09.03.19        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்:
இனிய குழந்தைகளே, தந்தையையும், ஆஸ்தியையும் மீண்டும் மீண்டும் நினைவு செய்யுங்கள். ஆன்மீகச் சத்திரசிகிச்சை நிபுணராகிய தந்தை உங்களை என்றென்றும் ஆரோக்கியமானவர்கள் ஆக்குவதற்கு, ஒரேயொரு மருந்தை மாத்திரமே கொடுக்கின்றார். அவர் கூறுகின்றார்: குழந்தைகளே, என்னை நினைவுசெய்யுங்கள்!

கேள்வி:
நீங்கள் பெரும் மகிழ்ச்சியை அனுபவம் செய்வதற்கு, எவ்விடயங்களைப் பற்றி உங்களுடனேயே பேச வேண்டும்?

பதில்:
நீங்கள் உங்களுடனேயே பேசுங்கள்: இக்கண்களால் நான் பார்ப்பவையெல்லாம் அழியப் போகின்றன. பாபாவும் நாங்களும் மாத்திரம் எஞ்சியிருப்போம். இனிய பாபா எங்களைச் சுவர்க்க அதிபதிகள் ஆக்குகின்றார். ஏகாந்தமாக இருந்து, உங்களுடன் இவ்வாறாகப் பேசுவதால், நீங்கள் பெரும் மகிழ்ச்சியை அனுபவம் செய்வீர்கள்.

ஓம் சாந்தி.
பரமதந்தையாகிய கடவுள் சிவன் பேசுகின்றார்: இனிமையிலும் இனிமையான குழந்தைகளே, நீங்கள் அதிமங்களகரமான சங்கமயுகத்தை ஒவ்வொரு அடியிலும் நினைவுசெய்ய வேண்டும். இதைக் குழந்தைகளாகிய நீங்கள் மாத்திரமே, வரிசைக்கிரமமாக, நீங்கள் செய்கின்ற முயற்சிக்கேற்ப அறிந்து கொள்கின்றீர்கள். இப்பொழுது, இந்த அதிமங்களகரமான சங்கமயுகத்தில், நாங்கள் அதிமேன்மையான மனிதர்கள் ஆகுகின்றோம் என்பதையும், பாபா எங்களை இந்த இராவணனின் கூண்டிலிருந்து விடுவிப்பதற்கு வந்துள்ளார் என்பதையும் உங்கள் புத்தி நினைவுசெய்ய வேண்டும். ஒரு பறவை கூண்டிலிருந்து விடுவிக்கப்படும்பொழுது சந்தோஷமடைந்து, பறந்து, சந்தோஷத்தை அனுபவம் செய்வதைப் போன்று, குழந்தைகளாகிய நீங்களும் இது வேறுபட்ட, பல துன்பங்கள் நிரம்பிய இராவணனின் கூண்டு என்பதை உணர வேண்டும். நாங்கள் மனிதர்களாக இருந்தபொழுதிலும், இப்பொழுது, தந்தை இக் கூண்டிலிருந்து எங்களை விடுவிப்பதற்கு வந்துள்ளார். தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் இடையில் யுத்தம் நடைபெற்று தேவர்கள் யுத்தத்தை வென்றதாகச் சமயநூல்களில் எழுதப்பட்டுள்ளது. உண்மையில், அது ஒரு யுத்தத்திற்கான கேள்வி அல்ல. நீங்கள் இப்பொழுது அசுரர்களிலிருந்து தேவர்கள் ஆகுகின்றீர்கள். நீங்கள் இராவண சமுதாயத்தை அல்லாமல், இராவணனை, அதாவது, ஐந்து விகாரங்களை வெற்றி கொள்கின்றீர்கள். ஐந்து விகாரங்களும் இராவணன் என்று அழைக்கப்படுகின்றன. எவ்வாறாயினும், அதில் எவரையும் எரிக்கின்ற கேள்வி எதுவும் இல்லை. சதா வசந்தகாலம் நிலவுகின்ற, மிகவும் வெப்பமாகவோ அல்லது மிகவும் குளிராகவோ இல்லாத ஓர் உலகிற்கு நீங்கள் செல்கின்றீர்கள் என்பதில் குழந்தைகளாகிய நீங்கள் மிகவும் சந்தோஷமாக இருக்க வேண்டும். சத்தியயுகத்து