10.01.21    Avyakt Bapdada     Tamil Lanka Murli    09.10.87     Om Shanti     Madhuban


அலௌகீக இராஜ சபையின் செய்திகள்.


இன்று, பாப்தாதா சுய இராச்சிய உரிமையைக் கொண்டிருக்கும் தனது குழந்தைகளின் இராஜ சபையைப் பார்க்கிறார். முழுக் கல்பத்திலும், சங்கமயுகத்தின் இந்த அலௌகீக சபையானது தனித்துவமானது. இதற்கு மேன்மையான பெருமை உள்ளது. அத்துடன் இது அனைத்திலும் மிகவும் குறிப்பிடத்தக்கதும் அதி அழகானதும் ஆகும். இந்த அரச சபையின் ஆன்மீகப் பிரகாசம், ஆன்மீகத் தாமரை ஆசனம், ஆன்மீகக் கிரீடமும் திலகமும், முகத்தின் பிரகாசம், ஸ்திதியின் மேன்மையான விழிப்புணர்வின் சூழலின் அலௌகீக நறுமணமும் களிப்பு நிறைந்தது. அத்துடன் அதிகபட்சம் கவர்ச்சிகரமானது. இத்தகைய ஒன்றுகூடலையும் ஒவ்வொரு சுய இராச்சிய அதிகாரியான ஆத்மாவையும் பார்க்கும்போது, பாப்தாதா மிகவும் மகிழ்ச்சி அடைகிறார். இது பெரியதொரு சபையாகும். ஒவ்வொரு பிராமணக் குழந்தையும் ஒரு சுய இராச்சிய அதிகாரி, சுயத்தின் அதிபதி ஆவார். எனவே, பல பிராமணக் குழந்தைகள் இருக்கிறார்கள். பிராமணர்கள் அனைவரையும் ஒன்றுசேர்த்து ஒரு சபை வைத்தால், அது பெரியதொரு இராஜ சபையாகவே இருக்கும். வேறு எந்தவொரு யுகத்திலும் இத்தகைய பெரியதொரு சபை இருக்கவே முடியாது. சங்கம யுகத்தின் சிறப்பியல்பானது, அதிமேலான தந்தையின் குழந்தைகள் அனைவரும் சுயத்தின் அதிபதிகள் ஆகுகிறார்கள். லௌகீகக் குடும்பம் ஒன்றில், ஒவ்வொரு தந்தையும் தனது குழந்தைகளைப் பற்றி, எனது இந்தக் குழந்தை எனது இராஜகுழந்தை அல்லது, தனது ஒவ்வொரு குழந்தையும் ஓர் அரசன் ஆகவேண்டும் என்பதே எனது விருப்பம் எனக் கூறுவார். எவ்வாறாயினும், எல்லாக் குழந்தைகளாலும் அரசர்கள் ஆகமுடியாது. இந்தக் கூற்றில் அவர்கள் பரம தந்தையைப் பிரதி செய்திருக்கிறார்கள். இந்த வேளையில், பாப்தாதாவின் குழந்தைகள் அனைவரும் நிச்சயமாக இராஜயோகிகள், அதாவது, சுயத்தின் அதிபதிகள் ஆவார்கள். அவர்கள் வரிசைக்கிரமமாக இராஜயோகிகள். அவர்களில் எவரும் பிரஜாயோகிகள் இல்லை (பிரஜையாகும் யோகிகள்). எனவே, பாப்தாதா எல்லையற்ற இராஜரீக ஒன்றுகூடலைப் பார்க்கிறார். நீங்கள் அனைவரும் உங்களை சுய அதிபதிகளாகக் கருதுகிறீர்கள், இல்லையா? வந்திருக்கும் புதிய குழந்தைகளான நீங்கள் சுய அதிபதிகளா? அல்லது இன்னமும் அவ்வாறு ஆகவேண்டியுள்ளதா? நீங்கள் புதியவர்கள். எனவே, எவ்வாறு சந்திப்பது என்றும் ஒன்றுகூடுவது என்றும் கற்றுக் கொண்டிருக்கிறீர்கள். அவ்யக்த தந்தை உங்களுக்குக் கூறும் அவ்யக்த விடயங்களைப் புரிந்து கொள்ளும் பழக்கத்தை நீங்கள் தொடர்ந்து ஏற்படுத்திக்கொள்வீர்கள். எவ்வாறாயினும், இப்போது நீங்கள் செய்வதை விட, இன்னமும் காலம் செல்லும்போது இந்தப் பாக்கியத்தின் தகுதியை நீங்கள் போற்றுவீர்கள்: ஆத்மாக்களான நாங்கள் அனைவரும் எவ்வளவு பாக்கியசாலிகள்!

