10.01.19        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்:
இனிய குழந்தைகளே, தந்தைக்கு உரியவராகி, தந்தையின் பெயரைப் பெருமையடையச் செய்யுங்கள். நீங்கள் முற்றிலும் தூய்மையாகுவதால், பெயர் பெருமையடையும். நீங்கள் முற்றிலும் இனிமையானவராகவும் ஆகவேண்டும்.

கேள்வி:
குழந்தைகளாகிய உங்களுக்குச் சங்கமயுகத்தில் ஏற்படுகின்ற, ஆனால், சத்தியயுகத்தில் இல்லாத கவலை எது?

பதில்:
தூய்மையாக வேண்டுமென்ற ஒரு கவலை சங்கம யுகத்தில் இருக்கிறது. தந்தை உங்களை ஏனைய அனைத்து விடயங்களிலும் கவலையற்றவர்களாக ஆக்கியிருக்கிறார். உங்கள் பழைய சரீரங்களைச் சந்தோஷமாக விட்டுச் செல்லும் வகையில் நீங்கள் முயற்சி செய்;கின்றீர்கள். நீங்கள் அந்தப் பழைய ஆடைகளை நீக்கி விட்டுப் புதியவற்றை அணிந்து கொள்வீர்கள் என்று உங்களுக்குத் தெரியும். குழந்தைகளாகிய நீங்கள் எல்லோரும் உங்களுக்கு எவ்வளவு சந்தோஷம் இருக்கிறதென்றும் எந்தளவுக்குத் தந்தையை நினைவு செய்கிறீர்கள் என்றும் உங்கள் இதயத்தைக் கேட்க வேண்டும்.

ஓம் சாந்தி.
இனிமையிலும் இனிமையான நீண்ட காலமாகத் தொலைந்திருந்து இப்போது கண்டெடுக்கப்பட்ட குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தை விளங்கப்படுத்துகிறார். அவர் அவர்களுக்கு விளங்கப்படுத்தி, கற்பிக்கின்றார். படைப்பவரையும் படைப்பின் ஆரம்பம், நடுப்பகுதி, இறுதி பற்றியதுமான இரகசியங்களை அவர் உங்களுக்குக் கற்பிக்கின்றார். மேலும் அவர் கூறுகிறார்: சகல தெய்வீகக் குணங்களும் நிறைந்தவராகி, தெய்வீகமான பண்புகளைக் கிரகியுங்கள். தந்தையின் நினைவில் இருந்தால், சதோபிரதானாகுவீர்கள். இந்த நேரத்தில் உலகம் தமோபிரதானாக இருக்கிறதென்பது உங்களுக்குத் தெரியும். உலகம் சதோபிரதானாக இருந்தது. ஐயாயிரம் வருடங்களுக்குப் பின், இப்போது அது தமோபிரதானாகி விட்டது. இது ஒரு பழைய உலகம். இவர் புதிய உலகத்தில் இருந்தார் என்றோ அல்லது இவர் சாந்திதாமத்தில் இருந்தவர் என்றோ ஒவ்வொருவருக்கும் கூறப்படலாம். தந்தை இங்கிருந்து ஆத்மாக்களாகிய உங்களுக்கு விளங்கப்படுத்துகிறார்: ஓ ஆன்மீகக் குழந்தைகளே, நிச்சயமாக நீங்கள் சதோபிரதானாக வேண்டும். நிச்சயமாக நீங்கள் தந்தையிடமிருந்து உங்கள் ஆஸ்தியைப் பெற வேண்டும். உங்கள் தந்தையாகிய என்னை நீங்கள் நிச்சயமாக நினைவு செய்ய வேண்டும். லௌகீகக் குழந்தைகளும் தமது தந்தையை நினைவு செய்கிறார்கள். அவர்களுக்கு வயது வந்ததும், எல்லைக்குட்பட்ட ஆஸ்திக்கு உரிமை பெறுகிறார்கள். நீங்கள் எல்லையற்ற தந்தையின் குழந்தைகள். நீங்கள் தந்தையிடமிருந்து எல்லையற்றதொரு ஆஸ்தியைப் பெற வேண்டும். இப்போது பக்தி போன்றவற்றைச் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. குழந்தைகளாகிய நீங்கள் இது ஒரு பல்கலைக்கழகம் என்பதை அறிந்து கொண்டு விட்டீர்கள். மனிதர்கள் எல்லோருமே கற்க வேண்டும். நீங்கள் உங்கள் புத்தி;யை எல்லையற்றதாக்கிக் கொள்ள