09.03.20        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


ஓம் சாந்தி.
இதனைக் கூறுபவர் யார்? தந்தையே இதனைக் குழந்தைகளுக்குக் கூறுகின்றார். குழந்தைகள் அனைவரும் சந்தோஷமற்றும், பொறுமையற்றும் இருப்பதால், தந்தை இதனைக் குழந்தைகள் அனைவருக்கும் கூறவேண்டியுள்ளது. அவர்கள் தந்தையை நினைவு செய்து கூறுகின்றார்கள்: வாருங்கள், வந்து எங்களைத் துன்பத்தில் இருந்து விடுவித்து, சந்தோஷத்தின் பாதையைக் காட்டுங்கள். தாங்கள் மிகவும் சந்தோஷமாக இருந்தோம் என்பதை மனிதர்கள் குறிப்பாக, பாரத மக்கள் மறந்துள்ளனர். பாரதம் மிகவும் பழைமையான, அற்புதமான தேசமாகும். மக்கள் உலக அதிசயங்களைப் பற்றிக் கூறுகின்றார்கள். இங்கே இராவண இராச்சியத்தில் அவர்கள் ஏழு அதிசயங்களைப் பற்றிக் கூறுகின்றார்கள். அவை பௌதீகமான அதிசயங்கள் ஆகும். அவை துன்பத்தைக் கொடுக்கும் மாயையின் அதிசயங்களாகும் எனத் தந்தை விளங்கப்படுத்துகின்றார். தந்தையாகிய இராமரின் அற்புதமே சுவர்க்கமாகும். அதுவே உலக அதிசயமாகும். சுவர்க்கமாக இருந்த பாரதமே வைரம் போன்றிருந்தது. அது தேவர்களின் இராச்சியமாகும். பாரத மக்கள் இவை அனைத்தையும் மறந்து விட்டார்கள். அவர்கள் தேவர்களின் சிலைகளுக்கு முன் சிரம் தாழ்த்தி வணங்குகின்றார்கள். ஆனாலும் தாங்கள் வழிபாடு செய்பவர்களின் சுயசரிதையையாவது அவர்கள் தெரிந்திருக்க வேண்டும். நீங்கள் இங்கே பரலோகத்தந்தையிடம் வந்திருக்கின்றீர்கள் என எல்லையற்ற தந்தை இங்கமர்ந்திருந்து, விளங்கப்படுத்துகின்றார். பரலோகத்தந்தையே சுவர்க்கத்தை ஸ்தாபிக்கின்றார். எந்த மனிதர்களாலும் இந்தப் பணியைச் செய்ய முடியாது. பாபா இவருக்குக் (பிரம்மாவுக்கு) கூறுகின்றார்: ஹேய்! பழைய தமோபிரதான கிருஷ்ணருடைய ஆத்மாவே, உங்கள் சொந்தப் பிறவிகளை நீங்கள் அறியாதிருக்கின்றீர்கள், நீங்கள் கிருஷ்ணராக இருந்த போது சதோபிரதானாக இருந்தீர்கள். இப்போது, 84 பிறவிகளையும் எடுத்ததால், நீங்கள் தமோபிரதானாகி விட்டீர்கள். உங்களுக்குப் பல வேறுபட்ட பெயர்கள் கொடுக்கப்பட்டன. இப்போது உங்களுக்கு பிரம்மா என்ற பெயர் கொடுக்கப்பட்டுள்ளது. பிரம்மா விஷ்ணுவாகுகின்றார், அதாவது ஸ்ரீ கிருஷ்ணர் ஆகுகின்றார். அது ஒரே விடயமாகும். பிரம்மா விஷ்ணுவாகுகின்றார், விஷ்ணு பிரம்மாவாகுகின்றார். பிரம்மாவின் வாய்வழித் தோன்றல்களாகிய குழந்தைகளே பிராமணர்கள் பின்னர் தேவர்களாகுகின்றனர். அந்தத் தேவர்கள் பின்னர் சூத்திரர்கள் ஆகுகின்றனர். இப்போது