09.06.22        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


இனிய குழந்தைகளே, நீங்கள் பிராமணக் குலத்திலிருந்து மேன்மையான விஷ்ணு குலத்திற்குள் செல்வீர்கள். ஆகவே நீங்கள் உண்மையான வைஷ்ணவர்கள் ஆக வேண்டும். வெங்காயம் போன்ற தூய்மையற்ற உணவு எதனையும் உண்ணாதீர்கள்.

கேள்வி:
குழந்தைகளாகிய நீங்கள் எந்தப் பரீட்சையையிட்டுக் குழப்பமடையவோ அல்லது பயப்படவோ கூடாது?

பதில்:
நீங்கள் முன்னேறிச் செல்கையில், பழைய சப்பாத்திற்கு (சரீரத்திற்கு) ஏதேனும் நிகழ்ந்தால், அதாவது, ஏதாவது சிரமம் ஏற்பட்டாலோ அல்லது நீங்கள் நோய்வாய்ப்பட்டாலோ, நீங்கள் பயப்படவோ அல்லது குழப்பமடையவோ கூடாது, ஆனால் அதற்கு மாறாக நீங்கள் மேலும் சந்தோஷமாக இருக்க வேண்டும். ஏனெனில் அது கர்ம வேதனை என்பதையும், அந்தக் கர்மக் கணக்குகள் தீர்க்கப்படுகின்றன என்பதையும் நீங்கள் புரிந்து கொண்டுள்ளீர்கள். எம்மால் அதனை யோக சக்தியின் மூலமாகத் தீர்க்க முடியவில்லையாயின், பின்னர் அவை வேதனையினால் தீ ர்க்கப்படும். அவை விரைவில் தீர்க்கப்படுவது மிகவும் நல்லதே.

பாடல்:
எங்கள் யாத்திரை தனித்துவமானது ஆகும்.

ஓம் சாந்தி.
அசரீரியான கடவுள் சிவன் பேசுகின்றார். அவருக்கு ஒரே ஒரு பெயரே இருக்கின்றது. கடவுள் சிவன் பேசுகின்றார். விளங்கப்படுத்துவதற்காகவும், உறுதியான நம்பிக்கையை ஏற்படுத்துவதற்காகவும் இதனை நீங்கள் கூற வேண்டும். தந்தை கூறுகின்றார்: நான் நானாக உள்ளேன். என்னுடைய பெயர் என்றுமே மாறுவது இல்லை. சத்திய யுகத்துத் தேவர்கள் மறுபிறவி எடுக்கின்றார்கள். தந்தை குழந்தைகளாகிய உங்களுக்கு இந்தச் சரீரத்தின் மூலமாக விளங்கப்படுத்துகின்றார். நீங்;கள் ஆன்மீக யாத்திரையில் இருக்கின்றீர்கள். தந்தை மறைமுகமானவர், தாதாவும் மறைமுகமானவர். பரமாத்மாவாகிய பரமதந்தை பிரம்மாவின் சரீரத்தில் பிரவேசிப்பதை எவருமே புரிந்து கொள்வதில்லை. குழந்தைகளும் மறைமுகமானவர்களே. நீங்கள் அனைவரும் கூறுகின்றீர்கள்: நாங்கள் சிவபாபாவின் குழந்தைகள், நிச்சயமாக நாம் அவரிடமிருந்து எங்கள் ஆஸ்தியைப் பெறவேண்டும். நாங்கள் அவருடைய ஸ்ரீமத்தைப் பின்பற்ற வேண்டும். அவரே எங்களுடைய பரமதந்தையும், ஆசிரியரும், சற்குருவும் ஆவார் என்ற நம்பிக்கை உங்களுக்குள்ளது. இவை மிகவும் இனிமையான விடயங்களாகும்! நாங்கள் அசரீரியான சிவபாபாவின் மாணவர்கள், அவர் எங்களுக்கு