08.11.23 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
சாராம்சம்: இனிய குழந்தைகளே, உங்கள் சரீரம் உட்பட, அனைத்துமே அழியப்போகிறது. ஆகையால், பழைய உலக செய்திகளை நீங்கள் கேட்க வேண்டிய அவசியம் இல்லை. தந்தையையும் உங்கள் ஆஸ்தியையும் நினைவு செய்யுங்கள்.
பாடல்:
ஸ்ரீமத்தையிட்டு என்ன நினைவுகூரப்படுகிறது? ஸ்ரீமத்தைப் பின்பற்றுபவர்களின் அடையாளங்கள் யாவை?பதில்:
ஸ்ரீமத்தையிட்டு நினைவுகூரப்படுகிறது: நீங்கள் கொடுப்பதையே உண்பேன். நீங்கள் கொடுப்பதையே அணிவேன். நீங்கள் அமரச் சொல்லும் இடத்திலேயே அமர்வேன். நான் அதை மாத்திரமே செய்வேன். ஸ்ரீமத்தைப் பின்பற்றுகின்ற குழந்தைகள் தந்தையின் ஒவ்வொரு கட்டளைகளையும் பின்பற்றுகின்றார்கள். அவர்கள் எப்பொழுதும் மேன்மையான செயல்களையே செய்கிறார்கள். அவர்கள் என்றுமே ஸ்ரீமத்துடன் தமது சொந்தக் கட்டளைகளைக் கலப்பதில்லை. அவர்கள் எது சரி, எது பிழை என்பதைப் புரிந்துகொள்கிறார்கள்.பாடல்:
ஓ வனவாசியே, உங்கள் நாமமே எனது வாழ்வின் ஆதாரமாகும்....ஓம் சாந்தி.
இப்பாடல் யாருடையதாகும்? குழந்தைகளினதாகும். சில பாடல்களில் தந்தை குழந்தைகளுக்கு விளங்கப்படுத்துகின்றார், ஆனால் இப்பாடலில் குழந்தைகள் கூறுகின்றார்கள்: பாபா, நாங்கள் இப்பொழுது புரிந்து கொண்டுள்ளோம். இவ் உலகம் எவ்வளவு பொய்யானது என்பதையும், பந்தனங்கள் எவ்வளவு பொய்யானவை என்பதையும் இவ்வுலகம் அறியாதுள்ளது. இங்கே, அனைவரும் சந்தோஷம் அற்றவர்களாகவே இருக்கின்றார்கள் என்பதாலேயே அவர்கள் கடவுளை நினைவு செய்கின்றார்கள். சத்தியயுகத்தில் கடவுளைச் சந்தித்தல் என்ற கேள்விக்கே இடமில்லை. இங்கே, துன்பமே உள்ளது. இதனாலேயே ஆத்மாக்கள் கடவுளை நினைவு செய்கின்றார்கள். எவ்வாறாயினும், நாடகத்திற்கு ஏற்ப, தந்தை வரும் போது மாத்திரமே அவரை நீங்கள் காண்கின்றீர்கள். ஏனைய அனைவரும் செய்கின்ற முயற்சிகள் அனைத்தும் வீணாக்கப்படுகின்றது, ஏனெனில் அவர்கள் கடவுள் சர்வவியாபி என்று நம்புகின்றார்கள். அவர்கள் கடவுளைக் காண்பதற்கு பிழையான பாதைகளைக் காட்டுகின்றார்கள். தமக்குக் கடவுளைத் தெரியாது என்றோ அல்லது அவரது படைப்பின் ஆரம்பம், மத்தி, இறுதியைத் தெரியாது என்றோ அவர்கள் கூறினால் உண்மையைக் கூறுவதாகும். முன்னர், ரிஷிகள், முனிவர்கள் போன்றோர் உண்மையைக் கூறுவதுண்டு. அந்த நேரத்தில், அவர்கள் இரஜோகுனியாக இருந்தார்கள். அந்த நேரத்தில், உலகம் பொய்யானது என்று நீங்கள் கூறியிருக்க மாட்டீர்கள். கலியுகத்தின் இறுதியான, நரகமே பொய்யான உலகம் எனப்படுகின்றது. ‘இது நரகம், அது சுவர்க்கம் என்று