09.11.19        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்:
இனிய குழந்தைகளே, நீங்கள் தந்தை, ஆசிரியர், சற்குரு ஆகிய மூவரையும் ஒன்றாக நினைவு செய்வதால், உங்கள் நினைவு மிக அற்புதமானதாகும்.

கேள்வி:
மாயை சில குழந்தைகளை அகங்காரம் கொள்ளச் செய்யும்பொழுது, அவர்கள் எதனையிட்டு அக்கறை கொள்ளாமல் உள்ளனர்?

பதில்:
அகங்காரம் கொண்ட குழந்தைகள் சரீர உணர்வுக்கு வருவதால், முரளியைப் பற்றி அலட்சியமானதொரு மனோபாவத்தைக் கொண்டுள்ளனர். ஓர் எலி மஞ்சள் துண்டொன்றைக் கண்டதும், தான் ஒரு பலசரக்குக்கடை முதலாளி என்று எண்ணியதாக ஒரு கூற்று உள்ளது. முரளியை சற்றேனும் வாசிக்காது, தங்களுக்கு சிவபாபாவுடன் நேரடித் தொடர்பு இருப்பதாகக் கூறுகின்ற பலர் உள்ளனர். பாபா கூறுகின்றார்: குழந்தைகளே, முரளியில் எப்பொழுதும் புதிய கருத்துக்கள் உள்ளன. எனவே, ஒருபோதும் முரளியைத் தவறவிடாதீர்கள். இதில் அதிகளவு கவனம் செலுத்தப்படல் வேண்டும்.

ஓம் சாந்தி.
ஆன்மீகத் தந்தை எப்பொழுதோ தொலைந்து இப்பொழுது கண்டுபிடிக்கப்பட்ட இனிமையிலும் இனிமையான குழந்தைகளாகிய உங்களிடம் வினவுகின்றார்: இங்கு நீங்கள் யாருடைய நினைவில் அமர்ந்திருக்கின்றீர்கள்? (தந்தையும், ஆசிரியரும், சற்குருவினதும்). நீங்கள் அனைவரும் மூவரதும் நினைவில் அமர்ந்திருக்கின்றீர்களா? நீங்கள் ஒவ்வொருவரும் உங்களையே வினவ வேண்டும்: நான் இங்கிருக்கும் பொழுது மாத்திரம் நினைவு செய்கின்றேனா, அல்லது நடந்துதிரியும் பொழுதும் நினைவு செய்கின்றேனா? இது ஏனைய ஆத்மாக்களுக்குக் கூறப்படாத அற்புதமானதொரு விடயமாகும். இலக்ஷ்மியும் நாராயணனும் உலக அதிபதிகளாக இருந்தபோதிலும் அந்த ஆத்மாக்களை நீங்கள் தந்தை, ஆசிரியர் அல்லது சற்குரு என்று கூறமுடியாது. உண்மையில் முழு உலகிலுமுள்ள எந்த ஒரு ஆத்மாவையிட்டும் இவ்வாறு கூறமுடியாது. குழந்தைகளாகிய நீங்கள் மாத்திரமே இம்முறையில் நினைவைக் கொண்டிருக்கின்றீர்கள். இந்த பாபாவே உங்களுடைய தந்தையும், ஆசிரியரும், சற்குருவும் என்பதுடன், அவரே பரமன் என்பதையும் உங்களுக்குள் நீங்கள் உணர்ந்துள்ளீர்கள். நீங்கள் மூவரையுமா அல்லது ஒருவரை மாத்திரமா நினைவு செய்கின்றீர்கள்? அவர் ஒருவராக இருந்தபோதிலும், நீங்கள் அவரை மூன்று ரூபங்களின் பண்புகளுடனும் நினைவு செய்கின்றீர்கள். சிவபாபாவே எங்கள் தந்தையும், ஆசிரியரும், சற்குருவும் ஆவார். இது அசாதாரண விடயமாகும். நீங்கள் இதனை அமர்ந்திருக்கும்பொழுதும், நடந்து திரியும்பொழுதும் நினைவு செய்யவேண்டும். பாபா வினவுகின்றார்;: அவரை நினைவு செய்யும்பொழுது, அவரே உங்களுடைய