இராஜயோகம் கற்பிக்கின்றார். கடவுள் பேசுகின்றார்: ஓ குழந்தைகளே, நான் உங்களுக்கு இராஜயோகம் கற்பிக்கின்றேன். ஓ குழந்தைகளே என நகரபிதா (மேயர்) ஒருவர் கூறமாட்டார். ஒரு சந்நியாசியும்கூட இவ்வாறு கூறமாட்டார். குழந்தைகளே என்று கூறுவது தந்தையின் கடமை மாத்திரமே ஆகும். நீங்களே அசரீரியான தந்தையின் குழந்தைகள் என்பதால், அவரின் முன்னிலையில் நேரடியாக அமர்ந்திருக்கின்றீர்கள் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் புரிந்து கொண்டுள்ளீர்கள். நீங்கள் பிரஜாபிதா பிரம்ம குமார்களும், குமாரிகளும் ஆவீர்கள். நீங்கள் பிரஜாபிதா என்ற பெயரைக் குறிப்பிடாவிட்டால் மக்கள் குழப்பமடைவார்கள். பிரம்மா ஒரு தேவர் என்றும், அவர் சூட்சுமவதன வாசி என்றும் அவர்கள் நினைப்பதனால், எவ்வாறு அவரால் இங்கு வர முடியும் என அவர்கள் யோசிப்பார்கள். அவர்கள் கூறுகின்றார்கள்: பிரம்ம தேவனுக்கு வந்தனங்கள், சங்கர் தேவனுக்கு வந்தனங்கள், ஆனால் பின்னர் அவர்களைக் குரு என்றும் அவர்கள் அழைக்கின்றார்கள்: குரு பிரம்மா, குரு விஷ்ணு. ஆயினும், விஷ்ணுவும் சங்கரரும் குரு அல்ல. அவர் பார்வதிக்குக் கதையைக் கூறிய காரணத்தால் அவர்கள் அவரைக் குரு என நினைக்கின்றார்கள். விஷ்ணுவும் ஓர் குரு அல்ல. சத்திய யுகத்தில் இலக்ஷ்மியும் நாராயணனும் குருவாக ஆகுவது இல்லை. அவர்கள் கிருஷ்ணரையும் கீதையின் கடவுளாக மகா குரு ஆக்கியுள்ளார்கள். எவ்வாறாயினும் கடவுள் ஒருவரே ஆவார். இந்த விடயத்தைக் குழந்தைகளாகிய நீங்கள் நிரூபிக்க வேண்டும். நீங்கள் மறைமுகமான சேனையினர். நீங்கள் இராவணனை வென்றவர்கள், அதாவது மாயை வென்றவர்கள் ஆகுவதனால் உலகை வென்றவர்கள் ஆகுகின்றீர்கள். செல்வம் மாயை என்று அழைக்கப்படுவது இல்லை. செல்வம் செழிப்பு என்றே அழைக்கப்படுகிறது. ஆகவே பாபா விளங்கப்படுத்துகின்றார்: குழந்தைகளே, மரணம் சற்று முன்னால் உள்ளது. இவை 5000 வருடங்களுக்கு முன்னர் கூறப்பட்ட அதே வார்த்தைகள் ஆகும். அவர்கள் அசரீரியான கடவுள் பேசுகின்றார் என்ற வார்த்தைக்கு மாறாக சரீரியான கிருஷ்ணரின் பெயரை புகுத்திவிட்டார்கள். தந்தை கூறுகின்றார்: இப்பொழுது நீங்கள் பெறுகின்ற இந்த ஞானம் எதிர்கால வெகுமதிக்கானதாகும். ஒரு தடவை நீங்கள் வெகுமதியைப் பெற்றுவிட்டால் பின்னர் ஞானத்தின் தேவை இருக்காது. இந்த ஞானம் தூய்மையற்றவர்களைத் தூய்மையானவர்களாக மாற்றுவதற்கானதே ஆகும். தூய