09.10.20        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்:
இனிய குழந்தைகளே, அதிகாலையில் எழுந்து பாபாவுடன் இனிய சம்பாஷணையைக் கொண்டிருங்கள். ஞானக்கடலைக் கடைவதற்கு அதிகாலை மிகச் சிறந்த நேரமாகும்.

கேள்வி:
பக்தர்கள் கடவுளைச் சர்வசக்திவான் என அழைப்பதற்கும், குழந்தைகளாகிய நீங்கள் அவரை அந்தப் பெயரால் அழைப்பதற்கும் இடையிலான வேறுபாடு என்ன?

பதில்:
கடவுளால் எதை வேண்டுமானாலும் செய்யமுடியும் என்றும், அனைத்தும் அவரது கைகளிலேயே தங்கியுள்ளது என்றும் அவர்கள் கூறுகின்றனர். எவ்வாறாயினும், பாபா கூறியிருப்பதை நீங்கள் அறிவீர்கள்: தானும் நாடகத்திற்குக் கட்டுப்பட்டுள்ளேன். நாடகமே சர்வசக்திவான் ஆகும். அனைவருக்கும் சற்கதி அருள்கின்ற சக்தி தந்தையிடம் இருப்பதால் அவர் சர்வசக்திவான் என அழைக்கப்படுகின்றார். எவருமே உங்களிடமிருந்து அபகரிக்க முடியாத அத்தகையதோர் இராச்சியத்தை அவர் ஸ்தாபிக்கின்றார்.

ஓம் சாந்தி.
அவ்வாறு கூறியவர் யார்? பாபா. ஓம் சாந்தி. அவ்வாறு கூறியவர் யார்? தாதா. குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது அதிமேலானவரின் புகழின் மகத்துவத்தை இனங்கண்டு கொண்டுள்ளீர்கள். அவர்கள் கூறுகின்றனர்: கடவுள் சர்வசக்திவான் என்பதால் அவரால் என்னதான் செய்ய முடியாது? பக்தி மார்க்கத்தில், சர்வசக்திவான் என்ற வார்த்தைக்கு மக்கள் மிக நல்ல அர்த்தத்தைக் கொடுத்துள்ளனர். தந்தை கூறுகின்றார்: அனைத்தும் நாடகத்திற்கேற்பவே நிகழ்கின்றது. நான் எதையும் செய்வதில்லை. நானும் நாடகத்திற்குக் கட்டுப்பட்டுள்ளேன். தந்தையை நினைவு செய்வதால் நீங்கள் சர்வசக்திவான் ஆகுகின்றீர்கள். தூய்மையாக இருப்பதால், நீங்கள் தமோபிரதானிலிருந்து சதோபிரதான் ஆகுகின்றீர்கள். தந்தையே சர்வசக்திவான் ஆவார். அவர் உங்களுக்குக் கற்பிக்க வேண்டும். அவர் கூறுகின்றார்: குழந்தைகளே, என்னை நினைவு செய்யுங்கள், உங்கள் பாவங்கள் அழிக்கப்படும். பின்னர் நீங்கள் சர்வசக்திவான்களாகி உலகை ஆட்சி செய்வீர்கள். உங்களிடம் சக்தி இல்லாவிட்டால், எவ்வாறு நீங்கள் ஆட்சி செய்வீர்கள்? நீங்கள் யோகம் செய்வதன் மூலம் சக்தியைப் பெறுகின்றீர்கள். இதனாலேயே பாரதத்தின் புராதன யோகம் நினைவுகூரப்படுகின்றது. குழந்தைகளாகிய நீங்கள் வரிசைக்கிரமமான நினைவைக் கொண்டிருந்து, அதற்கேற்ப சந்தோஷத்தை அனுபவம் செய்கின்றீர்கள். தந்தையை நினைவு செய்வதன் மூலம் உங்களால் உலக இராச்சியத்தை அடைய முடியும் என்பதை ஆத்மாக்களாகிய நீங்கள் அறிவீர்கள். உங்களிடமிருந்து