தந்தையும் ஆசிரியரும், சற்குருவும் என்ற எண்ணத்தைக் கொண்டிருக்கின்றீர்களா? அத்தகைய ஒரு சரீரதாரி இருக்கமுடியாது. கிருஷ்ணர் முதலாம் இலக்க சரீரதாரியாயினும், அவரை தந்தை, ஆசிரியர், சற்குரு என அழைக்க முடியாது. இது முற்றிலும் ஓர் அற்புதமான விடயமாகும். ஆகவே நீங்கள் பாபாவை மூன்று ரூபங்களிலும் நினைவு செய்கின்றீர்களா என்று உண்மையாகக் கூறவேண்டும். உணவருந்தும் வேளையில் சிவபாபாவை மாத்திரம் நினைக்கின்றீர்களா, அல்லது மூன்று ரூபங்களும் உங்கள் புத்தியில் தோன்றுகின்றதா? இவ்வாறாக நீங்கள் வேறு எந்த ஆத்மாவையிட்டும் குறிப்பிட முடியாது. இது ஓர் அற்புதமான விடயமாகும். தந்தையின் புகழ் தனித்துவமானது, எனவே இவ்வாறாக நீங்கள் தந்தையை நினைவு செய்தால், பின்னர் உங்கள் புத்தி அற்புதமான அந்த ஒருவரை நோக்கி முழுமையாக ஈர்க்கப்படும். தந்தை இங்கு அமர்ந்திருந்து தனது அறிமுகத்தைக் கொடுப்பதுடன் முழுக் கல்பத்தினதும் ஞானத்தைக் கொடுக்கின்றார்: இவை வெவ்வேறான யுகங்கள். ஒவ்வொரு யுகமும் இத்தகைய பல வருடங்களைக் கொண்டது. இவ்வாறாக இது சுழல்கின்றது. படைப்பவரான அந்தத் தந்தையால் மாத்திரமே இந்த ஞானத்தைக் கொடுக்க முடியும். அவரை நினைவு செய்வதன் மூலம் நீங்கள் அதிகளவு உதவியைப் பெறுவீர்கள். அவர் மாத்திரமே தந்தையும், ஆசிரியரும், சற்குருவுமாவார். ஆவரைப் போன்று வேறு எந்த ஆத்மாவும் மேன்மையாக இருக்கமுடியாது. எவ்வாறாயினும், மாயை உங்களை அத்தகைய தந்தையை மறக்கச் செய்கின்றாள். பின்னர் நீங்கள் ஆசிரியரையும் குருவையும்கூட மறந்துவிடுகின்றீர்கள். தந்தை உங்களை அத்தகையதோர் உலகிற்கு அதிபதிகளாக ஆக்குகின்றார் என்பதை நீங்கள் ஒவ்வொருவரும் இதயபூர்வமாக உணரவேண்டும். எல்லையற்ற தந்தையின் ஆஸ்தியானது நிச்சயமாக எல்லையற்றதாகும். அவரது புகழும் உங்கள் புத்தியில் தோன்ற வேண்டும். நீங்கள் நடந்தும், உலாவியும் திரியும்போதெல்லாம் மூன்று ரூபங்களையும் நினைவு செய்யவேண்டும். அந்த ஆத்மா மாத்திரமே ஒரே நேரத்தில் மூன்று வகையான சேவையையும் செய்கின்றார். இதனாலேயே அவர் பரமன் என அழைக்கப்படுகின்றார். உலகில் அமைதியை ஸ்தாபிப்பதற்காக மக்கள் மாநாடுகள் போன்றவற்றை ஒழுங்கு செய்கின்றார்கள். இதுவே இப்போது நடைபெறுகின்றது என்றும் அது எவ்வாறு நடைபெறுகின்றது என்று புரிந்துகொள்வதற்கு அவர்கள் இங்கு வரவேண்டும். என்றும் அவர்களிடம் கூறுங்கள். யார் இதனைச் செய்கின்றார்கள்? தந்தையின் தொழிலை மக்களுக்கு நீங்கள் நிரூபிக்க வேண்டும். தந்தையின் தொழிலுக்கும், கிருஷ்ணரின் தொழிலுக்கும் இடையே பெருமளவு வேறுபாடு உள்ளது. ஏனைய அனைவரும் அவர்களின் சரீரங்களின் பெயர்களாலேயே