08.12.18        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்:
இனிய குழந்தைகளே, ஆத்மாக்களுக்கும் பரமாத்மாவுக்கும் இடையிலான சந்திப்பே கும்பமேலாவாகிய உண்மையான சங்கமமாகும். இந்தச் சந்திப்பின் மூலமே நீங்கள் தூய்மையாகுகின்றீர்கள். இதன் ஞாபகார்த்தமாகப் பின்னர், மக்கள் தங்கள் திருவிழாக்களைக் (மேலாக்களை) கொண்டாடுகிறார்கள்.

கேள்வி:
எந்தக் கருத்தில் குழந்தைகளாகிய உங்களுக்கு அளவற்ற தெளிவு இருக்க வேண்டும்?

பதில்:
நுணுக்கமான ஞானக் கருத்துக்களை விளங்கப்படுத்துவதற்கு அளவற்ற தெளிவு உங்களுக்கு இருக்க வேண்டும். ஞான மார்க்கத்தையும் பக்தி மார்க்கத்தையும் நீங்கள் சாதுரியமாக நிரூபிக்க வேண்டும். எலி தான் கடிப்பதற்கு முன் ஊதி விடுவது போல் விளங்கப்படுத்துங்கள். அதனால். சேவை செய்யும் வழிமுறைகளை உருவாக்குங்கள். கும்பமேலாவில் கண்காட்சிகளை நடத்தி, பல ஆத்மாக்களுக்கும் நன்மை செய்யுங்கள். தூய்மையற்ற நிலையிலிருந்து தூய்மையானவர்களாகும் வழியை அவர்களுக்குக் காட்டுங்கள்.

பாடல்:
எங்களை இந்தப் பாவ உலகத்திலிருந்து ஓய்வும் சௌகரியமும் நிறைந்த இடத்திற்கு அழைத்துச் செல்லுங்கள்...