வேண்டும். இப்போது இந்தப் பழைய உலகம் மாற்றமடையப் போகின்றது. இப்போது தமோபிரதானாக இருப்பவர்கள் சதோபிரதானாகுவார்கள். இந்த நேரத்தில் குழந்தைகளாகிய நீங்கள் எல்லையற்ற தந்தையிடமிடருந்து உங்கள் எல்லையற்ற சந்தோஷம் என்னும் ஆஸ்தியைப் பெற்றுக் கொள்கிறீர்கள் என்பது குழந்தைகளாகிய உங்களுக்குத் தெரியும். இப்போது நாங்கள் ஆன்மீகத் தந்தையொருவருடைய வழிகாட்டல்களையே பின்பற்ற வேண்டும். ஆத்மாக்களாகிய நீங்கள் இந்த நினைவு யாத்திரை மூலம், சதோபிரதானாகுகிறீர்கள். அதனையடுத்து நீங்கள் சதோப்பிரதான் உலகத்திற்குச் செல்ல வேண்டியிருக்கும். நீங்கள் பிராமணர்கள் என்றும், தந்தைக்குரியவர்கள் என்றும் இப்போது நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். நீங்கள் கற்றுக் கொண்டிருக்கிறீர்கள். இந்தக் கல்வி ஞானம் எனப்படுகிறது. பக்தி மார்க்கம் வேறுபட்டது. தந்தை பிராமணர்களாகிய உங்களோடு இந்த ஞானத்தைப் பேசுகிறார். வேறு யாருக்கும் இந்த ஞானம் தெரியாது. ஆசிரியரான ஞானக்கடலாகிய தந்தை எவ்வாறு கற்பிக்கிறார் என்றே அவர்களுக்குத் தெரியாது. பாபா தொடர்ந்தும் பல தலைப்புகளை விளங்கப்படுத்துகிறார். தந்தைக்கு உரியவராகித் தந்தையின் பெயரைப் பெருமைப்படுத்தி, முற்றிலும் தூய்மையாகுவதே முதற்;தரமான விடயமாகும். நீங்கள் முற்றிலும் இனிமையானவர்களாக வேண்டும். இது இறை ஞானம். கடவுளே இங்கிருந்து எங்களுக்குக் கற்பிக்கிறார். அதிமேலான அந்தத் தந்தையையே நீங்கள் நினைவு செய்ய வேண்டும். உங்களை ஆத்மாவாகக் கருதிக் கொள்வது ஒரு விநாடிக்குரிய விடயமாகும். நீங்கள் சாந்தி தாமவாசிகள் என்றும், இங்கே நீங்கள் உங்கள் பாகங்களை நடிப்பதற்காக வருகிறீர்கள் என்றும் ஆத்மாக்களாகிய நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். ஆத்மாக்கள் தொடர்ந்து பிறவிகளும் மறுபிறவிகளும் எடுக்கிறார்கள். இப்போது நாங்கள் எங்கள் 84 பிறவிப் பாகங்களை வரிசைக்கிரமமாகப் பூர்த்தி செய்து விட்டோம். நீங்கள் இந்தக் கல்வியையும் இந்தப் பாகத்தையும் புரிந்து கொள்ள வேண்டும். நாடகத்தின் இரகசியங்களும் உங்கள் புத்தியில் இருக்கின்றன. இது உங்கள் இறுதிப் பிறவியென்றும் இந்த இறுதிப் பிறவியில் நீங்கள் தந்தையைச் சந்தித்திருக்கிறீர்;கள் என்றும் உங்களுக்குத் தெரியும். நீங்கள் உங்கள் 84 பிறவிகளைப் பூர்த்தி செய்யும் போது, பழைய உலகம் மாற்றமடைகிறது. இந்த எல்லையற்ற நாடகம், 84 பிறவிகள் பற்றியும் இந்தக் கல்வியைப் பற்றியும் கூட உங்களுக்குத் தெரியும். 