09.11.20        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்:
இனிய குழந்தைகளே, இது உங்கள் அதி பெறுமதிமிக்க நேரமாகும். எனவே, நீங்கள் அதனை வீணாக்கக்கூடாது. தகுதிவாய்ந்தவர்களுக்கு ஞானத்தைத் தானம் செய்யுங்கள்.

கேள்வி:
தெய்வீகக் குணங்களைத்; தொடர்ந்தும் கிரகித்து, உங்கள் நடத்தையைச் சீர்திருத்துவதற்குரிய இலகுவான வழி என்ன?

பதில்:
பாபா உங்களுக்கு விளங்கப்படுத்தும் விடயங்களைப் பிறருக்கும் விளங்கப்படுத்துங்கள். ஞானச் செல்வத்தைத் தானம் செய்யுங்கள். நீங்கள் இலகுவாகத் தெய்வீகக் குணங்களைக் கிரகிப்பதுடன், உங்கள் நடத்தையும் தொடர்ந்தும் சீர்திருத்;தப்படும். இந்த ஞானத்தைத் தமது புத்தியில் வைத்திருக்க இயலாதவர்களும், ஞானச் செல்வத்தைத் தானம் செய்யாதவர்களும் கருமிகள் ஆவர். அவர்கள் தமக்குத் தாமே அநாவசியமாக இழப்பை உருவாக்குகின்றார்கள்.

பாடல்:
உங்கள் குழந்தைப் பருவ நாட்களை மறந்து விடாதீர்கள்!

ஓம் சாந்தி.
இனிமையிலும் இனிமையான குழந்தைகளே, நீங்கள் பாடலைச் செவிமடுத்ததுடன், அதன் அர்த்தத்தையும் மிக நன்றாகப் புரிந்துகொண்டீர்கள். நீங்கள் ஆத்மாக்கள் என்பதையும், நீங்கள் எல்லையற்ற தந்தையின் குழந்தைகள் என்பதையும் மறந்து விடாதீர்கள். ஒரு நிமிடம் நீங்கள் தந்தையின் நினைவில் மிகவும் சந்தோஷமாக இருக்கிறீர்கள், அடுத்த நிமிடம் நீங்கள் அவரை மறந்து, சந்தோஷமின்மையை உணர்கிறீர்கள். ஒரு நிமிடம் நீங்கள் உயிர் வாழ்கிறீர்கள், மறு நிமிடம் நீங்கள் மரணிக்கின்றீர்கள், அதாவது, ஒரு நிமிடம் நீங்கள் எல்லையற்ற தந்தைக்குச் சொந்தமாக இருக்கிறீர்கள். அடுத்த நிமிடம், நீங்கள் திரும்பவும் உங்கள் லௌகீகக் குடும்பத்தை நோக்கிச் செல்கிறீர்கள். எனவே, தந்தை கூறுகிறார்: இன்று, நீங்கள் சிரிக்கிறீர்கள், ஆனால் நாளை அழ வேண்டாம்! இதுவே இப் பாடலின் அர்த்தமாகும். மனிதர்கள் அமைதியைத் தேடி அதிகளவில் தடுமாறித் திரிகிறார்கள் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள்; அவர்கள் யாத்திரைகள் செல்கிறார்கள். அவர்கள் எங்கும் தடுமாறித் திரிவதனால் அமைதியைப் பெறுவார்கள் என்றில்லை. இந்தச் சங்கமயுகத்தில் மாத்திரமே தந்தை வந்து உங்களுக்கு விளங்கப்படுத்துகிறார். அனைத்திற்கும் முதலில் உங்களை இனங்கண்டு கொள்ளுங்கள்! ஆத்மாக்கள் அமைதி சொரூபங்கள். அமைதி தாமமே அவர்களின் வசிப்பிடம் ஆகும். ஆத்மாக்கள் இங்கு கீழே வரும்பொழுது, நிச்சயமாகச் செயற்பட வேண்டியுள்ளது. நீங்கள் அமைதிதாமத்தில் உள்ளபொழுது, அமைதிநிறைந்தவர்களாக இருக்கிறீர்கள். சத்தியயுகத்திலும் அமைதி உள்ளது; அங்கு சந்தோஷமும், அமைதியும் உள்ளன. அமைதி தாமத்தைச் சந்தோஷ தாமம் என அழைக்க முடியாது. சந்தோஷம் உள்ள இடம் சந்தோஷ தாமம் என்றும், துன்பம் உள்ள இடம் துன்ப தாமம் என்றும் அழைக்கப்படுகிறது. நீங்கள் இப்பொழுது இவ்விடயங்கள் அனைத்தையும் புரிந்து கொள்கிறீர்கள். மக்களை இவற்றைப் புரிந்துகொள்ளச் செய்வதற்கு, நீங்கள் அவர்களுக்குத் தனிப்பட்ட முறையில் விளங்கப்படுத்த வேண்டும். மக்கள் கண்காட்சிகளுக்கு வரும்பொழுது, அனைத்திற்கும் முதலில் அவர்களுக்குத் தந்தையின் அறிமுகத்தை வழங்குங்கள். ஆத்மாக்களின் தந்தை ஒரேயொருவரே என விளங்கப்படுத்தப்படுகிறது. அவரே கீதையின் கடவுள். ஏனைய அனைவரும் ஆத்மாக்கள். ஆத்மாக்கள் தங்களது சரீரங்களை விடுத்து இன்னொன்றை எடுக்கிறார்கள். சரீரங்களின் பெயர்கள் மாறுகின்றன. ஆத்மா எனும் பெயர் மாறுவதில்லை. குழந்தைகளாகிய உங்களால் விளங்கப்படுத்த முடியும்: எல்லையற்ற தந்தை மாத்திரம் சந்தோஷ ஆஸ்தியை வழங்குகிறார். தந்தை சந்தோஷ உலகை ஸ்தாபிக்கிறார். துன்ப உலகை உருவாக்குவது தந்தைக்கு அசாத்தியமான விடயமாகும். பாரதத்தில் இலக்ஷ்மி, நாராயணனின் இராச்சியம் இருந்தது. அதற்குரிய படங்கள் உள்ளன. அவர்களிடம் கூறுங்கள்: உங்களாலும் இந்தச் சந்தோஷத்திற்குரிய ஆஸ்தியைப் பெற முடியும். அது உங்களுடைய கற்பனை என அவர்கள் கூறினால், அவர்களை விட்டு விடுங்கள். இது உங்கள் கற்பனை என நினைப்பவர்கள் எதனையும் புரிந்துகொள்ள மாட்டார்கள். உங்கள் நேரம் மிகவும் பெறுமதியானது. உலகம் முழுவதிலும், வேறு எவரின் நேரமும் உங்களுடையதைப் போன்று பெறுமதி மிக்கதாக இல்லை. முக்கிய நபர்களின் நேரமும் மிகவும் பெறுமதியானது. தந்தையின் நேரமும் மிகவும் பெறுமதியானது! தந்தை அனைத்தையும் உங்களுக்கு விளங்கப்படுத்துவதுடன், உங்களை முற்றிலும் மாற்றுகின்றார். எனவே, தந்தை குழந்தைகளாகிய உங்களுக்கு மாத்திரம் கூறுகிறார்: உங்கள் பெறுமதிமிக்க நேரத்தை வீணாக்காதீர்கள்! தகுதியானவர்களுக்கு ஞானத்தை வழங்குங்கள். நீங்கள் தகுதியானவர்களுக்கே விளங்கப்படுத்த வேண்டும். குழந்தைகள் அனைவராலும் இந்த ஞானத்தைப் புரிந்துகொள்ள முடியாது; சிலருக்கு இதனைப் புரிந்துகொள்ளும் புத்தி இல்லை. அனைத்திற்கும் முதலில் தந்தையின் அறிமுகத்தை வழங்குங்கள். ஆத்மாக்களாகிய எங்களுடைய தந்தை சிவன் என்பதை அவர்கள் புரிந்துகொள்ளும் வரை, அவர்களால் வேறு எதனையும் புரிந்துகொள்ள முடியாது. அவர்களுக்குப் பெருமளவு அன்புடனும், பணிவுடனும் விளங்கப்படுத்துங்கள். பின்னர் அவர்களைச் செல்ல விடுங்கள். ஏனெனில், அசுர குலத்தைச் சார்ந்தவர்கள் விவாதம் ஒன்றை ஆரம்பிக்கத் தயங்க மாட்டார்கள். அரசாங்கம் மாணவர்களை அதிகளவில் புகழ்கிறது! அவர்களுக்காகப் பல