09.11.23        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்: இனிய குழந்தைகளே, நீங்கள் சரீர உணர்வுடையவர்களாகும்போது, மாயை உங்களை அறைகின்றாள். ஆத்ம உணர்வில் இருங்கள். அப்போது, தந்தையின் ஒவ்வொரு ஸ்ரீமத்தையும் உங்களால் பின்பற்ற முடியும்.

பாடல்:
தந்தைக்கு முயற்சி செய்யும் குழந்தைகள் இருவகையினர் உள்ளனர். அவர்கள் யார்?

பதில்:
தந்தையிடமிருந்து ஆஸ்தி முழுவதையும் பெற்றுக் கொள்வதற்காக முழுமையாக முயற்சி செய்யும் குழந்தைகள் ஒருவகையினர். அவர்கள் ஒவ்வொரு அடியிலும் தந்தையின் ஆலோசனையைப் பெறுகிறார்கள். தந்தையை விவாகரத்து செய்ய முயற்சி செய்பவர்கள் மற்றைய வகையினராவர். துன்பத்திலிருந்து விடுபடுவதற்காகத் தந்தையை நினைவு செய்கின்ற சிலர் உள்ளனர், ஏனையோரோ துன்பத்தில் சிக்கிக்கொள்ள விரும்புகிறார்கள். இதுவும் ஓர் அற்புதமே!

பாடல்:
விட்டில் பூச்சிகளின் சந்தோஷ ஒன்றுகூடலில் சுவாலை ஏற்றப்பட்டுள்ளது...

ஓம் சாந்தி.
இப்பாடலைக் குழந்தைகளாகிய நீங்கள் பலமுறை செவிமடுத்திருக்கின்றீர்கள். புதிய குழந்தைகள் முதல் தடவையாக இதனைக் கேட்கின்றார்கள். ஏனெனில் தந்தை வரும்போது அவர் தனது அறிமுகத்தைக் கொடுக்கின்றார். குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது அறிமுகத்தைப் பெற்றிருப்பதால் நீங்கள் எல்லையற்ற தாய் தந்தையரின் குழந்தைகளாகியுள்ளீர்கள் என்பதை அறிந்துள்ளீர்கள். தாயும் தந்தையுமே நிச்சயமாக மனித உலகைப் படைப்பவராக இருக்கவேண்டும். எவ்வாறாயினும், மாயை மனிதர்களின் புத்தியை முற்றாக மரணிக்கச் செய்துள்ளாள். மிகச் சாதாரணமான இந்த விடயம்கூட அவர்களின் புத்தியில் நிலைத்திருப்பதில்லை. கடவுளே எம்மைப் படைத்தார் என்று அனைவருமே கூறுகின்றார்கள். எனவே அவரே நிச்சயமாகத் தாயும் தந்தையுமாவார். பக்தி மார்க்கத்தில் அவர்கள் கடவுளை நினைவு செய்கின்றார்கள். சமயங்கள் அனைத்தையும் சேர்ந்தவர்கள் நிச்சயமாகத் தந்தையான கடவுளை நினைவு செய்கின்றார்கள். கடவுளின் பக்தர்களாக இருப்பவர்களால் கடவுளாக இருக்க முடியாது. பக்தர்கள் ஆன்மீக முயற்சி செய்து, கடவுளைப் பிரார்த்திக்கிறார்கள். நிச்சயமாக ஒரேயொரு கடவுளே அனைவருக்கும் தந்தையாக இருக்கமுடியும். அதாவது, ஒரேயொருவரே ஆத்மாக்கள் அனைவருக்கும் தந்தையாவார். சரீரங்கள் அனைத்திற்குமென ஒரேயொரு தந்தை இருக்க முடியாது. பல்வேறு தந்தையர்கள் இருக்க வேண்டும். அனைவருக்குமே ஒரு லௌகீகத் தந்தை இருந்தபோதிலும் அவர்கள் ‘ஓ கடவுளே’ என்றே அழைத்து, அவரை நினைவு செய்கின்றார்கள். தந்தை இங்கமர்ந்திருந்து விளங்கப்படுத்துகின்றார்: மனிதர்கள் தந்தையின் அறிமுகத்தையே மறக்கும் அளவிற்கு விவேகமற்றவர்களாக இருக்கின்றார்கள்! சுவர்க்கத்தைப் படைப்பவர் நிச்சயமாக ஒரேயொரு தந்தையே என்பதை நீங்கள் புரிந்துகொண்டுள்ளீர்கள். இப்பொழுது இது கலியுகமாகும். இந்தக் கலியுகம் நிச்சயமாக அழிக்கப்படவேண்டும். ஒவ்வொரு விடயத்திலும் ‘மறைந்துள்ளது’ என்ற வார்த்தை குறிப்பிடப்படுகின்றது. சத்தியயுகம் மறைந்துள்ளது என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். நல்லது. இப்போது எழுந்துள்ள கேள்வி: சத்தியயுகத்தில் உள்ளவர்களுக்குச் சத்தியயுகம் மறைந்து திரேதாயுகம் வரும் என்பது தெரியுமா? இல்லை! அங்கு இந்த ஞானத்திற்கான அவசியம் இல்லை. சக்கரம் எவ்வாறு சுழல்கின்றது என்பதும், அவர்களின் பரலோகத் தந்தை யார் போன்ற இந்த விடயங்கள் எவரின் புத்தியிலும் இல்லை. குழந்தைகளாகிய உங்களுக்கு மாத்திரமே இது தெரியும். “நீங்களே தாயும், தந்தையும், நாங்களே உங்கள் குழந்தைகள்” என்று மக்கள் பாடியபோதிலும், அவர்களுக்கு அவரைத் தெரியாது. ஆகவே இதனைக் கூறுவதும் பயனற்றதே. அவர்கள் அனைவரும் தந்தையை மறந்துவிட்டார்கள். ஆகையாலேயே அவர்கள் அநாதைகள் ஆகியுள்ளார்கள். தந்தை அனைத்தையும் விளங்கப்படுத்துகின்றார். ஒவ்வொரு அடியிலும் ஸ்ரீமத்தைப் பின்பற்றுங்கள். இல்லையேல், எந்த நேரத்திலும் மாயை உங்களை ஏமாற்றுவாள். மாயை மிகவும் ஏமாற்றுக்காரி. மாயையிடமிருந்து உங்களை விடுவிக்கவேண்டியது தந்தையின் பணியாகும். எவ்வாறாயினும் இராவணன் உங்களுக்குத் துன்பத்தைக் கொடுப்பவன். தந்தையே உங்களுக்குச் சந்தோஷத்தைக் கொடுப்பவர் ஆவார். மனிதர்களால் இந்த விடயங்களைப் புரிந்துகொள்ள முடியாது. கடவுளே இன்பத்தையும், துன்பத்தையும் கொடுப்பவர் என அவர்கள் நினைக்கின்றார்கள். மக்கள் திருமணங்களுக்காக அதிகளவு செலவு செய்கின்றார்கள் என்றும், அதனால் சந்தோஷத்தையே இழக்கின்றார்கள் என்றும் தந்தை விளங்கப்படுத்துகின்றார். அவர்கள் தூய மரக்கன்றுகளைத் தூய்மையற்ற மரக்கன்றுகளாக ஆக்க முயற்சி செய்கின்றார்கள். நீங்கள் மாத்திரமே இந்த விடயங்களைப் புரிந்துகொள்கிறீர்கள். உலகம் அவற்றைப் புரிந்துகொள்வதில்லை. மக்களை நச்சுக்கடலில் மூழ்கச் செய்ய அவர்கள் பல வைபவங்களை நிகழ்த்துகிறார்கள். இந்த நஞ்சு சத்திய யுகத்தில் இருப்பதில்லை என்பதும் அவர்களுக்குத் தெரியாது. அது பாற்கடலாகும். இதுவோ நச்சுக் கடல் எனப்படுகிறது. அவ்வுலகம் முற்றிலும் விகாரமற்றது. திரேதாயுகத்தில் இரண்டு கலைகள் குறைந்தபோதிலும், அது விகாரமற்ற உலகம் என்றே அழைக்கப்படுகின்றது. அங்கே பாவம் இருக்க