பாப்தாதா அலௌகீக இராஜ சபையின் செய்திகளைப் பற்றி உங்களுக்குக் கூறுகிறார். பாபாவின் கவனம், அவரின் விருப்பத்தையும் மீறிக் குறிப்பாக குழந்தைகளின் கிரீடத்தையும் முகங்களின் பிரகாசத்தையும் நோக்கிக் கவரப்படுகிறது. கிரீடம், தூய்மையின் சின்னம், பிராமண வாழ்க்கையின் சிறப்பியல்பாகும். முகத்தின் பிரகாசம், ஆன்மீகத்தின் பிரகாசமும் ஆன்மீக ஸ்திதியில் ஸ்திரமாக இருப்பதன் பிரகாசமும் ஆகும். நீங்கள் ஒருவரைச் சாதாரணமாகப் பார்த்தாலும், உங்களின் பார்வை அனைத்திற்கும் முதலில் முகத்தை நோக்கியே செல்லும். உங்களின் முகம், உங்களின் மனோபாவத்தினதும் ஸ்திதியினதும் கண்ணாடியாகத் திகழும். எனவே, அனைவரிலும் ஒரு பிரகாசம் இருப்பதை பாப்தாதா பார்த்தார். எனினும், ஒரு வகையினர், ஆன்மீக ஸ்திதியில் எப்போதும் ஸ்திரமாக இருப்பவர்கள். இந்த ஸ்திதியை இயல்பாகவும் இலகுவாகவும் கொண்டிருப்பவர்கள். மற்ற வகையினரோ, ஆன்மீக ஸ்திதியின் பயிற்சியின் மூலமே இந்த ஸ்திதியில் தங்களை ஸ்திரப்படுத்திக் கொள்பவர்கள். ஒருபுறம், இந்த ஸ்திதியை இலகுவாகக் கொண்டிருப்பவர்கள். மறுபுறம், இந்த ஸ்திதியில் ஸ்திரமாக இருப்பதற்கு முயற்சி செய்ய வேண்டியிருப்பவர்கள். அதாவது, ஒரு வகையினர் இலகு யோகிகள். இன்னொரு வகையினர், முயற்சி செய்ய வேண்டியிருக்கும் யோகிகள். இரண்டு வகையினரின் பிரகாசத்திலும் வேறுபாடு காணப்பட்டது. ஒரு வகையினருக்கு இயற்கையான அழகு காணப்பட்டது. மற்றைய வகையினருக்கு முயற்சியினூடாகவே அழகு ஏற்பட்டது. தற்காலத்தில் மக்கள் தமது ஒப்பனையால் அழகாக இருப்பதைப் போல் அது காணப்பட்டது. இயல்பான அழகின் பிரகாசம் எப்போதும் நிலையாக இருக்கும். ஆனால், மற்ற அழகின் பிரகாசமோ சிலவேளைகளில் மிக நன்றாக இருக்கும். சிலவேளைகளில் குறிப்பிட்ட சதவீதத்தில் மட்டுமே இருக்கும். அது எப்போதும் ஒன்றாக இருக்காது. எப்போதும் ஸ்திரமாக இருக்காது. எனவே, சதா இலகுவான, இயல்பான யோகியாக இருக்கும் ஸ்திதியானது, உங்களை முதலாம் இலக்க சுய இராச்சிய அதிகாரி ஆக்கும். குழந்தைகளான நீங்கள் அனைவரும் ஒரு பிராமண வாழ்க்கை வாழ்வதற்கான சத்தியத்தைச் செய்திருப்பதால், அதாவது, ஒரேயொரு தந்தையே உங்களின் உலகமாக இருப்பதால், வேறு எவருக்கும் அன்றி ஒரேயொரு தந்தைக்கு மட்டுமே நீங்கள் சொந்தமாக இருப்பதனால், தந்தையே உங்களின் உலகமாகவும் வேறு எவரும் இல்லையென்பதாலும், நீங்கள் இயல்பாகவும் இலகுவாகவும் சதா யோகி ஸ்திதியைக் கொண்டிருப்பீர்கள், இல்லையா? அல்லது, நீங்கள் முயற்சி செய்ய வேண்டுமா? வேறு யாராவது இருந்தால், உங்களின் புத்தி அங்கு செல்வதைத் தடுப்பதற்கு நீங்கள் முயற்சி செய்ய வேண்டும். அது இங்கே செல்வதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். எவ்வாறாயினும், ஒரேயொரு தந்தையே அனைத்துமாக இருக்கும்போது, புத்தி வேறு எங்கே செல்லும்? அதனால் எங்கேயும் செல்ல முடியாது என்பதனால், அது என்ன பயிற்சி செய்யும்? பயிற்சியிலும் வேறுபாடு உள்ளது. ஒன்று, இயல்பான பயிற்சி. அது அந்த ஸ்திதியிலேயே எப்போதும் இருக்கும். மற்றையது, முயற்சி செய்வதனால் ஏற்படும் பயிற்சி. சுய இராச்சிய அதிகாரிக் குழந்தைகள் இலகுவாக இந்தப் பயிற்சியைச் செய்யும்போது, அவர்கள் இலகுவான, இயல்பான யோகிகள் என்பதன் அடையாளம் இதுவேயாகும். அவர்களின் முகங்களின் பிரகாசம் அலௌகீகமாக இருக்கும். அவர்களின் முகங்களை மற்றவர்கள் பார்த்தவுடனேயே, அந்த ஆத்மாக்கள் மேன்மையான பேறுகளின் சொரூபங்களாகவும் இலகு யோகிகளாகவும் உள்ள ஆத்மாக்கள் என்பதை அனுபவம் செய்வார்கள். ஒருவரிடம் பௌதீகமான செல்வம் இருக்கும்போது அல்லது ஒரு பௌதீகமான அந்தஸ்தை அடைந்தால், அவரின் முகத்தில் இருந்தே அவர் செல்வந்தக் குடும்பத்தைச் சேர்ந்தவர் அல்லது அவர் ஓர் உயர்ந்த அந்தஸ்தைப் பெற்றுள்ளார் என உங்களால் கூறமுடியும். அதேபோல், இந்த மேன்மையான பேற்றின் போதையும் பிரகாசமும், ஓர் இராச்சியத்திற்கான இந்த மேன்மையான உரிமையும், அதாவது, மேன்மையான ஸ்திதியின் பேறும் அவர்களின் முகங்களில் புலப்படும். சுய இராச்சிய அதிகாரி குழந்தைகளின் பிரகாசிக்கும் முகங்கள் எப்போதும் இவ்வாறே இருக்க வேண்டும். முயற்சிகளின் அடையாளங்கள் தென்படக்கூடாது. பேறுகளின் அடையாளங்களே புலப்பட வேண்டும். இப்போதும், சில குழந்தைகளின் முகங்களைப் பார்த்தால், இவர் எதையோ பெற்றிருக்கிறார் என நீங்கள் கூறுகிறீர்கள். ஆனால், ஏனைய குழந்தைகளுக்கோ, அவர்களின் முகங்களைப் பார்த்து, இது ஓர் உயர்ந்த இலக்கு, அவர்கள் மிகவும் உயர்ந்த துறவறத்தைச் செய்திருக்கிறார்கள் என நீங்கள் கூறுகிறீர்கள். அவர்களின் முகங்களில் அவர்களின் துறவறம் புலப்படும். ஆனால் அவர்களின் பாக்கியம் புலப்படாது. அல்லது, இவர் மிக நல்ல முயற்சி செய்கிறார் என்றே கூறப்படுகிறது.