அதை அபகரிக்கக்கூடிய பலம் எவரிடமும் இல்லை. அனைவரும் அதிமேலான தந்தையைப் புகழ்கின்றனர், எனினும் எவரும் எதையும் புரிந்துகொள்வதில்லை. இது ஒரு நாடகம் என்பதை ஒரு மனிதரேனும் அறியமாட்டார். இது ஒரு நாடகம் என்பதை அவர்கள் புரிந்துகொண்டிருந்தால், ஆரம்பத்திலிருந்து இறுதி வரையான அனைத்தையும் அவர்கள் நினைவுசெய்வார்கள். இல்லாவிடில், அதை ஒரு நாடகம் என அழைப்பது பிழையாகிவிடும். இது ஒரு நாடகம் என்றும், நாங்கள் எங்கள் பாகங்களை நடிக்க வந்துள்ளோம் என்றும் அவர்கள் கூறுகின்றனர். எனவே, அவர்கள் இந்நாடகத்தின் ஆரம்பம், மத்தி, இறுதி பற்றி அறிந்திருக்க வேண்டும். தாங்கள் மேலிருந்து வருவதாகவும், இதனாலேயே சனத்தொகை அதிகரிக்கின்றது என்றும் அவர்கள் கூறுகின்றனர். சத்திய யுகத்தில் வெகு சில மனிதர்களே இருந்தனர். இந்த ஆத்மாக்கள் அனைவரும் எங்கிருந்து வந்தனர்? இந்நாடகம் அநாதியாகவே நிச்சயிக்கப்பட்டதும், அழிவற்றதும், என்பதுடன் அது ஆரம்பம் முதல் இறுதி வரை மீண்டும் மீண்டும் தொடரும் என்பதை எவருமே புரிந்துகொள்ளவில்லை. நீங்கள் ஒரு திரைப்படத்தை ஆரம்பத்திலிருந்து இறுதிவரை பார்த்துவிட்டு, பின்னர் மீண்டும் அதைப் பார்க்கும்போது, அது இரண்டாவது தடவையாகவும் நிச்சயமாக அதேபோன்று மீண்டும் நிகழும், அதில் சிறிதளவேனும் வேறுபாடு இருக்க முடியாது. தந்தை எவ்வாறு இனிமையிலும் இனிமையான குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார் எனப் பாருங்கள்! தந்தை மிக இனிமையானவர்! பாபா, நீங்கள் மிக இனிமையானவர்! பாபா, நாங்கள் இப்பொழுது எங்கள் சந்தோஷ தாமத்திற்குச் செல்கின்றோம். ஆத்மாக்கள் தூய்மையாகும்போது, அவர்கள் அங்கு பாலையும் தூய்மையாகப் பெறுவார்கள் என்பதை நாங்கள் இப்பொழுது அறிவோம். அந்த மேன்மையான தாய்மார்கள் மிக இனிமையானவர்கள். அவர்கள் சரியான நேரத்திற்குத் தங்கள் குழந்தைகளுக்குப் பாலூட்டுவார்கள். அவர்களுடைய குழந்தைகள் அதற்காக அழவேண்டியதில்லை. நீங்கள் இவ்வாறாக ஞானக்கடலைக் கடையவேண்டும். அதிகாலையில் பாபாவுடன் பேசும்போது, நீங்கள் அதிகளவில் களிப்படைவீர்கள். பாபா, நீங்கள் மேலான இராச்சியத்தை ஸ்தாபிப்பதற்கான நல்ல வழிகளை எங்களுக்குக் காட்டுகின்றீர்கள். பின்னர் நாங்கள் மேன்மையான தாய்மாரின் மடிக்குச் செல்வோம். அந்தப் புதிய உலகிற்கு எண்ணற்ற தடவைகள் சென்றவர்கள் நாங்களே. எங்களின் சந்தோஷ நாட்கள் வரப்போகின்றன. இந்தச் சந்தோஷப் போஷாக்கில் கூறப்பட்டுகின்றது: நீங்கள் அதீந்திரிய சுகத்தைப் பற்றி அறிய