உலகில் ஒரு குருவைத் தத்தெடுப்பதற்கான அவசியம் எவருக்கும் கிடையாது. உண்மையில் ஒரே ஒரு பரமாத்மாவாகிய பரமதந்தை மாத்திரமே குரு ஆவார். மக்களும் கூவி அழைக்கின்றார்கள்: ஓ தூய்மையாக்குபவரே வாருங்கள்! ஆகவே அவரே பரம குரு என்பதை நீங்கள் விளங்கப்படுத்த வேண்டும். இராமரே அனைவருக்கும் சத்கதியை வழங்குவதாக நினைவுகூரப்படுகின்றார். ஆகவே நிச்சயமாக அனைவரும் சீரழிந்தவர்களாகும் போதே அவர் வருகின்றார். அங்கே பாற்கடல், அதாவது சந்தோஷக் கடல் உள்ளது. நச்சாறு அங்கே இருக்க மாட்டாது. விஷ்ணு பாற்கடலில் வாழ்வதாக இருந்தால் நிச்சயமாக அங்கே அவருடன் அவரது குழந்தைகளும் வாழ்வார்கள். இப்பொழுது நீங்கள் பிராமண குலத்திற்கு உரியவர்களாகவும், எதிர்காலத்தில் நீங்கள் விஷ்ணுவின் குலத்திற்குரியவர்களாகவும் ஆகுகின்றீர்கள். அவர்கள் முழுமையான வைஷ்ணவர்கள். மக்கள் வெங்காயம் போன்ற தூய்மையற்றவற்றைத் தேவர்களுக்குப் படைக்க மாட்டார்கள். நீங்கள் மீண்டுமொரு முறை அத்தகைய தேவர்களாக ஆகுவதனால்; நீங்கள் கட்டாயமாக அவை அனைத்தையும் துறந்தாக வேண்டும். இது சங்கமயுகமாகும். பிராமணர்களாகிய நீங்கள் சங்கமத்திலும், ஏனைய அனைவரும் கலியுகத்திலும் உள்ளார்கள் என்பது விளங்கப்படுத்தப்படுகிறது. நீங்கள் பிராமணர்களாகும் வரையில் நீங்கள் இதனை புரிந்துகொள்ள மாட்டீர்கள். தந்தை கூறுகின்றார்: நான் சக்கரத்தின் சங்கமத்தில் வருகின்றேன். இதுவே சங்கமம் என்பதால் உலகம் மாற்றமடைகின்றது என்பதை அவர்கள் புரிந்துகொள்ளவில்லை. மக்கள் இதனைப் பற்றிப் பேசியபோதிலும் இது எவ்வாறு மாறுகின்றது என்பதைப் புரிந்துகொள்வதில்லை. அவர்கள் ஏதாவது பேச வேண்டுமென்பதற்காக இவ்வாறு பேசுகின்றார்கள். ஸ்ரீமத்தைப் பின்பற்றுவதால் மாத்திரமே உங்களால் மேன்மையானவர்களாக முடியும் என்பதை நீங்கள் புரிந்துகொள்கிறீர்கள். நீங்கள் தந்தையை நினைவு செய்ய வேண்டும். சரீரம் உட்பட, சரீர உறவினர்களையும் மறந்துவிடுங்கள். பாபா எங்களை இங்கு சரீரமற்றவராகவே அனுப்பினார். அவ்வாறே நாங்கள் திரும்பிச் செல்ல வேண்டும். இங்கு நீங்கள் உங்கள் பாகங்களை நடிப்பதற்காகவே வந்திருக்கின்றீர்கள். இந்த முயற்சி மறைமுகமானது: தந்தையையும் ஆஸ்தியையும் நினைவு செய்யுங்கள். நீங்கள் இதனை மீண்டும் மீண்டும் மறந்துவிடுகின்றீர்கள். பாபாவை மறந்து விடுவதனால் நீங்கள் மாயையினால் அறையப்படுகின்றீர்கள். அலாவுதீனின் விளக்குப் பற்றிய