09.02.21        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்:
இனிய குழந்தைகளே, நீங்கள் இப்பொழுது எந்த விதமான துன்பமோ அல்லது பாவமோ இல்லாத அமரத்துவ உலகை ஸ்தாபிப்பதற்கான கருவிகள் ஆவீர்கள். அதுவே விகாரமற்ற உலகமாகும்.

கேள்வி:
இறை குடும்பத்தின் அற்புதமான திட்டம் என்ன?

பதில்:
இறை குடும்பத்தின் திட்டமானது, குடும்பத் திட்டத்தைக் கொண்டிருப்பதுடன், சத்தியம் எனும் ஒரு தர்மத்தை ஸ்தாபித்து, எண்ணற்ற மதங்கள் அனைத்தையும் அழிப்பதாகும். மக்கள் பிறப்பைக் கட்டுப்படுத்துவதற்குப் பல திட்டங்களை மேற்கொள்கின்றார்கள். தந்தை கூறுகின்றார்: அவர்களுடைய திட்டம் நிறைவேறாது. நான் மாத்திரமே புதிய உலகை ஸ்தாபிக்க வருகின்றேன்; பின்னர் ஏனைய ஆத்மாக்கள் அனைவரும் மேலே வீட்டுக்கு திரும்பிச் செல்வார்கள். வெகு சில ஆத்மாக்களே மீதமாயிருப்பார்கள்.

ஓம் சாந்தி.
இது ஒரு வீடும், பல்கலைக்கழகமும், அத்துடன் ஒரு ஸ்தாபனமுமாகும். ஆத்மாக்களான, குழந்தைகளாகிய நீங்கள், அவர் சிவபாபா என்றும், சரீரத்துக்குச் சொந்தமான ஆத்மா சாலிகிராம் என்றும் புரிந்துகொள்கின்றீர்கள். ஒரு சரீரம் எனது ஆத்மா எனக் கூறுவதில்லை. ஆத்மாவே எனது சரீரம் என்று கூறுகின்றார். ஆத்மாக்கள் அழிவற்றவர்கள், சரீரங்கள் அழியக்கூடியவை. நீங்கள் இப்பொழுது உங்களை ஆத்மாக்களாகக் கருதுகின்றீர்கள். எங்களுடைய பாபா சிவன், அவரே பரமதந்தை. அவரே உங்களுடைய பரம பாபா என ஆத்மாக்களாகிய நீங்கள் அறிவீர்கள். அத்துடன் அவர் பரம ஆசிரியரும், பரம குருவுமாவார். பக்தி மார்க்கத்திலே, மக்கள் ஓ, தந்தையாகிய கடவுளே! எனக் கூவியழைக்கின்றார்கள். மரணிக்கும் தறுவாயிலும் அவர்கள் ஓ கடவுளே! ஹே ஈஸ்வரா! எனக் கூறுகின்றார்கள். அவர்கள் கூவியழைக்கின்றார்கள், ஆனால் ஆத்மாக்கள் அனைவரினதும் தந்தை ஒரேயொருவரே என்பது எவரது புத்தியிலும் மிகச்சரியாக இருப்பதில்லை. ஓ தூய்மையாக்குபவரே! எனக் கூறப்படுகின்றது. எனவே அவர் குருவுமாவார். அவர்கள் கூறுகின்றார்கள்: எங்களைத் துன்பத்திலிருந்து விடுவித்து, அமைதிதாமத்துக்கு அழைத்துச் செல்லுங்கள். எனவே அவர் தந்தையும், தூய்மையாக்குகின்ற சற்குருவுமாவார். பின்னர் எவ்வாறு உலகச் சக்கரம் சுழல்கின்றது எனவும், எவ்வாறு மனிதர்கள் 84 பிறவிகள் எடுக்கின்றார்கள் எனவும், உலகின் எல்லையற்ற வரலாறையும், புவியியலையும் விளங்கப்படுத்துவதாலும், அவர் பரம ஆசிரியருமாகுகின்றார். அறியாமைப் பாதையில் தந்தையர்கள், ஆசிரியர்கள், குருமார்கள் அனைவரும் வேறுபட்டவர்கள். இங்கே, எல்லையற்ற தந்தையும், ஆசிரியரும், குருவும் அனைவரும் ஒருவரே. அதிகளவு வேறுபாடு உள்ளது! எல்லையற்ற தந்தை, குழந்தைகளாகிய உங்களுக்கு எல்லையற்ற