விரும்பினால் கோப, கோபியரைக் கேளுங்கள். நாங்கள் இப்பொழுது எல்லையற்ற தந்தையைக் கண்டுகொண்டோம். அவர் எங்களைச் சுவர்க்கத்தின் மேலான அதிபதிகள் ஆக்குகின்றார். நாங்கள் ஒவ்வொரு கல்பத்திலும் எங்கள் இராச்சிய பாக்கியத்தைப் பெறுகின்றோம். நாங்கள் தோல்வியை அனுபவித்து, பின்னர் வெற்றி பெறுகின்றோம். இப்பொழுது நாங்கள் தந்தையை நினைவு செய்வதன் மூலம் இராவணனை வெற்றி கொள்ள வேண்டும். பின்னர் நாங்கள் தூய்மையாகுவோம். அங்கு யுத்தம் அல்லது வேதனை பற்றிய குறிப்பு எதுவும் இல்லை அங்கு எவ்வித செலவுகளும் இல்லை. பக்தி மார்க்கத்தில் பிறவி பிறவியாக நாங்கள் ஏராளமாகச் செலவழித்தோம். நாங்கள் அதிகளவில் தடுமாறித் திரிந்து பல குருமாரையும் ஏற்றுக்கொண்டோம்! இப்பொழுது நாங்கள் அரைக் கல்பத்திற்கு எந்தக் குருமாரையும் ஏற்கமாட்டோம். நாங்கள் சாந்தி தாமத்திற்குச் சென்று, பின்னர் சந்தோஷ தாமத்திற்குச் செல்வோம். தந்தை கூறுகின்றார்: நீங்கள் சந்தோஷ தாமத்திற்கான பயணிகள். இப்பொழுது நீங்கள் துன்ப தாமத்திலிருந்து சந்தோஷ தாமத்திற்குச் செல்லவேண்டும். எங்கள் அற்புதமான பாபா! அவர் எவ்வாறு எங்களுக்குக் கற்பிக்கின்றார் எனப் பாருங்கள்! எங்கள் ஞாபகார்த்தங்கள் இங்கு இருப்பது பெரியதோர் அற்புதமாகும். தில்வாலா ஆலயத்திற்கு எல்லையற்ற புகழ் உள்ளது. நாங்கள் இப்பொழுது இராஜ யோகம் கற்கின்றோம். எனவே, இதன் ஞாபகார்த்தம் நிச்சயமாக உருவாக்கப்பட வேண்டும். இது எங்கள் அதேபோன்ற ஞாபகார்த்தமாகும். பாபாவும், மம்மாவும், குழந்தைகளும் அங்கு அமர்ந்திருக்கின்றனர். தரையில் அவர்கள் யோகப் பயிற்சி செய்வது போன்றும், அவர்களுக்கு மேலே சுவர்க்க இராச்சியமும் காட்டப்படுகின்றது. விருட்சப் படத்தில் இந்த ஞானம் மிகத் தெளிவாக உள்ளது. எவ்வாறு பாபா காட்சிகளை அருளிப் படங்களைச் செய்வித்தார் எனப் பாருங்கள். பாபா அக்காட்சிகளைக் அருளி திருத்தங்களையும் செய்தார். அது அத்தகையதோர் அற்புதமே! இந்த ஞானம் முழுவதும் புதியதாகும். எவருமே இந்த ஞானத்தை அறியமாட்டார்கள். தந்தை மாத்திரமே அமர்ந்திருந்து, எவ்வாறு மனிதர்கள் தொடர்ந்தும் தமோபிரதான் ஆகுகின்றார்கள் என்பதை விளங்கப்படுத்துகின்றார். உலகில் மனிதர்களின் சனத்தொகை தொடர்ந்தும் அதிகரிக்கின்றது. பக்தி முன்னேறுகையில் அதுவும் தொடர்ந்து தமோபிரதான் ஆகுகின்றது. நீங்கள் இப்பொழுது இங்கு சதோபிரதான் ஆகுவதற்கு முயற்சி செய்கின்றீர்கள். மன்மனாபவ என்ற பதமும் கீதையில் குறிப்பிடப்பட்டுள்ளது. கடவுள் யாரென்பதை அவர்கள் அறியாதுள்ளனர். குழந்தைகளாகிய