84 பிறவிகள் எடுத்து, இப்போது நீங்கள் இறுதிக் கட்டத்தை வந்தடைந்திருக்கிறீர்கள். இப்போது நீங்கள் கற்றுக்; கொண்டிருக்கிறீர்கள். அதன் பின், புதிய உலகத்திற்குச் செல்வீர்கள். புதியவர்கள் தொடர்ந்து வருகிறார்கள். தொடர்ந்து அவர்களுக்கு ஏதேனும் ஒரு கருத்தில் நம்பிக்கை ஏற்படுகிறது. சிலர் இந்தக் கல்வியில் ஈடுபடுகிறார்கள். தாங்கள் தூய்மையாகவும் சதோபிரதானாகவும் ஆகுகிறார்கள் என்பது அவர்களது புத்தியில் உள்ளது. தூய்மையாகுவதால் நாம் தொடர்ந்து முன்னேற்றமடைவோம். பாபா விளங்கப்படுத்தியிருக்கிறார்: உங்களுக்கு எவ்வளவுக்குத் தந்தையின் நினைவு இருக்கிறதோ, அதற்கேற்ப ஆத்மாக்களாகிய நீங்கள் தொடர்ந்து தூய்மையாகுகிறீர்கள். குழந்தைகளாகிய உங்கள் புத்தியில் நாடகம் முழுவதும் உள்ளது. இந்த உலகத்தைச் சேர்ந்த எல்லாவற்றையும் விட்டு வி;ட்டே இங்கே நீங்கள் வந்திருக்கிறீர்கள் என்பதும் உங்களுக்குத் தெரியும். இந்தக் கண்களால் காண்பனவற்றை நீங்கள் பார்க்கக்கூடாது. அவையெல்லாம் அழியப் போகின்றன. இப்போது இது உங்கள் இறுதிப் பிறவி. வேறு யாருக்கும் இந்த எல்லையற்ற நாடகத்தைப் பற்றித் தெரியாது. முழுச் சக்கரத்தைப் பற்றியும் இப்போது உங்களுக்குத் தெரியும். தந்தை இப்போது உங்களைத் தமோபிரதானிலிருந்து சதோபிரதானாக்குவதற்காக வந்திருக்கிறார். அந்தப் பரீட்சை 12 மாதங்களின் பின்பு இடம்பெறும். உங்கள் நினைவு யாத்திரை இன்னும் பூர்த்தியாகவில்லை. பலவற்றையும் நீங்கள் நினைவு செய்கிறீர்கள். இந்த நினைவு உறுதியாகும் போது, வேறெதையும் நீங்கள் நினைவு செய்ய மாட்டீர்கள். ஆத்மாக்களாகிய நீங்கள் சரீரமற்றறவர்களாக வந்தீர்கள். சரீரமற்றவர்களாகவே நீங்கள் திரும்பிச் செல்ல வேண்டும். இந்த உலகம் முழுவதிலுமுள்ள ஒவ்வொரு மனிதனுடைய பாகத்தைப் பற்றியும் உங்களுக்குத் தெரியும். பல மனிதர்கள் இருக்கிறார்கள். அவர்களது எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இப்போது மில்லியன் கணக்கானவர்கள் இருக்கிறார்கள். சத்தியயுகத்தில் நாங்கள் மிகச்சிலரே இருப்போம். பிறப்பும் மறுபிறப்பும் எடுத்துக் கொண்டு வரும் போது, வெவ்வேறு கிளைகளிலிருந்து பலவகையான மதப்பிரிவுகளும் சிறுபிரிவுகளும் வளர்வதால்;, விருட்சம் மிகவும் பெரியதாகி விட்டது. ஆதி சனாதன தேவிதேவதா தர்மம் இப்போது மறைந்து விட்டது. நாம் தேவ தர்மத்தி;ற்கு உரியவர்களாக இருந்த போது, சதோபிரதானாக இருந்தோம். அத் தர்மம் இப்போது தமோப்பிரதானாகி விட்டது. ஆனாலும், மீண்டும் அது சதோப்பிரதானாகும். அவ்வாறு ஆகுவதற்காகவே நாம் கற்றுக் கொண்டிருக்கிறோம். எவ்வளவுக்கு நீங்கள் கற்று, மற்றவர்களுக்கும் கற்பிக்கின்றீர்களோ அவ்வளவுக்கு பலருக்கு நன்மை ஏற்படும். அளவற்ற அன்போடு நீங்கள் விளங்கப்படுத்த வேண்டும். ஆகாய விமானங்களிலிருந்து துண்டுப்பிரசுரங்களைக் கீழே வீச வேண்டும். அவர்கள் பிறவி, பிறவியாகப் பக்தி செய்து கொண்டு இருக்கிறார்கள் என்பதை நீங்கள் அந்தத் துண்டுப்பிரசுரங்களில் விளங்கப்படுத்த வேண்டும். கீதையைக் கற்பதும் பக்தியேயாகும். கீதையைக் கற்;பதால் யாராவது மனிதனிலிருந்து தேவனாகி விடுவார் என்றில்லை. நாடகத்திற்கேற்ப, தந்தை வரும் போது மட்டுமே சதோப்பிரதானாகும் வழியை