ஒரு நாடகம் இருக்கின்றது. அல்லா (கடவுள்) முதலாவது தர்மத்தைப் படைத்து, வைகுந்தத்தை படைக்கின்றார். அவர் கைதட்டி சுவர்க்கத்தைப் பெற்றார். இந்தத் தர்மத்தை ஸ்தாபிப்பவர் யார்? கடவுளே முதல் இலக்க தர்மத்தை ஸ்தாபித்தார். அத்துடன் ஹட்டம்டாய்யின் கதையும் உள்ளது. உங்கள் வாயில் மணியைப் போட்டுக்கொள்ளாத போதே மாயை உங்களிடம் வருகின்றாள். இந்த ஸ்திதியும் உங்களுக்கானதே. நீங்கள் தந்தையை மறந்து ஏனைய அனைவரையும் நினைவு செய்கின்றீர்கள். நீங்கள் அமைதி தாமத்திற்குத் திரும்பிச் செல்கிறீர்கள் என்பதையும், பின்னர் சந்தோஷதாமத்திற்குச் செல்வீர்கள் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது புரிந்துகொள்கின்றீர்கள். துன்ப தாமத்தை மறப்பதற்கு முயற்சி செய்யுங்கள். இவை அனைத்துமே அழிக்கப்பட உள்ளன. நீங்கள் ஒரு கோடீஸ்வரர் என்றோ அல்லது இத்தகையவர்; அல்லது அத்தகையவர் என்றோ உங்கள் புத்தியில் இருக்கக் கூடாது. நீங்கள் நிர்வாணமாக, சரீரமற்றவராக வந்தீர்கள். அவை பழைய சரீரங்கள் ஆகும். அப் பழைய சப்பாத்துகள் உங்களுக்குப் பெருமளவு துன்பத்தை விளைவிக்கின்றன. எந்தளவிற்கு உங்களுக்கு நோய்கள் இருக்கின்றனவோ அதைவிட அதிகளவு நீங்கள் சந்தோஷமாக இருக்க வேண்டும். நீங்கள் நடனமாடிக் கொண்டிருக்க வேண்டும். இது கர்ம வேதனை. கர்மக் கணக்குகள் தீர்க்கப்பட வேண்டும். இதனைக் கண்டு நீங்கள் பயப்படக் கூடாது. யோக சக்தியினால் உங்களது பாவங்களை அழிக்க முடியாத போது, நீங்கள் அவற்றைக் கர்;ம வேதனையால் தீர்க்க வேண்டும் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். இதனையிட்டு குழப்பமடைய வேண்டியது இல்லை. அவை பழைய சரீரங்கள் என்பதால், அவை விரைவாக அழிவது நல்லதே. உங்களுடைய ஏழு நாட்களுக்கான பத்தி மிகவும் பிரபல்யம் வாய்ந்தது. இந்த ஞானத்தை ஏழு நாட்களில் மிகவும் நன்றாகப் புரிந்து கொண்டு, அதை உங்களுடைய புத்தியில் கிரகித்த பின்னர், நீங்கள் எங்கும் செல்லலாம். நீங்கள் தொடர்ந்தும் முரளியைப் பெறுவீர்கள். அது போதும். தொடர்ந்தும் தந்தையை நினைவு செய்து சக்கரத்தைச் சுழற்றுங்கள். ஏழு நாட்களுக்குள் ஒரு சுயதரிசன சக்கரதாரி ஆகுங்கள். மக்கள் ஏழு நாட்களுக்குச் சமயநூல்களை உபதேசிக்கும் வழக்கத்;தைக் கொண்டுள்ளார்கள். ஏழு நாட்கள் மிகவும் பிரபல்யமாகும். அவர்கள் கிராந்திற்கும் ஏழு