ஓம்சாந்தி.
தந்தை இங்கமர்ந்திருந்து குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்துகிறார்: கலியுகத்துத் தூய்மையற்ற, சீரழிந்த உலகம் பாவ உலகம் என்று அழைக்கப்படுகின்றது. சத்தியயுகத்துத் தூய, மேன்மையான உலகமோ புண்ணிய உலகம் என்று அழைக்கப்படுகின்றது. பரமாத்மா மட்டுமே உங்களைத் தூய, புண்ணியாத்மாக்களாக்கி, புண்ணிய உலகத்தைப் படைக்கின்றார். மக்கள் தாங்கள் தூய்மையற்றவர்களாக இருப்பதாலேயே தூய்மையாக்குபவராகிய தந்தையைக் கூவி அழைக்கின்றனர். கங்கையை அல்லது திரிவேணி சங்கமத்தைத் (மூன்று நதிகளின் சங்கமம்) தூய்மையாக்குபவர் என்று நம்புகிறார்களாயின், ஓ தூய்மையாக்குபவரே, வாருங்கள் என்று ஏன் அழைக்கின்றார்கள்? கங்கையும் திரிவேணியும் இங்கே தான் இருக்கின்றன. அந்த நதிகள் இங்கேயே இருக்கின்றபோதிலும் கூட மக்கள் தொடர்ந்து கூவியழைத்துக் கொண்டிருக்கின்றார்கள். புத்தி பரமாத்மாவை நோக்கியே செல்கின்றது. ஞானக்கடலாகிய பரமாத்மாவான பரமதந்தை, இங்கேயே வரவேண்டும். அவர் வெறுமனே ஆத்மா என்று அழைக்கப்படுவதில்லை. ஆனால், தூய்மையான உயிருள்ளவர் ஆவார். இங்கே தூய்மையான உயிருள்ளவர்கள் யாரும் இல்லை. சத்தியயுகத்துத் தூய உலகம் ஸ்தாபிக்கப்பட்டு, கலியுகத்துப் பழைய உலகம் அழிக்கப்பட வேண்டியிருக்கும்போது தூய்மையாக்குபவராகிய தந்தை வருகிறார். நிச்சயமாக அவர் சங்கமயுகத்தில் வருவார். சங்கமம் கும்ப் என்றும் அழைக்கப்படுகின்றது. திரிவேணி சங்கமம் இருக்கின்றது. அதற்கு அவர்கள் கும்ப் என்று பெயரிட்டிருக்கிறார்கள். மூன்று நதிகள் சங்கமமாகுகின்றன என்று கூறுகிறார்கள். உண்மையில் இரண்டு நதிகளே இருக்கின்றன. மூன்றாவது நதி மறைந்திருக்கிறது என்கிறார்கள். எனவே, அந்தக் கும்பமேலாவில் நீங்கள் தூய்மையற்றவர்களிலிருந்து தூய்மையாக முடியுமா? நிச்சயமாகத் தூய்மையாக்குபவர் வர வேண்டும். அவரே ஞானக்கடல். தூய்மையற்ற உலகத்தைத் தூய்மையாக்குவதும், கலியுகத்தைச் சத்தியயுகமாக்குவதும் பரமாத்மா பரமதந்தையின் பணியே தவிர, ஒரு மனிதப்பிறவியின் பணியல்ல. அவையெல்லாம் மூட நம்பிக்கையேயாகும். பார்வையற்றவர்களுக்குக் கைத்தடியொன்று வேண்டும். நீ;ங்கள் செய்யும் முயற்சிக்கேற்ப வரிசைக்கிரமமாக இப்போது கைத்தடிகளாக ஆகியிருக்கிறீர்கள். பல்வேறுபட்ட கைத்தடிகள் இருக்கின்றன. சில தடிகள் நூறு ரூபாவாகவும் சில இரண்டே இரண்டு ரூபாவாகவும் இருக்கின்றன. இங்கேயும் எல்லோரும் வரிசைக்கிரமமானவர்கள். சிலர் மிக நன்றாகச் சேவை செய்பவர்கள். நீங்கள் நோய்வாய்ப்பட்டிருக்கும் போது சத்திரசிகிச்சையாளர் ஒருவரை வரவழைக்க வேண்டும். இது தூய்மையற்ற உலகம். நீங்களோ தூய்மையாகிக் கொண்டிருக்கின்றீர்கள். ஆத்மாக்கள் நீண்டகாலமாகப் பரமாத்மாவிடமிருந்து பிரிந்திருந்தனர் என்று