நீங்கள் சங்கமயுகத்திலேயே கூறுவீர்கள். நீங்கள் துவாபரயுகத்தை நரகம் என்று கூறுவதில்லை. அந்த நேரத்தில் நீங்கள் இரஜோபிரதானான புத்தியையே கொண்டிருக்கின்றீர்கள். இப்பொழுது இது தமோபிரதான் ஆகும். எனவே நீங்கள் சங்கமயுகத்தில் ‘சுவர்க்கம்’ ‘நரகம்’ என்று எழுதுகின்றீர்கள். இன்று இது நரகமாக உள்ளது, நாளையே இது சுவர்க்கம் ஆகும். தந்தை வந்து இதனை விளங்கப்படுத்துகின்றார். இந்த நேரம் கலியுக இறுதி என்பதை உலகம் அறியாதுள்ளது. அனைவருமே தமது கர்மக் கணக்கைத் தீர்த்துக் கொண்டு, இறுதியில் சதோபிரதான் ஆகுகின்றார்கள். அதன்பின்னர் அவர்கள் சதோ, இரஜோ, தமோ ஸ்திதியின் ஊடாகச் செல்கின்;றார்கள். ஒன்று அல்லது இரண்டு பிறவிகளின் பாகங்களைக் கொண்டிருப்பவர்களுமே சதோ, இரஜோ, தமோ ஸ்திதிகளின் ஊடாகச்; செல்கின்றார்கள். அவர்கள் சிறிய பாகத்தையே கொண்டிருக்கின்றார்கள். இதற்கு அதிகளவு புரிந்துணர்வு தேவையாகும். உலகில் மக்கள்; அதிகளவு அபிப்பிராயங்களைக் கொண்டிருக்கின்றார்கள். அனைவரும் ஒரே அபிப்பிராயத்தைக் கொண்டிருக்க முடியாது. அனைவரும் தத்தமது சமயத்தையும், தமது சொந்த அபிப்பிராயத்தையும் கொண்டிருக்கின்றார்கள். தந்தையின் தொழில், ஏனைய ஆத்மாக்கள் ஒவ்வொருவரின் தொழிலிருந்தும் வேறுபட்டதாகும். ஒவ்வொருவரின் சமயமும் வேறானது, எனவே ஒவ்வொருவருக்கும் கொடுக்கப்படுகின்ற விளக்கமும் வெவ்வேறுபட்டதாக இருக்க வேண்டும். பெயர், வடிவம், இருப்பிடம், நேரம் என்பன ஒவ்வொருக்கும் வெவ்வேறாகும். இன்னார் இன்ன சமயத்தைச் சேர்ந்தவர்கள் என்பதை நீங்கள் காண முடியும். அனைவரும் தாம் இந்து சமயத்தினர் என்று கூறுகின்றார்கள். ஆனால் அதிலும் பல பிரிவுகள் உள்ளன. சிலர் ஆரிய சமாஜிகள், சிலர் சந்நியாசிகள், சிலர் பிராம் சமாஜிகள் ஆவார்கள். அவர்கள் சந்நியாசிகள் போன்ற அனைவரையும் இந்து சமயத்திற்கு உரியவர்கள் என்றே கருதுகின்றார்கள். நாங்கள் பிராமண தர்மத்தைச் சேர்ந்தவர்கள் அல்லது தேவதர்மத்தைச் சேர்ந்தவர்கள் என்று எழுதினாலும் அவர்கள் எங்களை இந்துக்களின் பிரிவிலேயே சேர்க்கின்றார்கள். ஏனெனில் அவர்களிடம் வேறு எப்பிரிவும் இல்லை. நீங்கள் அனைவரிடமும் தனித்தனியாக படிவம் ஒன்றை நிரப்பக் கேட்டால், அவர்களைப் பற்றிய பின்ணணியை உங்களால் கூறமுடியும். ஏனைய சமயத்தைச் சேரந்தவர்கள் இவ் விடயங்களை நம்ப மாட்டார்கள். அப்பொழுது அனைத்தையும் ஒரேநேரத்தில் அவர்களுக்கு விளங்கப்படுத்துவது சிரமமாக இருக்கும். நாங்கள் எங்கள் தர்மத்தை வெறுமனே புகழ்கின்றோம் என்றே அவர்கள் நினைப்பார்கள். இதில் இரண்டும் அடங்குகின்றது. விளங்கப்படுத்துகின்ற