ஒழுங்குகளை அரசாங்கம் செய்து கொடுக்கிறது. கல்லூரி மாணவர்களே முதலில் கற்களை எறிய ஆரம்பிக்கிறார்கள். அவர்களிடம் அதிகளவு கோபம் உள்ளது. முதியவர்களாலும், தாய்மார்களாலும் அதிகளவு விசையுடன் கற்களை எறிய முடியாது. பொதுவாக, மாணவர்களே அதிகளவு சத்தம் செய்கிறார்கள். அவர்களுக்கே யுத்தத்திற்குச் செல்வதற்கான பயிற்சி அளிக்கப்படுகிறது. தந்தை இப்பொழுது ஆத்மாக்களாகிய உங்களுக்கு விளங்கப்படுத்துகிறார்: நீங்கள் தலைகீழாக மாறிவிட்டீர்கள்: உங்களை ஆத்மாக்களாகக் கருதுவதற்குப் பதிலாக, நீங்கள் உங்களைச் சரீரங்களாகக் கருதுகிறீர்கள். தந்தை இப்பொழுது உங்களைச் சரியான முறையில் நேராக்குகிறார். இரவிற்கும் பகலிற்கும் இடையிலான வேறுபாடு உள்ளது. சரியான திசையில் நிமிர்த்தப்படுவதன்; மூலம் நீங்கள் உலக அதிபதிகள் ஆகுகிறீர்கள். அரைக்கல்பமாக நீங்கள் தலைகீழாகவே இருந்தீர்கள் என்பதை இப்பொழுது புரிந்துகொள்கிறீர்கள். தந்தை இப்பொழுது உங்களை அரைக்கல்பத்திற்குச் சரியாக முறையில் இடுகிறார். நீங்கள் அல்லாவின் குழந்தைகள் ஆகும்பொழுது, உலக இராச்சியம் என்ற ஆஸ்தியைப் பெறுகின்றீர்கள். இராவணன் உங்களைத் தலைகீழாகத் திருப்பும்பொழுது, அனைத்தும் அழிக்கப்பட்டு, நீங்கள் தொடர்ந்தும் கீழே வீழ்கிறீPர்கள். குழந்தைகளாகிய நீங்கள் இராம இராச்சியத்தைப் பற்றியும், இராவண இராச்சியத்தைப் பற்றியும் புரிந்துகொள்கிறீர்கள். நீங்கள் தந்தையின் நினைவில் நிலைத்திருக்க வேண்டும். உங்கள் சரீரங்களின் ஜீவனோபாயத்திற்காக நீங்கள் செயல்களைச் செய்ய வேண்டியிருப்பினும், இன்னமும் உங்களுக்குப் பெருமளவு நேரம் உள்ளது. உங்களுக்குக்; கற்பிப்பதற்கு மாணவர் இல்லாதபொழுதோ அல்லது உங்களுக்கு வேறு எதுவும் செய்வதற்கு இல்லாதபொழுதோ, தந்தையின் நினைவில் நிலைத்திருங்கள். அந்த வருமானம் தற்காலிகமான காலப்பகுதிக்கே ஆகும், ஆனால் இந்த வருமானமோ சதாகாலத்துக்கும் உரியது. நீங்கள் இதில் அதிகளவு கவனம் செலுத்த வேண்டும். மாயை மீண்டும் மீண்டும் உங்கள் எண்ணங்களை வேறு திசைகளுக்கு எடுத்துச் செல்கிறாள். இது தொடர்ந்தும் நிகழும். மாயை தொடர்ந்தும் உங்களை மறக்கச் செய்கிறாள். அவர்கள் இதன் அடிப்படையில் நாடகம் ஒன்றைக் காட்டுகிறார்கள்: கடவுள் இதனைக் கூறுகின்றார், மாயை இதனைக் கூறுகின்றாள்;. தந்தை குழந்தைகளுக்குக் கூறுகிறார்: சதா என்னை மாத்திரம் நினைவுசெய்யுங்கள்! இதிலேயே தடைகள் ஏற்படுகின்றன. வேறு எதிலும் இந்தளவு தடைகள் ஏற்படாது. தூய்மையின் காரணத்தினால் பலரும் துன்புறுத்தல்களை அனுபவம் செய்கிறார்கள். இந்த நேரத்தின் ஞாபகார்த்தம் பாகவதத்தில் எழுதப்பட்டுள்ளது. அரக்கிகளான