அவர் உங்களுக்குக் காட்டுகிறார். அதன் பின் நீங்கள் சதோபிரதான் அந்தஸ்தொன்றைப் பெற்றுக் கொள்கிறீர்கள். இந்தக் கல்வியின் மூலம் நீங்கள் அவ்வாறாகப் போகிறீர்கள் என்பதை நீங்கள் புரிந்து கொள்கிறீர்;கள். இது கடவுளின் பாடசாலை. கடவுளே உங்களுக்குக் கற்பித்து, உங்களைச் சாதாரண மனிதனிலிருந்து நாராயணராக்குகிறார். நாங்கள் சதோபிரதானாக இருந்த போது சுவர்க்கம் இருந்தது. நாங்கள் தமோபிரதானாகிய போது, நரகமே இருக்கிறது. சக்கரம் சுழல வேண்டும். தந்தை வந்து, நீங்கள் மனிதர்களிலிருந்து தேவர்களாகவும் உலக அதிபதிகளாகவும் ஆகுவதற்காக உங்களை முயற்சி செய்யத் தூண்டுகிறார். நீங்கள் தந்தையை நினைவு செய்து, தெய்வீக குணங்களைக் கிரகிக்க வேண்டும் நீங்கள் சண்டை சச்சரவில் ஈடுபடக்கூடாது. தேவர்கள் ஒருபோதும் சண்டை சச்சரவில் ஈடுபடுவதில்லை. அவர்களைப் போல் நீங்கள் ஆக வேண்டும். நீங்களே சகல நற்குணங்களாலும் நிறைந்தவர்கள். அத்துடன், ஸ்ரீமத்தின் அடிப்படையில் மீண்டும் நீங்கள் அவ்வாறு ஆகவேண்டும். உங்களை நீங்கள் கேட்டுப் பார்க்க வேண்டும்: நான் எந்தளவுக்குச் சந்தோஷமாக இருக்கிறேன்? எனக்கு எந்தளவுக்கு நம்பிக்கை இருக்கிறது? நாள் முழுவதும் இது நினைவு செய்யப்பட வேண்டும். ஆனாலும், மாயை உங்களை மறக்கும்படி செய்யக்கூடியவளாகவே இருக்கிறாள். நீங்களும் தந்தையுடன் (பிரம்மாவுடன்); சேர்ந்து, உலகத்திற்குச் சேவையாற்றுவதில் கடவுளின் உதவியாளர்கள் என்பதை புரிந்து கொள்கிறீர்கள். முன்பெல்லாம் நீங்கள் எல்லைக்குட்பட்ட கல்வியொன்றையே கற்றீர்கள். ஆனால், இப்போது எல்லையற்ற தந்தையிடம் எல்லையற்ற கல்வி கற்கிறீர்கள். உரிய நேரம் வரும் போது களையப்படும் பழைய சரீரம் இது. இதனை ஓர் அகால மரணத்தில் நீக்கி விட முடியாது. நாங்கள் சந்தோஷமாகவே இந்தச் சரீரங்களை விட்டுச் செல்ல வேண்டும். நாங்கள் இந்த அழுக்கான சரீரங்களை விடுத்து, இந்தப் பழைய உலகத்தையும் துறந்து சந்தோஷமாகத் திரும்பிச் செல்வோம். மாபெரும் நிகழ்ச்சியொன்று இடம்பெறும் போது, மக்கள் சந்தோஷத்துடன் புதிய ஆடைகளை அணிந்து கொள்வார்கள். புதிய உலகத்தில் நீங்கள் புதிய சரீரமொன்றைப் பெற்றுக் கொள்வீர்கள் என்று உங்களுக்குத் தெரியும். தூய்மையாக வேண்டும் என்பது மாத்திரமே எங்களுக்குள்ள ஒரேயொரு அக்கறையாகும். நாங்கள் ஏனைய அனைத்துக் கவலைகளிலிருந்தும் விடுபட்டுள்ளோம். இவையெல்லாமே அழிந்து போகப் போகின்றன என்னும் போது, கவலைப்பட வேண்டிய அவசியமென்ன இருக்கிறது? பக்தி மார்க்கத்தில் அரைச்சக்கர காலத்திற்கு நீங்கள் கவலைப்பட்டீர்கள். இப்போது, அரைச்சக்கர காலத்திற்கு எந்தக் கவலையும் இருக்கப் போவதில்லை. இப்போது மிகக் குறுகிய காலமே எஞ்சியிருக்கிறது. தூய்மையாக வேண்டும் என்ற இலேசானதொரு கவலையே இருக்கிறது. அதன் பின், எந்தக் கவலையும் இருக்காது. இது சந்தோஷமும் துன்பமும் கொண்ட நாடகமாகும். சத்தியயுகத்தில் சந்தோஷமும், கலியுகத்தில் துன்பமும் இருக்கிறது. நீங்கள் சந்தோஷ உலகமான சத்தியயுகவாசியா அல்லது