குழந்தைகள் வரிசைக்கிரமமாகவே இருக்கிறார்கள். அனைவருமே ஒரேமாதிரி இருப்பார்கள் என்றில்லை. ஆகையாலேயே அவர்கள் மகாராத்திகளை வரவழைக்கின்றார்கள். பாபா விளங்கப்படுத்தியுள்ளார்: என்னை நினைவு செய்து எனது ஸ்ரீமத்தைப் பின்பற்றுங்கள். இதில் தூண்டுதல் என்ற கேள்விக்கே இடமில்லை. அனைத்தும் தூண்டுதலினால் நடக்கின்றது என்றால், தந்தை வருவதற்கான அவசியமே இருக்க மாட்டாது. சிவபாபா இங்குள்ளார். எனவே, அவர் தூண்டுதல்களை கொடுக்க வேண்டிய அவசியம் என்ன? இங்கே, நீங்கள் தந்தையின் வழிகாட்டல்களைப் பின்பற்ற வேண்டும். தூண்டுதல் என்ற கேள்விக்கு இடமில்லை. சில செய்தி (திரான்ஸ்) தூதுவர்கள் செய்திகளைக் கொண்டு வருகின்றனர். இருப்பினும் அதில் அதிகளவு கலப்படமான விடயங்கள் உள்ளன. செய்தித் (திரான்ஸ்) தூதுவர்கள் அனைவருமே ஒரேமாதிரியானவர்கள் அல்ல. மாயையின் இடையூறும் அதிகளவில் உள்ளது. அனைத்தையும் இன்னொரு செய்தித் தூதுவரின் மூலம் சரிபார்க்க வேண்டியுள்ளது. சிலர் பாபா அல்லது மம்மா தமக்குள் வருகின்றார் என்று கூறி அவர்கள் இன்னொரு நிலையத்தைச் சொந்தமாகத் திறக்கின்றார்கள்;. மாயையின் ஆதிக்கம் உள்ளது. இவ்விடயங்கள் புரிந்து கொள்ளப்பட வேண்டும். குழந்தைகளாகிய நீங்கள் மிகவும் விவேகமானவர்கள் ஆக வேண்டும். சேவை செய்கின்றவர்களால் மாத்திரமே இவ்விடயங்களைப் புரிந்து கொள்ள முடியும். ஸ்ரீமத்தைப் பின்பற்றாதவர்களினால் இவ்விடயங்களைப் புரிந்துகொள்ள முடியாது. ஸ்ரீமத்தையிட்டு நினைவுகூரப்பட்டுள்ளது: நீங்கள் கொடுப்பதையே உண்பேன். நீங்கள் கொடுப்பதையே அணிவேன். நீங்கள் அமரச் சொல்லும் இடத்தில் அமர்வேன். நான் அதையே செய்வேன். சிலர் தந்தையின் வழிகாட்டல்களைப் பின்பற்றுகின்றார்கள். சிலரோ பிறரது வழிகாட்டல்களின் ஆதிக்கத்திற்கு உள்ளாகுகின்றார்கள். அவர்களுக்கு ஏதாவது கிடைக்காது விட்டாலோ, அவர்களுக்கு ஏதாவது ஒன்றில் விருப்பம் இல்லாதிருந்தாலோ, அவர்கள் விரைவில் குழப்பம் அடைகின்றார்கள். குழந்தைகள் அனைவருமே ஒரேயளவு தகுதியுடையவர்களாக இருப்பார்கள் என்றில்லை. உலகில் மக்கள் வெவ்வேறான பல அபிப்பிராயங்களைக் கொண்டிருக்கின்றார்கள். அஜாமிலை போன்ற பல பாவ ஆத்மாக்களும், நற்பண்புகள் அற்றவர்களும் உள்ளனர். கடவுளைச் சர்வவியாபி என்று அழைப்பது பிழையாகும் என்பதையும் நீங்கள் விளங்கப்படுத்த வேண்டும். ஐந்து விகாரங்களே எங்கும் வியாபித்துள்ளன. ஆகையாலேயே தந்தை கூறுகின்றார்: இதுவே அசுரத்தனமான உலகமாகும். சத்தியயுகத்தில் ஐந்து விகாரங்கள் இருப்பதில்லை. அவர்கள் கூறுகின்றார்கள்: சமயநூல்களில் இவ்வாறே