ஆஸ்தியைக் கொடுக்கின்றார். அந்தத் தந்தையர்கள் எல்லைக்குட்பட்ட ஆஸ்திகளைக் கொடுக்கின்றனர். அந்தக் கல்விகளும் எல்லைக்குட்பட்டவை. உலக வரலாறையும், புவியியலையும் எவருமே அறியார். இலக்ஷ்மி, நாராயணன் எவ்வாறு அவர்களுடைய இராச்சியத்தைப் பெற்றார்கள் அல்லது அவர்களுடைய இராச்சியம் எவ்வளவு காலம் நீடித்தது அல்லது இராமர், சீதை எவ்வளவு காலம் திரேதாயுகத்தை ஆட்சிசெய்தார்;கள் என எவருமே அறியமாட்டார்கள். அவர்கள் எதையுமே அறியார்கள். எல்லையற்ற தந்தை உங்களுக்குக் கற்பிக்க வந்துள்ளார் என்பதைக் குழந்தைகளான நீங்கள் இப்பொழுது புரிந்துகொள்கிறீர்கள். பாபாவும் உங்களுக்கு சற்கதிக்கான பாதையைக் காட்டுகின்றார். நீங்கள் 84 பிறவிகள் எடுத்ததனால் தூய்மையற்றவர்கள் ஆகினீர்கள். நீங்கள் இப்பொழுது தூய்மையாக வேண்டும். இது தமோபிரதான் உலகம். அனைத்தும் சதோ, ரNஐh, தமோ ஸ்திதிகளுக்கூடாகச் செல்கின்றன. இந்த உலகின் யுகமும் பழையதிலிருந்து புதியதாகவும், பின்னர் புதியதிலிருந்து, பழையதாகவும் ஆகுகின்றது. சத்தியயுகத்தில் பாரதம் மாத்திரமே இருந்தது என்றும், தேவர்கள் அங்கே ஆட்சிசெய்தார்கள் என்றும் அனைவருமே அறிவார்கள். அது தேவ, தேவியரின் இராச்சியமாக இருந்தது. அச்சா, பின்னர் என்ன நடந்தது? அவர்கள் மறுபிறவி எடுத்தார்கள். சதோபிரதானிலிருந்து, அவர்கள் சதோ, ரNஐh, பின்னர் தமோ நிலையை அடைந்தார்கள்; அவர்கள் இன்ன-இன்ன எண்ணிக்கையான பிறவிகளை எடுத்தார்கள். 5000 ஆண்டுகளுக்கு முன்னர் பாரதத்தில் இலக்ஷ்மி, நாராயணனின் இராச்சியம் இருந்தபொழுது, மனிதர்களின் சராசரி ஆயுட்காலம் 125 இலிருந்து 150 வருடங்களாக இருந்தது. அது அமரத்துவ உலகம் என அழைக்கப்படுகின்றது; அங்கே அகால மரணங்கள் ஒருபொழுதும் இருப்பதில்லை. இது மரணபூமியாகும். அமரத்துவ பூமியில், மக்கள் அமரத்துவமானவர்களாக உள்ளார்கள்;; அவர்கள் நீண்ட ஆயுட்காலத்தைக் கொண்டுள்ளார்கள். சத்தியயுகத்தில், அது தூய இல்லற ஆச்சிரமமாகும். அது விகாரமற்ற உலகம் என அழைக்கப்படுகின்றது. இப்பொழுது இது விகாரமான உலகமாகும். நீங்கள் சிவபாபாவின் குழந்தைகள் என்பதை, இப்பொழுது குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். நீங்கள் சிவபாபாவிடமிருந்து ஓர் ஆஸ்தியைப் பெறுகின்றீர்கள். இவர் தாதாவும் (மூத்த சகோதரர்), அவர் பாட்டனாருமாவார். நீங்கள் பாட்டனாரிடமிருந்து ஆஸ்தியைப் பெறுகின்றீர்கள். அனைவருக்கும் பாட்டனாரின் சொத்தில் ஓர் உரிமை உள்ளது. பிரம்மா மக்களின் தந்தை (பிரஐhபிதா) என அழைக்கப்படுகின்றார். ஆதாமும், ஏவாளும்: ஆதாமும் அவரது மனைவியும். அவர் அசரீரியான தந்தையான கடவுள். இவர் (பிரஐhபிதா) பௌதீகமான தந்தையாவார். இவருக்குத் தனது