நாட்களே கொடுத்துள்ளார்கள். பத்தியும் ஏழு நாட்களுக்கானதே. எவ்வாறாயினும், இங்கு வருபவர்களிடம் ஏழு நாட்களுக்கு வாருங்கள் என நீங்கள் கூறக்கூடாது. நீங்கள் முதலில் வருபவரின் நாடித் துடிப்பை உணர வேண்டும். சிலர், ஏழு நாள் பாடநெறி என்பதை கேட்டவுடன் பயந்து விடுகின்றார்கள். அவர்கள் நினைக்கின்றார்கள்: எங்களால் இதனைப் பின்பற்ற முடியாவிட்டால் என்ன நடக்கும்? ஆகையால் அவர்கள் சென்றுவிடுகின்றார்கள். எனவே அந்நபரை கவனியுங்கள். ஒவ்வொருவரின் நாடித் துடிப்பையும் உணருங்கள். முதலில் எத்தனை நாட்களுக்கு அவர்கள் வருவார்கள் என்பதை அறிந்து கொள்ளுங்கள். அவர்களிடம் எடுத்தவுடனேயே ஏழு நாட்களைப் பற்றிக் கூறினால், அவர்கள் பயந்து விடுவார்கள். சிலருக்கு ஏழு நாட்களை ஒதுக்க முடியாது. சில வைத்தியர்களும், மூலிகை மருத்துவர்களும் உங்களுடைய நாடித் துடிப்பை பார்த்தே உங்கள் நோய் என்ன என்பதை கண்டறிகின்றார்கள். இவரும் உங்களுடைய அழியாத ஞான சத்திர சிகிச்சையாளர்; ஆவார். குழந்தைகளாகிய நீங்களும் மாஸ்டர் சத்திர சிகிச்சையாளர்களே. இது உருத்திரனுடைய ஞான யாகமாகும். ஒரு விநாடியில் மக்களால் ஜீவன்முக்தியைப் பெற முடியும் என நீங்கள் கூறுகிறீர்கள். அதனால் சிலர் வினவுகிறார்கள்: உங்களால் ஒரு விநாடியில் ஜீவன்முக்தியை அடைய முடியுமானால், ஏன் எங்களை ஏழு நாட்களுக்கு வரும்படி கூறுகிறீர்கள்? ஒரு விநாடியைப் பற்றி கூறுங்கள்! அவர்கள் பயமடைந்து, தங்களால் இங்கு தங்க முடியாது எனக் கூறுகிறார்கள். இதனாலேயே நீங்கள் முதலில் அவர்களுடைய நாடித் துடிப்பை உணரவேண்டும். இது அனைவருக்கும் ஒரே மாதிரியாக இருக்க மாட்டாது. பல குழந்தைகள் அவச்சேவை செய்கிறார்கள். படிவத்தை அவர்கள் நிரப்பும் போது, அவர்களுடைய நாடித்துடிப்பை உணர்ந்து கொள்ளுங்கள், அவர்களிடம் வினவுங்கள்: உங்களால் எத்தனை நாட்கள் வரமுடியும்? இதனை நீ;ங்கள் கேட்க வேண்டும். நல்லது. என்னிடம் கூறுங்கள், அனைவரினதும் கடவுள் ஒருவரா? பரமதந்தையுடனான உங்களுடைய உறவுமுறை என்ன? முதலில் நீங்கள் இதனையிட்டு விளங்கப்படுத்த வேண்டும். அவரே தந்தை, நாங்கள் அவருடைய குழந்தைகள். தந்தை ஆஸ்தியைக் கொடுக்கிறார். அவரே சுவர்க்கத்தைப் படைப்பவர் என்பதால், நீங்கள் சுவர்க்க ஆஸ்தியைப் பெறவேண்டும். அது இப்பொழுது நரகமாக இருக்கிறது. பாரதம் உலக அதிபதியான, சுவர்க்கமாக இருந்தது. இது