குறிப்பிடப்பட்டுள்ளது. எவ்வாறாயினும். சமயநூல்கள் அனைத்தும் மனிதர்களினாலேயே எழுதப்படுகின்றன. எனவே, மனிதர்களா அல்லது சமயநூல்களா மேன்மையாவை? நிச்சயமாக, அவற்றை உரைப்பவர்களே, மேன்மையானவர்கள் ஆவார்கள். அதனை மனிதர்களே எழுதுகின்றார்கள். வியாசர் அதனை எழுதினார். ஆனால் அவரும் ஒரு மனிதரே ஆவார். அசரீரியான தந்தை இங்கே அமர்ந்திருந்து விளங்கப்படுத்துகின்றார்: சமய ஸ்தாபகர்கள் வந்த போது அவர்கள் கூறியவற்றைப் பின்னர் அவர்கள் சமயநூல்களாக உருவாக்கினார்கள். உதாரணத்திற்கு குருநானக் கூறியவற்றைக் கொண்டு அவர்கள் கிராந்தை உருவாக்கினார்கள். ஆகையால், அவ்விடயங்களைப் பேசியவரின் பெயரே போற்றப்படுகின்றது. குருநானக்கும் ஒருவரையே புகழ்ந்தார். அவரே அனைவருக்கும் தந்தையாவார். தந்தை கூறுகிறார்: சென்று ஒரு தர்மத்தை ஸ்தாபியுங்கள். எல்லையற்ற தந்தை கூறுகிறார்: என்னை அனுப்புவதற்கு எவருமில்லை. சிவபாபாவே இங்கமர்ந்திருந்து உங்களுக்கு விளங்கப்படுத்துகிறார்: அவர்கள் செய்தியைக் கொண்டு வருபவர்கள், ஆனால் என்னை இங்கே அனுப்புவதற்கு எவருமில்லை. நான் தூதுவர் என அழைக்கப்படுவதில்லை. நான் குழந்தைகளுக்கு அமைதியையும் சந்தோஷத்தையும் கொடுப்பதற்காக வருகின்றேன். என்னை எவரும் வரச்சொல்லவில்லை. நானே அதிபதியாவேன். அதிபதி என்பதை நம்புபவர்களும் இருக்கின்றார்கள், ஆனால் ‘அதிபதி’ என்ற வார்த்தையை அவர்கள் புரிந்துகொண்டார்களா என நீங்கள் அவர்களை வினவ வேண்டும். அவர் அதிபதி, நாங்கள் அவருடைய குழந்தைகள் என்பதால், நிச்சயமாக நாங்கள் ஓர் ஆஸ்தியைப் பெறுகிறோம். “எங்களுடைய பாபா” எனக் குழந்தைகள் கூறுகிறார்கள். எனவே, நீங்கள் தந்தையினுடைய செல்வத்தின்; அதிபதிகள் ஆவீர்கள். குழந்தைகள் மாத்திரமே “என்னுடைய பாபா” எனக் கூறுவார்கள். நீங்கள் “என்னுடைய பாபா” எனக் கூறினால், பாபாவின் செல்வமும் உங்களுடைய செல்வமாகும். நாங்கள் இப்பொழுது என்ன கூறுகின்றோம்? “என்னுடைய சிவபாபா!” தந்தையும் கூறுகிறார்: இவர்கள் என்னுடைய குழந்தைகள். குழந்தைகள் தந்தையிடமிருந்து ஓர் ஆஸ்தியைப் பெறுகின்றார்கள். தந்தையிடம் சொத்து இருக்கின்றது. எல்லையற்ற தந்தை சுவர்க்கத்தைப் படைப்பவர் ஆவார். பாரத மக்கள் யாரிடமிருந்து அவர்களுடைய சொத்தைப் பெற்றார்கள்? சிவபாபாவிடமிருந்து. அவர்கள் சிவஜெயந்தியைக் கொண்டாடுகிறார்கள். சிவஜெயந்தியின் பின்னர் கிருஷ்ண ஜெயந்தியும், பின்னர் இராம ஜெயந்தியும் இருக்கின்றது. அவ்வளவுதான். மம்மாவினதோ அல்லது பாபாவினதோ அல்லது ஜெகதாம்பாளினதோ ஜெயந்தியை எவரும் நினைவு செய்வதில்லை. சிவஜெயந்தி