சொந்தச் சரீரம் உள்ளது, ஆனால் சிவபாபாவுக்கெனச் சொந்தமாக ஒரு சரீரமில்லை. நீங்கள் உங்கள் ஆஸ்தியை பிரம்ம பாபாவினூடாக, சிவபாபாவிடமிருந்து பெறுகின்றீர்கள். நீங்கள் தந்தையினுடாக, பாட்டனாரின் சொத்தைப் பெறுகின்றீர்கள். நீங்கள் மீண்டும் ஒருமுறை பிரம்ம பாபாவினுடாக, சிவபாபாவினால், மனிதர்களிலிருந்து, தேவர்கள் ஆக்கப்படுகின்றீர்கள். அவர்கள் கிராந்தில் (சீக்கியர்களின் சமயநூல்) மனிதர்களைத், தேவர்கள் ஆக்குவதற்குக் கடவுளுக்கு அதிக நேரம் எடுக்கவில்லை என்று அவரது புகழைப் பாடுகின்றார்கள். உங்களை அவ்வாறு ஆக்கியது யார்? கடவுள்! கிராந்தில் பெருமளவு புகழ் உள்ளது. பாபா கூறுகின்றார்: அல்பாவை நினைவுசெய்யுங்கள், பின்னர் பீற்றாவான, இராச்சியம் உங்களுடையதாகும். குருநானக்கும் கூறியுள்ளார்: பிரபுவின் பெயரை உச்சரியுங்கள், நீங்கள் சந்தோஷத்தைப் பெறுவீர்கள். அவர்கள் அந்த அசரீரியான, அமரத்துவ ரூபமான தந்தையின் புகழ் பாடுகின்றார்கள். தந்தை கூறுகின்றார்: என்னை நினைவுசெய்யுங்கள், நீங்கள் சந்தோஷத்தைப் பெறுவீர்கள். இப்பொழுது அனைவரும் தந்தையை நினைவுசெய்கின்றார்கள். யுத்தம் முடிவடைந்த பின்னர், இலக்ஷ்மி, நாராயணனின் இராச்சியத்தில் ஒரு தர்மம் மாத்திரமே இருக்கும். இந்த விடயங்கள் புரிந்துகொள்ளப்பட வேண்டும். கடவுள் பேசுகின்றார்: கடவுள் மாத்திரமே தூய்மையாக்குபவர் எனவும், ஞானக்கடல் எனவும் அழைக்கப்படுகின்றார். அவர் மாத்திரமே துன்பத்தை நீக்கிச் சந்தோஷத்தை அருள்பவர். நாங்கள் தந்தையின் குழந்தைகள் ஆதலால், நிச்சயமாகச் சந்தோஷத்தைக் கொண்டிருக்க வேண்டும். உண்மையில் பாரத மக்களே சத்தியயுகத்தில் இருந்தார்கள். மீதி ஆத்மாக்கள் அனைவரும் அமைதிதாமத்தில் இருந்தார்கள். இப்பொழுது ஆத்மாக்கள் அனைவரும் இங்கே கீழே வருகின்றார்கள். பின்னர் நாங்கள் சென்று தேவர்களாகிச் சுவர்க்கத்தில் எமது பாகங்களை நடிப்போம். இப்பழைய உலகம் துன்பபூமியும், புதிய உலகம் சந்தோஷ பூமியுமாகும். ஒரு வீடு பழையதாகும்பொழுது எலிகளும், பாம்புகளும் வெளிப்படுகின்றன. இந்த உலகமும் அவ்வாறானதே. இந்தச் சக்கரத்தின் கால எல்லை 5000 ஆண்டுகள் ஆகும். இப்பொழுது இது இறுதியாகும். காந்திஐpயும் புதிய உலகமும், புது டெல்லியும், கடவுளின் (இராமரின்) இராச்சியமும் இருக்க வேண்டும் என்றே விரும்பினார். எவ்வாறாயினும் இது கடவுளின் பணி மாத்திரமே ஆகும். தேவர்களின் இராச்சியம் மாத்திரமே இராம இராச்சியம் என அழைக்கப்படுகின்றது. புதிய உலகில் நிச்சயமாக இலக்ஷ்மி, நாராயணனின் இராச்சியம் இருக்கும். முதலில் இராதையும், கிருஷ்ணரும் வெவ்வேறு இராச்சியத்துக்குச் சொந்தமானவர்கள், பின்னர் அவர்களின் திருமணத்தில் அவர்கள் இலக்ஷ்மி, நாராயணன் ஆகுகின்றார்கள். அவர்கள் இந்தப் பிறவியில் நிச்சயமாக