நீங்கள் அதிகாலையில் எழுந்து, மக்களுக்கு எவ்வாறு கடவுளின் அறிமுகத்தைக் கொடுப்பது என்பதையிட்டு ஞானக்கடலைக் கடையுங்கள். பக்தியிலும் மக்கள் அதிகாலையில் எழுந்து, தங்கள் மாடங்களில் அமர்ந்திருந்தவாறு வழிபாடு செய்கின்றனர். இதுவும் ஞானக்கடலைக் கடைவதாகும், இல்லையா? இப்பொழுது நீங்கள் ஒவ்வொருவரும் மூன்றாவது ஞானக்கண்ணைப் பெறுகின்றீர்கள். தந்தை உங்களுக்கு மூன்றாவது கண்ணின் கதையைக் கூறுகின்றார். மூன்றாவது கண்ணின் கதை, அமரத்துவக் கதை, சத்திய நாராயணன் ஆகுகின்ற கதை ஆகியவை மிகவும் பிரபல்யமானவை. ஒரேயொரு தந்தையே அவற்றைக் கூறுகின்றார். பின்னர் அவை பக்தி மார்க்கத்தில் தொடர்ந்தும் கூறப்படும். குழந்தைகளாகிய நீங்கள் ஞானத்தின் மூலம் செல்வந்தர்கள் ஆகுகின்றீர்கள். இதனாலேயே தேவர்கள் பல்கோடீஸ்வரர்கள் எனப்படுகின்றனர். தேவர்கள் பெரும் செல்வந்தர்களான, பல்கோடீஸ்வரர்களாக ஆகுகின்றனர். கலியுகத்தைப் பார்த்துவிட்டு, பின்னர் சத்திய யுகத்தைப் பாருங்கள்! பகலுக்கும் இரவுக்கும் இடையிலான வித்தியாசம் உள்ளது! முழு உலகமும் சுத்தமாக்கப்படுவதற்குக் காலம் எடுக்கும். இவ்வுலகம் எல்லையற்றது. பாரதமே என்றுமே மறைந்துவிடாத, அழிவற்ற தேசமாகும். அரைக் கல்பத்திற்கு இத்தேசம் மாத்திரமே இங்கு இருக்கும். பின்னர் ஏனைய தேசங்கள் அனைத்தும் வரிசைக்கிரமமாகத் தோன்றும். குழந்தைகளாகிய நீங்கள் அதிகளவு ஞானத்தைப் பெறுகின்றீர்கள்! அவர்களுக்குக் கூறுங்கள்: உலக வரலாறும், புவியியலும் எவ்வாறு மீண்டும் இடம்பெறுகின்றது என்பதை வந்து புரிந்துகொள்ளுங்கள். புராதன ரிஷிகளுக்கும், முனிவர்களுக்கும் அதிக மரியாதை வழங்கப்படுகின்றது. எனினும், அவர்களும் உலகின் ஆரம்பம், மத்தி, இறுதி பற்றி அறியமாட்டார்கள். அவர்கள் ஹத்த யோகிகள். எவ்வாறாயினும், அவர்கள் தூய்மை சக்தியைக் கொண்டிருப்பதால், அதன் மூலம் அவர்கள் பாரதத்திற்கு ஆதாரமாக உள்ளனர். இல்லாவிடில், பாரதம் என்னவாகி இருக்கும் என உங்களுக்கு ஒருபோதும் தெரியாது! ஒரு கட்டடத்திற்கு வெள்ளையடிக்கும்போது, அது அழகாகத் தோன்றுகின்றது. பாரதம் மிகவும் தூய்மையாக இருந்தது, அதே பாரதமே இப்பொழுது தூய்மையற்றதாகிவிட்டது. அங்கு உங்கள் சந்தோஷம் நீண்ட காலத்திற்கு நீடிக்கின்றது. அங்கு நீங்கள் ஏராளமான செல்வத்தைக் கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் மாத்திரமே பாரதத்தில் வாழ்ந்தீர்கள். அது உங்கள் இராச்சியமாக இருந்தது. இது நேற்றைய விடயமாகும். பின்னர், ஏனைய சமயங்கள் அனைத்தும் வந்தன. அவர்கள் வந்து