09.02.19        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்:
இனிய குழந்தைகளே, உங்கள் சரீரங்கள், மனங்கள், செல்வத்தின் மூலம் நீங்கள் உண்மையான ஆன்மீகச் சேவையைச் செய்ய வேண்டும். நீங்கள் ஆன்மீகச் சேவை செய்வதன் மூலம் மாத்திரமே பாரதம் சத்தியயுகமாக ஆகும்.

கேள்வி:
கவலையிலிருந்து விடுபட்டிருப்பதற்கு நீங்கள் சதா நினைவுசெய்ய வேண்டியது என்ன? உங்களால் எப்பொழுது கவலையற்றவர்களாக இருக்க முடியும்?

பதில்:
கவலையற்றவர்களாக இருப்பதற்கு, இந்த நாடகம் முற்றிலும் மிகச்சரியாக உருவாக்கப்பட்டுள்ளது என்பதை எப்பொழுதும் நினைவிற் கொண்டிருங்கள். நாடகத்திற்கு ஏற்ப, நடப்பவை அனைத்தும் முற்றிலும் மிகச்சரியானதாகும். எவ்வாறாயினும், இந்த நேரத்தில் குழந்தைகளாகிய உங்களால் கவலையற்றவர்களாக இருக்க முடியாது. நீங்கள் கர்மாதீத ஸ்திதியை அடையும்பொழுதே, கவலையற்றவர்களாக இருப்பீர்கள். இதற்கு, மிக நல்ல யோகம் தேவைப்படுகிறது. யோகி, கியானி (ஞானம் நிறைந்த) குழந்தைகளால் மறைந்திருக்க முடியாது.


ஓம் சாந்தி.
தூய்மையாக்குபவரான கடவுள் சிவன் பேசுகின்றார். எந்தவொரு சரீரதாரியையும் கடவுள் என அழைக்க முடியாது என்று தந்தை விளங்கப்படுத்தியுள்ளார். கடவுள் மாத்திரமே தூய்மையாக்குபவர் என்பதை மக்களும் அறிவார்கள். ஸ்ரீ கிருஷ்ணரைத் தூய்மையாக்குபவர் என்று அழைக்க முடியாது. அப்பாவி மக்கள் மிகவும் குழப்பமடைந்துள்ளனர். பாரதம் நூலிழையில் தொங்கிக் கொண்டிருக்கும் பொழுதே சிவபாபா வரவேண்டும். தந்தையைத் தவிர வேறு எவராலும் அந்தச் சிக்கலை அவிழ்க்க முடியாது. அவர் மாத்திரமே தூய்மையாக்குபவரான சிவபாபா ஆவார். குழந்தைகளாகிய உங்களுக்கு மாத்திரமே இது தெரியும், அதுவும் நீங்கள் செய்யும் முயற்சிக்கேற்ப வரிசைக்கிரமமானதே. நீங்கள் இங்கமர்ந்திருந்து, இதனைத் தினமும் செவிமடுத்தாலும், நீங்கள் சிவபாபாவுடன் இருக்கின்றீர்கள் என்பதையும், அவர் இவரினுள் பிரவேசித்து, எங்களுக்குக் கற்பித்து, எங்களைத் தூய்மையாக்குவதுடன், எங்களுக்கு இந்த வழிமுறைகளையும் கூறுகின்றார் என்பதையும் நீங்கள் அறிந்திருப்பதில்லை. நீங்கள் சுயதரிசனச் சக்கரதாரிகள் ஆகுகின்றீர்கள், நீங்கள் படைப்பவரினதும் படைப்பினதும் ஞானத்தைப் பெறுகின்றீர்கள், நீங்கள். காமத்தை வென்று, உலகை வென்றவர்கள் ஆகுகின்றீர்கள். ஆகவே, அந்தத் தந்தையே தூய்மையாக்குபவர். அவரே புதிய படைப்பைப் படைப்பவரும் ஆவார். எல்லையற்ற இராச்சியத்தை பெறுவதற்கு நீங்கள் இப்பொழுது