பூதகி, சூர்ப்பனகை போன்றவர்கள் உள்ளார்கள். தந்தை வந்து உங்களைத் தூய்மையாக்குகின்ற இந்த நேரத்தையே அவ் விடயங்கள் அனைத்தும் குறிக்கின்றன. நீங்கள் கடந்த காலத்தில் அனுபவம் செய்தவற்றை அவர்கள் ஒரு விழாவாகக் கொண்டாடுகிறார்கள். அவர்கள் தொடர்ந்தும் கடந்த காலத்தைப் புகழ்கிறார்கள். அவர்கள் தொடர்ந்தும் இராம இராச்சியத்தின் புகழைப் பாடுகிறார்கள், ஏனெனில் அது கடந்த காலமாகி விட்டது. உதாரணமாக, கிறிஸ்து வந்து அந்த மதத்தை ஸ்தாபித்தார். அவர்களிடம் அதற்கான காலமும், திகதியும் இருப்பதனால், அவர்கள் தொடர்ந்தும் அவரின் பிறந்த தினத்தைக் கொண்டாடுகிறார்கள். அந்த வியாபாரம் பக்தி மார்க்கத்தில் அரைக்கல்பமாகத் தொடர்கிறது. அது சத்தியயுகத்தில் இடம்பெறுவதில்லை. இந்த உலகம் அழிக்கப்படவுள்ளது. உங்களில் வெகு சிலரே, இந்த விடயங்களைப் புரிந்துகொள்பவர்கள். இறுதியில் ஆத்மாக்கள் அனைவரும் வீட்டிற்குத் திரும்பிச் செல்ல வேண்டும் எனத் தந்தை விளங்கப்படுத்தியுள்ளார். ஆத்மாக்கள் அனைவரும் தங்கள் சரீரங்களை நீக்கி, வீட்டிற்குத் திரும்பிச் செல்வார்கள். வெகு சில நாட்களே எஞ்சியுள்ளன என்பது குழந்தைகளாகிய உங்கள் புத்தியில் உள்ளது. இப்பொழுது அனைத்தும் மீண்டும் ஒருமுறை அழிக்கப்படவுள்ளது. நாங்கள் மாத்திரம் சத்தியயுகத்திற்குச் செல்வோம்; ஆத்மாக்கள் அனைவரும் அங்கு செல்ல மாட்டார்கள். சென்ற கல்பத்தில் அங்கு சென்றவர்கள் வரிசைக்கிரமமாக மீண்டும் செல்வார்கள். அவர்களே நன்றாகக் கற்று, மற்றவர்களுக்கும் கற்பிக்கிறார்கள். மிக நன்றாகக் கற்பவர்கள் வரிசைக்கிரமமாக மாற்றப்படுகிறார்கள். நீங்களும் மாற்றப்படுவீர்கள். ஆத்மாக்கள் அனைவரும் அமைதி தாமத்திற்குச் சென்று வரிசைக்கிரமமாக அமர்ந்திருப்பார்கள் என்பதையும், பின்னர் தொடர்ந்தும் வரிசைக்கிரமமாகக் கீழிறங்கி வருவார்கள் என்பதையும் உங்கள் புத்தி அறியும். தந்தை கூறுகிறார்: எவ்வாறாயினும், தந்தையின் அறிமுகத்தை வழங்குவதே பிரதான விடயமாகும்;. சதா தந்தையின் பெயரை உங்கள் உதடுகளில் வைத்திருங்கள். ஆத்மா என்றால் என்ன? பரமாத்மா என்றால் என்ன? உலகிலுள்ள எவருக்கும் இது தெரியாது. நெற்றியின் மத்தியில் அற்புதமானதொரு நட்சத்திரம் பிரகாசிக்கிறது என அவர்கள் கூறினாலும், அதற்கு மேல் அவர்கள் எதனையும் புரிந்துகொள்வதில்லை. இந்த ஞானம்; வெகு சிலரான உங்களின் புத்தியிலேயே உள்ளது. நீங்கள் மீண்டும் மீண்டும் அதனை மறந்து விடுகிறீர்கள். அனைத்திற்கும் முதலில், தந்தையே தூய்மையாக்குபவர் என்பதை விளங்கப்படுத்துங்கள். அவர் எங்களுக்கு ஆஸ்தியை வழங்குவதுடன், எங்களை மகத்துவமான சக்கரவர்த்திகளாகவும் ஆக்குகிறார். இறுதியில், அந்த