நீங்கள் பிராமணர்கள் ஆகியுள்ளீர்கள். இப்போது தந்தை இங்கமர்ந்திருந்து இவையனைத்தும் கடவுளின் வாசகங்கள் எனக் குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார். நீங்கள் மாணவர்கள். ஆகவே நீங்கள் மிகவும் சந்தோஷமாக இருக்க வேண்டும். எனினும் அந்தளவு சந்தோஷம் உங்களுக்கில்லை. செல்வந்தர்கள் தங்களின் செல்வத்தையிட்டுப் போதை கொண்டிருப்பதால், அவர்கள் மிகவும் சந்தோஷத்தில் திளைத்திருக்கிறார்கள். இங்கே நீங்கள் கடவுளின் குழந்தைகளாகிவிட்ட போதிலும் நீங்கள்; அந்தளவிற்கு சந்தோஷமாக இருப்பதில்லை. தாம் கல்லுப்புத்தியுடையவர்கள் என்பதை அவர்கள் புரிந்து கொள்வதில்லை. அவர்களுடைய பாக்கியத்தில் அது இல்லையாயின் அவர்கள் ஞானத்தைக் கிரகிக்க மாட்டார்கள். இப்போது தந்தை உங்களை ஆலயத்தில் வீற்றிருப்பதற்கு தகுதி வாய்ந்தவர்களாக்குகின்றார். ஆயினும், மாயையின் சகவாசமும் குறைந்ததல்ல. நல்ல சகவாசம் அக்கரைக்கு எடுத்துச் செல்லும், தீய சகவாசம் மூழ்கடிக்கும் என்றும் பாடப்பட்டிருக்கின்றது. தந்தையின் சகவாசம் உங்களை முக்திக்கும் ஜீவன் முக்திக்கும் கொண்டு செல்லும். பின்பு இராவணனின் தீய சகவாசம் உங்களை சீரழிந்த நிலைக்குத் கொண்டு செல்லுகின்றது. ஐந்து விகாரங்களின் சகவாசமும் உள்ளது. அப்படியல்லவா? பக்தி மார்க்கத்தில் அவர்கள் அதனை சத்தியத்தின் சகவாசம் எனக் கூறினாலும், அவர்கள் தொடர்ந்தும் ஏணியில் இறங்கி கீழே வருகின்றார்கள். ஏணியில் இருப்பவர் தள்ளாடினால் அவர் நிச்சயமாகக் கீழே வீழ்ந்து விடுவார். அப்படியல்லவா? பாபாவே அனைவருக்கும் ஜீவன்முக்தி அருளுபவர். எவராக இருந்தாலும் கடவுளை மேலேயே சுட்டிக் காட்டுகின்றாரகள்;. இப்பொழுது தந்தையைத் தவிர வேறு எவரால் அவரது அறிமுகத்தைக் குழந்தைகளுக்குக் கொடுக்க முடியும்? தந்தையே தனது அறிமுகத்தைக் குழந்தைகளுக்குக் கொடுக்கின்றார். அவர் குழந்தைகளைத் தனக்குரியவர்களாக்கி அவர்களுக்கு உலகின் ஆரம்பம், மத்தி, இறுதியின் ஞானத்தையும் கொடுக்கின்றார். தந்தை கூறுகின்றார்: நான் வந்து உங்களை ஆஸ்திகர்களாக ஆக்குவதுடன் உங்களை திரிக்காலதரிசிகளாகவும் ஆக்குகின்றேன். இது நாடகமாகும். சாதுக்களுக்கும் புனிதர்களுக்கும் இது தெரியாது. ஏனைய நாடகங்கள் எல்லைக்குட்பட்டவை, ஆனால் இந்த நாடகமோ எல்லையற்றதாகும். இந்த எல்லையற்ற நாடகத்தில் நாங்கள் அதிகளவு சந்தோஷத்தையும், அதிகளவு துன்பத்தையும் பார்க்கின்றோம். இந்த நாடகத்தில் கிருஷ்ணருக்கும், கிறிஸ்தவர்களுக்கும் இடையில் என்ன கணக்கு