கூறப்படுகின்றது. பின்பு, சகல ஆத்மாக்களின் மத்தியிலும் பரமாத்மா பரமதந்தை, வரும்போது, அது கும்ப சங்கமம் எனப்படுகின்றது. கும்ப மேலாவில் மக்கள் அளவற்ற தானதர்மங்கள் செய்கிறார்கள். அது சாது, சந்நியாசிகளுக்கும் அரசாங்கத்திற்கும் ஒரு வருமானமாக இருக்கிறது. இங்கே, நீங்கள் உங்கள் சரீரம், மனம், செல்வம் உட்பட, அனைத்தையுமே தூய்மையாக்குபவராகிய தந்தையிடம் தானம் செய்ய வேண்டும். அதன் பின் அவர் உங்களை எதிர்காலச் சுவர்க்க அதிபதிகளாக்குவார். அவர்கள் திரிவேணியின் பெயரைப் பயன்படுத்தி, சாது சந்நியாசிகளுக்குத் தானதர்மம் செய்கிறார்கள். உண்மையில், நதிகளாகிய நீங்கள் அனைவரும் வந்து கடலானவருடன் இரண்டறக் கலப்பதே சங்கமமாகும். அங்கே கடல் ஏதுமில்லை. நதிகளே ஒன்றிணைகின்றன. கடலும் நதிகளாகிய நீங்களும் சந்திப்பதே உண்மையான திருவிழா (மேலா). ஆனால், அதுவும் நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டிருக்கின்றது. அந்தத் திருவிழாவில், புகைவண்டிகள், மோட்டார் கார்கள், காணி போன்றவற்றிலிருந்து அரசாங்கம் பெருமளவு பணத்தை ஈட்டிக் கொள்கின்றது. எனவே இந்தத் திருவிழா வருமானம் ஈட்டிக் கொள்வதற்காகும். குழந்தைகளாகிய உங்களால் இந்த விடயங்களைப் பற்றித் தீர்மானமெடுக்க முடியும். ஏனெனில், நீங்கள் கடவுளின் வழிகாட்டல்களைப் பின்பற்றுகின்றீர்கள். அதனால், நீங்கள் கும்ப மேலா என்பதன் சரியான அர்த்தத்தைக் கண்டறிய வேண்டும். பாபா உங்களுக்கு ஒரு கட்டுரை எழுதத் தருகின்றார். விவேகமாக நடந்து கொள்ளக்கூடிய குழந்தைகள் அதை எழுத வேண்டும். துண்டுப்பிரசுரங்களைத் தயாரித்து விநியோகிக்க வேண்டிய முதல்தர விவேகமுள்ள குழந்தைகள் மம்மாவும், இரண்டாமவர் சஞ்ஜயனும் ஆவர். இந்தத் திரிவேணி நதி தூய்மையாக்குபவர் அல்ல. அனைவருக்கும் சற்கதி அருள்பவராகிய சிவபாபாவே தூய்மையாக்குபவர் ஆவார். திரிவேணியை சற்கதி அருள்பவர் என்று அழைக்க முடியாது. அந்த நதிகள் எப்போதும் இருக்கின்றன. அவை வருவதென்பதற்கு இடமில்லை. ஓ தூய்மையாக்குபவரே, வாருங்கள், வந்து எங்களைத்; தூய்மையாக்குங்கள் என்று மக்கள் பாடுகிறார்கள். அதனால், நீங்கள் துண்டுப்பிரசுரங்களைத் தயாரிக்க வேண்டும்: சகோதர, சகோதரிகளே, தூய்மையாக்குபவர் பரமாத்மாவாகிய பரமதந்தையான ஞானக்கடலா அல்லது அந்த நதிகளா? அவை எப்போதுமே இருக்கின்றன. நீங்கள் பரமாத்மாவை இங்கே வருமாறு கூவி அழைக்கின்றீர்கள். உண்மையில், பரமாத்மா மட்டுமே தூய்மையாக்குபவர். ஆத்மாக்களும் பரமாத்மாவும் பல காலமாகப் பிரிந்திருந்தனர். அந்தச் சற்குரு வந்து உங்களுக்குச் சற்கதி கொடுத்து, வீட்டுக்கு மீண்டும் அழைத்துச் செல்கிறார். உண்மையில், நீங்கள் பரமாத்மா பரமதந்தையுடன் இணைந்து ஞான நீராட வேண்டும். பரமாத்மா பரம தந்தை, தூய உலகத் தாபனையை