09.04.21        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்:
இனிய குழந்தைகளே, தந்தையைப் போல் அழகானவர் ஆகுவதற்கு, உங்களைப் புள்ளி வடிவான ஓராத்மாவாகக் கருதிப் புள்ளியாகிய தந்தையை நினைவு செய்யுங்கள்.

கேள்வி:
குழந்தைகளாகிய நீங்கள் ஒவ்வொருவரும் நினைவில் இருப்பதற்கு ஏன் ஆழமான, மறைமுகமான முயற்சியைச் செய்ய வேண்டும்?

பதில்:
ஆத்மாக்களாகிய நீ;ங்கள்; நினைவில் நிலைத்திருக்காது பாவாத்மாக்களில் இருந்து புண்ணியாத்மாக்களாக முடியாது. நீங்கள் மறைமுகமான நினைவில் இருந்து ஆத்ம உணர்விற்கு வரும் போது மாத்திரமே, பாவங்கள் அழிக்கப்படும். நினைவும் உங்களைத் தர்மராஜின் தண்டனையில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்கான ஒரு வழிமுறையாகும். நினைவு செய்வதிலேயே, மாயை புயல்களை உருவாக்குகிறாள். ஆகவே, நினைவில் இருப்பதற்கு மறைமுகமான முயற்சியைச் செய்யுங்கள். இதன் மூலம் உங்களால் இலக்ஷ்மி நாராயணன் போல் அழகானவர்கள் ஆக முடியும்.

பாடல்:
ஓம் நமசிவாய....

ஓம் சாந்தி.
இதுவே அனைவரதும் தந்தையானவரின் புகழாகும். கடவுள் அல்லது தந்தையே நினைவு செய்யப்படுகின்றார். அவரே தாயும் தந்தையும் என்றழைக்கப்படுகின்றார். அவர் தந்தையாகிய கடவுள் என்றும் அழைக்கப்படுகின்றார். மனிதர்கள் அனைவரும் கடவுளாகிய தந்தை என்றழைக்கப்படுவதில்லை. லௌகீகத் தந்தையும் பாபா என்றே அழைக்கப்படுகின்றார். ஓர் லௌகீகத் தந்தையைக் கொண்டிருப்பவரும் இவ்வுலகிற்கு அப்பால் இருக்கும் தந்தையையே நினைவு செய்கின்றார். உண்மையில், ஆத்மாவே நினைவு செய்கின்றார், அவர் தனது லௌகீகத் தந்தையையும் நினைவு செய்கின்றார். அவ்வாத்மாவிற்குத் தனது சொந்த வடிவையோ அல்லது தொழிலையோ தெரியாது. ஆத்மாவிற்குத் தன்னையே தெரியாத போது, அவருக்கு எவ்வாறு கடவுளாகிய தந்தையைத் தெரியும்? அனைவருக்கும் தமது சொந்த லௌகீகத் தந்தையையும், அவரிடம் இருந்தே ஆஸ்தி பெறப்படுகின்றது என்பதும் தெரியும். அவர் வேறு எதற்காக நினைவு செய்யப்படுகின்றார்? நீங்கள் நிச்சயமாகப் பரலோகத் தந்தையிடம் இருந்து உங்கள் ஆஸ்தியை பெறுவீர்கள். கூறப்டுகின்றது: ஓ கடவுளே, தந்தையே! மக்கள் அவரைக் கருணைகாட்டுமாறும், மன்னிக்குமாறும் கேட்கின்றார்கள், ஏனெனில் அவர்கள் தொடர்ந்தும் பாவம் செய்து கொண்டே இருக்கின்றார்கள். இதுவும் நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், ஆத்மாவையும் பரமாத்மாவையும் அறிந்து கொள்வது என்பது கடினமான பாடமாகும். இதுவே அனைத்திலும் இலகுவானதும், ஆனால் மிகவும் கடினமானதும் ஆகும். விஞ்ஞானம் போன்றவற்றின் மூலம் மக்களுக்குச் சந்திரமண்டலம் போன்றவற்றிற்குச் செல்வதற்காக எவ்வளவு தான் கற்றுக் கொடுக்கப்பட்டாலும் இந்த ஞானத்துடன் ஒப்பிடும் பொழுது அது எதுவுமே அல்ல. தந்தையையும் தன்னையும் அறிந்து கொள்வது