உள்ளதெனப் பாருங்கள்! அவர்கள் யுத்தம் செய்து பாரத இராச்சியத்தைக் கைப்பற்றினார்கள். எனினும் நீங்கள் யுத்தம் செய்வதில்லை. அவர்கள் தங்களுக்குள் யுத்தம் செய்யும் போது நீங்கள் இராச்சியத்தைப் பெறுகின்றீர்கள். இது நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டுள்ளது. எவரும் இந்த விடயங்களை அறியவில்லை. ஞானக்கடலான ஒரேயொரு தந்தையே உங்களுக்கு ஞானத்தைக் கொடுக்கின்றார். அவர் அனைவருக்கும் சற்கதி அருள்கின்றார். பாரதத்தில் தேவர்களின் இராச்சியம் இருந்த காலத்தில் உங்களுக்கு ஜீவன் முக்தி கிடைத்தது. ஏனைய ஆத்மாக்கள் அனைவரும் முக்தி தாமத்தில் இருந்தார்கள். பாரதம் தங்கமயமாக இருந்தது. நீங்கள் அங்கே ஆட்சி செய்தீர்கள். சத்தியயுகம், சூரிய வம்ச இராச்சியமாக இருந்தது. நீங்கள் இப்போது சத்திய நாராயணனின் கதையைச் செவிமடுக்கிறீர்கள். இது சாதாரண மனிதனிலிருந்து நாராயணனாக மாறுகின்ற கதையாகும். இதனைப் பெரிய எழுத்துக்களில் எழுதுங்கள்;. உண்மையான கீதையின் மூலம் பாரதம் பவுண் பெறுமதியுள்ள சத்திய பூமி ஆகுகின்றது. தந்தை வந்து உண்மையான கீதையைக் கூறுகின்றார். அவர் இலகு இராஜயோகத்தைக் கற்பிப்பதால், நீங்கள் பவுண் பெறுமதியுள்ளவர்கள் ஆகுகின்றீர்கள். பாபா அத்தகைய பல சிறு கதைகளை விளங்கப்படுத்துகின்றார். எனினும், சில குழந்தைகள் சரீரஉணர்வினால், இதனை மறந்து விடுகின்றார்கள். அவர்கள் ஆத்ம உணர்வுடையவர்கள் ஆகும் போது, அவர்களால் இந்த ஞானத்தையும் கிரகிக்க முடியும். சரீர உணர்வுடையவர்களாக இருப்பதாலேயே அவர்களால் இதனைக் கிரகிக்க முடியாதுள்ளது. தந்தை இப்போது விளங்கப்படுத்துகின்றார்: நான் சர்வவியாபி என நான் கூறவில்லை. என்னை நீங்கள் தாயும் தந்தையும் என்று அழைக்கின்றீர்கள். இதன் அர்த்தம் என்ன? உங்கள் கருணையினால் நாங்கள் பெரும் சந்தோஷத்தைப் பெறுகின்றோம்; என நீங்கள் பாடுகின்றீர்கள். எனினும் இப்போது துன்பமுள்ளது. இந்தப் புகழ் எந்தக் காலத்திற்கு உரியது? அவர்கள் இதனையுமே புரிந்து கொள்ளவில்லை. பறவைகள் விளக்கம் எதுவும் இன்றி கீச்சிடுவதைப் போல அவர்களும் எதனையும் புரிந்து கொள்ளாது தொடர்ந்தும் கீச்சிடுகின்றார்கள். தந்தை இங்கமர்ந்திருந்து விளங்கப்படுத்துகின்றார்: அவை அனைத்தும் நியாயமற்றவையாகும். உங்களை நியாயமற்றவர்களாக ஆக்கியது யார்? இராவணன். பாரதம் சத்திய பூமியாக இருந்தகாலத்தில், அனைவரும் உண்மையையே பேசினார்கள். களவெடுத்தல், ஏமாற்றுதல் போன்றன இருக்கவில்;லை. இங்கே, களவெடுத்தல் போன்றன