09.01.19        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்:
இனிய குழந்தைகளே, தொடர்ந்தும் பாபாவை அன்புடன் நினைவுசெய்யுங்கள், சதா ஸ்ரீமத்தைப் பின்பற்றி, எப்பொழுதும் கல்வியில் கவனம் செலுத்துங்கள், அப்பொழுது அனைவரும் உங்களுக்கு மரியாதை செலுத்துவார்கள்.

கேள்வி:
எக் குழந்தைகளினால் அதீந்திரிய சுகத்தை அனுபவம் செய்ய முடியும்?

பதில்:
ஆத்ம உணர்வில் இருப்பவர்களால் ஆகும். 1. இதனை அடைவதற்கு நீங்கள் எவருடனாவது பேசும்பொழுதும் அல்லது எவருக்கேனும் விளங்கப்படுத்தும்பொழுதும் ஆத்மாவாகிய நீங்கள், உங்களுடைய சகோதர ஆத்மாவுடன் பேசுகிறீர்கள் என்று கருதுங்கள். சகோதரத்துவப் பார்வையை உறுதிசெய்வதனால், நீங்கள் தொடர்ந்தும் ஆத்ம உணர்வுடையவர்கள் ஆகுவீர்கள். 2. இறை மாணவர்களாக இருக்கின்ற போதையை உடையவர்கள் மாத்திரமே அதீந்திரிய சுகத்தை அனுபவம் செய்வார்கள்.

பாடல்:
காற் சதங்கை ஒலியுடன் என் மனக்கதவுக்கு வந்துள்ளர் யாரோ?

ஓம் சாந்தி.
தந்தை இங்கமர்ந்திருந்து குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார் வேறு எந்த நிறுவனத்திலும் தந்;தை தனது குழந்தைகளுக்கு விளங்கப்படுத்துகின்றார் என்று அவர்கள் கூறுவதில்லை. உண்மையில் ஒரேயொருவரே குழந்தைகள் அனைவரினதும் தந்தை என்பது குழந்தைகளாகிய உங்களுக்குத் தெரியும். அனைவரும் சகோதரர்கள். குழந்தைகளாகிய நீங்கள் நிச்சயமாக அத் தந்தையிடமிருந்து ஆஸ்தியைப் பெறுகிறீர்கள். உங்களால் சக்கரத்தை மிகவும் தெளிவாக விளங்கப்படுத்த முடியும். இதுவே நீங்கள் முக்தியையும், ஜீவன்முக்தியையும் பெறுகின்ற சங்கமயுகமாகும். குழந்தைகளாகிய நீங்கள் ஜீவன்முக்திக்குள் செல்லும்பொழுது, ஏனைய அனைவரும் முக்திக்குள் செல்வார்கள். அவர் மாத்திரமே சற்கதியை அருள்பவரும், விடுதலை அளிப்பவரும், வழிகாட்டி என்றும் அழைக்கப்படுகிறார். இராவண இராச்சியத்தில் ஏராளமான மனிதர்கள் உள்ளனர். இராமரின் இராச்சியத்தில் ஒரேயொரு ஆதி சனாதன தேவிதேவதா தர்மமே உள்ளது. அது ஆரிய, ஆரியர் அல்லாத (அனாரிய) என்றும் அழைக்கப்படுகிறது. சீர்திருந்தியவர்கள் ஆரியர்கள் என்றும், சீர்திருந்தாதவர்கள் ஆரியர் அல்லாதவர்கள் என்றும் அழைக்கப்படுகின்றனர். இதன் அர்த்தமோ அல்லது சீர்திருந்தியவர்கள் எவ்வாறு சீரழிந்தவர்கள் ஆகினார்கள் என்பதோ எவருக்கும் தெரியாது. ஆரிய சமயம் என்பது ஒரு சமயமாக இருக்கவில்லை. அத் தேவர்கள் சீர்திருந்தியவர்களாக இருந்தார்கள், பின்னர் 84 பிறவிகளை எடுக்கும்பொழுது, அவர்கள் சீரழிந்தவர்கள் ஆகினார்;கள். அதிமேலான பூஜிக்கத் தகுதிவாய்ந்தவர்கள் பின்னர் பூஜிப்;பவர்கள் ஆகினார்கள். தந்தை