முயற்சி செய்கின்றீர்கள். நீங்கள் சிவபாபாவிடமிருந்து உங்கள் இராச்சியப் பாக்கியத்தைப் பெறுகின்றீர்கள் என்பதை நீங்கள் ஒவ்வொருவரும் புரிந்து கொள்கிறீர்கள். இதுவும் மிகச்சரியாகப் புரிந்துகொள்ளப்படவில்லை. சிலர் இதனைச் சிறிதளவு அறிவார்கள், சிலர் முற்றிலும் எதனையும் அறியாதவர்களாக உள்ளனர். சிவபாபா கூறுகின்றார்: நானே தூய்மையாக்குபவர். எவராவது என்னிடம் வந்து வினவினால், என்னால் அவருக்கு என்னுடைய அறிமுகத்தைக் கொடுக்க முடியும். தந்தை உங்களுக்கும் தன்னுடைய அறிமுகத்தைக் கொடுத்துள்ளார். சிவபாபா கூறுகின்றார்: நான் ஒரு சாதாரண சரீரத்தினுள் பிரவேசிக்கின்றேன். இந்தச் சரீரம் சாதாரணமானது. அவர் விருட்சத்தின் உச்சியில் நிற்கின்றார். அவர் தூய்மையற்ற உலகில் இருந்தவாறு கீழே தபஸ்யா செய்வதாகக் காட்டப்பட்டுள்ளார். எவ்வாறு தபஸ்யா செய்ய வேண்டும் என்பதை சிவபாபா இவருக்குக் கற்பிக்கின்றார். சிவபாபா இராஜயோகம் கற்பிக்கின்றார். கீழே ஆதிதேவரும், மேலே ஆதிநாதரும் (பிரபு) இருக்கின்றாhகள்;. பிராமணர்களாகிய நீங்கள் சிவபாபாவின் குழந்தைகள் என்பதைக் குழந்தைகளாகிய உங்களால் கூற முடியும். நீங்களும் சிவபாபாவின் குழந்தைகளே, ஆனால் அதை நீங்கள் அறியாதவர்களாக உள்ளீர்கள். கடவுள் ஒரேயொருவரே, ஏனைய அனைவரும் சகோதரர்கள். தந்தை கூறுகின்றார்: நான் எனது குழந்தைகளுக்கு மாத்திரமே கற்பிக்கின்றேன். என்னை இனங்காண்பவர்களுக்கு மாத்திரமே நான் கற்பித்து, அவர்களைத் தேவர்கள் ஆக்குகின்றேன். பாரதம் சுவர்க்கமாக இருந்தது, அது இப்பொழுது நரகமாகிவிட்டது. காமத்தை வெற்றிகொள்பவர்கள் மாத்திரமே உலகை வெற்றிகொள்பவர்கள் ஆகுவார்கள். நானே பொன்னுலகை ஸ்தாபிக்கின்றேன். பாரதம் சத்தியயுகத்தில் இருந்தது, பின்னர் அது பல தடவைகள் கலியுகத்தினுள் சென்றது. எவருக்குமே இது தெரியாது. எவருக்குமே படைப்பவரையோ, அல்லது படைப்பின் ஆரம்பம், மத்தி, இறுதியோ தெரியாது. நான் ஞானம் நிறைந்தவர். இதுவே உங்கள்; இலட்சியமும் இலக்கும் ஆகும். நான் இவருடைய சாதாரண சரீரத்தினுள் பிரவேசித்து, உங்களுக்கு ஞானத்தைக் கொடுக்கின்றேன். நீங்கள் இப்பொழுது தூய்மையாக வேண்டும். அந்த விகாரங்களை வெற்றிகொள்வதனால், நீங்கள் உலகை வென்றவர்கள் ஆகுவீர்கள். குழந்தைகளாகிய நீங்கள் அனைவரும் முயற்சி செய்கின்றீர்கள். நீங்கள் உங்கள் சரீரங்கள், மனங்கள், செல்வத்தின் மூலம் பௌதீகச் சேவையை அன்றி, ஆன்மீக சேவையையே செய்கின்றீர்கள். இது ஆன்மீக ஞானம் என்றழைக்கப்படுகின்றது. இது