என்பது மிகவும் கடினமான விடயமாகும். பிரம்ம குமாரர்கள் குமாரிகள் என உங்களை அழைத்துக் கொள்ளும் நீங்கள் அனைவரும் ஆத்மாக்கள் என்ற நம்பிக்கையைக் கொண்டிருக்க வேண்டும். ஆத்மாக்களாகிய நீங்கள் அனைவரும் புள்ளிகள் என்பதையும் தந்தையும் ஒரு புள்ளி என்பதையும் நீங்கள் மறந்து விட்டீர்கள். இது ஒரு கடினமான பாடமாகும். நீங்கள் ஓராத்மா என்பதை மறந்து விடுவதால் நீங்கள் தந்தையையும் நினைவு செய்ய மறக்கின்றீர்கள். உங்களிடம் ஆத்ம உணர்வுப் பயிற்சியும் இல்லை. ஆத்மா ஒரு புள்ளி, அவரில் 84 பிறவிகள் பதியப்பட்டுள்ளன. ஆத்மா வித்தியாசமான சரீரங்கள் எடுத்து ஒரு பாகத்தை நடிக்கின்றார் என்பதை நீங்கள் மீண்டும் மீண்டும் மறக்கின்றீர்கள். இதுவே புரிந்து கொள்ளப்பட வேண்டிய பிரதான விடயமாகும். ஆத்மா, பரமாத்மா பற்றிய புரிந்துணர்வைத் தவிர ஏனைய அனைத்து ஞானமும் அனைவரது புத்தியிலும் புகுகின்றது. நாம் 84 பிறவிகளை எடுத்துச் சூரிய வம்சத்தின் ஓர் அம்சமாகவும் சந்திர வம்சத்தின் ஓர் அம்சமாகவும் ஆகுகின்றோம். இந்தச் சக்கரமானது மிகவும் இலகுவானது ஆகவே நீங்களே அதனைப் புரிந்து கொள்கின்றீர்கள். எவ்வாறாயினும், நீங்கள் ஓராத்மா என்பதில் நம்பிக்கையை வைத்துத் தந்தையை நினைவு செய்வதைக் காட்டிலும், நாடகத்தை மாத்திரம் புரிந்து கொள்வதில் அதிகம் பயனில்லை. ஆத்மாவாகிய நானே ஒரு நட்சத்திரம். தந்தையும் கூட மிகவும் சூட்சுமமான ஒரு புள்ளியே. அவர் மாத்திரமே அனைவருக்கும் ஜீவன்முக்தியை அருள்கின்றார். அவரை மாத்திரம் நினைவு செய்வதனால் உங்கள் பாவங்கள் அழிக்கப்படுகின்றன. வேறு எவருமே இவ்வாறு சதா அவரை நினைவு செய்வதில்லை. நீங்கள் ஆத்ம உணர்வுடையவர்கள் ஆகுவதும் இல்லை. நீங்கள் மீண்டும் மீண்டும் : நான் ஓராத்மா என நினைவு செய்ய வேண்டும். தந்தையின் கட்டளைகளாவன: என்னை நினைவு செய்யுங்கள் அதனால் உங்கள் பாவங்கள் அழிக்கப்படும். நான் ஒரு புள்ளி. நான் இங்கு வந்து ஒரு நடிகனானேன். நான் ஐந்து விகாரங்கள் என்ற துருவினால் மூடப்பட்டிருக்கின்றேன். நான் கலியுகத்தில் இருக்கின்றேன். நான் இப்பொழுது சத்தியயுகத்திற்குச் செல்ல வேண்டும். ஆகவே தந்;தையை மிகுந்த அன்புடன் நினைவு செய்யுங்கள். தந்தையை இவ்விதம் நினைவு செய்வதன் மூலம் துருவானது அகற்றப்படுகின்றது. இதற்கு முயற்சி தேவை. பலரும் தாம் செய்யும் சேவையைப் பற்றித் தம்பட்டம் அடிக்கின்றார்கள், அவர்கள் கூறுகின்றார்கள்: நான் இன்று இந்தச் சேவையைச் செய்தேன் இதனால் பலரும் கவரப்பட்டார்கள். எவ்வாறாயினும், அவர்கள் ஒரு சிறிதளவேனும் ஆத்மா பரமாத்மா என்ற ஞானத்தின் மூலம் கவரப்;படவில்லை என்பதைச் சிவபாபா புரிந்து கொள்கின்றார். பாரதம் எவ்வாறு நரகத்தில் இருந்து சுவர்க்கம் ஆகுகின்றது, நீங்கள் எவ்வாறு 84 பிறவிகளையும் எடுக்கின்றீர்கள், நீங்கள் எவ்வாறு