மாத்திரமே உங்களுக்கு ஹம்சோ என்பதன் அர்த்தத்தை விளங்கப்படுத்துகிறார். ஏணிப் படத்தை விளங்கப்படுத்துவது மிகவும் சிறந்தது. ஆத்மாக்களே பரமாத்மா, பரமாத்மாவே ஆத்மா என்பதல்ல் இல்லை. இது ஒரு பல்வகை நாடகமாகும். நீங்கள் பூஜிக்கத் தகுதிவாய்ந்தவர்களாக இருந்து, பின்னர் பூஜிப்பவர்கள் ஆகினீர்கள் என்பதும், நீங்கள் தேவர்களாக இருந்து, பின்னர் சத்திரியர்கள் போன்றோர் ஆகினீர்கள் என்பதும் உங்களுக்குத் தெரியும். நீங்கள் நிச்சயமாக ஏணியில் கீழிறங்கி வருவீர்கள். 84 பிறவிகளை எடுப்பவர்களின் இக் கணக்கு உள்ளது. தந்தை கூறுகிறார்: உங்களுக்கு உங்கள் சொந்தப் பிறவிகளைத் தெரியாது. நான் உங்களுக்கு அவற்றைப் பற்றிக் கூறுகிறேன். இது ஒரு சக்கரமாகும். நாங்களே அதனுள் தேவர்கள், சத்திரியர்கள் போன்றோர் ஆகுபவர்கள். 21 பிறவிகள் மிகவும் பிரசித்தமானவை. மக்களுக்கு இவ்விடயங்கள் பற்றி தெரியாது. அவர்கள் தமோபிரதானானவர்கள். குழந்தைகளாகிய நீங்கள் மாத்திரமே இப்பொழுது ஞானம் அனைத்தையும் பெறுகின்றீர்கள். ஆனால், அரிதாகவே எவரேனும் புரிந்துகொள்கிறார்;கள். இதனாலேயே பல மில்லியன் கணக்கானோரில் ஒரு கைப்பிடி அளவினரே வந்து இந்த ஞானத்தைப் பெற்று, தேவ தர்மத்திற்கு உரியவர்கள் ஆகுவார்கள் என்று கூறப்படுகிறது. நீங்கள் இதையிட்டு வியப்படையக்கூடாது. சக்கரத்தின் படத்தை விளங்கப்படுத்துவது இலகுவானதாகும். அது சத்திய யுகம், ஆனால் இதுவோ கலியுகமாகும். சத்திய யுகத்தில் மிகச்சொற்ப மக்களே இருக்கிறார்கள். முதலில் விருட்சம் மிகச் சிறியதாக இருக்கிறது, பின்னர் அது வளர்ச்சியடைகிறது. எவருக்கும் இந்த விருட்சத்தைப் பற்றித் தெரியாது. அவர்கள் பிரம்மாவைப் பற்றி மிக அரிதாகவே புரிந்து கொள்கின்றார்கள். பிரம்மாவின் வாய்வழித் தோன்றல்;களான, பிராமணர்கள் நிச்சயமாகத் தேவைப்படுகிறார்கள் என அவர்களுக்குக் கூறுங்கள். அவர்கள் தத்தெடுக்கப்பட்ட குழந்தைகள். அப் பிராமணர்கள் பௌதீகப் படைப்புக்கள், ஆனால் பிராமணர்களாகிய நீங்களோ வாய்வழித் தோன்றல்கள். இதுவே இராவணனின் அந்நிய இராச்சியமாகும். தந்தை வந்து இராம இராச்சியத்தை ஸ்தாபிக்க வேண்டும். ஆகவே அவர் எவரிலாவது பிரவேசிப்பார். பாருங்கள், இவர் விருட்சத்தின் உச்சியில் நிற்கிறார். அது இப்பொழுது முற்றிலும் உக்கிய நிலையை அடைந்துள்ளது. தந்தை கூறுகிறார்: நான் இவரின் பல பிறவிகளின் இறுதிப் பிறவியில் இவரில் பிரவேசிக்கிறேன். இதுவே அவரின் 84 பிறவிகளின் இறுதிப் பிறவி, அத்துடன் அவர் தபஸ்யா செய்து கொண்டிருக்கிறார். நாங்கள் அவரைக் கடவுள் என்று