குழந்தைகளான உங்கள் ஒவ்வொருவரின் முகத்திலும் இலகு யோகியின் பிரகாசம் தென்பட வேண்டும் என்றே பாப்தாதா விரும்புகிறார். மேன்மையான பேற்றின் போதையின் பிரகாசம் புலப்பட வேண்டும். ஏனென்றால், நீங்கள் பேறுகளின் பொக்கிஷக் களஞ்சியமாக இருக்கும் தந்தையின் குழந்தைகள் ஆவீர்கள். சங்கமயுகம் என்ற ஆசீர்வதிக்கப்பட்ட நேரத்தில், சகல பேறுகளையும் பெற்றுக் கொள்ளும் உரிமை உங்களுக்கு உள்ளது. எவ்வாறு நாங்கள் சதா யோகம் செய்ய முடியும்? எவ்வாறு எங்களால் சதா அனுபவத்தையும் பொக்கிஷக் களஞ்சியத்தின் அனுபவத்தையும் பெற முடியும்? இதற்காக இப்போது முயற்சி செய்வதில் உங்களின் நேரத்தை வீணாக்காதீர்கள். ஆனால், பேறுகளின் சொரூபமாக இருக்கும் பாக்கியத்தை இலகுவாக அனுபவம் செய்யுங்கள். சம்பூரணத்திற்கான நேரம் நெருங்கி வருகிறது. இப்போதும், நீங்கள் ஏதாவதொன்றிற்காக முயற்சி செய்வதில் ஈடுபட்டிருந்தால், பேறுகளுக்கான நேரம் முடிந்துவிடும். எனவே, எப்போது பேறுகளின் சொரூபமாக இருப்பதை அனுபவம் செய்வீர்கள்? சங்கமயுகத்திற்கும் பிராமண ஆத்மாக்களுக்கும், நீங்கள் சகல பேறுகளாலும் நிறைந்திருப்பீர்களாக என்ற ஆசீர்வாதம் உள்ளது. நீங்கள் எப்போதும் முயற்சியாளராக இருப்பீர்களாக என்ற ஆசீர்வாதம் உங்களுக்கு இல்லை. ஆனால், பேறுகளைக் கொண்டிருப்பதற்கான ஆசீர்வாதமே உங்களிடம் உள்ளது. பேறுகளை ஆசீர்வாதமாகப் பெற்ற ஆசீர்வதிக்கப்பட்ட ஆத்மாக்களால் கவனக்குறைவில் அகப்பட்டுக் கொள்ள முடியாது. ஆகவே, அவர்கள் முயற்சி செய்ய வேண்டியதில்லை. எனவே, நீங்கள் என்னவாக வேண்டும் என்பதைப் புரிந்து கொண்டீர்களா?

இராஜ சபையில், இராச்சியத்திற்கான உரிமையைக் கொண்டிருக்கும் சிறப்பியல்பு என்னவென்பது இப்போது தெளிவாகியுள்ளதல்லவா? உங்களுக்கு இராச்சியத்திற்கான உரிமை உள்ளதல்லவா? அல்லது, உங்களிடம் இது இருக்கிறதா இல்லையா என நீங்கள் இன்னமும் சிந்திக்கிறீர்களா? நீங்கள் பாக்கியத்தை அருள்பவரினதும் ஆசீர்வாதங்களை அருள்பவரினதும் குழந்தைகள் ஆகியுள்ளீர்கள். அரசன் என்றால் பாக்கியத்தை அருள்பவர், வழங்குகின்ற ஒருவர் என்று அர்த்தம். உங்களிடம் எதுவும் குறைவாக இல்லாவிட்டால், நீங்கள் எதை எடுப்பீர்கள்? எனவே, உங்களுக்குப் புரிகிறதா? புதிய குழந்தைகள் இந்த அனுபவத்தில் இருக்க வேண்டும். உங்களின் நேரத்தைப் போராடுவதில் வீணாக்காதீர்கள். உங்களின் நேரத்தைப் போராடுவதில் நீங்கள் வீணாக்கினால், உங்களின் இறுதிக் கணங்களிலும் நீங்கள் போராடிக் கொண்டே இருப்பீர்கள். அப்போது நீங்கள் என்னவாகுவீர்கள்? நீங்கள் சந்திர வம்சத்தின் பாகம் ஆகுவீர்களா அல்லது நீங்கள் சூரிய வம்சத்திற்குள் செல்வீர்களா? போராடுபவர்கள் சந்திர வம்சத்திற்கே செல்வார்கள். நான் முன்னேறுகிறேன். நான் இதைச் செய்கிறேன். இது நிகழும், நான் அங்கே செல்வேன். இப்போதும் இந்த வகையான இலக்கை வைத்திருக்காதீர்கள். இப்பொழுதில்லையேல், எப்போதும் இல்லை. நீங்கள் ஏதாவதாக ஆகவேண்டும் என்றால், இப்போதே அவ்வாறு ஆகுங்கள். நீங்கள் எதையாவது அடைய விரும்பினால், அதை இப்போதே அடையுங்கள். இத்தகைய ஊக்கமும் உற்சாகமும் உடையவர்கள் மட்டுமே தமது சம்பூரணமான இலக்கை உரிய நேரத்தில் அடைவார்கள். உங்களில் எவரேனும் வெள்ளி யுகத்தின் இராமர், சீதை ஆகத் தயாராக இல்லை. நீங்கள் சத்தியயுகத்தின் சூரிய வம்சத்திற்குள் செல்ல விரும்புவதால், சூரிய வம்சம் என்றால் சதா மாஸ்ரர் பாக்கியத்தை அருள்பவரும் ஆசீர்வாதங்களை அருள்பவரும் ஆவார்கள். எடுத்துக் கொள்வதற்கான ஆசையுடன் இருப்பவர்கள் அல்ல. எனக்கு ஏதாவது உதவி கிடைக்க வேண்டும். இது நிகழ்ந்தால் மிக நன்றாக இருக்கும். அப்போது எனது முயற்சிகளில் நான் நல்லதொரு இலக்கத்தைப் பெறுவேன். இல்லை. நீங்கள் உதவியைப் பெறுகிறீர்கள். அனைத்தும் நிகழ்கிறது. இதுவே சுய இராச்சிய அதிகாரியாக, சுய அதிபதிகளாக இருக்கும் குழந்தைகள் எனப்படுகிறது. நீங்கள் முன்னேற விரும்புகிறீர்களா? அல்லது, நீங்கள் பிந்தி வந்ததால், பின்னால் இருக்க விரும்புகிறீர்களா? முன்னால் செல்வதற்கான இலகுவான வழிமுறை, இலகுவான, இயல்பான யோகி ஆகுவதாகும். இது மிகவும் இலகுவானது. ஒரேயொரு தந்தையே இருப்பதனால், வேறு எவரும் இல்லையென்பதால், நீங்கள் வேறு எங்கே செல்வீர்கள்? பேறுகளுக்கு மேல் பேறாகக் கிடைக்கும்போது, ஏன் அதற்கு முயற்சி தேவைப்படுகிறது? எனவே, பேறுகளுக்கான நேரத்தின் நன்மையைப் பெற்றுக்கொள்ளுங்கள். சகல பேறுகளினதும் சொரூபம் ஆகுங்கள். உங்களுக்குப் புரிகிறதா? பாப்தாதா ஒவ்வொரு குழந்தையும், அவர் கடைசிக் குழந்தையாக இருந்தாலும், அத்துடன் ஸ்தாபனையின் ஆரம்பத்தில் வந்தவர்களும், ஒவ்வொரு குழந்தையும் முதலாம் இலக்கத்தவர் ஆகவேண்டும் என்றே விரும்புகிறார். அரசர்கள் ஆகுங்கள், பிரஜைகளாக இல்லை! அச்சா.