தேவர்களின் இராச்சியமாக இருந்தது, ஆனால் மாயை உங்களுடைய இராச்சியத்தை அபகரித்து விட்டாள். இப்பொழுது, மீண்டும் ஒருமுறை மாயையை வெற்றி கொண்டு, உங்களுடைய இராச்சியத்தை மீட்க வேண்டும். பழைய, தூய்மையற்ற கலியுக உலக விநாசம் உங்கள் முன்னால் உள்ளது. எனவே, நிச்சயமாகத் தூய உலகம் ஸ்தாபிக்கப்பட வேண்டும். ஒரு சிறிய சமிக்ஞை கொடுக்கப்பட வேண்டும். பின்னர், அவர்கள் மேலும் முன்னேறுகையில் அவ்விடயங்களைப் புரிந்து கொள்வார்கள். இன்று இல்லாவிட்டால், அவர்கள் நாளை வருவார்கள். அவர்கள் வேறு எங்கே செல்வார்கள்? அவர்கள் சற்கதியை பெறுவதற்கு, ஒரேயொரு கடையே உள்ளது. பரமாத்மாவாகிய பரமதந்தையான, சிவபாபாவின் ஒரேயொரு கடையே உள்ளது. ஒரு விநாடியில் ஜீவன்முக்தி பெறப்படுகின்றது. இந்தக் கடை எவ்வாறு உள்ளது எனப் பாருங்கள்! நீங்களே அத்தகைய கடையின் விற்பனையாளர்கள். ஒரு சிறந்த விற்பனையாளர் சிறந்த அந்தஸ்தைப் பெறுவார். விற்பனை செய்வதற்கு விவேகம் அவசியமாகும். விவேகம் அற்றவர்கள் என்ன சேவையை செய்ய முடியும்? முதலில், அவர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும். பின்னர், அவர்களுக்கு ஏழு நாட்களைப் பற்றிக் கூறுங்கள். ஓ! ஆஸ்தியைக் கொடுப்பதற்காகத் தந்;தை வந்திருக்கின்றார்! பாரதம் சந்தோஷ உலகமாக இருந்தது, இப்பொழுது அது துன்ப உலகமாக ஆகியுள்ளது. பின்னர், அது எவ்வாறு சந்தோஷ உலகமாக ஆகுகின்றது? அதனை படைப்பவர் யார்? முதலில் நீங்கள் அவர்களுக்குப் பாதையைக் காட்ட வேண்டும். ஆத்மாக்களாகிய நாங்கள் அமைதிதாம வாசிகளாக இருக்கிறோம், பின்னர் நாங்கள் எங்களுடைய பாகங்களை நடிப்பதற்காக வருகிறோம்;. இப்பொழுது தந்தை கூறுகிறார்: குழந்தைகளே, நீங்கள் இப்பொழுது வீடு திரும்ப வேண்டும். தந்தையை நினைவு செய்வதன் மூலம் உங்கள் பாவங்கள் அழிக்கப்படும். பறப்பதற்கான உங்கள் சிறகுகள் உடைந்து விட்டன. அவை சீராக்கப்படுகின்றன, அதன் பின்னர் நீங்கள் என்னோடு வருவீர்கள். தந்;;தை மாத்திரமே வந்து, உங்களைச் சிப்பிகளிலிருந்து வைரங்களாக மாற்றுகிறார். இது மிகப் பெரிய வருமானமாகும். தந்;தையை நினைவு செய்வதன் மூலம் நீங்கள் 21 பிறவிகளுக்கு நோய்களிலிருந்து விடுதலையாகுகிறீர்கள். சக்கரத்தை நினைவு செய்வதன் மூலம் நீங்கள் சதா ஆரோக்கியமானவராகவும், செல்வந்தராகவும் ஆகுகிறீர்கள். இப்பொழுது, நீங்கள் இவ்விரண்டில் எதுவுமாக