பக்தியல்ல. துவாபர, கலியுகங்களே பக்திக்கான யுகங்களாகும். அவை பிரம்மாவின் இரவென்றும் அழைக்கப்படுகின்றன, சத்திய, திரேதா யுகங்கள் பிரம்மாவின் பகலென்று அழைக்கப்படுகின்றன. கீதையைக் கற்பிப்பவர் எவராவது வந்தால், கீதையில் ஒரு தவறு இருக்கின்றது என நீங்கள் அவருக்கு விளங்கப்படுத்த வேண்டும். கீதையை உபதேசித்தவர்; யார்? இராஜயோகத்தைக் கற்பித்தவர் யார்? காமத்தை வெல்வதனால் நீங்கள் உலகை வென்றவர்கள் ஆகுகின்றீர்கள் எனக்; கூறியது யார்? இந்த இலக்ஷ்மியும் நாராயணனும் உலகை வென்றவர்கள் ஆகினார்கள், இல்லையா? அவர்களின் 84 பிறவிகளின் இரகசியங்களை அவர் அமர்ந்திருந்து அவர்களுக்கு விளங்கப்படுத்தினார். எவராக இருந்தாலும் பரவாயில்லை, அவர்கள் ஞானத்தைப் பெறுவதற்காக இங்கு வரவேண்டும். நான் குழந்தைகளாகிய உங்களுக்குக் கற்பிக்கின்றேன், ஆனால் உங்கள் மத்தியிலும் சிலர் அதிகளவில் புரிந்துகொள்வதில்லை, இதனாலேயே பல மில்;லியன் கணக்கானோரில் ஒரு கைப்பிடியளவினர் என நினைவுகூரப்படுகிறது. சிலருக்கு நான் யார், நான் எவ்வாறானவர் என்பது பற்றி ஐந்து சத வீதமே தெரியும். நீங்கள் தந்தையை அறிந்துகொள்வதுடன் அவரை மிகச்சரியாக நினைவுசெய்யவும் வேண்டும். நீங்கள் ஏன் என்னைச் சதா நினைவுசெய்வதில்லை? நீங்கள் கூறுகின்றீர்கள்: பாபா, நான் உங்களை நினைவுசெய்ய மறந்துவிட்டேன். ஓ! உங்களுக்கு பாபாவை நினைவுசெய்ய முடியவில்லையா? உண்மையில் இதற்கு முயற்சி தேவையெனத் தந்தை விளங்கப்படுத்துகின்றார். எவ்வாறாயினும் அவர் உங்களைத் தொடர்ந்தும் முயற்சி செய்வதற்கு ஊக்குவிக்கின்றார். ஓ! உங்களைப் பாற்கடலுக்கு அழைத்துச் சென்று, உங்களை உலகின் அதிபதிகளாக்கும் தந்தையை நீங்கள் மறந்துவிடுகிறீர்கள். மாயை உங்களை நிச்சயமாக மறந்து விடுமாறு செய்வாள். அதற்குக் காலம் எடுக்கிறது. மாயை உங்களை மறந்து விடுமாறு செய்வாள் என்பதால் நீங்கள் (முயற்சி செய்யாமல்) சாவகாசமாக இருந்துவிடலாம் என்றில்லை. இல்லை, நீங்கள் நிச்சயமாக முயற்சி செய்ய வேண்டும். நீங்கள் காமத்தை வெல்ல வேண்டும். சதா என்னை மாத்திரம் நினைவுசெய்தால், உங்கள் பாவங்கள் அழிக்கப்படும். நான் 'குழந்தாய்" என குழந்தைகளாகிய உங்களுக்குக் கூறுவதைப் போன்றே ஓர் உயர் நீதிபதி வந்தாலும் நான் அவரையும் 'குழந்தாய்" என்றே கூறுவேன், ஏனெனில் நானே அதிமேலான கடவுள். நீங்கள் இளவரசர்கள்;, இளவரசிகளின் அந்தஸ்தைப் பெறுவதற்கு நான் மாத்திரமே அனைத்திலும் அதி உயர்ந்த கல்வியை