துன்ப உலகமான கலியுகவாசியா? என்று அவர்களிடம் நீங்கள் கேட்கலாமென பாபா விளங்கப்படுத்தியிருக்கிறார். இந்தப் புதிய விடயங்களை நீங்கள் எடுத்துரைக்கிறீர்கள். நிச்சயமாக இப்போது நீங்கள் துன்ப உலகவாசி என்றே கூறப்படும். தாங்கள் எந்த இடத்து வாசிகள் என்று மனிதர்கள் தாங்களாகவே புரிந்து கொள்ளக்கூடியவாறு, அளவற்ற அன்போடு அவர்களிடம் இது கேட்கப்;பட வேண்டும். நீங்கள் கேள்வி கேட்கும் முறை மிகவும் நல்லது என்று அவர்கள் கூறுவார்கள். அவர்கள் எவ்வளவு முக்கியமானவர்களாகவோ அல்லது செல்வந்தவர்களாகவோ இருந்தாலும், நரகவாசிகளாகவே இருக்கிறார்கள். புதிய உலகம் சத்தியயுகம் எனப்படுகிறது. இந்தப் பழைய உலகம் இப்போது கலியுகமாகும். இ;ந்தக் கேள்விகள் மிகவும் சிறந்தவையாகும். ஏணியின் படத்திலும் இது தெளிவாக இருக்கிறது. பின்வருமாறு அவர்களை நீங்கள் கேட்க வேண்டும்: நீங்கள் சந்தோஷ உலகில் இருக்கிறீர்களா அல்லது துன்ப உலகில் இருக்கிறீர்களா? இது சுவர்க்கமா, நரகமா? நீங்கள் தேவரா, அசுரனா? நிச்சயமாகச் சத்தியயுகம் தேவலோகம் என்றே அழைக்கப்படும். கலியுகம் அசுர உலகம் என்னும் நரகம் என்றே அழைக்கப்படும். அதனால், அவர்களை நீங்கள் கேட்க வேண்டும்: நீங்கள் தேவலோக சத்தியயுக சுவர்க்கவாசியா அல்லது அசுர உலக கலியுகவாசியா? நீங்கள் எவ்வளவு செல்வந்தராக இருந்தாலும் எங்கே இருக்கிறீர்கள்? இப்பொழுது உங்களுக்கு இந்த ஞானம் இருக்கிறது. முன்பெல்லாம் நீங்கள் இந்த விடயங்களைப் பற்றிச் சிந்தித்தே பார்த்ததில்லை. நீங்கள் சங்கமயுகத்தில் இருக்கிறீர்கள் என்று இப்போது புரிந்து கொள்கிறீர்கள். கலியுகத்தில் இருப்பவர்கள் தூய்மையற்ற நரகவாசிகள். அவர்கள் மீண்டும் தூய்மையாக வேண்டும். இதனாலேயே அவர்கள், தூய்மையாக்குபவரே வாருங்கள்! வந்து, எங்களைத்; தூய்மையாக்குங்கள். என்று கூவி அழைக்கிறார்கள். இதையும் நீங்கள் விளங்கப்படுத்த வேண்டும். உங்களிடம் எத்தனையோ பேர் வருகிறார்கள். ஆயினும், கைப்பிடி அளவினரில் ஒரு சிலரே உருவாகுகிறார்கள். நான் என்னவாக இருக்கிறேன்;, நான் யார், எதைக் கற்பிக்கிறேன் - மிகச்சிலரே இதைப் புரிந்து கொண்டு பின்பற்றுகிறார்கள். அதிகாலையில் நீங்கள் கண்காட்சிகள் போன்றவற்றை நடத்தும் பொழுது இக் கல்வியால் நாங்கள் சுவர்க்கவாசிகளாகுகிறோம் என்பதை நீங்கள் எடுத்துக் காட்ட வேண்டும். இ;ந்தச் சக்கரம் தொடர்ந்து சத்திய, திரேதா, துவாபர, கலியுகங்களைக் கடந்து சுழல்கிறது. சக்கரம் முழுவதுமே உங்கள் புத்தியில் பதிந்துள்ளது. மீண்டும் நீங்கள் சந்தோஷதாமத்திற்கும் சாந்திதாமத்திற்கும் அதிபதிகளாகுகிறீர்கள். சந்தோஷதாமத்தில் துன்பம் என்பதைப் பற்றிக் குறிப்பிடப்படுவதேயில்லை. நீங்கள் முழுமையாகக் கற்காவிட்டால், தாழ்ந்த அந்தஸ்தொன்றைப் பெற்றுக் கொள்வீர்கள். இது ஒரு பொதுவான விடயம் என்பதால், இந்த எல்லையற்ற கல்வியைக் கற்று, எல்லையற்ற ஆஸ்தியைப் பெற்றுக் கொள்ளுங்கள். உங்களை