அழைக்கப்பட்ட போதிலும், அந்த ஆத்மாவின் பெயரே புகழப்படுகின்றது. அந்த ஆத்மாவே தந்தையும், ஆசிரியரும், சற்குருவுமாவார். அந்த ஆத்மாவிலேயே ஞானம் உள்ளதாயினும், எவ்வாறு அவரால் அதனைக் கொடுக்க முடியும்? ஒரு சரீரத்தினூடாகவே அவரால் இந்த ஞானத்தைக் கொடுக்க முடியும். இந்த ஞானத்தைக் கொடுக்கும்பொழுதே அவர் புகழப்படுகின்றார். சிவஜெயந்தியின்போது குழந்தைகளாகிய நீங்கள் மாநாடுகளை நடாத்துகின்றீர்கள். பல்வேறு சமயங்களின் தலைவர்களையும் நீங்கள் அழைக்கின்றீர்கள். கடவுள் சர்வவியாபகர் அல்ல என்பதை நீங்கள் விளங்கப்படுத்த வேண்டும். கடவுள் ஒவ்வொருவரிலும் இருப்பாராயின், ஒவ்வொரு ஆத்மாவும், தந்தை, ஆசிரியர், சற்குருவாகிய கடவுளா? என்னிடம் கூறுங்கள்: நீங்கள் உலகின் ஆரம்பம், மத்தி, இறுதியின் ஞானத்தைக் கொண்டுள்ளீர்களா? இதனை வேறு எவராலும் உங்களுக்குக் கூறமுடியாது. அதி மேன்மையான தந்தைக்கு அத்தகைய புகழ் இருக்கின்றது என்பது குழந்தைகளாகிய உங்களுக்குள் இருந்து வெளிப்பட வேண்டும். அவரே முழு உலகையும் தூய்மையாக்குபவர். சடப்பொருளும் தூய்மையாகுகின்றது. மாநாடுகள் நடைபெறும்போது, கீதையின் கடவுள் யார் என நீங்கள் முதலில் வினவ வேண்டும். சத்தியயுக தேவதர்மத்தை ஸ்தாபித்தவர் யார்? அவர்கள் கிருஷ்ணர் எனப் பதிலளித்தால் தந்தையின் பெயர் மறைந்துவிடுகின்றது. அல்லது அவர் பெயருக்கும், ரூபத்திற்கும் அப்பாற்பட்டவர் என்று கூறினால் அது அவர் இல்லாதது போன்று ஆகிவிடும். ஆகையால் தந்தை இல்லையாயின், அவர்கள் அநாதைகள் என்று அர்த்தமாகும். அவர்களுக்கு எல்லையற்ற தந்தையைத் தெரியாது. அவர்கள் காமவாளைப் பயன்படுத்தி ஒருவருக்கொருவர் பெருமளவு விரக்தியையும் துன்பத்தையும் கொடுக்கின்றனர். ஆகவே உங்களுடைய புத்தி இந்த விடயங்கள் எல்லாவற்றையும் கடைய வேண்டும். நீங்கள் அவர்களுக்கு வேறுபாட்டைக் காட்ட வேண்டும்: இலக்ஷ்மியும், நாராயணனும் தேவனும், தேவியும் ஆவார்கள். அவர்களினுடையது ஒரு வம்சம் என்பதால், அவர்கள் அனைவரும் தேவர்களும், தேவியராகவே இருக்க வேண்டும். எனவே நீங்கள் சகல சமயங்களைச் சேர்ந்தவர்களையும் அழைக்கவேண்டும். கல்வி கற்றவர்களையும், தந்தையின் அறிமுகத்தைத் தெளிவாகக் கொடுக்கக்கூடியவர்களை மாத்திரமே நீங்கள் அழைக்க வேண்டும். படைப்பினதும், படைப்பின் ஆரம்பம், மத்தி, இறுதியினதும் அறிமுகத்தைக் கொடுக்கக் கூடியவர்களுக்கு அவர்களின் பிரயாணம், தங்குமிட வசதி போன்றவற்றை நாங்கள் ஒழுங்கு செய்து கொடுப்போம் என அவர்களுக்கு எழுதலாம். இந்த ஞானத்தை வேறு எவராலும் கொடுக்க முடியாது என்று