இல்லை. நீங்கள் வரிசைக்கிரமமானவர்களே. மாயை பலவீனமானவர்களை மிகவும் விரைவாக தின்றுவிடுகிறாள். அதன் பின்னர், நீங்கள் மேலும் முன்னேறிச் செல்லும் பொழுது தந்தையை நினைவு செய்வீர்கள். அரசர்கள் இறுதியில் வருகின்றார்கள், சந்நியாசி போன்றோரும் வருவார்கள். புத்திரிகளும் தாய்மார்களுமாகிய நீங்கள் அம்புகளை எய்கிறீர்கள். மிக நேரத்தியான ஆலயங்கள் இங்கேயே கட்டப்பட்டன. குமாரிகளுக்கான ஓர் ஆலயமும் உள்ளது. அதர்குமாரி என்பதன் அர்த்தத்தை அவர்கள் புரிந்துகொள்ள மாட்டார்கள். குடும்பத்துடன் வீட்டில் வசித்துக் கொண்டே, பிராமணர்கள் ஆகுபவர்கள் அதர் குமாரிகள் என அழைக்கப்படுகிறார்கள். குமாரி ஒரு குமாரியே! முழு ஆலயமும் உங்களுடைய ஞாபகார்த்தமாகவே கட்டப்படுகிறது. நீங்கள் கடந்த கல்பத்திலும் இவ்வாறாகவே சேவை செய்தீர்கள். உங்கள் பரீட்சை இவ்வளவு மகத்துவமானது என்பதையிட்டு நீங்கள் அதிகளவு சந்தோஷப்பட வேண்டும்! கடவுளே உங்களுக்குக் கற்பிக்கிறார். (டில்லியிலிருந்து வந்த ஒரு குழுவினர் பாபாவிடமிருந்து விடைபெற்றனர்;.) குழந்தைகள் அனைவரும் மிகவும் புத்துணர்வுடன் வீடு திரும்புகிறார்கள். எவ்வாறாயினும், இது வரிசைக்கிரமமாகவே உள்ளது. நன்றாகப் புரிந்துகொண்டவர்கள் மற்றவர்களுக்கும் மிக நன்றாக விளங்கப்படுத்துகிறார்கள். பாபாவும், தாதாவும் மறைமுகமானவர்கள் என்பதை குழந்தைகள் புரிந்து கொள்கிறார்கள். நீங்களும் மறைமுகமானவர்களே. இதனை வேறு எவருமே புரிந்து கொள்ள மாட்டார்கள். பிராமணர்களும் (குருக்கள்) புரிந்து கொள்ள மாட்டார்கள். உங்களால் அவர்களுக்குக் கூறமுடியும்: நீங்கள் விகாரத்தின் மூலம் பிறப்பெடுத்தீர்கள். ஆனால், நாங்களோ வாய்வழித் தோன்றல்கள் ஆவோம். நீங்கள் தூய்மையற்றவர்கள், நாங்கள் தூய்மையாகிக் கொண்டிருக்கிறோம். நாங்கள் மக்களின் தந்தையானவரின் குழந்தைகள் என்பதால் நிச்சயமாக நாங்களே புதிய உலகிற்குரியவர்கள். சத்தியயுகத்தின் தேவர்கள் புதிய உலகிற்கு உரியவர்களா அல்லது அந்தப் பிராமணர்கள் புதிய உலகிற்குரியவர்களா? பிராமணர்களே உச்சிக்குடுமிகள். உச்சிக்குடுமியா (பிராமண குலம்) அல்லது தலையா (தேவ குலம்) மேலானது? அவர்கள் அந்த ரூபத்தில் சிவபாபாவை மறைத்து விட்டார்கள். தந்தையே பூந்தோட்டத்தின் அதிபதி ஆவார் என்பது குழந்தைகளாகிய உங்களுக்குத் தெரியும். இராவணன் பூந்தோட்ட அதிபதி என அழைக்கப்பட மாட்டான். இராவணன் முட்களை