நாளும் வந்து விட்டது என்ற பாடல் உங்களிடம் உள்ளது. பக்தி மார்க்கத்தில், நீங்கள் இந்தப் பாதையைத் தேடினீர்கள். துவாபர யுகத்தின் ஆரம்பத்தில் பக்தி ஆரம்பமாகுகின்றது. பின்னர், இறுதியில், தந்தை வந்து உங்களுக்குப் பாதையைக் காட்டுகின்றார். இது கணக்குத் தீர்ப்பதற்குரிய காலம் என அறியப்படுகிறது. அசுர பந்தனங்களுக்குரிய கணக்குகள் அனைத்தும் தீர்க்கப்பட்டு, நீங்கள் வீட்டிற்குத் திரும்பிச் செல்வீர்கள். நீங்கள் 84 பிறவிகளின் பாகங்களைப்; பற்றி அறிவீர்கள். இந்தப் பாகங்கள் தொடர்ந்தும் நடிக்கப்படுகின்றன. மக்கள் சிவஜெயந்தியைக் கொண்டாடுகிறார்கள், எனவே, நிச்சயமாக சிவன் வந்திருக்க வேண்டும். அவர் நிச்சயமாக எதனையாவது செய்திருக்க வேண்டும். அவர் மாத்திரமே புதிய உலகை உருவாக்குகிறார். இலக்ஷ்மியும், நாராயணனும் அதிபதிகளாக இருந்தார்கள். ஆனால் அவர்கள் இப்பொழுது இல்லை. தந்தை மீண்டும் ஒருமுறை இராஜயோகத்தை உங்களுக்குக் கற்பிக்கிறார். அவர் முன்னரும் இந்த இராஜயோகத்தை உங்களுக்குக் கற்பித்தார். இது உங்களைத் தவிர வேறு எவரின் உதடுகளிலிருந்தும் வெளிவர முடியாது. உங்களால் மாத்திரமே இதனை விளங்கப்படுத்த முடியும். சிவபாபா எங்களுக்கு இராஜயோகத்தைக் கற்பிக்கிறார். சிவோஹம் என மக்கள் கூறும்பொழுது, அதுவும் தவறானதே. தந்தை இப்பொழுது உங்களுக்கு விளங்கப்படுத்தியுள்ளார்: நீங்கள் சக்கரத்தில் சுற்றி வந்து, பிராமண குலத்திலிருந்து தேவ குலத்திற்குள் வருகின்றீர்கள். ஹம்சோ சோஹம் என்பதன் அர்த்தத்தை உங்களால் விளங்கப்படுத்த முடியும். நாங்கள் இப்பொழுது பிராமணர்கள், இது 84 பிறவிகளின் சக்கரமாகும். இது உச்சாடனம் செய்கின்ற மந்திரம் அல்ல. இதன் அர்த்தம் உங்கள் புத்தியில் இருக்க வேண்டும். இது ஒரு விநாடிக்குரிய விடயம். எவ்வாறு உங்களால் ஒரு விநாடியில் விதையையும், விருட்சத்தையும்; பற்றிய அனைத்தையும் புரிந்துகொள்ளக்கூடியதாக உள்ளதோ, அவ்வாறே, நீங்கள் ஹம்சோ, சோஹம் என்பதன் இரகசித்தையும் ஒரு விநாடியில் புரிந்துகொள்கிறீர்கள். நாங்கள் இந்த முறையில் சக்கரத்தைச்; சுற்றி வருகிறோம். இதுவும் சுயதரிசனச் சக்கரம் எனப்படுகிறது. நீங்கள் ஒரு சுயதரிசனச் சக்கரதாரி என எவரிடமாவது கூறும்பொழுது, அவர் உங்களை நம்ப மாட்டார். நீங்களே அந்தப் பட்டத்தை உங்களுக்குக் கொடுத்துள்ளீர்கள் என அவர் கூறுவார். அப்பொழுது, நீங்கள் எவ்வாறு 84 பிறவிகளை எடுக்கின்றீர்கள் என உங்களால் விளங்கப்படுத்த முடியும். இந்தச் சக்கரம் தொடர்ந்தும் சுழல்கிறது. ஆத்மா தனது 84 பிறவிகளின் காட்சியைக் காண்கிறார். இது சுயதரிசனச் சக்கரத்தை சுழற்றுவது