மகாராஷ்டிராவில் இருந்தும் மத்திய பிரதேசத்தில் இருந்தும் குழுவினர் வந்துள்ளார்கள். பாருங்கள், மகா (மகத்துவம்) என்ற வார்த்தை மிகவும் நல்லது. மகாராஷ்டிரா என்ற வார்த்தையில் மகா என்ற வார்த்தை இருக்கிறது. எனவே, நீங்களும் மகத்தானவர் ஆகவேண்டும். நீங்கள் மகான் ஆகியுள்ளீர்கள், இல்லையா? ஏனென்றால், தந்தைக்குச் சொந்தமாவது என்றால் மகத்தானவர் ஆகுதல் என்று அர்த்தம். நீங்கள் மகாத்மாக்கள். பிராமணர்கள் என்றால் மகான்கள் என்று அர்த்தம். உங்களின் ஒவ்வொரு செயலும் மகத்தானது. ஒவ்வொரு வார்த்தையும் மகத்தானது. ஒவ்வோர் எண்ணமும் மகத்தானது. அவை அலௌகீகமாகியுள்ளது, இல்லையா? எனவே, மகாராஷ்டிராவில் இருந்து வந்திருக்கும் நீங்கள், எப்போதும் நீங்கள் மகான் என்ற விழிப்புணர்வின் சொரூபங்களாக இருங்கள். பிராமணர்கள் என்றால் மகத்தான உச்சிக்குடுமிகள், இல்லையா?

மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள், மதியாஜிபவ (மத்தியில் இருக்கும் விஷ்ணு) என்ற போதையை எப்போதும் பேணுபவர்கள். மன்மனாபவ என்பதுடன் உங்களிடம் மதியாஜிபவ என்ற ஆசீர்வாதமும் உள்ளது. எனவே, உங்களின் சுவர்க்க ரூபம் மதியாஜிபவ எனப்படுகிறது. நீங்கள் உங்களின் மேன்மையான பேற்றின் போதையைப் பேணுபவர்கள், அதாவது, நீங்கள் மதியாஜிபவ என்ற மந்திரத்தின் ரூபத்தில் ஸ்திரமாக இருப்பவர்கள். அத்துடன் நீங்கள் மகத்தானவர்கள். நீங்கள் மதியாஜிபவ ஆக இருந்தால், நீங்கள் நிச்சயமாக மன்மனாபவ ஆகுவீர்கள். எனவே, மத்தியப் பிரதேசம் என்றால், மகா மந்திரத்தின் சொரூபங்கள் ஆகுதல் என்று அர்த்தம். எனவே, நீங்கள் இருவரும் உங்களின் சொந்த சிறப்பியல்புகளுடன் மகத்தானவர்களாக இருக்கிறீர்கள். நீங்கள் யார் என்பதைப் புரிந்து கொண்டீர்களா?

நீங்கள் முதல் பாடத்தை ஆரம்பித்த காலத்தில் இருந்தே, நான் யார்? என்பதை உறுதிப்படுத்திக் கொண்டிருக்கிறீர்கள். தந்தையும் உங்களுக்கு அதே விடயத்தையே நினைவூட்டுகிறார். இதைக் கடையுங்கள். நான் யார்? என்ற இந்த ஒரேயொரு கூற்றே உள்ளது. ஆனால், இதற்குப் பல பதில்கள் உள்ளன. நான் யார்? என்பதைப் பட்டியல் இடுங்கள். அச்சா.

எங்கும் உள்ள சகல பேறுகளின் சொரூபங்களாக இருக்கும் மேன்மையான ஆத்மாக்கள் அனைவருக்கும், அலௌகீக இராஜ சபையின் உரிமையைக் கொண்டுள்ள மகாத்மாக்கள் அனைவருக்கும், ஆன்மீகப் பிரகாசத்தை எப்போதும் ஏற்றுக் கொண்டுள்ள விசேடமான ஆத்மாக்களுக்கும், சதா இயல்பான யோகிகளுக்கும், இலகு யோகிகளுக்கும், அதியுயர்ந்த ஆத்மாக்களுக்கும், தயவுசெய்து அதிமேலான பாப்தாதாவின் அன்பு நிறைந்த நினைவுகளை ஏற்றுக் கொள்ளுங்கள்.