உங்களுக்குக் கற்பிக்கின்றேன். தந்தை கூறுகின்றார்: நான் இவருக்குக் கற்பிக்கின்றேன். இவர் பின்னர் ஸ்ரீ கிருஷ்ணர் ஆகுகின்றார். பிரம்மாவும் சரஸ்வதியும் பின்னர் இலக்ஷ்மி நாராயணன் ஆகுகின்றனர். இந்த இல்லறப் பாதை தொடர்கிறது. துறவறப் பாதையில் இருப்பவர்களால் இராஜயோகம் கற்பிக்கமுடியாது. அரசர், அரசி ஆகிய இருவருமே தேவைப்படுகின்றனர். அம்மக்கள் வெளிநாட்டிற்குச் சென்று, தாங்கள் இராஜயோகம் கற்பிப்பதாகக் கூறுகின்றனர். எவ்வாறாயினும், சந்தோஷம் காக்கையின் எச்சத்தைப் போன்றது என அவர்கள் கூறுகின்றனர். எனவே, அவர்களால் எவ்வாறு இராஜயோகத்தைக் கற்பிக்க முடியும்? ஆகவே, குழந்தைகளாகிய நீங்கள் அந்த உற்சாகத்தைக் கொண்டிருக்க வேண்டும். எவ்வாறாயினும், குழந்தைகள் இன்னும் இளையவர்களாக இருக்கின்றனர், அவர்கள் இன்னும் முதிர்ச்சி அடையவில்லை. முதிர்ச்சி அடைவதற்கு அவர்களுக்குத் தைரியம் தேவைப்படுகின்றது. தந்தை உங்களுக்குக் கூறுகின்றார்: இது இராவணனுடைய சமுதாயமாகும். நீங்கள் கூவியழைக்கின்றீர்கள்: ஓ தூய்மையாக்குபவரே, வாருங்கள்! ஆகவே, இது ஒரு தூய்மையற்ற உலகமா அல்லது தூய உலகமா? நீங்கள் நரகவாசிகள் என்பதைப் புரிந்துகொள்கிறீர்கள். இது தேவ சமுதாயமா? இது இராம இராச்சியமா? நீங்கள் இராவண இராச்சியத்துக்கு உரியவர்களா? இந்நேரத்தில், இராவண இராச்சியத்தில் உள்ள அனைவரும் ஓர் அசுர புத்தியைக் கொண்டிருக்கின்றனர். இப்பொழுது, அசுர புத்தியைத் தெய்வீகமாக்குவது யார்? மக்களைச் சிந்திக்க வைக்கக்கூடிய அத்தகைய நான்கு முதல் ஐந்து வினாக்களை வினவுங்கள். தந்தையின் அறிமுகத்தைக் கொடுப்பது குழந்தைகளாகிய உங்களின் கடமையாகும். விருட்சம் படிப்படியாக வளர்கின்றது. பின்னர், பெருமளவு விரிவாக்கம் இருக்கும். மாயையும் உங்களைச் சுழலில் இட்டு, முற்றாகக் கீழே வீழ்த்துகின்றாள். பலர் குத்துச்சண்டையில் மரணிக்கின்றனர், இங்கும் பலர் மரணிக்கின்றனர். அவர்கள் விகாரத்தினுள் விழுந்து மரணிக்;கின்றனர். பின்னர் அவர்கள் ஆரம்பத்திலிருந்து முயற்சியைச் செய்ய வேண்டும். விகாரம் அவர்களை முற்றாகக் கொன்று விடுகின்றது. அவர்கள் தூய்மையற்றவர்களிலிருந்து தூய்மையாகுவதனால், அகற்றிவிட்ட துரு அனைத்தினாலும் சேகரித்த அந்த வருமானம் அனைத்தும் இழக்கப்படுகிறது. பின்னர் அவர்கள் புதிதாக முயற்சி செய்ய வேண்டும். ஒருவரை வர அனுமதிக்கக்கூடாது என நீங்கள் கூறமுடியாது. இல்லை, நினைவு யாத்திரையின் மூலமும், கற்பதனாலும் நீங்கள் சம்பாதித்த அனைத்தும் அழிந்து