வசந்தகாலம் இப்பொழுது வருகின்றது. இங்கு, வசந்தகாலம் குறுகிய காலத்திற்குரியது, ஆனால், அங்கோ வசந்தகாலம் உங்களுக்காக அரைக்கல்பத்திற்கு நீடிக்கின்றது. அங்கு காலநிலை வெப்பமாக இருப்பதில்லை, ஆனால் இங்கோ, மக்கள் வெப்பத்தினால் வேதனைப்படுவதுடன் மரணித்தும் விடு;கின்றார்கள். நீங்கள் இத்தகைய துன்பகரமான விடயங்கள் அனைத்திலிருந்தும் விடுபடுவதற்காக, அழிவற்ற சத்திரசிகிச்சை நிபுணர் உங்களுக்கு மிகவும் இலகுவான மருந்தைக் கொடுக்கின்றார். நீங்கள் செல்கின்ற ஏனைய சத்திரசிகிச்சை நிபுணர்கள்; வேறுபட்ட பல மருந்துகள் போன்றவற்றை நினைவுசெய்ய வேண்டும், ஆனால் இச் சத்திரசிகிச்சை நிபுணரிடம் வேறெந்த மருந்துகளும் இல்லை. அவரை நினைவுசெய்வதால், நீங்கள் முற்றிலும் நோயிலிருந்து விடுபட்டவர்கள் ஆகுகின்றீர்கள்; அங்கு, மருந்து போன்றன எதுவும் இல்லை. குழந்தைகள் கூறுவார்கள்: இன்று நாங்கள் ஒரு கருத்தரங்கை நடாத்தப் போகின்றோம்: எவ்வாறு ஓர் அட்டவணையை எழுத வேண்டும், எவ்வாறு பாபா நினைவுசெய்யப்பட வேண்டும். இதில் ஒரு கருத்தரங்கை நடாத்துவோம். இப்பொழுது, அமர்ந்து எதையாவது எழுதுமாறு தந்தை உங்களைத் தொல்லைப்படுத்துவதில்லை; தாள்களை வீணாக்குவதற்கான அவசியம் இல்லை. தந்தை கூறுகின்றார்: உங்கள் புத்தியினால் தந்தையை நினைவுசெய்யுங்கள். அறியாமைப் பாதையில் அவர்கள் எவ்வளவுக்குத் தங்கள் தந்தையை நினைவுசெய்கின்றார்கள் என்ற அட்டவணையை எழுதுகின்றார்களா? அதற்காக எதையும் வாசிக்கவோ அல்லது எழுதவோ தேவையில்லை. குழந்தைகள் தந்தைக்குக் கூறுகின்றார்கள்: பாபா, நான் உங்களை மறந்துவிடுகின்றேன். ஏனையோர் இதைக் கேட்டால், என்ன கூறுவார்கள்? குழந்தைகளாகிய நீங்கள் கூறுகின்றீர்கள்: நாங்கள் வாழும்பொழுதே உங்களுக்கு உரியவர்கள் ஆகிவிட்டோம். நீங்கள் ஏன் இவ்வாறு ஆகிவிட்டீர்கள்;? தந்தையிடமிருந்து உலக இராச்சியமாகிய, ஆஸ்தியைப் பெறுவதற்கு ஆகும். எனவே, பின்னர், அத்தகையதொரு தந்தையை நீங்கள் ஏன் மறந்துவிடுகின்றீர்கள்? உங்களுக்கு அத்தகையதொரு பெரும் ஆஸ்தியைக் கொடுக்கின்ற தந்தையை உங்களால் நினைவுசெய்ய முடியாதா? நீங்கள் அவரிடமிருந்து இந்த ஆஸ்தியை முன்னரும்; பல தடவைகள் பெற்றுள்ளீர்கள். ஆனாலும் நீங்கள் அவரை மறந்துவிடுகின்றீர்கள்! நீங்கள் தந்தையிடமிருந்து உங்கள் ஆஸ்தியைக் கோர விரும்பினால், அவரை நினைவுசெய்வதுடன், தெய்வீகக் குணங்களையும் கிரகிக்க வேண்டும். அதில் எழுதுவதற்கு என்ன உள்ளது? உங்களில் ஒவ்வொருவரும் உங்களுடைய இதயத்தை வினவ வேண்டும். நாரதரின் உதாரணம் உள்ளது. அவர் ஒரு மகத்தான பக்தராக இருந்தார். நீங்கள் பல பிறவிகளுக்கான பழைய பக்தர்கள் என்பது உங்களுக்குத் தெரியும். இனிமையான தந்தையை