அதிகளவு இடம்பெறுகின்றன. முழு உலகிலும் ஏமாற்றுதல், ஏமாற்றுதல் மாத்திரமே நிறைந்துள்ளது. இந்த உலகம் துன்ப உலகமான, பாவகரமான உலகம் என்று அழைக்கப்படுகின்றது. சத்திய யுகம் சந்தோஷ உலகம் என அழைக்கப்படுகின்றது. இது விகாரம் நிறைந்த விலைமாதர் இல்லமாகும். சத்தியயுகம் சிவாலயமாகும். தந்தை இங்கமர்ந்திருந்து மிகவும் தெளிவாக உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார். பிரம்மகுமாரிகள் உலக ஆன்மீகப் பல்கலைக்கழகம் என்னும் பெயர் மிகவும் நல்லது. இப்போது தந்தை வந்து உங்களை விவேகமானவர்கள் ஆக்குகின்றார். அவர் கூறுகின்றார்: இந்த விகாரங்களை வென்று உலகை வென்றவர்கள் ஆகுங்கள். காமமே உங்கள் கொடிய எதிரியாகும். இதனாலேயே குழந்தைகள் கூவியழைகின்றார்கள்: வந்து எங்களைத் தேவ, தேவியர்கள் ஆக்குங்கள். குழந்தைகளாகிய நீங்கள் மாத்திரமே தந்தையின் சரியான புகழை அறிவீர்கள். மக்கள் தந்தையையோ அல்லது அவருடைய புகழையோ அறியவில்லை. அவர் அன்புக் கடல் என்பதை நீங்கள் அறிவீர்கள். இந்த ஞானம் அனைத்தையும் தந்தை குழந்தைகளாகிய உங்களுக்குக் கூறுகின்றார். அவருடைய இந்த அன்பு உங்களுக்கானதாகும். ஓர் ஆசிரியர் மாணவர்களுக்கு கற்பிப்பதால் எதுவும் அற்றவர்களாக இருந்த மாணவர்கள் மகான்களாகுகின்றார்கள். குழந்தைகளாகிய நீங்கள் தந்தையைப் போல அன்புக்; கடலாக வேண்டும். நீங்கள் அனைவருக்கும் அதிக அன்புடன் விளங்கப்படுத்த வேண்டும். தந்தை கூறுகின்றார்: நீங்கள் ஒருவர் மீது ஒருவர் அன்பு கொண்டிருக்க வேண்டும். தந்தையின் அறிமுகத்தைக் கொடுப்பதே முதற்தரமான அன்பாகும். இந்த மறைமுகமான தானத்தைச் செய்ய வேண்டும். ஒருவர் மீது ஒருவர் எவ்விதமான விருப்பமின்மையும் இருக்கக் கூடாது. அவ்வாறிருந்தால், நீங்கள் தண்டனையை அனுபவம் செய்ய நேரிடும். நீங்கள் எவரையாவது அலட்சியப்படுத்தினால் நீங்கள் தண்டிக்கப்படுவீர்கள். ஒருபோதும் எவரையும் வெறுக்காதீர்கள். எவரையும் அலட்சியப்படுத்தாதீர்கள். நீங்கள் சரீர உணர்வுடையவராகுவதால் தூய்மையற்றவர்கள் ஆகுகின்றீர்கள். தந்தை உங்களை ஆத்ம உணர்வுடையவர்களாக ஆக்குவதால் நீங்கள் தூய்மையாகுகின்றீர்கள். அனைவருக்கும் விளங்கப்படுத்துங்கள்: 84 பிறவிகளின் சக்கரம் இப்பொழுது முடிவடைந்து விட்டது. சூரிய வம்சத்து சக்கரவர்த்திகள், சக்கரவர்த்தினிகளாக இருந்தவர்களே, இப்போது 84 பிறவிகளையும் எடுத்ததால் அவர்கள் கீழே இறங்கி வந்து நிலத்தில் வீழ்ந்து விட்டார்கள். தந்தை இப்பொழுது