சதோ, ரஜோ மற்றும் தமோ நிலைகளின் ஊடாகச் செல்கின்றீர்கள் என்ற ஞானத்தை மாத்திரம் அவர்கள் செவிமடுத்து அதன் ஈர்ப்புக்கு உள்ளாகுகின்றார்கள். அவர்கள் கடவுள் அசரீரியானவர் என்பதையும் கூடப் புரிந்து கொள்கின்றாகள். எவ்வாறாயினும், அவர்களில் எவருக்கும் தாம் ஆத்மாக்கள் என்பதோ, தம்மில் 84 பிறவிக்கான பாகங்கள் பதியப்பட்டுள்ளன என்பதோ, தந்தை ஒரு புள்ளி, அவர் ஞானம் அனைத்தையும் கொண்டிருக்கின்றார், தாம் அவரையே நினைவு செய்ய வேண்டும் என்பதோ தெரியாது. அவர்கள் பிரதான விடயத்தையே புரிந்து கொள்வதில்லை. தந்தை மாத்திரமே உங்களுக்கு உலகின் புவியியல் மற்றும் வரலாற்றைப் பற்றிய ஞானத்தைக் கொடுக்கின்றார். அரசாங்கமும் உலகப் புவியியலும் வரலாறும் இருக்க வேண்டும் என்றே விரும்புகின்றது. பின்வரும் விடயங்கள் அவை அனைத்திலும் மிகவும் சூட்சுமமானவையாகும் : ஆத்மா என்றால் என்ன, எவ்வாறு அவரில் ஒரு அழிக்கப்பட முடியாத பாகமானது பதியப்பட்டுள்ளது! எவருமே இந்த விடயங்களை நினைவு செய்தல் என்ற யோகத்திலோ தம்மை ஆத்மாக்களாகக் கருதித் தந்தையை நினைவு செய்வதால் பாவங்கள் அழியும் என்பதிலோ தம்மை ஈடுபடுத்திக் கொள்வதில்லை. அவர்கள் நினைவில் இருந்தார்களாயின், அவர்களால் மிகவும் இனிமையானவர்களாக முடியும். இலஷ்மியும் நாராயணனும் எவ்வளவு இனிமையானவர்கள் எனப் பாருங்கள்! இங்கிருக்கும் மக்கள் எப்படிப்பட்டவர்கள் எனப் பாருங்கள்! அவர்கள் கூறுகின்றார்கள்: என்னிடம் எவ்விதமான நற்குணங்களும் இல்லை. அவர்கள் கூறுகின்றார்கள்: நாங்கள் சீரழிந்து அழுக்கானவர்களாக இருக்கின்றோம், ஆனால் நீங்கள் மிகவும் தூய்மையாக இருக்கின்றீர்கள்! நீங்கள் ஓராத்மா என்ற நம்பிக்கையைக் கொண்டிருந்து தந்தையை நினைவு செய்யும் பொழுது உங்களால் வெற்றியை அடைய முடியும். இல்லாவிடின் நீங்கள் சொற்ப அளவு வெற்றியையே அடைகின்றீர்கள். சிலர் தமக்கு உலக வரலாறும் புவிச்சரிதவியலும் தெரிந்ததால், தம்மிடம் மிகச் சிறந்த ஞானம் இருக்கின்றது என நினைக்கின்றார்கள். எவ்வாறாயினும், அவர்கள் தமது யோக அட்டவணையைக் காட்டுவதும் இல்லை. இந்த ஸ்திதியில் எவரும் இருப்பதுவும் இல்லை, எவரும் தம்மை ஒராத்மாவாகக் கருதித் தந்தையை நினைவு செய்வதுவும் இல்லை. பலரும் இந்தப் பயிற்சியைக் கொண்டிருப்பதில்லை. குழந்தைகள் தமது புத்தியில் சக்கரம் பற்றிய ஞானத்தையே சுழற்றுகின்றார்கள் என்றே தந்தை விளங்கப்படுத்துகின்றார். உங்களில் மிகச் சிலரே இதனைப் பயிற்சி செய்கின்றீர்கள் : நான் ஓராத்மா, நான் தந்தையுடன் யோகம் செய்வதனால் கலியுகத்தில் இருந்து சத்தியயுகத்திற்குள் செல்வேன். ஆத்மாவாகிய நான் தந்தையை அறிந்து கொள்ள வேண்டும். நான் அவரின் நினைவில் இருக்கவும் வேண்டும். இதனைப் பலரும் பயிற்சி செய்வதில்லை. பலரும் வந்து இது மிகவும் நல்லது எனக் கூறுகின்றார்கள். அவர்கள் தாம் எவ்வளவு