முடியாது. ஏனெனில் இராவண இராச்சியம் துவாபரயுகத்திலேயே ஆரம்பமாகுகிறது. அது அரைக்கு அரையாகும்: ஞானக்கடலும், அறியாமைக்கடலும். அறியாமைக் கடலும் உள்ளது, அப்படித்தானே? தந்தையையும் தெரியாதளவிற்கு மனிதர்கள் அறியாமையில் உள்ளனர். நீங்கள் இதனைச் செய்வதனால் கடவுளைக் காணமுடியும் என்று அவர்கள் கூறுகின்றார்கள். எவ்வாறாயினும் அவர்கள் எதனையும் காண்பதில்லை. அவர்கள் அதிகளவு பிரயத்தனம் செய்து, அநாதைகளாகவும், சந்தோஷமிழந்தவராகவும் ஆன பின்னரே, பிரபுவும் அதிபதியுமான நான் வருகிறேன். பிரபுவும், அதிபதியும் இல்லாதபோது முதலையான மாயை அனைவரையும் விழுங்கிவிடுகின்றாள். தந்தை விளங்கப்படுத்துகின்றார்: மாயை மிகவும் பலசாலி என்பதால் பலரும் அவளிடம் ஏமாந்து விடுகின்றார்கள். சிலர் காமத்தால் அறையப்படுகின்றார்கள். சிலர் பற்றினால் அறையப்படுகின்றார்கள். சரீர உணர்வுடையவர்கள் ஆகுவதாலேயே நீங்கள் அறையப்படுகின்றீர்கள். ஆத்ம உணர்வுடையவர்கள் ஆகுவதிலேயே முயற்சி தங்கியுள்ளது. ஆகையாலேயே தந்தை மீண்டும் மீண்டும் கூறுகிறார்: எச்சரிக்கையாக இருங்கள், மன்மனாபவ! நீங்கள் தந்தையை நினைவு செய்யாவிடின், மாயை உங்களை அறைகின்றாள். ஆகையால் சதா நினைவு செய்ய பயிற்சி செய்யுங்கள். இல்லாவிடின் மாயை உங்களைப் பிழையான செயல்களை செய்ய வைக்கிறாள். சரி அல்லது பிழை ஆகியவற்றிற்குள்ள வேறுபாட்டை அறியக்கூடியதொரு புத்தியை நீங்கள் பெற்றுள்ளீர்கள். எதனையிட்டும் உங்களுக்;குக் குழப்பம் இருக்குமாயின், தந்தையிடம் அதனைப் பற்றி வினவுங்கள். நீங்கள் தந்தி அனுப்பலாம் அல்லது கடிதம் எழுதலாம் அல்லது தொலைபேசியின் மூலமும் வினவலாம். அதிகாலையில் உங்களால் தொலைபேசித் தொடர்பை நேரடியாகப் பெற்றுக் கொள்ள முடியும். ஏனெனில் உங்களைத் தவிர ஏனைய அனைவரும் அந்நேரத்தில் தூங்குவார்கள். ஆகையால் தொலைபேசியினூடாக வினவுங்கள். நாளுக்கு நாள், தொலைபேசித் தொடர்பு புதுப்பிக்கப்படுகின்றது. எவ்வாறாயினும், அரசாங்கம் மிகவும் ஏழ்மையில் உள்ளதால் செலவும் அதற்கேற்பவே செய்யப்படுகின்றது. இந்த நேரம் அனைவரும் முழுமையாக உக்கிய நிலையை அடைந்து, முற்றிலும் தூய்மை அற்றவர்கள் ஆகியுள்ளனர். எவ்வாறாயினும், பாரத மக்கள் ஏன் விசேடமாக ரஜோவும் தமோகுனியும் ஆனவர்கள் என்று அழைக்கப்படுகின்றார்கள். ஏனெனில், அவர்கள் அதியுயர்ந்த சதோபிரதான் நிலையில் இருந்தவர்கள் என்பதாலாகும். ஏனைய சமயத்தவர்கள் அதிகளவு சந்தோஷத்தையும் அனுபவிப்பதில்லை, அதிகளவு துன்பத்தையும் அனுபவிப்பதில்லை. அவர்கள் இப்பொழுது திருப்தியாக உள்ளதாலேயே அவர்களால் அதிகளவு உணவை அனுப்ப