அழைப்பதில்லை. உலகிலுள்ள மக்கள் கடவுள் சர்வவியாபி என்றும், அவர் கூழாங்கற்களிலும் கற்களிலும் இருக்கிறார் என்றும் கூறியுள்ளார்கள். இதனாலேயே அவர்களும் கூழாங்கற்களையும் கற்களையும் போன்று ஆகியுள்ளார்கள். தேவர்களுடைய அனைத்தும் தனித்துவமானவை. நீங்கள் இப்பொழுது கற்று, அந்த அந்தஸ்தைப் பெறுகின்றீர்கள். இது அத்தகைய மேன்மையான கல்வியாகும். அத் தேவர்கள் தூய்மையானவர்கள் என்பதாலும், அத் தர்மம் கடவுளாலேயே ஸ்தாபிக்கப்பட்டதாலும் தேவர்கள் இறைவர், இறைவிகள் என்றும் அழைக்கப்படுகின்றனர், ஆகவே அவர்கள் நிச்சயமாக இறைவர், இறைவிகளாகவே இருப்பார்கள். ஆனால், அவர்கள் சக்கரவர்த்தி என்றும், சக்கரவர்த்தினி என்றும் அழைக்கப்படுகிறார்கள். ஸ்ரீ இலக்ஷ்மியையும் ஸ்ரீ நாராயணனையும் இறைவர், இறைவி என்று அழைப்பது குருட்டு நம்பிக்கையாகும், ஏனெனில் ஒரேயொரு கடவுள் மாத்திரமே உள்ளார். நீங்கள் சிவனையும், சங்கரையும் வேறுபடுத்தி, அவர்கள் இருவரும் வெவ்வேறான இருவர் என்று காட்டுகின்றீர்கள். இதனாலேயே நீங்கள் தேவர்களை ஒதுக்கி விட்டீர்கள் என்று அம்மக்கள் கூறுகின்றார்கள். உங்கள் புத்தியில் முழுச் சக்கரமும் உள்ளது. ஆனால் மகாராத்திகளால் மாத்திரமே இதனை மிகத்தெளிவாக விளங்கப்படுத்த முடியும். இதனைச் செவிமடுக்கின்ற பலர் உள்ளனர், ஆனால், அது அவர்களின் புத்தியில் இருப்பதில்லை. ஆகவே அவர்கள் என்னவாக ஆகுவார்கள்? அவர்கள் சில சதங்களே பெறுமதியுடைய பணிப்பெண்களும், வேலையாட்;களும் ஆகுவார்கள். நீங்கள் மேலும் முன்னேறிச் செல்லும்பொழுது, உங்களுக்குக் காட்சிகள் கிடைக்கும், ஆனால் அந்த நேரத்தில் உங்களால் எதுவும் செய்ய முடியாதிருக்கும். நேரம் முடிவுக்கு வந்துவிடும். ஆகவே அப்பொழுது உங்களால் என்ன செய்ய முடியும்? இதனாலேயே பாபா தொடர்ந்தும் உங்களை எச்சரிக்கிறார். எவ்வாறாயினும், அனைவரும் மேன்மையானவர்கள் ஆகுவது என்பது சாத்தியமல்ல. அவர்களுடைய பாத்திரங்கள் சுத்தமாக இல்லை; அவர்களின் புத்தி குப்பைகளால் நிரம்பியுள்ளது. நீங்கள் இதில் மிகச் சிறந்த முயற்சி செய்ய வேண்டும். படங்களைப் பெருமளவுக்கு விளங்கப்படுத்துவதற்கான பயிற்சி உங்களுக்குத் தேவை. இல்லாவிட்டால் இறுதியில் நீங்கள் வருந்த நேரிடும். ஆத்மாக்களாகிய நீங்கள் இந்த உணவைப் பெறுகின்றீர்கள். இவ்விடயங்கள் அனைவருக்கும் விளங்கப்படுத்தப்பட வேண்டும். பயப்படுதல் என்ற கேள்விக்கே இடமில்லை. பெரிய இடங்களில் நீங்கள் அருங்காட்சியகங்கள், கண்காட்சிகள் போன்றவற்றை நடத்தும்பொழுது உங்களின் பெயர் போற்றப்படும். அனைவரின் அபிப்பிராயத்தையும் அறியுமாறு பாபா