நினைவுசெய்வதால், இப்பொழுது நீங்கள் அதிகளவு சந்தோஷத்தை அனுபவம் செய்கின்றீர்கள். நினைவு செய்யுமளவுக்கேற்ப, நீங்கள் இலக்ஷ்மி அல்லது நாராயணனைத் திருமணம் செய்யத் தகுதிவாய்ந்தவர்கள் ஆகுகின்றீர்கள். ஒரு செல்வந்தரினால் ஓர் ஏழைக் குழந்தை தத்தெடுக்கப்படும்பொழுது, அவர் மிகவும் சந்தோஷமடைகின்றார். அவர் தனது புதிய தந்தையையும் ஆஸ்தியையும் நினைவுசெய்தவாறு இருப்பார். தந்தையின் குழந்தை ஆகுவதற்கும், ஓர் இராச்சியத்தைக் கோருவதற்குமான விவேகத்தையேனும் கொண்டிராத பலர் இங்கு உள்ளனர். உங்களை உலக அதிபதிகள் ஆக்குகின்ற தந்தையை உங்களால் நினைவுசெய்ய முடியாதிருப்பது ஓர் அதிசயமே! தந்தை குழந்தைகளாகிய உங்களைத் தத்தெடுக்கின்றார், எனவே அத்தகையதொரு தந்தையை உங்களால் நினைவுசெய்ய முடியாதிருப்பது என்பது ஓர் அதிசயமே! தந்தையையும் அவருடைய சொத்தையும் நீங்கள் மீண்டும் மீண்டும் நினைவுசெய்ய வேண்டும். தந்தை கூறுகின்றார்: இனிமையான குழந்தைகளே, நீண்டகாலம் தொலைந்து இப்பொழுது கண்டெடுக்கப்பட்டுள்ள குழந்தைகளே, உங்களைத் தத்தெடுப்பதற்காக இங்கே வருமாறு நீங்கள் என்னை அழைத்தீர்கள். தந்தை வருமாறு அழைக்கப்பட்டார். தந்தையே சுவர்க்கத்தை ஸ்தாபிப்பவர். அவர் உங்களுக்குச் சுவர்க்க ஆஸ்தியைக் கொடுக்கின்றார். நீங்கள் பாபாவைக் கூவியழைக்கின்றீர்கள்: வந்து தூய்மையற்ற எங்களைத் தத்தெடுங்கள். நீங்களே உங்களைத் தூய்மையற்றவர்களும், கடனாளிகளும், அழுக்கானவர்களும், பைசா பெறுமதியற்றவர்களும் என்று கூறினீர்கள். பக்திமார்க்கத்தில் நீங்கள் எல்லையற்ற தந்தையை வருமாறு தொடர்ந்தும் கூவியழைத்தீர்கள். தந்தை கூறுகின்றார்: இங்குள்ள மனிதர்கள் கொண்டிருக்கும் பெரும் துன்பத்தைப் போன்று, பக்தி மார்க்கத்திலும் அந்தளவு துன்பத்தை நீங்கள் கொண்டிருக்கவில்லை. தந்தை இப்பொழுது வந்துள்ளார், ஆகவே நிச்சயமாக இது விநாசத்திற்கான நேரம். இந்த யுத்தத்திற்குப் பின்னர், விநாசத்திற்குப் பின்னர், யுத்தத்தின் சுவடுகள் எதுவும் பல பிறவிகளுக்கும், பல வருடங்களுக்கும் இருக்க மாட்டாது என்பதை நீங்கள் புரிந்துகொள்கிறீர்கள். யுத்தங்கள் நடைபெறப் போவதுமில்லை, துன்பத்தின் அல்லது நோயின் எச் சுவடும் இருக்கப் போவதுமில்லை. எவ்வாறாயினும், இப்பொழுது பல்வேறு நோய்கள் உள்ளன. தந்தை கூறுகின்றார்: இனிமையான குழந்தைகளே, நான் உங்களை அனைத்து வேதனைகளிலிருந்தும் விடுவிப்பேன். நீங்கள் என்னை நினைவுசெய்கின்றீர்கள்: ஓ கடவுளே! வந்து எங்களுக்கு அமைதியையும் சந்தோஷத்தையும் அருளுங்கள்! அனைவரும் இவ்விரு விடயங்களையே கேட்கின்றனர். இங்கு, அமைதியின்மை நிலவுகின்றது. ஆகவே, அமைதிக்கான அறிவுரையைக் கொடுப்பவர்களுக்கு அமைதிப் பரிசுகள் கொடுக்கப்படுகின்றன. அப்பாவி