உலகைச் சிறிது சீர்திருத்தி, அவர்களின் பெயர்கள் போற்றப்பட்டன. இப்பொழுது அவர்களும் தமோபிரதான் ஆகிவிட்டனர். குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது அதிகளவு சந்தோஷத்தை அனுபவம் செய்யவேண்டும்! நீங்கள் இவை அனைத்தையும் புதியவர்களுக்குக் கூறக்கூடாது. முதலில், அவர்கள் தந்தையை இனங்கண்டு கொள்ளுமாறு செய்யுங்கள். உங்களுக்குத் தந்தையின் பெயர், ரூபம், இடம், காலம் என்பவற்றைத் தெரியுமா? அதிமேலான தந்தையின் பாகம் மிகவும் பிரபல்யமானது. அந்தத் தந்தையே எங்களுக்கு வழிகாட்டல்களைக் கொடுக்கின்றார் என்பதை நீங்கள் இப்பொழுது அறிவீர்கள். நீங்கள் மீண்டும் ஒரு தடவை உங்கள் சொந்த இராச்சியத்தை ஸ்தாபிக்கின்றீர்கள். குழந்தைகளாகிய நீங்கள் எனது உதவியாளர்கள். நீங்கள் தூய்மையாகுகின்றீர்கள். எனவே, தூய உலகம் நிச்சயமாக உங்களுக்காக ஸ்தாபிக்கப்பட வேண்டும். பழைய உலகம் இப்பொழுது மாற்றமடைந்து, பின்னர் சூரிய, சந்திர வம்சங்களின் இராச்சியம் இருக்கும் என நீங்கள் எழுதலாம். அதன் பின்னர், இராவண இராச்சியம் தொடரும். படங்களைப் பயன்படுத்தி விளங்கப்படுத்துவது மிக இனிமையாக இருக்கும். காலம், திகதி போன்றவை அனைத்தும் அவற்றில் எழுதப்பட்டுள்ளன. பாரதத்தின் புராதன இராஜ யோகம் என்றால் நினைவு ஆகும். நினைவின் மூலம் உங்கள் பாவங்கள் அழிக்கப்படுகின்றன, கற்பதன் மூலம் நீங்கள் ஓர் அந்தஸ்தைப் பெறுகின்றீர்கள். நீங்கள் தெய்வீகக் குணங்களையும் கிரகிக்க வேண்டும். ஆம், நிச்சயமாக மாயையின் புயல்கள் இருக்கவே செய்யும். அதிகாலையில் எழுந்து, பாபாவுடன் பேசுவது மிக நல்லது. பக்தி, ஞானம் இரண்டிற்கும் இது மிகச் சிறந்த நேரமாகும். நீங்கள் மிக இனிய சம்பாஷணையைக் கொண்டிருக்க வேண்டும். நாங்கள் இப்பொழுது மேன்மையான உலகிற்குச் செல்லவுள்ளோம்: தாங்கள் இப்பொழுது சரீரத்தை நீக்கிவிட்டு, ஒரு கருப்பையினுள் செல்லப்போகின்றோம் என்பது முதியவர்களின் இதயத்தில் புகுகின்றது. பாபா அவர்களை மிகவும் போதையடையச் செய்கின்றார்! அமர்ந்திருந்து இவ்வாறு பேசுங்கள், நீங்கள் அதிகளவில் சேமித்துக்கொள்வீர்கள். சிவபாபா எங்களை நரகவாசிகளில் இருந்து சுவர்க்கவாசிகளாக ஆக்குகின்றார். நாங்களே முதலில் வருபவர்கள். நாங்கள் சகல பாகங்களையும் நடிக்கின்ற சகலகலா வல்லுநர்கள் தந்தை கூறுகின்றார்: அழுக்கான ஆடையைத் துறவுங்கள். உங்கள் சொந்தச் சரீரம் உட்பட முழு உலகையும் மறந்துவிடுங்கள். இது எல்லையற்ற துறவாகும். அங்கு, உங்களுக்கு வயதாகும்போது, எவ்வாறு நீங்கள் மீண்டும் ஒரு