அவ்வாறான செயல்களைச் செய்திருக்க வேண்டும். தந்தை இங்கேயிருந்து செயல், நடுநிலைச் செயல், பாவச் செயலின் தத்துவத்தை உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார். இராவண இராச்சியத்தில் மக்கள் செய்கின்ற செயல்கள் அனைத்தும் பாவச்செயல்கள். சத்தியயுகத்தில் செயல்கள் நடுநிலையானவை. இதுவும் கீதையில் குறிப்பிடப்பட்டுள்ளது, ஆனால் அவர்கள் பெயரை மாற்றி விட்டார்கள். அதுவே தவறாகும். கிருஷ்ணரின் பிறப்பு சத்தியயுகத்திலேயே இடம்பெறுகின்றது. சிவனே அசரீரியான பரமதந்தை. கிருஷ்ணர் சரீரதாரியாவார். முதலில் சிவனுடைய பிறந்ததினம் இருக்கின்றது. பின்னர் அவர்கள் கிருஷ்ணரின் பிறந்ததினத்தைப் பாரதத்தில் கொண்டாடுகின்றார்கள். அவர்கள் சிவராத்திரி (சிவனின் இரவு) பற்றிப் பேசுகின்றார்கள். தந்தை வந்து பாரதத்திற்குச் சுவர்க்க இராச்சியத்தைக்; கொடுக்கின்றார். சிவனின் பிறந்ததினத்தின் பின்னர் கிருஷ்ணரின் பிறந்ததினம் உள்ளது. இவை இரண்டிற்கும் மத்தியில் இராக்கி இருக்கின்றது, ஏனெனில் தூய்மையும் தேவைப்படுகின்றது. பழைய உலகின் விநாசமும் இருக்க வேண்டும். எனவே யுத்தம் இடம்பெற்று அனைத்தும் அழிக்கப்படுகின்றது. பின்னர் நீங்கள் வந்து புதிய உலகில் ஆட்சிசெய்;கிறீர்கள். நீங்கள் மரணபூமியான, இந்தப் பழைய உலகிற்காகக் கற்கவில்லை. உங்கள் கல்வி அமரத்துவபூமியான, புதிய உலகிற்கானது. இவ்வாறான வேறு எந்த ஒரு கல்லூரியும் இல்லை. தந்தை கூறுகின்றார்: இப்பொழுது இது மரணபூமியின் இறுதி ஆகும், எனவே நீங்கள் விரைவாகக் கற்று திறமைசாலிகள் ஆகவேண்டும். அவர் தந்தையும், தூய்மையாக்குபவரும், அத்துடன் அவர் உங்களுக்குக் கற்பிக்கின்றார். இது இறை தந்தையின் பல்கலைக்கழகம். கடவுள் பேசுகின்றார்: கிருஷ்ணர் சத்தியயுகத்தின் இளவரசர். அவரும் சிவபாபாவிடமிருந்தே ஆஸ்தியைப் பெறுகின்றார். இந்நேரத்தில், நீங்கள் அனைவரும் உங்கள் எதிர்கால ஆஸ்தியைக் கோருகின்றீர்கள். நீங்கள் எவ்வளவுக்குக் கற்கின்றீர்களோ, அதற்கேற்ப உங்கள் ஆஸ்தியைப் பெறுவீர்கள். நீங்கள் கற்காதுவிடின், உங்கள் அந்தஸ்தும் குறைவானதாகும். நீங்கள் எங்கு வாழ்ந்தாலும், தொடர்ந்தும் கற்க வேண்டும். முரளிகள் வெளிநாடுகளுக்கும் அனுப்பப்படுகின்றன. பாபா ஒவ்வொரு நாளும் தொடர்ந்தும் உங்களை எச்சரிக்கின்றார். குழந்தைகளே, தந்தையை நினைவுசெய்யுங்கள், ஏனெனில் அதனைச் செய்வதனால், உங்கள் பாவங்கள் அழிக்கப்படும். ஆத்மாக்களில் உள்ள கறை அகற்றப்படும். ஆத்மாக்கள் 100மூ தூய்மையாக வேண்டும். இப்பொழுது அவர்கள் தூய்மையற்றவர்கள். மக்கள் பெருமளவு பக்தி செய்கின்றனர். நூறாயிரக்கணக்கான