விடும் என நீங்கள் அந்நபருக்கு விளங்கப்படுத்த வேண்டும். அவர்கள் மிகவும் தாழ்ந்த நிலைக்கு வீழ்ந்து விடுகின்றனர். நீங்கள் மீண்டும் மீண்டும் வீழ்ந்தீர்களேயானால், வெளியேறுமாறு உங்களுக்குக் கூறப்படும். ஓரிரு தடவைகள் உங்களுக்குப் பரீட்சார்த்தமாகச் சந்தர்ப்பம் வழங்கப்படும். நீங்கள் இரண்டு தடவைகள் மன்னிக்கப்படுகின்றீர்கள், அதன்பின்னர் நீங்கள் பயனற்றவர் என்று கருதப்படுகின்றீர்கள். அவர்கள் அங்கு செல்வார்கள், ஆனால் கீழ்த் தரத்தில் இருப்பர். ஓப்பீட்டுரீதியில் இவ்வாறே கூறப்படும். முற்றிலும் தாழ்ந்த அந்தஸ்தைப் பெறுபவர்கள், கீழ்த்தரத்தினர் என அழைக்கப்படுகின்றனர். அங்கு பணிப்பெண்களும், வேலையாட்;களும், சுடலையாண்டிகளும் அத்துடன் பிரஜைகளின் பணிப்பெண்;களும் வேலையாட்களும் இருக்கிறார்கள். தந்தை உங்களுக்குக் கற்பிக்கின்றார் என்பதும், ஒவ்வொரு 5000 வருடங்களுக்கு ஒருமுறை கற்பிக்கின்றார் என்பதும் அவருக்குத் தெரியும். அம்மக்கள் நூறாயிரம் வருடங்களைப் பற்றிப் பேசுகின்றனர். நீங்கள் மேலும் முன்னேறிச் செல்லும்பொழுது, உண்மையிலேயே இது 5000 வருடங்களுக்கான விடயம் என அவர்கள் கூற ஆரம்பிப்பர். இது அதே மகா யுத்தம். எவ்வாறாயினும் அவர்களால் நினைவு யாத்திரையில் நிலைத்திருக்க முடியாது. நாளுக்கு நாள், காலம் மிகவும் தாமதமாகி வருகிறது. நினைவுகூரப்படுகிறது: பெருமளவு காலம் கடந்து விட்டது. சிறிது காலமே எஞ்சியிருக்கின்றது. இவ்விடயங்கள் அனைத்தும் இந்நேரத்தையே குறிக்கின்றன. தூய்மையாகுவதற்குச் சிறிதளவு காலமே எஞ்சியிருக்கின்றது. யுத்தம் முன்னால் உள்ளது. நான் நினைவு யாத்திரையில் நிலைத்திருக்கின்றேனா? என உங்கள் இதயத்தை வினவுங்கள். புதியவர்கள் வரும்பொழுது, குழந்தைகளாகிய நீங்கள் நிச்சயமாக அவர்களை ஒரு படிவத்தை நிரப்பச் செய்ய வேண்டும். அவர்கள் ஒரு படிவத்தை நிரப்பும்பொழுது மாத்திரமே உங்களால் அவர்களுக்கு விளங்கப்படுத்த முடியும். ஒருவர் புரிந்துகொள்ள விரும்பாவிட்டால், அவர் படிவத்தில் எதனை எழுதுவார்? இங்கு அத்தகைய பலர் வருகின்றனர். அவர்களிடம் கூறுங்கள்: ஓ தூய்மையாக்குபவரே வாருங்கள்! என நீங்கள் தந்தையைக் கூவியழைக்கின்றீர்கள். ஆகவே, இது நிச்சயமாக ஒரு தூய்மையற்ற உலகமாகும். இதனாலேயே நீங்கள் ஓ தூய்மையாக்குபவரே, வந்து எங்களைத் தூய்மையாக்குங்கள்!; எனக் கூவி அழைக்கின்றீர்கள். சிலர் அவ்வாறு ஆகுகின்றனர் ஏனையோர் அவ்வாறு ஆகுவதில்லை. பாபா பல கடிதங்களைப் பெறுகின்றார். நீங்கள் அனைவருமே, சிவபாபா, மேற்பார்த்து