இருக்கின்றது, பின்னர் இராதையினதும் கிருஷ்ணரினதும், அதன்பின்னர் இராமரினதும் சீதையினதும் ஜெயந்தி வருகின்றது. சிவபாபா வரும்பொழுது, சூத்திர இராச்சியம் அழிக்கப்படும். இந்த இரகசியங்களை எவரும் புரிந்து கொள்வதில்லை. தந்தை இங்கமர்ந்திருந்து, விளங்கப்படுத்துகிறார். அவர் நிச்சயமாக வருகிறார். நீங்கள் ஏன் தந்தையைக் கூவியழைக்கின்றீர்கள்? வந்து, ஸ்ரீ கிருஷ்ணரின் பூமியை ஸ்தாபியுங்கள். சிவஜெயந்தி நிச்சயமாக இடம்பெற வேண்டும் என்பது உங்களுக்குத் தெரியும். சிவபாபா உங்களுக்கு ஞானத்தைக் கொடுக்கிறார். ஆதி சனாதன தேவ தர்மம் ஸ்தாபிக்கப்படுகின்றது. சிவஜெயந்தியே அனைத்திலும் பார்க்க மிகச்சிறந்த ஜெயந்தியாகும். பின்னர் பிரம்மா, விஷ்ணு, சங்கரரும் இருக்கிறார்கள். இப்பொழுது, பிரஜாபிதா பிரம்மா மனித உலகில் இருக்கின்றார். பின்னர், இலக்ஷ்மியும் நாராயணனும் படைப்பில் பிரதானமானவர்கள். எனவே சிவன் தாயும் தந்தையுமாவார், பின்னர் பிரம்மாவும் ஜெகதாம்பாளும் தாயும் தந்தையுமாவார்கள். இந்த விடயங்களைப் புரிந்து கொண்டு, கிரகித்துக் கொள்ள வேண்டும். நீங்கள் முதலில் விளங்கப்படுத்த வேண்டும்: பரமாத்மாவாகிய பரமதந்தை வந்து, தூய்மையற்றவர்களைத் தூய்மையாக்குகின்றார். அவர் பெயருக்கும் உருவத்திற்கும் அப்பாற்பட்டவர் என்றால், எவ்வாறு அவருடைய ஜெயந்தி இருக்க முடியும்? கடவுள் தந்தை என அழைக்கப்படுகின்றார். அனைவரும் தந்தையை நம்புகின்றார்கள். ஆத்மாக்களும் பரமாத்மாவும் அசரீரியானவர்கள். ஆத்மாக்கள் பௌதீகச் சரீரங்களைப் பெறுகிறார்கள். இந்த விடயங்கள் புரிந்துகொள்ளப்பட வேண்டும். சமயநூல்கள் போன்ற எதனையும் கற்காதவர்களுக்கும் இது இலகுவானது. ஆத்மாக்களின் தந்தையாகிய, பரமாத்மாவான பரமதந்தையே சுவர்க்கத்தைப் படைக்கின்றார். சுவர்க்கத்தில் இராச்சியம் இருப்பதால், அவர் நிச்சயமாகச் சங்கமயுகத்தில் வரவேண்டும். அவரால் சத்தியயுகத்திற்கு வரமுடியாது. சங்கமயுகத்தில் மாத்திரமே நீங்கள் 21 பிறவிகளுக்கான ஆஸ்தியின் வெகுமதியைப் பெறுகின்றீர்கள். இந்தச் சங்கமயுகம் பிராமணர்களுடையதாகும். பிராமணர்கள் உச்சிக் குடுமிகளாவார்கள், பின்னர் தேவர்களின் யுகம் இருக்கின்றது. ஒவ்வொரு யுகமும் 1250 வருடங்களைக் கொண்டது. இந்த நேரத்தில் மூன்று தர்மங்கள் ஸ்தாபிக்கப்படுகின்றன: பிராமணர்கள், தேவர்கள், சத்திரியர்கள். ஏனெனில் அதன்பின்னர் அரைக் கல்பத்திற்கு வேறு எந்தச் சமயங்களும் இருக்க மாட்டாது. சூரிய, சந்திர வம்சத்திற்கு உரியவர்கள் பூஜிக்கத் தகுதி உடையவர்கள் ஆவார்கள். அதன் பின்னர் அவர்கள் பூஜிப்பவர்கள் ஆகுகின்றார்கள். அவ்வகையான