மக்கள் யாத்திரைகளுக்கும், ஒன்றுகூடல்களுக்கும் செல்கின்றார்கள். அது பிறவிபிறவியாகத் தொடர்கின்றது. அவர்கள் பல ஆலயங்கள் போன்றவற்றைக் கட்டி, அதிகளவு முயற்சி செய்கின்றார்கள். இருப்பினும், அவர்கள் தொடர்ந்தும் ஏணியில் கீழிறங்கி வந்துள்ளார்கள். உங்களுடைய மேலேறுகின்ற ஸ்திதியின் மூலம், நீங்கள் சந்தோஷபூமிக்குச் செல்வீர்கள் எனவும், பின்னர் நீங்கள் கீழே வரவேண்டும் எனவும் இப்பொழுது புரிந்துகொள்கின்றீர்கள். கலைகள் பின்னர் தொடர்ந்தும் குறைவடையும். ஒரு புதிய வீட்டின் பிரகாசம் 10 வருடங்களின் பின்;னர் நிச்சயமாகக் குறைவடைகின்றது. நீங்கள் சத்தியயுகம் எனும் புதிய உலகில் இருந்தீர்கள். 1250 வருடங்களின் பின்னர், இராம இராச்சியம் ஆரம்பமாகியது. உலகம் இப்பொழுது முற்றிலும் தமோபிரதானாகியுள்ளது. பல்வேறு மனிதர்கள் இருக்கின்றார்கள்! உலகம் பழையதாகி விட்டது. அந்த மக்கள் தொடர்ந்தும் குடும்பக் கட்டுப்பாட்டுக்காகப் பல திட்டங்களை மேற்கொள்கின்றார்கள். அவர்கள் தொடர்ந்தும் அதிகளவு குழப்பம் அடைகின்றார்கள். இது தந்தையாகிய கடவுளின் பணி மாத்திரமே என்று நாங்கள் எழுதுகின்றோம். ஒன்பது இலட்சத்திலிருந்து ஒரு மில்லியன் வரையான மக்கள் சென்று சத்தியயுகத்தில் வசிப்பார்கள். மீதி அனைவரும் சென்று அவர்களது இனிய வீட்டில் இருப்பார்கள். இது இறை குடும்பத் திட்டமாகும்: ஒரு தர்மத்தின் ஸ்தாபனையும், ஏனைய அனைத்து மதங்களினதும் விநாசமும். தந்தை தனது வேலையைச் செய்கின்றார். அம்மக்கள் கூறுகின்றார்கள்: நீங்கள் காமத்தில் ஈடுபட அனுமதிக்கப்படுகின்றீர்கள், ஆனால், மேலும் குழந்தைகளைக் கொண்டிராதீர்கள்! அந்த முறையில் எதையுமே நிறைவேற்ற முடியாது. இந்தத் திட்டம் எல்லையற்ற தந்தையின் கைகளில் மாத்திரமே உள்ளது. தந்தை கூறுகின்றார்: நான் மாத்திரமே துன்பபூமியைச் சந்தோஷபூமி ஆக்குவதற்கு வருகின்றேன். நான் ஒவ்வொரு 5000 வருடங்களிலும் கலியுகத்தின் இறுதிக்;கும், சத்தியயுகத்தின் ஆரம்பத்திற்கும் மத்தியில் வருகின்றேன். இது இப்பொழுது தூய்மையற்ற உலகமானது தூய உலகம் ஆகுகின்ற சங்கமயுகமாகும். பழைய உலகை அழித்து, புதிய உலகை ஸ்தாபிப்பது தந்தையினுடைய பணி மாத்திரமேயாகும். சத்தியயுகத்தில் ஒரு தர்மம் மாத்திரமே இருந்தது. இலக்ஷ்மியும், நாராயணனும் சக்கரவர்த்தினியும் சக்கரவர்த்தியுமாக, உலக அதிபதிகளாக இருந்தார்கள். யாருடைய ஞாபகார்த்தமாக மணிமாலை உருவாக்கப்பட்டது என்பதை நீங்களும் அறிவீர்கள். உச்சியில் மலராகிய (குஞ்சம்) சிவபாபாவும், பின்னர் இரட்டை மணிகளான பிரம்மாவும், சரஸ்வதியும் இருக்கின்றனர். இது அவர்களின் மாலை; இது உலகை நரகத்திலிருந்து சுவர்க்கமாகவும், தூய்மையற்றதிலிருந்து தூய்மையாகவும் ஆக்குபவர்களுக்கானது. சேவை