மேற்கொள்கிறார். உங்களுக்கு அவரைத் தெரியாது. பாரதம் மேன்மையானதாக இருந்தபோது, ஆத்ம உணர்வுள்ள தேவதேவியர்கள் அங்கே வாழ்ந்தார்கள். அது சிவாலயம் என்று அழைக்கப்பட்டது. குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது கும்பமேலாவுக்குச் சென்று கண்காட்சிகளை நடத்தி அங்குள்ள மக்களுக்கு விளங்கப்படுத்த வேண்டும். நீங்கள் விளங்கப்படுத்த வேண்டும்: ஒரேயொரு தந்தையே தூய்மையாக்குபவர். அவர் கூறுகிறார்: நீங்கள் தூய்மையற்ற நிலையிலிருந்து தூய்மையாக்கப்பட வேண்டியபோதே, நான் வருகிறேன். எனவே, நீங்கள் சத்தியம் செய்ய வேண்டும். ரக்ஷாபந்தன் என்பது கடவுளுடன் சம்பந்தப்பட்டதே தவிர, சாது சந்நியாசிகளுடன் அல்ல. ஓ பாபா, உங்கள் ஸ்ரீமத் மூலம் நான் தூய்மையாகுவதாகச் சத்தியம் செய்கிறேன் என்று சத்தியம் செய்து கொடுக்கப்பட்டது பரமாத்மா பரமதந்தைக்கே அன்றி திரிவேணி நதிக்கு அல்ல. தந்தை கூறுகிறார்: நான் உங்களைத் தூய உலகத்தின் அதிபதிகளாக்குகிறேன். இவை பாபாவின் சமிக்ஞைகள். சேவை செய்யும் மிகவும் திறமைசாலிகள் இதற்குத் தேவை. வேறு பல படங்களும் தயாரிக்கப்பட வேண்டும். இதற்கென நீங்கள் நல்லதொரு கூடாரத்தைப் பெற்றுக் கொள்ள வேண்டும். உங்கள் பகைவர்கள் பலரும் உருவாகுவார்கள். சிலசமயங்களில் தீமூட்டவும் அவர்கள் தயங்க மாட்டார்கள். யாருக்காவது சண்டையிட வேண்டுமென்றால், அவர் உங்களை அவமதிக்க ஆரம்பிப்பார். நீங்கள் அகங்காரமின்றி மௌனமாக இருக்க வேண்டும். பிரம்ம குமாரிகள் பிரபல்யமாகி விட்டார்கள். நீங்கள் நிச்சயமாகத் துண்டுப்பிரசுரங்கள் போன்றவற்றையும் விநியோகிக்க வேண்டும். மக்கள் கும்பமேலாவுக்கு விசேட முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். உண்மையில் அது தற்கால முக்கியத்துவத்தையே குறிக்கின்றது. இதுவும் நாடகத்தின் விளையாட்டேயாகும். அங்கும் எவருக்கேனும் நன்மை கிடைக்கக் கூடும். ஆனாலும், அதற்கு முயற்சி தேவை. முள்ளிலிருந்து மலராகுவதற்கு முயற்சி தேவைப்படுகின்றது. கும்பமேலாவில் கண்காட்சி நடத்துவதற்கு உங்களுக்குத் தைரியம் தேவை. தடைகள் ஏற்படாதிருப்பதற்கு உங்களுக்கு நல்ல தொடர்புகள் தேவை. தூய்மையாக்குபவர் யாரென்று நீங்கள் நிரூபிக்க வேண்டும். தூய உலகமாகிய சுவர்க்கத்தை மக்கள் நினைவுகூருகின்றார்கள். யாராவது இறந்தால், இன்னார் சுவர்க்கவாசியாகி விட்டார் என்று மக்கள் கூறுகிறார்கள். அங்கே எவ்வளவோ செழுமையான உணவு வகைகள் இருக்கின்றன. அவ்வாறிருக்கும்போது, ஏன் அவர்களை அங்கிருந்து அழைத்து இங்கே உணவளிக்கின்றார்கள்? ஸ்ரீநாத் கோவிலில், எவ்வாறு பல்வேறு உணவு வகைகளைத் தயாரிக்கிறார்கள் என்று நீங்களே பார்க்கலாம். உண்மையில், ஸ்ரீநாத்புரியும் ஜெகந்நாத்புரியும் ஒன்று தான். இருந்தபோதிலும், ஸ்ரீநாத் துவாரில் எவ்வாறு