பிரம்மா என எழுதுகிறீர்கள். சிவபாபாவும் கூறுகின்றார்: நான் ஒரு சாதாரண சரீரத்தினுள் பிரவேசிக்கின்றேன். அவரது 84 பிறவிகளின் கதையை நான் அவருக்குக் கூறுகின்றேன். படைப்பின் ஆரம்பம், மத்தி, இறுதி வேறு எந்த மனிதர்களுக்கும் தெரியாது. தந்தை இப்பொழுது உங்களுக்குக் கூறியுள்ளார். குழந்தைகளாகிய உங்களுக்குத் தெய்வீகக் காட்சிகளைக் கொடுத்து, பாபா இப்படங்களை உருவாக்கியுள்ளார். பாபா ஆத்மாக்களாகிய உங்களுக்கு மாத்திரம் கற்பிக்கின்றார். ஆத்மாக்கள் விரைவாக சரீரமற்றவர்கள் ஆகுகின்றனர். நீங்கள் உங்களை அந்தச் சரீரங்களிலிருந்து வேறானவராகக் கருத வேண்டும். பாபா கூறுகின்றார்: குழந்தைகளே, நீங்கள் ஆத்ம உணர்வுடையவர் ஆகுவீர்களாக! நீங்கள் சரீரமற்றவர்கள் ஆகுவீர்களாக! நான் ஆத்மாக்களாகிய உங்களுக்குக் கற்பிக்கின்றேன். இது பரமாத்மாவுடனான ஆத்மாக்களின் சந்திப்பாகும். இது சங்கமயுகத்தின் சந்திப்பு என்றழைக்கப்படுகின்றது. கங்கைநீர் எவரையும் தூய்மையாக்குவதில்லை. சாதுக்கள், புனிதர்கள், ரிஷிகள் முனிவர்கள் போன்ற அனைவருமே கங்கையில் நீராடச் செல்கின்றனர். கங்கை எவ்வாறு தூய்மையாக்குபவராக முடியும்? கடவுள் பேசுகின்றார்: காமமே கொடிய எதிரி. அதனை வெற்றிகொள்வதனால் நீங்கள் உலக அதிபதிகள் ஆகுவீர்கள். கங்கையோ அல்லது கடலோ இதனைக் கூறுவதில்லை. ஞானக்கடலாகிய தந்தையே உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார். அந்தக் காமத்தை வெற்றிகொள்வதற்கு, சதா என்னை மாத்திரம் நினைவுசெய்யுங்கள், நீங்கள் தூய்மையாகுவீர்கள். தெய்வீகக் குணங்களைக் கிரகியுங்கள். எவருக்கும் துன்பத்தை விளைவிக்காதீர்கள். காமவாளைப் பயன்படுத்துவதே முதற்தரமான துன்பமாகும். அது அதன் ஆரம்பத்திலிருந்து, மத்தியினூடாக இறுதிவரை உங்களுக்குத் துன்பத்தை விளைவிக்கின்றது. அது சத்தியயுகத்தில் இருப்பதில்லை. அது ஒரு தூய உலகாகும். அங்கு தூய்மையற்றவர்கள் எவரும் இல்லை. நீங்கள் யோகசக்தியின் மூலம் இராச்சியத்தைப் பெற்றதைப் போன்றே, அங்கு குழந்தைகளும் யோகசக்தியின் மூலம் பிறக்கின்றார்கள். அங்கு இராவணனின் இராச்சியம் இருப்பதில்லை. நீங்கள் இராவணனின் கொடும்பாவியை எரிக்கின்றீர்கள். ஆனால் எப்பொழுது அவனை எரிக்க ஆரம்பித்தீர்கள் என்பது உங்களுக்குத் தெரியாது. இராம இராச்சியத்தில் இராவணன் இருப்பதில்லை. நீங்கள் புரிந்துகொள்ள வேண்டிய இவ்விடயங்களைத் தந்தை இங்கமர்ந்திருந்து உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார். அவர் மிக நன்றாக விளங்கப்படுத்துகின்றார், ஆனால் நீங்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கல்பத்திலும் கற்கும் அளவிற்கே இப்பொழுதும் கற்பீர்கள். நீங்கள் செய்யும் முயற்சியிலிருந்து அனைத்தையும் அறிய முடியும். பௌதீகச் சேவை என்ற ஒரு பாடமும் உள்ளது. உங்களால் மனதின் மூலம் சேவை செய்ய முடியாவிடின், அப்பொழுது வார்த்தைகளாலும் செயல்களாலும் சேவை செய்யுங்கள். வார்த்தைகளால் சேவை செய்வது மிகவும் இலகுவானது. எல்லாவற்றுக்கும் முதலில் மனதின் மூலமான சேவை, அதாவது, மன்மனாபவ உள்ளது. நினைவு யாத்திரையில் நிலைத்திருங்கள். உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதி, தந்தையை நினைவுசெய்யுங்கள். பாபாவிடமிருந்து கற்பித்தல்களைப் பெறுங்கள். தந்தையை நினைவுசெய்ய இயலாதவர்கள் பலர் இருக்கின்றனர். அவர்களால் ஞானத்தை நினைவுசெய்ய இயலாமல் இருக்கின்றது என நீங்கள் கூற மாட்டீர்கள். அவர்களால் சதா ஒரேயொருவரை நினைவுசெய்ய இயலாமல் இருக்கின்றது. நீங்கள் அவரை நினைவுசெய்யாவிடின் எவ்வாறு சக்தியைப் பெறுவீர்கள்? தந்தையே சர்வசக்திவான். அவரை நினைவுசெய்வதனால், நீங்கள் சக்தியைப் பெறுவீர்கள். இதுவே பலம் என்றழைக்கப்படுகின்றது. எவராவது ஒருவர் செயல்களின் மூலம் சிறந்த சேவையைச் செய்தால், அவரால் ஒரு நல்ல அந்தஸ்தைப் பெறமுடியும். நீங்கள் செயல்களின் மூலம் சேவை செய்யாவிட்டால், எந்த அந்தஸ்தைப் பெறுவீர்கள்? அங்கு பிரஜைகளும் இருக்கின்றனர். இவை புரிந்துகொள்ளப்பட வேண்டிய, மறைமுகமான விடயங்கள். அம்மக்கள் யோகத்தைப் பற்றிப் பேசுகின்றனர், ஆனால் யோகத்தின் மூலம் நீங்கள் உலக இராச்சியத்தைப் பெறுகின்றீர்கள் என அவர்கள் புரிந்துகொள்வதில்லை. யோகசக்தியின் மூலமே அங்கு குழந்தைகள் பிறக்கின்றனர் என்பது எவருக்குமே தெரியாது. இது உங்களுக்கு விளங்கப்படுத்தப்படுகின்றது, ஆனாலும் அரைக்கல்பத்தின் பின்னர் நீங்கள் மாயையின் அடிமைகள் ஆகுகின்றீர்கள். இப்பொழுதும் மாயை உங்களை விட்டு வைப்பதில்லை. நீங்கள் இப்பொழுது சிவபாபாவின் அடிமைகள் ஆகவேண்டும். நீங்கள் சரீரதாரிகளுக்கு அடிமைகள் ஆகக்கூடாது. நீங்கள் தூய்மையாகுவதற்காகவே இப்பொழுது நீங்கள் சகோதர, சகோதரிகள் என்றழைக்கப்படுகின்றீர்கள். பின்னர், நீங்கள் அதற்கும் அப்பாற் செல்ல வேண்டும்; நீங்கள் ஒருவரை ஒருவர் சகோதரர் எனக் கருத வேண்டும். சகோதரர், சகோதரி என்ற பார்வையுமே இருக்கக்கூடாது. நாடகத்திற்கேற்ப