உருவாக்குகிறான். ஆனால், பாபா மலர்களையே உருவாக்குகிறார். இது ஒரு முட்காடாகும். அவர்கள் ஒருவருக்கொருவர் துன்பத்தைக் கொடுக்கிறார்கள். தந்தை விளங்கப்படுத்துகிறார்: எவருக்கும் துன்பத்தை விளைவிக்காதீர்கள். நீங்கள் கோபத்துடன் பேசினால், நூறு மடங்கு பாவம் சேர்க்கப்பட்டு, நீங்கள் பாவ ஆத்மாக்களாக ஆகுகிறீர்கள். கடுமையான தண்டனை கிடைக்கும். நீங்கள் தந்தையின் உதவியாளர் ஆகுவீர்கள் என்ற உத்தரவாதத்தை கொடுத்த பின்னர், நீங்கள் அவச்சேவை செய்வீர்களாயின், உங்களுக்கு மிகக் கடுமையான தண்டனை கிடைக்கும். நீங்கள் பாபாவின் ஒரு குழந்தையாக ஆகிய பின்னர் பாவச் செயல்களைச் செய்வீர்களாயின், நூறு மடங்கு தண்டனையைப் பெறுவீர்கள். எனவே, உங்களுக்குத் தைரியம் இருந்தால், ஸ்ரீமத்தைப் பின்பற்றுங்கள். நீங்கள் ஒரு சாதாரண மனிதனிலிருந்து நாராயணனாக ஆகவேண்டும். நாங்கள் பிரஜைகள் ஆகினால் பரவாயில்லை என்ற உணர்வைக் கொண்டிராதீர்கள். இல்லை, இது மிகப்பெரிய ஒரு மாலை. இங்கு அதிகளவு இடைவெளி இருக்கிறது. நீங்கள் மனச்சோர்வு அடையக்கூடாது. நீங்கள் விழலாம், ஆனால் அடுத்த முறை எச்சரிக்கையாக இருங்கள். மனச்சோர்வு அடைவதை அனுமதிக்காதீர்கள். இது மட்டுமே நீங்கள் சிவபாபாவிடமிருந்து ஒரு விநாடியில் ஜீவன்முக்தியைப் பெறுவதற்கான ஒரேயொரு கடையாகும். அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:

ஆசீர்வாதம்:
அனுபவ சொரூபமாகி, எதுவும் புதியது அல்ல! என்ற விழிப்புணர்வினால், தடைகள் அனைத்தையும் ஒரு விளையாட்டாகக் கருதி, அவற்றைத் தாண்டுவீர்களாக.

நாடகத்தின் ஆரம்பம் முதல் இறுதி வரையில் தடைகள் வரவேண்டும் என்பது நிர்ணயிக்கப்பட்டுள்ளது, ஆனால் அந்தத் தடைகள், சாத்தியமற்றவையையும் சாத்தியமாக்கும் என்பதில் உங்களை அனுபவசாலிகள் ஆக்கும். அனுபவசாலி ஆத்மாக்களுக்கு, தடைகள் ஒரு விளையாட்டாகும். உதாரணமாக, உதை பந்தாட்டத்தில், ஒரு பந்து உங்களிடம் வரும்போது, நீங்கள் அதனை உதைத்து, இரசித்து விளையாடுவீர்கள். இந்தத் தடைகள் என்ற விளையாட்டும் அவ்வாறே தொடர்கின்றது, அது புதியது அல்ல. நாடகம் எங்களுக்கு இந்த விiளாட்டைக் காட்டுவதுடன், முழுமையான வெற்றியையும் காட்டுகின்றது.

சுலோகம்:
ஒவ்வொருவரது தெய்வீகக் குணங்களையும் பார்த்து, சிறப்பியல்புகளின் நறுமணத்தை இவ்வுலகிற்குள் பரவச் செய்யுங்கள். அப்பொழுது அது முழுமையான சந்தோஷமுடையதாகும்.