பல செழுமையான உணவு வகைகளைத் தயாரிக்கிறார்கள் என்றும், ஜெகந்நாதபுரியில் வெறும் சாதத்தையே படைக்கிறார்கள் என்பதையும் நீங்கள் பார்க்கலாம். அங்கே அவர்கள் வெண்ணெயைக் கூடப் பயன்படுத்துவதில்லை. இந்த வேறுபாடு, நீங்கள் தூய்மையாக இருக்கும்போது மிகச் செழுமையான உணவை உட்கொள்வதையும், தூய்மையற்றவர்களாக இருக்கும்போது, வெறும் சாதத்தையே உட்கொள்வதையும் எடுத்துக் காட்டுகிறது. இதிலிருக்கும் தத்துவம் மிகவும் நல்லது. தந்தை இங்கிருந்து இதை விளங்கப்படுத்துகிறார். ஸ்ரீநாத் துவாரில் எவ்வளவோ போக் படைக்கிறார்கள். பின்பு, பிராமணப் பூசகர்கள் அங்கிருந்து தங்கள் வருமானத்திற்;காக அவற்றைப் பக்தர்களுக்கு விற்கிறார்கள். ஒன்றுமே செலவிடாமல் அவர்கள் எல்லாவற்றையும் பெற்றுக்கொள்வதோடு, பின்பு அதிலிருந்து வருமானமும் உழைக்கிறார்கள். எனவே, அவையெல்லாம் அந்தளவுக்கு மூட நம்பிக்கைகள். அது பக்தி மார்க்கம். ஞான மார்க்கமே சற்கதிக்கான மார்க்கமாகும். கங்கையில் நீராடுவதன் மூலம் சற்கதி பெற்று விட முடியாது. எலி தான் கடிப்பதற்கு முன் ஊதுவதைப் போல், மிகவும் புத்திசாலித்தனமாக நீங்கள் விளங்கப்படுத்த வேண்டும். புரிந்துகொள்வதற்கும், விளங்கப்படுத்துவதற்கும் உங்களுக்குப் பெரும் தெளிவு தேவை. இவையெல்லாம் மிகவும் நுணுக்கமான விடயங்கள். மக்கள் கூறுகிறார்கள்: ஓ பரமாத்மா பரமதந்தையே, உங்கள் வழிகளைப் பற்றியும் வழிமுறைகளைப் பற்றியும் உங்களுக்கே தெரியும். அவர்களுக்கு அதன் அர்த்தம் விளங்குவதில்லை. உங்கள் ஸ்ரீமத் மூலம் கிடைக்கும் சற்கதியை நீங்களே எங்களுக்குத் தர முடியும். வேறு யாராலும் எங்களுக்குச் சற்கதி தர முடியாது. தந்தையொருவரே அனைவருக்கும் சற்கதி அருள முடியும். அனைவருக்கும் என்ற வார்த்தையை நீங்கள் நிச்சயமாகப் பயன்படுத்த வேண்டும். எவ்வளவோ விளங்கப்படுத்தப்படுகின்றது. இருப்பினும், புரிந்துகொள்கின்றவர்கள் வெகு சிலரேயாவர். பல பிரஜைகள் தொடர்ந்து உருவாக்கப்படுகின்றார்கள். மக்கள் கடவுள் பெயரில் அளவற்ற தானதர்மங்களைச் செய்கிறார்கள். அதன் பலனை ஒரு பிறவிக்குப் பெற்றுக் கொள்கிறார்கள். இங்கேயோ நீங்கள் 21 பிறவிகளுக்குப் பெற்றுக் கொள்கின்றீர்கள். கடவுள் பெயரில் தானதர்மம் செய்வதன் மூலம், அவர்கள் வலிமை பெறுகிறார்கள். அவர்களுக்குக் கடவுளைத் தெரியாததால், எவ்வித வலிமையும் இல்லாதிருக்கின்றது. இந்துக்களுக்குப் பல குருமார்கள் போன்றோர் இருக்கிறார்கள். கிறிஸ்தவர்களை எடுத்துப் பார்த்தீர்களானால், அவர்களுக்கு ஒருவரே இருப்பார். அவர் மீது அவர்கள் அளவற்ற மதிப்பு வைத்திருப்பார்கள். தர்மமே சக்தி என்று கூறப்படுகின்றது. இப்போது நீங்கள் தர்மத்தைப் புரிந்து கொண்டு விட்டதால், பெரும் சக்தியைப் பெறுகின்றீர்கள். பாபா கூறுகிறார்: மனதை நெறிப்படுத்தும் இந்த மந்திரத்தை எல்லோருக்கும் கொடுங்கள். தந்தை குழந்தைகளாகிய உங்களுக்குக் கூறுகிறார்: எங்கிருந்து வந்தீர்கள் என்பதை நினைவுசெய்யுங்கள், அப்போது உங்கள் இறுதி எண்ணங்கள் உங்களை உங்கள் இலக்கை நோக்கி இட்டுச் செல்லும். தந்தையை நினைவுசெய்வதன் மூலமே நீங்கள் தூய்மையாக முடியும். உங்கள் பாவங்கள் அழிக்கப்படும். நீங்கள் தந்தையையும் ஆஸ்தியையும் நினைவுசெய்ய வேண்டும். அவ்வாறு செய்வதன் மூலம், சக்கரம் முழுவதும் உங்கள் புத்தியில் பதியும். வீட்டில் உங்கள் குடும்பத்துடன் வாழும் அதே சமயத்தில், சரீர உறவினர்கள் அனைவரிடம் இருந்தும் உங்கள் புத்தியை அகற்றித் தந்தையுடன் இணைத்துக் கொள்வதற்கு நீங்கள் முயற்சி செய்ய வேண்டும். எனவே, இறுதி நேரத்தில் அவரை மட்டுமே நீங்கள் நினைவுசெய்வீர்கள். வேறு எவரையேனும் நினைவுசெய்வீர்களானால், தண்டனை அனுபவிக்கப்படுவதோடு, உங்கள் அந்தஸ்தும் குறைக்கப்படும். உண்மையில், சக்கரத்தில் ஆத்மாக்கள் பரமாத்மாவைச் சந்திக்கும் சங்கமமே கும்பம் என்று அழைக்கப்படுகின்றது. கடவுள் மட்டுமே வந்து உங்களுக்கு இராஜயோகம் கற்றுக் கொடுக்கின்றார். அவர் மறுபிறவிகளுக்கு அப்பாற்பட்டவர். ஆனாலும் குழந்தைகள் இதனைப் புரிந்துகொள்வதில்லை. அவர்கள் ஸ்ரீமத்தைப் பின்பற்றுவதில்லை. எனவே, எவ்வாறு அவர்களது படகு அக்கரைக்குச் செல்லும்? படகு அக்கரைக்குச் செல்வது என்றால், இராஜ அந்தஸ்தொன்றை அடைவதாகும். ஸ்ரீமத்தைப் பின்பற்றுவதன் மூலம் மட்டுமே நீங்கள் இராச்சியம் ஒன்றைப் பெற்றுக் கொள்வீர்கள். நீங்கள் ஸ்ரீமத்தைப் பின்பற்றவில்லை எனில், நீங்கள் முடிவடைந்து விடுவீர்கள். ஒளியேற்றப்பட்ட மணவாட்டிகளே மணமகனுடன் திரும்பிச் செல்வார்கள். ஒளி அணைந்து விட்டால், அவருடன் திரும்பிச் செல்ல முடியாது. விசேட அன்புக்குரிய குழந்தைகள் மட்டுமே அவருடன் திரும்பிச் செல்வார்கள். ஏனையோர் வரிசைக்கிரமமாக அவரைப் பின்தொடர்ந்து செல்வார்கள். இருந்த பொழுதும், எல்லோரும் தூய்மையாகுவார்கள். சகல ஆத்மாக்களுக்கும் ஒரேயளவான பலம் இல்லை. ஒவ்வொரு ஆத்மாவின் பாகமும் அவரவருக்குரியதேயாகும். எவராவது இருவர் ஒரே அந்தஸ்தைப் பெற்றுக்கொள்ள முடியாது. இறுதியில், எல்லோருடைய பாகமும் தெளிவாகத் தெரியும். விருட்சம் மிகப் பெரியது. எத்தனையோ பல மனிதர்கள் இருக்கிறார்கள். பெரிய கிளைகளாகவும், பக்கக் கிளைகளாகவும் இருக்கும் பிரதானமானவர்களே கண்ணுக்குப் புலப்படுவார்கள். பிரதானமானது அத்திவாரமேயாகும். ஏனையோர் பின்னரே வருகிறார்கள். அவர்களுக்குக் குறைந்த பலமே இருக்கின்றது. எல்லோரும் சுவர்க்கத்திற்குப் போக முடியாது. பாரதமே சுவர்க்கமாக இருந்தது. பாரதத்திற்குப் பதிலாக ஜப்பான் நாடு சுவர்க்கமாகும் என்றில்லை. அது சாத்தியமில்லை. அச்சா.