பல பிராமணர்கள் உள்ளனர். நீங்கள் இப்பொழுது நற்செயல்களில் ஈடுபட்டுள்ளீர்கள் என்பதால் அதற்கான வெகுமதியை நீங்கள் சத்தியயுகத்தில் பெற்றுக் கொள்கிறீர்கள். நற்செயல்களில் எவ்வாறு ஈடுபடுதல் என்பதைத் தந்தை உங்களுக்குக் கற்பிக்கின்றார். நீங்கள் ஸ்ரீமத்திற்கு ஏற்ப எந்தச் செயல்களைச் செய்தாலும், நீங்கள் உங்களுக்குச் சமமாக ஏனையவரை ஆக்கினாலும், அதற்கு ஏற்ப நீங்கள் அதற்கான வெகுமதியைப் பெற்றுக் கொள்வீர்கள். இப்பொழுது முழு இராச்சியமும் ஸ்தாபிக்கப்படுகின்றது. ஆதி சனாதன தேவ தேவியரின் இராச்சியம் இருக்கப் போகின்றது. இது மக்களை மக்கள் ஆட்சி செய்வதாகும். அது ஒரு மக்கள் குழுவின் ஆட்சியாகும். பல வகையான குழுக்கள் உள்ளன. அல்லது ஐந்து பிரதிநிதிகளைக் கொண்ட செயற்குழுவே இருக்கின்றது. இங்கே பல சமுதாயத்தினர் உள்ளனர். இன்று அவர்கள் இங்குள்ளனர், நாளை அவர்கள் சென்று விடுகின்றார்கள். இன்று ஒருவர் அமைச்சராக உள்ளார். நாளையே அவர் அந்தப் பதவியிலிருந்து வெளியேற்றப்படுகின்றார். அவர்கள் உடன்படிக்கையை உருவாக்குகின்றார்கள். பின்னர் அதனை இரத்துச் செய்கின்றார்கள். அது தற்காலிக இராச்சியமாகும். எவரையும் ஆசனத்தில் இருந்து அகற்ற அவர்களுக்கு அதிகக் காலம் எடுப்பதில்லை. உலகம் மிகப் பெரியதாகும். செய்தித்தாளில் இருந்து நீங்கள் எதோ ஒன்றை கேள்விப்பட்டுக் கொண்டிருக்கின்றீர்கள். எவராலும் அதிகளவு பத்திரிகைகளைப் படிக்க முடியாது. இந்த உலகச் செய்திகள் உங்களுக்குத் தேவையில்லை. இவ்வுலகில் உள்ள அனைத்தும், உங்கள் சரீரம் உட்பட, அனைத்தும் இப்பொழுது அழிய உள்ளது என்பது உங்களுக்குத் தெரியும். பாபா கூறுகின்றார்: என்னை மாத்திரமே நினைவு செய்தீர்களாயின், என்னிடம் நீங்கள் வருவீர்கள். நீங்கள் மரணித்த பின்னர், அனைத்தையும் பற்றிய காட்சிகளை நீங்கள் பார்ப்பீர்கள். சிலவேளைகளில் ஓர் ஆத்மா தனது சரீரத்தை நீக்கிய பின்னர் அலைந்து திரிகின்றார். அந்த நேரத்திலும் அவரால் தனது கர்மக் கணக்கைத் தீர்த்துக் கொள்ள முடியும். அனைத்தையும் பற்றிய காட்சிகளை அவர் காண்கின்றார். ஆத்மா உள்ளார்ந்தமாகக் காட்சிகளைக் காண்கின்றார். அவர் தனது செயல்களுக்காகத் துன்பப்பட்டு அதற்காகப் பெருமளவில் வருத்தப்படுகின்றார்: நான் அதனை அநாவசியமாகச் செய்தேன். சிலர் சிறைப்பறவைகள். அவர்கள் கூறுகின்றார்கள்: நாங்கள் சிறையிலாயினும் உணவைப் பெற்றுக் கொண்டோம். உணவு உண்ணுதலே அவர்களுக்கு முக்கியம் என்பதே அதன் அர்த்தமாகும். அவர்கள் தமது கௌரவத்தைப் பற்றி அக்கறை கொள்வதில்லை. உங்களுக்கு