உங்களுக்குக் கூறியுள்ளார். அவையும் பிரசுரிக்கப்பட வேண்டும். குழந்தைகளாகிய நீங்கள் பெருமளவு சேவை செய்ய வேண்டும். அது புதிய உலகம் என்பதையும், இது பழைய உலகம் என்பதையும் அந்த மக்களால் புரிந்துகொள்ளக்கூடியதாக உள்ளதா, இல்லையா என்பதை நீங்கள் சோதிக்க வேண்டும். எவராலும் இதனைப் புரிந்துகொள்ளக்கூடியதாக இருக்க வேண்டும். ஆனால் அவர்கள் சக்கரத்தின் ஆயுட்காலத்தை அதிகரித்துள்ளதால், மக்கள் குழப்பம் அடைந்துள்ளார்கள். அனைத்திற்கும் முதல், நீங்கள் தந்தையின் அறிமுகத்தைக் கொடுக்க வேண்டும். ஆத்ம உணர்வில் இருப்பவர்களால் அதீந்திரிய சுகத்தை அனுபவம் செய்ய முடியும். நீங்கள் சொற்பொழிவுகள் ஆற்றுவதால் மாத்திரம் எதுவுமே நடைபெறாது. நீங்கள் சொற்பொழிவுகள் ஆற்றும்பொழுது, இந்த ஆத்மாவாகிய நான், எனது சகோதர ஆத்மாக்களுக்கு விளங்கப்படுத்துகின்றேன் என்று நீங்கள் விளங்கப்படுத்த வேண்டும். ஆத்ம உணர்வுடையவர்கள் ஆகுவதற்குப் பெருமளவு முயற்சி தேவை. ஆனால்; குழந்தைகளாகிய நீங்கள் மீண்டும் மீண்டும் மறந்து விடுகிறீர்கள். தந்தையே வந்து குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்துகிறார். ஆத்மாக்கள் நீண்டகாலமாகப் பரமாத்மாவிடமிருந்து பிரிந்திருந்தார்கள் என்பது நினைவுகூரப்படுகிறது. உங்களால் மாத்திரமே இதன் அர்த்தத்தைப் புரிந்துகொள்ள முடியும். மகாராத்திகள் தங்களை ஆத்மாக்கள் என்று கருதி, தந்தையை அதிகளவு நினைவுசெய்தைப் பயிற்சி செய்ய வேண்டும். அப்பொழுதுதான் அவர்களால் தங்களைச் சக்தி நிறைந்தவர்களாகக் கருத முடியும். தங்களை ஆத்மாக்களாகக் கருத முடியாதவர்களால் எதனைக் கிரகிக்க முடியும்? நினைவின் மூலம் மாத்திரமே உங்களால் சக்தி நிறைந்தவர்களாக முடியும். அது ஞான சக்தி என்று கூறப்படுவதில்லை. யோகசக்தி என்றே கூறப்படுகிறது. யோகசக்தியின் மூலம் மாத்திரமே உங்களால் உலக அதிபதிகள் ஆக முடியும். இப்பொழுது நீங்கள் ஏனைய பலரையும் உங்களைப் போன்று ஆக்க வேண்டும். நீங்கள் ஏனைய பலரையும் உங்களைப் போன்று ஆக்கும்வரை விநாசம் இடம்பெற முடியாது. ஒரு பெரிய யுத்தம் ஆரம்பித்தாலும், பின்னர் அது முடிவடைந்துவிடும். இப்பொழுது பலரிடம் குண்டுகள் உள்ளன. ஆனால் அவை வெறுமனே வைத்திருப்பதற்கு அல்ல. பழைய உலகம் நிச்சயமாக அழிக்கப்பட்டு, நிச்சயமாக ஆதி சனாதன தர்மம் ஸ்தாபிக்கப்பட வேண்டும். சிறிது காலத்திற்குப் பின்னர், உண்மையில் இதுவே அந்த அதே மகாயுத்தம் என்று அனைவரும் கூறுவார்கள். கடவுள் நிச்சயமாக இங்குள்ளார். பலரும் உங்களிடம் வரும்பொழுது, அனைவரும் உங்களை ஏற்றுக்கொள்ள ஆரம்பித்துக் கூறுவார்கள்: இவர்கள் வேகமாக