குழந்தையாகப் போகின்றீர்கள் என ஒரு காட்சி கிடைக்கும். அங்கு அதிகளவு சந்தோஷம் உள்ளது. குழந்தைப் பருவமே அனைத்திலும் சிறந்ததாகும். அதிகாலையில் அமர்ந்திருந்து இவ்விதமாக ஞானக் கடலைக் கடையுங்கள். கருத்துக்கள் தோன்றும்போது, நீங்கள் பெருமளவு சந்தோஷத்தை உணர்வீர்கள். ஒன்று முதல் ஒன்றரை மணி வரை சந்தோஷமாக இருப்பீர்கள். நீங்கள் எந்தளவிற்குப் பயிற்சி செய்கின்றீர்களோ, அந்தளவிற்கு உங்களின் சந்தோஷம் அதிகரித்து, நீங்கள் களிப்படைவீர்கள். நீங்கள் நடந்தும், உலாவித் திரியும்போது பாபாவை நினைவு செய்ய வேண்டும். உங்களுக்கு அதிக நேரம் இருக்கின்றது. தடைகள் வரும் என்பதில் சந்தேகமில்லை. வியாபாரம் செய்யும்போது மக்கள் ஒருபோதும் தூங்கமாட்டார்கள். சோம்பேறிகளே தூங்குவார்கள். இயன்றவரை தொடர்ந்தும் சிவபாபாவை நினைவு செய்யுங்கள். நீங்கள் உணவு தயாரிக்கும்போது சிவபாபாவை உங்கள் புத்தியில் வைத்திருங்கள். நான் சிவபாபாவிற்காகவே இதைச் செய்கின்றேன். அதிகூடிய சுத்தத்துடன் உணவு தயாரிக்கப்பட வேண்டும். அது எவ்விதச் சிக்கல்களையும் உருவாக்கக்கூடாது. பாபாவும் (பிரம்ம பாபா) நினைவில் நிலைத்திருக்கின்றார். அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தந்தை தாயாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. அதிகாலையில் எழுந்து, பாபாவுடன் இனிய சம்பாஷணையைக் கொண்டிருங்கள். தினமும் சந்தோஷப் போஷாக்கைக் கொண்டிருப்பதன் மூலம் அதீந்திரிய சுகத்தை அனுபவம் செய்யுங்கள்.

2. சத்திய யுக இராச்சியத்தை ஸ்தாபிப்பதில் தந்தையின் முழுமையான உதவியாளர் ஆகுவதற்கு, தூய்மையாகுங்கள். நினைவு செய்வதன் மூலம் உங்கள் பாவங்களை அழித்துவிடுங்கள். மிகவும் சுத்தமாக உணவைத் தயாரியுங்கள்.

ஆசீர்வாதம்:
உங்கள் ஆதி ஸ்திதியினால் பாதகமான சூழ்நிலைகளை வெற்றி கொண்டு, சங்கமயுகத்தின் வெற்றி இரத்தினம் ஆகுவீர்களாக.

ஆதி ஸ்திதியை ஏற்பதே, பாதகமான சூழ்நிலைகளை வெற்றி கொள்வதற்கான வழியாகும். அந்தச் சரீரம் கூட உங்களுடையது அல்ல. அது நீங்களும் அல்ல. உங்கள் ஆதி ஸ்திதி, அல்லது ஆதி தர்மம் நீங்கள் சந்தோஷமாக இருப்பதற்கு உதவுகின்றது. சடப்பொருளின் எந்த சமயமும் அதாவது எந்த வெளிச் சமயமோ அல்லது சரீர உணர்வோ ஏதோ ஒரு வகையான துன்பத்தை உங்களை அனுபவம் செய்ய செய்கின்றது. தமது ஆதி ஸ்திதியை சதா பேணுபவர்கள் எப்பொழுதும் சந்தோஷத்தை அனுபவம் செய்கிறார்கள். துன்ப அலைகள் எதுவுமே அவர்களிடம் வர மாட்டாது. அவர்கள் சங்கமயுக வெற்றி சொரூபம் ஆகுகிறார்கள்.

