மானத்தையும் எடுங்கள். வெவ்வேறு சம்ஸ்காரங்களைக் கொண்டிருக்கும்போதும், எந்தவிதமான முரண்பாடும் இருக்கக்கூடாது. இதற்கு, ஞானம் நிறைந்தவராகி, ஒரு தாமரையைப் போல் பற்றற்ற பார்வையாளர் ஆகுங்கள்.

சுலோகம்:
பிடிவாதம் பிடித்துக் கடினமாக உழைப்பதற்குப் பதில், களிப்புடன் முயற்சி செய்யுங்கள்.