முடிகின்றது. அவர்களது புத்தி ரஜோபிரதானாக உள்ளது. அவர்கள் விநாசத்திற்காகத் தொடர்ந்தும் பல புதிய கண்டுபிடிப்புகளைக் கண்டு பிடிக்கின்றார்கள். ஆனால் அவர்களுக்கு இது புரிவதில்லை. ஆகையாலேயே பல படங்கள் போன்றவற்றை அவர்களுக்கு அனுப்ப வேண்டியுள்ளது. இவை மிகவும் நல்ல விடயங்கள் என்பதை அவர்கள் இறுதியிலேயே அறிந்து கொள்வார்கள். அப்படங்களில் ‘இறை தந்தையின் பரிசு” என்று எழுதப்பட்டுள்ளன. அனர்த்தம் இடம்பெறும் போது, இந்த ஓசை ஒலிக்கும், அப்பொழுது தாம் இதனை முன்னர் நிச்சயமாகப் பெற்றுக் கொண்டோம் என்பதை அவர்கள் புரிந்து கொள்வார்கள். இப்படங்கள் அதிகளவு வேலை செய்யும். ஏழைகளுக்குத் தந்தையைத் தெரியாது. ஒரேயொரு தந்தை மாத்திரமே சந்தோஷத்தை அருள்பவர் ஆவார். அனைவரும் அவரை நினைவு செய்கின்றார்கள். இதனை அவர்கள் படத்திலிருந்து மிகத் தெளிவாகப் புரிந்து கொள்ள முடியும். இந்த நேரத்தில் உங்களால் மூன்று சதுர அடி நிலத்தையேனும் பெற முடியாதிருந்த போதும், நீங்களே முழு உலகிற்கும் அதிபதிகள் ஆகுகின்றீர்கள் என்பதைப் பாருங்கள். இந்தப்படங்களும் வெளிநாடுகளில் பல சேவையைச் செய்யும். எவ்வாறாயினும், குழந்தைகள் இப்படத்திற்கு மதிப்பளிப்பதில்லை. செலவு நிச்சயமாகச் செய்யப்பட வேண்டும். அந்த இராச்சியத்தை ஸ்தாபிப்பதற்கு அரசாங்கம் பல மில்லியன் ரூபாய்களைச் செலவு செய்ய நேரிடும், அந்த இராச்சியத்தை ஸ்தாபிப்பதில் பல நூறயிரம் மக்கள் மரணம் அடையவும் நேரிடும். இங்கே எவரும் மரணிப்பது என்ற கேள்விக்கு இடமில்லை. ஸ்ரீமத்தின் அடிப்படையில் நீங்கள் முழுமையாக முயற்சி செய்ய வேண்டும். அப்பொழுதே உங்களால் மிகவும் மேன்மையான அந்தஸ்தைப் பெற முடியும். இல்லாவிடின், நீங்கள் அந்த நேரத்தில் பெருமளவு வருந்த நேரிடுவதுடன், தண்டனையும் கிடைக்கும். தந்தையாக இருப்பதுடன், அவர் உயர் நீதிபதியாகவும் இருப்பார். உங்களின் 21 பிறவிகளுக்கான சுயராச்சியத்தைக் குழந்தைகளாகிய உங்களுக்குக் கொடுப்பதற்காகவே நான் தூய்மையற்ற உலகிற்கு வந்துள்ளேன். நீங்கள் விநாசச் செயல் ஏதேனும் செய்தால் நீங்கள் முழுமையான தண்டனைக்குரியவர் ஆகுவீர்கள். நீங்கள் கூறக்கூடாது: என்ன நடக்கின்றது என்று பார்ப்போம், அடுத்த பிறவியைப் பற்றி இப்பொழுது, யார் அமர்ந்திருந்து சிந்திப்பார்கள்? மனிதர்கள் தமது அடுத்த பிறவிக்காகவே தான தர்மங்களைச் செய்கின்றார்கள். நீங்கள் இப்பொழுது செய்வதெல்லாம் 21 பிறவிகளுக்காகவே ஆகும். அவர்கள் தற்காலிகமானவற்றையே செய்கின்றார்கள். அதற்கான பலனை அவர்கள் நரகத்திலேயே பெறுகின்றார்கள். ஆனால் நீங்களோ பலனைச் சத்தியயுகத்தில் பெறுகின்றீர்கள். இரவுக்கும் பகலுக்குமுள்ள வேறுபாடு உள்ளது. சுவர்க்கம் என்ற 21 பிறவிகளுக்கான உங்களின் வெகுமதியை நீங்கள் பெறுகின்றீர்கள். ஒவ்வொரு விடயத்திலும் ஸ்ரீமத்தைப் பின்பற்றுவதால், உங்கள் படகு கரையேறும். தந்தை கூறுகின்றார்: நான் உங்களை எனது கண்ணில் அமர்த்தி மிகவும் சௌகரியமாகக் கரை சேர்க்கின்றேன். நீங்கள் பெருமளவு துன்பத்தை அனுபவம் செய்துள்ளீர்கள். இப்பொழுது நான் உங்களிடம் ‘என்னை நினைவு செய்யுங்கள்’ என்று கூறுகின்றேன். நீங்கள் சரீமற்றவராக வந்தீர்கள். உங்கள் பாகங்களை நடித்த பின்னர் இப்பொழுது நீங்கள் திரும்பிச் செல்ல வேண்டும். இது உங்கள் அநாதியான பாகங்களாகும். விஞ்ஞான அகங்காரமுடையவர்களால் இந்த விடயங்களைப் புரிந்துகொள்ள முடியாது. ஓர் ஆத்மா மிகவும் சின்னஞ்சிறிய நட்சத்திரம் போன்றவரும், அநாதியான அழிவற்ற பாகத்தின் பதிவை தனக்குள் கொண்டவரும் ஆவார். அது என்றுமே முடிவற்றது. தந்தை விளங்கப்படுத்துகின்றார்: நானே படைப்பவரும், கதாநாயக நடிகரும் ஆவேன். நான் எனது பாகத்தை நடிப்பதற்காக ஒவ்வொரு கல்பத்திலும் வருகின்றேன். பரமாத்மா மனம், புத்தி ஆகியவற்றைக் கொண்டிருக்கின்றார் எனவும், அவர் உயிருள்ளவரும், ஞானம் நிறைந்தவரும் எனவும் கூறப்படுகின்றது. எவ்வாறாயினும், அவர் எத்தகையவர் என்பதை எவருமே அறியார்கள். ஆத்மாக்களாகிய நீங்கள் நட்சத்திரங்களாக உள்ளதைப் போன்று, நானும் ஒரு நட்சத்திரமேயாவேன். நீங்கள் பக்தி மார்க்கத்திலும் என்னை நினைவு செய்தீர்கள். ஏனெனில், நீங்கள் சந்தோஷமற்றவர்களாக இருந்தீர்கள். நான் வந்து, குழந்தைகளாகிய உங்களை என்னுடன் மீண்டும் அழைத்துச் செல்கின்றேன். நான் உங்களின் வழிகாட்டியுமாவேன். பரமாத்மாவாகிய நான், ஆத்மாக்களாகிய உங்களை மீண்டும் வீட்டிற்கு அழைத்துச் செல்கின்றேன். ஓர் ஆத்மா ஒரு நுளம்பை விடவும் சின்னஞ்சிறியவர். இப்பொழுதே குழந்தைகளாகிய நீங்கள் இப்புரிந்துணர்வைப் பெறுகின்றீர்கள். அவர் அனைத்தையும் மிகத் தெளிவாக விளங்கப்படுத்துகின்றார். தந்தை கூறுகின்றார்: நான் உங்களை உலகின் அதிபதிகளாக ஆக்குகின்றேன். எனினும், தெய்வீகக் காட்சிகளுக்கான திறவுகோலை என்னுடனேயே வைத்திருக்கின்றேன். நான் இதனை எவருக்குமே கொடுப்பதில்லை. பக்தி மார்க்கத்தில், இத்திறவுகோல் எனக்கு மாத்திரமே பயன்படுவதாக இருந்தது. தந்தை கூறுகின்றார்: நான் உங்களைத் தூய்மையானவர்களாகவும், பூஜிக்கத் தகுதிவாய்ந்தவர்களாகவும் ஆக்குகின்றேன். மாயை உங்களைத் தூய்மையற்றவர்களாகவும், பூஜிப்பவர்களாகவும் ஆக்குகின்றாள். உங்கள் அனைவருக்கும் பெருமளவு விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், விவேகமானவர்கள் மாத்திரமே புரிந்து கொள்வார்கள். இந்த ஒலிப்பதிவுக் கருவி மிகச் சிறந்த ஒன்றாகும். குழந்தைகள் நிச்சயமாக முரளியைச் செவிமடுக்க வேண்டும். நீங்கள் நீண்டகாலம் தொலைந்திருந்து இப்பொழுது கண்டெடுக்கப்பட்ட குழந்தைகள். பந்தனத்தில் இருக்கின்ற கோபிகைகள்மீது பாபா பெருமளவு பரிவைக் கொண்டிருக்கின்றார். அவர்கள் பாபாவின் முரளியைச் செவிமடுப்பதில் பெருமளவு சந்தோஷத்தை அனுபவம் செய்கின்றனர். குழந்தைகளின் சந்தோஷத்திற்காக ஒருவர் எதைத்தான் செய்யமாட்டார்? கிராமங்களில் வசிக்கின்ற கோபிகைகளைப் பற்றியே பாபா இரவுபகலாக அக்கறை கொண்டிருந்தார். அக்குழந்தைகளைத் துன்பத்திலிருந்து விடுவிப்பதற்கு என்ன வழிமுறைகளைக் கையாளலாம் என்பதைப் பற்றிச் சிந்திக்கும்போது அவருக்குத் தூக்கமே வராது. எவ்வாறாயினும், சிலர் துன்பத்தில் அகப்பட்டுக்கொள்வதற்கான ஆயத்தங்களைச் செய்கின்றனர். சிலர் தங்களின் ஆஸ்தியைக் கோரிக் கொள்வதற்காக முயற்சி செய்கின்றனர். ஏனையவர்களோ அவரை விவாகரத்து செய்வதற்கான முயற்சியைச் செய்கின்றனர். தற்போதைய உலகம் மிகவும் மோசமானதாகும். சில குழந்தைகள் தங்களின் தந்தையைக் கொல்வதற்குக்கூடத் தயங்கமாட்டார்கள். எல்லையற்ற தந்தை அனைத்தையும் மிகத் தெளிவாக விளங்கப்படுத்துகின்றார். நீங்கள் என்றுமே சந்தோஷமற்றவர்களாக ஆகாதவகையில், குழந்தைகளாகிய உங்களுக்கு நான் பெருமளவு செல்வத்தை வழங்குவேன். எனவே, குழந்தைகளாகிய நீங்கள் உங்களின் இதயத்தைக் கருணை நிறைந்ததாக்கி, சந்தோஷத்திற்கான இப்பாதையை அனைவருக்கும் காண்பிக்க வேண்டும். தற்காலத்தில், அனைவரும் தொடர்ந்தும் துன்பத்தையே விளைவிக்கின்றார்கள். எவ்வாறாயினும், ஓர் ஆசிரியர் கற்பிப்பாரேயன்றி, ஒருபோதும் துன்பத்திற்கான பாதையைக் காண்பிக்கமாட்டார். கல்வியே வருமானத்திற்கான மூலாதாரமாகும். கல்வியின் மூலமாகவே நீங்கள் ஜீவனோபாயத்திற்காகச் சம்பாதிப்பதற்குத் தகுதிவாய்ந்தவர்கள் ஆகுகின்றீர்கள். மக்கள் தங்களின் தாய், தந்தையரிடமிருந்து ஓர் ஆஸ்தியைப் பெறுகின்ற போதிலும், அதனால் என்ன பயன்? செல்வம் அதிகரிக்கப்பதற்கேற்ப அவர்கள் செய்யும் பாவமும் அதிகரிக்கின்றது. முன்னர், மக்கள் யாத்திரைகள் செல்லும் போது, அவர்கள் அதிகளவை பணிவைக் கொண்டிருந்தார்கள். ஆனால் இப்பொழுது சிலர் தம்முடன் மதுபானம் போன்றவற்றை எடுத்துச் சென்று இரகசியமாக அருந்துகின்றார்கள். பாபா அதனைப் பார்த்துள்ளார். சிலருக்கு மதுபானம் இல்லாது இருக்க முடியாது. கேட்கவும் வேண்டாம்! சில இராணுவத்தினர் யுத்தத்திற்குச் செல்லும் முன்னர் அதிகளவு