உங்களுக்குத் தெரியும். வெளிநாட்டில் இருந்து யாராவது வந்து படைப்பவரையும் படைப்பின் ஆரம்பம், மத்தி, இறுதியினுடைய அறிமுகத்தையும் கொடுப்பாராயின் அவரது அனைத்துச் செலவுகளையும் நாங்கள் ஏற்றுக் கொள்வோம். இவ்வாறாக வேறு எவராலும் விளம்பரப்படுத்த முடியாது. நீங்கள் தைரியமானவர்கள், நீங்கள் மகாவீரர்கள். அவர்கள் (இலக்ஷ்மியும், நாராயணனும்) எவ்வாறு உலக இராச்சியத்தைக் கோரிக் கொண்டார்கள் என்று உங்களுக்குத் தெரியுமா? அவர்கள் எத்தகைய தைரியத்தைக் கொண்டிருந்தார்கள்? இவ்விடயங்கள் அனைத்தும் உங்கள் புத்தியில் பதிய வேண்டும். நீங்கள் அத்தகைய மேன்மையான பணியை மேற்கொள்கின்றீர்கள்! நீங்கள் முழு உலகத்தையும் தூய்மையாக்குகின்றீர்கள். ஆகையால், நீங்கள் தந்தையையும், உங்கள் ஆஸ்தியையும் நினைவு செய்ய வேண்டும். நீங்கள் வெறுமனே சிவபாபாவை நினைவு செய்வது மட்டுமன்றி, அவரின் புகழையும் பேசவேண்டும். இப்புகழானது அசரீரியானவருக்கு மட்டுமே சொந்தமானது. ஆனால் அசரீரியானவர் எவ்வாறு தனது அறிமுகத்தைக் கொடுக்க முடியும்? படைப்பின் ஆரம்பம், மத்தி, இறுதியின் ஞானத்தைக் கொடுப்பதற்கு நிச்சயமாக அவருக்கு ஒரு வாய் தேவைப்படுகின்றது. இந்த வாய் அதிகளவு புகழப்படுகின்றது. கௌமுக்கிடம் (பசுவின் வாய்) செல்வதற்கு மக்கள் பெருமளவு சுற்றி அலைகின்றனர். அவர்கள் அனைத்துக் கதைகளையும் உருவாக்கியுள்ளனர். ஓர் அம்பு எய்யப்பட்டதும் கங்கைகள் தோன்றியதாக அவர்கள் கூறுகின்றனர். தூய்மையாக்குபவை கங்கைகளே என அவர்கள் நினைக்கின்றார்கள். எவ்வாறு ஒருவர் தண்ணீரினால் தூய்மையாக்கப்படுவார்? தந்தை மாத்திரமே தூய்மையாக்குபவர். தந்தை குழந்தைகளாகிய உங்களுக்கு பெருமளவு கற்பிக்கின்றார். நீங்கள் என்ன செய்ய வேண்டுமென்று தந்தை உங்களுக்குக் கூறுகின்றார். ஆகவே படைப்பவரான தந்தையினதும், படைப்பினதும் அறிமுகத்தை யார் வந்து கொடுப்பார்கள்? ரிஷிகளும், முனிவர்களும் நேற்றி, நேற்றி எனக் கூறுவதை சாதுக்களும், சந்நியாசிகளுமே அறிவார்கள். எங்களுக்கு எதுவுமே தெரியாது. அவர்கள் நாஸ்திகர்கள் என்பதே அதன் அர்த்தமாகும். இப்பொழுது ஆஸ்திகர்கள் எவரும் இருக்கின்றார்களா எனப் பாருங்கள். குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது நாஸ்திகர்களிலிருந்து ஆஸ்திகர்கள் ஆகுகின்றீர்கள். உங்களை அதிமேன்மையாக்கும் எல்லையற்ற தந்தையை நீங்கள் அறிவீர்கள். மக்கள் கூவியழைக்கின்றனர் ஓ தந்தையாகிய கடவுளே, எங்;களுக்கு விடுதலையளியுங்கள்! தந்தை விளங்கப்படுத்துகின்றார்: இந்நேரத்தில் முழு உலகிலும் இராவண இராச்சியமே உள்ளது. அனைவருமே