வளர்ச்சி அடைகின்றார்கள்; இவர்களிடம் பெருமளவு சக்தியுள்ளது. நீங்கள் நினைவில் நிலைத்திருக்கின்ற அளவுக்கேற்ப, சக்தியால் நிரப்பப்படுவீர்கள். தந்தையை நீங்கள் நினைவுசெய்வதன் மூலம் மற்றவர்களுக்கு ஒளியைக் கொடுக்கிறீர்கள். மேலும் இந்த தாதாவும் (பிரம்மா) கூறுகின்றார்: இக் குழந்தைகள் நான் செய்வதை விடவும் சிறந்த சேவையைச் செய்கின்றார்கள். இப்பொழுது இன்னமும் நேரமுள்ளது. எவராலும் மிகச்சரியான யோகத்தில் நிலைத்திருக்க முடிவதில்லை. அவர்கள் தங்களில் யோகம் குறைவாக உள்ளது என்பதையும், இதனாலேயே அம்பு இலக்கைத் தாக்குவதில்லை என்பதையும் உணர்கிறார்கள். கடவுள் குமாரிகளை ஞான அம்புகளினால் நிரப்புகிறார். நீங்கள் பிரஜாபிதா பிரம்மகுமார்களும் குமாரிகளும் ஆவீர்கள். இவர் பிரம்மாவும், நீங்கள் தத்தெடுக்கப்பட்ட குழந்தைகளும் ஆவீர்கள். ஒரேயொரு படைப்பவரே உள்ளார். ஏனைய அனைவரும் கற்கிறார்கள்;;. பிரம்மாவும் அதற்குள் அடங்குகிறார். ஆகவே அப்பொழுது இது படைப்பாகும். நீங்கள் தேவர்கள் ஆகவுள்ளீர்கள்; நீங்கள் தெய்வீகக் குணங்களைக் கிரகிக்கின்றீர்கள். சில சந்தர்ப்பங்களில், இரண்டு சக்கரங்களினாலும் (ஒரு தம்பதியினர்) இப் பாதையைப் பின்பற்ற முடியாதுள்ளது. அது அவர்கள் மணலில் நிற்பது போன்றுள்ளது. பாபா எப்பெயர்களையும் குறிப்பிடவில்லை. எவ்வாறாயினும், பாபா உண்மையையே கூறுகின்றார் என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். குழந்தைளாகிய நீங்களும் உங்களுடன் வேலை செய்பவர்களின் சுபாவங்களை அறிந்துகொள்ள முடியும். குழந்தைகளாகிய நீங்களே தலையின் கிரீடமாக இருந்தீர்கள் என்பதையும், இப்பொழுது மீண்டும் ஒருமுறை அவ்வாறு ஆகுகின்றீர்கள் என்பதையும் புரிந்து கொள்கின்றீர்கள். நீங்கள் பிறருக்கு விளங்கப்படுத்தும்பொழுது முதலில் அவர்கள் உங்களை நம்புவதற்குத் தயாராக இருக்க மாட்டார்கள். பின்னர், படிப்படியாக, அவர்கள் புரிந்துகொள்ள ஆரம்பிக்கிறார்கள். இதற்குப் பெருமளவு விவேகம் தேவை. ஆத்மாவிலேயே புத்தி உள்ளது. ஆத்மாவே சத்தியமும், உயிருள்ளவரும், பேரானந்த சொரூபமும் ஆவார். குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது ஆத்ம உணர்வுடையவர்கள் ஆக்கப்படுகின்றீர்கள். தந்தை வரும்வரை எவராலும் ஆத்ம உணர்வுடையவர்களாக முடியாது. தந்தை இப்பொழுது கூறுகிறார்: ஆத்ம உணர்வுடையவர்கள் ஆகுவீர்களாக! சதா என்னை மாத்திரம் நினைவுசெய்யுங்கள். என்னிடமிருந்து நீங்கள் சக்தியைப் பெறுவீர்கள். இந்தத் தர்மம் மிகவும் சக்தி நிறைந்ததாகும்;; அது முழு உலகையும் ஆட்சி செய்கின்றது. இது ஒரு சிறிய