மதுபானத்தை அருந்திய பின்னரே யுத்தம் புரிவதற்குச் செல்கின்றார்கள். அவர்கள் மரணிப்பதையிட்டுக் கவலைப்படுவதில்லை. அவர்கள் ஆத்மா ஒரு சரீரத்தை நீக்கி இன்னொன்றை எடுக்கின்றார் என்று எண்ணுகின்றார்கள். இந்த அழுக்கான சரீரத்தை நீக்க வேண்டும் என்ற ஞானத்தைக் குழந்தைகளாகிய நீங்கள் பெற்றுள்ளீர்கள். ஆனால், அவர்களுக்கோ இந்த ஞானம் இல்லை. எவ்வாறாயினும், அவர்கள் கொலை செய்தல், மரணம் அடைதல் என்பதைப் பழக்கம் ஆக்கியுள்ளார்கள். நாங்கள் இங்கமர்ந்திருக்கும் பொழுதே பாபாவிடம் செல்ல வேண்டும். இது பழைய தோலாகும். குளிர் காலத்தில் பாம்பின் தோல் வறண்டு விடுவதால், அது பழையதை நீக்கிவிடுகின்றது. உங்கள் பாகங்களை நடிக்கும் போது, உங்கள் தோல் பழையதாகி மிகவும் அழுக்கடைகின்றது. நீங்கள் அதனை இப்பொழுது துறக்க வேண்டும். நீங்கள் பாபாவிடம் திரும்பிச் செல்ல வேண்டும். பாபா இதற்கான வழிமுறைகளை உங்களுக்குக் காட்டியுள்ளார்: மன்மனாபவ! என்னை நினைவு செய்யுங்கள், அவ்வளவே, நீங்கள் அமர்ந்திருக்கும் பொழுதே உங்கள் சரீரங்களை நீக்கி விடுவீர்கள். சந்நியாசிகளுக்கும் இவ்வாறே நடைபெறும். அவர்கள் அமர்ந்திருக்கும் போதே சரீரத்தை விட்டுச் செல்வார்கள். ஆத்மா பிரம்ம தத்துவத்துடன் இரண்டறக் கலக்கின்றார் என்று அவர்கள் நினைக்கின்றார்கள். எனவே அவர்கள் பிரம்ம தத்துவத்துடன் யோகம் செய்கின்றார்கள். எவ்வாறாயினும், அவர்களால் அங்கு செல்ல முடியாது. அதே போன்றே, மக்கள் தம்மைக் காசியில் அர்ப்பணிக்கின்றார்கள். அவர்கள் தற்கொலை செய்து கொள்கின்றார்கள். சந்நியாசிகள் அமர்ந்திருக்கும் பொழுது, எவ்வாறு சரீரத்தை விட்டுச் செல்கின்றார்கள் என்பதை பாபாவும் பார்த்துள்ளார். அது ஹத்தயோக துறவறமாகும். நீங்கள் எவ்வாறு 84 பிறவிகளை எடுக்கின்றீர்கள் என்பதைத் தந்தை விளங்கப்படுத்துகின்றார். அவர் உங்களுக்கு அதிகளவு ஞானத்தைக் கொடுக்கின்றார். ஆனால் அரிதாகவே எவரும் ஸ்ரீமத்தை பின்பற்றுகின்றனர். சரீர உணர்வுடையவர்கள் ஆகுவதால், சிலர் தந்தைக்கே தமது சொந்த வழிகாட்டல்களைக் கொடுக்க ஆரம்பிக்கின்றார்கள். தந்தை விளங்கப்படுத்துகின்றார்: ஆத்ம உணர்வுடையவர்கள் ஆகுங்கள்! நான் ஓர் ஆத்மா. பாபா, நீங்கள் ஞானக் கடல் ஆவீர்கள். பாபா, நான் இப்பொழுது உங்களது கட்டளைகளை மாத்திரமே பின்பற்றுவேன். அவ்வளவே! ஒவ்வொரு அடியிலும் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியமாகும். தவறுகள் தொடர்ந்தும் செய்யப்பட்டாலும், நீங்கள் முயற்சி செய்ய வேண்டும். நீங்கள் செல்லும் இடத்திலெல்லாம் தந்தையை நினைவு