சீரழிந்துள்ளனர். ஆனால் அவர்கள் மீண்டும் மேன்மையடைவார்கள். ஆரம்பத்தில் உலகம் தூய்மையாக இருந்தது என்பது குழந்தைகளாகிய உங்களது புத்தியில் உள்ளது. தந்தை தூய்மையற்ற உலகத்தை உருவாக்குவதில்லை. அவர் வந்து, சிவாலயம் என அழைக்கப்படும் புதிய உலகத்தை உருவாக்குகின்றார். சிவபாபாவே சிவாலயத்தை உருவாக்குகின்றார். அவர் எவ்வாறு இதனைச் செய்கின்றார் என்று உங்களுக்குத் தெரியும். பிரளயமோ அல்லது முழுமையான வெள்ளப்பெருக்கோ இடம்பெறுவதில்லை. பஞ்ச பாண்டவர்களே எஞ்சியிருந்ததாகவும், அவர்களும் பின்னர் இமய மலையில் உருகிப்போனதாகவும் பல்வேறு விடயங்களையும் அவர்கள் சமய நூல்களில் எழுதியுள்ளனர். எவ்வாறாயினும், பின்னர் என்ன நடந்தது என்று எவருக்கும் தெரியாது.. பாபா இங்கிருந்து அனைத்து விடயங்களையும் விளங்கப்படுத்துகின்றார். தந்தையே தந்தையும், ஆசிரியரும், சற்குருவுமாவார் என்று உங்களுக்கு மட்டுமே தெரியும். இந்த ஆலயங்கள் அங்கே இருப்பதில்லை. தேவர்கள் முன்னர் இருந்தார்கள். அவர்களின் ஞாபகார்த்த ஆலயங்கள் இங்கு உள்ளது. இவையனைத்தும் நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டுள்ளது. சக்கரம் தொடர்ந்து சுற்றும் பொழுது விநாடிக்கு, விநாடி புதியதாக ஏதாவது ஒன்று நடந்து கொண்டேயிருக்கும். தந்தை குழந்தைகளாகிய உங்களுக்கு மிக நல்ல வழிகாட்டல்களைக் கொடுக்கின்றார். அதிகளவு சரீர உணர்வுள்ள குழந்தைகள் தமக்கு எல்லாமே தெரியும் என்று நினைக்கிறார்கள். அவர்கள் முரளியை வாசிப்பதுமில்லை, அதற்கு மதிப்பளிப்பதுமில்லை. முரளி மிகவும் நல்லது, எனவே நீங்கள் அதைத் தவறவிடக்கூடாது என பாபா உங்களை ஊக்கப்படுத்துகின்றார். நீங்கள் பத்து அல்லது பதினைந்து நாட்களுக்கு முரளியைத் தவறவிட்டால், அமர்ந்திருந்து அவற்றை வாசிக்க வேண்டும். தந்தை கூறுகின்றார்: எவராவது வந்து படைப்பவரினதும், படைப்பின் ஆரம்பம், மத்தி, இறுதியினதும் ஞானத்தைக் கொடுப்பராயின் அவர்களுடைய செலவுகளைக் கொடுப்போம் என் சவால் விடுங்கள். இதனைப் பற்றித் தெரிந்தவர்களால் மாத்திரமே, இவ்வாறு சவால்விட முடியும். ஓர் ஆசிரியருக்குப் பதில் தெரிந்தால் மாத்திரமே அவரால் கேள்விகளைக் கேட்கமுடியும். பதில் தெரியாது எவ்வாறு ஆசிரியரால் கேள்வி கேட்கமுடியும்? சில குழந்தைகள் முரளியைப் பற்றி அலட்சியப் போக்கினைக் கொண்டுள்ளார்கள். நாங்கள் சிவபாபாவுடன் மாத்திரமே ஒரு தொடர்பினைக் கொண்டுள்ளோம் என் அவர்கள் கூறுகின்றார்கள். எவ்வாறாயினும் அவரை நினைவு செய்வது மட்டுமன்றி, சிவபாபா கூறும் விடயங்களை நீங்கள் செவிமடுக்கவும் வேண்டும். பாபா உங்களுக்கு அத்தகைய நல்ல, இனிமையான