பாப்தாதாவின் அதாவது தந்தையாகவும் தாயாகவும் இருப்பவரது இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, வெகு நாட்களுக்கு முன்பு தொலைந்து போய், இப்போது கண்டெடுக்கப்பட்டிருக்கும் ஞான நட்சத்திரங்களாக இருக்கும் குழந்தைகளுக்கு அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

இரவு வகுப்பு: 24ஃ04ஃ68

ஏனைய சமய ஸ்தாபகர்களால் எல்லோருக்கும் நன்மை செய்ய முடியாதென்பது குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்தப்பட்டுள்ளது. அவர்கள் கீழிறங்கி வரும்போது, தமக்குப் பின்னால் ஏனையோரையும் கீழே கொண்டு வருகிறார்கள். உங்களை விடுதலை செய்து வழிகாட்டும் ஒரேயொருவருக்கு மட்டுமே புகழ் இருக்கிறது. அவர் பாரதத்தில் மட்டுமே வருகிறார். பாரதமே அனைத்துத் தேசங்களிலும்; அதிமேலானதாகும். பாரதத்தை நீங்கள் பெரிதும் போற்ற வேண்டும். தந்தை மட்டுமே வந்து எல்லோருக்கும் சற்கதி அருள்கிறார். அதன்பின்னரே அமைதி ஏற்படும். உலகத்தின் ஆரம்பத்தில் உலகத்தில் அமைதி நிலவியது. சுவர்க்கத்தில் ஒரேயொரு தர்மமே இருந்தது. இப்போது எண்ணற்ற மதங்கள் இருக்கின்றன. தந்தை மட்டுமே வந்து அமைதியை நிலைநாட்டுகிறார். கடந்து சென்ற சக்கரத்தில் செய்ததைப் போல அதை அவர் செய்கிறார். குழந்தைகளாகிய நீங்கள் ஞானத்தைப் பெற்றிருக்கிறீர்கள் என்பதால் உங்கள் கடைதல் தொடர்கின்றது. வேறு எவரும் தொடர்ந்தும் கடைவதில்லை. நீங்கள் மட்டுமே இதைப் புரிந்துகொள்கின்றீர்கள். சரீர உணர்வு காரணமாக அவர்கள் சரீரத்தை மட்டுமே வழிபாடு செய்கிறார்கள். ஆத்மாக்கள் நிச்சயமாக இங்கே மறுபிறப்பெடுக்கிறார்கள். தூய்மையானவர் ஒரேயொருவரே இருக்கிறார் என்பதை இப்பொழுது நீங்கள் புரிந்துகொள்கின்றீர்கள். சற்கதி தரும் மறைமுகமான ஞானத்தைத் தந்தையொருவரே உங்களுக்குத் தருகின்றார். இருப்பினும், அனுமார், கணேசர் போன்றவர்கள் யாருமேயில்லை. அவர்கள் எல்லோரும் வழிபாடு செய்பவர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். அச்சா.

ஆன்மீகத் தந்தையும் தாதாவும் ஆன்மீகக் குழந்தைகளுக்கு அன்பும் நினைவுகளும் இரவு வணக்கமும் கூறுகிறார்கள். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.


தாரணைக்கான சாராம்சம்:

1. தண்டனையிலிருந்து காப்பாற்றப்படுவதற்கு, சகல சரீர உறவினர்களிடமிருந்தும் தொடர்புகளிலிருந்தும் உங்கள் புத்தியின் யோகத்தை அகற்றி, ஒரேயொரு தந்தையுடன் இணைத்துக் கொள்ளுங்கள். இறுதியில், தந்தையைத் தவிர வேறு எவரும் நினைவு செய்யப்படக்கூடாது.

2. ஆணவற்றமவராகி மௌனமாக இருந்து முட்களை மலர்களாக்கும் முயற்சியைச் செய்யுங்கள். ஸ்ரீமத்தைப் பின்பற்றுவதனால், குருடர்களுக்குக் கைத்தடியாகுங்கள். தூய்மையாகி, மற்றவர்களையும் தூய்மையாக்குங்கள்.

ஆசீர்வாதம்:
நீங்கள் வார்த்தைகளினால் சேவை செய்வதுடன் மனதினூடாகவும் சக்திவாய்ந்த சேவை செய்வதன் மூலமும் இலகு வெற்றி சொரூபம் ஆகுவீர்களாக.

வார்த்தைகளின் மூலம் சேவை செய்வதனால், சதா மும்முரமாக இருப்பதில் அனுபவசாலியாக இருப்பதைப் போன்று, ஒவ்வொரு கணமும் உங்கள் வார்த்தைகளினால் சேவை செய்வதுடன் உங்கள் எண்ணங்கள் மூலமும் இயல்பாகவே சேவை நடக்கட்டும். மனதின் மூலம் சேவை செய்வதென்பது ஒவ்வொரு கணமும் ஒவ்வோர் ஆத்மாவிற்கும் நல்லாசிகளுக்கும் தூய உணர்வுகளுக்குமான தூய அதிர்வலைகளை இயல்பாகவே நீங்களும் ஏனையோரும் உணர்வதாகும். ஓவ்வொரு கணமும், ஒவ்வோர் ஆத்மாவிற்கும் உங்கள் மனதிலிருந்து எப்பொழுதும் ஆசீர்வாதங்கள் வெளிப்படட்டும். மனதினால் நீங்கள் சேவை செய்வதன் மூலம் உங்கள் வார்த்தைகளின் சக்தி சேமிக்கப்படும். மனதின் மூலம் செய்யும் இந்தச் சக்திவாய்ந்த சேவையானது உங்களை இலகுவாகச் சக்தி சொரூபமாக்கி விடும்.

சுலோகம்:
தங்கள் ஒவ்வொரு செயலினாலும் தந்தையின் பெயரைப் புகழடையச் செய்பவர்களே உண்மையான உதவியாளர்கள்.