விடயமா? நீங்கள் தந்தையுடன் யோகம் செய்வதால் சக்தியைப் பெறுகின்றீர்கள். இது நீங்கள் தெளிவாக விளங்கப்படுத்த வேண்டிய, புதியதொரு விடயம். அவர் மாத்திரமே ஆத்மாக்களின் எல்லையற்ற தந்தையாவார். அவர் மாத்திரமே புதிய உலகைப் படைப்பவர். நீங்கள் அவர்களுக்கு சிவனின் தொழில், அவர் வந்து என்ன செய்கிறார் என்பவற்றை விளங்கப்படுத்த முடியும். அவர்கள் கிருஷ்ணரின் பிறந்த நாளையும், சிவனுடைய பிறந்தநாளையும் கொண்டாடுகிறார்கள். இப்பொழுது, அவர்கள் இருவரில் மகத்துவமானவர் யார்? அதி மேலானவர் அசரீரியான ஒரேயொருவரே. அவர்கள் சிவனின் பிறந்த நாளைக் கொண்டாடும் வகையில் அவர் என்ன செய்தார்? கிருஷ்ணர் என்ன செய்தார்? பரமாத்மாவாகிய பரமதந்தை ஒரு சாதாரண, பழைய சரீரத்தில் பிரவேசித்;து ஸ்தாபனையை மேற்கொள்கிறார் என்று எழுதப்பட்டுள்ளது. பல்வேறு அபிப்பிராயங்கள் உள்ளன. உங்களை மேன்மையானவர் ஆக்குகின்ற ஒரேயொரு ஸ்ரீமத் மாத்திரம் உள்ளது. மனிதர்களின் கட்டளைகளைப் பின்பற்றுவதன் மூலம் எவ்வாறு நீங்கள் மேன்மையானவர்கள் ஆக முடியும்? இவை சங்கம யுகத்தில் ஒரேயொரு தடவை மாத்திரமே நீங்கள் பெறுகின்ற, இறை வழிகாட்டல்களாகும். தேவர்கள் வழிகாட்டல்களைக் கொடுப்பதில்லை. அவர்கள் மனிதர்களிலிருந்து தேவர்களாக மாறுகிறார்கள், அவ்வளவுதான். அங்கு அவர்கள் குருமார்கள் போன்றவர்களை ஏற்றுக் கொள்வதில்லை. இங்கு மனிதர்கள் குருமார்களிடமிருந்து வழிகாட்டல்களைப் பெறுகிறார்கள். ஆகவே நீங்கள் இராஜயோகிகள் என்பதை அவர்களுக்குச் சாதுரியமாக விளங்கப்படுத்த வேண்டும். ஹத்தயோகிகளால் ஒருபொழுதும் இராஜயோகத்தைக் கற்பிக்க முடியாது; அவர்கள் துறவறப் பாதைக்கு உரியவர்கள். இல்லறப் பாதைக்கு உரியவர்கள் மாத்திரமே யாத்திரைகள் செல்ல வேண்டும். குழந்தைகளாகிய நீங்கள் எதனையிட்டும் குழப்பம் அடையக்கூடாது. இது மீண்டும் மீண்டும் தொடர்கின்ற, ஏற்கெனவே நிச்சயிக்கப்பட்ட நாடகமாகும். முன்னைய கல்பத்தில் செய்ததைப் போன்று உங்கள் சேவை தொடர்கின்றது. நாடகம் உங்களை முயற்சி செய்யத் தூண்டுகிறது. நீங்கள் மிகச்சரியாக முன்னைய கல்பத்தில் செய்ததைப் போன்றே அதனைச் செய்கின்றீர்கள். முயற்சி செய்கின்றவர்களின் நடத்தையிலிருந்து நீங்கள் அவர்களைப் புரிந்துகொள்ள முடியும். இதனாலேயே, கண்காட்சிகளில், நீங்கள் ஒரு குழுவுக்கு ஒரு வழிகாட்டியை நியமிக்க வேண்டும். அதனால் அவ் வழிகாட்டியால் மிகவும் நன்றாக விளங்கப்படுத்த முடியும். உங்களுக்குக் கற்பிக்கின்ற தந்தைக்கும் இது மிகவும் நன்றாகத் தெரியும். அவர் உங்களின் புத்தியை மிகவும் பரந்ததாகவும், எல்லையற்றதாகவும் ஆக்குகின்றார். நீங்கள் யாருடைய