மக்களுக்கு எது அமைதி என்பது தெரியாது. அந்த இனிமையிலும் இனிமையான தந்தையைத் தவிர வேறு எவரிடம் இருந்தும் அமைதி பெறப்பட மாட்டாது. அவர்களைப் புரிந்துகொள்ள வைப்பதற்கு நீங்கள் மிகவும் கடுமையாக முயற்சி செய்கின்றீர்கள், ஆனால் அவர்கள் இன்னமும் புரிந்துகொள்வதில்லை. நீங்கள் அரசாங்கத்திற்கு எழுதி வினவவும் வேண்டும்: ஏன் நீங்கள் ஒன்றுமில்லாததற்காக உங்கள் பணத்தை விரயம் செய்கின்றீர்கள்? அமைதிக்கடலாகிய, ஒரேயொரு தந்தையால் மாத்திரம் உலகில் அமைதியை உருவாக்க முடியும். நீங்கள் இதை இராஜரீகமான முறையில் அரசாங்கத்தின் தலைமைத்துவத்திற்குச் சிறந்த தரமான கடதாசியில் எழுத முடியும். அவர்கள் சிறந்த தரமான கடதாசியைப் பார்க்கும்பொழுது, ஒரு முக்கிய நபரிடமிருந்து கடிதம் வந்துள்ளது என்பதைப் புரிந்துகொள்வார்கள். அவர்களை வினவுங்கள்: நீங்கள் உலக அமைதியைப் பற்றிப் பேசுகின்றீர்கள். எனவே முன்னர் எப்பொழுது நீங்கள் அதைப் பெற்றீர்களோ, அம்முறையிலேயே அதை மீண்டும் உங்களால் பெற முடியும். நீங்கள் அதை முன்னரும் பெற்றிருக்க வேண்டும். உங்களுக்கு அதைப் பற்றித் தெரியும், எனவே உங்களால் உலகில் எப்பொழுது அமைதியும் சந்தோஷமும் நிலவின என்ற நேரத்தையும் திகதியையும் எழுத முடியும். தந்தையே வந்து உலகில் அமைதியையும் சந்தோஷத்தையும் உருவாக்கினார்;. அது சத்தியயுகத்துக் காலம். இந்த இலக்ஷ்மியும் நாராயணனும் அந்த வம்சத்தின் அடையாளங்கள். வேறெவருக்கும் பிரம்மாவினதும், பிராமணர்களாகிய உங்களினதும் பாகங்கள் தெரியாது. பிரம்மாவின் பாகமே பிரதானமானது. அவரே, தந்தை பெருமளவு பணியை மேற்கொள்வதற்கான, இரதம் ஆகுகின்றார். இதனாலேயே அவருக்கு பலமில்லியன் மடங்குகள் பாக்கிய இரதம் எனப் பெயரிடப்பட்டுள்ளது. இதை நீங்கள் எவ்வாறு விளங்கப்படுத்த முடியும் என்பதைக் கடையுங்கள். மனிதர்களுக்குப் பெருமளவு போதை உள்ளது. இப்பொழுது நீங்கள் அவர்களுக்குத் தந்தையின் அறிமுகத்தைக் கொடுக்க வேண்டும். ஞானக்கடலாகிய தந்தை மாத்திரமே இந்த ஞானத்தைக் கொண்டுள்ளார். அவர் இங்கு வரும்பொழுது மாத்திரமே இந்த ஞானத்தைக் கொடுக்கின்றார். அதுவரையில் வேறெவராலும் இந்த ஞானத்தைக் கொடுக்க முடியாது. பக்தி மார்க்கத்தில் பக்தர்கள் அனைவரும் தொடர்ந்தும் வழிபாடு செய்து வருகின்றனர். ஒரேயொரு தந்தை மாத்திரமே உங்களுக்கு ஞானத்தைக் கொடுக்கின்றார். உண்மையில் நீங்கள் நிரந்தரமான ஞானநூல் ஒன்றை உருவாக்குவதில்லை. நீங்கள் உங்களுடைய காதுகளின் மூலம் இந்த ஞானத்தைச் செவிமடுக்கின்றீர்கள். உங்களிடமுள்ள புத்தகங்கள் போன்றவை அனைத்தும் தற்காலிகமானவை. ஏனெனில் அவை அனைத்தும் அழியப் போகின்றன. நீங்கள் எழுதும் குறிப்புக்களும் முடிவிற்கு