எந்தச் சிரமமும் இல்லை. நீங்கள் தந்தைக்கு உரியவர்கள் என்பதால் நீங்கள் அவரது ஸ்ரீமத்தைப் பின்பற்ற வேண்டும். அவர் சிலருக்குத் துன்பத்தை விளைவிப்பார் என்றில்லை. அவர் சந்தோஷத்தை அருள்பவர். கீழ்படிவான குழந்தைகள் கூறுவார்கள்: பாபா, நீங்கள் எந்த வழிகாட்டல்களைக் கொடுத்தாலும், நான் உங்களுடன் மாத்திரமே அமர்ந்திருப்பேன்...... இது சிவபாபாவையிட்டே நினைவுகூரப்பட்டுள்ளது. பாகீரதனும் (பாக்கிய இரதம்), எருதும் மிகவும் பிரபல்யமாகும். ஞானக் கலசம் தாய்மாரின் மீது வைக்கப்பட்டதாக எழுதப்பட்டுள்ளது. அதன்பின்னர் அவர்கள் பசுக்களையும் காட்டியுள்ளார்கள். அவர்கள் பல கதைகளைக் கட்டியுள்ளார்கள். இவ்வுலகில் எவருமே என்றென்றும் ஆரோக்கியமாக இருக்க முடியாது. பல வகையான நோய்கள் உள்ளன. அங்கே நோய்களோ அல்லது அகால மரணமோ இருக்காது. சரியான நேரத்தில் அவர்கள் காட்சிகளைக் காண்கின்றார்கள். முதியவர்கள் அப்பொழுது சந்தோஷம் அடைகின்றார்கள். அவர்கள் முதுமையை அடையும் பொழுது சந்தோஷத்துடன் சரீரத்தை நீக்குகின்றார்கள். அதன்பின்னர் அவர்கள் சென்று மீண்டும் ஒரு குழந்தை ஆகுகின்ற காட்சிகளைக் காண்கின்றார்கள். இப்பொழுது இளமையாக உள்ள நீங்களும் உங்கள் சரீரத்தை நீங்கிச் சென்று இளவரசர் ஆகுவோம் என்ற சந்தோஷத்தைக் கொண்டிருக்கின்றீர்கள். நீங்கள் இளவயதினாராக இருந்தாலும், முதியவராக இருந்தாலும் நீங்கள் அனைவருமே மரணிக்க வேண்டும். எனவே நீங்கள் அனைவருமே நாங்கள் சென்று இளவரசர்கள் ஆகுவோம் என்ற போதையைக் கொண்டிருக்க வேண்டும். நீங்கள் சேவை செய்தால் நிச்சயமாக அவ்வாறாகுவீர்கள். நீங்கள் இப்பொழுது பழைய சரீரத்தை நீக்கி பாபாவிடம் சென்று, அதன்பின்னர் பாபா உங்களைச் சுவர்க்கத்திற்கு அனுப்புவார் என்ற சந்தோஷத்தைக் கொண்டிருக்க வேண்டும். நீங்கள் சேவை செய்ய வேண்டும். குழந்தைகளாகிய நீங்கள் பாடலைச் செவிமடுத்தீர்கள். புல்லாங்குழலுடன் இருந்தவர் கிருஷ்ணர் அல்ல. பலரிடமும் புல்லாங்குழல் உண்டு. அவர்கள் புல்லாங்குழலை மிக நன்றாக வாசிக்கின்றார்கள். இதில் புல்லாங்குழல் என்ற கேள்விக்கு இடமில்லை. ஒரெயொரு தந்தை மாத்திரமே ஸ்ரீமத்தைக் கொடுக்கின்றார் என நீங்கள் கூறுகின்றீர்கள். ஸ்ரீகிருஷ்ணரிடம் இந்த ஞானம் இருக்கவில்லை. அவர் இந்த இலகு யோகத்தையோ அல்லது ஞானத்தையோ தனக்குள் கொண்டிருக்கவில்லை. அவர் இராஜயோகத்தைக் கற்பிக்கவில்லை. அவர் தந்தையிடம் இருந்து இராஜயோகத்தைக் கற்றுக் கொண்டார். இது மிகவும் மகத்துவமான விடயமாகும். ஒருவர் ஒரு குழந்தையாகும் வரை அவரால் புரிந்துகொள்ள முடியாது. இங்கே இது ஸ்ரீமத்தைப் பின்பற்றுவதிலேயே