ஓர் ஆத்மா எனக்கருதி, எல்லையற்ற தந்தையை நினைவு செய்யுங்கள், பாபா மிகவும் இனிமையானவர். உங்கள் சொந்த சரீரம் உட்பட, சரீர பந்தனங்கள் அனைத்தையும் முடித்திடுங்கள் என்பதே அவரது வழிகாட்டல்களாகும். ஆத்மா அழிவற்றவர். நீங்கள் ஒரு கணம் ஒரு சரீரம் எடுத்து, மறுகணம் அதை விடுகிறீர்கள். அதற்கு அதிகக் காலம் எடுப்பதில்லை. இந்த நேரத்தில் நாளுக்கு நாள் அனைவரும் தொடர்ந்து தமோபிரதானாகுகிறார்கள். நாங்கள் சதோபிரதானாக இருந்த போது, எங்களுக்கு நீண்ட ஆயுள் இருந்தது. நாங்கள் மிகச்சிலரே இருந்தோம். வேறெந்த மதமும் இருக்கவில்லை. இப்போது நீங்கள் மேற்கொள்ளும் முயற்சியின் அடிப்படையிலேயே, உங்கள் ஆயுட்காலம் அதிகரிக்கும். எந்தளவுக்கு நீங்கள் தந்தையின் நினைவில் இருக்கிறீர்களோ அந்தளவுக்கு உங்கள் ஆயுள் அதிகரிக்கும். நீங்கள் சதோப்பிரதானாக இருந்த போது, உங்கள் ஆயுட்காலம் மிக நீண்டதாக இருந்தது. அதன் பின், நீங்கள் தொடர்ந்து இறங்கி வரும் போது, உங்கள் ஆயுட்காலம் குறுகியதானது. நீங்கள் ரஜோ நிலையை அடைந்த போதே உங்கள் ஆயுட்காலம் மிகவும் குறுகியதானது. தமோ நிலையை அடைந்த போது, இன்னும் குறுகியது. வாளிகள் நிறைக்கப்பட்டு காலியாக்கப்படும் நீர்ச்சக்கரம் உதாரணமாகக் கூறப்படுகிறது. இது ஓர் எல்லையற்ற நீர்ச்சக்கரம். இப்போது நீங்கள் நிறைக்கப்படுகிறீர்கள். நீங்கள் முழுமையாக நிறைந்த பின், படிப்படியாக வெறுமையடைய ஆரம்பிப்பீர்கள். இது ஒரு மின்கலத்திற்கும் (பற்றரி) ஒப்பிடப்படுகிறது. சதோபிரதானாகிய பின், நாங்கள் திரும்பிச் சென்று, 84 பிறவிகள் எடுப்போம். அரைச்சக்கர காலத்தின் பின்பே இராவண இராச்சியம் ஆரம்பமாகும். இராவண இராச்சியத்தில் எல்லோரும் நரகவாசிகள் என்றே அழைக்கப்படுகிறார்கள். பிற்பகுதியில் வருபவர்கள் நரகத்திலேயே வருவார்கள். முதலில் நீங்கள் சுவர்க்கத்திற்குச் செல்கிறீர்கள். நீங்கள் தந்தையிடமிருந்து பக்தியின் பலனைப் பெற்றுக் கொள்கிறீர்கள். இவர் அதிகளவு பக்தி செய்திருக்கிறார், அதனாலேயே அவர் ஞானத்தைப் பெறுகிறார் என்று புரிந்து கொள்ளப்படுகின்றது. இந்த இரகசியங்களையெல்லாம் தந்தை உங்களுக்கு விளங்கப்படுத்தியிருக்கிறார். அதன் பின் நீங்கள் இதனை மற்றவர்களுக்கு விளங்கப்படுத்த வேண்டும். மனிதர்கள் பலவகைப்பட்ட பாவங்களையும் செய்திருக்கிறார்கள். தந்தை இப்போது வந்து உங்களுக்கு ஞானத்தைக் கொடுக்கிறார். தந்தை வரும் போதே உங்களுக்குக் கற்பிக்கிறார். இவ்வளவு காலமும் நீங்கள் இவற்றை அறிந்திருக்கவில்லை. தொடர்ந்து நீங்கள் பாவாத்மாக்கள் ஆகினீர்கள். ஆத்மாக்களாகிய நீங்கள் எவ்வாறு தூய, புண்ணியாத்மாக்களாக ஆகுகிறீர்கள்? பின்னர் எவ்வாறு பாவாத்மாக்களாக ஆகுகிறீர்கள்? சத்தியயுகவாசிகள் யார்? கலியுகவாசிகள் யார்? இவை எவற்றையுமே நீங்கள் அறிந்திருக்கவில்லை. இப்போது தந்தை விளங்கப்படுத்தியிருக்கிறார். தந்தை சுவாலை