துருவினால் மூடப்பட்டுள்ளார்கள் என்பதைப் புரிந்து கொள்வதில்லை. மிக அழகானவர்களில் இருந்து அவர்கள் அசிங்கமானவர்கள் ஆகிவிட்டார்கள். அவர்களால் எவ்வாறு மீண்டும் அழகானவர்கள் ஆக முடியும்? வேறு எவருமே இதனைப் புரிந்து கொள்வதில்லை. இது வரலாற்றையும், புவிச்சரிதவியலையும் பற்றி மாத்திரம் அறிந்து கொள்ளும் விடயமன்று. உங்களால் எவ்வாறு தூய்மையாக முடியும்? தண்டனையில் இருந்து தப்புவதற்கான வழி நினைவில் இருப்பதாகும். உங்கள் யோகம் மிகச்சரியானதாக இல்லாவிடின், தர்மராஜ்ஜிடம் இருந்து தண்டனை கிடைக்கும். இது வேறு எவராலும் எடுத்துக் கொள்ள முடியாத மிகவும் முக்கியமான பாடமாகும். அவர்கள் தம்மை ஞானத்தில் மிகவும் கெட்டிக்காரர்களாகக் கருதுகின்றார்கள். அதில் எவ்விதச் சந்தேகமும் இல்லை. பிரதான விடயம் யோகமாகும். பலரும் யோகத்தில் மிகவும் பலவீனமானவர்களாகவே இருக்கின்றார்கள். இதனாலேயே தந்தை கூறுகின்றார்: மிகவும் எச்சரிக்ககையாக இருங்கள்! ஒரு பண்டிதரைப் போல் மாத்திரம் இருக்காதீர்கள். நான் ஓர் ஆத்மா, நான் தந்தையை நினைவு செய்ய வேண்டும். தந்தை ஒரு கட்டளையைக் கொடுத்திருக்கின்றார்: மன்மனாபவ! இதுவே மகாமந்திரமாகும். உங்களை ஒரு நட்சத்திரமாகக் கருதுங்கள். தந்தையையும் ஒரு நட்சத்திரமாகக் கருதி அவரை நினைவு செய்யுங்கள். உங்களுக்கு முன்னால் வரும் தந்தையின் வடிவம் ஒன்றும் பெரியதல்ல. ஆத்ம உணர்வுடையவர்கள் ஆகுவதற்கே முயற்சி தேவை. ஒரேயொரு தம்பதியினரே உலகத்தின் சக்கரவர்த்தி சக்கரவர்த்தினியாகுகின்றார்கள். அவர்கள் பல்லாயிரக்கணக்கான பிரஜைகளைக் கொண்டிருப்பார்கள். பல பிரஜைகள் இருக்கின்றார்கள். வரலாற்றையும் புவியியலையும் அறிந்து கொள்வது இலகுவானது ஆனால் நீங்கள் உங்களை ஓராத்மா என நினைத்துத் தந்தையை நினைவுசெய்யும் பொழுது உங்களால் தூய்மையாக முடியும். இந்தப் பயிற்சியானது மிகவும் கடினமானதாகும். நீங்கள் நினைவில் இருப்பதற்கு அமரும் பொழுது, பல புயல்கள் தடைகளை உருவாக்குகின்றன. நீங்கள் பெருமளவு சிரமத்துடனே அரை மணித்தியாலத்திற்கேனும் அமர்ந்து இருந்து நிரந்தரமான நினைவைக் கொண்டிருக்கின்றீர்கள். நீங்கள் மீண்டும் மீண்டும் மறந்து விடுகின்றீர்கள். இதற்கு உண்மையான மறைமுகமான முயற்சி தேவையாகும். சக்கரத்தின் இரகசியத்தைப் புரிந்து கொள்வது மிகவும் இலகுவானதாகும். ஆத்ம உணர்விற்கு வந்து தந்தையை நினைவு செய்து பின்னர் எவ்வாறு செயலில் ஈடுபடுவது என்பதை உங்களில் ஒரு சிலரே புரிந்து கொள்கின்றீர்கள். தந்தையின் நினைவின் மூலமே நீங்கள் தூய்மையாகுவீர்கள். நீங்கள் பின்னர் நோயில் இருந்து விடுபட்ட சரீரத்தைப் பெறுவதுடன் நீண்ட ஆயுளையும் கொண்டிருப்பீர்கள். உலக வரலாற்றையும் புவியியலையும் மாத்திரம் விளங்கப்படுத்துவதன் மூலம் உங்களால் வெற்றி மாலையின் ஒரு