மீண்டும் உங்களை சக்கரவர்த்திகள் சக்கரவர்த்தினிகள் ஆக்குகின்றார். தந்தை கூறுகின்றார்: சதா என்னை மாத்திரம் நினைவு செய்யுங்கள். நீங்கள் தூய்மையாகுவீர்கள். குழந்தைகளாகிய நீங்கள் கருணையுள்ளவர்கள் ஆகி, நாள் முழுவதும் சேவையைப் பற்றிச் சிந்திக்க வேண்டும். தந்தை தொடர்ந்தும் வழிகாட்டல்களைக் கொடுக்கின்றார்: இனிய குழந்தைகளே, கருணையுள்ளவர்களாக ஆகுங்கள். அப்போது உங்களால் சந்தோஷமற்றிருக்கும் ஆத்மாக்களைச் சந்தோஷமானவர்கள் ஆக்கமுடியும். நீங்கள் அவர்களுக்கு மிகவும் விரிவான கடிதங்களை எழுதவேண்டும். தந்தை கூறுகின்றார்: என்னையும் உங்கள் ஆஸ்தியையும் நினைவு செய்யுங்கள். ஒரேயொரு சிவபாபா மாத்திரமே புகழப்படுகின்றார். மக்கள் தந்தையின் புகழையேனும் அறியவில்லை. நீங்கள் ஒரு கடிதத்தை இந்தியிலும் எழுதலாம். குழந்தைகளாகிய உங்களுக்குச் சேவை செய்வதில் ஆர்வம் இருக்க வேண்டும். அனேக மக்கள் தற்கொலை செய்து கொள்ள முயற்சிக்கின்றார்கள். அவர்களுக்கு விளங்கப்படுத்துங்கள்: தற்கொலை செய்வது மிகப் பெரிய பாவமாகும். இப்போது சிவபாபாவே குழந்தைகளாகிய உங்களுக்கு ஸ்ரீமத்தைக் கொடுக்கின்றார். அவர் ஸ்ரீ ஸ்ரீ சிவபாபா ஆவார். அவர் உங்களை ஸ்ரீ இலக்ஷமி, ஸ்ரீ நாராயணனாக ஆக்குகின்றார். அவர் மாத்திரமே ஸ்ரீ ஸ்ரீ ஆவார். அவர் என்றுமே சக்கரத்தினுள் வருவதில்லை. நீங்கள் ஸ்ரீ எனும் பட்டத்தைப் பெறுகின்றீர்கள். இந்த நாட்களில் அனைவருக்கும் ஸ்ரீ என்றும் பட்டம் கொடுக்கப்படுகின்றது. அந்த விகாரமற்ற மக்களுக்கும் இந்த விகாரமுள்ள மக்களுக்கும் இடையில் மிகப் பெரிய வித்தியாசம் உள்ளது. இது பகலுக்கும் இரவுக்கும் உள்ள வித்தியாசமாகும். தந்தை தொடர்ந்தும் ஒவ்வொருநாளும் விளங்கப்படுத்துகின்றார்: முதலில் ஆத்ம உணர்வுடையவர் ஆகுங்கள். பின்னர் செய்தியை அனைவருக்கும் கொடுங்கள். நீங்களும் தூதுவரின் குழந்;தைகள் ஆவீர்கள். ஒரேஒருவரே அனைவருக்கும் ஜீவன் முக்தியை அருள்பவர் ஆவார். சமயத்தை ஸ்தாபித்தவர்கள் குரு என அழைக்கப்படமாட்டார்கள். ஒரேயொருவர் மாத்திரமே ஜீவன் முக்தியை அருள்பவர் ஆவார். அச்சா

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தந்தை தாயாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. நீங்கள் எவர் மீதும் விருப்பமின்மையையோ, வெறுப்பையோ கொண்டிருக்கக் கூடாது. கருணை கொண்டவராகி சந்தோஷமற்றிருக்கும் ஆத்மாக்களைச் சந்தோஷமாக்குகின்ற சேவையைச் செய்யுங்கள். தந்தையைப் போல மாஸ்டர் அன்புக் கடல் ஆகுங்கள்.