எனப்படுகிறது. அவர்கள் இதனைச் செவிமடுக்கும்பொழுது, முதலில் வியப்படைவார்கள்; அவர்கள் நினைப்பார்கள்: இவர்கள் என்ன கட்டுக் கதைகளைக் கூறுகிறார்கள்? அதன்பின்னர், நீங்கள் அவர்களுக்குத் தந்தையின் அறிமுகத்தை வழங்கும்பொழுது, நீங்கள் கட்டுக்கதைகள் கூறுவதாக அவர்கள் எண்ண மாட்டார்கள். நீங்கள் தந்தையை நினைவுசெய்கிறீர்கள். பாடப்படுகிறது: பாபா, நீங்கள் வரும்பொழுது நாங்கள் உங்களிடம் எங்களை அர்ப்பணிப்போம். நாங்கள் உங்களை மாத்திரமே நினைவுசெய்வோம். தந்தை கூறுகிறார்: நீங்கள் இவ்வாறு கூறினீர்கள். அதனால் நான் இப்பொழுது அதனை உங்களுக்கு நினைவூட்டுகிறேன். பற்றினை அழித்தவர்களாகி, உங்களுடைய சரீரங்களின் மீதான சகல பற்றையும் அழித்துவிடுங்கள். உங்களை ஆத்மாக்களாகக் கருதி, என்னை மாத்திரம் நினைவுசெய்யுங்கள், உங்கள் பாவங்கள் அனைத்தும் அழிக்கப்படும். நீங்கள் மற்றவர்களுக்குக் கூறுகின்ற இந்த இனிமையான விடயங்களால் அனைவரும் களிப்படைவார்கள். அவர்களுக்குத் தந்தையின் அறிமுகம் இல்லாது விட்டால், தொடர்ந்தும் ஏதாவதொரு விடயத்தையிட்டுச் சந்தேகம் கொள்கின்றார்கள். இதனாலேயே, நீங்கள் முதலில் தந்தையின் அறிமுகத்தை வழங்குகின்ற இரண்டு அல்லது மூன்று படங்களை அவர்களுக்கு முன்னால் வைக்க வேண்டும். தந்தையின் அறிமுகத்தைப் பெற்றுக் கொள்வதனால், அவர்கள் ஆஸ்தியின் அறிமுகத்தையும் பெற்றுக் கொள்வார்கள். தந்தை கூறுகிறார்: நான் உங்களை அரசர்களுக்கெல்லாம் அரசர்களாக்குகிறேன். ஒற்றைக் கிரீடம் தரித்த அரசர்கள், இரட்டைக் கிரீடாதாரிகளான அரசர்களை வணங்குகின்ற படத்தை உருவாக்குங்கள். அப்பொழுது அவர்களால் பூஜிக்கப்படத் தகுதிவாய்ந்தவராக இருப்பதற்கும், பூஜிப்பவராக இருப்பதற்குமான முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்ளக்கூடியதாக இருக்கும். அனைத்திற்கும் முதலில், அவர்கள் தந்தையை வழிபடுகிறார்கள், பின்னர் அவர்கள் தங்கள் சொந்த விக்கிரகங்களை வணங்குகிறார்கள். அவர்கள் கடந்த காலத்தில் வாழ்ந்த தூய்மையானவர்களின் விக்கிரகங்களை அமைத்து, அவற்றை வழிபடுகிறார்கள். நீங்கள் இப்பொழுது இந்த ஞானத்தைப் பெறுகிறீர்கள். முன்னர், நீங்கள் கடவுளிடம் கூறினீர்கள்: நீங்களே பூஜிக்கப்படத் தகுதிவாய்ந்தவரும், பூஜிப்பவரும் ஆவீர்கள்;. நீங்களே இச்சக்கரத்தைச் சுற்றி வருபவர்கள் என இப்பொழுது உங்களுக்கு விளங்கப்படுத்தப்பட்டுள்ளது. எப்பொழுதும் இந்த ஞானத்தை உங்கள் புத்தியில் வைத்திருங்கள். அதன்பின்னர், உங்களால் மற்றவர்களுக்கும் விளங்கப்படுத்த முடியும். உங்கள் செல்வம் தானம் செய்வதனால் குறைவடையாது. செல்வத்தைத் தானம் செய்யாதவர்கள் கருமிகள் எனப்படுகிறார்கள். தந்தை