செய்த பின்னர் மரணித்தவர்கள் நினைவுகூரப்படுகின்றார்கள். தந்தை விளங்கப்படுத்துகின்றார்: அவர்கள் சத்தியயுகத்தில் தூய்மையாக இருந்தார்கள்; அது தூய இல்லறப் பாதையாக இருந்தது. அவர்கள் இப்பொழுது தூய்மையற்றவர்கள். பாடப்பட்டுள்ளது: ஓ தூய்மையாக்குபவரே, வாருங்கள்! வந்து எங்களைத் தூய்மையாக்குங்கள்! நீங்கள் சத்தியயுகத்தில் இவ்வாறு கூவியழைக்க மாட்டீர்கள். சந்தோஷமாக இருக்கும்பொழுது எவருமே தந்தையை நினைவுசெய்வதில்லை. துன்ப நேரத்திலேயே அனைவரும் அவரை நினைவுசெய்கின்றார்கள். தந்தையே விடுதலையாக்குபவரும், கருணைநிறைந்தவரும், பேரானந்தமானவருமாவார். அவர் வந்து அனைவருக்கும் முக்தியையும், ஐPவன்முக்தியையும் அளிக்கின்றார். மக்கள் அவரைக் கூவி அழைக்கின்றார்கள்: வந்து எங்களின் இனிய வீட்டிற்கு எங்களை அழைத்துச் செல்லுங்கள். இப்பொழுது சந்தோஷம் எதுவுமில்லை. இப்பொழுது மக்களினாலான அரசாங்கமேயுள்ளது. சத்தியயுகத்தில் அரசரும், அரசியும், பிரiஐகளும் இருக்கின்றார்கள். நீங்கள் எவ்வாறு உலகின் அதிபதிகள் ஆகுகின்றீர்கள் என்று தந்தை உங்களுக்குக் கூறுகின்றார். அங்கே உங்களிடம் அதிகளவு செல்வம், முடிவற்ற செல்வம் இருக்கின்றது. அங்கே கட்டடங்கள் தங்கக் கட்டிகளினாலேயே கட்டப்படுகின்றன. தங்கக் கட்டிகள் இயந்திரங்களிலிருந்து வெளியாகும். பின்னர் அவர்கள் அந்தத் தங்கக் கட்டிகளில் வைரங்களையும், இரத்தினங்களையும் பதிப்பர். துவாபரயுகத்திலும் கூட அதிகளவு வைரங்கள் இருந்தன! அவை பின்னர் கொள்ளையிடப்பட்டன. இப்பொழுது தங்கம் எங்குமே காணப்படுவதில்லை. இதுவும் நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டுள்ளது. தந்தை கூறுகின்றார்: நான் 5000 வருடங்களுக்கு ஒருமுறை வருகின்றேன். பழைய உலகின் விநாசத்துக்கு அணுக்குண்டுகள் போன்றவை உருவாக்கப்படுகின்றன. அது விஞ்ஞானமாகும். தங்களுடைய சொந்தக் குலத்தையே அழிக்கக்கூடிய அவ்வாறான பொருட்களை கண்டுபிடிப்பதற்கு அவர்கள் தமது புத்தியைப் பயன்படுத்துகின்றார்கள். அவர்கள் அந்தப் பொருட்களைக் களஞ்சியப்படுத்தி வைப்பதற்காக உற்பத்தி செய்வதில்லை. ஒத்திகைகள் தொடர்ந்தும் இடம்பெறுகின்றன. இராச்சியம் ஸ்தாபிக்கப்படும் வரை யுத்தம் ஆரம்பிக்க மாட்டாது. ஆயத்தங்கள் மேற்கொள்ளப்படுகின்றன் இயற்கை அனர்த்தங்களும் இவை அனைத்திலும் அடங்குகின்றன. அதிகளவு மக்கள் இருக்க மாட்டார்கள். குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது இந்தப் பழைய உலகை மறக்க வேண்டும். உங்கள் இனிய வீட்டையும், சுவர்க்க இராச்சியத்தையும் நினைவுசெய்யுங்கள். ஒரு புதிய வீடு கட்டப்படுகின்றபொழுது, ஒருவரின் புத்தியானது புதிய வீட்டையே நினைவுசெய்கின்றது. புதிய