வருகின்றன. நீங்கள் எடுக்கின்ற குறிப்புக்கள் உங்கள் சுய முயற்சிக்குரியவை. தந்தை கூறுகின்றார்: உங்கள் ஞாபகத்திற்கு வருகின்ற தலைப்புக்களின் பட்டியலொன்றைத் தயாரியுங்கள். இப்புத்தகங்கள் போன்ற எவையுமே இருக்க மாட்டாது என்பதை நீங்கள் அறிவீர்கள் இந்த நினைவு மாத்திரமே உங்கள் புத்தியில் எஞ்சியிருக்கும். ஆத்மாக்களாகிய நீங்கள் தந்தையைப் போன்று, முற்றிலும் நிரம்பியவர்கள் ஆகுகின்றீர்கள். நீங்கள் உங்களுடைய கண்களால் பார்க்கின்ற ஏனைய பழைய விடயங்கள் அனைத்தும் இறுதியில் அழிக்கப்படும். இறுதியில் எதுவுமே எஞ்சியிருக்காது. தந்தையே அநாதியான சத்திரசிகிச்சை நிபுணர். ஆத்மாக்களும் அநாதியானவர்களும், அழிவற்றவர்களும் ஆவார்கள். அவர்கள் சரீரங்களை விடுத்து இன்னுமொன்றை எடுக்கின்றார்கள். நாளுக்கு நாள், மக்கள் பெறுகின்ற சரீரங்கள் எவையாயினும், அவை தூய்மையற்றவையாகவும் அழுக்கானவையாகவும் இருக்கும். நீங்கள் மேன்மையானவர்கள் ஆகுகின்றீர்கள் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது அறிவீர்கள். தந்தையே உங்களை மேன்மையானவர்கள் ஆக்குகின்றார். சாதுக்கள், புனிதர்கள் முதலியோர் உங்களை மேன்மையானவர்கள் ஆக்குவதில்லை. தந்தை உங்களை மேன்மையானவர்கள் ஆக்குகின்றார். பாபா கூறுகின்றார்: இனிய குழந்தைகளே, நான் உங்களை எனது கண்ணிமையில் வைத்து, உங்களைத் திரும்பவும் என்னுடன் வீPட்டுக்கு அழைத்துச் செல்கின்றேன். ஆத்மாக்கள் இங்கு கண்களில் அமர்கின்றனர். தந்தை கூறுகின்றார்: ஓ ஆத்மாக்களே, நான் உங்களை என் கண்களில் வைத்து அப்பால் எடுத்துச் செல்கின்றேன். இப்பொழுது குறுகிய காலமே எஞ்சியுள்ளது. ஆதலால், முயற்சி செய்யுங்கள்! இனிய பாபாவை நீங்கள் எவ்வளவு நேரம் நினைவுசெய்கின்றீர்கள் என உங்கள் இதயத்தைக் கேட்டுப் பாருங்கள். ஹீரும் ரஞ்சிகாவும் (ஒரு காதல் ஜோடி) ஒருவரையொருவர் விகாரத்திற்காக நேசிக்கவில்லை; அது தூய அன்பாக இருந்தது. நினைவின் மூலம் அவர்களால் ஒருவரையொருவர் பார்க்கவும், சந்திக்கவும் முடிந்தது. தந்தை கூறுகின்றார்: நீங்களும் அவ்வாறு ஆக வேண்டும். அவர்கள் ஒரு பிறவிக்குக் காதலர்களாக இருக்கின்றார்கள். ஆனால் நீங்களோ, எத்தனையோ பிறவிகளுக்கு எனது காதலிகளாக இருக்கின்றீர்கள். இந்நேரத்திலேயே அவ்விடயங்கள் இடம்பெறுகின்றன. காதலியும், அன்பிற்கினியவரும்; எனும் வார்த்தைகள் சத்தியயுகத்தில் பயன்படுத்தப்படுவதில்லை. அவர்கள் தூய்மையாக இருக்கின்றார்கள்; அவர்கள் ஒருவரைப் பற்றிச் சிந்திக்கும்பொழுது, அவன் அல்லது அவள் தோன்றுவதால், சந்தோஷத்தை அனுபவம் செய்கிறார்கள். குழந்தைகளாகிய உங்களிடம் கண்ணாற் பார்க்கக்கூடிய எதுவுமில்லை. இந்நேரத்தில் நீங்கள் உங்களை