உங்களுக்கு விளங்கப்படுத்தியவற்றை நீங்கள் மற்றவர்களுக்கும் விளங்கப்படுத்த வேண்டும். நீங்கள் மற்றவர்களுக்கு விளங்கப்படுத்தாவிடின், அநாவசியமாக நீங்கள் உங்களுக்கே இழப்பை ஏற்படுத்துகிறீர்கள். உங்களால் தெய்வீகக் குணங்களைக் கிரகிக்க இயலாதிருக்கும். உங்கள் நடத்தையும் அவ்வாறானதாகும். நீங்கள் ஒவ்வொருவரும் நீங்களாகவே புரிந்துகொள்ள முடியும். நீங்கள் இப்பொழுது புரிந்துணர்வைப் பெற்றுள்ளீர்கள். ஏனைய அனைவரும் விவேகம் அற்றவர்கள். நீங்கள் இப்பொழுது அனைத்தையும் அறிவீர்கள். தந்தை கூறுகிறார்: இந்தப் பக்கத்தில் தேவ சமுதாயமும், அந்தப் பக்கத்தில் அசுர சமுதாயமும் உள்ளன. நீங்கள் இப்பொழுது சங்கமயுகத்தில் இருக்கிறீர்கள் என்பதை உங்கள் புத்தியால் புரிந்துகொள்ள முடியும். குடும்பத்தில் ஓர் உறுப்பினர் சங்கமயுகத்தைச் சார்ந்தவராக இருப்பார், இன்னுமோர் உறுப்பினரோ கலியுகத்தைச் சார்ந்தவராக இருப்பார்; இருவரும் ஒன்றாக வாழ்வார்கள். அந்த நபர் அன்னமாகுவதற்குத் தகுதிவாய்ந்தவரல்ல என்பதைக் காணும்பொழுது, யுக்தி ஒன்று உருவாக்கப்பட வேண்டும். இல்லாவிடின் அவர் தொடர்ந்தும் தடைகளை உருவாக்குவார். நீங்கள் மற்றவர்களையும் உங்களைப் போன்றவர்கள் ஆக்குவதற்கு முயற்சி செய்ய வேண்டும். இல்லாவிடின், அவர்கள் தொடர்ந்தும் தடைகளை உருவாக்குவார்கள். அதன்பின்னர், அவர்களில் இருந்து விலகியிருப்பதற்கு நீங்கள் ஒரு வழியைக் கண்டு பிடிக்க வேண்டியிருக்கும். தடைகள் ஏற்படும். இந்த ஞானம் உங்களால் மாத்திரமே வழங்கப்படுகிறது. நீங்கள் மிகவும் இனிமையானவர்கள் ஆகவேண்டும். நீங்கள் பற்றை அழிப்பவர்களாகவும் ஆகவேண்டும். நீங்கள் விகாரங்களில் ஏதாவதொன்றைக் கைவிடும்பொழுது, மற்றவர்கள் சிக்கல்களை உருவாக்குவார்கள். அப்பொழுது, அனைத்துமே சென்ற கல்பத்தில் நிகழ்ந்தவாறே இப்பொழுதும் நிகழ்கிறது என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். இந்தப் புரிந்துணர்வைக் கொண்டிருப்பதால், நீங்கள் மௌனமாக இருக்க வேண்டும். நீங்கள் நியதியைப் புரிந்துகொண்டுள்ளீர்கள். மிக நன்றாக விளங்கப்படுத்துகின்ற சில குழந்தைகளும் வீழ்கிறார்கள்; அவர்கள் பெருமளவு விசையுடன் அறையப்படுகிறார்கள். கூறப்படுகிறது: அவர்கள் சென்ற கல்பத்திலும் அறையப்பட்டிருக்க வேண்டும். நீங்கள் ஒவ்வொருவரும் உள்ளார்த்தமாக இதனைப் புரிந்துகொள்ள முடியும். சிலர் எழுதுகிறார்கள்: பாபா, நான் கோபமடைந்து, ஒருவரை அடித்து விட்டேன். நான் இந்தத் தவறைச் செய்;தேன். தந்தை விளங்கப்படுத்துகிறார்: இயன்றளவிற்கு உங்களைக் கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள். பல்வகைப்பட்ட