குழந்தைகள் என்ற போதையை நீங்கள் கொண்டிருக்க வேண்டும்! கடவுள் உங்களுக்குக் கற்பிக்கின்றார்! சிலரால் கற்க முடியாவிட்டால், ஓடிவிடுகிறார்கள். கடவுளும் புரிந்து கொள்கிறார்: இவர் எனது குழந்தையில்லை. கடவுளின் சில குழந்தைகள் எவ்வாறு கற்றார்கள் என்றும், பின்னர் அவர்கள் ஓடிவிட்டார்;கள் என்பதையும் நீங்கள் கண்டீர்கள். பின்னர் எதனையாவது புரிந்துகொண்ட பின்னர், அவர்கள் மீண்டும் கற்க ஆரம்பித்தார்கள். பின்னர் அவர்கள் மிகவும் நன்றாக யோகத்தில் நிலைத்திருந்தால், ஓர் உயர்ந்த அந்தஸ்தைப் பெற முடியும். அவ்வாறான ஒரு பாடசாலையிலிருந்து விலகியதால் தாங்கள் உண்மையில் அதிகக் காலத்தை வீணாக்கி விட்டார்கள் என்பதையும் அவர்கள் புரிந்துகொள்வார்கள். அவர்கள் இப்பொழுது நிச்சயமாகத் தங்கள் ஆஸ்தியைத் தந்தையிடமிருந்து பெறுவார்கள். தந்தையை நினைவுசெய்து, பாபா, பாபா என்று கூறுவதால், நீங்கள் புளகாங்கிதம் அடைவீர்கள். பாபா எங்களை ஒரு மேன்மையான அந்தஸ்தைப் பெறுவதற்குத் தூண்டுகிறார். நாங்கள் மிகவும் பாக்கியசாலிகள்! நீங்கள் மீண்டும் மீண்டும் பாபாவை நினைவுசெய்வதுடன், தொடர்ந்தும் வழிகாட்டல்களைப் பின்பற்றவும் வேண்டும், அப்பொழுது பெருமளவு முன்னேற்றம் ஏற்பட முடியும். அவ்வாறான நபருக்கு அனைவரும் பெருமளவு மரியாதை கொடுப்பார்கள். பாபா கூறுகிறார்: கற்றவர்கள் முன்னிலையில் கற்காதவர்கள் தலை வணங்குவார்கள். சரீர உணர்வைக் கொண்டவர்களால் தெய்வீகக் குணங்களைக் கிரகிக்க முடியாது. உங்களின் முகங்கள் முதற்தரமானவையாக இருக்கவேண்டும். கடவுளினால் கற்பிக்கப்படுகின்றவர்களிடம் அதீந்திரிய சுகம் பற்றி வினவுங்கள் என்று கூறப்படுகிறது. நீங்கள் கல்வியில் அதிகளவு கவனம் செலுத்துவதுடன், ஸ்ரீமத்தையும் பின்பற்ற வேண்டும். உங்கள் யோக சக்தியின் மூலம் உலகமே தூய்மையாகுகிறது. யோகத்தின் மூலம் நீங்கள் உலகைத் தூய்மையாக்குகின்றீர்கள். அது ஓர் அற்புதமாகும்! நீங்கள் மலையை உங்கள் விரல்களினால் உயர்த்த வேண்டும். (கோவர்த்தனம் என்ற மலை ஒத்துழைப்பு என்ற அனைவரினதும் விரல்களினால் உயர்த்தப்பட்டது என்ற ஞாபகார்த்தம் உள்ளது) அதுவே இந்த அழுக்கான உலகைத் தூய்மையாக்கியவர்களின் அடையாளம் ஆகும். அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டெடுக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:

1. உங்களுடைய புத்தி உண்மையான ஞானத்தைக் கிரகிப்பதற்கு, நீங்கள் உங்கள் புத்தி என்ற பாத்திரத்தைத் தூய்மையாகவும், சுத்தமாகவும் ஆக்க வேண்டும். வீணான விடயங்களை உங்களின் புத்தியிலிருந்து அகற்றுங்கள்.