மணியாக முடியாது. நினைவின் மூலமே உங்களால் ஒரு மணியாக முடியும். வேறு எவராலுமே இந்த முயற்சியைச் செய்ய முடியாது. நீங்கள் நினைவில் இருப்பதில்லை என்பதை நீங்களே புரிந்து கொள்கின்றீர்கள். மிகச்சிறந்த மகாராத்திகளும் இந்தப் பாடத்தில் பின்தங்கியவர்களாகவே இருக்கின்றார்கள். பிரதானமான விடயத்தை எவ்வாறு விளங்கப்படுத்துவது என்பதே உங்களுக்குத் தெரியாது. இப்பாடம் மிகவும் கடினமானதாகும். அவர்கள் சக்கரத்தின் காலப்பகுதியை நீடித்திருக்கின்றார்கள். அது 5000 வருடங்கள் மாத்திரமே என நீங்கள் நிரூபிக்கின்றீர்கள். எவ்வாறாயினும், உங்களுக்கு ஆத்மாவினதும் பரமாத்மாவினதும் இரகசியங்கள் தெரியாது, நீங்கள் அவரை நினைவு செய்வதுவும் இல்லை. இதனாலேயே உங்கள் ஸ்திதி தளம்புகின்றது. பெருமளவு சரீர உணர்வு இருக்கின்றது. நீங்கள் ஆத்ம உணர்வுடையவர்கள் ஆகுவதனாலேயே உங்களால் வெற்றி மாலையின் மணியாக முடியும். உலகின் புவியியலையும், வரலாற்றையும் மாத்திரம் விளங்கப்படுத்துவதனால் உங்களால் மாலையில் நெருக்கமாக (குஞ்சமாக) வரலாம் என்பதல்ல. இல்லை, அனைத்திற்கும் முதலில், ஆத்மாக்களாகிய நீங்கள் அனைவரும் சின்னஞ் சிறிய புள்ளிகள் என்றும் உங்களில் 84 பிறவிக்கான பாகங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதையும் உங்கள் புத்தி அறிந்திருக்க வேண்டும். பின்னர் சக்கரத்தை நினைவு செய்யங்கள். பிரதான விடயம் யோகம் ஆகும். ஒரு யோகி ஸ்திதியானது தேவைப்படுகின்றது. ஒரு பாவாத்மாவில் இருந்து புண்ணியாத்மா ஆகுங்கள். ஓராத்மாவானவர் யோகசக்தியின் மூலம் தூய்மையாகுகின்றார். யோகசக்தியைக் கொண்டவர்கள் மாத்திரமே தர்மராஜின் தண்டனையில் இருந்து தப்புவார்கள். இந்த முயற்சியைச் செய்பவர்கள் சொற்ப அளவினரே. மாயையின் பல புயல்களும் வரும். இதற்கு மிகவும் ஆழமான, மறைமுகமான முயற்சி தேவை. இலக்ஷ்மி நாராயணன் ஆகுவது என்பது உங்கள் மாமியார் வீட்டிற்குச் செல்வது போன்றதல்ல! நீங்கள் இந்தப் பயிற்சியை விருத்தி செய்யும் பொழுதே, நீங்கள் நடக்கும் பொழுதும் உலாவித்; திரியும் பொழுதும், தந்தையை நினைவு செய்வீர்கள். இதுவே யோகம் எனப்படுகின்றது. இல்லாவிட்டால், சிறு குழந்தைகளால் கூட இந்த ஞான விடயங்களைப் புரிந்து கொள்ள முடியும். யுகங்கள் முதலியன படங்களில் காட்டப்பட்டுள்ளன. அது பொதுவானது. மக்கள் மங்களகரமானதொரு பணியை ஆரம்பிக்கும் பொழுது அவர்கள் பிள்ளையார் சுழியைக் (சுவஸ்திகாவை) கீறுகிறார்கள். அதுவே சத்திய, திரேதா, துவாபர கலியுகங்களின் அடையாளமாகும். உச்சியில் குறுகிய சங்கமயுகம் இருக்கின்றது. ஆகவே, அனைத்திற்கும் முதலில் நீங்கள் உங்களை ஒராத்மாவாகக் கருதித் தொடர்ந்தும் தந்தையை நினைவு செய்வீர்களாயின், அந்த அமைதி எங்கும் பரவும். யோகத்தின் மூலமே பாவங்கள் அழியும். முழு உலகுமே ஆத்மாவையும் பரமாத்மாவையும் மறந்து