உலகம் இப்பொழுது ஸ்தாபிக்கப்படுகின்றது. தந்தையே அனைவருக்கும் சற்கதி அருள்பவர். ஆத்மாக்கள் அனைவரும் வீடு திரும்புவார்கள், அவர்களது சரீரங்கள் இங்கேயே அழிக்கப்படும். தந்தையின் நினைவின் மூலமே ஆத்மாக்கள் தூய்மையாகுகின்றார்கள். நீங்கள் நிச்சயமாகத் தூய்மையாக வேண்டும்;. தேவர்கள் தூய்மையானவர்கள். சிகரட்டுகள், புகையிலை போன்றவை ஒருபொழுதும் தேவர்களின் விக்கிரகங்களின் முன்னால் வைக்கப்படுவதில்லை; அவர்கள் வைஷ்ணவர்கள். அது விஷ்ணு தாமம் என அழைக்கப்படுகின்றது. அது விகாரமற்ற உலகம், ஆனால் இதுவோ விகார உலகம். நீங்கள் இப்பொழுது விகாரமற்ற உலகிற்குச் செல்ல வேண்டும். மிகச் சிறிதளவு நேரமே எஞ்சியுள்ளது. அனைத்துமே அணுக்குண்டுகளால் அழிக்கப்படும் என்பதை நீங்களே புரிந்துகொள்ள முடியும். யுத்தம் நிச்சயமாக இடம்பெறும். தங்களை யாரோ அவற்றைச் செய்யுமாறு தூண்டுவதாகவும், அதனாலேயே தொடர்ந்தும் அவற்றை உருவாக்குவதாகவும் அவர்கள் கூறுகின்றார்கள். தங்களுடைய சொந்தக் குலமே அவற்றால் அழியும் என அறிந்திருந்தாலும், அவர்களால் அவற்றை உற்பத்தி செய்வதை நிறுத்த முடியாதுள்ளது. சங்கரர் மூலம் விநாசம் என்பதும் நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டுள்ளது. விநாசம் முன்னால் உள்ளது. விநாசத்துக்கான சுவாலைகள் ஞான யாகத்திலிருந்தே வெளியாகுகின்றன. நீங்கள் இப்பொழுது சுவர்க்க அதிபதிகள் ஆகுவதற்கே கற்கின்றீர்கள். இந்தப் பழைய உலகம் அழிக்கப்பட்டு, மீண்டும் புதியதாக ஆகுகின்றது. இந்தச் சக்கரம் தொடர்ந்து சுழல்கின்றது. வரலாறு மீண்டும் இடம்பெற வேண்டும். முதலில் ஆதிசனாதன தேவி தேவதா தர்மமும், பின்னர் சந்திர வம்சத்து, சத்திரிய தர்மமும் இருக்கின்றன. பின்னர் இஸ்லாமியர்கள், பௌத்தர்கள் போன்றோர் வருகின்றனர், பின்னர் நிச்சயமாக முதல் இலக்கம் மீண்டும் வந்து ஏனைய அனைத்தும் அழிக்கப்படுகின்றது. யார் குழந்தைகளான உங்களுக்குக் கற்பிப்பவர்;? அசரீரியான சிவபாபர் அவரே ஆசிரியரும், சற்குருவுமாவார். அவர் வந்ததுமே உங்களுக்குக் கற்பிக்க ஆரம்பிக்கின்றார்; இதனாலேயே சிவனின் பிறந்ததினமே, கீதையின் பிறந்ததினம் என எழுதப்பட்டுள்ளது:. கீதையின் பிறந்ததினமே கிருஷ்ணரின் பிறந்ததினமுமாகும். சிவபாபா சத்தியயுகத்தை ஸ்தாபிக்கின்றார். கிருஷ்ணரின் பூமியே சத்தியயுகம் என அழைக்கப்படுகின்றது. ஒரு சாதுவோ, புனிதரோ அல்லது மனிதரோ உங்களுக்குக் கற்பிப்பதில்லை. துன்பத்தை நீக்கிச் சந்தோஷத்தை அருள்பவரான, எல்லையற்ற தந்தையே உங்களுக்குக் கற்பிக்கின்றார். அவர் உங்களுக்கு 21 பிறவிகளுக்கான ஆஸ்தியைக் கொடுக்கின்றார். விநாசம் இடம்பெற வேண்டும். இந்நேரத்தைப் பற்றியே கூறப்பட்டுள்ளது: சிலரின் செல்வம் புதைக்கப்பட்டுள்ளது, சிலரின் செல்வம் அரசாங்கத்தினால் களவாடப்பட்டது.. பெருமளவு திருட்டு போன்றவையும் இருக்கும். தீயும் இருக்கும். அனைத்துமே இந்த யாகத்தில் அர்ப்பணிக்கப்படும். இப்பொழுது எங்கேயாவது சிறிதளவு தீ பரவினால், அது உடனேயே அணைக்கப்படுகின்றது. அதற்கு இன்னமும் சிறிது நேரம் எடுக்கும். அனைவரும் ஒருவருடன் ஒருவர் சண்டையிடுவர். அவர்களின் சண்டையை நிறுத்துவதற்கு எவருமே இருக்க மாட்டார்கள். இரத்த ஆறு ஓடிய பின்னர், பாலாறுகள் பாயும். அதுவே காரணமின்றி இரத்தம் சிந்துதல் என அழைக்கப்படுகின்றது. குழந்தைகள் காட்சிகளைக் கொண்டிருந்தார்கள், ஆனால் அந்நேரத்தில் நீங்கள் அனைத்தையும் உங்கள் பௌதீகக் கண்களால் பார்ப்பீர்கள். விநாசம் இடம்பெறும் முன்னர், தந்தையை நினைவுசெய்யுங்கள், ஆத்மாக்களாகிய நீங்கள் தமோபிரதானிலிருந்து, சதோபிரதானாகுவீர்கள். தந்தை புதிய உலக ஸ்தாபனைக்காக உங்களைத் தயாராக்குகின்றார். இராச்சியம் முழுமையாக ஸ்தாபிக்கப்படுகின்றபொழுது, விநாசம் இடம்பெறும். அச்சா.

இனிமையிலும் இனிமையான அன்புக்குரிய எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தந்தை தாயாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. விஷ்ணு பூமிக்குச் செல்வதற்கு உங்களைத் தகுதியானவர்கள் ஆக்குங்கள். சம்பூரணமாகத் தூய்மையாகுங்கள். தூய்மையற்ற உணவையும், பானத்தையும் துறவுங்கள். விநாசம் இடம்பெறும் முன்னர், உங்களிடமுள்ள அனைத்தையும் தகுதியான முறையில் பயன்படுத்துங்கள்.

2. கற்று விரைவில் திறமைசாலிகள் ஆகுங்கள். எவ்விதமான பாவச்செயல்களும் செய்யாதிருப்பதில் கவனம் செலுத்துங்கள்.

ஆசீர்வாதம்:
நீங்கள் துறவு மூலமும், தபஸ்யா மூலமும் சேவையில் வெற்றியை அடைகின்ற, ஓர் உண்மையான சேவகர் ஆவீர்களாக.

துறவறத்தைக் கொண்டிருப்பதும், தபஸ்யா செய்வதுமே சேவையில் வெற்றி அடைவதற்கான பிரதான வழியாகும். உங்கள் மனதிலுள்ள எண்ணங்களாலும் துறப்பதே துறவறம் என்பதன் அர்த்தமாகும். ஒரு சூழ்நிலையின் காரணமாக, மரியாதைக் கோட்பாட்டின் காரணமாக அல்லது பலவந்தத்தின் காரணமாக எதனையேனும் துறப்பது துறவறமல்ல. ஆனால் அது ஞான சொரூபமாக இருக்கும்பொழுது, உங்கள்; எண்ணங்களிலும் துறவியாக இருத்தல் ஆகும். சதா நினைவில் அமிழ்ந்திருப்பதும், ஞானக்கடலிலும், அன்புக்கடலிலும், பேரானந்தக் கடலிலும், சந்தோஷக் கடலிலும், அமைதிக்கடலிலும் அமிழ்ந்திருப்பதுமே ஒரு தபஸ்வியாக இருத்தல் என்பதன் அர்த்தமாகும். அத்தகைய துறவிகளும், தபஸ்விகளும் மாத்திரமே சேவையில் வெற்றியடைவதுடன், அவர்களே உண்மையான சேவகர்களும் ஆவார்கள்.

சுலோகம்:
உங்களுடைய தபஸ்யா மூலம் அமைதியின் அதிர்வலைகளைப் பரப்புவதே, ஓர் உலக சேவகராக இருப்பதாகும்.