நடைபெறும் அனைத்தும் முற்றிலும் சரியானதாகும். நாடகம் மிகச்சரியானதாகும். தந்தை கவலையற்றவர். இவர் (பிரம்மா) நிச்சயமாக சில கவலைகளைக் கொண்டிருப்பார். நீங்கள் உங்கள் கர்மாதீத ஸ்திதியை அடையும்போது மாத்திரமே நீங்கள் கவலையற்றவர்களாக இருப்பீர்கள். அதுவரை, ஏதோவொன்று தொடர்ந்தும் நடைபெறும். மிக நல்ல யோகம் தேவைப்படுகின்றது. பாபா இப்பொழுது யோகத்தைப் பற்றி வலியுறுத்துகின்றார். நீங்கள் மீண்டும் மீண்டும் மறந்துவிடுகின்றீர்கள் என இதையிட்டே கூறுகின்றீர்கள். தந்தை முறையிடுகின்றார்: உங்களுக்குப் பல்வேறு பொக்கிஷங்களைக் கொடுக்கும் தந்தையை நீங்கள் மறந்துவிடுகின்றீர்கள்! எவரிடம் ஞானம் இருக்கின்றது, எவரிடம் இல்லை என்பது தந்தைக்குத் தெரியும். ஞானம் நிறைந்த ஆத்மாக்களால் ஒருபொழுதும் மறைந்திருக்க முடியாது. அவர்கள் விரைவில் சேவைக்கான அத்தாட்சியைக் கொடுப்பார்கள். ஆகவே, இவ்விடயங்கள் அனைத்தும் புரிந்துகொள்ளப்பட வேண்டும். அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டெடுக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1.மாயையுடன் குத்துச்சண்டை இடும்போது தோற்றுப் போகாதீர்கள். முயற்சி செய்வதில் பின்தங்கி அமர்ந்து விடாதீர்கள். தைரியத்தைக் கொண்டிருந்து சேவை செய்யுங்கள்.

2.இந்த நாடகம் மிகச்சரியாக உருவாக்கப்பட்டுள்ளது, ஆகவே எதனைப் பற்றியும் கவலைப்படாதீர்கள். உங்கள் கர்மாதீத ஸ்திதியை அடைவதற்கு, தந்தையின் நினைவில் நிலைத்திருங்கள். எந்தச் சரீரதாரிக்கும் அடிமையாகாதீர்கள்.

ஆசீர்வாதம்:
நீங்கள் எல்லையற்ற விருப்பமின்மையைக் கொண்டிருப்பதால், பற்று அனைத்திலிருந்தும் விடுபட்டுள்ள, ஓர் உண்மையான இராஜரிஷியாக இருப்பீர்களாக.

ஓர் இராஜரிஷி என்றால் ஓர் இராச்சியத்தைக் கொண்டிருப்பவர், மறுபுறம் இராஜரிஷி என்றால் எல்லையற்ற விருப்பமின்மையைக் கொண்டிருப்பவர் என்று அர்த்தமாகும். எவரிடமேனும் அல்லது இன்னுமொருவரிடம் அல்லது ஏதாவது பொருளில் பற்று இருப்பின், உங்களால் ஓர் இராஜரிஷியாக முடியாது. பற்றின் எண்ணங்களைச் சிறிதளவேனும் கொண்டிருப்பவர்கள் தங்கள் பாதஙகளை இரு படகுகளில் வைத்திருக்கின்றனர், அவர்கள் இங்கோ அல்லது அங்கோ இருப்பதில்லை. எனவே ஓர் இராஜரிஷியாகி, எல்லையற்ற விருப்பமின்மையைக் கொண்டிருங்கள், அதாவது, வேறு எவருக்குமன்றி, ஒரேயொரு தந்தைக்கு உரியவர் ஆகுங்கள். இப்பாடத்தை உறுதியாக்குங்கள்.

சுலோகம்:
கோபமானது சுயத்தையும் பிறரையும் எரிக்கின்ற ஒரு தீயின் ரூபம் ஆகும்.