சுலோகம்:
மாற்றத்தின் சக்தியினால், வீணான எண்ணங்களின் ஓட்ட வேகத்தை முடித்துவிட முடியும்.


மாதேஸ்வரியின் பெறுமதியான வாசகங்கள்

இந்த அழியாத இறைஞானத்தைப் பெறுவதற்கு நீங்கள் எந்த மொழியையும் கற்க வேண்டியதில்லை.

எங்களுடைய இறை ஞானம் மிகவும் இலகுவானதும் மிக இனிமையானதும் ஆகும், அதனூடாக உங்களால் பிறவிபிறவிக்காக ஒரு வருமானத்;தை ஈட்ட முடியும். இந்த ஞானம் மிக இலகுவானதாகும். எவராலுமே - ஒரு மகாத்மா முதல் அகல்யா (கல்லாக்கப்பட்டவர்- இராமாயணத்தில் நினைவுகூரப்படுகின்றார்) போன்றவர் வரை, எந்தச் சமயத்தைச் சேர்ந்த சிறுவர் முதல் வயோதிபர் வரையில், அதனை பெற முடியும். பாருங்கள், இது மிக இலகுவாக இருந்த போதிலும், உலக மக்கள் இந்த ஞானத்தை மிக கடினமானது எனக் கருதுகிறார்கள். தாம் பல வேதங்களையும், சமயநூல்களையும், உபநிடதங்கள் போன்றவற்றைக் கற்கும் போது சிறந்த கல்விமான்கள் ஆகலாம் என சிலர் கருதுகிறார்கள். ஆனால் இவற்றைக் கற்பதற்கு அவர்கள் ஒரு மொழியை கற்க வேண்டும். அவர்கள் அதிகளவு ஹர்த்த யோகம் செய்தாலே ஏதோ ஒன்றை அடைய முடியும், ஆனால் எங்களுடைய அனுபவத்தில், இந்த ஞானம் மிக எளிமையானதும் இலகுவானதும் என்பதை நாங்கள் அறிந்திருக்கின்றோம். ஏனெனில், கடவுளே எங்களுக்குக் கற்பிக்கின்றார். எந்த சரீர பலவந்தமோ, ஓதுதலோ, தவம் செய்தலோ, மகத்துவமான சமயநூல்களின் பண்டிதர்கள் ஆகவோ, சம்ஸ்கிருத மொழியை கற்க வேண்டும் என்பதோ கிடையாது. இங்கே, பரமாத்மாவான பரம தந்தையுடன் ஆத்மாக்கள் இயல்பாக யோகம் செய்ய வேண்டும், இந்த ஞானத்தை ஒருவரால் கிரகிக்க முடியாதிருந்தாலும், யோகம் செய்தாலுமே ஒருவர் அதிகளவு நன்மையை பெற்றுக் கொள்வார். இதனூடாக முதலில் நீங்கள் தூய்மை ஆகுகிறீர்கள், இரண்டாவதாக, உங்கள் கர்ம பந்தனங்கள் எரிக்கப்படுகின்றது, நீங்கள் கர்மதீத் ஆகுகிறீர்கள். சர்வசக்திவான் கடவுளை நினைவுசெய்வதால் அதிகளவு சக்தி ஈட்டப்படுகின்றது, பிரம்மாவின் பௌதீக சரீரத்தினூடாக அவர் எங்களுக்கு யோகம் கற்பித்தாலும் பரமாத்மாவான சிவனின் அந்த வடிவமான ஒளியையே நாங்கள் நேரடியாக நினைவுசெய்ய வேண்டும். இந்த நினைவினூடாகவே ஆத்மாக்களில் உள்ள அழுக்கானது அகற்றப்படும். அச்சா.