2. நீங்கள் கடவுளின் குழந்தைகள் எனும் போதையிலும், சந்தோஷத்திலும் நிலைத்திருங்கள். ஒருபோதும் மாயையின் தீய சகவாசத்திற்குள் செல்லாதீர்கள். ஆத்ம உணர்வுடையவர்களாகி ஞானத்தைக் கிரகியுங்கள்.

ஆசீர்வாதம்:
விழிப்புணர்வின் ஆழியை அழுத்தி, சுயத்திற்கும் நன்மை அளித்து ஏனையோருக்கும் நன்மை அளிக்கும் வெற்றி சொரூபம் ஆகுவீர்களாக.

உங்கள் விழிப்புணர்வே உங்கள் ஸ்திதியின் அடிப்படையாகும். ~நான் தந்தைக்குரியவன், தந்தை என்னுடையவர்| என்ற இந்த சக்திமிக்க விழிப்புணர்வை எப்பொழுதும் கொண்டிருங்கள். இந்த விழிப்புணர்வு இருக்கும் போது, உங்கள் ஸ்திதி சக்தி வாய்ந்ததாக இருப்பதுடன் நீங்கள் ஏனையோரையும் சக்தி வாய்ந்தவர்கள் ஆக்குவீர்கள். ஓர் ஆழியை அழுத்தியதும் அங்கு வெளிச்சம் இருக்கும். அதே போன்று இந்த விழிப்புணர்வும் ஓர் ஆழியாகும். கவனம் செலுத்துதல் எனும் ஆழி எப்பொழுதும் போடப்பட்டிருக்கட்டும். நீங்கள் தொடர்ந்தும் உங்களுக்கும் ஏனையோருக்கும் நன்மை செய்வீர்கள். உங்களுக்குப் புதிய பிறவி கிடைத்திருப்பதால் புதிய நினைவுகள் இருக்கட்டும். கடந்த ஞாபகங்கள் முடிவடையட்டும். இந்த வழிமுறையைப் பயன்படுத்துவதன் மூலம் வெற்றி சொரூபமாக இருப்பதன் ஆசீர்வாதத்தை நீங்கள் பெறுவீர்கள்;.

சுலோகம்:
அதீந்திரிய சுகத்தை அனுபவம் செய்வதற்கு, உங்கள் சாந்தி சொரூப ஸ்திதியில் ஸ்திரமாக நிலைத்திருங்கள்.
 


மாதேஸ்வரியின் பெறுமதிமிக்க மேன்மையான வாசகங்கள்
1) ஞானம் நிறைந்த குழந்தைகள் தவறுகள் செய்யும் போது நூறு மடங்கு தண்டனை.

நீங்கள் இந்த அழிவற்ற ஞானயாகத்திற்கு வந்துள்ளீர்கள். அத்துடன் பரமாத்மாவின் கரத்தை தனிபட்ட முறையில் பிடித்துக் கொண்டீர்கள். எனவே நீங்கள் ஏதாவது ஒரு காரணத்தினால் எந்தவொரு பாவத்தைச் செய்தீர்களாயின் அதற்குரிய தண்டனை மிகக் கடுமையாக இருக்கும். நீங்கள் ஞானத்தை எடுக்கும்போது 100வீதம் நன்மை கிடைக்கிறதோ, அதே போன்று ஒரு தவஎறு செய்துவிட்டால் நூறு மடங்கு தண்டனையும் இருக்கும். எனவே நீங்கள் மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும். நீங்கள் தொடர்ந்தும் தவறுகள் செய்தீர்களாயின் நீங்கள் பலவீனமாகி விடுவீர்கள். எனவே தொடர்ந்தும் உங்கள் சிறிய பெரிய தவறுகளைச் சோதித்துப் பார்த்து எதிர் காலத்திற்காக முன்னெச்சரிக்கையுடன் இருந்து தொடர்ந்தும் முன்னேறுங்கள். பாருங்கள், ஒரு விவேகமுள்ள பெரிய நபர் ஒரு தீயதைச் செய்யும்போது அவருக்குப் பாரிய தண்டனை கிடைக்கிறது. ஆனால் ஏற்கனவே கீழே விழுந்த ஒருவர் தீயதைச் செய்யும் போது அவருக்கு அந்தளவு தண்டனை கிடைப்பதில்லை. நீங்கள் இப்பொழுது கடவுளின் குழந்தைகள் என அழைக்கப்படுகிறீர்கள். எனவே அதற்கேற்ப நீங்கள் தெய்வீகக் குணங்களையும் கிரகிக்க வேண்டும். நீங்கள் உண்மையான தந்தையிடம் வந்துவிட்டீர்கள். எனவே நீஙகள் நேர்மையாகவும் விசுவாசமாகவும் இருக்கவேண்டும்.