அவ்யக்த பாப்தாதா இரட்டை வெளிநாட்டு சகோதரர்களையும் சகோதரிகளையும் சந்திக்கிறார்:
இரட்டை வெளிநாடு என்றால், எப்போதும் தமது ஆதி ரூபத்தின், தமது ஆதி தேசத்தின், தமது சுய இராச்சிய அதிகாரத்தின், தமது ஆதி இராச்சியத்தின் விழிப்புணர்வைக் கொண்டிருப்பவர்கள் என்று அர்த்தம். குறிப்பாக இரட்டை வெளிநாட்டவர்கள் என்ன சேவை செய்ய வேண்டும்? நீங்கள் இப்போது குறிப்பாக ஆத்மாக்களுக்கு மௌன சக்தியின் அனுபவத்தைக் கொடுக்க வேண்டும். விஞ்ஞானத்தின் சக்தி மிகவும் பிரபல்யமாக இருப்பதைப் போல், இதுவும் விசேடமான சேவையே ஆகும். விஞ்ஞானம் என்றால் என்னவென்பதை ஒவ்வொரு குழந்தையும் அறிவார். அதேபோல், மௌன சக்தியானது விஞ்ஞான சக்தியை விட அதிமேலானது. அந்த நாளும் வரும். மௌன சக்தியை வெளிப்படுத்துதல் என்றால் தந்தையை வெளிப்படுத்துதல் என்று அர்த்தம். விஞ்ஞானம் புலப்படும் அத்தாட்சியைக் காட்டுவதைப் போல், உங்கள் அனைவரின் வாழ்க்கையும் மௌன சக்தியின் நடைமுறை அத்தாட்சியாகும். நீங்கள் அனைவரும் நடைமுறை அத்தாட்சியாகத் தென்படும்போது, அவர்களின் விருப்பத்திற்கு மாறாக, நீங்கள் இலகுவாக அவர்களின் பார்வையில் தென்படுவீர்கள். கடந்த வருடம் நீங்கள் அமைதிக்கான செயல்திட்டத்தைச் செய்ததைப் போல், அது நடைமுறையில் மேடையில் காட்டப்பட்டதைப் போல், நடமாடும் அமைதி மாதிரியுருக்கள் தென்பட வேண்டும். அப்போது விஞ்ஞானிகளின் பார்வை நிச்சயமாக மௌனத்தைக் கொண்டிருப்பவர்கள் மீது விழும். உங்களுக்குப் புரிகிறதா? வெளிநாடுகளில் விஞ்ஞானத்தின் கண்டுபிடிப்புகள் அதிகமாக உள்ளன. எனவே, மௌன சக்தியின் சத்தமும் இலகுவாக அங்கிருந்து பரவும். சேவைக்கான இலக்கு உள்ளது. அத்துடன் உங்கள் அனைவரிடமும் ஊக்கமும் உற்சாகமும் உள்ளன. சேவை செய்யாமல் உங்களால் இருக்க முடியாது. ஒருவரால் உணவில்லாமல் எவ்வாறு இருக்க முடியாதோ, அவ்வாறே, உங்களாலும் சேவை செய்யாமல் இருக்க முடியாது. இதனாலேயே, பாப்தாதா மகிழ்ச்சி அடைகிறார். அச்சா.