விடயங்களைக் கூறுகின்றார். ஆனால் மாயை உங்களை முற்றிலும் அகங்காரமுள்ளவர்கள் ஆக்குகின்றாள். ஓர் எலி மஞ்சள் துண்டொன்றைக் கண்டவுடன் தான் ஒரு கடை முதலாளி என எண்ணியதாகக் கூறப்பட்டுள்ளது. முரளியை வாசிக்காத பலர் உள்ளனர். முரளியில் பல புதிய கருத்துக்கள் தொடர்ந்தும் வந்துகொண்டேயிருக்கின்றன. ஆகையால் நீங்கள் இந்த விடயங்கள் அனைத்தையும் புரிந்து கொள்ளவேண்டும். தந்தையின் நினைவில் அமர்ந்திருக்கும்பொழுது, இந்தத் தந்தையே தந்தையும், ஆசிரியரும், சற்குருவுமாவார் என்பதையும் நீங்கள் நினைவு செய்யவேண்டும். இல்லாவிடின், நீங்கள் எவ்வாறு கற்பீர்கள்? தந்தை குழந்தைகளாகிய உங்களுக்கு அனைத்தையும் விளங்கப்படுத்தியுள்ளார். குழந்தைகளாகிய நீங்களே தந்தையை வெளிப்படுத்துவீர்;கள். மகன் தந்தையை வெளிப்படுத்துகின்றார். தந்தை மகனை வெளிப்படுத்துகின்றார். ஆத்மாவே வெளிப்படுகின்றார். பின்னர் தந்தையை வெளிப்படுத்துவது குழந்தைகளின் பணியாகும். அப்பொழுது தந்தை உங்களைக் கைவிடவே மாட்டார். இன்று இந்த இடத்திற்குச் செல்லுங்கள், நாளை வேறு எங்காவது செல்லுங்கள் என அவர் கூறுவார். அவருக்குக் கட்டளையிட எவரும் இல்லை. மக்கள் இந்த அழைப்பிதழைப் பத்திரிகைகளில் வாசிப்பார்கள். இந்நேரத்தில் முழு உலகத்தவர்களும் நாஸ்திகர்களாகவே உள்ளனர். தந்தையே வந்து உங்களை ஆஸ்திகர்கள் ஆக்குகின்றார். இந்நேரத்தில், முழு உலகமும் ஒரு சதத்திற்கேனும் பெறுமதியற்றதாக உள்ளது. அமெரிக்கா எவ்வளவுதான் செல்வத்தையம், சொத்துக்களையும் கொண்டிருந்தாலும், அது ஒரு சதத்திற்கும் பெறுமதியற்றது. இவை அனைத்தும் முடிவடையப்போகின்றன. முழு உலகிலும் நீங்கள் மாத்திரமே ஒரு பவுண் பெறுமதியானவர் ஆகுகின்றீர்கள். அங்கு எவருமே ஏழையாக இருக்கமாட்டார்கள். குழந்தைகளாகிய நீங்கள் சதா இந்த ஞானத்தைக் கடைந்து மலர்ச்சியாக இருக்கவேண்டும். நீங்கள் அதீந்திரிய சந்தோஷத்தைப் பற்றி அறிய விரும்பினால் கோப கோபியர்களைக் கேளுங்கள் என்று நினைவு கூரப்பட்டுள்ளது. இந்த விடயங்கள் சங்கம யுத்துக்கு மட்டுமே பொருந்தும். வேறு எவருக்கும் சங்கமயுகம் பற்றித் தெரியாது. துரித கதியில் சேவை செய்வதனால் சங்கமயுகத்தின் புகழ் வெளித்தோன்றும். ஓ கடவுளே! உங்கள் நாடகம் அற்புதமானது! என்று கூறப்பட்டுள்ளது. கடவுளே தந்தையும், ஆசிரியரும், சற்குருவுமாவார் என்று எவருக்குமே தெரியாது. தந்தை தொடர்ந்தும் குழந்தைகளாகிய உங்களுக்குக் கற்பிக்கின்றார். இந்த போதை குழந்தைகளாகிய உங்களில் நிலைத்தி;ருக்க வேண்டும். இறுதி வரைக்கும் இந்த போதையை நீங்கள்; கொண்டிருக்க வேண்டும். போதையானது மிக