விட்டது. சிலர் கடவுள் ஆயிரம் சூரியன்களை விடவும் பிரகாசமானவர் எனக் கூறுகின்றார்கள். எவ்வாறாயினும், அவர்கள் ஆத்மாவே பரமாத்மா எனக் கூறுவதனால் எவ்வாறு அது சாத்தியமாகும்? எவ்வாறு இரண்டும் ஒன்றாக முடியும்? பருமனில் வித்தியாசம் இருக்க முடியாது. நீங்களும் இதனை விளங்கப்படுத்த வேண்டும். ஆத்மாவின் வடிவம் ஒரு புள்ளியாகும். ஆத்மாவே பரமாத்மாவானால், அவரும் ஒரு புள்ளியே. இதில் எவ்விதமான வித்தியாசமும் இல்லை. அனைவரும் கடவுளானால் அனைவரும் படைப்பவராவார். ஒரேயொரு தந்தை மாத்திரமே அனைவருக்கும் ஜீவன்முக்தியைக் கொடுக்கின்றார். அனைவரும் தமது சொந்தப் பாகத்தைப் பெற்றிருக்கின்றார்கள். இது புத்தியில் புதியச் செய்யப்பட வேண்டும். இதுவும் புரிந்து கொள்ளப்பட வேண்டிய ஒரு விடயமாகும். தந்தை கூறுகின்றார்: என்னை நினைவு செய்யுங்கள் அப்பொழுது உங்கள் துருவானது அகற்றப்படும். இதற்கு முயற்சி தேவை. நீங்கள் அரைக் கல்பமாகச் சரீர உணர்விலேயே இருந்தீர்கள். சத்தியயுகத்தில் நீங்கள் ஆத்ம உணர்வில் இருந்த போதிலும் உங்களுக்குத் தந்தையையோ ஞானத்தையோ தெரியாது. தற்சமயத்தில் நீங்கள் ஞானத்தைப் பெறுகின்றீர்கள், பின்னர் அது மறைந்து விடுகின்றது. அங்கு நீங்கள் ஆத்மாக்கள் என்றும் நீங்கள் ஒரு சரீரத்தை நீக்கிவிட்டு இன்னொன்றை எடுக்கின்றீர்கள் என்ற ஞானத்தை மாத்திரம் நீங்கள் கொண்டிருக்கின்றீர்கள். நீங்கள் ஒரு பாகத்தை நடிக்கின்றீர்கள். அதில் கவலைப்படுவதற்கு என்ன இருக்கின்றது? நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் பாகத்தை நடிக்க வேண்டும். அழுவதால் என்ன பயன்? இது விளங்கப்படுத்தப்படுகின்றது ஏனெனில் இதனை அவர்கள் புரிந்து கொள்ளும் பொழுது ஒரு சிறிது அமைதியையேனும் அனுபவம் செய்வார்கள். அவர்கள் தாம் இதனைப் புரிந்து கொள்ளும் பொழுது அவர்களால் இதனை மற்றவர்களுக்கும் விளங்கப்படுத்த முடியும். முதியவர்கள் மற்றவர்களுக்கும் விளங்கப்படுத்துகின்றார்கள்: நீங்;கள் அழுவதால் அவர் மீண்டும் வந்துவிடப்போவதில்லை. ஆத்மா சென்று விட்டபின்னர் அழுவதால் என்ன பயன்? அஞ்ஞான மார்க்கத்திலும் கூட அவர்கள் இதனை விளங்கிக் கொள்கின்றார்கள். எவ்வாறாயினும், ஆத்மா என்றால் என்ன என்றோ பரமாத்மா என்றால் என்ன என்றோ அவர்கள் விளங்கிக் கொள்வதில்லை. ஆத்மாக்களில் கலப்படம் கலந்திருக்கின்றது, ஆனால் அவர்கள் ஆத்மாக்கள் செயல்களின் தாக்கத்திற்கு அப்பாற்பட்டவர்கள் என நினைக்கின்றார்கள். இவை மிகவும் நுட்பமான விடயங்களாகும். பல குழந்தைகள் நினைவில் நிலைத்திருப்பதில்லை என்பதை பாபாவும் புரிந்து கொள்கின்றார். மற்றவர்களுக்கு விளங்கப்படுத்துவதில் மாத்திரம் என்ன உள்ளது? அவர்கள் இதனால் கவரப்பட்டார்கள் ஆனால் அவர்கள் எவ்விதமான நன்மையையும் இதில் இருந்து