2) எவ்வாறு கடவுள் ஜனிஜனன்ஹார் (அனைத்தையும் அறிந்தவர்) ஆவார்?

கடவுள் ஜனிஜனன்ஹார் என மக்கள் கூறுகிறார்கள். இதன் அர்த்ம் கடவுள் அனைவருடைய இதயத்திலும் என்ன இருக்கிறது என்பதை அறிவார் என்பதல்ல. ஆனால் அவர் உலகின் படைப்பின் ஆரம்பம், மத்தி, இறுதியை அறிவார். படைப்பவராகிய கடவுள் உலகைப் பராமரித்து பின்னர் அழித்துவிடுவார் என்பதல்ல. இதன் அர்த்தம் கடவுள் உலகைப் படைத்து உணவூட்டிப் பின்னர் கொன்றுவிடுவார் என்பதல்ல. மனிதர்கள் தங்கள் கர்மக்கணக்கிற்கேற்ப பிறப்பெடுக்கிறார்கள். இதன் அர்த்தம் கடவுள் அமர்ந்திருந்து அவர்களுடைய நல்ல,தீய எண்ணங்களை அறிவார் என்பதல்ல. ஞானமில்லாதவர்களின் இதயத்தில் என்ன இருக்கிறது என்பதை அவர் அறிவார். அவர்கள் நாள் முழுவதும் மாயையைப் பற்றிய எண்ணங்களையே கொண்டிருப்பார்கள். ஆனால் ஞானமுள்ள குழந்தைகள் தூய எண்ணங்களைத் தமக்குள் கொண்டிருப்பார்கள். எவ்வாறாயினும் அவர் அமர்ந்திருந்து ஒவ்வொரு எண்ணத்தையும் அவதானிக்க மாட்டார். ஆனால் அனைத்து ஆத்மாக்களும் இப்பொழுது சீரழிந்த நிலையை அடைந்துவிட்டார்கள் என்பதைக் கடவுள் அறிவார்.எனவே ஜனிஜனன்ஹார்(கடவுள்) அவர்களுக்கு எவ்வாறு சற்கதி அருள்வது என்பதன் முழு ஞானத்தையும் கொண்டிருக்கிறார். தங்கள் செயல்களில் சீரழிந்து விட்டவர்களுக்கு எவ்வாறு மேன்மையான செயல்களைச் செய்வது, எவ்வாறு கர்ம பந்தனங்களிலிருந்து விடுபடுவது என்பது கற்பிக்கப்பட வேண்டும். கடவுள் இதை அறிவார். கடவுள் கூறுகிறார்: படைப்பவராகிய என்னைப் பற்றிய ஞானத்தையும், எனது படைப்பின் ஆரம்பம், மத்தி, இறுதியையும் நான் அறிவேன். இந்த விழிப்புணர்வை உங்கள் அனைவருக்கும் நான் வழங்குகிறேன்.இப்பொழுது குழந்தைகளாகிய நீங்கள் அந்தத் தந்தையின் நினைவில் சதா நிலைத்திருக்க வேண்டும். அப்பொழுதே நீங்கள் பாவங்களிலிருந்து விடுபடுவீர்கள். அதாவது அப்பொழுதே நீங்கள் அமரத்துவ பூமிக்குச் செல்வீர்கள். இவை அனைத்தையும் அறிந்திருப்பதே ஜனிஜனன்ஹாராக இருப்பதாகும். அச்சா