அவ்யக்த பாப்தாதா குழுக்களைச் சந்திக்கிறார்:
நீங்கள் உங்களை சுய தரிசனச் சக்கரதாரிகளாக இருக்கும் மேன்மையான ஆத்மாக்களாக அனுபவம் செய்கிறீர்களா? நீங்கள் சுயத்தின் காட்சியைக் கண்டீர்கள், அல்லவா? உங்களை அறிந்து கொள்ளுதல் என்றால், சுயத்தின் காட்சியைக் காணுதல் என்று அர்த்தம். சக்கரத்தின் ஞானம் உடையவராக இருத்தல் என்றால், சுயதரிசன சக்கரதாரி ஆகுதல் என்று அர்த்தம். நீங்கள் சுயதரிசனச் சக்கரதாரி ஆகும்போது, ஏனைய வகையான சுழற்சிகள் அனைத்தும் முடிவிற்கு வந்துவிடும். சரீர உணர்வின் சுழற்சி, உறவுமுறைகளின் சுழற்சி, பிரச்சனைகளின் சுழற்சி - இவை அனைத்தும் மாயையின் பல வகையான சுழற்சிகள்! எவ்வாறாயினும், சுயதரிசனச் சக்கரதாரி ஆகுவதன் மூலம், இந்தச் சகல வகையான சுழற்சிகளும் முடிந்துவிடும். நீங்கள் சகல வகையான சுழற்சிகளில் இருந்தும் வெளிவந்துவிடுவீர்கள். இல்லாவிடின், நீங்கள் வலையில் சிக்கிக் கொள்வீர்கள். எனவே, முன்னர் நீங்கள் அகப்பட்டிருந்தீர்கள். இப்போது வெளியே வந்துவிட்டீர்கள். 63 பிறவிகளாக, நீங்கள் தொடர்ந்து பல வகையான சுழற்சிகளில் அகப்பட்டிருந்தீர்கள். இந்த வேளையில், நீங்கள் அந்தச் சுழற்சியில் இருந்து வந்துவிட்டீர்கள். அதனால், நீங்கள் மீண்டும் அகப்பட்டுக் கொள்ளக்கூடாது. நீங்கள் அதை அனுபவம் செய்தீர்கள், நீங்களே அதைக் கண்டுள்ளீர்கள், இல்லையா? வெவ்வேறு வகையான சுழற்சிகளில் அகப்பட்டுக் கொள்வதன் மூலம், நீங்கள் அனைத்தையும் இழந்தீர்கள். சுயதரிசனச் சக்கரதாரி ஆகுவதன் மூலம், நீங்கள் தந்தையைக் கண்டு கொண்டீர்கள். நீங்கள் அனைத்தையும் கண்டு கொண்டீர்கள். எனவே, எப்போதும் ஒரு சுயதரிசனச் சக்கரதாரி ஆகுங்கள். மாயையை வென்றவர் ஆகித் தொடர்ந்து முன்னேறுங்கள். இவ்வாறு செய்வதன் மூலம், நீங்கள் எப்போதும் இலேசாக இருப்பீர்கள். எந்த வகையான சுமையையும் அனுபவம் செய்ய மாட்டீர்கள். சுமைகள் உங்களைக் கீழே கொண்டு வரும். ஆனால் இலேசாக இருப்பதன் மூலம், நீங்கள் தொடர்ந்து உயரே பறப்பீர்கள். எனவே, நீங்கள் பறப்பவர்கள், இல்லையா? நீங்கள் பலவீனமானவர்கள் இல்லையல்லவா? ஒரு இறக்கை பலவீனமாக இருந்தாலும், அது உங்களைக் கீழே கொண்டு வந்துவிடும். அது உங்களைப் பறப்பதற்கு அனுமதிக்காது. எனவே, இரண்டு இறக்கைகளையும் உறுதியானது ஆக்குங்கள். நீங்கள் இயல்பாகவே தொடர்ந்து பறப்பீர்கள். சுயதரிசனச் சக்கரதாரியாக இருத்தல் என்றால், தொடர்ந்து ஏறுகின்ற ஸ்திதியில் பறத்தல் என்று அர்த்தம். அச்சா.

நீங்கள் இராஜயோகிகள், மேன்மையான ஆத்மாக்கள், அல்லவா? சாதாரணமான வாழ்க்கை வாழ்வதில் இருந்து, நீங்கள் இலகு யோகிகள், இராஜ யோகிகள் ஆகியுள்ளீர்கள். இத்தகைய மேன்மையான யோகி ஆத்மாக்கள் எப்போதும் அதீந்திரிய சுகம் என்ற ஊஞ்சல்களில் ஆடுவார்கள். ஹத்த யோகிகள் தமது சரீரங்களை ஹத்த யோகத்தால் காற்றில் அந்தரத்தில் பறப்பதைப் பயிற்சி செய்வார்கள். உண்மையில், இராஜயோகிகளான நீங்கள் உயர்ந்த ஸ்திதியை அனுபவம் செய்கிறீர்கள். இதைப் பிரதி செய்து, அவர்கள் தமது சரீரங்களை பறக்கச் செய்கிறார்கள். எவ்வாறாயினும், நீங்கள் எங்கே இருந்தாலும், உங்களின் உயர்ந்த ஸ்திதியில் இருக்கிறீர்கள். அதனால், யோகிகளான நீங்கள் உயரே இருப்பதாகக் கூறப்படுகிறது. மனதின் ஸ்திதியின் இடம் உயர்வானது. ஏனென்றால், நீங்கள் இலேசாகவும் ஒளியாகவும் (டபிள் லைற்) ஆகியுள்ளீர்கள். தேவதைகளின் பாதங்கள் ஒருபோதும் தரையில் இருப்பதில்லை எனக் கூறப்படுகிறது. தேவதைகள் என்றால், அவர்களின் புத்திகளின் பாதங்கள் தரையில் இருக்காது. சரீர உணர்வு அவர்களுக்கு இருக்காது. எப்போதும் சரீர உணர்வில் இருந்து உயர்ந்த இடத்தில் இருங்கள். நீங்கள் இத்தகைய தேவதைகள், அதாவது, இராஜயோகிகள் ஆகியுள்ளீர்கள். இப்போது உங்களுக்கு இந்தப் பழைய உலகின் மீது எந்தவிதமான பற்றும் கிடையாது. சேவை செய்வது வேறு விடயம். ஆனால், எந்தவிதமான பற்றும் வைக்காதீர்கள். ஒரு யோகி என்றால், தந்தையும் நானும் மட்டுமே. மூன்றாவது நபர் கிடையாது. எனவே, எப்போதும் இராஜயோகிகளாக, எப்போதும் தேவதைகளாக இருக்கும் விழிப்புணர்வைப் பேணுங்கள். இந்த விழிப்புணர்வினால், நீங்கள் சதா தொடர்ந்து முன்னேறுவீர்கள். இராஜயோகிகள் எப்போதும் எல்லையற்றதன் அதிபதிகள் ஆவார்கள். எல்லைக்குட்பட்டதன் அதிபதிகள் அல்ல. நீங்கள் எல்லையில் இருந்து அப்பால் வந்துள்ளீர்கள். நீங்கள் எல்லையற்ற உரிமைகளைப் பெற்றுள்ளீர்கள். ஆகவே, இதனுடன் சந்தோஷமாக இருங்கள். தந்தை எவ்வாறு எல்லையற்றவரோ, அவ்வாறே, எல்லையற்ற சந்தோஷத்துடன், எல்லையற்ற போதையுடன் இருங்கள். அச்சா.