என்றும் அழைக்கப்படுகிறார். அவரிடம் ஒளியும் இருக்கிறது, சக்தியும் இருக்கிறது. நீங்கள் ஒளி பெற்றிருக்கும் போது, அதாவது நீங்கள் விழித்தெழுந்ததும் சக்தியைப் பெறுகிறீர்கள். உங்கள் ஆயுட்காலம்; நீண்டதாகுகிறது. அங்கே உங்களை அகால மரணம் நெருங்க முடியாது. சந்தோஷமாக ஒரு சரீரத்தை விட்டு இன்னொன்றை எடுப்பீர்கள். இதிலே துன்பம் என்ற கேள்விக்கு இடமில்லை. இது ஒரு விளையாட்டு போன்றதேயாகும். (பாம்பு உதாரணமாகக் காட்டப்படுகிறது). சத்;தியயுகத்திலிருந்து கலியுகம் வரை நீங்கள் உங்கள் பாகத்தை நடித்திருக்கிறீர்கள். இப்பொழுது இது உங்கள் புத்தியில் பதிந்திருக்கிறது. பாபா உங்கள் தந்தையும் ஆசிரியரும் சத்குருவுமாக இருக்கிறார். குழந்தைகளாகிய நீங்கள் மட்டுமே உங்கள் முயற்சிக்கேற்ப வரிசைக்கிரமமாக இதை அறிந்து வைத்திருக்கிறீர்கள். நீங்கள் மறுபிறவிகளை எடுக்கிறீர்கள் என்பதையும், எத்தனை பிறவிகள் எடுக்கிறீர்கள் என்பதையும் புரிந்து கொண்டுள்ளீர்கள். ஒரு பிராமணராக நீங்கள் எத்தனை பிறவிகள் எடுக்கிறீர்கள்? (ஒரு பிறவி). சிலர் இரண்டு, மூன்று பிறவிகளும் எடுப்பார்கள். உதாரணமாக, ஒருவர் சரீரத்தை விட்டுச் சென்றால் தன்னுடன் பிராமண சம்ஸ்காரத்தையும் கொண்டு செல்வார். பிராமண சம்ஸ்காரம் இருப்பதால், மீண்டும் அவர் உண்மையான பிராமண குலத்தை வந்தடைவார். பிராமண ஆத்மாக்களின் குலம் தொடர்ந்து அதிகரிக்கும். அவர்கள் பிராமண குலத்துக்குரியவர்களாக இருக்கும் சம்ஸ்காரங்களைக் கொண்டு செல்வார்கள். அவர்களால் தீர்க்கப்பட வேண்டிய கர்மக்கணக்குகள் இருந்தால், இரண்டு, மூன்று பிறவிகளையும் அவர்கள் எடுக்கக்கூடும். ஒரு சரீரத்தை விட்டு இன்னொன்றை எடுப்பார்கள். ஆத்மா பிராமண குலத்திலிருந்து தேவ குலத்தைச் சென்றடைவார். இதில், சரீரத்தைப் பற்றிய கேள்வியில்லை. இப்போது நீங்கள் தந்தைக்குரியவர்கள். நீங்கள் கடவுளின் குழந்தைகள். அத்துடன் பிரஜாபிதா பிரம்மாவின் குழந்தைகளும் ஆவீர்கள். உங்களுக்கு வேறெந்த உறவுமுறையும் இல்லை. எல்லையற்ற தந்தைக்குரியவர் ஆகுவதென்பது சாதாரண விடயமல்ல. நீங்கள் சந்தோஷ உலகத்தின் அதிபதிகள் ஆகுகின்றீர்கள். மகத்தான தந்தையை நீங்கள் இனங்கண்டு விட்டீர்கள் என்பதால் உங்கள் படகு அக்கரையை அடையும். அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து, இப்போது கண்டெடுக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய்;, தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. உங்களைப் கேட்டுப் பாருங்கள்: 1. நான் எந்தளவுக்குச் சந்தோஷமாக இருக்கிறேன்? 2. நான் சகல தெய்வீகக்குணங்களும் நிறைந்திருந்தேன் என்றும் ஸ்ரீமத்தின் அடிப்படையில் மீண்டும் அவ்வாறு ஆக வேண்டும் என்றும் எனக்கு எந்தளவுக்கு நம்பிக்கை இருக்கிறது? 3. நான் எந்தளவுக்குச் சதோப்பிரதானாகி இருக்கிறேன்? தூய்மையாகவும் சதோப்பிரதானாகவும் ஆக வேண்டும் என்ற அக்கறை எனக்கு இரவும் பகலும் இருக்கிறதா?