மனிதர்கள் இருக்கிறார்கள். அப்பாவிகளுக்கு அதிகளவு துன்புறுத்தல்கள் உள்ளன. ஆண்கள் பலசாலிகளாகவும், பெண்கள் பலவீனமானவர்களாகவும் இருக்கிறார்கள். இராவணனை வெல்லும் வகையில் எவ்வாறு மறைமுகமான முறையில் யுத்தம் செய்வது என்பதைத் தந்தை மீண்டும் ஒருமுறை உங்களுக்குக் கற்பிக்கிறார். வேறு எவரின் புத்தியிலும் இந்த யுத்தம் இருப்பதில்லை. இதனைப் புரிந்துகொள்கின்ற நீங்களும் வரிசைக்கிரமமானவர்களே. இது முற்றிலும் புதிய விடயம். சந்தோஷ தாமத்திற்குச் செல்வதற்காகவே நீங்கள் இப்பொழுது கற்கிறீர்கள். நீங்கள் இப்பொழுது இதனை நினைவுசெய்தாலும், பின்னர் இதனை மறந்து விடுவீர்கள். நினைவு யாத்திரையே பிரதான விடயம் ஆகும். நினைவு செய்வதனால், நாங்கள் தூய்மையாகுவோம். அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தந்தை தாயாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. என்ன நிகழ்ந்தாலும், அதனை நியதியாகக் கருதி மௌனமாக இருங்கள். கோபம் கொள்ளாதீர்கள். இயன்றவரை உங்களைக் கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள். முயற்சி செய்து, பிறரை உங்களுக்குச் சமமானவர்கள் ஆக்குவதற்கான வழிகளை உருவாக்குங்கள்.

2. அனைவருக்கும் தந்தையின் அறிமுகத்தைப் பெருமளவு அன்புடனும், பணிவுடனும் வழங்குங்கள். தந்தை கூறுகின்ற இனிமையான விடயங்களை அனைவருக்கும் கூறுங்கள்: உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதி, என்னை நினைவுசெய்யுங்கள். உங்கள் சரீரத்தின் மீதான சகல பற்றையும் வெல்லுங்கள்.

ஆசீர்வாதம்:
நீங்கள் வீணானவை எனும் இராவணனை எரிப்பதற்கு, உண்மையிலேயே அன்பானவராகவும், ஒத்துழைப்பானவராகவும் இருந்து, எப்பொழுதும் உங்கள் பணிவு எனும் கேடயத்தை அணிவீர்களாக.

ஒருவர் உங்களுடைய ஒன்றுகூடலில் ஒரு பலவீனத்தைப் பார்ப்பதற்கு எவ்வளவு முயற்சித்தாலும் பரவாயில்லை, சிறிதளவேனும் சம்ஸ்காரங்களின் முரண்பாடுகள் அல்லது சுபாவம் தென்படாமல் இருக்கட்டும். ஒருவர் உங்களை எவ்வளவுதான் சபித்தாலோ அல்லது அவதூறு செய்தாலோ, ஒரு சாது போன்று ஆகுங்கள். ஒருவர் தவறான எதனையும் செய்தாலும், சரியாக இருங்கள். ஒருவர் முரண்பாட்டை உருவாக்கும்பொழுதும், அவருக்கு அன்பு எனும் நீரைக் கொடுங்கள். இது ஏன்?, இது ஏன் இவ்வாறு உள்ளது? எனும் அத்தகைய கேள்விகளால் நெருப்பில் எண்ணெயை ஊற்றாதீர்கள். பணிவு எனும் கேடயத்தை எப்பொழுதும் அணிந்து கொள்ளுங்கள். பணிவு இருக்குமிடத்தில் நிச்சயமாக அன்பும், ஒத்துழைப்பும் இருக்கும்.

சுலோகம்:
என்னுடையது எனும் உணர்வின் எல்லைக்குட்பட்ட உணர்வுகள் அனைத்தையும் என்னுடைய பாபா எனும் ஒரேயொருவரில் அமிழ்த்துங்கள்.