ஆத்மாக்களாக மாத்திரம் கருதி, தந்தையாகிய, அன்பிற்கினியவரை நினைவுசெய்ய வேண்டும். உங்களை ஆத்மாக்களாகக் கருதித் தந்தையை மிகுந்த சந்தோஷத்துடன் நினைவுசெய்யுங்கள். தந்தை தொடர்ந்தும் விளங்கப்படுத்துகின்றார்: பக்தி மார்க்கத்தில் என்னை நீங்கள் உங்கள் அன்பிற்கினியவராகக் காதலித்து, உங்களை என்னிடம் அர்ப்பணித்தீர்கள். ஓ அன்பிற்கினியவரே, நீங்கள் வரும்பொழுது நான் என்னை உங்களுக்கு அர்ப்பணிப்பேன் எனக் கூறினீர்;கள். இப்பொழுது அன்பிற்கினியவர் அனைவரையும் அழகாக்குவதற்கு வந்துள்ளாhர். அவர் உங்களையும் தன்னைப் போல் ஆக்குவதற்கு முயற்சி செய்கின்றார். நீங்கள் அழகானவர்கள் ஆகும்பொழுது, உங்கள் சரீரங்களும் அழகானவையாக இருக்கும். ஆத்மாக்களினுள் கலப்படம் கலக்கப்பட்டுள்ளது. இப்பொழுது என்னை நினைவுசெய்யுங்கள். அப்பொழுது அந்தக் கலப்படம் அகற்றப்பட்டுவிடும். இங்கு வருகின்ற குழந்தைகளுக்கு அதிகளவு ஏகாந்தம் உள்ளது. பாதிரியார்கள் நடக்கும்பொழுது, முற்றுமுழுதாக மௌனத்தில் நிலைத்திருக்கின்றார்கள். அவர்கள் தங்களின் கைகளில் ஒரு மாலையை வைத்திருக்கிறார்கள். அவர்கள் எவரையுமே பார்க்க மாட்டார்கள். அவர்கள் கிறிஸ்துவின் நினைவில் இருந்தவாறே மிகவும் மெதுவாக நடந்து செல்கிறார்;கள்; அவர்கள் தந்தையை அறியார்கள்;. கடவுள் பெயருக்கும் ரூபத்திற்கும் அப்பாற்பட்டவர் என என்னைப் பற்றிக் கூறப்படுகின்றது. எனவே அவர் ஒரு புள்ளியாக இருந்தால், அவர்களால் எதைப் பார்க்க முடியும்? அவர்களுக்கு எவ்வாறு ஒரு புள்ளியை நினைவுசெய்வது என்பது தெரியாது. உங்களுக்கு இப்பொழுது அவரைத் தெரியும். நீங்கள் இதைப் புரிந்துகொண்டிருக்கின்றீர்கள். அதனாலேயே நீங்கள் இங்கு வருகின்றீர்கள். மதுவனம் போற்றப்படுகின்றது. இதுவும் நீங்கள் வருகின்ற உண்மையான மதுவனம் ஆகும்;. இயன்றளவுக்கு ஏகாந்தத்தில் இருந்து தந்தையை நினைவுசெய்யுங்கள். மற்றவர்களைப் பார்க்க வேண்டாம். பல மொட்டை மாடிகள் இருக்கின்றன. பாபாவின் நினைவில் காலையில் மொட்டை மாடிக்குச் செல்லுங்கள். அப்பொழுது நீங்கள் பெரும் களிப்படைவீர்கள். இரவு ஒரு மணிக்கு அல்லது இரண்டு மணிக்கு அல்லது அதிகாலையில் விழித்தெழ முயற்சி செய்யுங்கள். உறக்கத்தை வென்றவர்கள் என்று நீங்கள் பிரசித்திபெற்றவர்கள். நேரத்துடன் உறங்கச் சென்று ஒரு மணிக்கு அல்லது இரண்டு மணிக்குக் காலையில் விழித்தெழுந்து, மொட்டை மாடிக்குச் சென்று ஏகாந்தமாக நினைவு யாத்திரையில் நிலைத்திருங்கள். நீங்கள் உங்களுடைய வருமானத்தைச் சேகரித்துக் கொள்ள வேண்டும். தந்தையை நினைவுசெய்து அவரைப் புகழ்வதில் உங்களை மும்முரமாக வைத்திருங்கள். ஒருவருக்கொருவர் இதைக் கூறுங்கள்: பாபா, மிகவும் இனிமையானவர். அவரை நினைவுசெய்வதால் உங்கள் பாவங்கள் அழிக்கப்படும். இங்கே அதிகளவு வருமானத்தைச் சம்பாதிப்பதற்கு உங்களுக்கு ஒரு மிக நல்ல வாய்ப்பு உள்ளது. இதனை உங்களால் உங்களுடைய வீட்டிலிருக்கும்பொழுது செய்ய முடியாதிருக்கின்றது. உங்களுக்கு நேரம் கிடைப்பதில்லை. உங்களால் நினைவு யாத்திரையில் நிலைத்திருக்க முடியாத அளவிற்கு உலகின் அதிர்வுகளும் சூழலும் மிகவும் அழுக்காக இருக்கின்றன. இதற்காக எதனையும் எழுத வேண்டிய அவசியமில்லை. காதலியும் அன்பிற்கினியவரும் எதனையாவது எழுதுகின்றார்களா? உங்களை உள்முகமாகப் பரிசோதியுங்கள். நான் எவருக்காவது துன்பம் கொடுத்தேனா? நான் எத்தனை பேருக்கு பாபாவை ஞாபகப்படுத்தினேன்? நீங்கள் இங்கு முன்னேறுவதற்காகவே வருகின்றீர்கள். ஆதலால் இங்கேயே முயற்சி செய்யுங்கள். மொட்டை மாடியில் ஏகாந்தமாக இருந்து உங்கள் வருமானத்தைச் சேகரித்துக் கொள்ளுங்கள். ஏனெனில் இது வருமானத்தைச் சேகரிப்பதற்கான காலம். இங்கே நீங்கள் இருக்கின்ற ஐந்து முதல் ஏழு நாட்களும் முரளியைச் செவிமடுத்த பின்னர் சென்று ஏகாந்தமாக அமருங்கள். நீங்கள் இப்பொழுது உங்கள் சொந்த வீட்டில் அமர்ந்திருக்கின்றீர்கள். ஆதலால், தந்தையை நினைவுசெய்து, உங்களுக்கெனச் சில வருமானத்தைச் சேகரித்துக் கொள்ள முடியும். அநேக தாய்மார்கள் பந்தனத்தில் உள்ளதால், அவர்கள் தந்தையை நினைவுசெய்கின்றனர். சிவபாபா, இந்தப் பந்தனத்திலிருந்து என்னை விடுவியுங்கள். அவர்கள் விகாரத்திற்காக அதிகளவு துன்புறுத்தப்படுகின்றனர். திரௌபதி எவ்வாறு துகிலுரியப்பட்டாள் என்று அவர்கள் நாடகத்தில் காட்டுகின்றார்கள். இப்பொழுது நீங்கள் அனைவரும் திரௌபதிகள்;. ஆதலால் தொடர்ந்தும் தந்தையை நினைவுசெய்யுங்கள். பாபா தன்னை நினைவுசெய்வதற்குப் பல விவேகமான வழிகளை உங்களுக்குக் கூறுகின்றார். இது குளிப்பது சம்பந்தப்பட்ட விடயமல்ல. ஆம். நீங்கள் மலசலம் கழித்தால் குளிப்பது அவசியம். குளிக்கும்பொழுதும் பக்தர்கள் சிலர் கடவுளையும் தேவர்களையும் நினைவுசெய்கின்றார்கள். நினைவே பிரதான விடயம். நீங்கள் அதிகளவு ஞானத்தைப் பெற்றுள்ளீர்கள். இது 84 பிறவிச் சக்கரத்தின் ஞானம். உங்களுக்குள்ளேயே பரிசோதித்து வினவுங்கள். என்னைச் சுவர்க்க அதிபதி ஆக்குகின்ற, இனிமையிலும் இனிமையான தந்தையை நாள் முழுவதும் எவ்வளவுக்கு நான் நினைவுசெய்கின்றேன்? எனது மனம் அலைபாய்ந்தவாறு இருக்கின்றதா? அது எங்கே போகின்றது? இந்த உலகம் இருக்கப் போவதில்லை. அனைத்தும் அழியப் போகின்றது. பாபாவும் நாங்களும் மாத்திரம் எஞ்சுவோம். இவ்வாறு உங்களுடன் நீங்கள் பேசுவதால், பெரும் மகிழ்ச்சியை அனுபவம் செய்வீர்கள். இங்கே வருபவர்கள் மிகப் பழைய, மூத்த பக்தர்கள். இங்கே