அனுபவம் செய்யவில்லை. அவர்கள் ஆத்மாவினதும், பரமாத்மாவினதும் புரிந்துணர்வினைக் கொண்டிருக்கும் பொழுதே அவர்களால் உண்மையாக அவரது குழந்தை என்பதை புரிந்து கொள்ள முடியும். தந்தையே தூய்மையாக்குபவராவார். அவர் வந்து எங்களைத் துன்பத்தில் இருந்து விடுதலையாக்குகின்றார். அவரும் ஒரு புள்ளி மட்டுமே. நீங்கள் சதா தந்தையை நினைவு செய்ய வேண்டும். எவ்வாறாயினும், வரலாற்றையும் புவியியலையும் மாத்திரம் அறிந்து கொள்வது ஒரு பெரிய விடயமல்ல. அவர்கள் அனைத்தையும் புரிந்து கொண்ட போதிலும், ஒருவரை ஆத்மா எனக் கருதி அந்த ஸ்திதியில் நிலைத்திருப்பதற்குத் தொடர்ந்தும்; முயற்சி தேவைப்படுகின்றது. தந்தை வந்தே ஆத்மா மற்றும் பரமாத்மாவைப் பற்றிக் கூறுகின்றார். உலக சக்கரத்தைப் புரிந்து கொள்வது மிகவும் இலகுவானதாகும். அமர்ந்திருக்கும் பொழுதும் உலாவித் திரியும் பொழுதும், ஆத்ம உணர்வில் இருப்பதற்கு இயன்றளவு முயற்சி செய்யுங்கள். ஆத்ம உணர்வுடையவர்கள் மிக அமைதியாகவே இருப்பார்கள், அவர்கள் தாம் மௌனத்திற்குள் செல்ல வேண்டும் என்றும் தாம் சென்று மௌன தாமத்தில் இருக்கவேண்டும் என்றும் தமது பாகங்கள் இப்பொழுது முடிவிற்கு வருகின்றன என்றும் அவர்கள் புரிந்து கொள்கின்றார்கள். அவர்கள் தந்தையின் வடிவம் ஒரு நுண்ணிய புள்ளி எனக் கருதுகின்றார்கள். அவர் ஒரு பெரிய லிங்கமல்ல. பாபா மிகவும் நுண்ணியவர். அவர் மாத்திரமே ஞானம் நிறைந்தவரும், அனைவருக்கும் ஜீவன்முக்தியை அருள்பவரும் ஆவார். ஆத்மாவாகிய நானும் ஞானம் நிறைந்தவனாகுகின்றேன். நீங்கள் அத்தகைய எண்ணங்களைக் கொண்டிருக்கும் பொழுதே உங்களால் உயர்ந்ததோர் அந்தஸ்தைப் பெற்றுக் கொள்ள முடியும். ஆத்மாவைப் பற்றியோ, பரமாத்மாவைப் பற்றியே இவ்வுலகில் இருப்பவர்கள் எவருக்குமே தெரியாது. பிராமணர்களாகிய நீங்கள் இப்பொழுது இதனைப் புரிந்து கொள்கின்றீர்கள். சந்நியாசிகள் கூட இதனைப் புரிந்து கொள்வதில்லை. அல்லது அவர்கள் வந்து இதனைப் புரிந்து கொள்ளப் போவதுமில்லை. அவர்கள் தமது சொந்த சமயத்திற்குள் செல்வார்கள். அவர்கள் தமது கணக்கை தீர்த்து விட்டு திரும்பிச் செல்வார்கள். இந்த முயற்சியைச் செய்வதன் மூலம் மாத்திரமே நீங்கள் உங்கள் ஆஸ்தியைத் தந்தையிடம் இருந்து பெற்றுக் கொள்வீர்கள். நீங்கள் இப்பொழுது ஆத்ம உணர்வுடையவர்கள் ஆக வேண்டும். ஆத்மாவிலேயே இதயம் (மனம்) இருக்கின்றது. ஆத்மா இதயத்தைத் தந்தையுடன் இணைத்துக் கொள்ள வேண்டும். இதயம் சரீரத்தில் இல்லை. சரீரம் பௌதீக புலனுறுப்புக்களையே கொண்டிருக்கின்றது. தனது இதயத்தை இணைத்துக் கொள்வது ஆத்மாக்களாகிய உங்களுடைய கடமையாகும். உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதி உங்கள் இதயத்தைத் தந்தையுடன் இணைத்துக் கொள்ளுங்கள். ஓராத்மாவானவர் மிகவும் சூட்சுமமானவர். அவரே ஒரு பாகத்தை நடிக்கின்றார். இதுவே இயற்கை. அத்தகைய