2. நீங்கள் எல்லையற்ற தந்தையுடன் உலகத்திற்குச் சேவையாற்ற வேண்டும். இந்த எல்லையற்ற கல்வியைக் கற்று, மற்றவர்களுக்கும் கற்பியுங்கள். தந்தையை நினைவு செய்வதன் மூலம் சரீரத்துடனும் சரீர உறவுகளுடனும் இருக்கும் பந்தனங்களை முடித்திடுங்கள்.

ஆசீர்வாதம்:
சேவை செய்வதனால் பெறுகின்ற மரியாதையும் கௌரவமும் என்ற கனியாத பழத்தைத் துறப்பதன் மூலம் அகங்காரத்திலிருந்து விடுபட்டு சதா சந்தோஷ இதயத்துடன் இருப்பீர்களாக.

பெயர், மரியாதை, கௌரவம் என்பன ஆசைகளின் இராஜரீக வடிவங்களாகும். தமது பெயர் அறியப்பட வேண்டும் என்பதற்காக சேவை செய்பவர்களால் ஒரு குறுகிய காலத்திற்கான பெயரையே சம்பாதிக்க முடியும், ஆயினும் உயர்ந்த அந்தஸ்தைப் பெறுவதில் அவர்களின் பெயர்கள் பின்னால் சென்றுவிடுகின்றது, ஏனெனில் அவர்கள் உண்ணுகின்ற பழம் கனியாததாகும். சேவை என்ற பாடத்தில் தாம் மரியாதையைப் பெற வேண்டும் என சில குழந்தைகள் நினைக்கின்றார்கள், ஆனால் அது மரியாதை அல்ல. அது அகங்காரமாகும். அகங்காரம் இருக்கும் இடத்தில் சந்தோஷம் இருக்க முடியாது, ஆகையாலேயே நீங்கள் அகங்காரத்திலிருந்து விடுபட்டு சதா சந்தோஷத்தை அனுபவம் செய்ய வேண்டும்.

சுலோகம்:
கடவுளின் அன்பு என்ற ஊஞ்சலில் ஆடினால், துன்ப அலைகள் வர முடியாது.


தந்தை பிரம்மாவிற்குச் சமமானவர் ஆகுவதற்கான விசேட முயற்சி:
முதல் இலக்க பிரம்மா ஆத்மாவுடன், நீங்கள் அனைவரும் தேவதைகள் ஆகி, சூட்சும உலகிற்குச் சென்று, அதன் பின்னர், பரந்தாமத்திற்கு செல்ல வேண்டும் என்பதால், மனதை ஒருமைப்படுத்துவதில் விசேட கவனம் செலுத்துங்கள். உங்கள் மனம் உங்கள் கட்டளைகளுக்குக் கீழ் பணிந்து நடக்கட்டும். ஒவ்வொரு சூழ்நிலையிலும், உங்கள் மனோபாவத்தில், உங்கள் பார்வையில், உங்கள் செயலில் தனித்துவத்தை அனுபவம் செய்யுங்கள். தேவதை ஸ்திதியை நீங்களும் அனுபவம் செய்து, பிறருக்கும் அந்த அனுபவத்தைக் கொடுங்கள்.