வராதவர்கள் சமீபகாலப் பக்தர்கள் எனவும், அவர்கள் பின்னரே வருவார்கள் எனவும் உங்களால் புரிந்துகொள்ள முடியும். பக்திமார்க்கத்தின் ஆரம்பம் முதல் பக்திசெய்தவர்கள் தந்தையிடமிருந்து ஆஸ்தியைக் கோருவதற்கு, நிச்சயமாக இங்கே வருவார்கள். முயற்சிகள் இங்கு மறைமுகமானவை. இந்த ஞானத்தைக் கிரகிக்காதவர்களால் முயற்சி செய்ய முடியாதுள்ளது. நீங்கள் உங்களை விருத்தி செய்வதற்கும், புத்துணர்ச்சி அடைவதற்குமே இங்கு வருகின்றீர்கள். ஒரு வாரத்தில் உங்களால் அதிகளவு சம்பாதிக்க முடியும். உங்களால் இந்தளவை 12 மாதங்களிலேனும் அங்கே (உங்கள் சொந்த இடங்களில்) சேமிக்க முடியாது. உங்களால் ஏழு நாட்களில் தவற விட்டதைப் பிடித்துக் கொள்ள முடியும். பாபாவே உங்களுக்கு இந்த ஆலோசனையைக் கூறுகின்றார். அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டெடுக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. ஏகாந்தத்தில் இருந்து தந்தையை நினைவுசெய்து வருமானத்தை ஈட்டுங்கள். நினைவு செய்யும்பொழுது உங்கள் மனம் அலைபாய்கின்றதா என்று நீங்கள் உங்களை உள்ளார சோதியுங்கள். நான் இனிய தந்தையை எந்தளவு நேரம் நினைவுசெய்கின்றேன்?

2. இராவணனின் கூண்டிலிருந்து உங்களை பாபா விடுவித்து விட்டார் என்று சதா சந்தோஷத்தில் நிலைத்திருங்கள். அதிக வெப்பமோ அல்லது அதிகக் குளிரோ இல்லாத, சதா வசந்தகாலம் நிலவுகின்ற, புதிய உலகிற்கு நீங்கள் செல்ல இருக்கின்றீர்கள்.

ஆசீர்வாதம்:
நீங்கள் ஆன்மீகப் போதை மூலம் பழைய உலகை மறந்து, சுய இராச்சியத்தைக் கொண்டிருப்பதால், உலக இராச்சியத்திற்கான ஓர் உரிமையைக் கொண்டிருப்பீர்களாக.

சங்கமயுகத்தில் தந்தையின் ஆஸ்திக்கான உரிமையைக் கோருபவர்களே சுய இராச்சியத்திற்கான உரிமையையும், உலக இராச்சியத்திற்கான உரிமையையும் கோருபவர்கள். இன்று, நீங்கள் சுய இராச்சியத்தைக் கொண்டிருக்கின்றீர்கள், நாளை நீங்கள் உலக இராச்சியத்தைக் கொண்டிருப்பீர்கள். அது இன்றைய, நாளைய தினங்களுக்கான விடயமாகும். அத்தகைய உரிமையைக் கொண்டுள்ள, ஆத்மாக்களாகிய நீங்கள் ஆன்மீகப் போதையில் நிலைத்திருக்கின்றீர்கள், அந்தப் போதை இலகுவில் உங்களைப் பழைய உலகை மறக்குமாறு செய்கின்றது. ஓர் உரிமையைக் கொண்டிருப்பவர்கள் என்றுமே எப்பொருளிலோ, நபரிலோ அல்லது சம்ஸ்காரங்களிலோ தங்கியிருக்க மாட்டார்கள். எல்லைக்குட்பட்ட விடயங்கள் இயல்பாகவே அவர்களை விட்டு நீங்கிச்; செல்வதால், அவர்கள் எல்லைக்குட்பட்ட விடயங்களை நீக்குவதற்கு முயற்சி செய்வதில்லை.

சுலோகம்:
தங்கள் ஒவ்வொரு விநாடியையும், மூச்சையும், பொக்கிஷத்தையும் ஒரு தகுதிவாய்ந்த வழியில் பயன்படுத்துபவர்கள் மாத்திரமே வெற்றி சொரூபங்கள் ஆகுகின்றார்கள்.