அழிக்கமுடியாத பாகமொன்று அத்தகைய நுண்ணிய ஆத்மாவில் பதியப்பட்டுள்ளது! அந்தப் பாகம் அழிக்கப்படவே முடியாததொன்றாகும். அது மிகவும் சூட்சுமமானதாகும். நீங்கள் நினைக்கக் கூடாது என முயற்சித்தாலும், வெளிப்படையான விடயங்களையே நினைவு செய்கின்றீர்கள். ஆத்மாவாகிய நான் ஒரு நுண்ணிய புள்ளி, தந்தையும் அவ்வாறே ஒரு நுண்ணிய புள்ளியே. இந்த முயற்சியையே குழந்தைகளாகிய நீங்கள் முதலில் செய்ய வேண்டும். இ;ந்த நுண்ணிய புள்ளியே இப்பொழுது தூய்மையற்றுவிட்டது. இதுவே ஆத்மாவைத் தூய்மையாக்குவதற்கான பிரதான வழிமுறையாகும். அத்துடன் கற்றுக் கொள்ளுங்கள்! விளையாடி, நகைச்சுவையாக இருப்பது என்பது வேறு விடயம். விளையாட்டும் ஒரு கலையே. ஓர் அந்தஸ்தானது கற்பதன் மூலமே பெறப்படுகின்றதேயன்றி விளையாடுவதன் மூலமல்ல. விளையாட்டுத் திணைக்களம் என்பது தனிப்பட்டது. அதற்கு யோகத்துடனோ அல்லது ஞானத்துடனோ எவ்விதமான தொடர்புமில்லை. போக் படைத்தல் என்பதும் ஒரு விளையாட்டே. பிரதான விடயம் நினைவாகும். அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தந்தை தாயாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. தர்மராஜின் தண்டனையில் இருந்து பாதுகாக்கப்படுவதற்கு, நினைவில் இருப்பதற்கு மறைமுகமான முயற்சி செய்யுங்கள். தூய்மையாகுவதற்கான வழிமுறை உங்களைப் புள்ளிவடிவான ஓராத்மாவாகக் கருதி, புள்ளியாகிய தந்தையை நினைவு செய்வதாகும்.

2. ஞானத்தில் உங்களை மிகவும் கெட்டிக்காரர்களாகக் கருதாதீர்கள். நிரந்தரமான, உறுதியான ஸ்திதியை உருவாக்குவதற்குப் பயிற்சி செய்யுங்கள். தந்தையின் கட்டளைகளைப் பின்பற்றுங்கள்.

ஆசீர்வாதம்:
நேர்மையையும் சுத்தத்தையும் கிரகிப்பதன் மூலம் நெருக்கத்தை அனுபவம் செய்கின்றதோர் சம்பூர்ண வடிவம் ஆகுவீர்களாக.

தெய்வீகக் குணங்கள் அனைத்திலும், பிரதானமாக கிரகிக்க வேண்டியவை நேர்மையும் சுத்தமும் ஆகும். உங்கள் இதயங்களில் ஒருவருக்கொருவர் முற்றாக சுத்தம் இருக்கட்டும். சுத்தமான ஒன்றில் அனைத்தும் தெளிவாகத் தென்படும். அவ்வாறே, நீங்கள் ஒருவர் மீது ஒருவர் கொண்டிருக்கும் உணர்வும், உங்கள் நோக்கமும், எதிர்பார்ப்புகளும் தெளிவாக தென்படட்டும். நேர்மையும் சுத்தமும் இருக்கும் இடத்தில் நெருக்கம் இருக்கும். நீங்கள் பாப்தாதாவிற்கு நெருக்கமாக இருப்பதைப் போன்றே, உங்கள் இதயத்தில் நீங்கள் ஒருவருக்கொருவர் நெருக்கமாக இருக்க வேண்டும். உங்கள் சுபாவத்தில் உள்ள வேறுபாடுகளை முடித்து விடுங்கள். இதற்கு, உங்கள் மன உணர்வுகளையும் உங்கள் சுபாவங்களையும் இசைவாக்கிக் கொள்ள வேண்டும். உங்கள் சுபாவங்களில் எந்த வேறுபாடுகளும் இல்லாதிருக்கும் போது, நீங்கள் சம்பூர்ண வடிங்கள் என அழைக்கப்படுவீர்கள்.

சுலோகம்:
சீரழிந்த ஒன்றை சீராக்குவதே அனைத்து சேவையிலும் மிகப் பெரிய சேவையாகும்.