2. தெய்வீகக் குணங்களையும் கல்வியையும் கிரகிப்பதில் முழுக் கவனம் செலுத்தி, அதீந்திரிய சுகத்தை அனுபவம் செய்யுங்கள். நீங்கள் கடவுளின் குழந்தைகள், அவரே உங்களுக்குக் கற்பிக்கின்றார் எனும் போதையை எப்பொழுதும் பேணுங்கள்.


ஆசீர்வாதம்:
நீங்கள் பேறுகளின் சொரூபம் ஆகுவதால், என்ன?, என்ன? எனும் கேள்விகளுக்கு அப்பால் இருந்து, எப்பொழுதும் சந்தோஷமான இதயத்தையுடையவராக இருப்பீர்களாக.

முழுமையானவர்களாகவும், பேறுகளின் சொரூபமாகவும் உள்ள ஆத்மாக்கள் என்றுமே எதைப் பற்றிய கேள்வி எதனையும் கொண்டிருக்க முடியாது. சந்தோஷத்தின் ஆளுமை அவர்களின் முகங்களிலும், அவர்களின் நடத்தையிலும் தென்படும். இதுவே திருப்தி என அழைக்கப்படுகின்றது. சிலபேறுகள் குறைவாக இருப்பதே சந்தோஷம் குறைவாக இருப்பதற்கான காரணமும், ஏதோவோர் ஆசை இருப்பதே பேறுகள் குறைவாக இருப்பதற்கான காரணமும் ஆகும். பல சூட்சுமமான ஆசைகளைக் கொண்டிருப்பது உங்களைப் பேறுகளின் குறைவிற்கு இட்டுச் செல்கின்றது. ஆகவே தற்காலிகமான ஆசைகளை ஒருபுறம் விட்டுவிட்டு, பேறுகளின் சொரூபம் ஆகுங்கள், நீங்கள் எப்பொழுதும் சந்தோஷமான இதயத்தையுடையவராக இருப்பீர்கள்.

சுலோகம்:
கடவுளின் அன்பில் திளைத்திருங்கள், மாயையின் கவர்ச்சி முடிவடைந்து விடும்.


தந்தை பிரம்மாவிற்குச் சமமானவர் ஆகுவதற்கான விசேட முயற்சி:
நீங்கள் தந்தை பிரம்மாவை முழுமையான, சரீர உணர்வற்ற, நடந்தும் உலாவியும்; திரியும் தேவதையாக அனுபவம் செய்தீர்கள். செயல்களைச் செய்யும்பொழுதும், பிறருடன் பேசும்பொழுதும், வழிகாட்டல்களைக் கொடுத்து, ஒவ்வொருவரின் ஊக்கத்தையும் உற்சாகத்தையும் அதிகரிக்கும்பொழுதும் அவர் எப்பொழுதும் சரீரத்திற்கு அப்பால் இருந்து, சூட்சும ஒளியின் அனுபவத்தைக் கொடுத்தார். அதேபோன்று, தந்தையைப் பின்பற்றுங்கள். சதா சரீர உணர்விற்கு அப்பால் இருங்கள். ஒவ்வொருவரும் பற்றற்ற ரூபத்தை மாத்திரமே பார்க்கட்டும். இதுவே சரீரத்தில் இருக்கும்பொழுதும் தேவதை ஸ்திதியில் இருத்தல் என அறியப்பட்டுள்ளது.