விரைவில் சோடாவைப் போன்று ஆகிவிடுகின்றது, அதாவது சோடா முதலில் பொங்கி, பின்னர் கீழே சென்றுவிடுவதைப் போன்றாகும். நீங்கள் அதை சிறிது நேரத்துக்கு வைத்திருந்தால், அது உவர் நீரைப்போல ஆகிவிடும். இவ்வாறு நிகழக்கூடாது. மக்கள் ஆச்சரியப்படுமளவிற்கு நீங்கள் அவர்களுக்கு விளங்கப்படுத்த வேண்டும். அது மிகவும் நல்லது என்று அவர்கள் கூறுகின்றனர், ஆனால் அதனைப் புரிந்துகொண்டு தங்கள் வாழ்க்கையை இவ்வாறு அமைத்துக் கொள்ள நேரம் ஒதுக்குவது அவர்களுக்குச் சிரமமாக உள்ளது. வியாபாரம் போன்றவற்றைச் செய்வதற்கு பாபா உங்களுக்குத் தடை விதிப்பதில்லை. தூய்மையாகி, பாபா உங்களுக்குக் கற்பிக்கின்ற அனைத்தையும் நினைவு செய்யுங்கள். அவர் உங்களுடைய ஆசிரியர், இது ஒரு அசாதாரண கல்வியாகும். எந்த ஒரு மனிதராலும் இந்த ஞானத்தை உங்களுக்குக் கற்பிக்க முடியாது. தந்தை இந்தப் பாக்கிய இரதத்தினுள் பிரவேசித்து உங்களுக்குக் கற்பிக்கின்றார். தந்தை விளங்கப்படுத்தியள்ளார்: அமரத்துவ ரூபமான ஆத்மா வந்து அமரும் உங்களுடைய சிம்மாசனம் இதுவாகும். உங்களுக்கு முழுப்பாகமும் கொடுக்கப்பட்டுள்ளது. இது நிஜமானது என்பதை இப்பொழுது நீங்கள் புரிந்து கொள்கின்றீர்கள். ஏனைய அனைத்து விடயங்களும் செயற்கையானதாகும். நீங்கள் இதை மிக நன்றாகக் கிரகித்து ஒரு முடிச்சைப் போடவேண்டும். அப்பொழுதே நீங்கள் அதைத் தொடும்பொழுது நினைவு செய்வீர்கள். எவ்வாறாயினும், அந்த முடிச்சு ஏன் போடப்பட்டது என்பதைச் சிலவேளைகளில் மறந்து விடுகின்றீர்கள். இதனை நீங்கள் மிக உறுதியாக நினைவு செய்யவேண்டும். ஞானத்துடன் தந்தையின் நினைவும் இருக்கவேண்டும். முக்தியும், ஜீவன்முக்தியும் உள்ளன. மிக இனிமையானவர்கள் ஆகுங்கள்! குழந்தைகளாகிய நீங்கள் ஒவ்வொரு கல்பத்திலும் கற்று, முயற்சி செய்யும் அளவிற்கேற்ப வரிசைக்கிரமமாக உங்கள் ஆஸ்தியைக் கோரிக்கொள்கின்றீர்கள் என பாபா புரிந்துகொண்டாலும், உங்களுக்குக் கற்பிக்கும் ஆசிரியராகிய அவர் உங்களை முயற்சி செய்யத் தூண்டுகின்றார். நீங்கள் மீண்டும், மீண்டும் மறக்கின்றீர்கள். இதனாலேயே சிவபாபாவை நினைவு செய்யவேண்டும் என உங்களுக்கு ஞாபகப்படுத்தப் படுகின்றது. அவரே உங்கள் தந்தையும், ஆசிரியரும், சற்குருவுமாவார் சிறு குழந்தைகள் இவ்வாறு நினைவு செய்வதில்லை. கிருஷ்ணரே, தந்தையும், ஆசிரியரும், சற்குருவும் என நீங்கள் கூறமுடியாது. சத்தியயுகத்து இளவரசனான கிருஷ்ணர் எவ்வாறு குருவாக இருக்கமுடியும்? கீழிறங்கும் நேரத்திலேயே உங்களுக்கு ஒரு குரு தேவைப்படுகின்றார். தந்தை வந்து அனைவருக்கும் ஜீவன்முக்தி அளிப்பதாக நினைவு