விடைபெறும் வேளையில்: அமிர்தவேளையில் ஆசீர்வதிக்கப்பட்ட குழந்தைகள் அனைவருக்கும், தயவுசெய்து ஆசீர்வாதங்களை அருள்பவரான தந்தையிடமிருந்து பொன்னான அன்பையும் நினைவுகளையும் ஏற்றுக் கொள்ளுங்கள். அத்துடன்கூடவே, பொன்னுலகை உருவாக்கும் சேவையைச் செய்வதற்கான திட்டங்களை எப்போதும் கடைந்து கொண்டிருப்பவர்களுக்கும், தமது இதயபூர்வமாகவும் வாழ்க்கையாலும் சேவையில் அதிகளவு அன்புடன் ஈடுபட்டிருப்பவர்களுக்கும், தமது சரீரங்களாலும் மனங்களாலும் செல்வத்தாலும் ஒத்துழைக்கும் ஆத்மாக்களுக்கும், பாப்தாதா உங்கள் அனைவருக்கும் காலை வணக்கத்தையும் வைரமான காலை வணக்கத்தையும் கூறுகிறார். எப்போதும் ஒரு வைரமாக இருங்கள். இந்த வைர யுகத்தின் சிறப்பியல்பை ஓர் ஆசீர்வாதமாகவும் ஆஸ்தியாகவும் எடுத்துக் கொள்ளுங்கள். அப்போது நீங்கள் தங்க ஸ்திதியில் ஸ்திரமாக இருப்பதுடன், மற்றவர்களுக்கும் அதே அனுபவத்தைத் தொடர்ந்து கொடுப்பீர்கள். எனவே, எங்கும் உள்ள இரட்டை ஹீரோ குழந்தைகளுக்கு வைரமான காலை வணக்கங்கள். அச்சா.

ஆசீர்வாதம்:
நீங்கள் மற்றவர்களுக்காகத் தூய, சாதகமான எண்ணங்களைக் கொண்டிருப்பதுடன், கருணைநிறைந்த உணர்வுகளுடன் உங்களை இகழ்பவர்களையும் ஈடேற்றுபவர் ஆகுவீர்களாக.

உங்களுடன் என்ன வகையான ஆத்மா தொடர்பில் வந்தாலும், அவர் சதோகுணியோ அல்லது தமோகுணியோ, நீங்கள் எப்போதும் அவர்களுக்காகத் தூய, சாதகமான எண்ணங்களைக் கொண்டிருப்பவர்கள். அதாவது, உங்களை இகழ்பவர்களையும் நீங்கள் ஈடேற்றுபவர்கள். எந்தவோர் ஆத்மாவிற்கும் வெறுப்பான பார்வையைக் கொண்டிராதீர்கள். ஏனென்றால், அந்த ஆத்மா அறியாமையின் ஆதிக்கத்தில் இருக்கிறார், அவருக்குப் புரிந்துணர்வு இல்லையென்பதை நீங்கள் அறிவீர்கள். அந்த ஆத்மாவின் மீது கருணையும் அன்புமே இருக்க வேண்டும். வெறுப்பு இருக்கக்கூடாது. மற்றவர்களின் மீது தூய, சாதகமான எண்ணங்களைக் கொண்டிருக்கும் ஆத்மாக்கள் ஒருபோதும், இவர் ஏன் இதைச் செய்தார்? என நினைக்க மாட்டார்கள். அந்த ஆத்மாவிற்கு எவ்வாறு நன்மை செய்ய முடியும் என்றே அவர்கள் எப்போதும் நினைப்பார்கள். இதுவே நலம்விரும்பியாக இருப்பதன் ஸ்திதியாகும்.

சுலோகம்:
தபஸ்யாவின் சக்தியால், அசாத்தியத்தைச் சாத்தியமாக்கி, வெற்றி சொரூபம் ஆகுங்கள்.