செய்யுங்கள். உங்கள் தலையில் பெரும் பாவச்சுமை உள்ளது. நீங்கள் கர்ம வேதனையையும் தீர்க்க வேண்டும். இந்தக் கர்ம வேதனை உங்களை இறுதிவரை விடாது. ஸ்ரீமத்தைப் பின்பற்றுவதன் மூலம், நீங்கள் தூய புத்தி உடையவர்கள் ஆக வேண்டும். தர்மராஜும் அவருடன் இருக்கின்றார் என்பதால் அவர் பொறுப்பெடுக்கின்றார். தந்தை இங்கமர்ந்திருக்கும் போது, நீங்கள் ஏன் சுமையைச் சுமக்கின்றீர்கள்? தூய்மையாக்குகின்ற தந்தை தூய்மையற்றவர்களின் ஒன்றுகூடலுக்கே வருகின்றார். இது புதியதொரு விடயமல்ல. நீங்கள் உங்கள் பாகத்தை முன்னரும் எண்ணிக்கையற்ற தடவைகள் நடித்திருக்கின்றீர்கள். அதனைத் தொடர்ந்தும் நடிப்பீர்கள். இதுவே அற்புதம் என்று அழைக்கப்படுகின்றது. அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்பொழுதோ தொலைந்து இப்பொழுது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பரலோக பாப்தாதாவின் அன்பும், நினைவுகளும், காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. தந்தையைப் போன்று கருணை நிறைந்தவராகி, அனைவரையும் துன்பத்திலிருந்து விடுதலை செய்யுங்கள். அவர்களுக்குச் சந்தோஷப் பாதையைக் காட்டுங்கள்.

2. அழிக்கும் (தவறான) செயல்கள் எதனையும் செய்யாதீர்கள். ஸ்ரீமத்தின் அடிப்படையில், 21 பிறவிகளுக்கான உங்கள் பாக்கியத்தை உருவாக்குங்கள். நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு அடியிலும் மிகவும் எச்சரிக்கையாக இருங்கள்.

ஆசீர்வாதம்:
உங்களின் சத்தியங்களை (வைதா) உணர்ந்தவராக இருப்பதன் மூலம், சதா தந்தையிடமிருந்து ஆசீர்வாதங்களைப் பெறுவதற்குத் தகுதிவாய்ந்தவராகி, நன்மை (ஃபைதா) அடைவீர்களாக.

உங்களின் மனதில், வார்த்தைகளில் அல்லது எழுத்தில் என்ன சத்தியங்களைச் செய்கிறீர்களோ, அவற்றை உங்களின் விழிப்புணர்வில் வைத்திருங்கள். உங்களால் அந்தச் சத்தியங்களின் முழுமையான நன்மையைப் பெற்றுக் கொள்ள முடியும். எத்தனை தடவைகள் நீங்கள் சத்தியங்களைச் செய்தீர்கள் என்றும், எத்தனை தடவைகள் நீங்கள் அவற்றை நிறைவேற்றினீர்கள் என்றும் சோதித்துப் பாருங்கள். சத்தியங்களும் நன்மையும் : இந்த இரண்டிற்கும் இடையில் ஒரு சமநிலை இருக்க வேண்டும. அப்போது நீங்கள் தொடர்ந்தும் ஆசீர்வாதங்களை அருள்பவரான தந்தையிடமிருந்து ஆசீர்வாதங்களைப் பெறுவீர்கள். உங்களிடம் மேன்மையான எண்ணங்கள் இருப்பதைப் போல், மேன்மையான செயல்களையும் செய்யுங்கள். நீங்கள் வெற்றியின் சொரூபம் ஆகுவீர்கள்.

சுலோகம்:
தந்தை மட்டுமே புலப்படும் வகையில் உங்களை ஒரு தெய்வீகக் கண்ணாடி ஆக்கிக் கொள்ளுங்கள். இது உண்மையான சேவை எனப்படும்.