கூரப்படுகின்றது. அவர்கள் கிருஷ்ணரை கரியைப் போன்று கருமையாகக் காட்டுகின்றார்கள். தந்தை கூறுகிறார்: காமச்சிதையில் அமர்வதால் இந்த நேரத்தில் அனைவரும் கரியைப் போன்று ஆகிவிட்டனர். இதனாலேயே அவர் அவலட்சணமானவர் என்று அழைக்கப்படுகின்றார். இவை புரிந்துகொள்ள வேண்டிய ஆழமான விடயங்களாகும். அனைவருமே கீதையைக் கற்கின்றனர். பாரத மக்கள் சமய நூல்கள் அனைத்திலும் நம்பிக்கை வைத்திருக்கின்றார்கள். அவர்கள் அனைவருடைய உருவங்களையும் வைத்திருக்கின்றனர். ஆகவே அதனையிட்டு நீங்கள் என்ன கூறமுடியம்? அவர்களது பக்தி கலப்படமுள்ளது என்பதே அதன் அர்த்தமாகும். சிவனுடையது மாத்திரமே கலப்படமற்ற பக்தியாகும். சிவபாபாவிடமிருந்து மாத்திரமே நீங்கள் ஞானத்தைப் பெற்றுக்கொள்கிறீர்கள். இந்த ஞானம் வேறுபட்டதாகும். இது ஆன்மீக ஞானம் என்று அழைக்கப்படுகின்றது. அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தந்தை தாயாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. அழியக்கூடிய பொருட்களின் மீதுள்ள போதையைத் துறந்து, நீங்கள் ஒரு சதத்துக்கும் பெறுமதியற்றவர்களிலிருந்து, ஒரு பவுண் பெறுமதியானவர்கள் ஆகுகின்றீர்கள் என்ற ஆன்மீக போதையைப் பேணுங்கள். கடவுளே உங்களுக்குக் கற்பிக்கின்றார், உங்கள் கல்வி அசாதாரணமானது.

2. ஆஸ்திகர்களாகி, தந்தையை வெளிப்படுத்தும் சேவையைச் செய்யுங்கள். அகங்காரம் கொண்டவராகி எந்த ஒரு முரளியையும் தவறவிடாதீர்கள்.


ஆசீர்வாதம்:
ஆசீர்வாதங்களை அருள்பவரின் ஆசீர்வாதங்களை ஒவ்வொரு அடியிலும் பெற்றுக்கொள்வதன் மூலம் கடின உழைப்பிலிருந்து விடுபட்டவராகி அனைத்து உரிமைகளையும் கொண்ட ஆத்மா ஆகுவீர்களாக.

ஆசீர்வாதங்களை அருள்பவரின் குழந்தைகள் ஆசீர்வாதங்களை அருள்பவரிடமிருந்து இயல்பாகவே ஆசீர்வாதங்களை பெற்றுக்கொள்கிறார்கள். ஆசீர்வாதங்கள் அவர்களின் பராமரிப்பு ஆகும். அவர்கள் ஆசீர்வாதங்களின் பாராமரிப்பினால் பராமரிக்கப்படுகின்றார்கள். முயற்சி செய்யாது அத்தகைய மேன்மையான பேற்றினை கொண்டிருக்கும் ஒருவர் ஆசீர்வதிக்கப்பட்டவர் எனக் சுறப்படுகிறார். ஆகவே நீங்கள் பிறவி பிறவியாக பேறுகளுக்கான உரிமையைக் கோரியுள்ளீர்கள். நீங்கள் ஆசீர்வாதங்களை அருள்பவரிடமிருந்து ஒவ்வொரு அடியிலும் அசீர்வாதங்களைப் பெறுகின்றீர்கள், அவ்வாறே சதா தொடர்ந்தும் அவற்றை பெறுவீர்கள். அனைத்து உரிமைகளையும் கொண்ட ஆத்மாவிற்கு ஆசீர்வாதங்களைத் தவிர வேறு எதுவுமில்லை: திருஷ்டியினால், வார்த்தைகளினால், உறவுமுறைகளினால் ஆசீர்வாதங்களே.

சுலோகம்:
காலத்தின் வேகத்திற்கு ஏற்ப உங்களுடைய முயற்சியின் வேகத்தையும் தீவிரப்படுத்துங்கள்.