தங்கியுள்ளது. உங்கள் சொந்தக் கட்டளைகளைப் பின்பற்றுவதன் மூலம் உங்களால் உயர்ந்த அந்தஸ்தைப் பெற முடியாது. தந்தையை அறிந்து கொண்டிருப்பவர்கள் தந்தையின் அறிமுகத்தை ஏனையவருக்குக் கொடுக்கின்றார்கள். நீங்கள் தந்தையினதும் அவரின் படைப்பினதும் அறிமுகத்தைக் கொடுக்க வேண்டும். நீங்கள் தந்தையின் அறிமுகத்தைக் கொடுக்காதுவிட்டால், உங்களுக்கு அவரைத் தெரியவில்லை என்பதே அதன் அர்த்தமாகும். நீங்கள் அந்தப் போதையைக் கொண்டிருந்தால், நீங்கள் பிறரையும் அந்தப் போதையைக் கொண்டவர்கள் ஆக்க வேண்டும். அச்சா.இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்பொழுதோ தொலைந்து இப்பொழுது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும், நினைவுகளும், காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.
தாரணைக்கான சாராம்சம்:
1. ஸ்ரீமத்திற்கேற்ப எப்பொழுதும் மேன்மையான செயல்களைச் செய்யுங்கள். பிறரின் வழிகாட்டல்களின் செல்வாக்கிற்கு உட்படாதீர்கள். கீழ்படிவாக இருந்து ஒவ்வொரு கட்டளையையும் பின்பற்றுங்கள். உங்களுக்கு ஏதாவதொன்று புரியாதிருந்தால், அதனைத் தெளிவாக்குங்கள்.2. நீங்கள் உங்களுடைய பழைய சரீரத்தை நீக்கி, பின்னர் இளவரசர் ஆகுவீர்கள் என்ற போதையிலும், சந்தோஷத்திலும் எப்பொழுதும் இருங்கள். இந்தப் போதையைப் பேணி, கடவுளின் சேவையைச் செய்யுங்கள்.
ஆசீர்வாதம்:
உங்களை அவதூறு செய்யும் ஒருவரைகூட உங்கள் நண்பராகக் கருதி தந்தை பிரம்;மாவை போன்று மாஸ்டர் படைப்பவராக அனைவருக்கும் மரியாதை கொடுப்பீர்களாக.தந்தை பிரம்மா தன்னை உலக சேவையாளர் எனக் கருதி, எப்பொழுதும் அனைவருக்கும் மரியாதை கொடுப்பதுடன் அவர்களை வந்தனம் செய்வார். ஒருவர் மரியாதை கொடுத்தாலே, தானும் மரியாதை கொடுப்பேன் என அவர் என்றுமே நினைப்பதில்லை. அவர் தன்னை அவதூறு செய்கின்ற ஒருவரையுமே தனது நண்பராகவே கருதி அவருக்கும் மரியாதை கொடுப்பார். அவ்வாறே தந்தையை பின்பற்றுங்கள். உங்களுக்கு மரியாதை கொடுக்கின்ற ஒருவரை மாத்திரம் உங்களுக்கு உரியவர் எனக் கருதாதீர்கள். உங்களை இகழ்பவரையும் உங்களுக்கு உரியவர்களாகவே கருதி அவருக்கும் மரியாதை கொடுங்கள், ஏனெனில் முழு உலகமும் உங்கள் உலக குடும்பமாகும். பிராமணர்களாகிய நீங்களே ஆத்மாக்கள் அனைவருக்கும் அடிமரம் என்பதால், உங்களை மாஸ்டர் படைப்பவர் எனக் கருதி அனைவருக்கும் மரியாதை கொடுத்தால் மாத்திரமே உங்களால் தேவர்கள் ஆக முடியும்.
சுலோகம்:
எக்காலத்திற்குமாக மாயைக்கு விடை கொடுப்பவர்கள் தந்தையிடமிருந்து பாராட்டுக்களை பெறும் தகுதியுடையவர்கள் ஆகுகிறார்கள்.